Advertisement

எனக்கானவளே நீதானே…
15 
(வசமிழக்கும் வானம் நான்….)
ஐஸ்தான், பாவம்.. எந்த கொண்டாட்டமும் இல்லாமல் வாடி போனாள்… “எனக்கு ஒரே ஒரு டிரஸ் தானா…” என பலமுறை கேட்டுவிட்டாள்..
“ம்மா.. அந்த போடோ ஷூட் உண்ண்டாம்மா… “ என்றாள்… சலிப்பாக
“க்கா… மாமா ரிசப்ஷனிலாவது சாரட்டில் வருவாரா.. நாமெல்லாம் டான்ஸ் பண்ணிட்டே வருவோமா” என்றாள் ஆசையாக…
ரவிக்கு சிரிப்பு… அன்று… தான், சொன்னது நடந்தால் எப்படி இருக்குமென எண்ணி சிரித்துக் கொண்டிருக்க… 
“க்கா” என ஐஸ் குரல் கேட்கவும்தான் நிமிர்ந்து தன் தங்கையை பார்த்தாள்.
ரவிக்கு அவளின் கேள்விகள் புரிய “ம்… நீ வேணா உங்க மாமாட்ட கேட்டு பாரேன்” என்றாள் சிரியாமல்…
ஐஸ் “அய்யோ… அண்ணாவா… இருந்தவரை… தெரியல… 
இப்போ பாரு.. 
கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றாங்க… 
இங்க, வீட்டுக்கு கூட வர மாட்டிங்கறாங்க… 
தாத்தாக்கு கூட போன் பேசறதில்ல… மாமா பிஸி… 
நானில்லப்பா… என்னை மாட்டிவிடுரியா” என்றாள் கோவமாக…
ரவி, சிரித்துக் கொண்டே “உன் கல்யாணத்துல… எல்லாம் டபுளா செய்திடலாம்… சரியா… நான் ஏற்பாடு பண்றேன்…” என மேடை முழக்கம் செய்தாள்..
இப்போது ஐஸ் சிரித்தாள்….
ரவி “என்ன… சிரிக்கிற” என தழைந்த குரலில் கேட்க…
“உன் கல்யாணத்திலேயே உன்னால ஒன்னும் பண்ண முடியல… இதுல எனக்கு வேற ஐடியாவா” என்றாள் சிரியாமல்.
ரவி “ஹய்யோ… ஐஸ்… நீ வளர்ந்துட்ட ஐஸ்” என்றாள் ஆச்சரியமாய்…
ஐஸ் “தங்ன்க்கு…. தங்க்கு… 
டெய்லி  உங்களை பார்க்கிறேன்ல்ல… செட்டாகிட்டேன்….
ப்பா, சாமி… என்னோட பழைய ஆசை வாபஸ்…. 
எனக்கு நல்ல பிசினஸ் செய்கிற மாப்பிள்ளைதான் வேணும்” என்றாள் ஆசையான பாவனையில்…
பைரவி அவளை சீண்ட “வேணாம் டி… பிசினஸ் பண்றவங்க நிறைய கேர்ள் ப்ரிண்ட்ஸ் வைச்சிருப்பாங்க…” என்றாள்
“அய்யோ… அப்போ டாக்டர்” என்றாள்
ரவி “பார்த்துடி… மருந்து வாசனை… சரியா டையட் பாலோ பண்ணனும்…” என்றாள்
ஐஸ் “எனக்கும் டையட்டுக்கும் பகையாச்சே… அப்போ அட்வகேட்… “ என்றாள்
 ரவி “நிறையா பொய் சொல்லுவாங்க டி” என்றாள்…
“அப்போ……….. லெக்சரர்…. செம இல்ல… காலையில் போனா ஈவ்னிங் வந்திடுவாங்க… சூப்பரா இருக்கும்…” என்றாள்…
“அப்படியா…. வேண்டாம் டி, எதுக்கெடுத்தாலும் விளக்கம் கொடுப்பாங்க…” என்றாள்… 
இப்போது ஐஸின் முகமும்.. குரலும்.. அழும் நிலையில் இருக்க…
கோதை “ரவி, விடு அவள” என்றார் அதட்டலாக… இப்போது ஐஸ் எல்லோரையும் பாவமாக பார்க்க…
அங்கிருந்த தாத்தா, பைரவி, கோதை, ராகவ் எல்லோரும் சிரித்தனர்… “என்ன…” என எல்லோரையும் முறைத்தாள் கோவமாக..
