Advertisement

எனக்கானவளே நீதானே…
(வசமிழக்கும் வானம் நான்….)
இப்போது பைரவி  வண்டி ஓட்ட… அருகில் ராகவ் அமர்ந்து வர… பின்னில் ஐஸும், கோதையும் அமர்ந்திருந்தனர்… ராகவ்வை பிக்கப் செய்து… வந்து கொண்டிருந்தனர் எல்லோரும்…
ராகவ் “ஏன் டா… இப்படி கட் பண்ணி பண்ணி ஓட்டற… அவசர படாத… பொறுமையா போ… படக்க் படக்குன்னு க்கீர மாத்தாதம்மா…” என  சொல்லியபடியும் புலம்பியபடியுமாக வந்தார் தந்தை… பெண்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்… அவர்களின் அடங்கா திமிர்….
மணி பனிரென்றரை…. ஒன்றும் பெரிதாக வாகன நெரிசலில்லா சாலைதான்… எனவே பைரவி கொஞ்சம் விளையாடியபடியே ஓட்டினாள்…
வீடு வந்தது… சுந்தரம் வாசலிலேயே வீராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்… மகனின் வரவுக்காக காத்திருந்தார். வீரா அமர்ந்திருந்தான் அவரின் துணைக்கு…
வீராவை, இந்த ஆறுமாதமாக தெரியும் ராகவ்க்கு… எனவே தயக்கமில்லாமல் வரவேற்றான் வீரா, அவரும் நன்றாகவே பேசினார்… அப்படியே வாசலுடன் கிளம்பிவிட்டான் அவன்…
உள்ளே வந்த குடும்பம்…. அடுத்த ஒருமணி நேரம் பேச்சு… பேச்சு.. பேச்சு… மட்டும்தான்… அதுவும் பிள்ளைகள் ஒருவரை ஒருவர்… இவ அத செய்தா… நான் கேட்டேன் என்னை திட்டுறா என ஐஸ் சொல்ல… 
பைரவி, தப்புன்னா திட்டாமா என்ன பண்ணுவாங்க என ஒரே கம்ப்ளைன்ட் படலம்தான் இரண்டுமணி வரை…. ஆனால் அந்த சத்தமோ… சண்டையோ பேச்சோ… பெற்றோருக்கு சலிக்கவேயில்லை போல…. ராகவ்… சமரசம் செய்யவும்… எடுத்து கொடுக்கவுமாக… பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்… 
மெல்ல கோதை அதட்ட… முனகியபடியே பிள்ளைகள் தங்களது அறைக்கு சென்றனர்…
ஆனால் வீராக்கு பைரவியின் பாட்டே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது… “வாய்சொல் வீரரடி… கிளியே” என மீண்டும் மீண்டும் கேட்க… தூக்கம் தொலைத்தான்…
தாத்தா சொன்ன மாதிரி ஏதாவது அதிகாரம் வேண்டும்… என மனதில் முடிவெடுத்துக் கொண்டான்… ஆனால் என்னவென இன்னும் தெரியவில்லை அவனுக்கு….
மறுநாள் மாலை… பைரவி வீட்டில், எல்லோரும் குடும்பமாக… வடபழனி கோவில் சென்றனர்… அப்படியே உணவு முடித்து வந்தனர்… இருவரும் ராகவையே சுற்றி சுற்றி வர கோதைக்குதான்… அப்பாடா என்றிருந்தது. ஏதோ ரெண்டாங்கலாஸ் பிள்ளைகள் போல.. ஐஸுக்கு அப்பாதான் வண்டியில் ட்ரோப் செய்ய வேண்டும் பிக்கப் செய்ய வேண்டும் என அடம்… அடமேதான்… எனவே கோதைக்கு இந்த டிரைவர் வேலையிலிருந்து சற்று ஒய்வு…. 
இப்படியே அந்த வாரத்தின் விடுமுறை நாளும் வந்தது… காலை மணி ஆரு.. வீராக்கு… உடலளவில் தெளிவாகினான்… கால், இப்போது பரவாயில்லாயாக இருக்க… வாக்கிங் கிளம்பினான்..
