Advertisement

எனக்கானவளே நீதானே…
7
(வசமிழக்கும் வானம் நான்….)
அன்று தேர்வு முடிவு நாள்… காலை மணி ஏழு…
காலையிலேயே சுந்தரம் பரபரப்பாக அமர்ந்திருந்தார்… வாக்கிங் சென்று வந்தவர்… குளித்து… கோவிலுக்கு சென்றுவந்து வீராவின் வீட்டிற்கு சென்றார்…
வீரா, இப்போதுதான் வெளியே வருகிறான்… குளித்து முடித்து.. சுந்தரம் “நெட்ல பாக்கிறியா ப்பா” என்றார்.. 
“இல்ல தாத்தா… நான் சென்டர்க்கு போறேன்… நீங்க வரீங்களா” என்றான்… அமைதியான குரலில்…
“இல்ல ப்பா நீ, பார்த்திட்டு கூப்பிடு “ என்றவர் தனது வீட்டுக்கு சென்றார்…
வந்தவரை, கோதை “மாமா சாப்பிடுங்க வாங்க…. “ என அழைத்தார். சுந்தரம் பதில் சொல்லும் முன்னே  
கோதையே… “என்ன அந்த கலெக்டர் சாப்பிட வரமாட்டானாமா… வீட்டுக்கு….
ஐஸ் போ… அண்ணாக்கு கொண்டு போய் பூரியை கொடுத்திட்டு கிளம்பு” என்றார்… திட்டுகிறாரா… பரிந்து கொண்டு வருகிறாரா என தெரியாத பாவத்தில்…
சுந்தரம் “அவன் கிளம்பறேன்னு சொன்னான் கேட்டுட்டு போ” என்றார்… ஐஸுவை பார்த்து… தன் மருமகளிடம் திரும்பி “எனக்கு இன்னும் நேரம்  போகட்டும் ம்மா…” என சொல்லி அமர்ந்து கொண்டார்… எப்போதும் பேத்திகளுடன் உண்டு விடுவார் தாத்தா… இன்று கொஞ்சம் யோசனையிலிருந்தார்.
ஐஸ் “இல்ல வீராண்ணா, என்னை பார்க்காமா போகமாட்டேன்னு சொன்னாங்க… நான் போய் ஆல் த பெஸ்ட் சொன்னாதான் போவாங்க” என்றாள் சிறுபிள்ளையாய்… இன்னமும்ம் அங்கு ஐஸுதான் சிறுபிள்ளை… பைரவி எப்போதும் பொறுப்பாய் நடப்பதால்… ஐஸு அப்படியே பழகிவிட்டாள்…
இப்போது.. அம்மாவும் அங்கு போக சொல்லவும்.. ஐஸ்க்கு ஏக சந்தோஷம் “ம்மா… சீக்கிரம் பஸ் வந்திடும் “ என தானே அன்னையின் அருகில் நின்றுகொண்டு… எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு… சென்றாள்… வீராவின் வீட்டுக்கு.
பைரவியும் பிஸி இன்று… அவள் இப்போது MA தமிழ் படிக்கிறாள் அதே கல்லூரியில்… ஆம், இப்போது தமிழ் கழக, பட்டிமன்றங்களில் பேசுமளவு உயர்ந்திருந்தாள்… வீராவையே நெறிப்படுத்திய தாத்தா… பைரவியை, விட்டு விடுவாரா என்ன… 
இன்று அவளுக்கு மாலையில் பட்டிமன்றம் ஒன்று உள்ளது… பிரபலங்கள் வந்து பேசி கலந்துகொள்ளும் பட்டிமன்றத்தில்… இளையவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில்… இரு அணியிலும் ஒரு இளம் பேச்சாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்… அதில் ஒருவள் பைரவி… 
எனவே அதற்காக ஆயுத்தமாகிக் கொண்டிருந்தாள் பைரவி… இன்று கல்லூரி செல்லவில்லை… எனவே… ஹாலில் அமர்ந்து பேப்பரும் பேனாவுமாக, புக்கும்… யோசனையுமாக.. எதையோ தேடிக் கொண்டிருந்தாள்…  
பைரவி, இப்போதெல்லாம் சற்று வீராவை கவனிக்க தொடங்கினாள்… மேலும் அது இயல்பாக நடந்தது. அவள் காதுகளில்…. தன்போல் விழும் ‘இன்று அவன் ஊரில் இல்லை… இன்று அவனுக்கு, சென்டரில் டெஸ்ட்….’ இப்படி ஏதோ ஒன்று… ஐஸ், அங்கே சென்று வரும்போதெல்லாம்…. வீட்டில் வந்து வீரா புராணம் பாடுவாள்… ‘இன்னிக்கு, அந்த டாபிக் புரியவேயில்லையா மேம் சொல்லும் போது… ண்ணாதான், சூப்பரா சொல்லி தந்தாங்க தாத்தா…’ என ஒருபாடு… அவன் புகழ் பாடுவாள்… 
