Advertisement

எனக்கானவளே நீதானே…
16 
(வசமிழக்கும் வானம் நான்….)
அடுத்தடுத்த நாட்களில் லேசான காயம் பட்டவர்கள்… தேறி வீடு சென்றனர்.. அதை தவிர முகம், கை என பாதிக்கப்பட்டவர்கள்… செயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது, அந்த கல்லூரி நிறுவனத்தால்.
அதை தவிர.. முக்கியமாக, பிள்ளைகளை இழந்த… பாதிக்க பட்ட பெற்றோருக்கு கவுன்சிலிங்க… அதுவும் ஒரே பிள்ளைகள் என இருந்தோர்… ஒரே விபத்தில் இரு பிள்ளைகளையும் பறிகொடுத்தோர்.. என சோகமான நிகழ்வுகளுக்கு இந்த கவுன்சிலிங் தேவையாக இருந்தது… கூடவே ஹெல்த் செக் அப்… என நாட்கள் சென்றது…
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் வருகை… இழப்பீடு… என நேரம் சென்றதேயன்றி… வீரா இன்னும் அமர நேரமில்லை…
சென்னையில்,
அன்று வெள்ளி கிழமை… இன்று பதிவு திருமணம் நடக்க வேண்டிய தினம்… சுந்தரம் தாத்தா சற்று நொந்துதான் போனார்… கோவில் சென்று அமர்ந்து கொண்டார்…
ஏதோ தடங்கல் வருவதாகவே தோன்றியது… அவருக்கு. என்ன முயன்றும் வீராவுடன் பேச முடியவில்லை… யாருக்கும் அவன் செவி சாய்க்கவில்லை…
கைலாஷ், அங்கு நாகை கிளம்பி சென்றார். இவன் முதல்நாள் வரை, வரவில்லை என்பதால்.. வெள்ளி அன்று காலை கிளம்பி சென்றார் கைலாஷ்.
அங்கு சென்று கலெக்டரின் அண்ணன் என மரியாதை கிடைத்ததே தவிர.. அந்த கலெக்டரை பார்க்க முடியவில்லை.. அவன் எங்கு எப்போது இருக்கிறான் என தெரியவில்லை…
ஒன்று மருத்துவமனையில், இல்லை பெற்றோரின் வீடுகள்… அல்லது அதை நேரில் பார்த்து பாதித்த மாணவர்களின் வீடுகள்… அல்லது அமைச்சர்கள் வருகை.. நிவாரண நிதி வேலைகள் என வீரா அலுவலகத்தில் இருப்பதே குறைந்தது.. எனவே கைலாஷ் வீராவை பார்க்காமலே திரும்பினான்… ஊருக்கு.
பைரவிக்கு, யாரிடமும் சொல்ல முடியவில்லை… அவனை பேச்சில் கூட விட்டுத்தர மனம் வரவில்லை. எனவே… அன்று மதியம் விவேகானந்தா இல்லம் சென்றாள், ஐஸுடன்… மதியம் அவர்களுடன் உண்டு வந்தாள்.
அந்த நாள் மட்டும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது எல்லோருக்கும்.. கூடவே பயம்… அவன் வரவேமாட்டானோ என… ஆனால் பைரவி அலட்டவே இல்லை… தன் வேலையை பார்த்தாள்..  
பைரவி, வீரா சார்ப்பாக “மாமா, இப்போ அந்த ரிசப்ஷன் வேணாம் மாமா… அவர் வரமாட்டார் போல…. அவர் வேலை முடிந்து ஒரு மாசம் சென்று கூட ஏற்பாடு செய்துக்கலாம் மாமா….“ என சொல்ல சொல்ல….
லிங்கம்…”என்ன மா… இது, ரிஷப்ஷன கேன்சல் செய்ய முடியாதும்மா… mla, கட்சி தலைமை… வரை பத்திரிகை வெச்சாச்சி…. அத, மாத்த முடியாதும்மா… அவங்க டேட்டுடன் விளையாட முடியாது ம்மா….
