Advertisement

வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை… சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை…
அவன் வளர வளர புதிதாக ஒரு அமைப்பு வந்தது… அந்த பதின்ம வயதில் வீராவை அந்த முழக்கமும், கொள்கையும்… அவரின் உடல்மொழியும்  மிகவும் ஈர்த்தது… 
பழைய கொள்கையிலிருந்து பனிரெண்டாம் வகுப்பில் சற்று மாறினான்… தீவிரமாக மாறினான்… நம் எல்லோருக்கும் தெரிந்த மேல்நாட்டு பழமொழி ஒன்று ‘இருபது வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி’ என்று கூறுவர்…(இதன் மறுபாதி… வரும் பதிவுகளில்)
அப்படிதான் நடந்தது வீராவின் விஷயத்தில் தன் தலைவரின் கொள்கை பரப்பினான்.. அவர் எங்கு கூட்டம் போட்டாலும் முன் நின்றான்… படிக்கும் காலத்தில் இது தேவையா என அப்பா, தாத்தா.. எது சொன்னாலும் அவர்கள் மேல் பாய்ந்தான்..
பள்ளி நிவாகம் கூப்பிட்டு பெற்றோரை கண்டித்தது… பள்ளியில் தனக்கென குழு அமைத்துக் கொண்டான்… படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சலுகை தருகிறது அரசாங்கம்.. எல்லா மாணவர்களும் சமம்  என்றான்
ஏதேனும் விளையாட்டில் இவன் ஆவேசம் பார்த்து ஆசிரியர் ஏதேனும் சொன்னாலும்… அவரை மிரட்டினான்… பள்ளியில் குழு அமைத்தது… எப்படி மிரட்டலாம் என கையை தூக்கிக் கொண்டு போராடினான்… 
இப்படி சின்ன சின்ன இடங்களில் அந்த சின்ன கை எழுச்சியாய் முன்னே வந்தது… இது இப்போது தேவையா… தங்களுக்கு முக்கியமா என அப்போது தெரியவில்லை… தலைவர் சொன்னால் செய்வோம்.. என இள ரத்தம் வெள்லேனவே பாய்ந்தது…
மீண்டும் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை  கூப்பிட்டு ‘வீரா பள்ளிக்கு வரவேண்டாம், மற்ற மாணவர்களையும் கெடுக்கிறான்’ என்றது… அப்போது அவன் பனிரெண்டாம் வகுப்பு.. வேறு பள்ளியிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்… எனவே வீட்டில் வைத்தே.. தனியாக ஆசிரியர் வைத்து வகுப்பெடுத்து… பள்ளியின் மூலமாக பரிச்சை எழுத வைத்தனர்… 
அப்பாப்பா… பள்ளி முடிக்கவே தண்ணிகாட்டினான் வீரா.. அன்னையின் தீராத வேண்டுதல்.. வைத்தியலிங்கம் எப்போதும் வீட்டிலேயே இருந்தார் அவனுக்கு பாதுக்காப்பாக… இப்படி அப்படி என ஒரு வழியாக பாடரில் பாஸ் செய்தான் வீரா..
வீராவிடம் வைத்தியலிங்கம் “ வீரா… வேறு ஊரில் ஹாஸ்டலில் தங்கி படி ப்பா… 
அண்ணன் பெங்களூர்ல தானே இருக்கான்…
நீ சென்னை போ… இல்ல, பெங்களூர் போ… நான் பார்த்துக்கிறேன்,
நமக்கு ஆளுங்க இருக்காங்கப்பா…. எந்த காலேஜ்ல சீட் வேண்டும் சொல்லுடா” என்றார்…
வீரா சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு வந்தான் “ஏன்…  நான் ஏன் அடுத்த மாநிலத்துக்கு போகணும்… 
என் ஊரில்தான் படிப்பேன்… இங்குதான் இருப்பேன்… இது என் இடம்.. 
