Advertisement

எனக்கானவளே நீதானே…
21 
(வசமிழக்கும் வானம் நான்….)
ரவியும், வீராவும்.. முதலில் கிளம்ப… அதன்பின் பொறுமையாக மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்…
அரங்குக்கு சரியான நேரத்தில் சென்றாள் ரவி. ஏனோ ஒரு பதற்றம்.. அவளிடம்… முதல்முறை… அவனுடன் வருவதாலோ என்னமோ… ஒரு சின்ன தடுமாற்றம்… பரபரப்பாக வீராவிடம், விடை பெற்று சென்றாள்.
எப்போதும் போல கண்ணை உறுத்தாத காட்டன் புடவைதான்… நீண்ட பின்னல்.. கையில் ஏதோ இரண்டு வளையல் எக்ஸ்ட்ராவாக இருந்தது.. கூடவே மாங்கள்யம்… மற்றபடி அதே பைரவிதான்….
இது ஒரு.. பழைய கிளப். அதாவது.. அந்தகாலத்து நாடகம், நகைசுவை என அதில் தொடர்புடையவர்கள் நடத்திடும் மன்றம். அதன் ஐம்பதாவது மணிவிழா…
எனவே பழைய அரசு அதிகாரிகள், பேச்சாளர்கள்.. நாடக நடிகர்கள் என நிறைய நபர்கள் அதில் உறுப்பினர்கள்… அத்துடன் தொடர்புடைய நபர்கள் வந்திருந்தனர்.
வீராவை, அடையாளம்.. கண்டு சிலர் வந்து அறிமுகம் செய்து கொண்டனர். அதே வட்டத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம் இவனும், தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.. யாரையும் தெரியாது என்ற நிலை இல்லாமல்.. வீராவுக்கு நேரம் சென்றது.
ரவி, மேடையில் ஏறியவுடன், அவளின் முறை வந்ததும், எப்போதும் போல… அதே குரல்… கம்பீரமாக… கைகளை ஆட்டி தன் தரப்பு நியாத்தை அவள் பேச… பேச… 
வீரா, கொஞ்சம் பூரித்து போய்தான் பார்த்திருந்தான் தன்னவளை.
‘இந்த பெண்ணா! எனக்கான நேரம் தந்து, காத்திருந்தது, கொஞ்சமும் முகம் கோணாமல்… என் விருப்பம் புரிந்து நடந்தது…’ என… உணராமல் இருக்க முடியவில்லை… 
இப்போது ரவியும்…. மேடையில்… நல்ல பேரொளியாய்… அவளின் குரல் வேகமெடுக்க… இவனுள்ளும் அந்த ஒலி இறங்கியது போல…. கண்கள் கூட இமைக்காமல் அவளிடம் கலக்க…
வீராவின் மனம் மெல்ல… ‘சிவபுராணத்தில் ஓரிடத்தில் வரும் ‘சொல்லாத நுண்ணுணர்வாய்…’ அப்படின்னு… அது போல…. இறைவனை போல… சொல்ல முடியாத நுண்ணுணர்வு இவள்… என்னுள் கலந்து நுண்ணுணர்வு இவள்…’ என மனம்.. மறந்து, மெய் மறந்து… அவளே சித்தம்… என வீரா… அவளின், அந்த அதிர்வலையில் தன்னை தொலைத்தான்.
இன்னும்… இன்னும்… அவளின் குரலை செவி வழி தன்னுள் நிரப்பிக் கொண்டான்.. அவளை தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு. மெல்ல அவள் சத்தம் ஓயவும்தான் சுற்றுபுறம் நினைவு வந்தது அவனுக்கு.
தன்னை மீட்டுக் கொண்டான்… ரவி ப்ரமையிலிருந்து…. கொஞ்சம் சிரமபட்டந்தான்…. அடுத்து, நேரம் செல்ல,… 
பேசி முடித்து… எல்லோரிடமும் விடைபெற்று கீழே வந்தாள் ரவி. தன் கணவனின் அருகில் வந்தவள் சிறு பெண்ணாக மாறி “எப்படி பேசினேன்…” என ரகசிய குரலில் கேட்க… 
வீராக்கு, மூச்சு பேச்சில்லை…  அமைதியாக அவளை பார்த்துக் கொண்டு நின்றான்… ரவி “என்ன…. என்னாச்சு…” என முன்னே நடந்தாள்.. 
