Advertisement

அமைதியாகினாள் பைரவி… “எப்படி ங்க… அப்பா… தாத்தா… உங்க தாத்தா எல்லோருக்கும், எவ்வளோ சொந்தகளை தெரியும்… அத்தனை பேரும் கேட்க மாட்டாங்களா… ;உன் பையன் கல்யாணத்துக்கு கூப்பிடலேன்னு…’ 
எப்போதும் நீங்க உங்களை மட்டும்தான் யோசிப்பீங்களா…” என்றாள்…
“வீரான்னே சொல்லு… நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றான் அவளை பார்த்து…
அவளும் “ஏன், அப்படியும் கூப்பிடுவேன்… ஏதாவது.. சொல்லித்தான் பாருங்களேன்…” என்றாள் தயங்காமல்…
வீரா, அதனை பெரிது படுத்தாமல்… “எனக்கு இப்படிதான்… ரவி, மாலை, மந்திரம், பூஜை, இதிலெல்லாம் பெரிதா… ஈர்ப்பு இல்ல ப்பா…….
அங்க வந்து, எல்லா செய்யனும்… என்னால் முடியாது… ரவி… 
ப்ளீஸ்… நான் ஒன்னு ஒன்னுக்கும் சத்தம் போடுவேன்… தயங்குவேன்… ஏதோ தப்பு செய்ய மாதிரி தோணும்…
என்னை விட்டுடேன்… இந்த ஒரு விஷயம் மட்டும்…….” என்றான் மன்றாட்டமான குரலில்…
பைரவிக்கு என்னமோ தோன்றியது… அவளின் மூளை இப்போது எதையோ யோசித்தது.. ‘அப்போ இவர்…இதெல்லாம் சொல்லத்தான் இப்போதும் பேசினாரா…’ என எப்போதும் போல எண்ணம் வந்தது…
அந்த இருட்டில் அவனின் முகம் பார்த்து இதனை சிந்திக்க… வீராவின் பயிற்சியும் அவளின் சிந்தனையை, அவனுக்கு உரைத்ததோ… “என்னடி யோசிக்கிற” என்றான் இத்தனை நேரமிருந்த இலகுவை கைவிட்டு…
“ஏன் உங்களுக்குத்தான் புரியுது போலவே” என்றாள் அவளும்… மறைக்காமல்…
“ரவி………. “ என சொல்லி எழுந்து நின்று கொண்டான்.
அவளும் ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகிவிட்டாள்… 
ஒரு பெருமூச்சு வந்தது… அவனே “எனக்கு, டைமில்ல.. ரவி…
எ… எனக்கு உன் லவ் தான் வேணும்…
ஆனா, நான் அத எப்படி கேட்கறதுன்னு தெரியலை…. சொல்றதுன்னு தெரியலை…..
அதனால்தான்…. உ… உன்னாலதான் என்னை பு…ரிந்துக்க முடியும்ன்னு…
ஏதோ உன்னால, என்னை புரிஞ்சிக்க முடியும்னு நினைச்சி சொன்னேன்…..
ச்சு………. இல்ல…… பரவாயில்ல…
நீங்க எல்லோரும் என்ன சொல்றீங்களோ ஒகே…….. 
எப்படின்னாலும் எனக்கு நீ வேண்டும்……… ப்ளீஸ்……. டிரஸ்ட் மீ…..
பை…” என்றவன் கிளம்பிவிட்டான் திரும்பியும் பார்க்காமல்… 
பைரவியும் அழைக்கவில்லை… என்ன சொல்லி அழைப்பது என தெரியவில்லை… அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
வீரா, அங்கு தூங்கி கொண்டிருந்த, அவனின் டிரைவரை எழுப்பிக் கொண்டு தனது இருப்பிடம் நோக்கி சென்றான் வீரா. தனது பணிக்கு காலையில் செல்ல வேண்டுமே…
அவன் செல்லும் வரை… தன் வீட்டு வாசலிலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்… பின், கூர்க்க.. விசில் ஊதி வரும் சத்தம் கேட்கவும் தன் அன்னைக்கு அழைத்து… உள்ளே சென்றாள்.
