Advertisement

ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது… இவளும் இறுதியாக ஸ்டார்ட் ஆகிடுச்சி நான் நான்காவதாக பேசுவேன்… என சொல்லி  போனை ஆப் செய்து வைத்துவிட்டாள்.
முதல் முறையாக… இந்த பட்டிமன்றத்தில் பேச பைரவிக்கு, பணம் கொடுக்கப்பட்டது… அதாவது… போட்டியில் கலந்து கலந்து கொண்டிருந்தவள்… இப்போது சம்பாதிக்க தொடங்கியிருக்கிறாள்….
டிவியில் ஒளிபரப்பாகும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எனவே பைரவி சற்று டென்ஷனாக இருந்தாள்….
பெரிய பெரிய மின் விளக்குகள்… ஆளுமை மிக்க… அவளின் மானசீக ஆசிரியர்கள் மேடையில் இருக்க… முதல் பொதுமக்கள் மேடை என சொல்லலாம் பைரவிக்கு…
மஸ்டடும் பச்சையும்… கலந்த பாலும் பழமும் கட்டம் போட்ட… ஒரு சில்க்காட்டன்… எடுப்பான அணிகலன்கள்… கையில் ஒற்றை வளையல்… மறுகையில் டாட்டாவின் ராகா… எல்லா பெரியவர்களையும் வணங்கி அமர்ந்து கொண்டாள்… தனதிடத்தில்.
அந்த பயமெல்லாம்… மனதில்தான் போல… வெளியே எப்போதும் போல… வளையாத உடல்மொழிதான்… ஆனால், அவளின் கண்கள்தான் யாருக்கும் தெரியாமல் சுழன்று சுழன்று வந்தது… நம் மனிதர்கள் யாராவது வந்திருக்கிறார்களா… என.
விழா தொடங்கியது… யாரையும் காணோம்… பைரவி மெல்ல மெல்ல அவர்களின் பேச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்… அப்படியே நேரம் செல்ல… அவளின் முறை வந்த்து… நடுவர்… அடுத்த தலைமுறையின் பேச்சாளார் என இவளை அறிமுகம் செய்தார்… இவளும் எழுந்து வந்தாள் மைக்கருகில்…
அப்போதுதான் அவசர அவசரமாக… உள்ளே வந்தாள் ஐஸ்… அவர்களுக்கான பாஸ் எடுத்து அங்கிருந்த யாரிடமோ, கேட்டுக் கொண்டு தாத்தாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்… இரண்டாவது வரிசையில் இவர்களுக்காக இடம் ஒதுக்க பட்டிருந்தது… இரண்டு இருக்கைகள்… அவர்களை பார்த்த பைரவியின் கண்கள் ஒளிர்ந்தது… தெளிவான த்வனியில் சபையோரை வணங்கி.. தொடங்கினாள் தனது உரையை…
இவளின் இன்றைய தலைப்பு கம்பனின் காவியத்தில் பெண்களில் பங்களிப்பு…. அதில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பாத்திர படைப்பு பற்றி பைரவி விவரித்துக் கொண்டிருந்தாள்… அழகான குரலல்ல… அதிர்வான குரல்… நான் சொல்லுவது சத்தியம் என்ற த்வனி… உடல்மொழியில் திமிர் என பைரவியை விட்டு கண்ணேடுக்கவில்லை வீரா….
ஆம், வீராவுடன்தான் வந்திருந்தனர் இருவரும்… வீரா, முதலில் உள்ளே வரவில்லை என்றுவிட்டான்… பின்பு… வெளியே நிற்க மனது கேட்கவில்லை… உள்ளே வந்து நிற்பவர்களுடன் நின்று கொண்டான்… ஒரு ஓரமாக. 
