Advertisement

எனக்கானவளே நீதானே…
19 
(வசமிழக்கும் வானம் நான்….)
காலையில் ஆறுமணிக்கே, கோதை… போனில் எழுப்பிவிட்டார் ரவியை… அவளும் எழுந்து குளித்து வீராவை கிளம்ப சொல்லி வந்தாள்… நல்ல நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது லிங்கத்தின் எண்ணம்… எனவே அதற்கு தக்க வேலைகள் நடந்தது…
அரைமணி நேரம் சென்று வீரா, கீழே வந்தான். 
கோதை “ரவி…” என அழைத்து.. அவள் கையில் காபியை தர… ஹாலில் அமர்ந்து, தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம் கொடுத்தாள்.
எதுவுமே புதிதாக இல்லை இருவருக்கும்.. எல்லாம் இயல்பாக இருந்தது… நேற்றுதான் திருமணம் ஆனது என சொன்னால் நம்புவது சற்று சிரமமே… 
அப்படி இருந்தனர் இருவரும்… அவர்களின் உரிமையை சொல்லும்… சின்ன, சின்ன பார்வைகள் கூட இல்லை… மௌன பாஷைகள் கூட இல்லை… தெளிந்த வானமாக… இருவரும் இருந்தனர்… நேற்றைய இரவின் கூடலுக்கு பிறகு. 
எனவே, அவனும் கண்டுகொள்ளாமல் காபியை கையில் வாங்கியபடியே திரும்பவும் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
அர்ச்சனா குடும்பமும்… கைலாஷ்.. அஞ்சலி.. எல்லோரும் கிளம்பியிருந்தனர்… முன்பே சென்று தேவையான ஏற்பாடுகள் செய்ய… 
இப்போது பெரியவர்கள் மட்டும் தாத்தா, பாட்டி… லிங்கம், கல்யாணி…. வீரா ரவி என இவர்கள் மட்டும் இப்போது கிளம்புவதாக ஏற்பாடு…
இப்போதுதான் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி பைரவியின் வீட்டின் உள்ளே வந்தார் லிங்கம். ராகவ், தாத்தா…. எல்லோரும், வாங்க என வரவேற்க… அனைத்தையும் ஏற்று அமர்ந்தார்… 
வீராவை பார்த்து “கிளம்புப்பா… மணியாச்சு “ என்றார். அவன் இன்னும் ஷாட்ஸ், ட்-ஷர்ட்டில் அமர்ந்திருப்பதை பார்த்து.
“எங்கப்பா…” என்றான்…
லிங்கத்தில்ற்கு தர்மசங்கடம்…. “என்னடா… ஊருக்குதான்… என்னமோ ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேட்க வேண்டியது” என்றார் சற்று கோவமாக…
வீரா “ப்பா… அதான் இங்கேயே எல்லா சம்பிரதாயமும் முடிஞ்சிதே… இன்னும் என்ன” என்றான் சற்று சலித்தபடியே. நேற்றே, எதிர் வீட்டிற்கு… அதான், தன் வீட்டிற்கு சென்று பாலும் பழமும் உண்டு வந்தாயிற்றே… இன்னும் என்ன என அவன் கேட்க… 
கொதித்தார் லிங்கம் “என்ன டா… இப்படி சொல்ற…. தெரியாதா… நம்ம வீட்டுக்கு போகணும்ன்னு… ஏன், அங்க வரதில் உனக்கு என்ன பிரச்சனை” என்றார். எல்லோரின் எதிரிலும் இப்போதுதான் திருமணமான மகனை கடிய சங்கடமாக இருந்ததால்… சற்று சின்ன குரலில் கேட்டார்.
எல்லோரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து கிளம்பினர்… போனை கையில் பிடித்தபடியே.