அதான், பத்துநாள் இருக்கில்ல… பார்க்கலாம்…. என் பையன் பொறுப்பனவன்தான்… 
அப்படியெல்லாம் அலட்சியமா இருக்க மாட்டான்… நான் பேசறேன்… நீயும் பேசு… பொறுமையா சொல்லும்மா…. வர சொல்லும்மா…” என்றார் மாமனார் பொறுமையாக…
என்ன செய்வது… ஒரு நிகழ்வு, என்பது… ஒருவரை சார்ந்தது அன்று… எல்லோரையும் உள்ளடக்கியதே… இதில் தனி மனிதனுக்காக என ஏதும் செய்ய முடிவதில்லையே… வீரா, மட்டும் விதிவிலாக்க…என்ன… அப்படிதான் அந்த ரிசப்ஷனும்.. போல…
நாட்கள் சென்றது…
பைரவி ஏதும் போன் செய்யவில்லை வீராக்கு… என்ன புரிதல் என்றாலும் கோவம் வரத்தானே செய்யும் அவளுக்கும்… ’ஒரு போன் செய்து.. பேச முடியாதா… இவருக்கு மட்டும்தான் அக்கறையா… ஏன், நாங்கள் எல்லோரும் ஈரமே இல்லாதவர்களா…’ என எண்ணம்…
கூடவே ‘அதே அக்கறை… கல்யாணம் செய்து கொள்பவள் மேலே இல்லையே’ என ஒரு தாங்களும் வந்தது… அது அடிக்கடி அவளின் மனதை வாட செய்தது… 
ஆனால் முகத்தை எப்போதும் போல வைத்துக் கொண்டாள்… தாத்தா தினமும் காலையில் எழுந்த உடன் பைரவியிடம் ‘வீரா, போன் செய்தானா ம்மா…’ என கேட்க தவறவில்லை… இப்படியே அந்த வாரமும் ஓடி போனது…
ஆயிற்று… ரிசப்ஷன் வாரத்தின் வெள்ளி கிழமை… அதற்கு மேல் லிங்கத்திற்கு, பொறுமையில்லாமல்… வீராக்கு அழைக்க… இப்போதும் அந்த அவனின் உதவியாளர்தான் எடுத்தார்…
லிங்கம், அவரிடம் பேச தொடங்கினார்… இல்லை, ஏச தொடங்கினார்… அவ்வளோ சத்தம்.. அந்த மனிதர்தான்.. இப்போது வீராவின் வேலைகளை ஒழுங்கு செய்வது, எனவே… இவர்களின் பொருமலும் புரியும்தானே… எனவே லிங்கத்தின் ஏச்சு, பேச்சுகளை பொறுமையாக கேட்டுக் கொண்டார்… ‘சார், இப்போ வீரா… அந்த தாலுக்கா… வரை போயிருக்கார் சார்… ஏதோ இரு கோஷ்டி மோதல்… அதுக்காக போயிருக்கார்… வரட்டும், கேட்டு… கண்டிப்பா, பதில் சொல்லிடுறேன் சார்….’ என நம்பிக்கையான பதில் தந்து, வைத்தார்…
வீரா, மாலை வந்ததும்… இது பற்றி தாமோதரன் சொல்ல… வீராவுக்கு, நாட்களின் எண்ணிக்கை வியப்பை தந்தது… அதற்குள்… பதினைந்துநாள் சென்றுவிட்டதா… என எண்ணினான்… 
சீக்கிரமாக தன் வேலைகளை முடித்தவன்… உடனே தன் தந்தைக்கு அழைத்து பேசினான்.. அவரும் ஏதேதோ கேட்டார் எல்லாவற்றிக்கும் சரி என்ற பதிலே சொன்னான்.. இப்போதுதான்… பைரவியின் நினைவே வந்தது வீராக்கு…
இது சரி என்பதா… தவறு என்பதா தெரியவில்லை… உண்மையில் அப்போதுதான் தன்னை நேசிக்கும் ஜீவன் நினைவே வந்தது வீராக்கு.. எனவே தந்தையின் வார்த்தை ஏதும் மனதில் ஏறவில்லை… ரவியின் நினைவே இப்போது… எனவே எல்லாவற்றிக்கும் சரி என்றான்.. 
அவரும் ‘இங்கு வந்து விடு… எல்லோரும் சேர்ந்து… சென்னை செல்லாம்’ என சொன்னதுக்கு சரி என்றுவிட்டான்… ரவியின் நினைவில்.
