Advertisement

என்னருகில் நீ இருந்தால். 
              அத்தியாயம் ஒன்று.
      “அழகிய காலை நேரம் சிலு சிலுவென கூதல் காற்று ஆடையை தாண்டி உடலை ஊடுருவிச்சென்று ஊசிபோல் குத்துகின்றது”          
இந்த காற்று என்னை ஒன்று செய்யாது என்று “பைங்கிளி பெண்ணவள்”                        “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பதை உண்மையாக்கும் பொறுட்டு.         முகம் கள்ளம் கபடம் இல்லாமல்.     ஒரு புது வித மலர்ச்சியோடு மந்தகாச புன்னகை சிந்தி.                     
“போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்”                                 
என்ற சினிமா பாடலை ஹம் பண்ணிக்கொண்டு வயல் வரம்பில் அன்ன நடையிட்டு கையில் சிறு பை எடுத்துக்கொண்டு..                
” வானை தொட்டுவிடுவேன் என்று உயர்ந்து அடர்ந்த மரங்களுக்கு சவால் விடும்.  இயற்கை அள்ளி தெளித்த மலை முகட்டில்.    பனிபடலம் சூழ்ந்து அதனை மறைத்து வீற்றிருக்கும் எழில் கொஞ்சும் அழகை”    ரசித்து கொண்டு வயலை அடுத்து இருக்கும் தோப்பிற்கு சென்றுகொண்டிருகின்றாள்.
கையில் இருக்கின்ற பை என்னனு பாக்குறிங்களா??… இன்று வெள்ளிகிழமை அட!.. பொறுங்கப்பா.                           
உடனே புள்ள அக்கறயா  “சாமி கும்புட போறதுக்கு பூஜை பொருட்களோ பூவோ” எடுத்துடு போகுதுனு தப்பா நெனச்சிறாதிங்க..                     
நேற்று இரவே வார இறுதி புள்ளைகள் வீட்டுல இருக்கும். வயித்துக்கு பசிக்கும்போது சாப்புடடும்னு ஒரு தாய் அக்கறையா  பலகார வகைகள் செஞ்சு வச்சா அத தங்கச்சிங்க எடுக்குறதுக்கு முதல் இந்த புள்ள அதையும் சேர்த்து தண்ணியும் எடுத்துட்டு வருதுன்னா பாருங்க.  அறட்டை அடிச்சிட்டு தோப்புக்குள்ள சுத்தி திரியும் போது பசிக்குமாம். அப்போ சாப்புடுறதுக்கு முன்கூட்டியே எடுத்துடுவருதுனா பாருங்க. புள்ள எவ்வளவு அட்வான்சா திங் பண்ணுதுனு..
“ஏய் வடிவு ஏய் புள்ள வடிவு             ஆ ஆஆ
என்னடி..?  பொன்னி பச்சப்புள்ளய போட்டு காலங்காத்தால மாட்ட அடிகுறபோல அடிகுற..?                                               
“நீ மட்டும் பச்சபுள்ளனு சொல்லாதடி நீ போடுற ஆட்டதுல நானும் இந்த ஊரும் சின்னா பின்னமாகுறம் இனி தாங்கமாட்டம்டி வடிவு”
” பொன்னி இதை மட்டும் வாய் திறந்து சொல்லி இருந்தாள் என்றாள் வடிவு முதுகில் அடி டின் கட்டிவிடுவாள் அது தெரிந்தே நம் பொன்னி வடிவை கால்வாறும் போது அதை அவளது மனதளவில் நிறுத்திவிடுவாள்”.
பின்ன என்னடி “பொட்ட கோழி கூவுற கணக்கா”  கத்துறன் செவுடுபோல நின்னு அப்புடி என்ன கனாகாங்குற..?
நான் உன்னோட ஆருயிர் தோழி கூப்புடுறன் அது கூட விளங்காம  எங்களயும் வரச்சொல்லிட்டு நீ பாட்டுக்கு நாங்க வாரதுக்கு முதல் வெரசா வந்துட்ட இது சரி இல்லயே!..