கண்கள் சுதந்திரமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தது… நீண்டநாள் சென்று கிடைத்த காட்சி… அதுவும் காலையிலிருந்து இதமான மனநிலையில் இருப்பதால்… ‘பார்த்தால் என்ன இப்போ’ என தோன்ற… கையை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு.. கேட்டு, பார்த்து… உணர்ந்து கொண்டிருந்தான் அவளை…
பேச்சு ஒரு பதினைந்து நிமிடம் சென்றது… இறுதியாக இதை சொல்லி அமர்கிறேன்  என பைரவி தனது வெண்கல குரலில்….
“வென் எருக்கஞ்சடை முடியான் வெற்பு எடுத்த 
திருமேனி, மேலும் கீழும் 
‘எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்
இடன்  நாடி இழைத்தவாறோ?
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சாணகியினை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்’ எனக் கருதி உடல்புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி?”
‘வில்லனின் மனைவி என்றால் அவளிடம் காதலில்லையா… ராமன்… இராவணனை அம்பு கொண்டு துளைக்கிறான்… உடல் முழுவதும். இராவணன் இறந்து விடுகிறான் அப்போது மண்டோதரி…. அவன் மேல் விழுந்து கதறுகிறாள் இப்படி… ‘எருக்கன் பூவை சூடும் சிவபெருமானின் கயிலை மலையை தூக்கிய இராவணனின் உடம்பில்…. “எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்… உயிர் இருக்கும் இடம் முழுவதும் தேடியதோ… கள் இருக்கும் மலர்களை சூடும் ஜானகி தேவியை, மனம் எனும் சிறையில் ஒழித்து வைத்திருந்த… காதலானது…. உள்ளே இருக்கும் எனக் கருதி உடல் முழுவதும் நுழைந்து.. தடவி பார்த்ததோ… ராமனின் அம்பு…” என கதறுகிறாள்…. இப்போது சொல்லுங்கள்… மண்டோதரியின் காதல் எவ்வளவு அழுத்தமானது என கம்பன், எப்படி.. படைத்திருக்கிறான்.. பாருங்கள்..’ என தொடர்ந்து அவளின் பேச்சு… சென்றது…
நடுவரையும், மக்களையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவளது கண்கள்… பொருள் சொல்லும் போது கண்டு கொண்டது அவனை… ஏனோ அதன் பிறகு அழுத்தமான பார்வை பார்த்து… முழு பொருளையும் சொல்லி முடித்தே வேறு பக்கம் பார்த்தாள்…. பைரவி.
வீராக்கு, அவளின் அந்த பார்வையில் கொஞ்சம் கோவம் வந்தது… ஆனால், அவளின் அசையா பார்வையை இழக்க விருப்பமில்லை… தானும் தவிர்க்க முடியாமல் அதனுள் நுழைந்தான்…. என்ன… ஏது.. என தெரிய கூடாது என யோசிக்க கூடாது என எண்ணிக் கொண்டான்… அப்படியே நின்றான்…
நீண்ட தூரம்தான்… தூரத்தில்தான்… நின்றிருந்தான் வீரா… ஆனாலும், பார்வையில் பட்டுவிட்டான் என்பதே… அவளை, ஏதோ செய்தது… அதுவும் தனது பார்வையை உள்வாங்கி நின்றது ‘என்னமோ போல்… இருந்தது…’ அவளுக்கு. அப்படியே அந்த தீவிரமான பேச்சை முடித்து, அமர்ந்தாள்…
அதன்பிறகு ஒருமணி நேரம் சென்று… தீர்ப்பு சொல்லி… நன்றி நவிழ்ந்து… விழா, முடிய இரண்டுமணி நேரமானது… அதன்பின் பைரவி எல்லோரிடமும் பேசி.. அவளை… மற்ற முதிர்ந்த பேச்சாளார்கள் வாழ்த்தி… தன் தாத்தாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து… அவர்கள் பழைய விஷயங்களை நினைவு கூர்ந்து பேசி, விடைபெற்று.. வரவே இரண்டுமணி நேரமானது….
உணவு இங்கு ஏற்பாடு செய்திருந்தனர்கள்தான், ஆனால் ஐஸ் “ரவி… அங்க வீராண்ணாவ ட்ரீட் தர சொல்லலாம் வா” என சொல்லி அழைத்து வந்திருந்தாள்.