லிங்கம், ஏதோ அதட்டலாக… கேட்க “என்ன ப்பா… வரேன் வரேன்… “ என்றவன் வைத்து விட்டான்…
வீரா, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்… என்ன செய்து இன்னும் நிவாரணம் தர வேண்டியது இருக்கிறது… அத்தோடு… மருத்துவமனையில் இன்னும் பிள்ளைகள் இருக்கிறார்கள்… எனவே என்ன செய்வது என தெரியவில்லை அவனுக்கு… அமர்ந்து கொண்டான்.
இவன், தனக்கான காரணம் சொன்னால், உதவ தயாராக இருக்கிறது நிர்வாகம். ஆனால், இவனிற்கு பாதித்தவர்களை  விட்டு செல்ல மனமில்லை… 
இப்போது தாமோதரன் உள்ளே வந்தார்… “என்ன சார்… யோசிக்கிறீங்க… பாவம் சார் அவங்க… எத்தனை போன் செய்தாங்க….
நீங்க கிளபுங்க சார்… நான் உங்க நிலைமை என்னான்னு சொல்லிடறேன்.. வேற யாராவது சார்ஜ்… எடுத்துப்பாங்க சார்… “ என பேசி.. கரைத்து… தாமோதரன் சற்று சொல்லவும்… 
வீரா, அதற்குண்டான ஏற்பாடுகள் செய்து… தன்னை இந்த பணியிலிருந்து விடுவிக்குமாறு கோரி.. விண்ணபித்து கிளம்பினான் சென்னை நோக்கி…
தாமோதரன், வீராவின் வண்டிக்கு டிரைவர் ஏற்பாடு செய்து தர… பரபரப்பாக கிளம்பினான் சென்னைக்கு… உணவுக்கு கூட எங்கும் நிறுத்த வேண்டாம் என்றான் வீரா… உறங்கவேயில்லை… உறக்கம் பிடிபடவில்லை… அப்படியே விழித்தபடியே வந்தான்… 
யாமம்… அதிகாலைக்கு முந்தைய நேரத்தில்… பைரவியின் வீட்டு கதவை தட்டினான்… வீரா. யாரும் எதிர்பார்க்கவில்லை… தாத்தா, நாளை என்ன நடக்குமோ என விழித்தே இருந்தார் போல…. அவர்தான் வந்து கதவை திறந்தார்…
பின்னாலே ராகவ்… கோதை வந்தனர்… தாத்தா, வீராவை கட்டிக் கொண்டு… இரண்டு நிமிடம் நின்றார்… அவனுக்கும் அது தேவையாக இருந்தது… 
அதற்குள் கோதை, ரவியை போனில் அழைத்து கீழே வர சொன்னார்…
ராகவ்க்கு, என்ன பேசுவது என தெரியவில்லை… வரமாட்டானோ என எண்ணியே விட்டார் அவர். அத்தோடு, பெண்ணை கொடுத்து இவன், இது போல… வேலை…. வேலை… என இருந்தால் என்ன செய்வது என அது ஒருபக்கம் கவலையாக… இருக்க… அதெல்லாம் அவரின் முகத்தில் தெரிந்தது போல… அமைதியாக நின்றார்… வீராவை கடிய கூட தோன்றாமல்…
அதெல்லாம் வீரா உணர்ந்தான் போல…. “அங்கிள்… “ என சொல்லி பட்டென காலில் விழுந்தான்… “சாரி அங்கிள்… என்ன செய்றது தெரியலை… கொஞ்சம் எல்லோரையும் சங்கடபடுத்திட்டேன்” என்றான்… சங்கடமே படாமல் ஒப்புக்கொண்டான்.
ராகவ், அவனை அனைத்துக் கொண்டார்… எப்போதும் எல்லாவற்றிக்கும் எதிர்மரையானவன்… எதற்கும் அசையமாட்டான்… ஆனால், இப்படி காலில் விழும் போது என்ன செய்ய முடியும்… அதுவும் பொது காரியம்… எல்லோரின் மனதையும் தைத்த ஒரு நிகழ்வு… 
எனவே… வீராவின் வார்த்தைக்கு மறு வார்த்தையாக “எதுவாக இருந்தாலும்.. போன் செய்ங்க வீரா… நாங்கள் உங்கள் வேளையில் குறிக்கிட மாட்டோம்…. உங்க நலன் மட்டும் தெரிஞ்சிக்குவோம்.. அவ்வளவுதான்” என்றார் சாந்தமான குரலில்.
