Advertisement

எனக்கானவளே நீதானே…
14 
(வசமிழக்கும் வானம் நான்….)
பைரவிக்கு, அவன் சொல்லி சென்றதும்… ‘அப்பாடா’ என்றானது… கோவமாக இல்லையோ, தன்னுடன் பேசுவானோ… எப்படியோ ஒத்துக் கொண்டானே.. என பல யோசனை ஆனாலும் பைரவிக்கு, சற்று நிம்மதி. 
இவர்கள் பேசுவதை பார்த்து அங்கிருந்த பெரியவர்கள்.. அவர்களை கண்டும் காணாமல் அடுத்த திட்டமிடலை தொடங்கினர்..
மாலையில் ஐந்து மணிக்கு விழா.. இரு குடும்பமும் கிளம்பியது… 
பைரவி, தங்களின் டஸ்டரில்… தன் குடும்பத்துடனும்… வீரா, தன் வண்டியில் தன் பெற்றோருடனும் கிளம்பினான்…
பாராட்டுவிழா இனிமையாக தொடங்கியது… வீராவை, குறித்து மூத்த அதிகாரிகள் பாராட்ட.. அதை தொடர்ந்து ‘எங்கள் மாணவர்’ என அந்த அகாடமியின்… நிறுவனர் புகழுரை இயம்ப… அதன்பின், ஒரு பாராட்டு பத்திரம் கொடுத்து வீராவை கௌரவித்தனர்…
அடுத்து வீராவை.. தன் அனுபவம் பற்றி பகிற அழைத்தனர்… வீரா, பேச தொடங்கினான்…  முதலில் சுந்தரம் தாத்தாவைத்தான் பாராட்டி பேசினான்… பின்பு தன் அனுபவம் குறித்து பேசினான்… அதற்கே நேரம் சென்றது..
நேரம் கடக்க… வீராவின் பெற்றோர் ஊருக்கு செல்ல வேண்டுமாதலால் அவனிடம் தலையசைத்து விடை பெற்றனர்… 
தாத்தாவால் அமர முடியாமல் போக… “நான் கிளம்புகிறேன் கோதைம்மா… “ என சொல்லி டாக்ஸி புக் செய்ய சொல்ல….
அப்படியே, ஐஸ் “ம்மா… போர்ரிங்” என்றாள்… எனவே, பைரவியின் குடும்பமும் கிளம்பியது… டாக்ஸி புக் செய்து… 
நேரம் கடந்து கொண்டிருந்தது… இவர்கள் அங்கிருந்த மாணவர்களுக்கு வழிமுறைகள்… அனுபவங்கள்.. சொல்லி அமர்ந்தான் வீரா… 
அதன்பின் பைரவி பேசினாள்… இப்படியாக விழா முடிய, ஒன்பதரை… இரவு டின்னர் அங்கேயே முடித்து… வீரா, மற்றவர்களுடன் பேசி.. அவர்களுக்கு விடை கொடுத்து வர அடுத்த ஒருமணி நேரம் சென்றிருந்தது…
ஆனால், எங்கேயும் பைரவியை விடாமல் அருகில் அமர்ந்த்திக் கொண்டான்.. பொதுவாக அவளை அமரவைக்க முடியாது… 
ஆனால், காலையில் அவன், சற்று.. இறங்கி வந்தது… கூடவே, இப்போது எல்லோரின் பாராட்டையும் அலட்டாமல் ஏற்று.. என, தன்னருகே அமர்ந்திருப்பவனை பார்க்க, சற்று கர்வமாகவே இருந்தது.. ஆனாலும், முகத்தில் எதையும் காட்டாமல் அமர்ந்திருந்தாள்…
அப்போது அவர்களின் நிறுவனர், மற்றும் அங்கு பணி செய்பவர்.. எல்லோரும் ஒரு குறு குறுப்புடன் ‘இது யார்’ என்னும் விதமாக பைரவியை பார்க்க… 
அதற்காகவே காத்திருந்த வீரா… தயங்காமல்… மறைக்காமல்.. ‘தனக்கு பார்த்திருக்கும் பெண், இவளைத்தான் திருமணம் செய்ய போகிறேன்’ என சொன்னான்.. 
