Advertisement

எனக்கானவளே நீதானே…
13 
(வசமிழக்கும் வானம் நான்….)
பைரவியின் சிந்தனை மட்டும் தீரவேயில்லை… 
நேரம் கடந்தது… வீரா, அதிகாலையே இரண்டு மணிக்கு வந்துவிட்டான். ஆம், காரில்தான்… அலுவலக வண்டி எடுக்கவில்லை. தன் தந்தையிடம் கேட்டு… அங்கிருந்து ஒரு ஓட்டுனருடன்… வண்டி, அவனை அழைத்து சென்னை வந்தது…
வீரா, இப்போது எழுந்து தாத்தாவுடன் ஜாக்கிங் சென்று வந்துவிட்டான்… தாத்தாவை இப்போதுதான் நேரில் பார்க்கிறான், இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு… 
போனில் நிறைய பேசி இருந்தனர் இருவரும், தனது அகாடமி விழா குறித்து. இப்போது, நேரில் பார்க்கவும் சிறிது வெட்கம்தான் முதலில் வந்தது.. வீராக்கு.
அந்த அரை இருளில்… அவனின் நிமிர்வான வெட்கம்… தாத்தாவை ஈர்க்க அப்போதே “இனி வீராவ, மரியாதையாதான் கூப்பிடனும், வாங்க மாப்பிளை” என்றார் கேலி குரலில்..
வீரா “தாத்தா….” என்றான் அழாகா.. ராகமாக… எல்லா உணர்வுகளையும் விட்டு…
“ஹா….ஹா…. “ என சற்று பெரிதாகவே சிரித்தார் தாத்தா… பின் “அப்பா அம்மா கிளம்பிட்டாங்களா” என்றார்… 
“ம்…. வந்திட்டிருக்காங்க தாத்தா…” என்றவன் “நான் ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடரேன்” என்றபடி அவரை, கடந்து ஜாக்கிங் சென்றான்….
பின் எப்போதும்போல, அவருடன் சற்று நேரம் அரசியல் பேசியபடியே மெதுவாக நடந்தான்… வீடு வரவும் “வா வீரா… காபி குடிச்சிட்டு போ” என்றார்…
“இல்ல தாத்தா அப்பா வரட்டும், நான் ரெடியாகி வரேன்..” என்றான் சிரித்தபடியே… தாத்தாவும் ஏதும் சொல்லாமல் உள்ளே வந்தார்…
எப்போதும் சண்டே சீக்கிரம் எழாத ஐஸ், இன்று மிக சுறுசுறுப்பாக ஹாலில் ஏதோ ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்… அதை பார்த்த தாத்தா, ஐஸிடம் “என்ன வேலையெல்லாம் செய்யற… அதிசையமா இருக்கே…” என்றார் வம்பிழுக்கும் எண்ணத்துடன்…
ஐஸ் “தாத்தா, வீராண்ணா வராங்க… இனி வீரா மாமா… அதான், ஸ்பெஷல் கவனிப்பு…” என அவளும் அலட்டாமல் பதில் சொல்லியபடியே ஷோபா குஷனை சரிசெய்து கொண்டிருந்தாள்.
அதற்குள் மேலே சென்ற கோதை, பைரவியை… எழுப்பினார்  “ரவிம்ம… வீரா, வீட்டிலிருந்து வந்திடுவாங்க டா… எல்லோரும்.
நீ, எழுந்து குளித்து ரெடியாகுடா…” என்றார் வாஞ்சையாய்.
தூக்க கலக்கத்துடனேயே “ம்மா… யாரும்மா வரா… அவங்க அப்பா அம்மாதானே..” என்றாள்…
“ஆமாம் டா… எல்லாம் பேசறதுக்காக வராங்க… வீரா மாப்பிளையும் வருவாறுள்ள… அதான்… இப்போவே பேசிடலாம்ன்னு…
வா… நீ ரெடியாகு… அவங்க வந்திடுவாங்க… காலையில் டிபன் இங்கதான்ன்னு சொன்னாங்க… வா ரவி” என்றார்.
அவளும் எழுந்து… தன்வேலைகளை செய்ய தொடங்கினாள்…
கோதை கீழே சென்றார்… தன் வேலைகளை கவனிக்க.