வீராக்கு ஏதோ எண்ணம் ‘இடி சத்தம்… எப்படி இருக்குமென… எப்படி விவரிப்பது… அது அபத்தமல்லவா…’ என தோன்றியது… அதன் சாயல்.. அழுத்தமான உதடுகளை பிரிக்க… அப்படியே நடந்தான் வீரா.
இவர்கள் தனி காரில் வந்ததால்… அவள் அங்கு சென்றாள்… ஐஸ் வந்தாள் இவர்களிடம்… ஐஸ் “க்கா… இன்னிக்கு கலக்கிட்ட போ…. செம” என்றாள் தமக்கையிடம்…
ரவி “தேங்க்ஸ் டா” என்றாள் தன் கணவனை ஓரப்பார்வை பார்த்து…
ஐஸ் “மாமா போலாமா… எந்த ஹோட்டல்” என்றாள். வீரா பதில் சொல்லி அவளை அனுப்பினான்.
இன்னமும் வீராக்கு ரவியின் மயக்கம் தெளியவில்லை போல… அவளின் பின்னழகை பார்த்தபடியே நடந்தான்.
கார் வந்ததும்… இருவரும் ஏறி அமர்ந்தனர்… ஒன்றும் பேசவில்லை… வண்டியும் ட்ராபிக்கில் கலக்க… மெல்ல கவனம் ரவியிடம் வந்தது வீராக்கு… “என்னமோ கேட்ட” என்றான் தானே…
பதில் சொல்லவில்லை பைரவி… வீராவே “சொல்லட்டும்மா… ” என்றான், நேசனான குரலில்.. இன்னும் முகம் பார்க்க்கவில்லை ரவி.
“எனக்கு இன்னும்… இந்த பொண்ண முழுசா தெரியவோ, புரியவோ இல்ல… ஆம் சிக்… தட் மேட்டர்…ரவி….” என்றான் பாவமான குரலில்.
வேண்டுமென்றே அவனிடம் வம்பிழுத்தாள் ”ஓ… அதெப்படி என்னோட விஷயம் மட்டும் உங்களுக்கு புரியறதில்ல….” என்றாள்.
“ஹேய்…. உனக்கு என்னை புரியும்” என்றான்.
அவளும் “அதான் நானும் சொல்றேன்… உங்களுக்குத்தான் என்னை புரியாது…” என்றாள் செல்ல கோவமாக… 
“ம்…….. புரியலதான்….
நான் இங்க வந்த புதுசுல… என்னை அடிக்கண்ணால் கூட பார்க்காத ரவி…
அவ்வபோது என்னை சீண்டி… மட்டம் தட்டிய ரவி……..
அப்புறம் அன்னிக்கு, போலீஸ் ஸ்டேஷன்ல  என்னை பார்வையால் தோற்கடித்த ரவி….
மேடையில்… அத்தனை நபர்களையும் தன் வார்த்தை ஜாலத்தால்… தன் கருத்து செறிவால்…. சூரியனாய் சுட்டெரிக்கும் இந்த ரவி…
எந்த மறுப்பும் சொல்லாமல் நான் திருமணத்துக்கு கேட்டதும் ஒத்துகிட்ட ரவி…
அதுக்கு அப்புறம் கூட என்னுடன் பேசாதா… கொஞ்சம் திமிரான ரவி….
எனக்காக கல்யாணத்த ரிஜிஸ்டர் ஆபிஸ்ல வைச்சிக்க சரின்னு சொன்ன ரவி…
நான் இல்லாமல் எங்க வீட்டுக்கு போன ரவி….