அதுவும் சரிதானே என்றுணர்ந்த வீராவும் “கண்டிப்பா அங்கிள்… ஏதோ இந்த முறை… இப்படி ஆகிடுச்சி” என உடனே ஒத்துக் கொண்டான்…
அப்போதுதான் ரவி, இரங்கி வந்தாள்…. டிவியில் பார்க்கும் போது தெரியவில்லை… ஒருவாரம் முன்பு பார்த்தது… அதற்குள் அடுத்த செய்தி வரவும்… இதனை மறந்தது மீடியா.
ஆனால், இன்னும் அரசு ஊழியர்களுக்கு வேலை தீரவில்லை.. அதனால், வீரா, இன்னும் இளைத்து இருந்தான்… முகமெல்லாம் களைப்பின் சாயல்… இன்னும் போர்மல் உடையிலேயே இருந்தான், அப்படியே கில்பிட்டார் போல.. என எண்ணி  “வாங்க “ என்றாள், சின்ன குரலில்.. லேசாக தலையசைத்தான்… இப்போதுதான் அமர்ந்தான்… சோபாவில்… 
கோதை “சாப்பிட்டியா வீரா…” என்றார் பொறுப்பாய்… தயக்கமாக ‘இல்லை’ என தலையசைத்தான் வீரா…
கோதை, உள்ளே செல்ல… ரவியும் கூடவே சென்றாள்… தோசை ஊற்றி… தேங்காய் சட்னியுடன் வீராவை, அழைத்தார் கோதை. அவனும் உண்டான்… தாத்தா, சென்று படுத்துவிட்டார்… 
ராகவ்… வீராவுடன் பேசிக் கொண்டிருந்தார்… டைன்னிங் ஹாலில் அமர்ந்து. ரவி, பரிமாறிக் கொண்டிருந்தாள்… உண்டு முடித்து… மீண்டும் ஹாலில் அமர்ந்தான் வீரா… 
எல்லோரிடமும் ஒரு அமைதி… என்னவென தெரியாத அமைதி… வீரா, தயக்கமாக… ”அங்கிள்… ரவிகிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான்.
ராகவ்க்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை… அவர் தயங்கி “ஏன், வீரா… நாளைக்கு காலையில் பேசுங்க… ரொம்ப டயடா இருக்கீங்க…” என்று சொல்ல…
இப்போது வீரா… “இங்கதான் அங்கிள்…” என்றான் வேண்டுதலான குரலில்… 
இதற்குமேல் என்ன சொல்ல முடியும்… ராகவ்… “வா கோதை” என தன் மனைவியிடம் சொல்லி… “வீரா… சீக்கிரம் பேசிட்டு கிளம்பனும்” என சொல்லி உள்ளே சென்றார்..
ஜில்லா கலெக்டர்தான்… ஆனாலும், நம்பவில்லை பெண்ணின் அப்பா… இந்த உறவும் அழகுதான்…
ரவி, இப்போதுதான் கிட்சென் விளக்கணைத்து வர… வீரா, அவள் வரவுக்காக அமர்ந்திருந்தான்… ரவிக்கு அவனை தனியே பார்த்ததும்… உடம்பிலிருந்த பலமெல்லாம் வடிந்தது போல தோன்றியது… கண்கள் கலங்க தொடங்கியது… 
கண்களில் அசதி, கூடவே ஏக்கமாக அவளையே பார்த்தபடியே இருந்தான்….
“அழகழகா அவ தெரிவா…
உயிர் உரிவா…
மெது மெதுவா… விரி விரிவா…
விழி அறிவா…
எனக்கானவளே கிட்ட வரியா…
தெரிஞ்சா செஞ்சான்…. 
