Advertisement

எனக்கானவளே நீதானே…
(வசமிழக்கும் வானம் நான்….)
வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்… இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை… அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்…
இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர் வீட்டில் மேல் தளத்தில்தான் ஜாகை இந்த ஆறுமாதமாக வீராக்கு. 
அப்படிதான் வந்த அன்றும், இப்படியேதான் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் ஒரு ஸ்போர்ட்ஸ் பாண்ட்ஸ்சுடன் அதிகாலையில் வேர்க்க விருவிருக்க ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான்… காலையில் மணி ஐந்தை இன்னும் தொடவில்லை….
அந்த நேரத்திற்குத்தான் எப்போதும் வாக்கிங் செல்வார் சுந்தரம்… பைரவியின் தாத்தா. துணை யாருமில்லாமல்… அப்படியே பொறுமையாக நடப்பார்… 
அவரை போல நடக்கும், ஓடும்.. நடுத்தர வயது இளைஞ்சர்கள் அனைவரும் பழக்கம் சுந்தரத்துக்கு. பொதுவாக அதே ஏரியா மக்களாக இருப்பார்கள்தானே, எனவே எல்லோரும் பெரியவரை பார்த்தால்… ஒரு சிரிப்பும்… மோரினிங் விஷுமமாக கடப்பர். அவரும் புன்னகையும்.. பதில் வாழ்த்தும் தருவார்..
இன்றும், அப்படிதான் வீராவை பார்த்தார் சுந்தரம்… இந்த ஏரியாவுக்கு புதிதாக தெரிந்தது.. முதல் சுற்றிலேயே கவனித்தார்… இருந்தாலும் பேசமுடியவில்லை சுந்தரத்தால்… அவன் வேகம் அப்படி… 
இவர் பொறுமையாக நடந்து.. இரண்டு சுற்று முடித்து தன் வீட்டு வாசலுக்கு வர… 
எதிர் வீட்டு வாசலில், கீழே குனிந்தது தன்னை நிலைபடுத்திக் கொண்டிருந்தான் வீரேஷ்வர்… அவனின் அருகில் வந்த சுந்தரம் “குட் மோர்னிங்… தம்பி” என்றார்.
தன்னெதிரே நின்றிருந்தவரை நிமிர்ந்து பார்த்தான்… புன்னகைத்த முகத்துடன் “எந்த ஏரியாப்பா…” என்றார்.. ஒரு ஆவலுடன்..  
மனம் முழுக்க ரணம்… யார் என்ன என்பது புரிந்து செயல்படும் தன்மையை விட்டிருந்தான் அந்த இரண்டு நாட்களாக… எனவே வீரா, வெட்டவா குத்தவா என பார்த்தான் அவரை… 
மனதில் ‘எந்த ஏரியாவா இருந்தா… என்ன இப்போ… ஏன், அடுத்த ஏரியாகாரன் உள்ளே வர கூடாதா… இது என் நாடு’ என படபடவென… மேலே சென்றுவிட்டான்.. எப்போதும் போல..
சுந்தரத்துக்கு அவனின் பார்வை எதை உணர்த்தியதோ “இல்ல ப்பா… இன்னிக்குதான் புதுசா பார்க்கிறேன்… அதான், தெரிஞ்சிக்கலாம்ன்னு… வேற ஒண்ணுமில்ல…ப்பா” என்றார்… பொறுமையாய். 
இன்னும் வாயே திறக்கவில்லை வீரா… இப்போது லேசாக மூச்சு வாங்கியபடியே அவரை ஒரு மாதிரி நம்பாத பார்வை பார்த்திருந்தான்.. அழுத்தமாக. 
வயதும் அனுபவமும் என்றும் தோற்காது போல, மீண்டும் தானே பேசினார் “இதான் என் வீடு” என தன் எதிர் வீட்டை காட்டினார் “நீ இந்த ஏரியாவா இருந்தா… ஏதாவது உதவி வேணும்னா… கேளுப்பா… பால்… eb ஆபீஸ்… இப்படி ஏதாவது வேணும்னா கேளுப்பா… வரட்டா…” என்றார்.
இப்போதுதான் அசைந்தான்… அந்த மீசை வைத்த 2.0. அவர் திரும்பும் முன் அவரிடம் “அது… தண்டபாணி அங்கிள் வீட்டுக்கு குடி வந்திருக்கேன்.. புதிதாக…” என்றான் எந்த மரியாதை பாவமும் இல்லாது… தன் முறுக்கு மீசையை முருக்கியபடியே..
