Advertisement

கணவரின் உழைப்பில் உண்டு கழிக்கும் எண்ணம் இல்லாமல்.    அவரின் உழைப்பையும் சிறு முதலீடும் போட்டு ஆரம்பித்து தற்போது கொஞ்சம் பெறிய அளவில் நாட்டு வகை கோழி சேவல்களை வளர்த்து இறைச்சிக்கும். ஆரோக்கியமான முட்டைகளையும் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை பெண்களுக்கு நகை செய்வதற்க்கு சேர்த்து வைத்து. மகள்களையும் அழகாக அவற்களுக்கு கட்டாயம் தேவயானவைகளையும் வாங்கி கொடுத்து கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்தி மகள்களை போற்றி பாதுகாக்கும் கிராமபுறத்து வெள்ளந்தி இல்லத்தரசி கலைவாணி.
  ராஜதுரையின் அக்கா கனகா அவரின் கணவர் தர்மராஜ் அவர்களின் தவப்புதல்வன் நிறஞ்சன்.  மகள் லீலா[காலேஜ் முதல்வருடம்] . ஏன் தவப்புதல்வன்னு சொல்றேன்னு பாக்குறிங்கலா?           
“அதாங்க அவங்க பரம்பரையிலயே இவர்தான் காலேஜ் எல்லாம் படிச்சு இன்ஜினியர் வேலைக்கு எல்லாம் போறாராம்”
 அதுதான் அம்மாக்கு புள்ளைய நினைச்சா பெருமை தாங்கல.என்ற ராசாதான் பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்கான் இந்த ஜில்லாவயே அலசி ஆராஞ்சி பொண்ணு எடுக்கனும்ங்குற நினைப்பு கனகாவுக்கு.
 அவரது நினைப்பை தவிடுபொடியாக்குவான். அவரது தவப்புதல்வன் என்று அந்த பகட்டு தாய்க்கு தெரியவில்லை தற்போது. தெரியவரும் பொழுது அவரது நிலை என்னவாகுமோ??.. காலத்தின் விளையாட்டை யார் அறிவார். 
                    தர்மராஜ் திருச்சியை சேர்ந்தவர் பூர்வீக சொத்துக்கள் நிறைந்தவர். திருமணத்திற்கு பின்பு வசதி வாய்ப்புகளை கண்டபிறகு கனகா பிறந்தகுடும்பத்தில் அன்டாமல் மனசுணக்கம் காட்டிவருகின்றார். 
“இல்லனா அந்த ஏழாங்கிளாஸ் படிச்ச பட்டிகாட்ட என்ற மகன் தலையில கட்டிருவானே என்ற தம்பி” அப்புடினு நினைச்சு விளகியே இருப்பார் கனகா.
 ராஜதுரை குடும்பத்தினரிடம் அதிகமாக உரவாடும் ஒரே ஜீவன் நம்ம நிறஞ்சன் மட்டும்தான்.        
“அவன் எதுக்கு போரானோ மாமன் மகளின் விபரீத ஆசையை தெரிஞ்சு தாயிற்கு தெரியாம சைட் அடிக்க போவானா இருக்கும்”.
*******************************
   ஏய்!.வடிவு கோவிச்சுகிட்டியா?. டி நான் உன்ற பின்னால வராம வேற எங்க?.. போகப்போறன் மூக்கு வடிக்குற காலத்துல இருந்து நாம தோஸ்த்து மறந்துடியா டி வடிவு .
  ஏய்!. சீ போடி ஏன் இப்போ அதெல்லாம் சொல்லுற. பின்ன நீ பாட்டுக்கு கோவிச்சுடு மூஞ்ச உர்னு வச்சுருக்க பாக்க நல்லாவா இருக்கு. நீ சிரிச்சா எம்புட்டு அழகா இருப்ப. “இவள சமாதானப்படுத்த என்னலாம் பொய் சொல்ல வேண்டியதாயிருக்கு கடவுளே என்ன மன்னிச்சுருபா”
       அட உங்க அலப்பறைய அப்புறம் வச்சுக்கங்க அக்காஸ். உனக்கு என்னடா  இப்ப ?அங்கபாருங்க.      அட!. ஆமா வடிவு உன்ற அத்தான்ட காரு வருது புள்ள. ஐ ஜாலி ஆடு தானா வருதுடி பொன்னி இன்னைக்கு கைமா போட்டுறவேண்டியதுதான். 
    ராசு குட்டி : அப்போ இன்னைக்கு நமக்கு பெரிய என்டர்டைமெண்ட் இருக்கு போலயே?. பொறுத்திருந்து பாத்து என்ஜோய் பண்ணலாம் போலவே. 
