Advertisement

எனக்கானவளே நீதானே…
(வசமிழக்கும் வானம் நான்….)
வீரா, மெயின் எக்ஸாம் டெல்லியில் எழுதுவகாத அப்லே செய்திருந்தான் எனவே… அடுத்த இரண்டுநாளில் டெல்லி பயணமான… 
கல்யாணி, எவ்வளவோ அழைத்தும்… தனது ஊருக்கு செல்லவில்லை அவன். பெரிய குறைதான் அன்னைக்கு.
ராகவ், கூப்பிட்டு வாழ்த்தியிருந்தார் வீராவை. அவனின், தந்தை அழைத்து பேசியிருந்தனர்… “இப்போதுதான் உன் மீது நம்பிக்கையே வருது டா “ என வைத்தியலிங்கம் சொல்லியேவிட்டார்… 
கைலாஷ், கூப்பிட்டு பேசினான். ஆனால் “ஏன்.. இதெல்லாம் செய்யற, நீ போனாலும் இதே போல்தான் அரசு செயல்படும்…. அதுக்கு நீ உன்னோட சொத்தை பாதுக்ககாலாம்முல வா…” என பேசினான்…
முந்தைய வீரா இல்லையே இப்போது எனவே “ண்ணா… அது எனக்கு ஒத்து வராது…. எனக்கு எதையும் இப்போ மாத்த தோனல… என்னால் முடிஞ்சத செய்ய போறேன்….
அப்புறம்…. நீ எதையும் மனசில் வைச்சிக்காம பேசினது சந்தோஷம்…” என சற்று நிறுத்தினான். ஏதோ… சொல்ல வந்தான் போல… பின் அமைதியாகிவிட்டான் வீரா… கொஞ்சம் பக்குவப்பட்டுவிட்டானோ… அப்படிதான் இருந்தது அவனின் குரல்… ஆவேசமில்லா… அமைதியான த்வனியில் பேசவும்… கைலாஷ்க்கு அப்படிதான் தோன்றியது..
பின்பு அண்ணியை விசாரித்து, தொழில் பற்றி கேட்டுக் கொண்டு வைத்துவிட்டான். ஆக, முன்புபோல் அவனின் வீட்டில் யாரும் அவனை ஒதுக்கவில்லை… இதுவே வீராக்கு நிம்மதியை தந்தது… ஆனால், தெளிவாக வீரா, தன்னை நெருங்கவிடவில்லை… முன்பு போல் அவர்களை புறக்கணிக்காமல்… ஏற்றுக்கொண்டான்.
ஆனால், அந்த பைரவி பெண் மட்டும் இன்னும் புரியவில்லை… அவனுக்கு ‘அன்று ஏனோ அப்படி பார்த்தாள் விழுங்குவது மாதிரி… ஆனா, ஒரு வார்த்தை என்ன வாழ்த்தவில்லை… என்னையும் அருகில் நெருங்கவிடவில்லை… ’ என கை நகக்கண்ணை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான்… முகம் மென்மையானது… அவ வீட்டுக்கு போலாமா… என்றே தோன்ற தொடங்கிவிட்டது… அந்த ஷனத்தில். 
தலையை உலுக்கிக் கொண்டான்… ‘எனக்கு வேலை நிறைய இருக்கு… அவ சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா…. ஏற்கனவே… மதிக்கமாட்டா… இப்பொ போனேன் அவ்வளோவுதான் திரும்பியே, பார்க்க மாட்டா…’ என தனக்குதானே சொல்லிக் கொண்டான்…
பெருமூச்சு விட்டு அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை… மெல்ல தனக்குள் அழுத்திக் கொண்டான்… கண்கள் எங்கோ வெறித்தது… கொஞ்சம் உறுதி வந்தது… ‘வரேண்டி…. நீ தவிர்க்க முடியாத ஒருவனாய் வரேண்டி…’ என உதட்டோரம் புன்னகையுடன் நினைத்துக் கொண்டான்… சிரிப்பாகவும் வந்தது… ‘ஏதோ… இவளை பார்க்கத்தான் இங்கு வந்தேனா…. அவகிட்ட போய்… சவால் விடற…’ என உள்மனம் அடித்துக் கொண்டது….