“எந்த பிரச்சனையும் இல்ல…. ஆனா, நான் இப்போ அங்க வர முடியாது… எனக்கு ஆபிஸ் போகணும்… இப்போ கிளம்பினா மதியமாகும் நான் போக” என சொல்ல… தகப்பன் முறைத்தார் அவனை… 
அவரின் பார்வை பார்த்து “அங்க, அப்படியே விட்டு வந்திட்டேன்…
மனசெல்லாம் அங்கேயே இருக்கு…..
வேற யார் வராங்கன்னு பார்க்கணும்… அத்தோட எனக்கு இன்னிக்கு முக்கிய மீட்டிங் இருக்கு…. ஈவ்னிங்…. 
அதான், எல்லா போர்மாலிட்டீஸ்ம் இங்கேயே முடிஞ்சதுல்ல…. அப்புறம் என்ன… 
நான் டூ டேஸ்ல வரேன்…. ஒன் வீக் லீவ்ல வரேன்… ப்பா….” என்றவன் எழுந்து கொண்டான்.. அவ்வளோதான் பேச்சு முடிந்தது என்பதாக…
எப்போதும் போல லிங்கத்திற்கு.. கோவமும் சலிப்பும் வந்தது…. ‘இப்போது சண்டையா போட முடியும்… இல்லை.. அவனென்ன… குழந்தையா விளக்கம் சொல்லி புரியவைக்க…
அப்போதே புரிந்து கொள்ள மாட்டான்… இப்போது நான் சொல்லி நடந்து  விடுவானா… என ஒரு எண்ணம்… சலிப்பு… என்னமோ செய்ங்க என்ற தோரணையில் அவனையே பார்த்திருந்தார்…’ ஏதும் பேசாமல்.
எழுந்தவன் “ரவி.. மேல வரியா” என்றபடி காபி டம்பளரை… டைனிங் டேபிள்லில் வைத்து விட்டு… மேலே சென்றான். யாரையும் பார்க்காமல்…
வீரா, சென்று மேலே… காத்திருந்தான்… ரவி வரவில்லை….
பின்…. குளித்து கிளம்பி, நிற்கிறான்… ஆனால், இன்னமும் ரவி மேலே வரவில்லை.
போனில் அழைத்தான்…. அதுவும் கதறிக் கொண்டிருந்தது, இவன் பெயர் சொல்லி…. இவள் கிட்செனில் வேளையில் இருந்தாள்… அங்கேதான் கல்யாணியும் நின்றிருந்தார்…
எனவே, என்ன பேசுவது என தெரியவில்லை. கத்தி… கத்தி… சண்டை போட தோன்றியது ரவிக்கு. ஆனால், அதெல்லாம் அவன் காதில் விழாது என ரவிக்கு தெரியாதா.. எனவே, அமைதியாக இருந்தாள்.
ஒன்று…… இரண்டு…… பத்து தரம், கதறி ஓய்ந்தது…. அவளின் போன்.
கல்யாணி எதுவோ எடுக்க அந்த பக்கம் செல்ல…. 
கோதை “போனை எடுத்து பேசு ரவி, இல்ல மேலே போ…. அதான் மாப்பிளை கூப்பிட்றாருள்ள….” என்றார் சற்று கண்டிப்பாக.
ரவி திரும்பி முறைத்தாள்…
கோதை “என்ன முறைப்பு…. “ என்றார்.
“கல்யாணம் ஆனா… எனக்கு கோவம் கூட வர கூடாதா… எனக்குன்னு ஆசை இருக்க கூடாதா” என்றாள்.
கோதைக்கு பெண்ணின் எண்ணம் புரியாதா என்ன, லேசாக சிரித்தார்… “நீங்க ரெண்டுபேரும் உங்ககள பத்தி, முதலில் பேசுங்க… 
ஒருத்தரை, ஒருத்தர் யூகம் செய்யாதீங்க….
கல்யாணத்துக்கே அவர் வரல… அவருக்கு எதிர்பாராம வேலை வந்திடுச்சி….
