Advertisement

எனக்கானவளே நீதானே…
22 
(வசமிழக்கும் வானம் நான்….)
பைரவியும்…. வீராவும்.. தாங்கள் சேர்ந்து இருக்கும் நாட்களை எண்ண தொடங்கினர்… எப்போதும் இருவருக்கும் வேலை காரணமாக வாரத்தில் ஓரிருநாள் மட்டும் பார்க்க நேரம் கிடைத்தது.
அதுவும் ரவி… பிடிவாதமாக நாகை வந்தாலன்றி… அந்த ஒருநாளும் கிடைக்கும். இப்படி இருக்க…
வீரா மாதத்தில் ஒருவாரம் மட்டுமே சென்னை வந்தான்… மற்ற படி.. நேரம் கிடைக்கும் போது பைரவி சென்றாள்.
மாதங்கள் சென்றது.. வீராவின், வீட்டில் பயம் வந்தது… இன்னும் கைலாஷிற்கும் குழந்தையில்லை… எட்டு மாதம் ஆகியும்.. இவர்களும், இன்னும் நல்ல சேதி சொல்லவில்லை. எனதான் அந்த பயம்.
ஆக, பெரியவர்களுக்கு பயம் பற்ற தொடங்கியது. ஆனால் யாரும் இளையவர்களிடம் கேட்கவில்லை… அதுவும் வீராவிடம் கேட்டுவிட முடியுமா! என்ன… எனவே அமைதிதான்..
ஆனால், எல்லா பெரியவர்களும்.. கைலாஷுக்கும், வீராவுக்கும் சேர்த்து வேண்டுதல்கள் பல வைத்தனர்…
இப்படியிருக்க.. சுந்தரம் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லை என பைரவி… ஒரு திங்கள் இரவு போன் செய்தாள் வீராக்கு.
நல்ல உடல்பலம் உள்ளவர்தான்… தள்ளாமைதான்.. மற்றபடி வேறு எந்த உபத்திரவமும் கிடையாது.
ஆனால், இப்போது வழுக்கி விழுந்துவிட்டார்.. பின் மண்டையில் அடி… டாக்டர்கள், உறுதியாக ஏதும் சொல்லவில்லை.
அதிகாலையில் வீரா வந்து சேர்ந்தான்… இன்னும் ராகவ் வரவில்லை… குடும்பமே கவலையுடன் காத்திருக்க… வீரா வந்துவிட்டான்.. சற்று தைரியமாக நினைக்க… அவன் ஓய்ந்து போய் உட்கார்ந்து கொண்டான். அவனை தேற்றவே ஆள் வேண்டும் போல…
அப்போதுதான் தாத்தாவை பார்க்க அனுமதித்தனர் மருத்துவர்கள்… நினைவு இல்லை… ஒவ்வருவராக சென்று பார்த்து வந்தனர்.
வீரா, சென்று அவரின் கையை பிடித்து அமர்ந்து கொண்டான்… நர்ஸ் ‘இது icu’ எல்லோருக்கும் டிஸ்ட்ரப் ஆகும்’ என சொல்லியும் கேட்காமல் அமர்ந்து கொண்டான்.
என்ன கழுத்தை பிடித்தா தள்ள முடியும்… நர்ஸ்களும் வெளியே வந்து ‘அவர கூட்டிட்டு வாங்க… மத்த பேஷன்ட் பயப்படுவாங்க’ என எவ்வளவு சொல்லியும்… தனக்குண்டான பிடிவாதத்தில்… அமர்ந்திருந்தான். ராகவ், வரும் வரை அமர்ந்திருந்தான்.
ராகவ் வர காலை பதினொரு மணி ஆனது. அவரும் அரக்க பரக்க வர… வந்து தன் தந்தையை பார்த்தார் அவ்வளவுதான்… அடுத்த ஒருமணி நேரத்தில்… அவரின் உயிர் பிரிந்தது…
மூச்சு திணறல்… என்றார்கள்… ஏதும் வேலை செய்யவில்லை என்றார்கள்… இன்னும் என்னனவோ… மருத்துவ மொழிகளில் சொன்னார்கள்…
வீரா அவரின் கையை பிடித்துக் கொண்டு ‘உங்களுக்கு நான் ஒண்ணுமே செயலை தாத்தா’ என குற்ற உணர்ச்சியில் புலம்ப தொடங்கினான் உள்ளுக்குள்..