ஆனாலும் ‘எப்படியோ… பிடிக்குதே… விடமுடியலையே… ‘ என அவன் உதடு சிரிக்க ஒத்துக் கொண்டான் வீரா… அந்த இரவு முழுவதும் அவளோடான கனவுகள்… உறக்கம் வரவில்லை… அதை அவன் நினைக்கவும் இல்லை.. அப்படியே அந்த இரண்டு நாட்களையும் கடத்தினான்…
மறுநாள் கிளம்பிவிட்டான்… ஐஸ்சு, காலையிலேயே வந்து பார்த்து… ஒருபாடு அழுது… ‘எப்போ வருவீங்க…. எக்ஸாம் முடிஞ்ச உடனே இங்க வரணும்….’ என சத்தியம் வாங்காத குறையாக… கிளம்பினாள்… 
அந்த குட்டி ஜீவன் மீது… வீராக்கு பாசம் பொங்கியது… அவளின் தலை கோதி “கண்டிப்பா உன்ன பார்க்கத்தான் முதல்ல வருவேன்….” என்றான்…. ஏனோ… இந்த மாதிரி பக்கத்து வீட்டு பாசத்தை இவன் அனுபவத்ததே இல்லை… 
ஒரு பொட்டி கடைக்கு சென்றாலும்… இந்த மிட்டாய் என் பிள்ளைக்கு பிடிக்கும் என தோன்றுமே தந்தைகளுக்கு…. அப்படி ஒரு பாசம் ஐஸ்சுவிடம்… வீராக்கு. அவளின் எதிர்பார்ப்பில்லா பாசம் அவனை, சிலசமயம் உயிர்ப்புடனே வைத்திருந்தது… 
அவளுக்காக சின்னதாக ஒரு ஹெட்செட் வாங்கி கொடுத்தான்… எப்போதோ அவள் தன் வீட்டில் அது வேண்டுமென சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.. அதை நினைவு வைத்து வாங்கி கொடுத்தான்…  
அதை பார்த்ததும் ஐஸ்… “பரவாயில்ல… நீங்க வேலைக்கு போய் வாங்கி கொடுங்க… இப்போ இத வைச்சிகங்க….” என்றாள் சிறுபிள்ளையாய். சிரிப்பாக வந்தது… அவனுக்கு
வீரா, எப்போதும் போலான குரலில் “நீ காலேஜ் தானே போற… இந்த அண்ணன்… என்ன?… அப்படியா சாப்பாட்டுக்கு திண்டாடுறான்… வாங்கிக்க… அன்னைக்கு சும்மா சொன்னேன்… “ என்றான் கேலியான குரலில்.
ஐஸ்… ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் “சீக்கிரமா வரணும்” என்றாள்… கண்ணில் நீருடன்… வீரா, தலையசைத்து விடை கொடுத்தான்…
மதியமாகதான் அவனுக்கு விமானம்… எனவே… எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினான்… பைரவியிடம் மட்டும் சொல்லவில்லை… 
அவளுக்கு தெரியும் இன்று கிளபும்கிறான் என ஆனாலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை வீராவிடம். எனவே எப்போது போல கல்லூரி சென்றுவிட்டாள்… 
ஆனால், மனமெல்லாம் ஏதோ உருத்தல்.. ‘என்ன செய்ய முடியும்… அவன் முன்பு போயா… நிற்க முடியும்… இப்போவெல்லாம் இந்த பக்கம் பார்க்கறது கூட கிடையாது…. என்ன சொல்லிட்டேன் இவர… போங்க… நான் செய்தது ஒன்னும் தப்பில்ல… அப்படிதான் செய்வேன்… என்ன இப்போ… இவர் செய்ததுதான் தப்பு… அவனே முறுக்கிட்டு இருக்கும் போது எனக்கென்ன…’ என ஏதோ அவனே எதிரில் இருப்பதாக நினைத்து… தனது மீன் டாலர், போட்ட செயினை கடித்துக் கொண்டே நினைத்திருந்தாள் அவனை… கல்லூரியில்.