இப்போதும் இங்க ஒட்டாமதானே இருக்கார்… போ, பேசு…
கோவம் சரியான நேரத்தில் வரணும்… அப்போதான் நம்மை அடுத்தவருக்கு புரிய வைக்கும்…” என்றார்.. நாலுவரியில்.
ஆனாலும் பைரவிக்கு கோவமே வந்தது… ஒன்றும் சொல்லாமல் நின்றாள் போன் கதறி கதறி ஓய்ந்தது போனது…
மேலே, மீண்டும் வீராவுக்கு சங்கடம்தான்… அவளின் கோவம் புரிகிறதுதான். ஆனால், அவனின் மனசாட்சி… அவளுக்கு இறங்குவதை விட… அங்கு சென்று பார் என சொல்ல… கலங்கினான் வீரா… எல்லோரையும் கலங்க வைத்தான்.
கிளம்பிவிட்டான்…. கீழே வந்தான்… ராகவ் ஊருக்கு செல்ல வேண்டிய லக்கேஜ்சை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதாவது பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் வரிசையெல்லாம் எடுத்து முன்பக்கம் வைத்திருந்தனர்… அதனை பார்த்துக் கொண்டிருந்தார்….
அவரை பார்த்தவுடன், அங்கு வந்தான் வீரா. ராகவ்விடம் பொறுமையாக சொன்னான் “சாரி மாமா…. நான் அங்க, அப்படியே விட்டுட்டு வந்திட்டேன்….
கொஞ்சம் என்னான்னு பார்த்துட்டு ஒன் ஆர்… டூ டேஸ்ல வந்திடுவேன்….” என்றான் பவ்யமாக…
ராகவ், தன் மகளை பார்க்க…. அங்கிருந்தே…
மீண்டும் “நான் போகலைன்னா… எதுவும் நடக்காதுன்னு சொல்லல…. என்னோட திருப்திக்காக போறேன்…” என்றான் தன் மனைவியை பார்த்தபடியே…
ராகவ் “எங்களுக்கு உங்களை தெரியும் வீரா…  ஆனா, இப்போ போகனுமா…” என்றார்… அவனை பார்த்து… ஆனால், வீராவின் பார்வை… தன் மனையாளிடமே இருந்தது…
பதில் மட்டும் வந்தது… “அவளுக்கு, என்னை தெரியும் அங்கிள்… நான் பார்த்துக்கிறேன்… நீங்க கவலபடாதீங்க….” என்றவன்.. அவளிடம் சென்றான்.
சத்தமாக ராகவ் “ப்ளீஸ்…. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எங்களை கவலப்பட வைக்காமா இருந்தா போதும்” என்றார்… சின்ன ஏமாற்றத்துடன்… பெண்ணின் தகப்பனாக சொல்லியேவிட்டார்.
வீரா, அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தன் பெற்றோருக்கு பரிமாறிக் கொண்டிருந்தவளின் அருகில் சென்றான்… “நான் கிளம்பறேன்… டூ டேஸ்ல வந்திடுவேன்… உனக்கு இங்க ஏதும் ப்ரோக்ராம் இருக்கா…” என்றான் தன்மையாக, வேண்டுதலாக… அமைதியான குரலில், எங்கே என்னை எதிர்த்து பேசிவிடுவாளோ… என்ற பார்வை பார்த்து.. உள்ளே நடுங்கிக் கொண்டே பேச…
அவனின் குரலும்… பேதமும்… புரிய, பைரவி எதுமே நடக்காது போல “வர சண்டே ஒரு ப்ரோக்ராம் இருக்கு… நான் இப்போ இவங்க கூட திருவண்ணாமலை போறேன்…” என்றாள்.. கோவம்தான், ஆனா நீங்க உங்க வேலையை பாருங்க என்ற த்வனியில்…
போதுமே… இது போதுமே அவனுக்கு… அவள், பேசியவுடன் அமர்ந்து கொண்டான் உணவு உண்ண… தன் கணவனுக்கு தட்டு வைத்து பரிமாற தொடங்கினாள்… ரவி.