சுந்தரம் நடந்து கொண்டிருந்தார்… இப்போது ராகவ்வை வால்பிடித்துக் கொண்டு ஐஸும் நடந்தாள் தன் தந்தையுடன்… எதிரில்… வீராவும் சுந்தரமும் வர… ஆக நான்கு பேரும் அப்படியே பேசியபடியே வாக்கிங் வந்தனர்… தெருவையே அடைத்தபடியே…
பைரவி இன்று லேட்… எனவே மெல்ல எழுந்து ஏதோ ஒரு நைட் ட்ரஸில் அமர்ந்திருந்தாள்… தூக்கம் கலையாமல்.. ஹால் சோபாவில். நீண்ட முடிகள் விரித்து… கன்னம் சற்று உப்பி… தூங்கும் சித்திரமாக அவள் அமர்ந்து கொண்டிருக்க… வந்தனர் நால்வரும்…
ஒற்றை கண்ணை திறந்து பார்க்க… தங்கையும் தந்தையும் வருவது தெரிந்தது… எனவே, பைரவி அசால்ட்டாக நம் வீட்டு மக்கள்தான் என அப்படியே சாய்ந்து இருந்தாள்… பின்னால் வந்த தாத்தாவையும் வீராவையும் கவனிக்கவில்லை…
நுழைந்த வீராவின் கண்களுக்கு… த்வய தரிசனம்தான் காலையில்… ஏதோ டி ஷர்ட்… லைட் பிங்க்… த்ரீ போர்த் ப்பேன்ட்…. தனத்திருகாலை தூக்கி ட்-பாயின் மேல் வைத்து… அந்த ஷோபா வளைவில் கழுத்தை வைத்து… பூ உடல் கிட்டதட்ட மிதந்து கொண்டிருக்க… வீரா, என்ன இளங்கோவடிகளா… இளமையான அடிகளாயிற்றே… இரண்டு நிமிடம் ரகசிய தரிசனம் செய்தான்… தவறு.. தப்பு.. என்பதெல்லாம் அடுத்த நொடியிலிருந்துதான்… இந்த நொடி… எனக்கானது என்ற முடிவுடன்…
ஆனால், வீரா நேர்மையானவனாயிற்றே.. சட்டென இங்கே நிற்காமல்… “ஆன்ட்டி…. எனக்கு…” என ஏதோ பேசியபடியே உள்ளே செல்ல… 
அவனின் குரலில் திடுக்கிட்டு எழுந்தாள்… சித்திர அழகி, பட்டென… எழுந்தாள்… தனது பெற்றோரின் அறைக்கு சென்று ஒரு ஹால் போட்டு வந்து அமர்ந்தாள்… முறுக்கிய கோவத்துடன்…
இப்போது காப்பியோடு வரும் அவனை… தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள்…. கூடவே அவன் வந்தவுடன்.. ரவி “ஐஸ்.. இந்தா” என சொல்லி ஒரு ஷாலை தூக்கி தன் தங்கையின் மீது போட்டாள்…. ஐஸுக்கு ஒன்றும் புரியவில்லை… அவள் பேப்பரில் மூழ்கியிருந்தாள்…
யாரும் கண்டுகொள்ளவில்லை… பெரியவர்கள் பேப்பரில் மூழ்கியிருக்க… வீரா ஏனோ… அடிவாங்கினான்.. அவனுக்கு, அவள் தன்னை மறைத்து வந்தது தெரியவில்லை.. ஆனால் ஐஸ், என சொல்லி அவளுக்கும் ஒன்றை கொடுக்கவும்.. வீரா முழுவதுமாக உடைந்து போனான் ‘என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது இவளுக்கு’ என கோவம்… அமைதியாக டைனிங் அறையிலேயே காபியை குடித்துவிட்டு… அப்படியே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்… அதுதான் கடைசியாக அவன் பைரவி வீட்டுக்கு வந்த நாள்…. அதன் பிறகு… எட்டியும் பார்க்கவில்லை அவன்.