அடுத்து, அவர்களுக்கு வாழ்த்து சொல்லி.. வீராவை, பற்றி பைரவியிடமே புகழ்ந்து… என அந்த இடம் கலகலப்பாக… நகர முடியவில்லை இருவராலும்…  இப்படியே இவர்கள் கிளம்ப அடுத்த ஒருமணி நேரமாகியது…
பைரவியின் டஸ்டரை, இவர்கள் விட்டு சென்றதால்… பைரவி, வண்டியெடுக்க செல்ல “கொடு” என கீ வாங்கி… வீரா, வண்டியெடுத்து வந்தான்…
எல்லோரிடமும் விடை பெற்று, வண்டி நகர தொடங்கியது… மிதமான போக்குவரத்து… பொறுமையாக வண்டியோட்டினான்… அவளின் சாதகன்…
பொறுமையாக, அமைதியாக… அந்த பாடி, ப்ரிஜ்ஜில்… வண்டியை மெல்ல அண்ணாநகர் நோக்கி நகர்த்தினான்…  
இப்போதும், இருவரும்… பேச… அந்த ஈகோதான்… தடுத்தது.
மனமெல்லாம் சாதனையின் வண்ணம் நிரம்பியிருந்தது…. அத்தோடு அவளின் முன்னிலையில்… அது இன்னும் அவனை நிறைத்திருந்தது.
ஆனால் ‘அன்று’ என வீராவின் உள்ளம் கொஞ்சம் பழசையும் நினைத்தது… 
இப்போது தனக்கு தானே… வீராவின் உள்ளம்.. எதையோ சொல்லிக் கொண்டது.. அன்று போலீஸ் ஸ்டேஷனில்.. இவளை பார்க்க முடியாமல் தலை தாழ்ந்த… நிலை, மாறியிருக்கிறதுதானே.. இப்போது… தலை நிமிர்த்தி… உள்ளுக்குள் உள்ளவளை, தன்னவளாக்கிக் கொள்ளும்  நிலைக்கு வந்திருக்கிறேன்தானே… என மனம் பெருமிதமே கொண்டது.. 
ஆனாலும், என்னை இன்னும் பார்க்கவில்லை அவள்… ஒருவார்த்தை பேசவில்லை அவள்… என மனம் அடித்துக் கொண்டது… அவனுக்கு.
பைரவிக்கு, மனமெல்லாம் அவன் வாசம்தான்.. அவளுக்கும் அதே எண்ணம்தான் ‘அன்று ஸ்டேஷன் வாசலில் நடக்க முடியாமல்… ஒருவரை பற்றியபடியே வந்தவன்… என்னை நிமிர்ந்தும் பார்க்காமல் நின்றவன்.. இன்று.. முழுவதுமாக மாறி… அத்துனை பேரின் வாழ்த்துகளையும் பெற்று… நிற்கிறான்.. 
ஆனால், என்னால் இன்னமும் பேச முடியவில்லையே… ஏன்! அவன்தான் ஒரு வார்த்தை பேசினால் என்ன…’ என அடித்துக் கொண்டதுதான்.. ஆனாலும் அலட்டிக் கொள்ளவில்லை இருவரும்… இது அவர்களின் இயல்பும்தானே… ஆனால், இவர்களுக்காக.. அந்த மியூசிக் சிஸ்டம் அலறியது…
“கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்கவை…
கொஞ்சும் உன் வார்த்தையால்…
என் காதலை நீ மிதக்க வை…
என்னோடு நின்று கொள்ள டி.
விலகி செல்ல வேண்டுமோ…
என்னோடு சேர்ந்து செல்லடி…
பிரிந்து போக வேண்டுமோ…” என சத்தமாக அலறியது…
பைரவிக்கு… பாட்டு மனதில் சுழல தொடங்கியது…
வீடு வரவும், வண்டியை ஓரமாக நிறுத்தினான்.. வீரா.