     வாடி பொன்னி அந்த ஆலமரத்துக்கு நாம யாருனு ஒருகாட்டு காட்டுவம் அவன ஒருவழி பண்ணணும் டி இன்னிக்கு  அவன் மூஞ்சும் ஆளும் வெள்ளபன்னி கனக்கா இருந்துட்டு இந்த வடிவுக்கிட்யே என்ன?. ரவ்சு விடுறான்.போனவாட்டி வந்தப்ப அந்த கண்ணு தெரியாதவங்க போடுற கருப்பு கண்ணாடிய [கூலர்ஸ்]  மாட்டிக்கிட்டு என்ன பந்தா காட்டுறான் கொரங்கு பய. போட்டு பாக்க கேட்டதுக்கு அது இங்கிலிபீஸ்ல என்னவோ சொன்னானே ஆ ஜெனுசு போடுறது நீ எல்லாம் போட கூடாதுனுடான்டி பொன்னி.
     ஆமா எங்க வடிவயே ஒரு பொடிப்பய கலாச்சுபுட்டானே அவன சும்மாவா விடுறது சும்மா விட்டா வடிவோட கெத்து என்னாகுறது அவனுக்கெல்லாம் பயம் விட்டு போய்ரும்டி வடிவு நம்ம மேல .  என்ன செய்யலாம் கூப்புட்டு நாம முகத்த மறைச்சு கட்டிட்டு ரெண்டு தட்டு தட்டுவமாடி வடிவு. அடிப்பாவி அவன் நம்மல கண்டுபிடிச்சுருவான்டி அப்புறம் அம்மா பச்சமொளகாய திங்கசொல்லுமேடி ஐயோ வேணாம்டி பொன்னி நெனச்சாலே வயிரு தொண்டயெல்லாம் எரியுதுடி.  
     அவனுக்கு சிறப்பா செய்யனும் ஆனா நாம மாட்டிக்ககூடாது அப்புடி ஒன்ன நல்ல மூளைய கசக்கி யோசிடி பொன்னி. “அட!. அது எங்க அக்காஸ்கிட்ட வேணுமே நாமதான் மாசா ஐடியா குடுத்து என்ட்ரீ அகனும்டா ராசுக்குட்டி”
   அக்கா நான் ஒரு ஐடியா சொல்லவா? சொல்லுடா தம்பி பதிலுக்கு பதில் குடுத்துறலாம். கெதியா சொல்லன்டா காரு போய்றபோகுது.அம்பது ரூவா கண்ணாடிக்கு அம்புட்டு சீன போட்டான் ஐநூறு ரூவாய தெண்டம் பண்ணிறலாம்.
   அவன்ட காரு கண்ணாடிய ஓடச்சுப்புடுவம். புதுசா வாங்கடும் கா இதுவும் நல்லாதான்டி இருக்கு.
பொன்னி நீ என்ன புள்ள சொல்லுற?.. டன் டி வடிவு சிறப்பா வச்சி செஞ்சுடுவமே.
  
டேய் ராசுகுட்டி எடுடா அந்த கல்ல இந்தா வடிவக்கா இதுதான் கனக்கா இருக்கும். அவன் மண்டை ஒடயாம கண்ணாடி மட்டும் ஒடையும்.     “மண்ட ஒடஞ்சாலும் பரவாயில்ல ஆலமரம்தானே டா”.
   ரெடி யூட் குறிப்பாத்து அடிக்கனும்டா  எடு அந்த மாங்காய  அடி வடிவு மாங்காய அப்புறமா சப்பலாம்டி இல்லனா உன்ற கவனம் கலஞ்சிறும் டி இப்ப நமக்கு நம்ம குறிக்கோள் முக்கியம் வடிவு.     
“ஆமா பெரிய முதலமைச்சர் கோட்டைய புடிக்குற குறிக்கோள். ஒரு அடாவடி பண்ண இம்புட்டு அலப்பறய கூட்டுதுகள்டா சாமி இந்த வடிவு புள்ளய்ட தொல்லய தாங்க முடியல”. 
  அடி போடி இவளே எனக்கு ஊக்கமருந்தே அத்தான் மரத்து கிளிசொண்டு மாங்காய்தானு தெரியாதா? ஒனக்கு. அதானே அந்த ஆலமரத்து தோட்டத்து மாங்காயவே சாப்பிட்டு அவன் காரு கண்ணாடியவே ஒடைக்கப்போரமே தப்பில்லயாக்கா?
     அடபோடா ஒன்னு தெரிஞ்சுக்க ராசுகுட்டி தப்பு ரைட்டு பாத்தா பலிக்கு பலி ரத்ததுக்கு ரத்தம் பாக்கமுடியாதுடா. சரியா சொன்னடி பொன்னி.