அப்படியே வீராவும் “சென்னையிலா… இல்ல வெளியூரா எங்க ப்ரோக்ராம்” என கேட்டான்..
ரவி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்…
பார்த்திருந்த பெற்றோருக்கு… என்ன சொல்லுவது என தெரியவில்லை… நாம்தான் புருஷன் பொண்டாட்டி நடுவில் வந்து விட்டோமோ…. அவங்க தெளிவாதான் இருக்காங்க என தோன்றியது.
கோதை “நீயும் உட்கார் ரவி… ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க…” என்றார்..
ரவி தன் அன்னையை முறைத்தாள்…
அதன்பின் கோதை ஏதும் சொல்லவில்லை… 
வீரா “நான் அங்க, திருவண்ணாமலை வரேன் ரவி… அப்புறம் இங்க வரலாம்… உன்னோட ப்ரோக்ராம் முடிச்சிட்டு… சின்ன ட்ரிப் போலாம்… 
அந்த வீக் உனக்கு ப்ரீயா சொல்லு… நான் ப்ரீ பண்ணிக்கிறேன்…” என்றான் தன்மையாக… பெரியவர்கள் எல்லோரும் சத்தமில்லாமல் நகர்ந்தனர்..
ரவி “எனக்கு இப்போ எதுவும் தோனல… ப்ளீஸ், அப்புறம் பேசலாம்” என்றாள் ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.
வீரா “ஹேய்…. சாரி டா… உன்கூட என்னால நிம்மதியா இருக்க முடியல ரவிம்மா… புரிஞ்சிக்க மாட்டியா…” என்ற படி அவளின் லினென் புடவை தலைப்பை இழுத்தான்….
“ப்ளீஸ் வீரா… கிளம்புங்க… ரகளை செய்யாதீங்க… விடுங்க” என்றாள் கரகரத்த குரலில்…
“ஓகே……. ஓகே…. போன் செய்வேன் எடுக்கணும்” என்றபடி.. எழுந்து கொண்டான்.
நேரே தன் தந்தையிடம் வந்தான்… அவரும் ராகவ்வும்… சாமான்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்… 
அருகில் வந்தவன் “எதுக்கு மாமா இதெல்லாம்… செலவு” என்றான்.
ராகவ் சிரித்தபடியே “இதெல்லாம் முறை மாப்பிள்ளை…. எங்களுக்கு அமைஞ்ச மாப்பிளை, சம்பந்தி வேண்ணா… அமைதியானவங்களா இருக்கலாம்…
அதுக்காக… முறைகளை விட முடியுமா…. பெரியவங்க விஷயம் மாப்பிள்ளை… இது” என்றார் பொறுப்பாய்..
இப்போது இந்த லாரி, வீராவை பின் தொடர்ந்து நாகைக்கு செல்கிறது சாமான்களுடன்.
ஒன்றும் சொல்ல முடியாதவனாக நின்றான்… தன் தந்தையிடம் “கொஞ்சம் வாங்க ப்பா” என தனியே அழைத்து சென்றான்.
நேற்றைய செலவுகளை கேட்டு… தன்னுடைய கார்டை கொடுத்தான்… ”இதுல கொஞ்சம் பணமிருக்கு ப்பா…. கல்யாண செலவுக்கு நான் எதுவுமே கொடுக்கலையே…” என்றான் பொறுப்பாய், சங்கடமாய்… இதை இவரிடம் கேட்கலாமா வேண்டாமா என தயங்கி தயங்கி மெல்லிய குரலில் கேட்டான்.
லிங்கத்திற்கு கோவத்திற்கு பதில் வாஞ்சையே வந்தது, அவனின் தயக்கத்தில்… “டேய்…. உங்க மாமனார் பாதி செலவு ஏத்துகிட்டார் டா….