என்ன சங்கதி கையில வச்சுருக்கிறத எங்கள விட்டு திங்கபோறியா??..  டி வடிவு.             சே பக்கி எப்பயாசும் உங்கள விட்டு நான் தனிய சாப்புடுருக்கனா..? டி இந்த வடிவுட நேர்மைய நீ சந்தேகிச்சுட்ட இல்ல ஐயஹோ!. என்ன காலக்கொடுமை இது இறைவா.  போதும் நிறுத்து நீ பேச்ச மாத்தாத நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மொதல்ல.
கோச்சிகாதடி பொன்னி நான் என்னதடி கனா காங்கபோறன் பெருசா உனக்குத்தெரியாம.    எல்லாம் என்னோட ஒரே ஆசைய எப்புடி அடயலாம்னு யோசிகிறேன் டி பொன்னி  நீங்க வார வரைக்கும்.
       “இன்றே அவளது நெடுநாளைய ஆசையை அடைவதற்கு ஆழமான அஸ்த்திவாரம் சூழ்ச்சி மூலம் இடப்படபோவதை பாவம் பேதையவள் அறியவில்லை”.
     அதுக்கு இப்புடி தனியா யோசிச்சா சரிவருமாடி வடிவு பின்ன என்னடி பொன்னி பண்ணுறது??..                  
“டேய் ராசுகுட்டி  இங்க அந்த ஆயுதத்த எடுத்துடுவாடா போ அக்கா உனக்கு தரமாட்டனே!.. டேய் தடிமாடு தாடா?..  இல்ல உனக்கு தரமாட்டன்.     இத வடிவக்காகுதான் குடுபேன்.  இந்தா வடிவக்கா உன்ற அத்தான்ட மாந்தோப்புல களவா பறிச்சது உனக்குதான், “திருட்டு மாங்காய்” ரொம்ப புடிக்குமே.                                     
“அடபோடா திருட்டு மாங்காய்ல இருகுற ருசி தெரியுமா.? டா அத நம்ம வீட்டுக்கும். மாந்தோப்பு சொந்தகாறணுக்கும் தெரியாம இந்த வடிவழகி பறிச்சி சாப்பிடுற அழகே தனிடா தம்பி” 
“அவளை அவளே 
மார்தட்டிக்கொண்டாள் வடிவு”.    
என்ன சொல்லு நம்ம வடிவக்காட ஸ்டைலே தனிதான் போ இல்லயா??… பொன்னியக்கா.. ம் ம் ஆமான்டா  தம்பி ஆமா  நீ சொல்லுறது சரிதான் நம்ம வடிவே தனிதான். ஏன்னா இன்னொரு  வடிவ நாடு தாங்காது.                              
   இவர்கள் அவளை பற்றி பேசுகிறார்கள் என்பதை கவனித்தும் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவள் முத்துவிற்கு கொஞ்மும் பலகாரங்கள் வைக்காமல் எடுத்துவந்துவிட்டால் அதற்கு முத்து தற்போது வீட்டில் என்ன ரகளை செய்வாளோ அதில் இருந்து எவ்வாறு தப்பிக்கொள்வது என்று தீவிரமாக யோசிக்கின்றாள்.
” இனி முதல் போன்று அவளது செல்ல தங்கைகளுடன் அவள் சேட்டை செய்து அவர்களிடம் திட்டுவாங்கி அதன்பிறகு இவளுடன் அவர்கள் கொஞ்சுவதற்கு ஆசை தங்கைகளுடன் இருக்கபோவதில்லை என்பதை எவ்வாறு அறிந்து கொள்வாள் மங்கையவள்.”
