Advertisement

கோதை அவளின் பின்னால் செல்ல… வீராவும் சென்றான். ரவிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது… காலையிலிருந்து உண்ணவில்லை, மணி மதியம் இரண்டு… எனவே வாமிட் எடுத்து… முகம் கழுவி வந்து, ஹால் ச்சேரில் அமர்ந்தாள்.
அவளருகில் வந்து நீருடன் அமர்ந்தான் வீரா. அவளுக்கு முகம் துடைத்து… தண்ணீர் தர… மற்ற எல்லோரும் தள்ளி நின்றனர்.. 
வீரா “வா, சாப்பிடு… எதுக்கு, எனக்காக வெயிட் பண்ண… வா…” என கைபிடிக்க..
“இருங்க…” என்றாள் சற்று ஓய்ந்து போய் அமர்ந்து..
வீராவின் பாட்டி “இருடா… இப்போதானே வந்தா… இரு” என்றவர் ரவியின் கைபிடித்து பார்த்தார்… நாடி நல்ல செய்தி என துடிக்க… முகம்கொள்ளா புன்னகை அந்த முதியவருக்கு…
“ம்… ம்…. எல்லாம்….. நல்ல செய்திதான்… கல்யாணி, அந்த சர்க்கரை டப்பாவ எடு” என்றார் குதுகலமாய்.
புரிந்து போனது வீட்டில் எல்லோருக்கும்.. வீராவை தவிர. 
அவனுக்கும் ரவியின் வெட்கத்தில் புரிய தொடங்க… “ரவி….” என்றான் ஆழமாக.
ரவியும் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடியே… வெட்கம் பாதி… சந்தோஷம் மீதியாக… அவனை நிமிர்ந்து பார்க்க… அவனை பார்த்தவுடன்… உதடுகள் அவள் பேச்சை கேட்க்காமல்… விரிந்து புன்னகைக்க… 
வீரா, திக்குமுக்காடி போனான்… அந்த நொடி… அவளின் பார்வையில்… கண்ணீரில்… பெற்றோர் என்ற ஸ்தானம் இவ்வளவு விலைமதிப்பில்லாததா…. வீரா… நெகிழ்ந்தான்..
யாரும் இவர்களிடம் கேட்கவில்லைதான். ஆனால், அந்த தம்பதிகளுக்கே இருந்தது… திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறதே… இன்னும் ஏதும் தனக்கு கிடைக்கவில்லையே என எண்ணம் வந்திருந்தது அவர்களுக்குள்…
இப்போது… எல்லாம் கடந்தது போல… வீராவும் ரவியும்… ‘ஒரு பெருமூச்சு’ சேர்ந்தே எடுத்தனர்… கைகள் அவர்களின் அனுமதி இல்லாமலே பற்றிக் கொண்டது.. ஒன்றோடு ஒன்று..
அவனும்… தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து அவளுக்கு நெற்றி முத்தம் வைத்தான்… எல்லோருக்கும் ஒரு துளி ஆனந்த கண்ணீரேனும் வந்திருக்கும் இந்த நிகழ்வில்.
கண்ணீருக்கென பாஷைகள் தேவையில்லை போல… எல்லோராலும் உணர முடியும் போல… அதன் அர்த்தத்தை.  தங்கள் நிலையை… ‘அவர்கள் சொல்லி இவர்கள் புரிந்து’ என சங்கடத்தை தராமல் இந்த இடத்தில் கண்ணீர் இனித்தது… நல்லதானது.
 பின் மெல்ல சுதாரித்து… வீரா எழுந்து கொள்ள… கோதை… கல்யாணி, ஐஸ் என எல்லோரும் வந்தனர் ரவி அருகில்… வீரா, தாத்தாவின் போட்டோவிடம் போய் நின்று கொண்டான். நேரம் இனிமையாக சென்றது..
அப்படியே எல்லோரும் உண்டு முடித்து.. பேசி தீர்த்து.. என நேரம் கடக்க… எப்போது மருத்துவரை பார்ப்பது என பேச்சு சென்று கொண்டிருந்தது…
வீராவை எல்லோரும் சென்னையிலே வேலை மாற்றிக்கு கொண்டு வா என சொல்ல… எப்போதும் போல வீராக்கு கோவம்… “இதென்ன… எங்க அப்பன் வீட்டு வேலையா… எல்லாம் அதுவாக நடக்கணும்” என்றான் கோவமாக.