அத்தோட இதுக்கு நீ எதுவும் தர வேண்டாம்…
இந்த மாதிரி ரெண்டு பங்கு கூட நாம செய்யலாம்…
கார்ட முதல்ல உள்ள வை….
இப்போதானே சம்பாதிக்கிற… அதான், எடுத்து கணக்கா கொடுக்கற… 
குடும்ப செலவு செய்து பார்… எப்படி அப்பன் கிட்ட கணக்கா பணம் கொடுக்கிறேன்னு இன்னும் ரெண்டே வருஷத்தில் தெரியும், கணக்காம்…. கணக்கு…
போடா, அந்த புள்ளைக்கு ஏதாவது கைல, காதுல போட்டுக்க வாங்கி கொடு… காலத்துக்கும் சொல்லிக்கிட்டு இருக்கும்…
எங்கிட்ட கொடுக்க வந்துட்ட… போடா…” என்றார் முதுகில் தட்டி…. இவர்களை பேசுவது அங்கு ராகவ்வின் காதில் விழுந்ததுதான்..
வீரா “ப்பா… “ என்க….
“டேய்… எல்லாம்… எல்லோரும்… உன் விருப்படிதான் நடக்குது, நடக்கறாங்க…. இதில் என்னை அசிங்கபடுத்தாத…. போயிடு” என்றார் சற்று காட்டமாக.
இந்த கண்டிபில்தான் வீரா… சிலசமயம் வீட்டிற்கு வந்ததில்லை அந்த நாட்களில்… எனவே அது நினைவு வர லிங்கம் “போ ப்பா…. போயி, மறுமகள பாரு” என்றவர், திரும்பி ராகவ்விடம் சென்று நின்று கொண்டார்.
அடுத்த அரைமணி நேரத்தில்.. வீரா, நாகை செல்ல… ரவியின் குடும்பமும், வீராவின் குடும்பமும் அங்கு திருவண்ணாமலை சென்றது… 
பெரியவர்கள் பேச இடமே தரவில்லை இருவரும்… மேலும் வீராவை பற்றி என்ன பேசிவிட முடியும்… ஆதியிலிருந்தே சொல்லுவதை கேட்பவனில்லையே அவன்… எனவே, இதிலும் அதே நடந்தது.
தானே காரெடுத்து சென்றான் வீரா… எனவே நேரமே சென்றுவிட்டான்… அதன்பின் வேளையில் மூழ்கிவிட்டான்… ஆபிசே சற்று குறுகுறுவென பார்த்ததுதான்…
இவன் நிமிர்ந்தால்தானே அதெல்லாம் தெரியும்… எனவே பெரிய மாறுதல் இல்லை வீராவிடம்.
பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு, புதிய அலுவலர் நாளை வரவுள்ளார்… இவன் அங்கு ஒருதரம் சென்றுவிட்டு வந்தான்… 
அதன் பின் தன் வேலைகளை பார்த்தே… அந்த நான்கு நாட்கள், சென்றது வீராக்கு.
அங்கு பைரவியை விட்டு, மறுநாள் ராகவ், கோதை எல்லோரும் கிளம்பினர்.
பைரவி, அங்கே சற்று தயங்கினாலும்… கல்யாணியுடன் ஒட்டிக் கொண்டாள். கைலாஷ் அவளின் பேச்சு துணைக்கு… கொஞ்சம் பழக்கட்டும் என அஞ்சலியை விட்டு அலுவலகம் சென்றான்.
ஆக, பெண்கள் எல்லோரும் சேர்ந்து பகல் பொழுதை பேசியபடியே கழித்தனர்.. சமையல், பெரிய வேலையாக இல்லை… எல்லாவற்றிக்கும் ஆட்கள் இருக்க… ஏத்தி, இறக்குவது மட்டும்தான் வீட்டு தலைவிகள் வேலை… எனவே பேசியபடியே நேரமும் சென்றது.