அவள் இறங்கி, தயக்கமாக “பை…” என சொல்ல… 
அவனும் இறங்கினான்.. விழாவிற்காக அணிந்திருந்த கோட்டை அவளை பார்த்துக் கொண்டே நீக்கிக் கொண்டிருந்தான் தன்னிடமிருந்து… அந்த பார்வை ஏதோ செய்ய… திரும்ப முடியவில்லை பைரவியால்…
ஆனாலும், என்ன கேட்பது அவனிடம்.. என எண்ணி, திரும்ப… “ ஒரு நிமிஷம்“ என்றான் விலகலான குரலில்…
அவளும் திரும்ப… முகமூடி இல்லா வார்த்தையால் “எ…. எனக்கு இந்த கல்யாணத்தில்..
ம்….. மந்திரம்.. மாலை… கோவில்.. இதெல்லாம் வேண்டாம்… 
அந்த ரிசப்ஷனே…. 
உ… உனக்காகத்தான் அந்த ரிசப்ஷன்… தெரி.. தெரியுமில்ல…” என நிறுத்தினான்.. அவளுக்குத் தன் நிலை தெரியுமோ தெரியாதோ என நினைத்து…
நிமிர்ந்து அவனை உற்று பார்த்து… கண்களை மூடி திறந்தாள்… பைரவி.
இவனுக்கு, கோவம் ‘அப்படியே திமிர்… இவள் கண்ணையே பார்த்திட்டிருக்கனுமா… ஏதாவது பேசினா.. என்ன.. முத்து உதிர்ந்திடுமோ…’ என தோன்றினாலும் ‘எங்க இன்னொரு முறை செய்யேன்னு’ உள்ளுக்குள் அடித்துக் கொண்டது… அவனுக்கு.
அவனின் அமைதி, இவளை ஏதோ செய்ய “சொல்லுங்க “ என்றாள் பொறுமையாக…
அவளை முறைத்தபடியே “அதனால… பார்த்து பேசிக்க… 
அப்பா, எதையாவது பெருசா செய்திடுவார்… 
எனக்கு எப்போ டைம் இருக்கும்னு தெரியாது.. அதனால, அவங்க பேசற நேரத்தில் என்னால் பேச முடியாது… 
நீ மேனேஜ் செய்துக்க… 
ரெஜிஸ்டர் மேரேஜ்… 
அப்புறம்… இங்க, இருக்கிற ஆஸ்ரமத்தில் லஞ்ச்… 
வீட்டு மனிதர்கள் மட்டும்தான்.. 
பட்டு, நகை எதுவும் கூடாது.. ஆடம்பரம் கூடாது… “ என சொல்ல சொல்ல… இவ்வளவு நேரமிருந்த தைரியம் எல்லாம் காணமல் போனது பைரவியிடம்… கண்கள் கலங்க தொடங்கியது… 
’அப்பா, தாத்தா.. எல்லாம் என்ன சொல்லுவார்கள்… மேலும்.. எப்படியெல்லாம் ஆசையிருக்கும் எனக்கும்…’ என நினைக்க நினைக்க அவன் காலையில் பேசியதை விட, இப்போது இன்னும் வலித்தது… 
அவனிடம் சண்டைக்கு செல்ல தோன்றவில்லை… ’என்னை தெரியும், உனக்கு’ என என்னிடம் சொல்லுகிறான் அனைத்தையும்… எப்படி சண்டை போடுவது.. 