விழாவில் தந்த சின்ன சந்தன மாலையை, கையில் வைத்துக் கொண்டு… புதிதாக சாதித்த கலையை.. முகத்தில் சுமந்து வந்தவளை எப்படி எதிர் கொள்வது என தெரியவில்லை வீராக்கு… 
அப்படியேதான் பைரவிக்கு… எக்ஸாம்மில் பாஸ்சாகி வந்திருக்கிறான்… வாழ்த்த வேண்டும்… ஏதோ பேச வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், சட்டென வாய் வரவில்லை அவளுக்கு… தயக்கமாக வீராவை, பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.. 
வீராவும், தாத்தாவுடன் வரும் இவளை இமைக்காமல் பார்த்தான் ஒரு நொடி… ‘முன்னுக்கு இப்போ கொஞ்சம் அமைதியாக தெரிகிறாளோ… இப்போது எதுக்கு இந்த கண்… என்னை பார்க்குது… தப்பா பார்க்கிரனான்னு பார்க்கிறாளா… இல்லை… நம்புகிராளா… ‘ என எதையோ தேடினான் போல ஒன்றும் கண்டுகொள்ள முடியவில்லை… அவர்களும் நெருங்கி வர… நேரே வண்டியெடுக்க சென்றுவிட்டான்… ஏதும் பேசாமல் முன்னே சென்றுவிட்டான்…
தாத்தாவுடம் மெதுவாக இரு பேத்திகளும் வந்தனர்… கார் நோக்கி… எல்லோரும் ஏறவும், வீரா வண்டி எடுத்தான்.
ஐஸ் “ண்ணா… இன்னிக்கு உங்க ட்ரீட்… எங்க போலாம்… முருகன் இட்லி கடை…“ என ஏதோ இரண்டு, மூன்று ஹோட்டல் பெயர் சொன்னாள் சின்னவள்…
வீரா அமைதியாகவே வந்தான் … ஐஸ் பொறுக்க முடியாமல் “பசிக்குதுண்ணா” என கேட்க…
வீரா “தோ பாரு ஐஸ்… நான் இப்போதான் ஒரு எக்ஸாம் க்ளியர் செய்திருக்கேன்… அவ்வளோ பெரிய கடைக்கெல்லாம் போக பஜ்ஜெட் தாங்காது எனக்கு….
வேணுன்னா… நம்ம ஏரியா முனையில் இருக்கிற கையேந்தி பவனில் வாங்கித்திரன்…. அவரோட ரெகுலர் கஸ்டமர் நானு…. கல்தோச….  செம்மையா இருக்கும் ஒக்கேன்னா வாங்க” என்றான்… விளையாட்டான குரலில்…
ஐஸ்சின் முகம் வாடி போனது “ண்ணா…. ட்ரீட்ன்னு சொன்ன போது ஒண்ணுமே சொல்லல… இப்போது இங்கதான்னு சொல்றீங்க… 
அக்கா, அந்த ஹாலையே சாப்பிட்டு போகலாம்ன்னு சொன்னா… நான்தான்… பன்னீர் ரைசும், சிக்கன் கிரேவியும் சாப்பிடலாம்னு நினைச்சு கூட்டி வந்தேன்…. இப்படி சொல்ரீங்களே ண்ணா…” என மூக்கால் அழுதாள்… சின்னவள்.
தாத்தா… சிரித்தபடியே “விடு ஐஸ்… நம்ம இன்னொரு நாள் வீராக்கு நீ சொல்ற இடத்தில் ட்ரீட் கொடுக்கலாம்…
இப்போ போய் சாப்பிட்டு வா… நம்ம எல்லோரும் சாப்பிட்டு வருவோம்ன்னு சொல்லியாச்சு… கோதைகிட்ட… 
போ… 
என்னாலா முடியாது வீரா, என்னை வீட்டில் விட்டுட்டு நீங்க போயிட்டு வாங்க… எனக்கு நாலு இட்லி வாங்கிட்டு வந்திடுங்க…. போதும்” என்றார்…
தாத்தாவை வீட்டில் விட்டுவிட்டு… அவர்களுடன் அப்படியே வண்டி கடை நோக்கி சென்றது கார். மணி பதினொன்று… அப்போதுதான் அந்த தள்ளுவண்டி கடையில் கூட்டம் சற்று குறைந்திருந்தது….