அதெல்லாம் அவள் கண்ணுக்கு பட்டதுதான்… ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… அதற்கு நேரமே இல்லை… ராகவ் வரும்போது எங்கேனும் டூர் செல்வது வழக்கம் இந்த முறை… நார்த் சைடு செல்ல முடியவில்லை அதனால்… தமிழ்நாட்டில் கோவில்களுக்கு சென்றனர்…
சுந்தரம் எப்போதும்.. இந்த டூர்ரில் கலந்துகொள்வதில்லை… அவர்களுக்கு இடம் கொடுப்பார்… அதேபோல் இந்த வருடமும் இவர் வீட்டிலேயே இருந்து கொண்டார்… கோவிலுக்கு போகிறோம் வாருங்கள் என அழைத்தும் வரவில்லை அவர்…
அந்த பத்துநாட்களும் வீராவும், தாத்தாவும்தான்… வீரா இங்கு வரவேயில்லை.. தாத்தா அங்கு சென்றார்.. படுப்பதற்கு மட்டுமே இங்கே வந்தார்… உணவு ஒரு மெஸ்ஸில் சொல்லி கொண்டனர்… இருவருக்கும். எனவே… இந்த நேரம் வீராவுக்காக என ஆனது…
ஸ்ரீ, அவ்வபோது வந்தான்… இப்போதுதான் பொறியியல் இறுதி வருடம் படிக்கிறான் எனவே கல்லூரி சென்று மீத நேரம் வர தொடங்கினான்… 
யாருமில்லா தனிமை… தன்னை பிடித்தவர்கள் கூட உடனில்லா நிலை… இன்னும் வீட்டிலிருந்து யாரும் அழைக்கவில்லை அவனை… இவன் நம்பர் மாற்றியது வசதியாக மறந்து போனது… அவனுக்கு.. ஆனால், ஓய்ந்து போன நேரத்தில்.. தன்போல வீட்டு நினைவு வந்தது… எல்லாவற்றையும் ஏனோ எதிபார்க்க தொடங்கினான்… நேற்றைய அவனின் தோல்வி… போராட்டம்… உடல்நிலை பாதிப்பு என எல்லாம் சேர்ந்து வீராக்கு எதையோ சொன்னது…
இந்த அன்பு… பாசம்.. இதெல்லாம் ஏதுமில்லை… ‘ஒருவரை அடக்கியாள மற்றவர் சொல்லும் பெயர்’ என எண்ணிக் கொண்டான் வீரா… ஆம், அன்புக்கு எதிர்பதத்தைதான் உணர்ந்தான்… வீரா… பொருளை இன்னும் உணரவில்லையே… (அன்புக்கு எதிர்பதம் தெரியுமா ப்ரிண்ட்ஸ்… சொல்லுங்க…)
எனவே  பைரவியின் செயல் அவனை வெகுவாக பதித்தது… ஆனால் அதுதான் என அவனுக்கு தெரியவில்லை… சொல்ல முடியவில்லை.. ஆனால் உணர முடிந்தது… காயம்பட்டேன் என தெளிந்தான்… ஒதுங்கிக் கொண்டான்…
பைரவியும் அதன்பின் எட்டியும் பார்க்கவில்லை அவனை… கண்டுகொள்ளவில்லை… எனவே, ஒரு விடை கிடைத்தது அவனுக்கு… முயற்சிக்கமலே… தோல்வி கண்டான் அதுதான் நிஜமென நம்பினான்… 
எனவே, வீராவுக்கு இந்த பத்த நாட்கள்தான் போதிமரமானது… கனவு வந்தது… அதுவும்… நாடு குறித்துதான் வந்தது… முன்பு நடந்தது… தான் போராடியது.. அதில் ஏதும் மாற்றம் வராமல் போனது… அதன் பின் தாத்தா சொன்னது என எல்லாம் கனவாக வந்தது..
ஒன்று, நான் அமைதியாக அவர்கள் வழியில் செல்ல வேண்டும்… எல்லாம் இப்படிதான் இருக்கும் என… இல்லை, என் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நிறைய யோசனை அவனிடம்…
ஆனால், என் நாடு எப்படியோ போகட்டும் என எப்படி என்னால் விடமுடியும்.. சரி… ராணுவத்தில் சேரலாமா… இல்லை கட்சி ஆரம்பிக்கலாமா…’அப்பாட்ட கேட்டால்… நிறைய பணம் தருவார்’ என தோன்றியது… ஆனால் தன் தலைவனை எதிர்க்க மனமில்லை….
இப்படியே நாட்கள்தான் சென்றது… ஆனால் ஒவ்வருநாளும்… ஏதோ சுட்டுக்கொண்டே இருந்தது… பாரதியின் விசையுறு பந்தாக அவன் உள்ளம் நல்லது நோக்கி சென்று கொண்டேயிருந்தது…. 