  ஐயோ!.  வடிவக்கா  நீ என்ன..? அடிக்கடி ட்ரீம்கு போயிடுற போதும். கொஞ்சம் வெளிய வா உனக்கு இதெல்லாம் சுத்தமா செட்டாகவே இல்ல. நமக்கு எவ்வளவு பெரிய சோலி இருக்கு. வடிவக்கா   இந்தா இத சப்பிகிட்டே நல்லா யோசி அப்பதான் ஒனக்கு மூளை வேகமா வேல செய்யும்.                                              
   டேய் பொடிபயலே அடிங்க யாருகிட்ட வடிவுடா பிச்சுருவேன் பாத்துக்க. எங்களுக்கு தேவைக்கு அளவா மூளை வேல செய்யும்.            
நீ ஒவரா சீன போடாத நாங்க கொஞ்சமா படிச்சுறுக்குறம்னு சரியா. அக்கா கூல் ஏன் இப்ப கோவப்படுற  நமக்கு நம்ம ட்ரீம்தான் முக்கியம். இங்கபாருடி வடிவு காலகொடுமைய அஞ்சாப்பு படிக்குற பூச்சியெல்லாம் நம்மட்ட போய்  ஓவரா இங்கிலிபிஸுல பேசுது என்ன பண்ணலாம் இந்த பல்லிய.
  பாவம் டி பொன்னி அவன் மெல்லிசா இருக்கானு நீ பல்லினு சொல்லுவியா??.. விடு நம்ம செல்ல தம்பி அவன் நமக்கு புரியாதுனு தெரிஞ்சும் அவன்ட படிப்ஸ் ஆர்வக்கோளாறுள நம்மட்ட கதைக்குறான். விடுவியா. நீ 
ஐயோ!. அக்காஸ் இப்புடியே வெட்டியா பொழுத கழிச்சா நாம இந்த ஜென்மத்துல நம்ம ஆசைய அடையமுடியாது போங்க. 
  அடியேய் பொன்னி இப்புடி செஞ்சா என்ன..?   “கைய ஆட்டி சுத்திக்கிட்டே வடிவு கத பேச” இப்புடியே செஞ்சம்னு வை டி வடிவு கை எங்கயாவது அடிப்பட்டு நாம மாவு கட்டுதான் புள்ள போடனும். 
 “ஆமல ஐயோ அப்புறம் நாம எப்புடி? திங்குறது நமக்கு சாப்புடுறதுதான் ரொம்ப முக்கியம். மாவு கட்டு போட்டா கை வலிக்கும் அள்ளி சாப்புட ஏலாதுனு இந்த அம்மா வேற கஞ்சியதான் ஊத்தும் நம்ம வாய்கு நாலு வகையா வக்கனயா இல்லாட்டி எறங்காதே கைய கொஞ்சம் சுருட்டி வச்சுப்பம். அதுதான் நமக்கு நல்லது”.        
“கெத்து காமிடி வடிவு பயபுள்ளங்க ரெண்டும் நம்மயே குறு குறுன்னு பாக்குதுங்களே சமாளிச்சுருவம்”..                          
பொன்னி அடிபோடி கூறுகெட்டவளே உன்ற அப்பத்தா உன்ன வையுரதுல தப்பே இல்லடி. வேணாம்டி..? வடிவு
 இந்த அப்பத்தா பிக்பாஸ் பார்த்துட்டு அதுல அவளுகள் உடுத்துற உடுப்பு எல்லாத்தயும் என்னயும் பார்த்து அது மாதிரி தச்சுகுடுக்கட்டுமான்டி ஆக்களுகு.
 அந்த உடுப்பு என்னனா  முன்னுக்கு மேலதூக்கி பின்னுக்கு கீழ எறக்கி கை இல்லாம மொட்டயா அதெல்லாம் நல்லாவா?.. இருக்கு அத போடுறாங்க அதுமட்டுமா?. அதுங்க போடுற கூத்து  டீவியில கண்கொண்டு பார்க்கமுடியலடி வடிவு.