அஞ்சலி, நன்றாகவே பேசினாள்… “என்ன ரவி, பட்டிமன்றத்தில் அவ்வளோ பேசுறீங்க… இங்க இவ்வளோ அமைதியா இருக்கீங்க” என கேட்டு அவ்வபோது வம்பிழுக்கவும் தொடங்கினாள்…
வீராவின் சிறுவயது பராக்கிரமங்களை… கல்யாணி அடிக்கடி சொன்னார்… “எங்கனாலும் ஒட்டவே மாட்டான் ம்மா… சட்ட திட்டம் பேசிக்கிட்டு தனியவே நிற்பான்….
அவன் சொல்றதெல்லாம் சரின்னாலும்…. நடப்புக்கு ஒத்து வராதே… அதான் நாங்க அவன கண்டிச்சு… தனியா எக்ஸாம் எழுதவைச்சி…” என ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தார்.
லிங்கம் கூட “பிள்ளையை பயமுறுத்தாத… இப்பவே அவ… பாதி பயந்திருக்கா” என சொல்லி சிரிப்பார்…
ரவியும் சலிக்காமல் தன் பங்குக்கு “உங்களுக்கு தெரியாதே மாமா… அத்தையை விட எனக்கு அவரை நன்றாக தெரியும்… அதுதான் அவர் என்னை இப்படி படுத்தறார்…” என சொல்லிவளின் கண்கள் கலங்கியது.. குரல் கரகரத்தது…
என்ன சொல்லமுடியும்… எல்லோரும் அமைதியாக…
பாட்டி ஆறுதலாக அவளின் தலை கோதி “நல்லவன் டா… உன் புருஷன்… அதான் நம்ம கைக்குள்ள அடங்க மாட்டேங்கிறான்…
அவன அடக்கவும் முடியாது… 
ஆனா, வெளியே போய் கேட்டுபாரு… அவன பத்தி,
தங்கம் டா… அவன்.
கை சுத்தம்… பத்து பைசா வீண் செய்ய மாட்டான்… சங்கடபடாத ம்மா….
அந்த நல்லவன உன்னல மட்டும்தான் பாதுகாக்க முடியும்… அதான் கடவுள் எங்களுக்கு ஒரு தங்கமான மறுமகள கொடுத்திருக்கார்..” என கன்னம் வழித்து முத்தமிட்டார்.
“பாத்தீங்களா… உங்க பேரன… விட்டே தர மாட்டிங்கிறீங்க…” என்றாள், குற்றம் சாட்டும் குரலில்.. செல்லமாக. எல்லோராலும் சிரிக்க மட்டுமே முடிந்தது..
இரவு, பைரவியுடன்… கல்யாணி, வீராவின் அறையில் துணைக்கு படுத்துக் கொண்டார்… ரவி, எவ்வளவு சொல்லியும் கேட்டகவில்லை… “என் பையன் வர வரைக்கும் என்னை நீ பொறுத்துக்கோ” என சொல்லிவிட்டார்…
ரவி “த்த………” என்றாள்.
உடனே கல்யாணி, புலம்ப தொடங்கிவிட்டார். ஒருபாடு…. அவனின் செயல் சொல்லி புலம்புபவர் கடைசியில் “என்ன செய்ய… எனக்கு மனசு கேட்கல ரவி… அதான்…” என்பார் தன்மையாக… அதன்பின் ஏதும் சொல்லவில்லை ரவி.
ஒருவழியாக பத்துநாட்கள் விடுப்பு எடுத்து கிளம்பினான் வீரா…
நேரே காரெடுத்து திருவண்ணாமலை வந்தான்… இரவுதான் வந்தான். போனில் அழைத்து சொல்லியிருந்தான்… ரவியிடம். 
கல்யாணிக்கும், இது தெரியுமாதலால்… இன்றுதான் தங்களறையில் சென்று படுத்துக் கொண்டார் நிம்மதியாக.

Advertisement