ராகவ் “இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள… யார் மாதிரி வேணும்னு முடிவு சொல்லிடிவியா” என்றார்.. எல்லோரும் சிரிக்க… ஐஸ்க்கு கோவமே வந்தது.. செல்ல கோவம்… 
ஐஸ் “ப்பா… நீங்களே பார்த்திடுங்கப்பா” என்றாள் குழந்தையாக… இன்னும் சிரித்தனர் எல்லோரும்…
இப்போது ராகவ் தன் மனைவியைதான் பெருமையாக பார்த்தார்… 
என்னதான் இருந்தாலும்… ‘தான், இல்லாமல் இரு பெண் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு சிரமம்..’ என புரியும்தானே ராகவ்க்கு… அதான், அந்த பார்வை…
சின்ன சின்ன விஷயங்களுக்குதான் தகப்பன் தேவை… அதுவும் ஐஸ் போன்றவர்களுக்கு… தந்தையின் தோள் எப்போதும் தேவை…
சிலசமயம் வந்து சொல்லுவாள் “ம்மா… அந்த கௌஷிக்… என்னை பார்த்துகிட்டே இருக்கான் ம்மா” என்பாள்… ஆனால், பலது சொல்லமாட்டாள்…  முடியாதுதானே… சில நேரம் அப்செட்டாக சுற்றுவால்… 
அப்போதெல்லாம் அதிகம் அவளை கவனிப்பார் கோதை… அதிகம் திட்டாமல், அன்பாக பேசி… கொஞ்சம்… நேரம் சென்று, மெல்ல விஷயத்தை வாங்க வேண்டும் ஐஸிடம். 
அப்போதெல்லாம் தோன்றும்… கோதைக்கு… ராகவ் இங்கில்லையே என…. தேவையான நேரத்தில் “விடு டா தங்கம், பார்த்துக்கலாம்” என தந்தை சொல்லும் வார்த்தை… யானை பலம் தரும்… அப்படிதான் இங்கு அவர் உடனில்லையே…
எனவே, கோதைக்கு இதெல்லாம் பயம்தான்… அவளை வெளியே எங்கும் தோழிகளுடன் செல்ல அனுமதிப்பதில்லை கோதை… 
இதே தந்தை இருக்கும் பட்சத்தில்… “அவரிடம் கேட்டுக்கோ…” என ஒரு வார்த்தை சொல்லாம்… எதுவாக இருந்தாலும்… அவர் பாத்துப்பார் என தோன்றும்… 
ஆனால், அந்த ஆசுவாசம்.. இதுபோல சில பெண்களுக்கு வாய்ப்பதேயில்லை… கண்கொத்தி பாம்பாக… வீடு, பிள்ளை, சொந்தம் என அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்…
கோதையும் அப்படிதான்… எத்தனையோ இரவுகள் விழித்திருப்பார்… எங்கேனும் சத்தம் கேட்டால் அவ்வளவுதான்.. மனம் பதறும், ஏன் கொஞ்சம் அதிகமாக இடி சத்தம் கேட்டால் கூட ஏதோ அபாயமாக தோன்றும்… இவர்கள் போன்றவர்களுக்கு இரவுகள் நீண்டது…
சுந்தரம் தாத்தா இருந்ததால், பாதி தப்பித்தார் கோதை… எனவே.. அந்த வகையில் பொருப்பாகதான் வளர்த்துவிட்டார் கோதை, பிள்ளைகளை…
இப்போது ராகவ் “சரி, உனக்கு ஏற்றார் போல் அப்பா, பார்க்கிறேன்” என்றார் சந்தோஷமாக… அங்கு மீண்டும் பைரவி தனது வார்த்தை ஜாலத்தை காட்டி வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்…
இப்படியாக கலகலப்பாகவே நாட்கள் நடந்தது…
பைரவி.. இரண்டு நாளிற்கு ஒருதரம் வீராவை அழைத்து பேசினாள்… ஆனால் அவனாக அழைக்கவில்லை… இவள் அழைக்கும் போதே, சிலசமயம் யாருடனோ பேசிக் கொண்டிருப்பான்… இல்லை தூங்கியிருப்பான்… ஆனால் பைரவிக்கு தினமும் அவன் நினைவே… 
இன்று கூட ஒரு அரங்க பேச்சிற்கு செல்ல வேண்டும்… ஆனாலும் குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு கனவு கண்டு கொண்டிருந்தாள்…
இந்த வார வெள்ளி கிழமை அவர்களின் பதிவு திருமணம்.. அன்று வீரா விடுமுறை எடுக்கிறான். 