மன்னிப்பே கிடையாதா…
உடனே என்னை உதறி போனா சரியா…
இனிமே நானும் உயிரும் தனியா…”
ஆனால், பைரவிக்கு பேச தோன்றவில்லை… கோவம்.. ஒரு போன் செய்யவில்லையே என கோவம்… மேலே செல்ல எத்தனிக்க…
வீரா, அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்… ‘போயிடுவியா… எனை விட்டு…’ என்ற பார்வை பார்த்து அமர்ந்திருந்தான். ஏதும் பேசவில்லை… இவளாலும் மேலேற முடியவில்லை… 
அங்கே டைனிங் சேரில் அமர்ந்தாள்… இப்போதும் யார் முதலில் பேசுவது என்ற ஈகோ தான், அன்பான, கோவமான ஈகோதான்.. பத்து நிமிடம்… பதினைந்து நிமிடம்… இருவரும் பேசவில்லை… 
அவள், தனது வளையலை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்… ‘எப்போதும் நானே அவனை புரிந்து கொள்ள வேண்டும்… என்னை அவன் ஒருநாளும் புரிந்து கொள்ளமாட்டான்’ என உள்ளே புலம்பியபடியே அமர்ந்திருந்தாள்..
வீராக்கும், அதே எண்ணம்தான் ‘எத்தனை தரம் அவளையே… இரங்கி வர சொல்லுவது…’ என எண்ணம்தான்… ஆனாலும், அவளிடம் இன்னும் பேச்சு வரவில்லை…
இன்னும் அதே கருப்பு நிற புல் ஹன்ட் ஷர்ட்…. லேசான இரண்டுநாள் தாடி… ஓய்ந்த தோற்றமாக… அவன், அவளை மெல்ல நெருங்க… கண்ணில் மட்டும் அவளிடம் குறையாத மையல் போல… தீராமல் அவளையே, பார்த்தபடியே அருகில் வந்தான்… “ரவி, தாத்தா வேஷ்டி ஏதாவது இருந்தா தா…” என்றான்.
ரவியின் உள்ளம் படபடவென அடிக்க… உள்ளே சென்றாள், கையில் வேஷ்டியுடன் வந்தாள்… மீண்டும் அதே சேரில் அமர்ந்து கொண்டாள்… வீரா சென்று.. ப்பேன்ட் மாற்றி வந்தான்..
ஹாலில் அமர்ந்தபடியே “ரவி… இங்க வா” என்றான்… காதே கேட்காதவள் போல் அமர்ந்திருந்தாள்… அழகான ஊடல்… 
மீண்டும் “ரவி……. ப்ளீஸ்” என்றான்… ரவி அசையவில்லை… 
மீண்டும் அவளின் அருகில் சென்றான்… நைட் டிரஸ் போட்டிருந்தாள்… தன் அன்னை அழைத்ததால் கீழே, என்னமோ, ஏதோ… என எண்ணி வந்தாள்… ஒரு ஷால் போட்டிருந்தாள்… அவளை அப்படியே தூக்கினான்… கண்களை மூடிக் கொண்டாள்… ரவி…
அவனின் வாசமும்… அந்த தனிமையும்… ஏதோ செய்ய… கோவம் போய்விடுமோ… என ‘அதனை’ இப்போது இவள் இறுக்கி பிடித்துக் கொண்டாள்..
அவளை சோபாவில் அமர்ந்த்தினான் “சாரி… சாரி…” என்றான்.. 
அவள் நிமிரவேயில்லை… “ரவி பாருடி” என்றான்… வேண்டுதலான குரலில். இன்னும் நிமிரவில்லை… அவளின் ஷாலை… எடுத்தான்… இளமைஅடிகள்.
ரவி “என்ன பண்றீங்க” என்றாள் சட்டென கோவமாக…
“பப்பா…. இப்போதான் பேச்சே வருது…. என்ன பண்ணிட்டாங்க…. உன்னை” என்றான் அந்த ஷாலை தூக்கி எரிந்தபடியே….
தனது ஷர்ட்டை கழற்றியபடியே…. அவளுடன் “என் டி, கோவம் உனக்கு… அதான் இன்னிக்கே வந்திட்டேன்ன்ல்ல…. 