கோவம் கூட இப்போது இனித்தது எல்லோருக்கும்… 
இரவு… வீராவின் வீட்டினார்… திருவண்ணாமலை கிளம்ப… கல்யாணி… இங்கேயே இருந்து கொண்டார்… மருமகளை மருத்துவரிடம் காண்பித்து… தானே, கூட்டி வருவதாக கூறி.
இந்த வீராவாகிய… சின்சியர் சிகாமணியும்… கிளம்பிவிட்டார்… தன் வேலையை பார்க்க…
மறுநாள் காலையில் மருத்துவரை பார்த்து உறுதி செய்து வந்தனர் பெரியவர்கள். மறுநாள் பைரவி திருவண்ணாமலை கிளம்பி சென்றாள்.. அந்த ஒரு வாரத்திற்கு ஏதும்… விழாக்கள் இல்லை அவளுக்கு. எனவே அங்கே பயனமானாள்.
காதல் எனும் ஈரம் காயாமல்…  சென்றது அவர்களின் நாட்கள்… எந்த அதிர்வும் யாரும் தரவில்லை… எல்லாம் ரவி இஷ்ட்டபடியே நடந்தது… ஒன்பதாவது மாதம் வரை தனது வேலையை செய்தாள் ரவி.
இப்போதெல்லாம் வீராவின் சனி ஞாயிறு சென்னையிலேயே கடந்தது. அவளுடன் காலை வேளையில் தாத்தாவை பற்றி பேசியபடியே நடப்பான்.
ஏதோ தன் பிள்ளைக்கு இப்போதே காது கேட்கும் என்பது போல… அவளின் வயிற்றில் கை வைத்து.. அவரை பற்றி கதை கதையாக பேசுவான்.
ரவியும் போட்டிக்கு… சாமி கதைகள் நிறைய படிப்பாள்… அதெல்லாம் வீரா ஒன்றும் சொல்லமாட்டான்… ‘நல்லதை யார்… எது…  சொன்னால் என்ன’ என்பான். 
அன்றும் அப்படிதான்…. நிறைமாத.. முழு நிலவாக ரவி, மெல்ல நடந்து கொண்டிருக்க்… இருவரும் ஏதோ பொது விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
ஆன்மிகம், சாமியார்… கோவில்… என பேச்சு செல்ல… அவளின் வயிற்றி கை வைத்து “பாப்பா…. என்னடா… பண்ற…” என்றான் வாஞ்சையாய்… அதுவும் படக்கென அசைய….
“அம்மா சொல்றத… இப்போவே கேட்காத…. சாமி கதையெல்லாம் சொல்லி உன்னை யோசிக்க விடாமா செய்துடுவா… நீ யோசிச்சு உனக்கு சரின்னு தோணினா மட்டும் செய்…” என அவளின் கேள்வி எதற்கோ பதிலாய்.. தன் பிள்ளையை முன்னிறுத்தி பேசினான்…
ரவி “ஆமாம் டா… இவர மாதிரியே… நீயும்… யாருக்கும் அடங்காம… உன்னை மட்டும் பாரு…” என கோவமாக சொல்ல…
வீரா சுதாரித்து… அதன் போக்கை மாற்ற…  “வேணாண்டி.. என் பிள்ளையை… எங்காவது சாமி.. பூதம்ன்னு.. சொல்லி பயம் காட்டின” என மிரட்ட…
ரவி “வாழ்க்கையில் ஏதாவது ஒன்னுக்கு பயப்படனும்… ஒன்னு மனசாட்சிக்கு… கொள்கைகளுக்கு… இல்லை பாவ புண்ணியத்துக்கு….” என்றாள் மூச்சு வாங்க…
வீரா “மெதுவா சொல்லு… எந்த மேடையும்…. இங்க இல்ல” என்றான் சிரித்தபடியே…
அவளும் சிரித்தாள் “நீங்க அப்படி, நாங்க பாவம் புண்ணியத்துக்கு பயப்படுவோம்… அதான் கடவுள்…” என்றாள் வீரமாக…
“ஆமாமா ஆமாம்… ஐய்யாயிரத்துக்கு காணிக்கை போட்டா… உங்க கடவுள்… உங்க பாவத்தை.. விட்டுடுவார்…” என்றான் அவளின் வயிற்றிலிருந்து கையை எடுத்தபடியே…
“ம் கூம்… அது அப்படியல்ல… 
நாம செய்தது பாவம்ன்னு முதலில் தோணனும்… 
அந்த பாவம் நாம இனி செய்ய கூடாதுன்னு மனதில் பதியத்தான் இந்த காணிக்கை… பரிகாரம்… எல்லாம்” என்றாள்… ஏதோ ஆன்மீக குருவாக மாறி…
“ம்.. நல்லா குடுக்குற விளக்கம்…. எத்தனை பேர்… அப்படி நினைக்கிறாங்க…” என்றான்.