ஆனால்…. எங்கோ செல்வது… தனி மனிதானாக எதை மாற்றுவது… அப்படியெல்லாம் நடக்காதே… என பெரிய பெரிய குழப்பம்… ஆராய்ச்சி… என வீரா, ஓய்ந்து போனான்….
தாத்தா… எப்போதும் போல பேசுவார். ஆனால், தன்னுடைய நினைப்பை அவனிடம் திணிக்கவில்லை. எனவே… பொதுவான விஷயங்கள்… எப்போதும் அவர்களுக்குள் உண்டு… 
அன்று ஸ்ரீயும் வந்திருந்தான்… அவன் கல்லூரியில் தொடங்கிய பேச்சு… அப்படியே வீராவின் எண்ண போக்கில்… நாடு.. வளம்… அரசியல்வாதி…. கலெக்டர்… என மாற தொடங்கியது…
தாத்தா இந்த அதிகாரிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்…
வீரா “அவர்களால் என்ன செய்யமுடியும் தாத்தா… எல்லாம் அரசியவாதி சொல்வதைத்தானே செய்ய முடியம்” என்றான் சலிப்பாக…
சுந்தரம் “ஒ… அப்படி நினைக்கிறியா வீரா… இதுதான் உன் நினைப்பா…. உன்னிடம்  துணிவும், திடமும் இருந்தால்… அந்த துறையையே நீ நேராக்கலாம்…. 
இளைஞ்சர்கள்… பொறுப்புகளை ஏற்க தயங்க கூடாது… அதிகாரம் மட்டும் போதும் என்பது ஆபத்தானது…. அதிகாரம் ஒரு பவர்… அது மட்டும் போதும் என நினைக்கம் கூடாது… 
உங்களை போல பொறுப்பானவர்கள்… வந்தால்தான் நாடு நலம்பெறு… இந்த குறை சொல்லும் பேச்சு… அது சரியில்லை… இது என்னுடையது… என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு வீரா… நீயும் பேசலாம்… அங்கே டீ கடையில்… சின்ன பசங்களும் பேசலாம்… 
உனக்கு T.N சேஷன்… தெரியுமா..” என்றார்…. நிறுத்தி…
வீரா யோசித்தான்…. சுந்தரம் சிரித்தார் “பார்த்தியா… நல்லது கண்ணுல படமாட்டேங்குது உங்களுக்கு” என்றார் அவனை சீண்டும் எண்ணத்துடன்… 
மீண்டும் அவரே “IAS… தேர்வு எழுதி… கோவை, திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியராக தொடங்கினார்… தனது பயணத்தை.. அதன் பின், போக்குவரத்து துறை இயக்குனர்… என முறையாக தன்னை மெருக்கேற்றி கொண்டவர்…. கவனி தேங்கவில்லை…. ஒரு வெறி…. உயர்ந்தார்…
ராஜிவ்காந்தி ஆட்சி காலத்தில்… இவர் பாதுகாப்பு துறை செயலராக உயர்ந்தார்… எத்தனை பெரிய இடம்…. அவரிடம், ஒரு தீ இருந்தது வீரா….
அதன்பின்… 1990 ல் இவர் இந்திய தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார்… 
ப்பா…. அதன்பின்தான் தேர்தல் என்பதன் அர்த்தமே சில அரசியவாதிகளுக்கும் மக்களுக்கும் தெரிந்தது. அந்த ஆருவருடமும்…. பல பல முறைகளை கொண்டு வந்தார்…. தேர்தல் களத்தில்.
இவர்தான் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம்படுத்தினார்… ஒரு தொகுதியின்… வேட்பாளர் செய்யும் செலவுகள் குறித்த விவரங்களை… தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தவரும் இவரே….
அதுபோக ஒரேநாளில் வாக்கு எண்ணிக்கையை சாத்தியமாக உதவியவர்… பாதுகாப்பு பணிக்கு வாக்குசாவடியில் போலீஸ் குவிப்பு என எல்லாம்… எல்லாம் செய்தார்… அசைக்க முடியாத அதிகாரத்தால். அதிகாரம் என்பது ஒரு பவர்… ஆனால் மனதில் அதை ஓழுங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாமல் முடியுமா வீரா….