நாட்கள் இப்படியே கடந்தது.. 
அவளுக்கு மட்டும் தயக்கமாக இருந்தது வீராவிடம் பேச… சொல்லி சென்றுவிட்டான் எல்லாவற்றையும். எனவே, என்ன செய்வது என தெரியவில்லை.. ஆனாலும் பேசவில்லை அமைதியாக இருந்தாள்.
வீட்டில் எல்லோரும் வீராக்கு, அழைத்து.. ஓய்ந்துபோய்… ஒரு வழியாக எல்லோரும் பைரவியை கேட்டனர்.. ‘எங்கு திருமணம்.. எப்படி’ என.
அப்போதுதான் புரிந்தது… ஆக, அவன் பேசமாட்டான்.. ‘எப்படியோ நீ பார்த்து செய்’ என சொல்லி சென்றிருக்கிறான் என அப்போதுதான் புரிந்தது… அவளுக்கு.
அவளும் முகம் மாறாமல்.. “கல்யாணம் அவர், சொல்ற மாதிரி நடக்கட்டும் மாமா…
நம்ம இங்கேயே ரிசப்ஷன் கிராண்டா பண்ணிடலாம்..
நான் அப்பாட்ட பேசறேன்…
இங்கே செய்துக்கலாம் மாமா…” என இருமுறை அழுத்தி சொன்னாள்…
லிங்கமும் “ஒன்னும் பிரச்சனையில்லையே..” என்றார், அவளின் குரல் பேதத்தை உணர்ந்து. கவலை தோய்ந்து இருந்ததோ… அவரின் குரல்.
பைரவி “அதெல்லாம் இல்ல மாமா…
நாங்க, இங்க ஹோட்டல் பார்க்கிறோம்.. 
அதான் ரிசப்ஷன் கிராண்டா பண்ண சொல்லிட்டாங்களே… ஒன்னும் பிரச்சனையில்ல மாமா…” என்க..
லிங்கம் “நான் பார்த்துக்கிறேன் ம்மா… எல்லாம்.. 
நம்மகிட்ட ஆளுங்க இருக்காங்க… நான் ஏற்பாடு பண்றேன்… அந்த முதல் தேதி ஒகே தானே டா…
நீ சந்தோஷமா இரும்மா…
எதுக்கும் அலட்டிக்காத… 
மாமா, இது வேணும்னு சொல்லும்மா… செய்திடலாம்… 
அவன், ஒ…ன்னும்…. ஏதும் பேசிடலையே…” என்றார் வாஞ்சையாய்…
“அதெல்லாம் இல்ல மாமா… நான் நல்லா இருக்கேன்… அவர் டெய்லி நைட் பேசிடுவார் மாமா… நீங்க, வேலைய பாருங்க… மாமா” என்றாள். ப்பா இப்போதுதான் எல்லோருக்கும் திருப்தி…
அதன்பின் நேரம் நிற்கவில்லை… ராகவ், அன்று கிளம்பியிருந்தார்… இரவே வந்துவிடுவார் சென்னைக்கு…. எனவே வேலைகள் ரெக்கை கட்டி பரக்க தொடங்கியது…
அடுத்தடுத்து.. சரியாக இருந்தது வேலைகள்… தாத்தா… ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்தார்… கூடவே ஆஸ்ரமம் சென்று, சொல்லி வந்தார்… எனவே அவரும் அமர முடியாமல் அலைந்தார்.
வீரா வீட்டினர், அடிக்கடி சென்னை வந்தனர்… பத்திரிக்கை வைக்க, புடவை எடுக்க… விழாவின் ஏற்பாடுகள் கவனிக்க என அவர்கள் வந்து செல்ல… தண்டபாணி தாத்தா வீடு வசதியாக இருந்தது அவர்களுக்கு..
