Advertisement

எனக்கானவளே நீதானே…
(வசமிழக்கும் வானம் நான்….)
இந்த ஆறுமாதத்தில், வீரா ஒரே ஒருமுறை தனது ஊருக்கு சென்று வந்தான்… அதுவும் அவன் அன்னையின் ஓயாத அழுகை தாங்கமுடியாமல் சென்றான்… அவனின் அண்ணன் கைலாஷின் திருமணத்திற்கு…
பெற்றோர் இருவரும் நேரில் வந்தனர்… ஒரு ஞாயிறு அன்று… தன் பெரிய மகன் திருமணத்திற்கு சொந்தங்களுக்கு பத்திரிகை வந்தவர்கள்… அப்படியே இவன் வீட்டிற்கும் வந்தனர்.
என்னதான் வீரா, சொல்லாமல் வந்தாலும்… ஒரே ஊர்காரர்கள்தானே எனவே தண்டபாணி தாத்தாவும்… முறையான தகவல் சொல்லியே வீராவை, குடி வைத்தார்… 
எனவே, வீராவின் வீட்டில் எல்லோருக்கும் தெரியும்… இவனின் வேலை,… வீடு எல்லாம்… அப்படியாவது பொறுப்பாக இருந்தால் சரி என வைத்தியலிங்கம் சொல்ல… கல்யாணிதான், அன்னையாக ஓய்ந்து போனார்…
கல்யாணி, வந்தவர், வீராவின் கோலம் பார்த்து அழுதே விட்டார்… ஆனாலும் சற்று நிம்மதியாக இருந்தார்… எந்த வம்புக்கும் போகாமல்.. ஒதுங்கி, தன் வேலையை பார்க்கிறான் எனத்தான்… 
நல்லவேளை அப்போதே அவருக்கு தெரியவில்லை, இவன் சுந்தரத்திடம் சொன்ன திட்டமெல்லாம்… அமைதியாக பார்த்து பொங்கி பொங்கி அழுதார்தான்.. கல்யாணி. 
ஆனால்.. வீரா, இருவரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்… அன்னையை சமாதானமும் செய்யவரவில்லை… தந்தையை வாவெனவும் அழைக்கவில்லை… கல்நெஞ்சகாரன்.
வைதியலிங்கமே “என்ன டா, நம்மூர் எடிட்டியர் இங்கதான் இருக்காராம்… வா, போய் பார்த்துட்டு வரலாம்” என்றார் தோரணையாக… தந்தையாக மகனை எப்படியிருக்க என கூட கேட்கவில்லை லிங்கம்…
எப்படியோ காசுக்கு கஷ்ட்டபட்டால்தான்… பணத்தின் அருமை புரியும் என்பது தந்தையின் எண்ணம்… அதேபோல்தான் நடக்கவும் செய்தது… வீராவுக்கு. 
தண்டபாணி தாத்தா மூலமாக இவனின் நிலையைத்தான் அறிந்திருந்தனரே வீட்டினர்… எனவே வீராவை பார்த்துக் கொண்ட குடும்பத்தை… முறையாக திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தனர் பெற்றோர்… இது அவர்கள் செய்ய வேண்டிய நன்றியும் கூடதானே… 
வீரா, சுந்தரத்தை போனில் அழைத்து சொல்லியே.. கூட்டி சென்றான் தன் பெற்றோரை…. முறையாக வரவேற்றனர் சுந்தரம் வீட்டில்…
அவர்களுக்கும் பத்திரிகை வைத்து அழைத்தனர்… தவறாமல் வரவேண்டும் என நல்ல முறையிலேயே அழைத்தனர்… கல்யாணியும் வைதியலிங்கமும்.
பின்தான் வைத்தியலிங்கம், தன் மகனை பற்றி புலம்பி தள்ளிவிட்டார்… சுந்தரத்திடம். எல்லோரும் அவனை பாவமாக பார்க்க… எப்போதும் போல பைரவி மட்டும் அலட்சியமாகவே பார்த்தாள் அவனை.