ஆக வீரா, பைரவியை பார்க்கவில்லை….. கிளம்பிவிட்டான்.. தாத்தா ஆயிரம் முறை பத்திரம் சொல்லி அனுப்பினார்… கோதை “நல்லா சாப்பிடு…” என்றே சொன்னார்… இப்படியாக வீரா டெல்லி… வந்து சேர்ந்தான்…
வீராக்கு, அடுத்து வந்த நாட்கள்… சொல் பேச்சு கேட்டாமல் ஓடும் குழந்தையென…. சீக்கிரம் ஓடியது. மிக பெரிய உழைப்பை போட வேண்டியிருந்தான்… எப்போதும் ஏதேனும் ஆர்டிகள் படித்தபடியே இருந்தான்… 
இவர்களின் சென்டர் பரிந்துரைத்த வேறு சென்டரில் படித்தான்… நாட்கள் குறைவுதான்… ஆனால், அவனிடம் திட்டமிடல் இருந்தது. எனவே, தெளிவாக இருந்தான்…
அதிக நேரம் ஸ்கைப்பில்… தாத்தாவுடன் பேசினான்… நிறைய வாதிட்டான்… தெளிந்தான், அறிந்து கொண்டான்… 
மாலையில் பெரும்பாலனான நேரம் சுந்தரம் தாத்தா, அவனுடன் பேசியபடியேதான் பைரவியை வரவேற்பார்… அன்றும் அப்படிதான்.. தனதரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்…  தாத்தாவை தேடி வந்த பைரவிக்கு காண்டானது…. “என்ன தாத்தா இப்போவெல்லாம் எங்கள விட நீங்கதான் நெட் யூஸ் செய்றீங்க” என்றாள் சீறியபடியே..
நீண்டநாள் கழித்து… அவளின் குரல்… ஒரு அதிர்வை தந்தது அவனிடத்தில்… ‘எப்படிடி இருக்க’ என மனம் ரகசியமாக கேட்டு கொண்டது… அவனிடத்திலேயே… கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், அவனும் வீம்புக்கு ”உங்களுக்கு தனியா வை’பய் கனெக்ஷன் வாங்கி தரேன் தாத்தா… “ என்றான்… தாத்தா சிரிக்க…
பைரவி “பார்றா… வாங்குங்க… வாங்குங்க…” என சொல்லிக் கொண்டிருக்க… தாத்தாக்கு போன் வந்தது… தாத்தா.. போனை தூக்கி பார்த்து, யார் எண்.. என அறிந்து எடுத்து பேசியபடியே வெளியே செல்ல… இவனுக்கு யாரின் முகமும் தெரியவில்லை…
பைரவியின் பெயரை கூப்பிட சங்கடப்பட்டு… “ஐஸ்……… ஐஸ்……” என்றான் இருமுறை… அவள் இந்த நேரத்திற்கு வரமாட்டாள் என தெரிந்தும்… 
பைரவி அமைதியாகவே இருந்தாள்… ‘திமிர்… வேணும்னே… கூப்பிடுற….’ என எண்ணி அமைதியாக இருந்தாள்..
மீண்டும் “தாத்தா… தாத்தா…” என்றான் இரண்டுமுறை… இப்போது வீரா ‘திமிரடி உனக்கு’ என எண்ணியபடியே… அழைக்க… 
‘ம்கூம்..’ சத்தமில்லை, அடுத்த ஐந்து நிமிடமும். ஆனால், அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது தீவிரமானது அவனுள்… அவனும் அப்படியே இருந்தான்..
பைரவி, பொறுமையாக “யாரும் இல்ல… இங்க…” என்றாள்… மெல்லிய குரலில் அலட்சியமாக…
வீரா “அப்போ யார் பேசறது… முகத்த காட்டினா பரவாயில்லை” என்றான்… ஏதோ ஒரு குருட்டு அதிஷ்ட்டமாவது அடிக்கட்டும் என்ற எண்ணத்தில்…
“எதுக்கு காட்டனும்… சொல்லாமல் போன… பாதி கலெக்டர்கிட்ட” என்றாள் ஆர்வகோளாரில்…. ‘ஐயோ’ என அவள் யோசிக்கும் முன்… 
வீராவின் குரல் வந்தது “முழு கலெக்டர் ஆகிடுவேனா…” என்ற தயக்கம் பாதி… ஆசை மீதியாக… குரல் வந்தது. தன்மீது நம்பிக்கை இல்லாதவன் இல்லை… ஆனால்… ஏதோ அவளிடம் தன்னையறியாமலே… தன் நிலையிழந்தான்… வீரா.
