Advertisement

இரண்டு வருடங்களுக்கு பிறகு….
ராகவ் சென்னையில் பிரைவேட் வேலை தேடிக் கொண்டார்… ஐஸுக்கு இப்போது வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்..
பாவம் அந்த பிள்ளை, இன்னும்… கல்யாண கலட்டாக்களில் சிறு பிள்ளையாகவே இருந்தது… இன்னும் அவளுக்கு பைரவி சொல்லியது எல்லாம் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
அன்று… ஐஸ் சொன்னதிலிருந்து வீரா… ஒரு முடிவுடன்தான் ஊருக்கு சென்றான்… அதன் விளைவு இப்போது… இரு பிள்ளைகளை IASக்கு படிக்க வைக்கிறான்.
அங்குள்ள… விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்கு… தானே கோச்சிங் எடுத்தான்… அத்தோடு… ஒரு ஏழை மாணவனுக்கும் எடுக்கிறான்.
இந்த வருடம் முழு நேரமும் வகுப்பு செல்ல வேண்டும் என்பதால்… இங்கே சென்னையில்… தான், படித்த… அகாடமியில் சேர்த்திருக்கிறான்…
அந்த பெண் பெயர்… வீரலட்சுமி. அவளுக்கு கையெல்லாம் அந்த விபத்தில் காயம்… விரல்கள் எல்லாம் காயம்… சில சமயம் எழுத முடியாது.
அப்போதெல்லாம் வீரா… அவளுக்கு, நிறைய கவுன்சிலிங் கொடுப்பான், அவர்கள் வீட்டிற்கே சென்று… காலேஜில் எல்லோரும் பார்த்து முதலில் பயந்தனர்… பிறகு வீராவே சென்று… எல்லோரிடமும் பேசி… அதன்பிறகு, வீரலட்ஷிமியை எல்லோருக்கும் பிடித்தது.
ஆனால் மற்ற இடங்களில்… எப்போதும் தோன்றும் ஒரு அசூசை உணர்வு… எல்லோரின் பார்வையிலும் எழுவதால்… இங்கு சென்னை ஐஸுடன் பழக விட்டான். 
கூடவே… இங்கேயே தங்க ஏற்பாடு செய்தான். இப்போது ரவியின் வீட்டில் தங்கி படிக்கிறாள்.. மேலே அவளுக்கு என ஒரு ரூம் ஓதுக்கினர் வீட்டினர். 
இந்த, சின்ன வீரா… நிறைய வலிகள் தாங்கிவிட்டதால்.. இப்போது கொஞ்சம் தெளிந்து கொண்டாள்.. எல்லோரையும் எதிர்கொள்ள பழகிக் கொண்டாள்.
அந்த பையன்.. தனியாக அறை எடுத்து தங்கி படிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.
வீரா பைரவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது… இருவருக்கும் பாரதியை பிடிக்கும் என்பதால்… கண்ணன் என பெயர் வைத்தனர்.
இப்போது பைரவி.. சென்னை வாசம்தான்… அவ்வபோது திருவண்ணாமலை செல்லுவாள்.. 
இப்போது வீரா… சிவகங்கை சீமைக்கு சென்றுவிட்டான்… அங்கு செல்வதில்லை.. ரவி. தனியாக கண்ணனை பார்க்க முடியில்லை பைரவியால்.
அதுவும் தனிமையில் இருக்கும் கண்ணன், தன் அப்பா… நடுராத்திரி வந்தாலும்… அப்பாவை கண்டுவிட்டால்… இரவு எந்த நேரமாக இருந்தாலும் தத்தியபடியே… வந்து காலை கட்டிக் கொள்வான்.
வீராவும்… அப்படியே வாரியெடுத்து தூக்கி போட்டு பிடிக்க… பிள்ளைக்கு ஏதோ பறக்கும் உணர்வு போல்… சத்தமாக சிரிப்பான்.. 
பைரவி ‘விடுங்க… சாப்பிட்டு விளையாடுங்க…’ என எவ்வளவு சொன்னாலும்… காது கேட்காது இருவருக்கும்… அதுவும் தன் தந்தை வந்த உடன்… ரவியை கண்டுகொள்ளாமல் சுற்று பிள்ளையை ஏக்கமாக பார்ப்பாள் ரவி.