விட்டா வெளிநாடு போக சொல்லுவீங்க போல” என எல்லாவற்றிக்கும் தர்க்கம் செய்தான்… அப்போதுதான் கருப்பு சட்டை போட தொடங்கினான்.. உள் ஊரிலேயே ஒரு கல்லூரியில் பொறியியல் படித்தான்… 
ஏதோ படித்தான்.. அப்படிதான் சொல்ல வேண்டும்… எப்போதும் வீட்டில் கருப்பு உடையுடன் வலம் வந்தான்… அதை பார்க்க பார்க்க அவனின் தாத்தாக்கு தன் பேரனையே பிடிக்காமல் போனது.
எப்போதும் எங்கோ சுற்றுவான்… வீடு முழுக்க துளசி செடி வாங்கி வைத்தான்… மொட்ட மாடியில் குருவிகளுக்கு தண்ணீர் வைத்தான்… எந்த ஊரில் வெள்ளம்… நிலநடுக்கம் என்றாலும் கிளம்பிவிடுவான்… 
அன்னை, தந்தை… தாத்தா, பாட்டி  என யார் கண்களுக்கும், கைகளுக்கும் அவன் சிக்குவதேயில்லை இப்போது…
வீடு வருவதே எப்போதாவது என்றானது… எப்போது வருகிறான், போகிறான் தெரியவில்லை யாருக்கும்… அவனை பார்த்து கற்பகம் “சாப்பிட வா.. டா” என சொல்லி திரும்பினால், இவன் நிற்கமாட்டான்… எல்லோரையும் இவன் தள்ளி வைத்தான்.
இப்படியே நாட்கள் நகர… 
கைலாஷ் வந்தான் MBA முடித்து… அழகாக தங்கள் ரேசொர்ட் கவனித்துக் கொண்டான்… அப்பாடா என்றிருந்தது வைத்தியலிங்கத்திற்கு…
தொழிலை விரிவாக்கினான்… தந்தை சொல் மந்திரமானது அவனுக்கு. அவர் சொன்னதை செய்தான்… தங்களின் ரேசொர்ட் அருகில்.. பார்க்… தனியாக வெளிநாட்டவர்க்கு என உணவு விடுதி ஆரம்பித்தான்… அத்தோடு ரியல் எஸ்டேட்… என புதிதாக கொஞ்சம் கால்பதிதான்.
ஆக, கொஞ்சம் அரசியல் உள்ளே வந்தது… நிறைய தொழில் முறை கூட்டங்கள் சென்றது… ஒருகட்டத்தில் இவர்கள், தொழி வளர்த்தது போக.. இப்போது தொழில்தான் அவர்களை வழி நடத்த தொடங்கியது…
ஆம், கைலாஷ்… எல்லாவற்றையும் பெருக்கினான்… ஆரசியல் பலம் வந்தது… நிலம் பார்க்க.. வாங்க, விற்க என vip அறிமுகம் வந்தது.. ஆண்களுக்கு நேரம் சரியாக இருந்தது… வருடங்கள் ஓடியது…
வீராவின் படிப்பு முடிந்தது… இப்போது வீட்டில் எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது… இளையவன் என்ன செய்வானோ ஏது செய்வானோ என… வீராக்கு  வீட்டில் எல்லோரும்தான் எதிரியே… எனவே எல்லோரும் கைலாஷை பார்த்தனர்..
அவனும் இயல்பான அண்ணனாக “வா டா.. வா.. போதும் படிச்சது… வந்து ரேசொர்ட் ஆபிஸ் ல உட்கார்… 
இல்ல நம்ம ‘அருணா’  ப்ரோமொடோர்ஸ் ஆபிஸ்ல உட்கார்… பத்துநாள் வேடிக்கை பாரு… எல்லாம் புரியும் ” என அழைத்து சென்றான் அண்ணன்.
பாவம் கைலாஷுக்கு தெரியவில்லை வீராவின் போக்கு… எல்லாம் நமக்கு என வரும்போது.. கொள்கை எடுபடாது என எண்ணி… தொழிலில் அனுமதித்தான் கைலாஷ்..