சுந்தரம் “அஹா… ஹா… சொல்லியிருந்தான்… போனதரம் போன் செய்யும் போது சொல்லியிருந்தான்… நம்மூர் பையன் ஒருத்தன் வரான் ன்னு சொல்லியிருந்தான், நீதானா ப்பா அது… திருவண்ணாமலை… சரியா… 
ஏதோ சொந்தம்ன்னு சொன்னான்… தண்டு… 
வாப்பா… ஒருவாய் காபி குடிச்சிட்டு போ… வா… 
பாரு டையடா இருக்க, வா” என கைபிடித்து இழுத்து செல்லாத குறையாக மறுக்க முடியாத குரலில் பேசி அவனை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் சுந்தரம்…
அவனின் உலகம் பெரியது… எங்கும் அறிமுகம் ஆவான்… எதிலும் படர்ந்து பற்றுவான்… ஆனால் அறிமுகம் இல்லா.. இந்த பழைய மனிதர் அவனை ஏதோ செய்தார்.
அதிகமாக உரிமை காட்டுகிறாரோ… அவனுக்கும் அது வரும், ஆனால் தன் நண்பர், தன் வட்டம் வரைதான்… இந்த பழமையான சித்தாந்தம் அவனுக்குதான் வேண்டாமே…
காரணம் அவர்கள் வீட்டில் அவன் எப்போதும் எதிர் துருவம்தான்… அதுவும் அவனின்  தாத்தா, அவனிடம் நின்று கூட பேசமாட்டார்… 
அவனின் தாத்தாவிற்கு நேர் எதிராக இருந்தார் இந்த சுந்தரம்… ‘யாரென்றே தெரியாத என்னை எப்படி இப்படி அழைத்து செல்கிறார்’ என தோன்றியது.. வீராக்கு. பின்னாடியே சென்றான்… 
சுந்தரம் “ம்மா… கோதை… இங்க பாரு, நம்ம தண்டு, வீட்டுக்கு புதுசா ஒருத்தர் வரார்ன்னு சொல்லிருந்தான் ல்ல தண்டு…
அந்த பையன் வந்திருக்கார் பாரு…. வா ம்மா… காபியோட வா” என்றார் தன் மருகளிடம்… உள்ளே சென்றபடியே.
கோதையும் வந்து எட்டி பார்த்தவர்… கையில் இரண்டு காபியுடன் ஹாலுக்கு சென்றார்…
சென்னையில் மையத்தில் உள்ள அமைதியான குடியிருப்பு பகுதியது…  எண்பதுகளின் சாயலில் பிரம்மாண்டமான வீடுகள் வரிசையாக நிற்க.. அதில் சுந்தரத்தின் வீடும் பிரம்மாண்டமாய் நின்றது…
அழகான.. பழைய போர்ட்டிகோ… நல்ல வெளிச்சமாக இருக்க… அதன் பின் வரவேற்பரை… பெரிதாக இருந்தது… தேக்கு மர பழைய ஷோபா… நடுவில் கண்ணாடி டி-பாய்… சுற்றிலும் ஜன்னல்.. அதில் ஆடிய நாவல்பழநிற… சாட்டின் கர்ட்டன்ஸ்… அந்த டிபாய் மேல் இருந்த இரண்டு மொழி தினசரிகள், அதெல்லாம் விட அந்த ஹாலில் எங்கும் தெய்வத்தின் படங்கள் இல்லை… எனவே வீராவை அந்த வீடு முற்றிலும் ஈர்த்தது….
சுந்தரம் “உட்காருப்பா….” என்றார்.
“ம்..” என ஒன்றும் சொல்லாமல் அமர்ந்தான் வீரா…
“சொல்லுப்பா… எப்படி சொந்தம்” என்றார் எடுத்ததுடன்…
வீராவுக்கு மீண்டும் காண்டானது… அவனின் தாத்தா நினைவு வந்தது.. எதுவுமே கேட்காதது போல… அப்படியே பேப்பரை கையில் எடுத்தபடி அமர்ந்திருந்தான்… வெள்ளைமாளிகை அதிபராய்.. ஒரு தோரணையில் அமர்ந்திருந்தான்… அது இயல்பாய் வந்தது.. மேனக்கெடவில்லை..
கோதை காபியுடன் வர “இந்த ப்பா” என்றார்..
“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றான் சிரித்த முகமாக கோதையை பார்த்து…
கோதை “பேர் என்ன ப்பா” என்றார்..
“வீரா… ” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான்… பின் பேச்சு மெல்ல சென்றது.. இங்கு இப்போதுதான் பணியில் சேர்ந்திருப்பதாக சொன்னான்…
சுந்தரத்தின் ஊர்தான்… திருவண்ணாமலை… தண்டபாணியும் சுந்தரமும் ஒரே ஊர் ஆட்கள்… எனவே, இப்போது வீராவும் தன் ஊர் எனவும், ஒரே ஊர் பாசம்.. நீண்ட நாட்கள் சென்று அங்கிருந்து ஒரு சிறுபிள்ளை இங்கு வரவும் இயல்பான பாசம் வர… சுந்தரம் எந்த இடம், எங்கு, யார், என விசாரிக்க..