அவளை யோசிக்க விடாமல் அடுத்த கேள்வியை இப்படி கேட்கவும்… கொஞ்சம் நிலையிழந்தாள் பைரவி… ஏதோ அருள்வாக்கு கேட்கும் நிலையிலிருந்தது அவனின் குரல்… 
எனவே… பைரவிக்கு, அது புரிய… என்ன சொல்ல முடியும்… ஏற்கனவே பேசியதில் ‘சற்று அதிகமாக பேசிட்டனோ’ என நினைத்திருந்தவளுக்கு… அந்த கேள்வி என்னமோ செய்ய… “ம்… கண்டிப்பா” என்றாள்… இன்னமும் அமர்ந்த இடத்திலிருந்து… 
அதை அப்படியே வாங்கிக் கொண்டான்… வீரா. சின்ன ஆஸ்வாசம்… வந்தது. ஏதோ பெரிதாக நடந்தவனுக்கு… கொஞ்சமாக இளநீர் கிடைத்த மகிழ்ச்சி… அன்று விட்டு போன… வாழ்த்தா… இல்லை, நாளைக்கான வாழ்த்தா… என தெரியவில்லை அவனுக்கு… “தேங்க்ஸ்..” என முடிக்க கூட இல்லை… தாத்தா வரவும்… இருவரும் நிலையுணர்ந்து… இதுவரை கட்டியிருந்த… ஏதோ மாயசுவர் உடைந்த நிலையில்.. அமைதியாகினர்…
பின் தாத்தா… “என்ன வீரா இவ்வளோ நேரம் லைனல இருந்தியா…. பைரவி இங்கதான் இருக்கா, பேசியிருக்கலாமில்ல…” என சொல்லியபடியே “சொல்லு” என அவனின் கேள்வி தொடர்பாக பேச தொடங்கினார்…
வீராவும், ஏதோ குறிப்பை பார்த்து அவரிடம் கேள்வி கேட்டான். தாத்தா.. “ம் கூம்… மத்த பேப்பர பார்க்காத… ஹிந்துபேப்பர்… பாரு… அந்த டாக்குமென்ட்… சரியா புரியும்” என ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்…
பைரவிக்கு, அவனின் ஆழ்ந்த… அமைதியான குரல்… உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது… கூடவே, இப்போது அவன் கேட்ட… “கலெக்டர்… ஆகிடுவேனா” என்ற வார்த்தையும் மெல்ல உள்ளே இறங்க தொடங்கியது… சின்ன சின்ன இடங்களில் சறுக்குபவள் இல்லை பைரவி… ‘ஏனோ… இவனிடம் மட்டும்… என்னால ஈஸியா போக முடியலை ‘ என அவள் மனம் சொல்லிக் கொண்டிருக்க.. இவள், அமைதியாக இருந்தாள்.
எக்ஸாம் நாளும் வந்தது… 
வீராக்கு, மொத்தமாக மிக பொறுமையாக நகர்ந்தது அந்த நாட்கள்… அதைவிட பொறுமையாக வீரா சென்றான்… ஒருமாதமே நடந்தது அந்த தேர்வு…
அடுத்து முடிவு தெரிய அதேபோல் ஒன்றரை மாதம் ஆகும்… ஆனால், வீரா எங்கும் செல்லவில்லை… தனக்கு தெரிந்த நண்பர்கள்… பயணம்… என நாடோடியாக சுற்றினான்…
வீட்டிலிருந்து எல்லோரும் அழைத்தனர்… ஐஸ் எப்போதும் போல அழவே செய்தாள்… ஒன்றும் வீராவிடம் எடுபடவில்லை… ஏனோ இறுகிக் கொண்டான் சட்டமாக “முடியாது” என்றான்.
எல்லோருக்கும் அதில் சற்று வருத்தமே… தாத்தா கூட “ஒருதரம் வீட்டுக்கு போயிட்டு வா வீரா” என்றார்… மறுத்து விட்டான் பிடிவாதமாய்…
பைரவி… தனது வேளையில் மும்முரமாக இருந்தாள்… அடுத்தடுத்து ஏதோ விழா… வாய்ப்பு.. பேச்சு. என அவளின் ஓட்டம் அதிகரிக்க தொடங்கியது. அன்று அவனுடம் பேசியதுடன் சரி அதன் பிறகு பேசவில்லை… ஏன், அவள் வரும் நேரங்களில் கூட இவனும், தாத்தாவும் பேசுவதில்லை போல… வீரா குறித்துக் கொண்டான் போல… பைரவி சில சமயம் தேடினாலும்… இயல்பான அலட்சியம் ‘பாத்துக்கலாம்’ என்ற எண்ணமும் அவளிடம் வந்தது.
இதற்கு நடுவில் எக்ஸாம் டேஸ்… பேச்சு… பட்டிமன்றம்… என அனைத்தையும் கவர் செய்து… அவ்வபோது எங்கோ உறுத்தும் வீரா நினைவையும் கவர் செய்து… என பைரவி… பிஸிதான்.