நேரம் இப்படி ஆனந்த பரபரப்பில் செல்ல… சரியாக எட்டரை மணிக்கு… எல்லோரும் வந்துவிட்டனர்… முறையான வரவேற்பு.. தாத்தா, கோதை தர… வீரா, எப்போதும் போல ஒரு ஷார்ட்ஸ் டி-ஷர்டுடன் பந்தா இல்லாமல் அமர்ந்தான்… அங்கு.
வைத்தியலிங்கம் வரும்போதே திட்டியபடியே வந்தார்.. “ஏன் டா… மாப்பிளை மாதிரி வாடா… இப்படியே வர…” என கடிந்து கொண்டார்தான்… எப்போதும் போல அவர் பேச்சை காதில் வாங்காமல்தான் வந்தான் வீரா…
கோதை “வாங்க மாப்பிள்ளை” என சிறப்பாக அழைக்க 
வீரா, மெல்லிய குரலில் “ஆன்ட்டி… ப்ளீஸ்..” என்றான் சங்கடமாக… 
கோதை “அதெப்படி… எங்க மாப்பிளை என்ன சும்மா வா… கலெக்டர்… அத்தோட அந்த பந்தா கொஞ்சமும் இல்லாதவர்… அதனால கண்டிப்பா… இனி மாப்பிளைதான்” என்றார் சிரித்தபடியே…
கல்யாணி “என்ன அண்ணி… நீங்க வளர்த்தவர் போல… எப்போதும் போல கூப்பிடுங்க…” என்றார் தன் மகனின் அவஸ்த்தை பார்த்து… அன்னை சொல்ல…
எல்லோரும் சிரித்தனர்.
இப்படியான பேச்சுகள் நீள….. கோதை “ஐஸ்… அக்காவ கூப்பிட்டு வா “ என மேலே சத்தமில்லாமல் அனுப்பினார்..
பைரவி.. இப்போதுதான் அமர்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள்… புத்தகத்தில்… 
ஐஸ் “க்கா, என்ன இன்னும் இதையே பார்த்திட்டு இருக்க… வா, அவங்க எல்லாம் வந்தாச்சு… உன்னை அம்மா வர சொன்னாங்க…” என்றாள்.
பைரவிக்கு என்னமோ போல் இருந்தது… எல்லோரும் தெரிந்தவர்கள்தான்… ஆனாலும் ஏதோ சின்ன டென்ஷன்… என்ன இது… என மெல்ல ஆசுவாசம் ஆனாள்… 
மெல்ல தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.. முதல்முறை… ‘வீரா இருப்பானே’ என்று தோன்றியது… சின்ன சிவப்பு வந்து அமர்ந்து கொண்டது கன்னத்தில்… கோவமும் புன்னகையும் முகத்தில் இனிமையாக இசைந்தது… அத்தனை கோவமும் இத்தனை நாளில் காற்றில்  வைத்த கற்பூரமாய் கரைந்தது… சுட்டெரிக்கும் ரவி.. மதியாய் மாறி… தன்னவனை காண ஆர்வமாக வந்தாள்…
அழகான எல்லோ கலர்… டிசைனர் அனார்கலி டாப்…  டார்க் ப்ளூ… லெகின்னுடன்… அதே நிற ஷால் அணிந்து… மெல்லிய ஒப்பனைகளுடன் வந்தாள்…
டைன்னிங்க ஹாலில் ஸ்டெப்ஸ் இருப்பதால்.. இவள் வருவது தெரியவில்லை… கோதை… மகளை பார்த்து… “வா டா… இந்தா, இத கொண்டு கொடு” என சொல்லி… கையில் ட்ரே ஒன்றை கொடுத்தார்…
சும்மா பொம்மை போல் நிற்பதற்கு, இது பராவாயில்லை என எண்ணி…  வாங்கி சென்றாள் ரவி… “வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள்” என்றவள் எல்லோருக்கும் காபியை கொடுக்க.. 
வீரா, இவள் வந்தவுடன்  நிமிர்ந்து பார்த்தவன்
“என் ஜோடி மஞ்ச குருவி….
சாஞ்சாடு நெஞ்ச தடவி…” என சத்தமில்லாமல் தனக்குள் முனு முனுத்தது கொண்டான்.