அது தெரிந்தாலும் எப்போதும் போல ‘போடி… போடி… இதெல்லாம் வீரனுக்கு அழகு…’ என முனகிக் கொண்டான்..
ஆனால், ஐஸ்… நன்றாக பேசினாள்… இல்லை சண்டை போட்டாள்… வீராவின் பெற்றோரிடம். ஞாயிற்று கிழமை என்பதால்… பிள்ளைகள் வீட்டிலேயே இருந்தனர்…
வீராவின் தந்தை தாயிடம், ஐஸ் “என்ன… எங்க அண்ணா இப்படி சொல்றீங்க… வீராண்ணா எவ்வளோ நல்லவங்க.. 
இங்க வந்து கூட.. மொட்டைமாடியில குருவிக்கு தண்ணி…. தாணியமெல்லாம் வைப்பாங்க தெரியுமா… 
நான் பாகெட் புட் சாப்பிட கூடாதுன்னு சொல்லுவாங்க…
அத்தோட… டெய்லி எனக்கு எல்லா நியூஸ்சும் சொல்லுவாங்க… எப்படிதான் எல்லாமே தெரியுதோ வீராண்ணாக்கு…. 
அதே மாதிரி மத்ஸ் சூப்பர்ரா சொல்லி தருவாங்க… அக்கா… பெ…பெ..” என தன் நாக்கை நீட்டி ஒன்றும் தெரியாது என பாவனையாக சொல்லவும் வீடே சிரித்தது… சின்னவளின் பேச்சில்… 
பைரவி முறைத்தாள்… “வாடி இங்க…” என சத்தமாக முனு முனுத்தாள்…
கல்யாணி பூரித்து போனார்… “எங்க டா, தெரியுது இந்த அண்ணன் பெருமை எல்லோருக்கும், எப்படியோ தெளிஞ்சி.. வந்திட்டா போதும்டா…” என சொல்லி எழுந்து வந்து கட்டிக் கொண்டார் அந்த பிள்ளையை…
வைத்தியலிங்கம் “ப்பா… நீ ஒருத்திதான் அவனை இப்படி சொல்றது… அங்க வந்து பாரு… எல்லா போலீசுக்கும் இவனை தெரியும்…
இவனை கேஸ் இல்லாம காப்பாத்தவே நான் தனியா சம்பாதிச்சேன்…” என பெரிதாக சிரித்தபடியே சொன்னார்… 
பைரவிக்கு குளுகுளுவென இருந்தது… கெத்தாக தன் தங்கையை பார்த்தாள்… வாய்மூடி சிரித்தாள்… மற்றபடி.. மற்ற எல்லோரும் நெளிந்து கொண்டிருந்தனர்… அதிலிருந்தே வீராவின் பெருமை பெற்றோருக்கு புரிய… வைதியலிங்கத்திற்கே… நிம்மதியானது… மகனை வீட்டைவிட்டு அனுப்பி நல்லதுதான் செய்திருக்கிறோம் என….
வீரா போன்ற ‘ஞான கிறுக்கர்கள்’ இருக்கத்தான் செய்க்கிறார்கள்… நம் கண்ணுக்கு எப்போதும் சட்டென கெட்டது மட்டும்தானே தெரியும்… எனவே முன்பாதி மறந்து.. பின்பாதிதான் தெரிகிறது… பெரும்பாலும்..
பின், கல்யாணி வந்தார் கோதையிடம் ‘அவனின் வயிறு வாடாமல் பார்த்ததுக்கு நன்றி’ என்றார்… என்ன பேசுவது என தெரியவில்லை அழுதுவிட்டார்… “பார்த்துக்கோங்க….” என்ற வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தார் கிளம்பும்வரை… அவருக்கு வேறு என்ன சொல்லுவது என தெரியவில்லை….