இப்படி…… இந்த பைரவின்ற பொண்ண என்னால் புரிஞ்சிக்கவே முடியல…” என்றான் சின்ன சின்ன இடைவெளி விட்டு பொறுமையாய் பேசினான் வீரா…
ரவிக்கு கன்னம், காதுமடல் வரை சிவந்தது… அமைதியாக அமர்ந்திருந்தாள்… வீரா மென்மையாய் அவளின் கைகளை தொட… ரவியிடம் அமைதி மட்டுமே… 
வீராவே “நான் ரொம்ப லக்கி…. இதே அன்பும்… இதே துணிவும்… இதே அமைதியும்…. இதே ஞானத்தோடவும் உன்னை பாதுக்காக்கனும்…
அதுக்கு இந்த தேவதை வர தருமா…” என்றான்… உணர்ச்சிபூர்வமாக… ஒன்றும் சொல்லவில்லை ரவி அமைதியாக அமர்ந்திருந்தாள்… இருவருக்கும் மோனநிலை… அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியவில்லை இருவராலும்… அமைதியை கைலெடுத்துக் கொண்டனர்…
அப்போது காரில் மெல்லிய சத்தத்தில் 
“நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…
நீலம் கூட வானிலில்லை….
எங்கும் வெள்ளை மேகமே….
போக போக ஏனோ நீளும் தூரமே…
மேகம் வந்து போகும் போக்கில்… 
தூரல் கொஞ்சம் தூறுமே…
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்…
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்…
நான் பகலிரவு…
நீ கதிர் நிலவு….” என பாடல் நீண்டது…
இவர்களின் நிலை பாடல் வழி… தொடர்ந்தது….
ஹோட்டல் வந்தது… எல்லோரும் உண்டு முடித்து நல்ல மனநிலையிலேயே வீடு வந்தனர்.  
ஹாலில் அமர்ந்து மிச்ச… சொச்ச… பேச்சு சென்றது.. இளையவர்களிடம்.  ஐஸ் “எங்க அக்கா ட்ரிப் போறீங்க” என்றாள். பெரியவர்கள் உறங்க சென்றனர். 
வீரா, மாலை சொல்லியிருந்தான் “பத்து நாள் லீவ்…” என அதனால் ஐஸ் கேட்க…
வீரா… “எங்க நார்த்துதான் போகணும்… இல்ல வயநாடு….” என்றான் குரலில் சந்தோஷம் இருந்ததோ….
ரவி, தன் கணவனை ஒருதரம் பார்த்து விட்டு… “இல்ல, ஐஸ்…. அவருக்கே இபோதான் லீவ்… நாங்க நாளைக்கு திருவண்ணாமலை போகலாம்னு இருக்கோம்…
எனக்கு இந்த ட்ரிப்பெல்லாம் பிடிக்கல… 
நான் சொல்லிட்டேன்… 
மாமா, இன்னும்… ஒன்னும் சொல்ல” என தன் கணவனிடமே பந்தை நகர்த்தி சமர்த்தாக அமர்ந்து கொண்டாள்.
“ம்…..” என்றான் யோசனையாக வீரா. 
பின் இன்னும் ஏதோ பேசினாள் ஐஸ்… பதில் சொல்லிக் கொண்டிருந்தான் வீரா… ஆனால் முன்போல் கலகலப்பாக இல்லை… 
எனவே ரவி “தூக்கம் வருது ஐஸ்… காலையில் பேசலாம்” என எழுந்து கொண்டாள்.
வீரா தனிமையில் “ஏன் ரவி…. எங்கையாவது போலாம்ன்னு நினைச்சேன்” என்றான் அவளின் முகத்தை தீவிரமாக பார்த்து…
“அது ங்க……..” என அவள் தயங்க…
“சொல்லு “ என சொல்லி சட்ட திட்டமாக கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவளும் அருகில் வராமல் ஏதோ துணியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், அர்த்த ராத்திரியில் அதுதான் முக்கியம் என்பது போல…
கூடவே வீரா……… காரில், பேசியது எல்லாம் மனதில்… ரீவைண்ட் பட்டனில் ஓடிக் கொண்டிருக்க… இப்போது வீராவின் கேள்வி காதில் விழவும்… கூடவே அவனின் தோரணை பார்த்தவளுக்கு… கொஞ்சம் விளையாட தோன்ற… “என்ன… என்ன.. சொல்லு, நீங்க மட்டும், நான்.. நினைச்சா மாதிரியா இருந்தீங்களா…
நான் மட்டும் ஏன் நீங்க நினைச்சா மாதிரி இருக்கணும்…
வரமுடியாது உங்க கூட ஹோனிமூன் வர முடியாது…” என்றாள்.