ஆனால், ஆர்வமாக அவளை நோக்கவில்லை… தாத்தாவுடன் பேசியபடியே இருந்தான்… பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… என்கிட்டே வந்து கொடுத்துதானே ஆகணும்… ’வாவென’ பேசிதானே ஆகணும் என அமர்ந்திருந்தான்.
அவனிடமும் காபி நீட்டப்பட்டது.. அவனும் எடுத்துக் கொண்டான்.. நிமிரவில்லை.. அவளும் எதிர்பார்க்கவில்லை போல.. இருவரிடமும் ஒரு சின்ன ஆர்வமோ, புன்னகையோ இல்லை… இயல்பாய் இருந்தனர்… ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும் ஏமாற்றம்…
கேலியாக வைத்தியலிங்கம் “என்ன டா, பெண்ணை பிடிச்சிருக்கா…” என்றார் சிரித்தபடியே…
பைரவியும் சிரித்தாள், பெரிதாக எடுக்காமல். வீரா, என்ன சொல்லுவான் என இப்போது ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது… பாவம் அதனை வீரா கவனிக்கவில்லை…
அவனும் விளையாட்டாய் “ஐஸ்… என்ன சொல்லலாம்… சொல்லு” என்றான்.
கல்யாணி “இதன்ன… கல்யாண தேதி குறிச்சு வந்துட்டு இப்படி பேசுறீங்க…” என்றார் கலவரமாக… அவருக்கு இவர்களின் விளையாட்டு புரிந்தாலும், சற்று பயம்…
சுந்தரம் தாத்தா… “இனி யாரு விட்டா அவனை….” என்றார் சிரித்தபடியே…
வீரா, இன்னும் ஐஸ்சுடன் தான், பேசிக் கொண்டிருந்தான்.
லிங்கம் “பாரு உன் பையன் இன்னும் பதிலே சொல்லல..” என்றார் சிரித்தபடியே…
வீரா, இன்னமும் ரவியை பாராமல் “என்ன ஐஸ்…. சொல்லிடலாமா…” என்றான்.. 
அவளும் பெரிய பெண்ணாக “ம்… ம்… சொல்லுங்க” என்றாள் சிரித்தபடியே மெல்ல…
“என்னோட சார்பா… என் உதவியாளர் ஐஸ்வர்யா சொல்லுவாங்க” என்றான்.. ரவியை திமிராய் ஒரு பார்வை பார்த்து…
ஐஸ் தொண்டையை சரி செய்து கொண்டு… “எங்க அண்ணன் ரொம்ப நல்லவர்… அதனால, போன போதுன்னு இந்த வாயாடி… சாரி… பேச்சாளரை… கல்யாணம் செய்துப்பாங்க…” என்றாள் லேசாக தன் அக்காவை பார்த்து கண் சிமிட்டியபடியே…
பைரவிக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் போல… அமைதியாகினாள். 
கல்யாணி,  தன் அருகே ரவியை அழைக்க, வந்தவளிடம் “இந்தா… எங்க ஊர் ஸ்பெஷல் மோர் முறுக்கு…. இந்தா டா” என தனியாக அவளின் கையில் ஸ்வீட் காரம் அடங்கிய பையை கொடுத்தார்… கூடவே பூ வாங்கி வந்தவர்… அதையும் அவளிடம் கொடுத்து “இப்போ கொஞ்சமா வைச்சிக்கோ” என்றார்.
“ம்… ஆன்ட்டி” என்றாள் மெல்ல…
கல்யாணி “அத்த…. மாமா சொல்லிடு… அதான், எல்லாம் முடிவாகிடிச்சில்ல” என்றார் சிரித்தபடியே…
உள்ளே எடுத்து சென்று, தனக்களவாக பூ கட் செய்து வைத்துக் கொண்டு வந்தாள்.. கூடவே எல்லோருக்கும் தனியாக கட் செய்து பூ கொடுத்தாள்.
வீராவின் கண்கள் அப்படியே மொய்த்தது அவளை… ‘இன்னமும் பார்க்கமாட்டாலாமா’ என எண்ணியே மொய்த்தது…. 
பைரவி கல்யாணியின் அருகே அமர்ந்து பேச தொடங்கினாள்…. 