ஒன்றுமில்லாதவன் இல்லை… இப்போதும் ‘ம்…’. என்றால் ஆயிரம் பேரை வேலை வாங்கிக் கொண்டு… அமர்ந்திருக்கலாம் சுகமாக ac ஹாலில்… 
இங்கு வந்து அனாதையாக… மாசம் சில ஆயிரம் சம்பளத்துக்கு… ஓடிக் கொண்டு… அதில் வயிறு வளரத்து…. என.. சொல்ல முடியவில்லை தன் மகனில் நிலையை கண்ணில் பார்த்தது முதல் கல்யாணிக்கு…
எனவே எதையும் தன் கணவரிடமும், மகனிடமும்… உதவிக் கொண்டிருக்கும் மனிதர்களிடமும் காட்ட தெரியாமல்… கிட்ட தட்ட புலம்பிய நிலையிலே ஊருக்கு கிளம்பினார் அந்த அன்னை…
இப்படியாக எல்லாம் முடிந்து…. கைலாஷின் திருமணமும் வர… அன்னை ஓயாமல் அழைக்க… எப்போதும் போல முறுக்கிக் கொண்டு சென்றான்… தனது ஊருக்கு… வீரா.
அதுவும் ரிசப்ஷன் அன்றுமட்டும் தலையை காட்டிவிட்டு வந்துவிட்டான்… பாவம் குடும்பம்தான் கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது.
சுந்தரம் மட்டும் திருமணத்திற்கு சென்று வந்தார்… அவருடன் வீரா செல்லவில்லை…
அதன் பிறகு போன் எண்னை மாற்றிவிட்டான் வீரா… அன்னையின் ஓயாத அழைப்பை அவனால் ஏற்க முடியவில்லை, கூடவே அவரின் புலம்பல்  காரணமாம்… 
அப்போதெல்லாம் கோதையிடம் பேசுவார் கல்யாணி… இப்படியாக இவர்களின் குடும்ப பெண்களின் உறவு தொடர்ந்தது… நாட்களும் கடந்தது…
இன்று…
வளர்பிறை போல…. நாட்கள் வளர்ந்தது… வீரா முடிவு தெரியாமல் வீடு வரமாட்டேன் என சபதம் போல… களத்திலேயே… அங்கேயே நின்றான்… 
அன்று பைரவியின் பிறந்தநாள் விழா…. சின்னதாக ஒரு கொண்டாட்டம் வீட்டில்.. எப்போதும் செய்வதில்லை… இந்த வருடம் கல்லூரி அதன் தோழமைகள் என மக்கள் வளர வளர… இந்த வருடம் மகள் ஆசையாக கேட்கவும் மறுக்க முடியாமல்… ஏற்பாடு செய்தார் கோதை… அவரின் தந்தையும்… “பரவாயில்லை… அரேஞ் பண்ணு கோதை..” என்றுவிட வீடே கொண்டாட தொடங்கியது…
தாத்தாக்கு மனது கேளாமல் வீராவுக்கு, அழைத்து சொல்லியிருந்தார்…
தவிர்க்க முடியவில்லை வந்தான் மாலையில்… சுந்தரத்திற்கு அவன் மேல் ஒரு பற்று… இன்னது என பிரித்தரிய முடியா சொந்தமாக மனதில் வைத்துக் கொண்டார்… வீராவை..