அர்ச்சனா எல்லாவற்றுக்கும் பொறுப்பாக வந்து ஆசையாக செய்தாள்…
அஞ்சலியும் பெரிதாக அலட்டாமல்.. தேவைக்கு வந்து நின்றாள்… அஞ்சலிக்கு, வீரா பற்றி தெரியாது.. காற்று வழி செய்தியாக கேட்டது மட்டும்தான் தெரியும்… 
ஆனால், இப்போது புரிந்தது.. அவன் விருப்பமின்றி.. அங்கு துரும்பும் அசையவில்லை… அப்படிதான் நடந்தது… 
பங்ஷனுக்கு உடை கூட இன்னும் வாங்க வரவில்லை அவன்… நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது.. இன்னும் பதினைந்து நாட்கள்தான் இருந்தது… 
எல்லோரும் இப்போது ரவியை கேட்க தொடங்கினர்… ‘எப்போ வரான்’ என, என்ன சொல்ல முடியும்… இன்னும் பேசவேயில்லையே அவனிடத்தில், அவள்…
இன்று பேசிவிட வேண்டும் என… அழைத்தாள் மாலையே.. ஒரே ரிங்கில் எடுத்தான். “அர்ஜென்ட்டா…” என்றான்… 
“இல்லைங்க…” என்க… “சரி, அப்புறம் கூப்பிடறேன்… கொஞ்சம் வேலை” என்றவன் வைத்து விட்டான்.
இவளுக்கு வேலையே ஓடவில்லை… கோவமோ… என இத்தனை நாள் இல்லாத எண்ணம் இப்போது வாட்டியது.
ஒரு வழியாக… இரவு அழைத்தான்… அன்றிலிருந்து அவனும் அழைக்கவில்லை அவளுக்கு… எதிர்பார்ப்புடன்தான் போனை எடுத்தால் ரவி.
ரவி “ஹலோ” என்க…
அவனும் “ரவிம்மா………. “ என்றான் ஏக்கமான குரலில்… வீரா.
அவளுக்கு, கண்ணகள் அனிச்சையாய் நனைந்தது… பேசவே வரவில்லை… ‘என் மீது கோவமே வரவில்லையா’ என தோன்றியது அதன் குற்றயுணர்ச்சி தாக்க “ம்……” என்றாள் முனகலாக..
“என்ன, என்னாச்சு…. சொல்லுடி…” என்றான் திமிராய், அது வெட்கமோ.. தயக்கமோ என எண்ணி…
“ம்… ஒண்ணுமில்ல, சாரி, நா…நான் அன்னிக்கு அப்படி யோசிச்சிருக்க கூடாது” என்றாள் தயக்கமாக..
“நானும் என்னை பற்றி சொல்லாமல்.. கல்யாண விஷயத்தை முதலில், பேசியிருக்க கூடாது……. அதான் தப்பாகிவிட்டது… நீ போனே செய்யல.. இத்தனை நாள்…. ம்….
அதெல்லாம் விடு, உனக்கு என்னை புரிந்தால் சரி….” என்றான் அமைதியாக அவளை சமாதனபடுத்தும் எண்ணத்துடன்… பதட்டமாக அவனே அனைத்தையும் சொன்னான்.
மீண்டும் அமைதி, அவளிடம்… 
இவனே பேச்சை மாற்ற எண்ணி  “என்ன, எனக்கு யாருமே போன் செய்யல….” என்றான் சிரிப்பு இருந்தது அவனின் குரலில்…
“ம்….. அதான் உங்களுக்கும் சேர்த்து என்கிட்டே பேசுறாங்களே…” என்றாள் சற்று கோவமாக….
“தேங்க்ஸ்… மனேஜ் பண்ணிட்ட போல…” என்றான்… ஆழ்ந்த குரலில்.
“அப்புறம் என்ன செய்யறது… கெஞ்சினா, கதறுணா… பாவம்ன்னு விட்டுட வேண்டியதுதான்…“ என அவள் வம்பிழுக்க…
“எப்படியோ காரியம் ஆனால் சரி…” என அவன் சிரிக்க…
“இருங்க ரிசப்ஷனில்… குதிரைலதான்.. நீங்க வரீங்க… கூடவே நாதஸ்வரம்.. பான்ட்… செண்டை மேளம் எல்லாம்.. 
கூடவே பட்டாசு… வைச்சு… அப்படியே அந்த குதிரை ஓட்டமெடுக்க… நீங்க பயந்து…. ” என சொல்லி சிரிக்க….
