Advertisement

எனக்கானவளே நீதானே…
12 
(வசமிழக்கும் வானம் நான்….)
‘அஹா’ என ஒரு எதிர்பார்ப்பு… பெரிய ஆனந்தம்தான்… பைரவிக்கு. அன்பு சிலசமயம் எதிர்பார்க்கும்… இப்போது அவனின் நேசத்தை எதிர்பார்த்தது…
அதனோடு போனை எடுத்து “ஹலோ..” என்றாள்… குரலில் கூட காட்சி விரியுமா… ஆசை கொண்ட குரலில், காட்சி விரிந்தது…
வீரா, பேசவில்லை சிறிது நேரம் அவளின் குரலில் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தான்… இப்போது மேடையில் கேட்ட குரலில்லை இது…. என தோன்ற அமைதியாக இருந்தான்…
அவளும் பேசவேயில்லை… அந்த சிட்டிகை நேரம்.. கூட அவளுக்கு இனித்தது… அவன் லையனில் இருக்கிறான் என்பதை உள்வாங்கினாள்… ஆனால், அது நொடிகளாக மாறியது.. இன்னும் பேசவில்லை வீரா…
பைரவிக்கு, சற்று சலிப்பு வந்தது… “ஹலோ…” என்றாள் சலிப்பான குரலில், சற்று சத்தமாக…
வீரா, மென்மையாக சிரித்துக் கொண்டான்… “தூங்கிட்டியா…” என்றான் ஆர்வமான குரலில்.. அவனின் குரலும் சற்று குழைந்ததோ…
“இல்ல சொல்லுங்க” என்றாள் போர்மளாக… வீராக்கு, ஏனோ கோவம்தான்.. என்ன இது சட்டென… என்னை தவிர்க்கிறாளோ… என எண்ணம். ஆனால் அவளின் நிலையை இவன் நினைக்கவேயில்லை…
அவளின் குரல் பேதத்தில் வீரா “இல்ல காலையில பேசுறன்” என்றான்…
“சொல்லுங்க… நான், லேட் ஆகும் தூங்க” என்றாள்…
“இல்ல…. 
எங்க… 
அதான், நான்.. படிச்ச அகாடமில… அடுத்த வாரம்… ஒரு சின்ன பாராட்டு விழா…” என்றான் அமர்த்தலான குரலில்… கொஞ்சம் கர்வமாகவே சொன்னான்… யாராவது சொல்லியிருக்கலாம்…. நீ உன் காதலியிடம் பேசுகிறாய் என…… பாவம், எடுத்து சொல்ல யாருமில்லை…
பைரவிக்கு கனவுகள் தடைபட… அவள், இடை புகுந்து “யாருக்கு” என்றாள்… புரியாமல்…
“ம்… உனக்கு சம்மந்தம் இல்லாதவங்க…. 
யாரோ.. அவங்க, அகாடமில படிச்சு… சாதிச்சிட்டாங்கலாம்… அதுக்கு…” என்றான்.. கொஞ்சம் சுவாரசியமான குரலில்…
கொஞ்சம் புரிந்தது, ஆனாலும்.. கோவம்… “ம்… அதுக்கு..” என்றாள் வினாவாக….. தான் எதையோ எதிர்பார்த்து இருக்க… இவர் என்ன சொல்லுகிறார்… என கோவம்….
“நீங்க வந்து ஒரு ஸ்பீச்… அதான், மோட்டிவேஷன் ஸ்பீச் ஒன்னு தரனும்…… “ என்றான். வேறு ஒன்றுமே தேவையில்லை… என்ற குரலில்…
அன்பு எதிர்பார்த்து… ஏமாந்தது… இப்போது மனமெல்லாம் ஏமாற்றம்… பைரவிக்கு. ஏதோ சொல்லுவான்.. என்ற கனவுகள் அறுபட.. ‘போடா..’ என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்…
அவளே  “அதுக்கு, எதுக்கு என்னை கேட்கிறீங்க… தாத்தாட்ட பேசுங்க… இல்ல அம்மாட்ட… அவங்கதான், டேட் ப்ரீயா பார்த்து சொல்லுவாங்க… இதுக்குதான்…” என பட படப்பாக பேசிக் கொண்டே போக…
வீராவுக்கு அவளின் குரலும்… வார்த்தைகளும் தன்னை அவமதிப்பதாக தோன்ற… “என்ன இப்போ…. நீதானே பேசுற…..