அவனின் உடை எடுக்க கூட… ரிசப்ஷன், முதல்நாள்தான் வருவேன் என்றுவிட்டான்…
திருமணம் முடிந்து, அடுத்த வாரம்… விடுமுறை தினத்தில், இவர்களின் ரிசப்ஷன், அவ்வளவுதான். 
அதற்கு மறுநாள் அவன் வேலைக்கு செல்கிறான்.. பின்னால் பைரவி அங்கு செல்வாள்… இதுதான் ஏற்பாடு… யார் சொல்லியும் மறுநாள் விடுப்புக்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை…
பைரவி, எப்போதும் போல ஒன்றும் சொல்லவில்லை… இப்படியே ஏட்டிக்கு போட்டியாகதான் வீரா.. நின்றான்… அவனுடன் இப்போது பைரவியும் நின்றாள்.. நிறுத்திக் கொண்டான்.
இன்று மாலை நேரம், தயாராகி… பைரவி, கீழே வந்தாள்… அவளுடன் ராகவ் செல்வதால்… பத்திரிகை வைக்க சென்ற தன் தந்தையை போனில் அழைத்தபடியே… உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.
தாத்தா.. கோவிலுக்கு சென்றிருந்தார்… அப்போதுதான் ஐஸ் கல்லூரியிலிருந்து வந்தாள்… தனக்கு நேரமாவதால்… தங்கையிடம் “ஐஸ்…நான் வண்டியெடுத்து கிளம்பறேன்.. அப்பா கிட்ட சொல்லிடு” என்றாள்…
கிளம்பிவிட்டாள் பைரவி…
நேரம் சென்றது தாத்தா… வந்தார்… அப்படியே பெற்றோரும் வநதனர்… ஐஸ் அவர்களிடம் விவரம் சொன்னால்.. 
ராகவ்வும் “சரி… டா… லேட் ஆகியிருக்கும் என்னை எதிர்பார்த்திருந்தால்… நான் போய் பிக்கப் செய்துக்கிறேன்” என்றார் சோபாவில் அமர்ந்தபடியே… 
தாத்தா “ஐஸ்.. ரிமொட்ட கொடுத்துட்டு நீ போய் படிப்பு வேலைய பாரு…” என்றார்..
அவளும் அப்படியே செய்ய… தாத்தா சேனலை மாற்றியபடியே “ராகவ்… அந்த ஸ்டேஜ் டெக்கரேஷன் பார்த்து சொல்லிட்டியா ப்பா… ரவியை கேட்டு செய்ய சொன்னார் லிங்கம்…
அத்தோட… மெனு.. என்னான்னு.. நம்மை ஒருதரம் சரிபார்த்து அனுப்ப சொன்னார்…” என கடைசிகட்ட வேலைகளை சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா…
அப்போது ரிமொர்ட்டை அழுத்திய கைகள் ஒரே இடத்தில் நின்றது… வீரா, முழுநீள கருப்பு சட்டை அணிந்து பேசிக் கொண்டிருந்தான்… பத்திரிக்கையாளர்களுடன்…
முதலில் ஆசையாய் பார்த்த தாத்தாவின் கண்கள்… இப்போது பரபரப்பானது… அதற்குள் ராகவ், பேச்சு சத்தம் காணோம் என நிமிர்ந்து பார்க்க, தன் தந்தையின் நிலை பார்த்து “என்ன ப்பா” என சாதரணாமாக கேட்டார்…
தாத்தா “வீரா ப்பா… பாரு….