வீரா அருணா ப்ரோமொட்டர்ஸ் சென்றான்… இரண்டு நாள்தான்.. தன் அப்பாவிடமும் அண்ணனிடமும் சண்டை… “பாதி மலையை அழிச்சி வைச்சிருக்கீங்க…  எங்கள் சொத்து அது…
அடுத்த தலைமுறைக்கு நாம பாதுகாத்து கொடுக்கணும்…
அங்கிருந்த மரத்தை எல்லாம் வெட்டிட்டீங்க… யார் கொடுத்தா உங்களுக்கு அனுமதி…” என தினம் சண்டை… ஓயாமல் பெட்டிஷன் என வீரா தன் வேலையை காட்டினான்… சின்னதாக தனது அமைப்பை சேர்த்துக் கொண்டு போராடினான்.. தங்களுக்கு எதிராகவே..
அரசியல், பெரிய கேம்பிளிங் உலகம் அது… அதில் விளையாட தெரிந்திருக்க வேண்டும்… இங்கே நேர்மை அர்த்தமற்றது… தந்திரம் அனைத்துமானது.. அது கைலாஷுக்கு கைவரபெற்றது.. எல்லா இடத்திலும் ஆட்கள்.. எங்கும் பணம் என தன் தம்பியின் எல்லா இடர்களையும் சமாளித்தான்…
தன் தம்பியின் கட்சி ஆட்களே இப்போது கைலாஷுக்கு நிலம் வாங்க சாட்சி கையெழுத்து போட்டனர்… வீடே கைலாஷ் பக்கம் நிற்க… பின் என்ன… வீரா வெளியே நின்றான்… 
வீரா, சுத்தமான இரும்பு… அந்த இரும்பை ஆயுதமாக்குவதும்.. பாதுக்காக்கும் பெட்டகம் ஆக்குவதும்… குடும்பமும் சமூகமும்தானே…
இங்கே நல்லது எல்லாம் கதைகளிலும்.. சினிமாவிலும் மட்டும்தான்.. வாழ்க்கையில் நல்லவன் என்பவன் தோற்றவன்… பிழைக்க தெரியாதவன்… வீரா போல…
இப்படியே கொஞ்ச கொஞ்சமா வீரா தன் வீட்டினரையே பகைத்து கொண்டான்… கொஞ்சமாக தோற்றான். ஆனால் இன்னும் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு… 
எப்போதும் போல நான் சரியாக தானே இருக்கிறேன்… என வீம்பு… யார் மேல் கோவம் என புரியாமல் தடுமாறினான் அந்த இருபத்தி நான்கு வயதில். வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை… ஆனால் வேறு போக்கிடமும் இல்லையே..
அடுத்த இரண்டுநாள் அந்த வளமான காளை… உண்ணாமலே இருந்தது வீட்டில். நமது செல்வம்.. இந்த பிடிவாதம்.. வீம்பு என எல்லாம் எப்படி வந்தது என புரியவில்லை அவனுக்கு.. இன்னமும்.. தான் சரி, தன் கொள்கை சரியென முறுக்கிக் கொண்டு நின்றான்.
வீடு போர்களமானது… எல்லோரும் அவனை ஏதோ போல் பார்த்தனர்… இந்த இரண்டு நாட்களுக்குள்… நிராகரிப்பு என்பதன் அர்த்தத்தை உணர்த்தினர்…
ஆம், தனது நண்பர்களுடன் பேசி வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டான்.. அதுவும் அவனுக்கு புடிக்காத வேலையை, பிடிக்காத சூழ்நிலையை  ஏற்றான்.. அயல்நாட்டு கம்பெனியின் வேலைதானே அது… அதான்.
சுதந்திரமான காற்று இப்போது சிறு குழலில் அடைபட்டுக் கொண்டது… அழகான ஸ்வரமாகுமா.. அபஸ்வரமாகுமா இன்னும் தெரியவில்லை.. இப்போதும் போராட்ட களத்தில்தான் நிற்கிறது.. 

Advertisement