பின் கோதை, உண்ண அழைக்க எல்லோருக்கும்… பைரவி, பரிமாறினாள். கோதை, உள்ளே பூரி போட நின்று கொண்டார்… எனவே எல்லோரும் உண்டனர்…
பூரி, பொங்கல்… இடியாப்பம்… குலோப்ஜாமூன்… என விருந்து அமர்களபட்டது…
பேச்சு இயல்பாக சென்று கொண்டிருந்தது… ஐஸ்.. வீராக்கு மௌத் பிஸ் ஆக… “மசால் எடுக்கா….”, “தண்ணி” என ஏதோ கேட்டு கேட்டு கொடுத்துக் கொண்டிருந்தாள்…
நேரம் சென்றது… கோதையும், ரவியும் உண்டு வந்தனர்… அப்படியே பெரியவர்கள் பேச தொடங்கினர்… 
தாத்தா “ம்மா… கோதை ராகவ்க்கு கூப்பிடு ம்மா” என்றார்… 
ஐஸ், போனில் தன் தந்தைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் வீடியோ காலில்… 
தாத்தா “என்ன செய்யணும் நாங்க” என பொதுவாக ஆரம்பித்தார்…
ரவி, மேலே செல்ல போனாள்… வீரா, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… அன்னை அவனை பார்க்க… கண்கள் ஏதோ சொன்னது போல…
கல்யாணி “பைரவி… இங்க வா…” என அழைத்தார்… இவள் திரும்ப… “வா எங்க போற… “ என்றவர் தன்னருகே அமர்த்திக் கொண்டார்..
ராகவ் போனில் வர… எல்லோரையும் முறையாக அழைத்தார்… ஆண்களுக்கு பேச்சு சென்றது… தேதி குறித்து வந்தனர்… வீராவின் பெற்றோர். எனவே அது குறித்து பேசிக் கொண்டிருந்தார்… நிச்சயம் வேண்டாம் என்றதால் ஒரு மாதத்துக்குள் நாள் பார்த்திருந்தனர்…
வீரா எதையும் கண்டுகொள்ளாமல் போனெடுத்து வெளியே சென்றான்.. பேசுவதற்கு….
தேதி ஒத்து வருமா என கோதை கேட்டார் பைரவியிடம்.. எங்கே திருமணம் என பேச்சு தொடங்கியது… சென்னையில் திருமணம், திருவண்ணாமலையில் ஒரு ரிசப்ஷன் என பேச்சு சென்று கொண்டிருக்க… 
வந்தான் வில்லன்… அப்போதுதான் போன் பேசி முடித்து வந்த வீரா… “எதுக்கு ப்பா… இவ்வளோ க்ரண்ட்டா… அதெல்லாம் சரி வராது… 
ரிஜிஸ்டர் மேரேஜ்… அவ்வளவுதான்…
ஏன் ப்பா, நான் நிச்சையமே வேண்டாம்ன்னு சொல்றேன்…. நீங்க கல்யாணத்த இப்படி ஏற்பாடு செய்றீங்க….
அதிலும் ரிசப்ஷன்… சான்சே இல்ல ப்பா…. 
நான் எப்போதும் போகிற விவேகானந்தர் இல்லத்தில் மதியம் லஞ்ச்… அந்த குழந்தைகளோட… அத்தோட அவ்வளவுதான்…” என்றான் அழுத்தமான குரலில் ஏற்ற இரக்கமில்லா குரலில்… கூடவே பார்வை முமுவதும் பைரவியிடமே இருந்தது…
சுந்தரம் தாத்தா, அனிச்சையாய் தன் மருமகள் முகத்தை பார்த்தார்… பிடித்த முயலுக்கு காலே இல்லை என்ற அவனின் குணம் தெரிந்து பார்த்தார்…
வைதியலிங்கத்திற்கு எப்போதும் போல கோவம்… கல்யாணி கைபிசைந்து நின்றார்… அவனிடம் கலந்து பேசியிருக்க வேண்டுமோ.. என அன்னை எண்ண தொடங்கினார்…