என்னாச்சுன்னு தெரியலையே…” என பொறுமையாக சொல்லி சத்தம் அதிகம் வைத்து அமர்ந்தார்…
அங்கு 
வீராக்கு இன்று காலை பதினொரு மணிக்கு மேலிடத்திலிருந்து, தலைமை செயளகத்திலிருந்து போன்… பக்கத்து மாவட்டத்தில் ஏதோ தீ விபத்து… தாங்கள் செல்ல வேண்டும் என…
பெரிதாக தூரம் இல்லை ஐம்பது கிலோமீட்டார் தொலைவில்தான்… பெரிய கல்லூரி… Ac ஆடிட்டோரியம்… மின்கசிவு… ஏதோ ஒன்று… பற்றிக் கொண்டது… தீ… இன்னும் அணையவில்லை… 
தொட்டு தொட்டு இன்னும் எரிந்து கொண்டிருந்தது…
அந்த மாவட்ட கலெக்டர்… விடுப்பில் சென்றிருந்தார் போலும்… வீராவிற்கு அழைப்பு வந்தது… 
முன்பே இவ்வளோ பெரிய விபத்து என தெரிந்திருந்தால் யாருடைய ஆணைக்காவும் காத்திருக்க மாட்டான் வீரா… ஆனால், மேலிடம் சொல்லவும்தான் விபத்தின் விபரீதம் தெரிந்தது…
அங்கு சென்றால்… நிலைமை தகறாராக இருந்தது… தீயணைப்பு வண்டிகள் வந்தும், இந்த இரண்டு மணிநேரத்தில் பெரிதாக முன்னேற்றம் இல்லை… உயிர் சேதம் நிறைய இருக்கும் என உள்ளே நுழைந்தான் வீரா…
ப்பா, வார்த்தையால் சொல்ல முடியவில்லை அங்கு. எங்கும், ஓல சத்தம்தான்… 
வீரா… சென்றதும், பெற்றோர் சூழ்ந்து கொண்டனர்… அவனால் அடுத்த நடவடிக்கையே எடுக்க முடியவில்லை… கோவமான மக்கள்… ஆவேசமான முகங்கள்… எங்கும் பரிதவிப்பு… 
அந்த இடம் நோக்கி செல்லவே வீராக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது… அங்கு சென்றால், அந்த பிரதேசமே சுட்டது… 
எல்லாம் மாணவர்கள்… கிட்ட தட்ட இருபது உயிர், சம்பவ இடத்திலேயே சென்றுவிட்டது… இன்னும் முழு விவரமும் தெரியவில்லை..
கண்ணில் நீர் வந்துவிட்டது வீராக்கு… அவர்களை பார்த்து. ப்பா… வெந்து… தணிந்து.. விரைத்து… ஐயோ! என கோவம் வந்தது நிர்வாகத்தின் மீது… 
இத்தனைபேர் படிக்கும் கல்லூரியில் தீ விபத்துக்கு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் வைத்திருந்தார்களா… ஆவேசமே வந்தது…
யாரிடம் என்ன கேட்பது… கல்லூரி நிர்வாகத்தினரும் அங்கேயே நிற்கின்றனர்… போலீஸ் பாதுகாத்து கொண்டிருக்கிறது… அவர்களை.
யார்.. என்ன.. முட்டி மோதினாலும்… என்ன செய்வது… உயிர்… போயேவிட்டது… அடுத்து என்ன… அதுதானே அவன் வேலை… துணிந்து, செயலில் இறங்கினான்… 
எல்லாம் இருபது வயதுக்குள் உள்ள குருத்துகள்… தொட்டு தொட்டு தீ பரவவும் எந்த பக்கம் செல்வது என தெரியாமலே பாதி, உயிர் சேதம்…
அடுத்து… உயிருக்கு போராடும் மாணவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்… அது போக, வர… என ட்ராபிக்கை திருப்பி விட்டு… இப்போதைக்கு அவசரமாக மருத்துவ குழு ஒன்றை இங்கு பக்கத்து பில்டிங்கில் முதலில் ஏற்பாடு செய்தான்…
அது தொடந்து… வந்த, பெற்றோருக்கு பதில் சொல்ல, தனியாக அங்கு மீதமிருந்த டீச்சர்ஸ்சை தயாராக்க… காணாமல், போன மாணவர்கள் குறித்து விவரம் கேட்க என பிரிவு அமைத்து… அதற்கான வேலைகளை ஒருபுறம் நடந்தது.