“அடியேய்ய்…….. என்னடி… இப்படி பழிவாங்கற…” என்றான் அலறலாக…
“பின்ன.. எல்லோரையும் எப்படி படுத்துறீங்க தெரியுமா… நீங்க… 
கல்யாணம்னா எப்படி இருக்கணும் மஞ்சள் குங்குமம்.. சந்தனம், அட்சத… மந்திரம், ஹோமம்.. ஆசீர்வாதம்… கெட்டிமேளம்.. அம்மி மிதிச்சு.. மெட்டி போடுவீங்கன்னு பார்த்தா… ஒண்ணுமேயில்ல… இப்படி எதுவுமே இல்லாமல் கல்யாண செய்ய சொல்றீங்க… தாலியாவது நீங்க கட்டுவீங்களா…” என்றாள் விளையாட்டாய் ஆரம்பித்த குரல்… சந்தேகமாக… ஆற்றமையாக… தீராத.. கோவமாக முடிந்தது…. கேட்டேவிட்டாள்… எல்லாவற்றையும்.
பேசவேயில்லை வீரா அமைதியாகினான்…
“சாரி.. சாரி…. சாரி…..” என்றான் தொடர்ந்து…
இன்னும் நிலைக்கு வராமல் இருந்தாள், மூச்சுவாங்கியது ரவிக்கு… 
அமைதியாக இருந்தாள்… அவனே “ப்ளீஸ்.. வேற ஏதாவது கேளு… இனி இத பேசாத…
எனக்கு என்னமோ இதெல்லாம் மனசுல வேண்டாம்ன்னு எப்போவோ பதிஞ்சிடுச்சி…. சாரி.. சாரி…..” என்றான் வேறு என்ன சொல்லுவது என தெரியாமல்…
மீண்டும் அவனே “ப்ளீஸ்.. வேற ஏதாவது கேளு…” என்றான் இரண்டாவது முறையாக…
“ம்……. என்ன கேட்கறது உங்ககிட்டேர்ந்து…… என்ன வைச்சிருக்கீங்க… நான் கேட்கற மாதிரி” என்றாள் தானே சமாதானம் ஆகி… வெடு வெடுவென…
வீரா “ம்…ஹா….. அப்படி கேளு… என்ன இருக்கு என்கிட்டே…. 
எப்போடா இந்த புள்ள நம்மகிட்ட பேசும்ன்னு.. தவமிருக்கிற காது… 
என்னை தொடமாட்டாலான்னு ஏங்கியிருக்கிற என் கேசம்…
ப்பா… எப்போடா இவ சுடி போடுவான்னு காத்திருக்கிற கண்கள்… அத்தோட.. அப்டியே… சின்னதா கட்டிக்க மாட்டாளான்னு காத்திருக்கிற நான்… முழுசா… நான்…. மொத்தமா 78kg தான்… ரவிம்மா… 
அன்னிக்கு அவ்வளோ ஆசைப்பட்டேன்… கொஞ்சம் கூட மனமிரங்கல நீ… மோசக்காரி…. போடி… இதுல என்ன இருக்குன்னு கேட்கற….. ம்……. “ என பெரிதாக குறைபட…
அவன் முன் நிற்கவில்லை, இல்லையெனின் பைரவி கரைந்திருப்பால்.. அவ்வளவு குளிர்ந்திருந்தால் அவன் பேச்சில். 
வார்த்தையே வரவில்லை… சுதாரித்து “போதும்.. எனக்கு தூக்கம் வருது… பை” என நல்ல குரலில் சொல்லி வைத்துவிட்டாள்.
இதெல்லாம் பைரவியின் கொள்கைகளுக்கு முரண்பாடானது.. எப்போதும் தான் நினைத்ததை செய்து பழக்கப்பட்டவள்… 
ஆனால், இன்று அவனுக்காக, தன்னவனுக்காக.. எல்லாம் மாறுகிறது… மாற்றுகிறான்… புரிகிறதுதான். ஆனால்.. மனம் இனிக்கதானே செய்கிறது…
அன்பு சகலத்தையும் தாங்கும்… சகலத்தையும் ஏற்கும்…

Advertisement