உன்கிட்ட கேட்டா என்ன, இப்போ… 
எப்ப பார்த்தாலும் எரிஞ்சி விழுந்தா… எப்படி பேசுறது…
ட்டே தெரியலைனா… கேட்டு சொல்றேன்னு சொல்லு… 
எப்ப பார்த்தாலும் முறைக்கறது… இல்ல கடிக்கறது… 
எப்படி மனுஷன் பேசுவான்…
வை, போன… 
உனக்கு போய் கால் பண்ணன் பாரு, என்னை சொல்லணும்…..
எல்லாம் என் நேரம்…….” என்றவன் போனை வைத்தும் விட்டான்…
‘இங்கே என்ன நிகழ்ந்தது…’ யாராவது புரியவைத்தால் பரவாயில்லை போல…  என்னவென தெரியவில்லை இருவருக்கும்…. சட்டென மேகம் சூழ்ந்து இருளாகியது இருவரின் நிலையும்… 
“தனியாக நடமாடும்
பிடிவாதம் உனது…
நிழலாடும் உரசாத.. 
தன்மானம் எனது…
எடையில்லா பொருளல்ல…
அடி.. காதல் மனது…
அகலாத உன் நினைவு…
அது.. மலையின் அளவு……”
யார் மீது தவறு… எங்கே சறுக்கியது தெரியவில்லை, இருவருக்கும்…. ஆசைதான் இருவருக்கும்… அத்தனை எதிபார்ப்புதான் இருவரிடமும்… ஆனால், எந்த வார்த்தை.. எப்படி சென்று தாக்கியது… தெரியவில்லை…
வீராவுக்கு, ஏனோ இன்னும் கோவம் அடங்கவில்லை… ‘ஏதோ சொல்ல வந்தால், கேட்டால்தானே… கூட கூட, வெட்டி… வெட்டி… பேசினா…. மனுஷன் எப்படி பேசுவான்…’ என கோவம் தகிக்க தொடங்கியது… எழுந்து தலை கோதியபடியே தனது டி-ஷர்டை இழுத்து விட்டுக் கொண்டு நடந்தான் அங்கும் இங்கும்…
பைரவிக்கு, ‘இவன் எப்படி எனக்குள் வந்தான்…. என முதல் முறை கண்ணீர் வந்தது… எங்கிட்ட நல்லா பேசினானா… இல்லை, பார்வையில் கூட கண்ணியம் காத்தானா… இல்லை, அப்படியே படிச்சு… நல்லவனா இருந்தானா… இல்லை, என்னை பிடிக்குமென துரத்தி துரத்தி வந்தானா…. எதுவுமே இல்லை.. எப்படிதான் பிடித்தோ…’ என, ஒரு நூல் அளவு கூட விடை தெரியவில்லை அவளுக்கு, கண்கள் கலங்கி நிற்கிறது….. 
‘இவன் வேண்டாம்ன்னு’ நானும், வேறு மாப்பிள்ளை பார்க்க சொல்லி.. இப்போ போன் செய்யும் போது ஆசையா எடுத்து… பேசினா…. என்னமோ, கத்தறாரு….. எனக்கு கொஞ்சமும் வெட்கமே இல்லையே…..’ என அழுகைதான் வந்தது….. 
‘ஏன், அவன்.. விஷயத்தில் வெட்கமே வரவில்லை எனக்கு… தள்ளியும் போக முடியவில்லை எனக்கு…’ என அதுதான் அவளை உறுத்த தொடங்கியது.