பின், உயிர் பிழைத்த மாணவர்களுக்கு முதல் சிகிச்சை இங்கேயே என தொடர்ந்து வேலைகள் நடந்தது…
அடுத்து முக்கியமானது, உடலான மாணவர்களை… உடற்கூறு செய்ய… ‘வேறு எங்கும் கொண்டு சென்று… மீண்டும் பெற்றோரையும்… அந்த உடல்களையும் அலைய வைக்காமல்’ அங்கேயே ஒரு தற்காலிக அரங்கம் அமைத்து அந்த வேலைகள்… தக்க பாதுகாப்புடன் நடந்தது…
அடுத்த கட்ட உதவிக்கு… என பொதுமக்களையும் தங்களுடன் சேர்த்து கொண்டு… அதற்கு நடுவில் மேலிடத்திற்கு அவ்வபோது தகவல்களையும் சொல்லி… என வீரா இம்மி நகரவில்லை… இயந்திரமானான்…
இரவுதான் முழு விவரமும் தெரிந்தது, சம்பவ இடத்தில் முப்பதுக்கும் மேல் உயிர்கள் சென்றுவிட்டது போல…. இன்னும் போராடும் உயிர்கள்… என 200 தொட்டது…
இப்பொது அதைதான் தாத்தா, பார்த்துக் கொண்டிருந்தார்… அதில் அத்தனை பொறுமையாக வீரா பேசிக் கொண்டிருந்தான்… பரபரப்பே இல்லை முகத்தில்… நிதானம் மட்டுமே… 
அத்தனை கேள்விகள் பத்திரிக்கையாளர்களிடமிருந்து…. இன்னும் mla வரவில்லை… அரசு அதிகாரிகள் பார்க்கவில்லை… 
இப்படி ஒரு நிர்வாகத்திற்கு எப்படி அரசாங்கம் அனுமதித்தது… 
ஏன் தீ தடுப்பு நடவடிக்கை கல்லூரியில் இல்லை… 
விழா என்றால் ஆம்புலன்ஸ் ஏன் இல்லை…
ஏன் தீயணைப்பு வண்டி, அழைத்ததும் வரவில்லையாமே… இந்த ஏரியாவில் தீயணைப்பு நிலையமே இல்லையா…
ஏன் mlaக்கள் யாரும் இன்னும் வரவில்லை… 
இழப்பீடு ஏன் இன்னும் அறிவிக்கவில்லை’ என அவன்தான் கடவுள் போல அனைத்தும் அவனுக்குதான் தெரியும் என்பது போல கேள்விகள்… 
அத்தனைக்கும் வீரா பொறுப்பாய் பதில் சொன்னான்… அவர்களை உதாசீனபடுத்தவில்லை… சற்று பண்பட்டிருந்தான் போல…. ஒருவழியாக இறப்பு குறித்து அறிவித்து… அதை தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பவர்கள் குறித்து புள்ளி விவரம் சொல்லி… ஹா… இப்போதுதான் அமர்ந்தான் வீரா…
ப்பா… மணி இரவு… பனிரெண்டை நெருங்கியது… காலையிலிருந்து இன்னும் உணவு எடுக்கவில்லை… அங்கிருந்த யாருக்கும் அதை பற்றி சிந்திக்க தோன்றவில்லை…
இனி அங்கு உயிர்கள் இல்லை… பொருட்கள்தான் என முடிவு செய்தது மீட்பு குழு. அதன் பிறகுதான்… அங்கிருந்த அதிகாரிகள் அறைக்கு வந்தான் வீரா…
தனது சட்டை பட்டனை கழற்றிக் கொண்டு அங்கிருந்த பேனின்.. கீழே அமர… இப்போதுதான் உடல் தண்ணீர் என கேட்டது… உடல் முழுவதும் தகித்தது…
யோசித்து பார்த்தான்… எப்படி இருந்திருக்கும் அந்த இளம் குருத்துகளுக்கு… தண்ணீரை குடிக்க குடிக்க… ஏதோ செய்தது உள்ளே… எல்லாம் வாமிட்டாக வர… வெளியே ஓடினான் வீரா… முழுதாக வாமிட் செய்து உள்ளே வந்தான்…
வீராவின் உதவியாளர்… தாமோதரன் ஓடி வந்தார்… உண்ண ஏதாவது கொடுக்கலாம் என இட்லி ஒரு பாக்கெட் தர… அதை பார்த்ததும் வீராக்கு கண்ணில் நீர் வந்தது…
“ட்ரிப்ஸ் போட சொல்லுங்க தாமு சார்… 
ப்ளீஸ்… என்னால சாப்பிட முடியாது” என்றான்.. 