“ம்… அதுதான் அவரோட ஸ்பெஷல்…. 
மனது சுத்தமானால் மந்திரம் தேவையில்லைன்னு சொல்லுவாங்க… அதான் கடவுள்… மனம்தான் கடவுள்… இப்போ சொல்றாங்களே… பாசிட்டிவா நினைங்க… அப்படின்னு…
அதுதான் அப்போ… சொன்னாங்க… நல்லதே நினை நல்லதே நடக்கும்ன்னு… யாருக்கும் மனத்தால் கூட… கெட்டது நினைக்க கூடாதுன்னு சொன்னாங்க…… 
உங்க பாஷையில் மனசாட்சிக்கு தெரியும்… புரியும்… நீங்க எப்படின்னு…
ஆனா, அந்த மனசாட்சிய பலபேர் தொலைச்சிடுறாங்க….” என்றாள் பொறுப்பாக…
“அப்போ மனசாட்சிதான் கடவுளா…” என்றான் இடுக்கி பிடியாக…
“கிட்ட தட்ட அப்படிதான்….
நீங்க நினைக்கிறது நல்லதா… கெட்டதா… எதா இருந்தாலும்… அதற்கேற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும்… கடவுள் தருவார் அப்படின்னு நான் சொல்லுவேன்…
நீங்க… உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்தா.. போதும்ன்னு சொல்லுவீங்க… சரியா…
அவருக்கு… அந்த மனசாட்சிக்கு… எல்லோரும் ஒன்னு… 
அதனால… மனசாட்சியே… வெங்கடாசலம் இல்லையா….” என்றாள் சிரித்தபடியே லேசாக மூச்சு வாங்க… இடுப்பில் கை வைத்துக் கொண்டு…
வீரா “ப்பா… என் பொண்டாட்டி எவ்வளோ அழகு… அதுவும் தத்துவம் பேசும் போது அழகோ அழகு….” என்றான் பெருமிதமாய்…
ரவி தன்னையே கிள்ளி பார்க்க…
வீரா… பாக் டு போர்ம்….  “எப்படி டி… இப்படி… எப்டியோ என் பிள்ளைய… சாமியார் ஆக்க போற” என்றான் வானை பார்த்தபடி…
“இல்ல… ஒரு நம்பிக்கையை தரனே… உங்களுக்கு சுந்தரம் தாத்தா மாதிரி… அவனுக்கு கடவுள்… அவ்வளோதான்…” என்றாள் புன்னகை முகமாக… வீரா ஏதும் மேற்கொண்டு பேசாமல் மௌனமாகினான்…
பின் இரண்டெட்டு எடுத்து வைத்தவன்… “எப்படியோ என்னையும்… பேசியே… மயக்கிட்ட” என்றான் போனாபோகு என்ற குரலில்…
“நானாவது பராவாயில்ல… நீங்க பேசாமையே காரியம் சாதிச்சீங்க” என்றாள் மையலாய்… ஒரு பார்வை பார்த்து…
வீரா, அதில் சிறிதாக வெட்கம் கொண்டு… “ஹேய்….” என சொல்லி அவளின் கை கோர்த்து கொண்டான்.
இப்படிதான் இவர்களின் வாதமும்… தர்க்கமும்… இன்னும் தீர்ந்தபாடில்லை. அதை அவர்களும் தீர்த்துக் கொண்டதாக இல்லை… பொது விஷயத்தில் தர்க்கமும்… சொந்த விழயத்தில் வாதமும் செய்ய வேண்டும் என அவர்கள் இந்த வாழ்நாளில் கற்று கொண்டனர் போல… பயங்கர தெளிவாக இருந்தனர்.. அதற்கு அதீத புரிதல் கூட காரணமாக இருக்கலாம்…

Advertisement