ஆக, IAS என்பது ஏதோ ஒரு மாவட்டத்தை மட்டும் சார்ந்த பொறுப்பு அன்று வீரா… சொல்லபோனால்… எத்தனை எதிர்ப்பு தெரியுமா… அவருக்கு… இது எங்கள் இடம்… என இதே அரசியவாதிகள் பேசத்தான் செய்தனர்… ஆனால் அவரின் துறை ரீதியான திட்டங்களை முடக்கவே முடியவில்லை… அவ்வளவு ஆளுமை… அவரிடம்…
இனி எத்தனை தேர்தல் வந்தாலும்… T.N. சேஷன்… என்பவரை வரலாறு மறக்காது வீரா…” என்றார்… திடமான குரலில்.. 
வீரா, நிமிர்ந்து அமர்ந்தான்… அத்தனை குழப்பத்திற்கும் தெளிவு வந்தது… இது ஜனநாயம்… தனி மனிதனின் எண்ணமும் நிறைவேறும் என்ற நம்பிக்கை வந்தது அவனுள்…  
யாரோ சொல்லி கேட்பவன் இல்லைதான் ஆனால்… புரிந்து கொள்பவன்தானே… சட்டென ஒரு மின்னல்தான் வந்தது அவன் மூளையில்… அடுத்து… அடுத்து… என அது குறித்து.. அவனின் செல்கள் எல்லாம் இடி இடி என இடிக்க தொடங்கின…. ஷனத்திற்கும் குறைவான நேரத்தில் தோன்றும் மின்னலில்தானே அத்தனை வோல்ட்ஸ் மின்சாரம் உள்ளதாம்… அறிவியல்தான் சொல்கிறது… அப்படிதான் வீராவும் போல…
ஆக… இனி, வீராக்கு யாரின் ஆதரவும் தேவையாக இருக்கவில்லை… அடுத்த பத்து நாளில் எப்படி தன்னை தயார்படுத்திக்கொள்வது… எங்கு பயில்வது என அத்தனையையும் முறைபடுத்திக் கொண்டே சுந்தரம் முன் வந்து நின்றான்..
அன்று அதிகாலையில் வாக்கிங் செல்லும் போதுதான் பிடித்தான் தாத்தாவை.. அதுவரை… அவரை, அவன் பார்க்கவேயில்லை… 
பைரவி வீட்டிலும் டூர் முடித்து வந்து இயல்பு வாழ்க்கைக்கு பழகியிருந்தனர்… கோதை ராகவனும் கூட ‘எங்கே வீரா வரவே காணும்’ என சுந்தரத்திடம் கேட்டனர்… தாத்தாவும் தெரியவில்லை என சொல்லிக் கொண்டிருந்தார்…
எனவே இன்றுதான் வந்தான் வீரா… “கூடு மோர்னிங் தாத்தா… எப்படி இருக்கீங்க” என்றான் ஆரபாட்டமில்லாமல்…
சுந்தமும்.. மறுமொழி சொன்னார்… “என்ன ஆளையே காணும்… ஊருக்கு போயிட்டியா” என்றார்… அவனை காணாத ஆதங்கத்தில்…
“இல்ல “ என்றவன் யோசனையாக சிரித்தான்….
“என்னப்பா…” என்றார் வாஞ்சையாய்… 
வீரா “நான் IAS படிக்க போறேன்” என்றான் அமைதியான குரலில்…
தாத்தா எதையும் காட்டவில்லை “ம்கூம்” என்றார் அவ்வளவுதான் அலட்டிக்கொள்ளவில்லை….
வீரா தானே பேசினான் “இன்னும் டூ இயர்ஸ் கழிச்சிதான் எக்ஸாம் எழுத போறேன்… அதுவரைக்கும் அதுக்கான ப்ரிபரேஷன் தான்…. “ என்றான் அமைதியாக…
தாத்தா “ம்… சரிப்பா….” என்றார்..
“நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா…” என்றான் 
தாத்தா “ஹா…ஹா… என்ன வீரா விளையாடுறியா, கரும்பு திண்ண கூலியா…. உனக்கு செய்யாமலா…
புக் வாங்கிட்டியா….” என்றார் தொடர்ந்து கோவமெல்லாம் மறந்து…
“ம்…..” என்றான்.