நம்மல பாரு “ஆள்பாதி ஆடை பாதின்ற” மாதிரி ஆம்புளைகள்ட கண்ண கவராம மரியாதையா எவ்வளவு அழகா பாவாடை தாவணி பொறுத்தமா உடுத்திருக்கம்.  
அதெல்லாம் ஒரு உடுப்புனு அது மாதிரி இந்த கெளவி என்ன தச்சு கொடுக்கடுமாம்.  இந்த ராசுகுட்டி யோட சேர்ந்து இங்கிலிபீஸுல அப்பதான் எனக்கு அதிகமா  கஸ்டமரு வருவாங்களாம்னு தொல்ல பண்ணுதுடி. 
வடிவு இப்ப நீயும் அத நியாபகம் காட்டினா அப்புறம் நான் அழுதுறுவன்டி நானே அந்த கெளவிட தொல்ல தாங்க முடியாம தான் உன்ற பின்னால திரியுறன் நீ வேற ஏன்டி..?  கடுப்பாக்குற என்ன .
      அப்போ!. அப்பத்தாட தொல்ல இல்லன்னா நீங்க என்ற பின்னால வர மாட்டிங்க?  வந்தா அம்மணி ட கவுறவம் கொறஞ்சுபுடுமாக்கும். நீயெல்லாம் என்ன நண்பீ டி? 
  ஐயஹோ!. என்ன வார்த புள்ள சொல்லிபுட்ட?  என்ற பிஞ்சு நெஞ்சு தாங்குமா?  டி வடிவு.
**********************************
  நம்ம கதையின் நாயகி தாங்க இந்த வடிவழகி  “19 வயசு ஆனா வயசுக்கும் ஆளுக்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லங்க” ஏன் அப்புடி சொல்லுறன்னா??..” குழந்தை குணம் கொஞ்சும் இளம் குமரி” மாநிறம். மெலிஞ்ச உடல்வாகு, மைவிழி. நீண்டு அடர்த கேசம். ஏழாம் வகுப்போட படிப்பு இல்ல.  ஆனா கனவு மட்டும் மெத்த பெரிய கனவு ஆளுக்கு. ரொம்ப சுட்டி பொண்ணு அதெல்லாம் வீட்டுக்கு  வெளிய மட்டும்தான் மாட்டிகிட்டா அவங்க அம்மாகுதான் கொஞ்சம் பயம் இல்லன்னா யாரு பச்சமொளகாய சாப்புடுறது. அதுதான் அவங்க அம்மாவோட வித்தியாசமான கண்டிப்பு ஏன்னா? நம்ம வடிவு அடிக்க ஆரம்பித்த உடனே அந்த ஊர்ல எத்தின தெரு& நாய்கள் எல்லாம் இருக்குனு தெரிஞ்சுக்க ஓடிடுவா அதனாலதான் இப்புடி தண்டனை கொடுக்கும்படி ஆச்சுனா பார்த்துகோங்க அப்பயும் வால்தனம் கொறயல வடிவு புள்ளக்கு எப்ப யாருட்ட என்ன ஓறன்டைய இழுக்குமோன்னு அவங்க அம்மாக்கு பயம்”
           மதுரையில் பழமை மாறாத குக் கிராமத்தில் வசிக்கும் ராஜதுரை கலைவாணி யின் முன்று பெண் பிள்ளைகளில் முத்தவள் வடிவழகி. இளயவள் முத்தழகி. கடைக்குட்டி குழலி.               விவசாயம். வாழைப்பயிர்ச்செய்கை. மரக்கறித்தோட்டம்.செய்து அவற்றை சந்தைப்படுத்தல் முலம் வரும் வருமானத்தில் வீட்டுபிழைப்பயும் மீறி கை கடிக்காதளவு முன்று பெண் பிள்ளைகளையும் நல்ல முறையில் கரைசேர்க்க வேண்டும் என்ற நோக்கோடு உழைப்பிற்கு அஞ்சாத மனிதன் ராஜதுரை.
 

Advertisement