விளையாடி முடித்து.. மகன் சற்று களைத்தார்போல் தெரிந்தால்தான் வருவான் உண்பதற்கே… எனவே இவளால் சமாளிக்க முடியவில்லை.. 
அதுவும்.. புது இடம்… என்பதால், நாள் முழுவதும் தனிமையில்… பிள்ளைக்கு, தான் மட்டும் ஈடு கொடுத்து விளையாட முடிவத்தில்லை அவளால்… எனவே சென்னை வாசம்தான்.
இப்போதுதான் வந்தான்… வீரா சென்னைக்கு. இரவு… நடுநிசி… என்னதான் சத்தம் செய்யாமல் வந்தாலும்… கண்ணன் எழுந்து கொண்டான்… வீராவின் காலடி சத்தம் கேட்டு.
யாருகிட்ட… 
சின்ன கண்ணன்தான் அவன்… சின்ன சின்ன பாதம் வைத்து… சலங்கைகள் ஒலிக்க… பெட்டிலிருந்து எழுந்து குடுகுடுவென ஓடி வந்தது… வாசல் நோக்கி. 
ஓன்றரை வயதுதான். ஆனால் இருவரின் விவரமும் சேர்ந்த ஞான குருத்து…
ரவி.. இரவு உடையுடன் மகன் வரும் சத்தம் கேட்டு, இடுப்பில் கை வைத்து… அவன் தந்தையை முறைத்தாள் ஆசையாகத்தான்.
“உங்க பையனுக்கு நீங்க வருவீங்கன்னு தெரியும்… அதான் திரும்பி திரும்பி படுத்திட்டிருந்தான்… பார்த்திங்களா… வந்துட்டான்” என குறைபடுவது போல்,  பெருமையாக சொல்ல… 
வீரா “நீதான் என்னமோ தூங்கறான்னு சொன்ன…” என்றான் அவனும் குறையாய்.
அதற்குள் மகன் தத்தை தத்தி அவசரமாக வர… வீரா ஓட… கண்ணனும் விழுந்தடித்து பின்னாலேயே ஓடினான்…
தன் தந்தையை பிடித்தவுடன் கடித்து… முகத்தை அடித்து… அவனின் முடியை இழுத்து… ஏதோ கோவம் போல… அழகாக மகன் தன் செய்கையால் காட்ட….  எல்லாவற்றையும் இன்பமாக வாங்கிக் கொண்டே நின்றான் வீரா… பைரவியும் ஆசையாக பார்த்தபடியே நின்றாள்.
ஐஸுக்கு வரன் அமைந்திருக்கிறது… எனவே நாளை பெண்பார்க்க வருகிறார்கள்.. அதன்பொருட்டே இந்த திடீர் விஜயம் வீரா.
மெதுவாக கண்ணன், வீராவை விட… அப்படியே பேசியபடியே… உண்டான் வீரா. இப்போது ரவி தண்டபாணி தாத்தா வீட்டில் தனிக்குடுத்தனம் இருக்கிறாள்.
பெரியவர்கள் எவ்வளவு சொல்லியும்… வீராவும் பைரவியும் கேட்கவில்லை.. நாங்கள் தனியாக இருக்கிறோம் என்றுவிட்டனர்.
தண்டபாணி தாத்தா வீட்டை இப்போது விலை பேசிக் கொண்டிருக்கிறனர்.. வீரா வீட்டில்… ஆனால், வீரா இல்லை. பைரவியும், அவளின் மாமனார் லிங்கமும்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மறுநாள்… வீரா முன்னின்றே எல்லாம் செய்தான்… ஆர்பாட்டம் ஏன் என கேள்வி கேட்கவில்லை… அந்த ஆரம்பத்தில் ஒரு பழமொழி வருமே…”இருவது வயதில் ஒருவன் கம்யுனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி…” என. அதன் மறுபாதி “முப்பது வயதிற்கு மேலும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவன் மடையன்…” என்பதுதான் அது.
ஆக, வீரா தன் விழத்தை தவிர மற்றவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க கற்றான்… அதுதான் அவனின் பெரும் மாற்றம்.. அடுத்தவர் ஆசைக்கு மதிப்பு கொடுத்தான் தன்னிலிருந்து இறங்காமல்.