பைரவிக்கு சிரிப்பு… ’அதானே… அமைதியா இருக்கானேன்னு நினைச்சேன்’ என எண்ணிக் கொண்டாள்.. அவளுக்கு தொண்டை வரை வார்த்தை நிற்கிறது… ஏதோ சொல்ல… ஆனாலும், அமைதியாகினாள்… பெரியவர்கள் பேசட்டும் என பார்த்து…
வைத்தியலிங்கம் “என்ன ப்பா வீரா… நம்ம ரேசோர்ட்ல்ல ஒரு ரிசப்ஷன் வைக்கணும் ப்பா… நம்ம தொழில் முறையில் எல்லோரையும் கூப்பிடனுப்பா… 
இது என்னோட கடைசி பையன், கல்யாணம்… அப்படியெல்லாம் சட்டுன்னு செய்ய முடியாது வீரா…
நம்ம தொகுதி mla ஆரமிச்சி… கவுன்சிலர்… வரை கூப்பிடனும்…
ஏன் உன் ப்ரிண்ட்ஸ்க்கு கூட சொல்ல வேண்டாமா…
அந்த பொண்ணோட வேலை பார்க்கிறவங்க… அவங்க நட்பு… எதுவுமே இல்லாமல் எப்படி ப்பா…
நல்ல யோசி வீரா.. இப்போ கூடவா இது உனக்கு புரியாது…” என்றார் ஆற்றாமையாக…
வீரா “ப்பா… அண்ணன் கல்யாணம் நீங்க கிராண்டா பண்ணீட்டீங்க… உங்களை ஏதாவது கேட்டேனா.. இது என்னோட கல்யாணம் என் விருப்படிதான் நடக்கும்
அத்தோட கட்சி… இதெல்லாம், சரிவராது ப்பா என் வேலைக்கு…. விட்டுடுங்க…” என்றான் இன்னும் அவளை முறைத்தபடியே…
ஐஸ் “அப்போ சங்கீத், மெகந்தியெல்லாம் இல்லையா…” என்றாளே பார்க்கலாம்… வீரா… வீரேஷ்வர் ஆனான்…
அவளிடம் அவன் எப்போது சாந்தம்தான்.. ஆனால் இப்போது இவர்களின் அமைதி, தன் அப்பாவின் பேச்சு எல்லாம் அவனை உறுத்த “ஏன் ஐஸ்… அதெல்லாம் இல்லைனா… உங்க அக்கா என்னை கல்யாணம் செய்துக்க மாட்டாளா… இல்லை முடியாதா….” என்றான் எல்லோருக்கும் சேர்த்து அவளுக்கு பதில் சொன்னான்…
கூடவே வீராவின் பார்வை இப்போது பைரவியை உறுத்த விழித்தது… ‘ஆமாம்தானே… என்னை பற்றி தெரியும்தானே அவளுக்கு… எனக்கும் இப்படியெல்லாம் எண்ணம் இல்லை என புரியும் தானே அவளுக்கு..‘ அதனால், அவளும் தனக்கு சாதகமாக  சொல்ல வேண்டும் என அவளை முறைத்தான்… எதிர்பார்த்தான்… தன்னவள் தனக்கு சாதகமாக பேச வேண்டும் என எதிர்பார்த்தான்…’ உரிமையான எதிர்ப்பார்ப்பு…
பைரவிக்கு, அவனின் உறுத்தல் பார்வை தெரிகிறது, தன்னை முறைக்கிறான்.. தன்னுடைய பதிலுக்கு நிற்கிறான்’ என தெரிகிறது.. ஆனாலும் நிமிரவில்லை அவள்…
பைரவிக்கு ‘இவனை பிடிக்கும் என்றுதானே ஒத்துக் கொண்டேன்.. ஆனால், என் விருப்பம் கேட்க தோன்றவில்லை அவனுக்கு… என்னிடம் பேச நேரமில்லை உனக்கு.. ஆனால் இப்போது மட்டும் நான் உனக்கு சாதகமாக பேச வேண்டுமா’ என எண்ணம் அவளுக்கு… எனவே அழுத்தமாக அமர்ந்திருந்தாள்…
மீண்டும் அன்பான ஈகோ அழகாக விளையாடியது….
இப்போது வீரா “தாத்தா… நீங்க சொல்லுங்க” என்றான் அவரை தனக்கு சப்போர்ட் செய்ய சொல்லி அழைத்தான். ஆனால் பார்வை நொடிக்கொருதரம் தன்னவளை தொட்டு சென்றது..
தாத்தா அமைதியாக இருந்தார் ஏதும் சொல்லவில்லை…
பைரவியும் அசையவில்லை…
வீராவும் எப்போதும் போல அசையவில்லை அவன்.. 