தாத்தா “அத, ஒரு டைம்.. வைச்சி படி போதும்…. ஆனா அதவிட முக்கியம்…. கரண்ட் ஸ்டேடஸ்….. எல்லா நாடு அரசியலும் தெரிஞ்சிக்க…” என இன்னும் ஏதோ மெதுவாக சொல்லிக் கொண்டே வந்தார்…
அப்படியே தொடங்கியது அவர்களின் குரு சிஷ்யன் உறவு… 
தினமும் காலையில் வாக்கிங்… அதன்பிறகு பேப்பர்…. பக்கத்து வீட்டு lkg குழந்தையின் ரைம்ஸ் தொடங்கி… ஐஸுவின் ntrc புக் வரை படித்தான்… 
அதுவும் நியூஸ் பேப்பர்… ஒரு வார்த்தை விடாமல் படிக்க.. கற்றான்… பின் நேரமே இன்ஸ்டிட்யூட் சென்றான்…
அவனுக்காக கொடுக்கப்பட்ட நேரம் வேறு… ஆனாலும், எல்லோரையும் பழக்கமாக்கிக் கொண்டான்… ‘டீ வாங்கி தரவில்லை’ மற்றபடி எல்லா வேலையும் செய்தான்… அங்கே.
இரவு தினமும் மலையாள நியூஸ் முதற்கொண்டு கேட்டான்… இப்போதுதான் எல்லாம் சாத்தியம்தானே… எனவே காதை திறந்து வைத்துக் கொண்டான்… எனவே எல்லா தகவல்களும் கண்… காது வழியாக மூளையை சென்றடைந்தது…
முந்தைய குறுகிய சிந்தனை காணாமல் போனது… எல்லாம் எல்லோருக்கும் என்ற எண்ணம் கொஞ்ச கொஞ்சமாக வளர தொடங்கியது… வரலாற்றை படிக்க படிக்க… எப்படிப்பட்ட தலைர்கள் என மெய் சிலிர்த்தான்… ஆக… அறிவின் நீளம்… அதிகமானது… 
திடிரென… எங்கேனும் கிளம்பி சென்றான்… தாத்தாவிடம் மட்டும் சொல்லி சென்றான்… அவனை கேட்பார் யாரிமில்லையே… எனவே சுதந்திரமாக சுற்றுவான்… பத்துநாள் சென்று வருவான்…
தனது பயண அனுபவம் பற்றி சொல்லுவான்… இப்படி…. தான்… படிக்கும், படிப்பை உணர்ந்து… மேன்மையான லட்சியத்துடன் படித்தான்… ஆயிற்று இரண்டு வருடங்கள்…. எப்படி கடந்தது என தெரியவில்லை…. நொடி நொடியும் அணையாத தணலாய்… காத்திருந்தான்.
இதற்கு நடுவே… ஊருக்கு சென்று பணம் வாங்கி வந்தான் படிப்பதற்கு… கிட்டத்தட்ட பிடிங்கிதான் வந்தான்… பெற்றோருக்குதான் நம்பிக்கையே இல்லையே இவன் மேல்… 
எனவே, ஏன்… எதுக்கு.. என பல கேள்விகள். IAS படிக்க போகிறேன் என சொல்ல… நம்பவில்லை யாரும்… என்ன செய்ய… அவனின் கடந்தகாலம் அப்படி…
ஒருவழியாக எப்படியோ பணம் வாங்கி வந்துவிட்டான்…. அப்படியே கௌரவமாக சொல்லுவோம்.
இப்போதெல்லாம் பைரவியின் கண்ணில் வீரா படுவதேயில்லை… தன் வீட்டுக்கு வரவில்லை என்பது அவளால் உணர முடிந்தது… 
ஐஸுதான் அங்கு சென்று படிக்கிறாள்… தாத்தா, சென்று பார்க்கிறார்… ஆனால் அவன் வரவில்லை… இவளும் விட்டுவிட்டாள்… எப்பவாது வெளியே பார்த்தாள்… ஏதோ சிரிப்பானோ மாட்டானோ என அவனை பார்ப்பதை தவிர்த்தாள்… இப்படிதான் நகர்ந்தது அவர்களின் நேரம்…
அன்று எக்ஸாம்…. ப்ரிமிலேரி எக்ஸாம்…. அந்த வீக் முழுதும் அவன் கூலாக இருக்க, தாத்தாதான் பரபப்பாக இருந்தார்… இவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… 
அடுத்த நாற்பத்தைந்து நாளில் ரிசல்ட் வந்தது….
 

Advertisement