எனவே குடும்பமில்லாமல் இருக்கிறான்… பாவம் எப்போதும் அங்கேயே இருக்கிறான்.. வந்துவிட்டு போகட்டும் ஒருநாள் கொண்டாட்டமாக இருக்கட்டும் என அழைத்தார் அந்த முதியவர்…
ஆனால்… விளைவு வேறொன்றாக இருந்தது…
வீரா.. தன் வீட்டிற்கு சென்று… குளியல் போட்டு… ஒரு ஜீன்… பிளாக் டி-ஷர்ட்டில் வந்தான்… 
வீராக்கு, ஏதோ போராட்ட எண்ணமே இங்கு வரும் வரை… கூடவே கோவமும் கூட.. அவனின் மனம் களத்திலேயே நின்றது…
அவன் உள்ளே நுழையும் போது, அந்த வீட்டின் அழகு அவனுக்கு ஏனோ உறுத்தியது… ‘எதற்கு இவ்வளோ செலவு… இதை இல்லாதவர்களிடம் கொடுத்தால்… ச்சு… 
யாரிடம் சொல்ல முடியும்… இதெல்லாம்தான் இவர்களுக்கு முக்கியம்… அங்கே ஒரு கூட்டமே சாப்பாடு தண்ணியில்லாமல் போராட.. இங்கு கொண்டாட்டம்..’ என தன் மனம் எப்போதும் போல எங்கையோ செல்ல.. பொறுமையாகவே வந்தான்… அந்த விழா நடக்கும் வீட்டுக்கு.. 
வீடு முழுக்க led விளக்குகள் ஒளிர… முன்னால் இருந்த இடத்திலும் தோட்டத்திலும் அட்டானஸ் போட்டிருக்க… வீடு முழுக்க ஆட்களாலும் வயது பெண்களாலும் நிரம்பி இருந்தது…
சுந்தரம் முகப்பில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்… வீராவை பார்க்கவும் சுந்தரம் “வாப்பா… வா… வா…” என ஆனந்தமாக வரவேற்றார்…
அந்த முதியவரின் கண்கள் வேறு ஏதோ சொன்னது.. அந்த மங்கிய ஒளியில் ஒன்றும் அறியமுடியவில்லை.. மேலும் விளங்கிக்கொள்ள முயலவில்லை வீரா… 
அவனும் “தாத்தா… எப்படி இருக்கீங்க… “ என சொல்லியபடியே உள்ளே வந்தான்… இன்னும் மனிதர்களை படிக்க தெரியாதவன்… 
அப்படியே கோதை வந்தார்.. ஒரு இருபது நாட்களுக்கு மேல் இருக்கும் அவனை பார்த்து… கருத்துபோய்… இளைத்து… எப்படியோ இருந்தான்… மீசை மட்டும்தான் தெரிந்தது… ஊரிலிருந்து வந்த அன்று தினவெடுத்த சிங்கமாக தெரிந்தவன்… இன்று ஓய்ந்த சிங்கமாக தெரிந்தான்…
கோதை கேட்டேவிட்டார் “ஏன் வீரா இப்படி… நாளெல்லாம் வெயில்லையே இருக்கீயா… சாப்பிடுறீயா இல்லையா…
என்னமோ போல இருக்க….
உங்க வீட்டிலிருந்து யாராவது பார்த்தால்… அவ்வளவுதான்… உடம்ப பார்த்துக்கோ வீரா..” என சொல்லவே செய்தார், ஒரு அன்னையாக..
இளமை என்பது எதையும் வெல்லும் சக்தி கொண்டது… எதையும் உடைக்கும் வல்லமை கொண்டது போல.. அதை கண்ணில் காட்டி.. வீரா, திமிராக புன்னகைத்தான்… “என்ன செய்ய… நமக்கான அடையாளம் வேனும்ன்னா… போராடித்தானே ஆகணும்…
உடம்ப எப்போ வேணா தேத்திக்கலாம் ஆன்ட்டி..” என்றான் இன்னமும் கொள்கை மாறா துடிப்புடன்… கண்ணில் அதே ஜ்வாலை… வீராவை அசைக்க முடியாதோ… பார்த்திருந்த தாத்தாக்கு அப்படிதான் தோன்றியது..
இன்னும் ஏதோ தெரிந்த மக்கள்… பக்கத்தில் குடியிருக்கும் நபர்கள்… நடைபயிற்சியின் போது பழக்கமான நபர்கள் என நாலைந்து நபர்களிடம் பேசியபடி உள்ளே வந்தான் வீரா…
 

Advertisement