பரபரப்பாக நேரம் செல்ல… அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அனைவரும்… மாப்பிளை வீட்டிலிருந்து வந்தனர்… மாப்பிள்ளை.. கார்த்திக். பல் மருத்துவர்.
எல்லாம் நல்லபடியாக சென்றது… இது ஒரு போர்மால்ட்டிக்குதான்… மற்றபடி… கார்த்திக்கும் ஐஸ்வர்யாவை பிடித்திருந்தது… போட்டோவிலேயே. 
இப்போது தனியே பேசினர்… வழக்கம்போல… எண்கள் பரிமாறி கொண்டனர். எல்லாம் நல்லதாக நடந்தது.
எல்லோரும்… லேசாக டிபன் முடித்து கிளம்பினர்.
வீட்டு மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்…
பைரவி… லேசாக அவளை வம்பிழுக்க… “பார்த்து டி… பல் டாக்டராம்…” என்றாள்.
ராகவ்வும் கோதையும் அமைதியாக சிரிக்க… ஐஸ் “அக்கா… விட்டுடு… நீ சொன்ன கேட்டகரியே இதுல இல்ல… இவர் வேற…” என்றாள் பாவமாக…
வீரா “என்ன ரவி இது…  அவள சும்மா விடு” என்றான் விஷையம் புரியாமல். ரவி தன்னவனை பார்த்து சிரித்தபடியே அமைதியாகினாள்.
அப்பாடா.. என ஐஸ் எழுந்து மேலே சென்றாள்..
அதன்பிறகுதான் வீராக்கு அன்று நடந்தது சொல்லப்பட… வீரா “போதும் கிண்டல் செய்யாத ரவி… சின்ன பிள்ள… மனசுல ஏதாவது பதிஞ்சிட போகுது” என்றான் பொறுப்பாய்.
“ம்கூம்…….” என்றாள் ராகமாய்.
இரவு உண்டு முடித்து எல்லோரும் உறங்க சென்றனர்.
மகனை தன் அன்னையிடம் விட்டு… வீராவுடன் வாக்கிங் வந்தாள் ரவி… இப்போதும் ஷாட்ஸ்… ஒரு டி-ஷர்ட்தான் வீரா… அந்த இரவு நேர சென்னையில்.. வெப்ப காற்று… மெல்ல வீச… 
நடந்து வரும் ரவியை பார்க்க… கொஞ்சம் இளைத்து இருந்தாளோ… வீரா மனம் எண்ணியது.. ஏனோ அமைதியாக வந்தாள்… வீராக்கு பொறுக்கவில்லை “என்ன டா… டயடா… இருக்க..” என்றான் அவளின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டு…
சட்டென முகம் மலர்ந்து சிரித்தாள்… ரவி… கூடவே “பையனுக்கு இரண்டு வயசாகட்டும்… அங்க வந்திடறோம்…” என்றாள் அமைதியான குரலில்… அந்த குரலும்… அதன் மெல்லிய ஒளியும் சொல்லியது.. எவ்வளவு தன்னை தேடுகிறாள் என…
வீரா அவளின் கைகளை இருக பற்றிக் கொண்டான்… எந்த பதிலும் சொல்லாமல்.. அமைதியாக நடக்க தொடங்கினர்… 
இப்படி… சின்ன சின்ன தாங்க கூடிய வளைவு… சுழிவுகள்… அவர்கள் வாழ்வில் எப்போதும் உண்டு… அதுதான் அவர்களுக்கு இனிமையை கூட்டும்…
“கை வீசிடும் தென்றால்…
கண்மூடிடும் மின்னல்…
இது கனியோ கவியோ…
அமுதோ… சிலையழகோ…
பண்பாடிடும் சந்தம்… 
உன் நாவினில் சிந்தும்…
அது மழையோ… புனலோ..
நதியோ… கலையழகோ…
மேகம் ஒன்று நேரில் நின்று வாழ்த்த வந்ததடி…
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்… சேர்த்து கொண்டதடி…
இது தொடரும்… வளரும்… மலரும்…
இனி கனவும்… நினைவும்… உனையே…”
$%சுபம்%$

Advertisement