அவரும் அங்கிருந்த டாக்டர், செவிலியரை அழைத்து… வீரா சொன்னதை செய்தார்…
அங்கு இப்படியிருக்க….
சென்னையில்… அப்போது வீரா அறிவித்த செய்தியெல்லாம் கேட்டவுடன் மனதே கனத்து போனது எல்லோருக்கும்…
அமைதியாகினர்…
ராகவ், ரவியை அழைத்தது வர சென்றார்… 
ரவிக்கு, வீட்டுக்கு வந்தபின்தான், விஷயம் தெரிந்தது. ஒன்றும் சொல்வதற்கில்லை யாரும்.. 
ரவி, வீராக்கு அழைக்க… போனை எடுக்கவில்லை அவன்…
தாமு, வீராவின் உதவியாளர்தான் பேசினார் “அவர், கொஞ்சம் வேலையா இருக்கார் மேடம்… அப்புறம் பேசுவார்” என சொல்லி வைத்துவிட்டார்…
வீராவின், தந்தையும் அழைத்தார் வீராவிற்கு. அவருக்கும் அதே பதிலை, அதே நபர்தான் சொன்னார்களாம்… யாருக்கும் ஒன்றும் புரியவில்லை…
அங்கு வீரா, ஒரு இரண்டுமணி நேரம் அமர்ந்திருந்தான், அதன் பின் ட்ரிப்ஸ் முடித்து, நேரே… அரசு மருத்துவமனை சென்றான்… அங்கு இருந்த அனைத்து மாணவர்களையும் கவனித்தான்… எப்படி சிகிச்சை நடக்கிறது என.. 
அந்த இரவு வேளையில் பெற்றோர்களிடம் பொறுமையாக பேசினான்… சில பெற்றோருக்கு மூச்சு… பேச்சில்லை…. அவர்களையும் கவனித்து, அவர்களுக்கும் தக்க மருத்துவம் செய்து…
கூடவே, சிகிச்சைக்கு இன்னும் தேவையான மருத்துவர்… செவிலியர்… மருந்து… இதற்கான ஏற்பாடுகளை துரிபடுத்த.. என நேரம் சென்றது…
விடிந்தது… 
இன்று இறந்த மாணவர்களின் தகனம்… கதறுகிறது, அந்த ஊர்….. ஆனால், அரசு ஊழியர்கள் மட்டும் கல்நெஞ்சமாய்… எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர்…
வீராவை இப்போது பத்திரிகையாளர்கள் நெருங்க…. மறுத்துவிட்டான் வீரா.. “பிறகு பேசுகிறேன்” என சொல்லி பொற்றோருடன் நின்று கொண்டு… அவர்களின் தேவைகளை கவனித்தான்… ஒரு கடைநிலை ஊழியனாக…
வீராவுக்கு மட்டுமல்ல… வீரா வீடு, பைரவி வீடு… இங்கும், எந்த கலகலப்பும் இல்லை… அமைதியாக இருந்தனர் அனைவரும் வீராவையே, டிவியில்  பார்த்தபடி.
யாருக்கும் ஏதும் தோன்றவில்லை.. அப்படி தோன்றினால் அது அபத்தம்தானே… எனவே கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தது… நம்நாடே…
“இதயம் என்பது சதைதான் என்றால் 
எரிதணல் நின்றுவிடும்….
அன்பின் கருவி இதயமென்றால்…
சாவை வென்றுவிடும்….” 

Advertisement