வீரா சிரிக்காமல் “ஹேய்…. ஹோனிமூன்னா… என் கூட மட்டும்தான் போகணும்… நான் உன் கூட மட்டும்தான் போகணும்…
இதில் நீ வரமாட்டன்னு சொல்ல கூடாது பேபி…” என்றான் பொறுமையாக.
அவனை முறைத்தாள்… “என்ன காமெடியா… அப்புறம் சிரிக்கிறேன்… நான் உங்க கூட வர முடியாது” என்றாள் மீண்டும்.
வீரா இப்போது “என்ன பழிக்கு பழியா…” என்றான் ஒருமாதிரி குரலில்.
ரவிக்கு அவன் முகத்தை பார்க்க முடியவில்லை… அமைதியாக நின்றாள் வீராவே மீண்டும் “சொல்லுடி” என்றான்.
ரவி “ஆமாம், ரத்தத்துக்கு ரத்தம்… என்ன இப்போ” என்றாள். விண்டோ கட்டன்ஸ்சை இழுத்து விட்டபடியே…
வீரா சிரித்தான் கொஞ்சம் சத்தமாக “ஹேய்…. ஜோக் பண்ணாதா… இன்னும் என்ன கோவம்” என்றான்.
கண்ணில் நீர்தான் வந்தது “கோவமெல்லாம் இல்லை… ஆனா, என்னை நீங்க உங்க இஷ்ட்டப்படி வலைக்கறீங்க…
நான் இப்படி கிடையாது… நா… நான் ஏதோ… உங்க கூட இருந்தா… பொம்மை மாதிரி ஆகிடறேன்…
அதனால உங்க கூட வர முடியாது…” என்றாள் அந்தபக்கம் பார்த்தபடியே குரலில் எப்போதும் போல உறுதிதான் இருந்தது. ஆனால், இந்த சொற்கள் என்ன சொன்னது வீராவிடம்… அவளையும் மீறி வந்த வார்த்தைகள்… எனவே அங்கேயே நின்றாள்.
வீரா, மெல்ல அருகில் வரும் சத்தம் கேட்கிறது ரவிக்கு. ஆனாலும் திரும்பவில்லை… வீரா, பின்னிலிருந்து அவளை அணைத்தான்.. காதோரம் “நீ என்ன சொன்னேன்னு உனக்கு புரியுதா… பேபி” என்றான்.
மௌனம் மட்டுமே… கூடவே இப்போது அவனின் பிடி இருக… கண்ணில் நீர் கன்னம் தாண்டியது ரவிக்கு. வீரா “புரியுதா…” என்றான்.
“ம்… ம்… என்ன புரியாமா… உங்க மேல பைத்தியமா இருக்கேன், அதான் புரியுதே… “ என்றாள் சலித்தபடியே…
வீரா “தேங்க்ஸ் டா…. ஆனா, ஏன் என்னை தள்ளி வைக்கிற…” என்றான்.
திமிறிக் கொண்டு அவனிடமிருந்து பிரிந்தாள்… “எ… எனக்கு கண்ணை மறைக்கும் காதல் வேண்டாம்… அளவா இருந்தா போதும்…. ப்ளீஸ்… வீரா… உங்களுக்கு புரியுதா…” என்றாள்.
வீரா குழப்பமாக நின்றான். வீராவையே குழப்பிய நிம்மதியில் பைரவி “ஏற்கனவே பாதி பைத்தியமா இருக்கேன்.. அப்புறம் முழு பையித்தியமா ஆகிடுவேன்… அதனால, நீங்க தள்ளியே இருங்க…
ஹோனிமூன் வேண்டாம்… நாம ஊருக்கு போகலாம்… ” என்றாள். பெருமூச்சு விட்டபடியே…
வீரா சிரித்தபடியே… “ஹய்யோ … எவ்வளோ யோசிக்கிற நீயி, பயங்கரமா யோசிக்கிற டா ரவி…
ஆனா, பாரேன்… இப்பவும் நீ யோசிக்கிற தூரத்தில்தான் நான் இருக்கேன்… 
உன்னோட பயம் தேவையில்லாதது ரவிம்மா… 
நீ என்னை புரிஞ்சிக்கிறது நல்லதுதான்… ஆனா, நீ என்னை அதிகமா புரிஞ்சிக்கிட்ட போல… அதான் பயம்…
சாரி, உன்னை இப்படி படுத்தி வைச்சதுக்கு….