வீரா பல்லைகடித்துக் கொண்டே எல்லா விவரமும் சொன்னான்… என்ன செய்வது பெரியவர் கேட்க்கிறார் சொல்லாமல் இருக்க முடியவில்லையே…
வீராவின் தாத்தா… அருணாசலம்… அங்கு  தங்கும் விடுதி வைத்திருந்தார்… அவர்களின் தொழில் அது. இப்போது வீராவின் தந்தை அதை பெரிதாக்கி மலை சுற்றும் பாதையில் பெரிய ரேசொர்ட்… வெளிநாட்டவர் வந்து தங்கும் வகையில்… பெரிதாக அனைத்து வசதிகளுடன் நடத்தி வருகிறார்…
வீராவின் பெற்றோர்  வைத்தியலிங்கம் கற்பகம். இவர்களுக்கு இரு மகன் ஒரு மகள்… மூத்தவள் மகள்… பெயர் அர்ச்சனா, அடுத்து மகன் கைலாஷ்… அடுத்துதான் வீரேஷ்வர்.. 
அர்ச்சனா திருமணமாகி… ஆரணியில் இருக்க… பெரியவன் கைலாஷ்க்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது… பெண் ஒரே ஊர்… கைலாஷ் அவர்களின் ரேசொர்ட் பார்த்துக் கொள்கிறான்.
அமைதியான குடும்பம்… நிறைய இறை பக்தி கொண்டது… அவனின் தாத்தா பாட்டி.. இன்னமும் காலையில் அண்ணாமலையாரை தரிசித்து விட்டுதான் வருவர். இப்போதான் சற்று முடிவதில்லை.. ஆனாலும் மெதுவாக சென்று வருவர்…
வீராவின் தந்தையும் அப்படியே…  வருடம் முழுவதும் உற்சவம் அங்கு எனவே எல்லா நாளும் கோவில் செல்ல தவறாது அவர்களின் குடும்பம்.
ஆனால்.. இளையமகன்… வீரேஷ்வர் கடவுள், திருநீரு… கோவில் இந்த பெயரை கேட்டாலே பாய்ந்தான் சொல்பவர்கள் மேல். அப்படியொரு வெறுப்பு… வீரா பத்தாவது படிக்கும் காலத்திலிருந்து அப்படி இப்படி என கொஞ்சம் மாற தொடங்கினான்..
பொற்றோர் ஒரு விஷயத்தை அழுத்தி அழுத்தி சொல்ல.. அந்த வயதில் அதனை எதிர்க்க தோன்றியது போல வீராவுக்கு.. கற்பகம் “வாடா கோவில் போயிட்டு வரலாம்… அக்காவும் கல்யாணம் ஆகி போயிட்டா… துணைக்கு வாடா…” என்றால் கூட முறைத்தான்…
அடுத்த நாள் அவனின் பாட்டி “கோவிலுக்கு… இத எடுத்து வந்து கொடுக்க சொன்னாங்க… வெயிட்டா இருக்குள்ள… பாட்டியாலா தூக்க முடியலை டா” என கற்பகம் சொல்ல, முறைத்தான் 
“இத ரோட்டில் கூடாரம் போட்டு… ‘ஊசி, பாசி’ விக்கிரவங்களுக்கு கொடுத்தா… நீதான் சாமி அவங்களுக்கு…” என சொல்லி அபிஷேகத்துக்கு வைத்திருந்த எல்லா பாலை… ரோட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்தான்..
பதின்ம வயது.. அரும்பு மீசை… நெடிய உருவம்… கண்ணில் கனல்.. மனதில் உறுதி என இளம் வயது கோட்சே அவன்.. எல்லாம் எல்லோருக்கும் என்பான்.
அவர்களின் தாத்தா.. “டேய் நாமும் செய்கிறோம் டா… ஒருபகுதி… யாருமில்லாதவர்களுக்கு செய்கிறோம் டா… 
எல்லோராலையும் ஒரே நாளில் மாற்றிட முடியாது ப்பா” என பொறுமையாகவே சொன்னார் அன்று..
ஆனாலும் தன் பேரனை பற்றி பெருமையாகவே பேசிக் கொண்டனர் தாத்தா பாட்டி இருவரும்… ‘பெரிய பேரனுக்கு அவ்வளவு சூதானும் போராது, ஆனா.. சின்னவன் நல்லவன்… மனசு முழுக்க நல்லது மட்டும்தான் ‘ என பெருமையாகவே பேசினர்..
 
 

Advertisement