இப்படி அவள், அனுமதியில்லாமலே.. அவனின் அனைத்தும் அவளுக்கு தெரிந்தது… இன்றும் அப்படியே ரிசல்ட் என தெரிந்தது எனவே செல்லும் ஐஸுவை… ஒரு பார்வை பார்த்தாள்… அமைதியான பார்வைதான்… ஆனால், வாய் எப்போதும் போல “என்ன ஐஸ்ம்மா, உங்க அண்ணன் கலெக்டர் ஆகிடுவாரு போல… பாஸ் பண்ணிட்டா… ட்ரீட் தரணும்னு சொல்லு….” என்றாள் அலட்சியமான குரலில்…
“ஹேய்… என்ன… வீராண்ணன், இப்போவே பாதி கலெக்டர்தான்… 
ஆனாலும்… ஆல் த பெஸ்ட் கூட சொல்லாதா… இந்த எதிர் கட்சியின் மனுவும் பரிசீலிக்கப்படும்… 
எங்களுக்கு மக்களின் கோரிக்கையே முக்கியம்…” என்றாள் ஆங்கிலபாணியில் சிரம் தாழ்ந்து… இடை குனிந்து… ஒரு பாவனை செய்து கிளம்பினாள், வீரா வீட்டுக்கு. 
ஐஸ்… வீராவின் வழியில், பொறியியல் படிக்கிறாள்… முதலாம் ஆண்டு… அங்கு வீராவிடம் உணவை கொடுத்தாள்… அவனின் கை பற்றி “ண்ணா… கெத்தா இருக்கணும் ரிசல்ட் “ என்றாள்.
“ம்…ம்… வரும்… நீ இன்னும் கிளம்பல… நான் ட்ரோப் செய்யவா” என்றான் அக்கறையாக… அப்படியே பேசியபடியே வெளியே வந்தனர்… 
ஐஸும் “வேண்டாம் ண்ணா… டைம் இருக்கு…” என்றவள் சென்று கொண்டே “பாஸ் செய்திட்டா… நம்ம எதிர் கட்சி, ட்ரீட் கேட்குது…” என்றாள்..
கண்கள் ஒரு நிமிடம் ஒளிர்ந்ததோ… வேறு ஒரு மாற்றமும் இல்லை அவனிடம் “ம்… பார்க்கலாம்” என்றான்…  
ஐஸ் “பை ண்ணா” என்றபடி கிளம்பிவிட்டாள்.
வீரா, வீட்டுக்கு வராதது அப்போதே கோதைக்கு, ஏதோ தோன்றியது… எனவே ராகவ் வந்திருந்த போதே சுந்தரத்திடம் கேட்டார்… கோதை.
அவருக்கும் தெரியாததால்.. சுந்தரமும், வீராவிடம் கேட்க… அப்போது ஏதோ மழுப்பலான பதில் சொன்னான்… அதன் பிறகும் சுந்தரம் “என் பையன் ஏதாவது சொன்னானா” என்றார் மனது கேட்காமல்… 
வீரா “தாத்தா… என்ன இப்படி சொல்றீங்க…. உங்களையெல்லாம் ஏதும் சொல்லவே கூடாது… இது.. இது…. எனக்கு டைம் சரியா இருக்குள்ள” என ஏதோ சொல்லி தட்டி கழிக்க… அதன்பின் காரணம் கேட்கவில்லை யாரும்.. 
எனவே வீரா, அங்கு வீட்டிற்கு வரவேயில்லை… அதற்காக யாரும் அவனிடம் ஒதுக்கம் காட்டவில்லை…. இப்படியே தன் வேலைகளை பார்த்தான் வீரா… 
காலையில் உணவு… கண்டிப்பாக சுந்தரம், வீட்டிலிருந்துதான் செல்லும்… மதியம் அவனுக்கு வெளியில்… இரவு…. சுந்தரமும், அவனும் சில சமயம் சேர்ந்து உண்ணுவர்… இப்படியாக அவனின் நாட்கள் தொடர்ந்தது…
இன்று, காலையில் நேரத்திற்கு சென்ட்டர் சென்றுவிட்டான்… அவனின் ரிசல்ட் நல்ல விதமாக வந்திருந்தது… கொஞ்சம் சொல்லிக் கொள்ளும்படியே செய்திருந்தான்…. அங்கு இருப்பவர்களிலேயே அதிகம் ஸ்கோர் செய்திருந்தான்… எனவே, ஒரே பாராட்டுமழை அங்கு, அவனுக்கு.. 