வெளியே எப்போதும் போல… இருந்தான்.. எல்லா காரியங்களையும் செய்தான். ராகவ்வை.. அருகே இருந்து தாங்கிக் கொண்டான்… 
ஐஸ்.. அவளையும் உருட்டி மிரட்டி தேற்றினான்… ஆனால் உள்ளுக்குள்.. ஏதோ குற்ற உணர்ச்சி போல… அவனின் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.
பைரவிக்குதான் இவனை தேற்றவே நேரம் சரியாக இருந்தது… எங்கோ பேச்சு சென்றாலும்.. பலசமயம் இவரில்தான் முடிந்தது…
இப்படியாக…. நாட்களின் கால்களில் மட்டும்… சக்கரம் கட்டியுள்ளது போல ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது..
அதிலிருந்து குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருந்தது… யார் யாருக்கு ஆறுதல் சொல்லுவது என… தங்களுக்குள் தாங்களே தடுமாறி நின்றனர். ஐஸும், வீராவும்.. ரவியும்… கொஞ்சம் நிலையிழந்தனர் எனலாம்.
இப்போதுதான் சற்று தெளிந்து வருகின்றனர். பைரவி கொஞ்சம் திண்டாடிதான் போனாள். இங்கு சென்னையிலும் பார்த்துக் கொண்டு…. திருவண்ணாமலையும் சென்று கொண்டு… கூடவே வீராவை கவனித்தது என அலைச்சல் அவளிற்கு அதிகமாகியது.
ஏதோ சொல்லுவது போல… கண்மூடி திறப்பதற்குள்… வருடம் முடிந்தது சுந்தரம் தாத்தாவிற்கு. அதற்குதான் இப்போது சொந்தங்கள் எல்லாம் வந்திருக்கிறது.
வீரா காலையிலேயே வந்து விட்டான்…. நாகையிலிருந்து. ஏதோ பூஜை… சம்ப்ரதாயங்கள்… என எல்லாம் நடக்க… வீரா அவரின் படத்தின் முன் அமர்ந்து இருந்தான்.
மெல்ல எல்லா காரியங்களும் முடிந்தது… சொந்தங்கள் எல்லாம் உண்டு… ஒவ்வருவராய் கிளம்ப… வீட்டு மனிதர்கள் மட்டும்தான்.
அன்று போல இன்றும் வீரா மனமெல்லாம் ‘நான் ஒண்ணுமே உங்களுக்கு செய்யவில்லையே’ என்ற எண்ணமே நிரம்பியிருந்தது.
எத்தனை தூரம் பைரவி தேற்றினாலும்… சுந்தரம் தாத்தா, பற்றி பேசினால்… வீராவின் வார்த்தைகள் இதுவாகத்தான் இருந்தது…
எல்லோரும் சொல்லி பார்த்துவிட்டனர்… ஆனால் வீரா புலம்பல் நிற்கவில்லை… ஏனோ அவனால், அந்த ஒரு விஷயத்தில் மட்டும் சமாதானம் ஆக முடியவில்லை.
நேரம் சென்றது… பெரியவர்கள் உண்டு முடித்து…. அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. இன்னும் கோதை, கல்யாணி, ரவி, வீரா இவர்கள் மட்டும்தான் பாக்கி.
எல்லோரும் அழைத்தாகிவிட்டது… வீரா, அந்த இடத்தை விட்டு எழவில்லை.. துக்கபட்டால்… ஆறுதல் சொல்லலாம்… அழுதால், ஆற்றுபடுத்தலாம்… ஆனால், இவனோ… முகத்தில் கலக்கமோ… துக்கமே வெளியே தெரியாமல்… ஏதோ சிந்தனையில் இருப்பவன் போல் அமர்ந்திருந்தான்.. அவரின் போட்டோவை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கல்லென.
பைரவிக்கு அருகில் செல்ல முடியவில்லை… சென்று, என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை… அவன் சிந்தனைதான் எப்போதும் பிரதானம்… எனவே அமைதியாக நின்றாள்.
ஐஸ் வந்தாள்… “மாமா…. என்ன மாமா… இது… வாங்க, வந்து சாப்பிடுங்க” என்றாள் அதட்டலாய்.