வைத்தியலிங்கம்… அப்போதெல்லாம் வீராவை போலீஸ் கேஸ்சிலிருந்து காப்பாற்றியது… இப்போது உதவியது. வீரா, நேர்முக தேர்வுக்கு தேர்வாகினான்… நல்ல மதிப்பெண்… இவனே… IAS அல்லது IPS என தேர்வு செய்யலாம்… அதுபோலான கிரேட்…. 
அழைப்பு கடிதம்… அவர்களின் சொந்த ஊருக்குதான் வந்தது…. கல்யாணி “வந்துட்டு போடா “ என அழைத்தார்… ஆனால், நேரமில்லை வீராவுக்கு… எனவே இந்த முறையும் அவன் வரவில்லை…
பைரவிக்கு, காதில் அவனது செய்திகள் எல்லாம் வந்து விழுந்தது. சின்னதான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவன் புகழ் கேட்டு… சுந்தரம் தாத்தாதான்… சொல்லிக் கொண்டே இருக்கிறாரே… எனவே கேட்கும் போது.. ஒரு சின்ன புன்னகை வந்தது… அவளிடம். அவன் குறித்த ஒப்பிடுகள்.. அளவுகோல்கள்… கொஞ்ச கொஞ்சமாக மாற தொடங்கியது…. ஏதேதோ காப்பியங்களும், அதன் தலைவனும் நினைவு வந்தான் பைரவிக்கு. எல்லாம் அந்த யாருமறியா புன்னகையுடன் நின்றுவிடும்… எங்கும் வெளியே வரவில்லை.. பைரவி.
பிரமாதமாக நேர்முக தேர்வை முடித்தான் வீரா. அடுத்து ட்ரைனிங் டைம்… உடனே கிளம்பிவிட்டான்… தமிழ்நாட்டு பக்கம் வரவேயில்லை… எல்லாம் விவரமும் தாத்தாக்கு மட்டும் தெரிந்தது…
வீரா, ட்ரைனிங் கிளம்பும் முன்…. ராகவ் வந்து பார்த்தார். ராகவ், வீட்டுக்கு செல்வதால்… அந்த வருடம்… இவனை பார்பதற்காக டெல்லி வந்தார். எல்லோருடைய விருப்பம் அது… எப்படி இருக்கிறான் என யாருக்குமே தெரியவில்லை.. எனவே, வைத்தியலிங்கம் முதற் கொண்டு…. சுந்தரம் தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனவே இந்த வகை ஏற்பாடு…. அவ்வளவுதான்…
ராகவ், வீராவை பார்த்து.. எல்லாருடம் வீடியோகால் பேச வைத்தார்… வைதியலிங்கத்திற்கு இப்போதுதான் நிம்மதி… கூடவே போடோஸ்… என ராகவ், சற்று மெனகேட்டார் அவர்களுக்காக. வீரா நிம்மதியாக பயிற்சிக்கு சென்றான்.
ராகவ், இந்த முறை…. வந்தது… பைரவிக்கு வரன் பார்க்கத்தான்… அதற்கான வேலைகள் நடக்க தொடங்கின… பைரவிக்கு இந்த வருடத்துடன் முதுகலை படிப்பு முடிவதால்… இந்த திருமண ஏற்பாடு.
எனவே தன் தந்தையின் வரவை பைரவி… சற்று தயக்கமாகவே ஏற்றாள்… கோதை கூட “பொண்ணுக்கு வெட்கம்ங்க” என்றார் தன் கணவரிடம்…
ஆனால், அவளின் பேச்சோ… சிந்தனையையோ… வீட்டில் யாரும் தடை போடவில்லை… எப்போதும் போல தன் வேலையை செய்தால்… 
ஐஸ் “க்கா… நீயும் போயிட்டீனா, எனக்குதான் செம்ம… போர்க்க… வீராண்ணாவும் இல்ல… என்னதான் செய்வானோ” என்றாள் கவலையாக…
பைரவி, அமைதியாகவே இருந்தாள், ஏதும் பேச முடியவில்லை… என்ன பேசுவது என்றும் தெரியவில்லை… எனவே, அமைதி. உள்ளுக்குள் ‘என்னதான் பிரச்சனை எனக்கு… அவனும் ஏதும் கேட்கல… நானும் எதுவும் சொல்லல… எதுக்கு இவ்வளோ குழம்புகிறேன் நான்’ என தன்னை குறித்தே வருந்தினாள் பைரவி.. 

Advertisement