Advertisement

அந்த அரசியல் வட்டத்தில் எல்லோருக்கும் வீராவை தெரிந்திருந்தது… ‘லிங்கம் வீட்டில் இப்போ ஒரு கலெக்டரும் இருக்காரில்ல… இனி நாம அவ்வளவு தேவைபடமாட்டோம்’ என சில பல அரசியல் பேச்சுகள் காதில் விழ… ஏற்கனவே சங்கடத்தில் இருப்பவன் இப்போது… உக்ரமாக தொடங்கினான்.
பைரவி, சற்று தன் மாமனாரை அழைத்து…. தன் கணவனின் அருகே நிற்க வைத்தாள்.. கூடவே கைலாஷும் நின்றதால் சற்று அமைதியாக இருந்தான் வீரா…
வீராவின் அலுவலகத்திலிருந்தும் வந்திருந்தனர்… தாமோதரன் மற்றும் ராகவ் அழைத்திருந்த… அவர்களின் உதவியாளர்கள் என அனைவரும் வந்திருந்தனர்… 
வீராக்கு வியப்பே… சற்று திரும்பி தன் மனைவியிடம் சொல்ல…. நினைக்க…
அதற்கு முன் அவர்களே… தாமோதரனே… எல்லோருக்கும் பைரவியை, அறிமுகம் செய்து வைத்தார்… வீராவுக்கு வியப்பே… 
அவனும் வியந்து பார்த்து நிற்க… ‘போன பத்து நாட்களுக்கு முன்னாடி… நாங்க உங்ககிட்ட பேசினத விட இவர்கிட்டதான் உங்களை பற்றி தெரிஞ்சிகிட்டோம்’ என ரவி விளக்க… தாமோதரனை உண்மையாக ஒருமுறை அனைத்து… விலக்கி ‘தேங்க்ஸ் சார்’ என்றான் உணமையாக வீரா.
அவரும் “சார்… விடுங்க சார்.. அதுவும் என் டுயூடி “ என்றார் சிரித்தபடியே… அந்த வரவேற்பில் வீரா, சிரித்து… பேசியது… இந்த குரூப்பிடம் மட்டுமாகதான் இருக்கும்… அப்படியொரு சந்தோஷத்தில் இருந்தான்… அவர்களை பார்த்து…
கிட்ட தட்ட சின்ன வரவேற்பு என தொடங்கிய நிகழ்வு… ஒரு இரண்டாயிரம்  நபர்களை தொட்டது… பார்த்து பார்த்து லிங்கம் சிறப்பாக செய்தார்.. சொல்ல போனால் அசத்திவிட்டார் வரவேற்பை…
யாரும் எதிர்பார்க்கவில்லை இதை…. வீரா சூழ்நிலை கைதியாய் நின்றான்.
எல்லாம் நிறைவடைய மணி பதினொன்று… மெல்ல லிங்கம் “வீரா போப்பா… போய் சாப்பிட்டு கிளம்புங்க… நாங்க, பார்த்து பொறுமையா வரோம்… நீங்க முன்னாடி போங்க” என சொல்லி… மணமக்களையும், பெண்டு பிள்ளைகளையும் கிளப்பினார்.
உண்டு முடித்து வீட்டிற்கு வந்த மணமக்களுக்கு… முதல் இரவுக்கு உண்டான சடங்குகள் செய்து… ரவியின் அறைக்கே அனுப்பினர்… சொந்தகள்.
உறவுகள் எல்லாம் எதிர் வீட்டில்… வீராவின்… வீட்டில் தங்கிக் கொண்டது…
கல்யாணிக்கு, தன் மகளுக்கும், பெரிய மகனுக்கு திருமணம் செய்தது கூட தெரியவில்லை… ஆனால், வீராவின் முகம் பார்த்து.. பார்த்து.. இந்த ரிசப்ஷனை முடிப்பதற்குள்… கண்கள் வலித்தது அந்த தாய்க்கு… ‘எப்படிதான் வந்த பொண்ணு சமாளிக்குமோ’ என தோன்றியது.
மெல்ல சத்தங்கள்.. ஓய்ந்து… எல்லோரையும் உறக்கம் தழுவ தொடங்கியது…
அங்கு மேலே… ரவி, அறைக்குள் வந்தவள்… அமைதியாக நின்றாள்.. இரண்டு நிமிடம்… ஏதோ காதல் கணவானாயிற்றே… அருகில் வருவான்… அணைப்பான்… என ஏதேதோ கொஞ்சம் ஆசைப்பட்டு நின்றால்தான் ஓரிரு நிமிடம்… 
ஆனால், எங்கே… வீரா… யோசனையுடம் படுத்திருப்பதை பார்த்ததும்… ஏதும் சொல்லாமல் அமைதியாக தானும் சென்று.. விளக்கணைத்து படுத்துவிட்டாள். சட்டென மேகம் மூடிய வானாய்… ஆயிற்று அவளுக்கு… 
வீராக்கு, விளக்கனைத்தது தெரியவில்லை… அந்த ரிசப்ஷன் செலவுகளை மனக்கணக்கு செய்து கொண்டிருந்தான்… உள்ளுக்குள். 