ஆனாலும்.. பெரியவர்களுக்கு, அத்தோடு எனக்கு… என தோன்ற கண்ணில் நீர் நிறைந்தது… சட்டென திரும்பினாள்… அதை மறைக்க… கண்டு கொண்டான், இரவில், அந்த நியான் விளக்கில்… மின்னிய கண்ணீர் வைரத்தை…
அவள் திரும்பவும் “ஹேய்… ரவி…” என சொல்லி அவளின் முழங்கையை பிடிக்க.. அவளால் திரும்ப முடியாமல் அவனின் புறம் திரும்ப… இன்னும் கண்கள் கலங்கியது…. நீர் கன்னமிரங்க தொடங்கியது…
அக்கம் பக்கம் சுற்றியும் பார்த்தான்… ஈ…காக்கா… இல்லை… அவளை முரட்டுத்தனமாக தன்னை நோக்கி இழுக்க… தடுமாறி விழுந்தாள் அவன் மேலேயே.
ஆனால், அப்பவும் “என்ன பண்றீங்க” என அவள் கடிக்க… 
சிரிப்பு வந்தது.. கலெக்டருக்கு… “என்ன டா, பண்ணாங்க உன்னை… சும்மா…” என சொல்லி அவளை தோளோடு அணைக்க… திமிறி விலகினாள்… 
அவளை விட்டு, அவளின் கையை பிடித்து.. அவன், சாய்ந்திருந்த காரின் மீதே சாய்த்துக் கொண்டான் அவளையும்… “ப்ளீஸ்… ரிசப்ஷன்ல எது வேணா செய்துக்க… 
ஆனால், இதில் விட்டுடு. ப்ளீஸ்….” என்றான் அவளின் கண்ணீர் பார்த்து… இறங்கியது அந்த… வீராப்பு… அவனிடம்… மெல்ல சிறைஞ்சினான்…
ஆனாலும், தொடர்ந்தான் “நீ பாரதி பெண்தானே…..
‘மானம்…. சேர்ப்பது மனைவியின் வார்த்தைகள்’ தானாம்…
நீதானே என் மனைவி…
எனது கொள்கை காக்க மாட்டாயா…” என்றான் ஆழ்ந்த குரலில்.. அவளின் பிடித்த கைகளை விடாமல்…
அவனை முறைத்தபடியே சிரித்தாள்… “தப்பா சொல்லாதீங்க…” என்றாள்.. கண்ணீர் காணவில்லை இப்போது… குற்ற பார்வை பார்த்தாள்.. கன்னி தமிழ்.
அவனும், அவள் சொல்லும் அர்த்தம் புரிந்ததால், சிரித்தான் கூடவே “என்ன தப்பா சொல்லிட்டேன்” என்றான்… அவளின் பதிலை அறியும் ஆவலில்.
தன் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.. அவனும் அவளுடன் நடந்தான். அவள், அந்த வராண்டா படிகளை கடக்க… அவன் அமர்ந்து கொண்டான்… படியில், அவளையும் கை பிடித்து இழுத்து அமர்த்திக் கொண்டான் “என்ன… தப்பு” என்றான்… சிரிப்பு இன்னும் மாறாமல்…
“மானம் சேர்ப்பது மனைவியின் வார்த்தைகள்தான்…
அதாவது மனைவி, கணவனுக்கு சொல்ற அறிவுரைகள்.. அவனை, தீயவழி செல்லாமல் தடுக்கும்.. அதுதான் பொருள்… 
அதாவது நான் உங்க மனைவின்ன… நான் சொல்லும் அறிவுரைகளை நீங்க கேட்டு நடந்தா… உங்ககுக்கு… பொது இடத்தில் மதிப்பு இருக்கும்… அதான் மானம் சேர்ப்பது மனைவியின் வார்த்தைகள்…
ஆனா, நீங்க இப்படி செய்ன்னு சொல்லி, நான் செய்வது இல்லை… “ என சொல்ல… 
அகப்பட்டுக் கொண்ட… குழந்தையாக சிரித்தான்… ஆனாலும், தன் மீசையை தடவியபடியே, “அதானே… உன்கிட்ட ஜெய்க்க முடியாதுன்னு தானே… நீயே, சொல்லி என்னையும்… என் கொள்கையையும் காப்பாத்துன்னு சொல்றேன்..” என்றான் இன்னும் கீழே விழாத குரலுடன்… 
 
 

Advertisement