அப்படியே விட்டுடுவேனா… நீ சொல்லாமலே சரியா வந்திட்டேன் பார்த்தியா…” என்றான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு…
இந்த வார்த்தை அவளை உசுப்பேற்ற… “யாரு நீங்களா வந்திங்களா… உண்மைய சொல்லுங்க… யார் உங்களுக்கு நியாபக படுத்தினா… என் மாமாமார் போன் செய்திருப்பார்… இல்ல தாத்தா… 
இப்படி யாராவது உங்ககிட்ட பேசியிருப்பாங்க, அதான் வந்திங்க… இல்லை மறந்திருப்பீங்க…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க…
தனது ஷர்ட்டை கழற்றியவன் பனியனுடன்… அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்… பேசிக் கொண்டிருந்தவளுக்கு வார்த்தைகளே வரவில்லை…
அவளின் கால்கள் நடுங்கவும்… 
வீரா “ரிலாக்ஸ்…. ரவி…. ரொம்ப நாளாச்சு… நல்லா தூங்கி…” என்றவன் அவளின் விரல்களை தனது தலையில் வைத்தவன்… “நீ என்னவேண்ணா திட்டு… ஆனா… இப்படியே… திட்டு… ப்ளீஸ்…” என்றான்.
‘ரொம்ப நல்லவன்’ என எண்ணி, அவளும் “போடா…” என சொல்லி அவள் எழ எத்தனிக்க…. எங்கே… அவன், அவளின் இடையை இறுக்கி பிடித்திருந்தான்…
“இங்க பாரு உங்க அப்பா… என்னை, ஏதோ… கிரிமினல் மாதிரியே பார்த்துட்டு போறாரு….
நானும் இதுக்கு மேல போக கூடாதுன்னு பொறுமையா இருக்கேன்……
நம்ம கல்யாணம் நடந்திருந்தா… இந்நேரம் ஒரு வாரம் முடிஞ்சிருக்கும்…
என்னமோதான்… அப்பாவும், பொண்ணும் படுத்திறீங்க….” என்றான் கோவமாக…
ரவி “தெரியுதுல்ல… நடந்திருந்தான்னு…. 
ஒரு வார்த்த சொன்னிங்களா வர மாட்டேன்னு.. சொன்னீங்களா…
நான்… நாங்க… எப்படி தவிச்சிருப்போம்…” என்றாள் அவளும் கோவமாக…
வீரா “என்ன சொல்லணும்…. புரியாத உங்களுக்கு…
அங்க அத்தனை பேரின் சங்கடத்தை பார்க்காமல்…
நான் இங்க வந்து சந்தோஷமா இருந்திருக்கணும்… என் வேலையை பார்த்திருக்கணும்….
அப்படிதானே…” என்றான் இன்னும் அவள் மடியில் படுத்தபடியே…..
ரவி அமைதியாகினாள்…
வீராவே “அதான் நீங்களே சரி செய்துட்டீங்கல்ல… விடுடா, 
நீதானே என்னோட டிரஸ்ட்… எனக்கு தெரியும்… நீ மனேஜ் செய்வேன்னு” என்றான் அவளின் கன்னம் வருடி…
கையை தட்டி விட்டாள்… வீரா “வேண்ணாம் டி… சும்மா தொட்டதுகெல்லாம் தட்டாத… அப்புறம் ஏதாவது செய்துடுவேன்…” என்றான்.
“ஓ…. அப்படியெல்லாம் வேற எண்ணமிருக்க… உங்களையெல்லாம் நம்பி உள்ளே விட்டாரில்ல எங்கப்பா… அவர சொல்லணும்… எடுங்க கையை” என்றாள்.
அப்படியே அவளின் கன்னம், பின் கழுத்து… முதுகு.. என தீண்டிய அவன் விரல்கள்… இடையோடு சேர்த்து… ஓரு முத்தம் வைத்தே அவளை விட்டான்… “நான் தூங்கனும்… ப்ளீஸ்” என்றான்.
“அப்போ நானு” என்றாள்…
“அடியேய்… இதுக்காகதான் நான் சீக்கிரமே வந்தேன்… தூங்க வைடி… அப்படியே ஒருநாள் தூங்கலைன்னா… ஒன்னும் தேய்ந்திட மாட்ட….நீ” என்றான் இளமையடிகள்.
அவளும் சிரித்தபடியே தலை கோத இரண்டு நிமிடத்தில் உறங்கிவிட்டான்… 

Advertisement