‘என்ன சத்தம்’ என்பது போல ஒரு பார்வை பார்த்து மீண்டும் தன் வேலையை செய்தான் வீரா.. இப்போது அவனின் பேச்சு அதிகமாக கேட்பதில்லை எங்கும்.
அவனின் வேலை அப்படியோ என்னமோ… எப்போதும் யோசனையிலேயே இருந்தான். சற்று நிமிர்ந்து அமர்ந்து அவன் ஐஸுவை பார்க்க… ஐஸ் இப்போது “மாமா, அக்கா இன்னும் சாப்பிடல….” என்றாள் சின்ன குரலில்.
எல்லோரும் இருவரையும் பார்த்திருந்தனர்… இப்போதாவது இவன், ஐஸு பேச்சையாவது கேட்பானா எனதான் பார்த்திருந்தனர்.
“என்ன இப்போ… கொஞ்ச நேரம் இருந்தால் என்ன ஆகிடும்… வெயிட் பண்ண முடியாதுன்னா… சாப்பிடட்டும்…. “ என்றான் அமைதியாக.
“யாருக்குதான் வருத்தமில்ல… அதுக்காக இப்படியே இருக்க முடியுமா…” என்றாள் குழந்தைத்தனம் ஏதுமில்லா குரலில்.
“ம்…. முடியாது தான்…. ஏன் நாம நல்லாதானே இருக்கோம் எப்போதும் போல….
ஆனா, எனக்கு அவர் விடையே சொல்ல மாட்டேங்கிறார் ஐஸ்…. ஏதாவது சொல்லட்டும்… நான் வரேன்… ” என்றான் ஆத்மார்த்தமான குரலில்… அவரின் போட்டவை பார்த்தபடியே…
“என்ன விடை சொல்லணும்… அவர் உங்களுக்கு செய்ததை… நீங்க யாருக்காவது…. செய்திடுங்க… அவர் செய்த நல்லத நீங்க ஒருத்தருக்கு செய்ங்க….” என்றாள் அந்த சிறு பெண்….
“ம்….” என்றான் முதலில் அதை உள்வாங்காமல்….
பைரவி அவனின் தோள் தொட… “அவ என்ன சொல்றா தெரியுதா” என்றாள்.
“ம்….” என்றான் யோசனையாக…
ஐஸ் “மாமா… அவருக்கு ஏதாவது செய்யனும்னு இல்ல… உங்ககிட்ட அவர் அத எதிர்பார்த்தா செய்தார்….” என்றாள்.
இல்லையென தலையாட்டினான் வீரா… 
“அப்போ நீங்க ஏதாவது செய்யனும்ன்னு நினைச்சா… உங்க மாதிரி படிக்கிரவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க… அதே போதும் தாத்தாக்கு…” என்றாள்
வீராக்கு ஏதோ புரிந்தது… அமைதியாக மீண்டும் தாத்தா போட்டோவை பார்த்தான்… ‘ஆம், காசு பணத்தால் செய்வது வேறு…. நாம் ஸ்ரத்தையாய் செய்வது வேறு… ஒரு வேலை இவள் சொல்லுவது போல் செய்தால்… என் மனம் திருப்தி அடையுமோ…’ எண்ணம் செல்ல.. ஒரு தெளிவு வந்தது வீராவினும்…
“தேங்க்ஸ் டா ஐஸ்….” என்றான் எழுந்து கொண்டு… கடவுள் எப்போதும் நேரில் வருவதில்லை சங்கு சக்கரத்துடன்… உண்மைதான்… (தெய்வம் மனுஷ ரூபேணாம்…)
அதுவும் வீராவுக்கு, கடவுள் சுந்தரம் தாத்தா வடிவில் வந்தார் போல… அப்படிதான் அவனின் குடும்பம் நம்பியது. இப்போது ஐஸுவின் வடிவில் வந்தார் போல்…. ரவி நம்பினாள்.
வீரா மனதில் சொல்லிக் கொண்டான் ‘கண்டிப்பாக தடுமாறுபவர்களுக்கு… நான் கை கொடுக்க வேண்டுமென…’ மனதில் சொல்லிக் கொண்டான்.
நேரே உண்ண சென்றனர் இருவரும்… அமைதியாகத்தான் இருந்தது வீடு…
ரவி உண்ண தொடங்க… அந்த பருப்பு வாசத்தில்… ரவிக்கு வயிறு பிரட்டியது… எழுந்து ஓடினாள்…

Advertisement