உடனே தாத்தாக்கு போன் செய்து சொல்லிவிட்டான்… எனவே அடுத்த மெயின் எக்ஸாம் பற்றி விவாத்தித்து விட்டு வீட்டுக்கு வரவே மதியம் ஆனது… கோதையிடமும், தன் அன்னையிடமும் போன் செய்து சொல்லியிருந்தான் தனது ரிசல்ட்டை.
பைரவி, இதையெல்லாம் காதில் வாங்கியபடியே வேலை செய்து கொண்டிருந்தாள்… தாத்தா கூட “வீராக்கு விஷ் செய்துடு டா… நல்லா ஸ்கோர் செய்திருக்கான்… “ என்றார்.. பூரிப்பாக, அவளிடம் விவரம் சொல்ல… 
பைரவியும் “மெசேஜ் போடுறேன் தாத்தா” என்றாள் அவளும்… ஆனால் யாருக்கும் தெரியாது இவர்களின் சண்டை… எனவே எப்போதும் அவனின் எந்த காரியத்திலும் அவள் பட்டுக்கொள்வதில்லை… அவனும் அப்படியே… இன்றுதான் வாய்விட்டால் ஐஸ்ஸிடம்.
தாத்தா அவனை எதிர்பார்க்காது.. படுக்க சென்றார்… வயோதிகம் அசதியை அவ்வபோது காட்டியது…. 
பைரவி… ப்ரிபரேஷேன் முடித்து… உண்டு, உறங்க சென்றாள்… கோதைக்கு, வீராவின் அம்மாவிடமிருந்து போன் வந்தது… கோதையும், கல்யாணியும்  மகிழ்ச்சியாகவே பேசிக் கொண்டனர்…
கல்யாணி “கைலாஷ்க்குதான் கோவம்… இங்கு அத்தனை இருக்க அதை பார்க்க முடியாமல் நான் திண்டாடுகிறேன்… இவன், ஊருக்கு செய்ய கிளம்பிவிட்டானா… என சற்று சத்தம் போட்டான் கோதைம்மா… என்ன செய்வது… 
அவங்க தாத்தாக்கு சந்தோஷம்… உடனே கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து வந்தார்….
திடிரென கல்யாணியின் குரல் மகிழ்ச்சியில் வெடித்தது “கோதை, என் பையன் எனக்கே போன் செய்து சொல்லிட்டான்… ரொம்ப சந்தோஷம் கோதை…
ஏதோ உங்க மாமனார் உடன் இருப்பதால்… இப்படி நல்லது நடக்கிறது… மாமாகிட்ட நன்றி சொன்னேன்னு சொல்லு ம்மா…” என எப்போதும் போல கண்கலங்கிதான் வைத்தார்…. கல்யாணி.
மாலை, பைரவி தனது வேலைக்காக ரெடியாகினாள்… கோதைக்கு, ஒரு விழா இருந்ததால் அவர் இன்று பைரவியுடன் செல்லவில்லை.. எனவே தாத்தாவை அழைத்துக் கொண்டிருந்தாள்… “தாத்தா… வங்கா தாத்தா… ப்பஸ்ட் டைம்… ப்ளீஸ்… உங்களுக்கு எல்லோரும் தெரிஞ்சவங்களா இருப்பாங்க… என் கூட வாங்க தாத்தா…” என இம்சை செய்து கொண்டிருந்தாள்…
சுந்தரம்… “அவ்வளவு நேரம் உட்கார முடியாது டா… நீ போ… நான் ஒருமணி நேரம் சென்று வருகிறேன், எப்படியிருந்தாலும் ஸ்டார்ட் ஆகவே லேட் ஆகுமில்ல… ஐஸ்சுவோட வரேன்…
பாவம் ஐஸ், வந்து தனியா இருக்கணும்…. நீ முன்ன போ… நாங்க வரோம்” என்றார்… சமாதானமாக…. ரவிக்கும், ஐஸ் வந்து தனியே இருப்பதும் தோன்ற சரியென கிளம்பினாள்…
ஆனால், சென்றவள்… தாத்தாவுக்கு மெசேஜ் செய்து கொண்டே இருந்தாள்… டென்ஷன்… வந்திடுவீங்களா…. ஐஸ், வந்திட்டளா… கிளம்பியாச்சா என மெசேஜ்…
 

Advertisement