எப்படியும் ‘போக்குவரத்து… சாப்பாடு… அங்கே ஸ்டாப்களுக்கு துணிமணி… நம்ம செலவு… எல்லாம் சேர்த்து பத்து, பதினைந்து வந்திருக்குமே… இதில் நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லையே… என ஒரு சாதாரண குடும்பஸ்தனாக தோன்றியேவிட்டது வீராக்கு..
ஆக, இந்த திருமணம் என்பது ஆண்களை பொறுத்தவரை உணர்வுபூர்வமானது அல்ல…. அது, கடமை… செலவு… நம் சொந்தம் செய்ததை… பதிலுக்கு நாம் செய்யும் முறைகளை கொண்டதே… திருமணம்… வளைகாப்பு, காது குத்து எல்லாம்… இப்படி, அதில் ஒரு சாதாரண ஆணாக வீரா இந்த ஷனத்தில் சிந்திக்க தொடங்கினான். ஆக இந்த திருமணம் வெற்றியேதான்….
ஒருகட்டத்தில் ரவி தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுக்க… இப்போதுதான் சுயநினைவு வந்தது இளமையடிகளுக்கு…
“ஹேய் ரவி… எப்போடா வந்த” என்றான்… ஒன்றுமே புரியாமல்… அவனின் ரவிக்கு கண்களில் நீர்… தான் வந்தது கூட தெரியாத சிந்தனை… என எண்ணம்… கோவம்… ஆசை பயம் எல்லாம் கண்ணீர் வழி வந்தது…
ஏனோ, இப்போதுதான் முதல் முறையாக வீராவை குறித்து பயம் வந்தது….
இப்படியே ‘இது தவறு… இது சரியில்லை’ என பேசி பேசியே குடும்பத்திலிருந்தும், தன்னிடமிருந்தும் ஒதுங்கி விடுவானோ என பயம் வந்தது….
சரியா தவறா தெரியவில்லை… ஆனால் அவளையும் அறியாமல் என் கணவன் என்னும் போது… அவனை பற்றிய பயம் வந்தது….
காதலனாக இருக்கும் வரை தெரியவில்லை… அவனின் கொள்கைகள்… அவனுக்கு அணிகலனாக… கம்பீரமாக… தோன்றிய ஒன்று.. இப்போது… குடும்பம்… சொந்தம்… என்னுடைவன்.. என வரும்போது… விஸ்வரூப குற்றமாக தெரிந்தது… ரவிக்கு. அதை நினைத்து கண்ணீர்… கரகரவென இரங்க… காதல் கணவனுக்கு இருட்டில் ஏதும் தெரியவில்லை….
மெல்ல அவளை பின்னாலிருந்து அனைத்து… தன்பக்கம் இழுத்தான் வீரா.. ம்கூம்… பெண்ணின் மனம் அசையவில்லை… அதனால் உடலும் அசையவில்லை..
எங்கும் எதற்கும் மனம் முக்கியம்… ரவியின் மனம் கவலையில் இருக்க… வீரா, அவளின் விரைப்பை பார்த்து… சற்று சுதாரித்தான்… தெரியும்தானே அவனுக்கும்… முகமும் கண்ணும் கண்டிப்பு காட்டினாலும்… அவளின் உள்ளம் அவன் என்றால்… சற்று மெல்டாகிதான் நிற்கும் என தெரியும் அவனிற்கு…
எனவே, “ரவி…… ரவிம்மா….” என்றான் காதலாய்… 
ஆனால், இந்த வார்த்தையில் மொத்தமும் வெடித்து சிதறி அழுதாள் ரவி…. 
வீரா, அவசரமாக எழுந்து லைட் போட்டான்….
ரவி முகத்தை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்… 
திருமணமாகி, முதலிரவு… காதலான நேரம்… காதல் திருமணமே… ஏதும் கட்டாயம் இல்லை… சற்று ஈகோ மட்டுமே கொண்ட… கலவரமான காதல்தான்… ஆனால் முதலிரவில் கதறியழும் மனைவியிடம்… கதிகலங்கி நின்றான் வீரா.
“ரவி என்னாச்சு…. என்னாச்சு ஏதாவது செய்யுதா…” என்றான் பதறியவனாக…
கண்களை துடைத்துக் கொண்டாள்… “இல்ல இல்ல… ஒண்ணுமில்ல” என்றாள்.. தன்னை தேற்றிக் கொண்டு…
கேவிக் கொண்டிருந்தாள் அமர்ந்தபடியே… மெல்ல அவளருகில் வந்தான் வீரா… “என்னாச்சு “ என்றான்… மென்மையாய்… அவளுக்கு வலிக்குமோ வார்த்தைக்கு வலிக்குமோ என.
அனுசரணை… பிடிக்கும்தானே பெண்ணுக்கு… எனவே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்… 
வீரா “என்ன டா… சொல்லு” என்றான் வாஞ்சையாய்.