மதுரையில் அதே குக் கிராமத்தை சேர்ந்த மற்றுமொரு குடும்பம்தான் பொன்னியின் குடும்பம் . கிருஸ்ணன்                     “விச காச்சலினால் ஐந்து வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்” வேணி என்பவரின் இரண்டு பிள்ளைகளான “பொன்னி படிப்பில் வடிவின் சேம்பின்ச்,சற்று பூசிய உடல்வாகு. ராசுக்குட்டி “படிப்பில் கடும் கெட்டி ஆங்கில புலமையை கற்று பெரிய வேலை செய்து தாயின் தற்போதய கஷ்டத்தை குறைப்பதே அவனின் லட்சியமாம்” வேணியின் தற்போதய உழைப்பால் அந்த குடும்ப ஜீவனம் செல்கின்றது. 
 வேணி தோட்ட வேலை செய்து அதில் வரும் பணத்தை கொண்டுதான் தனது மாமியார் பொன்னியம்மா மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகளின் தேவைகள். வீட்டு தேவைகள் எல்லாம் பார்த்து வருகின்றார்.
 தற்போது பொன்னி தையல் வேலையில் தன்னை ஈடுபடுத்தி அவளால் இயன்றளவு குடும்ப கஷ்டத்தை குறைத்து.  பாடாசாலை செல்லும் தம்பியையும். தாயிற்க்கு தொல்லை தராமல் கவனித்து வருகின்றாள்.
 வாங்க நாம அந்த வானரங்கள் என்ன செய்யிதுகள்னு பார்ப்போம் .
 டேய் ராசுக்குட்டி எல்லாம் ரெடியா?…  அந்த தடியன் வாரான்டி பொன்னி அக்கா எல்லாம் பக்காவா ரெடி. நீ மட்டும் கூலா குறிபார்த்து அடிக்கா. சரிடா தொன தொனனு அக்காட கவனத்த கலைக்காத.
 டி பொன்னி நம்ம வேல மாட்டிறாம சரியா முடிக்கணும்னு  நம்ம கருப்பசாமிட்ட ஒரு வேண்டுதல் வைடி ” ஏன்டி அதயும் நீ செய்ய மாட்டியே? அப்பதான் ஒரு தேங்காய்கான செலவ ஏன் தலையில கட்டமுடியும் நீ எல்லாம் நல்லா வருவடி வடிவு என்று மனதில் வடிவிற்க்கு அர்ச்சனை செய்தால்”
“சல் சல் கீறீச் ,என்னடி கண்ணாடி ஒடஞ்சுடா?… ஆமா வாடி அது கூட பார்க்காம அவ்வளவு வேண்டுதல் வச்சியாடி செல்லம். சீ போடி வடிவு.
 அக்காஸ் வாங்க ஒழிஞ்சுபோம் அப்புறம் கொஞ்சிக்கோங்க. டேய் இருடா அந்த ஆலமரம் என்ன செய்துனு அந்த முஞ்ச பார்த்து ரசிச்சுட்டு போவம்.
டி வடிவு அங்கபாருடி  அடியாத்தி!.. யாருடி?…பொன்னி  இந்த பனமரம்  இம்புட்டு வழந்தவனா!.. இருக்கான். ஆமாடி  ஐய்யோ வடிவு யாருனு தெரியலயே  ஆலமரம்னு நெனச்சு பனமரத்த தாக்கிடம்டி இப்ப என்ன நடக்குமோ?… எனக்கு எங்க அப்பத்தாவ நெனச்சா நடுங்குதுடி  அதுக்கு இது தெரிஞ்சுதுனா  விளக்கமாத்தாலயே ஆடிக்குமே.
அடி போடி நாம வாங்காத அடியா அதால உடையாத விளக்கமாறா?.. அப்பத்தா நமக்கு தண்டனை தாரதுக்கு அவசரத்துல கண்ணாடி போடாம அடிக்குறனு நாம ஓடினதும் மரத்துக்கெல்லாம் போட்டு அடிச்சா ஒடயாம என்ன செய்யும் பொன்னி . அப்புறம் அப்பதாவே ஒடஞ்சிட்டேனு கவலப்படுமே அதெல்லாம் நமக்கு புதுசா என்ன?…. 
        ஐயோ வடிவக்கா அங்கபாரு அந்த சாரு வெளிய வந்து நம்மல தேடுறாறு. அட போடா அந்த பனமரத்த ரெண்டு தரம் நிமிர்ந்து பார்த்ததுகே கழுத்து வலிக்குதுடா. நீ வேற சும்மா இருடா.  டி வடிவு வா இதுக்கு மேல நாம இங்க நின்னா ஆபத்து ஒழிஞ்சுருவம் புள்ள. 
       ஹலோ யாருங்க அங்க யாரா இருந்தாலும் வெளிய வாங்க அட வாங்கன்றல.. இடியட்ஷ். சட் எவ்ளோ காஷ்ட்லியான கண்ணாடி ஒடச்சுட்டுங்களே இப்போ நீங்களா வாரிங்களா?.. இல்ல நான் கண்டு புடிச்சு அங்க வரவா???…..
               வருவாள். தொடரும்…..
                                                          

Advertisement