இப்போதான் உன்னை அதிகமா புடிக்குது ரவி…. சொல்ல தெரியல… ஆனா… இப்போ என் கண்ணுக்கு அந்த சின்ன பொண்ணு போயி… என்னோட ரவியா என்னுள் பரந்து விரிந்து… எல்லாயில்லாமல் நிற்குற…. “ என்றான் ரசனையான பார்வையுடன்….
மீண்டும் அவளின் கன்னம் காது எல்லாம் சிவந்தது… இப்போது அது வீராவின் கண்களுக்கு தெரிய… தன் சுட்டு விரல் கொண்டு அதனை வருடினான்…
“இப்போ சொல்லு…  நீ சொல்லு…. போகலாமா வேண்டாமா….
வேண்டாம்ன்னா, வேண்டாம்தான்…. யுவர் விஷ்…. “ என்றான் மயங்கிய குரலில்.
“வேண்டாம்… எனக்கு இந்த ட்ரிப்பெல்லாம் பெருசா விருப்பமில்ல…எப்போ வேணா… ட்ரிப் போயிக்கலாம்… நீங்க உங்க வீட்டோட இருந்தே ரொம்ப நாளாச்சில்ல… அங்க எல்லோரும் பீல் பண்றாங்க…
அதான், அங்க இருக்கலாம்ன்னு…” என்றாள்.
“ஓகே…” என்றான் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு… சிலசமயம்… அந்த கருப்புசட்டைகாரன்… அவளிடம் சத்தமில்லாமல் மண்டியிட்டு விடுகிறான்.
$%$%$%$%$%$%$
அடுத்த வந்த விடுமுறை தினங்கள் எல்லாம் அங்கேயே… வீரா குடும்பத்துடன் செலவிட்டனர் இருவரும்… வீரா, இந்த நாட்களை குடும்பத்துடன் கழித்தான்.
ரவி தினமும் கோவில் சென்றாள்.. எல்லோரும் “வீரா கூட போ” என்பர்.
ஆனால் ரவி “வேண்டாம் அத்த…. அவர் வரமாட்டார்… நாம போலாம்” என இவளே பதில் சொன்னாள். அவனுக்கு பிடிக்காதா எதையும் அவள் செய்ய சொல்லுவதில்லை… ஏன் கண்ணால் கூட கேட்பதில்லை… அவனும் அப்படியே…
அழகான… நூலினால் ஆன… சிறு இடைவெளி இருவருக்கும் இடையில்… எப்போதும் இருந்தது. அதனை இருவரும் பக்குவமாக காத்தனர்… கடக்க நினைக்கவில்லை.
அதன்பின் நல்லநாள் பார்த்து பைரவி… நாகைக்கு அழைத்து சென்றனர்… இருகுடும்பமும்.
ஆனால் அங்கு இவர்கள் சேர்ந்தார் போல பத்துநாள் இருந்தால் எதேஷ்ட்டம்… பைரவிக்கு இங்கு… நிறைய வேலை இருந்தது… அதேதான் வீராக்கும்.
முன்னமே நேரம் காலம் பாராமல் ஓடுபவன் இப்போது இன்னும் வசதியாய் ஓடினான்… ரவி இருந்தால் சாப்பாடு இருக்கும் இடத்திற்கே வந்தது… போன் செய்து அவனை ‘எங்கிருக்கீங்க’ என கேட்க கூடமாட்டாள்… அதனால் கவலையே இல்லை வீராக்கு… இவன் வருவதுதான் நேரம். எனவே, வீரா வேளையில் இன்னும் மிளிர்ந்தான்.
பைரவியும் பேச்சு… கெஸ்ட் லக்ஸர்… சொற்பொழிவு என அவளும் அவ்வபோது சென்னை… நாகை… என வந்து செல்லும் நிலையில்தான் இருந்தாள்.
வாழ்க்கை என்னமோ இருவரையும்… சுழற்றிக் கொண்டிருந்தது… அவர்களும் சலிக்காமல் சுழன்றனர் தனித்தனியே.. ஆனால், இன்னும் அதிகமான புரிதலுடன்… அதிகமான தேடலுடன்… அதிகமான காதலுடன்… எனதான் சுழன்றனர்..
.

Advertisement