ரவிக்கு கோவம் பயம் எல்லாம் சேர்ந்தது…. “என்ன… என்னான்னு கேட்குறீங்க…. நான் வரும்போது என்ன செய்திட்டிருந்தீங்க” என்றாள் கோவமாக…
வீராக்கு ‘அப்பாடா… அவ்வளவுதானா…’ என்றானது… அது விரிந்த சிரிப்பாக வெளிவர… சற்று அவளை பார்த்து சிரித்தான்…
ரவி, அவனையே பார்த்தபடி…. “இந்த சிரிப்பெல்லாம்… ஈவ்னிங்… காணோம்…” என்றாள் காரியமாய்…
வீரா, தடுமாறினான்… அமைதியாகினான்…
ரவி “பதில் சொல்லுங்க… எப்போதும் உங்களுக்கு பிடித்தமாதிரியே நடக்கணுமா….” என்றாள்.
வீரா “அப்படியல்ல… நான் அப்படியே பழகிட்டேன்……. அதான் “ என்றான் மெல்லிய குரலில்…
அடுத்த அரைமணி நேரம் ரவி… மடக்கி மடக்கி கேள்வி கேட்கவில்லை… சண்டை பேட்டாள்… 
பின்னும் “எனக்கு இப்படியெல்லாம் இருக்க முடியாது… எனக்கு எங்க அம்மா அப்பா… அத்தை மாமா… எல்லோரும் முக்கியம்.. 
அத்தோட, விருந்து… விழா… சொந்தம் முக்கியம்… இது செலவு… நேஷனல் வேஸ்ட் என பார்க்க மாட்டேன்… நாளைக்கே எனக்கு குழந்தை பிறந்தால்… பர்த்டே பார்ட்டி வைப்பேன்…
புரியுதா” என்றாள் ஆவேசமாக…. அந்த அகாலத்தில் பட்டிமன்ற நினைவு போல… வார்த்தைகள் தெரித்தது…
வீரா, உதடு மடித்து சிரித்தான்… ரவி “என்ன சிரிப்பு…” என்றாள். 
ரவி “எதுக்கு சிரிக்கிறீங்க” என்றாள்.
“ம்…. அது…. எப்போ என் பிள்ளைக்கு பர்த்டே பார்ட்டி வரும்ன்னு கணக்கு பார்த்திட்டிருக்கேன்” என்றான் சிரித்தபடியே…
ரவிக்கு கோவத்தில் பாயின்ட் புரியவில்லை…. “அதானே.. எப்போதும்… எதையாவது சரிபார்த்துட்டே இருந்தா.. இப்படிதான்… நடக்காத விழயத்துக்கு… கணக்கு பார்க்கணும்” என்றாள்.
வீரா “எது டி நடக்காது…. எத்தனைநாள் ஏங்கியிருப்பேன்…. ஆரம்பிக்கும் போதே… அபசகுணமா பேசாதேடி…
உன்னை மாதிரியே தைரியமா ஒரு பையன்… தரேன் பாரு” என்றான் அவளை தழுவியபடியே… 
“போடா என்னை தொடதா” என்றாள் அவனை தட்டிவிட்டபடியே…
“ம்.. சரி.. சரி…. சின்னதா… ஒரே ஒரு முத்தம் மட்டும்” என்றான் இளமையடிகள்… உடனே சுதாரித்து… அவளின் வலது மணிக்கட்டில் முத்தமிட்டான்…
ரவிக்கு… காதுமடல் வரை கூச… “இ….இதென்ன… “ என்றாள் தயங்கியபடியே…
“தெரியாதா….” என்றான் வில்லங்கமாய்…. கூடவே “இப்போ, இப்படி கொடுத்து என்ன யூஸ்….. கல்யாணத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா… வீரா கெத்து” என்றான்…
ரவி “எ… என்ன” என்றாள்…
“நீ தமிழ் மட்டும்தான் படிப்பியா” என்றான்.
ஒன்றுமே பேசிவில்லை அவள். அவனே, தொடர்ந்து “இல்ல… காதலன்… காதலிக்கு கொடுக்கும்… இல்ல… கேட்க்கும் ஹின்ட் இது… 
அதாவது இங்க முத்தம் கொடுத்தால்…. அவளை மொத்தமா கேட்கிறான் என்று அர்த்தமாம்… போரீன் கன்ரில…. 
சொல்லு கொடுபியா……..” என்றான் மெல்ல மெல்ல காதலான குரலில்… காமம் தோய்த்து.
“ம்கூம்ம்ம்ம்……” என சத்தம் மட்டும்தான் கேட்டது…. விடியல் வரை… அழகான இன்பமான இரவு… இனிமையாகவே முடிந்தது இருவர்க்கும்.. 
காலையில் நேரமே எழுந்து… திருவண்ணாமலை செல்லாம் என சொல்லியிருந்தார் லிங்கம். எனவே ரவியும் கிளம்பி, வீராவை எழுப்பி கீழே வந்தாள்…
வீராவை தவிர எல்லோரும் திருவண்ணாமலை சென்றனர்.

Advertisement