அவனுக்கு பைரவியின் மீதே கோவம் சென்றது.. “ஆமாம், வேண்டாம்” என அவள் சொன்னாள் முடிந்து விடும் இந்த பிரச்சனை.. ஆனால் அவள் வாயே திறக்க மாட்டேன்கிறாள்… என கோவம்.
ராகவ் “வீரா நீங்க யோசிங்க… அப்புறம் பேசலாம்” என சொல்லி எல்லோரிடமும் விடை பெற்று போனை கட் செய்தார்.. 
எல்லோருக்கும் சங்கடமானது… 
இப்போது பைரவியின் பொறுமை பறந்தது… அமைதியாக எழுந்து உள்ளே சென்றாள்.. 
கல்யாணி “ஏன் பைரவி…” என்க  
“ஒண்ணுமில்ல த்த… சும்மா… குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என சிரித்தபடியே சொன்னாள்… அந்த இடத்தை இலகுவாக்க கொஞ்சம் முயன்றாள் தன் சிரிப்பால்… அவள்…
கோதைக்கு கூட போவதா, வேண்டாமா என்ற எண்ணம்… அப்படியே நின்றிருந்தார்…
பைரவி “ஐஸ்…” என அழைத்தாள் பத்து நிமிடம் சென்று…  ஐஸிடம், ஜூஸ் கொடுத்து அனுப்பினாள்… ஏற்கனவே திராட்சை பழசாறு எடுத்து வைத்திருந்தார் கோதை.. எனவே அதை கண்ணாடி டம்பளர்களில் உற்றி அனுப்பினாள்… தானும் ஒன்று எடுத்து கொண்டு வந்து டைன்னிங்க டேபிள் சேரில் அமர்ந்து கொண்டாள்…
எல்லோரும் ஜூஸ் குடித்தனர்… தாத்தா “வீரா எத்தனை மணிக்கு பங்க்ஷன்” என பொதுவாக பேசினார்.. ஆனால் அவன் காதில் விழவில்லை போல.. தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அவளை பார்த்துக் கொண்டிருந்தான்…
எதிர்த்து எதிர்த்து பேசுவா.. சடைக்கு நிற்பாள்… இல்லை, ஏன்! என  எல்லோரின் முன்னும்.. என்னிடம், பேசியே தீருவாள் என எண்ணியிருந்தவனது எண்ணம் எல்லாம் துள் துள்ளானது…
எதுவுமே நடக்காது போலான அமைதி அவனை வாட்டியது… பேசமாட்டாளா… என்னிடம் வர மாட்டாளா… அதான் திருமணம் நிச்சையமாகிவிட்டதே என்னிடம் வந்தால் என்ன..’. என  இவன் எண்ணியிருக்க… பேசவேயில்லை பைரவி, அவனிடம்…
வீரா ஒரு பெருமூச்சு விட்டான்… ஆனால் இந்த ஸ்திரம்தானே தனக்கு பிடித்தது..  அதுவே என்னை வாட்டுகிறதே என எண்ணம் ஓடியது…. ஏதும் செய்ய முடியவில்லை அவனால்… அந்த ஜூஸ் டம்பரை சுற்றி… தனது விரலால் வளையம் போட்டுக் கொண்டிருந்தான்…
பின் “ப்பா… அவ ஆசபடியே… ரிசப்ஷன் வைச்சிக்லாம்… ஆனா, கொஞ்சம் சிம்பிளா செய்ங்க….” என்றவன்… அந்த டைனிங் டேபிளில் வந்து டம்ப்ளரை வைத்து விட்டு… ஒரு நொடி நின்றான்… பின் கிளம்பிவிட்டான்…
பைரவி செல்லும் அவனிடம் “எத்தனை மணிக்கு வருவீங்க…” என்றாள்… தலை நிமிர்ந்தாமல்…
வீரா “ஐந்து மணிக்கு வரேன்… காரில் போகலாம்… எல்லோரையும் ரெடியாக  சொல்லிடு” என்றான் கிளம்பிவிட்டான்…
“நம்மை புரிந்து கொண்டோரின் பார்வையில்… நாம் அற்புதமானவர்கள்…” இங்கு இருவருக்கும், இருவரும் அற்புதமானவர்கள்… கொஞ்சம் தூ……தூரமான அற்புதம் போல….

Advertisement