வீரா, முன்னால் நடக்க… இருவரும் பின்னால் சென்றனர்… பைரவிக்கு இப்படி தள்ளுவண்டி கடையில் உண்ண வேண்டும் என விருப்பமே… வீட்டில் கேட்டால் அவ்வளவுதான்… பிரிண்ட்ஸ்சுடன் வரவும் வாய்ப்பில்லை… இரவு எங்கே போவது தோழிகளுடன்… எனவே இன்று… சந்தோஷமாகவே வந்தாள்… வெளியே காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்…
மெலிதான தெருவிளக்கின் ஒலி… அங்காங்கே… சாயம்போன… ப்ளாஸ்டிக் ஸ்டூல்கள் இறைந்து கிடக்க… அதில் அளுக்கொன்றில் அமர்ந்தனர்… வீரா ஐஸுவை பார்த்து “என்ன வேண்டும்” என்றான்… சிரித்தபடியே, அவளின் தூக்கிய முகம் பார்த்து…
பைரவிக்கும் புன்னகை உதட்டிலேயே நின்றது. சிரித்தால், அவ்வளவுதான் தங்கை… அடித்தேவிடுவாள், என எண்ணி அமைதியாக இருந்தாள்… 
மீண்டும் வீரா… பைரவியை லேசாக பார்த்து, ஐஸ்சுவிடம் “என்ன வேணும்… சீக்கிரம் சொல்லுங்க, கடையை முடிடுவாங்க” என்றான் 
பைரவி “எனக்கு தோசை… உனக்கு புரோட்டா சொல்லவா…” என்றாள்… மெல்லிய குரலில்… அவளின் கோவத்தை தணிக்கும் வகையில். ஐஸ் தலையை மட்டும் ஆட்டினாள்… 
பைரவி “அவளுக்கு ரெண்டு பரோட்டா… வெஜ் குருமா” என்றாள்… இப்படியாக ஐஸ்சை சற்று உருக வைக்க… வீராவும், பைரவியும் மாறி மாறி அவளை கவனித்து கொண்டிருந்தனர்… 
இருவருக்கும் தெரியாமலே… இருவரிடமும் பேச்சு சென்றது… வீரா, அவளின் தட்டு பார்த்து என்ன வேண்டும் என கேட்டு… உணவு சொன்னான்… அக்கறையாக… 
பைரவிக்கு, அவனுக்கு உணவு சரியாக கொடுக்காமல் வந்தது நினைவு வந்தது… கொஞ்சம் சங்கடமாக இருந்தது இப்போதைய இவனின் கவனிப்பு… மெல்ல அவன் முகம் பார்க்க… தீவிரமாக உண்டு கொண்டிருந்தான்… 
அதிக வாகனமில்லா சாலையில்… மங்கலான ஒலியில்… அவன் அருகில் உண்பது… ஏதோ சொல்லமுடியாத நிகழ்வாக மனதில் நிற்க…. ‘நீயும் கொஞ்சம் நல்லவனோ’ என தோன்றியது பைரவியின் மனதில்… அதை அசைபோட்டபடி உண்டாள்…
அப்படியே ஐஸ்சுவிடம் பொறுமையாக பேசி… “நான் நிறைய சம்பாதிக்கும் போது அங்க கூட்டி போறேன்” என சொல்லி, சற்று நேரம் ஐஸ்சுவை சமாதானபடுத்தி… அவர்களுக்கு ஸ்வீட் பீடா… வாங்கி கொடுத்து கூட்டிக் கொண்டு வந்தான் வீரா… 

Advertisement