எப்போது, என்றாலும் இரவு விடிந்துதானே ஆகும்… தூங்கிக் கொண்டிருந்தாள்… இன்னும் எழவில்லை… ஐஸ் வந்து எழுப்ப… லேசாக முனகியபடியே மீண்டும் உறங்கிவிட்டாள்…
தன் அம்மாவிடம் ஐஸ், சொல்ல… ‘சரி’ என விட்டுவிட்டார் கோதை… 
மதியம்தான் எழுந்து வந்தாள்… ஓய்ந்திருந்தாளே தவிர.. உடல்நிலை நன்றாக இருந்தது… சாப்பிட்டு, மீண்டும் உறக்கம் பைரவிக்கு… யாரும் ஏதும் கேட்கவில்லை…
வீரா, பேசினான் போல அன்று இரவு, தாத்தாவிடம்… நாள் குறித்துக் கொள்ளப்பட்டது… தாத்தா… பைரவியிடமும் சொல்லிவிட்டார்… 
எனவே, பைரவியும் ஒத்துக் கொண்டாள்… முரண்டு பிடிக்கவா முடியும்..
அது அவளின் தொழிலுக்கு அழகல்ல… மேலும், அவளுக்கு அவனை எதிர்க்க முடியவில்லை… எப்படி… எந்த வகையாக… அவன்… வந்தாலும், ஏற்கிறதே அவள் மனது… 
அதே சமயம்… தன்னை இழக்க முடியவில்லை… அழகான காதல்.. இப்போது உச்சந்தலை வரை ஏறி நின்று படுத்துகிறது… எப்படி நடக்குதோ, நடக்கட்டம் என தோன்ற… விட்டுவிட்டாள்…
வீரா, அதன்பின் அவளை பற்றி யோசிக்கவில்லை.. அவனுக்கு அவன் வேலையே சரியாக இருந்தது… நாட்கள் கடக்க…
வீராவை போல படித்துக் கொண்டிருப்பவர்களிடம் பேச வேண்டும்… அதுவும் ‘நீ சாதிப்பாய்’ என பேச வேண்டும்… 
இது புதிது பைரவிக்கு.. இலக்கியம் சார்ந்து பேச தெரியும்… இதுபோல்… இவள் பேசுவது இதுவே, முதல் முறை… எனவே, எப்படி என தாத்தா.. உதவ… இவள் குறிப்பு எடுத்துக் கொண்டாள்.
வீராவின் வீட்டில், 
அர்ச்சனா… இரண்டுநாள் கழித்து தன் தந்தைக்கு, தனியாக அழைத்து பேசினாள். குடும்பத்தில் திருமணம் என்பது எவ்வளவு கணக்கீடுகள் கொண்டது… அதனால்தான் முன்னர் சொந்தத்தில் செய்தனர் போல….
இப்போது அர்ச்சனா, விஷயத்தில் அது தெளிவானது… பணம் என்பது எப்போதும் பிராதானம்தான்… 
இப்போதும் அதே… அர்ச்சனா, போன் செய்யவும் வைதியலிங்கத்திற்கு கொஞ்சம் சங்கடமானது… அப்போதுதான் மதிய உணவு முடித்து அமர்ந்தார்… போன் வரவும் சங்கடமாக எடுத்தார்…
அர்ச்சனா, முறையான விசாரிப்புக்கு பிறகு… சற்று நேரம் அமைதியாக இருந்தாள்… வைத்தியலிங்கம் “என்ன ம்மா…. வீராக்கிட்ட பேச முடியலை டா… அவன் போன் செய்தாலே எடுக்க மாட்டேங்கிறான்….
இன்னும் ரெண்டுநாள் போகட்டும்… பேசலாம்…” என்றார் அவரே சமாதானமாக. தந்தையாக, அவருக்கு எப்படி வீராவிடம் இதை சொல்லுவது என எண்ணம்… எனவே தள்ளி போட்டார்.
மகள் “ப்பா… நீங்க தம்பிக்கு அந்த பெண்ணையே பாருங்க… அவனே இப்போதான் உருபட்டிருக்கான்…. அவன் ஆசைய, நாம கேட்கலைன்னா எப்படி…
அவர், தன்னோட பிசினஸ்ச தக்க வைக்கிறதுக்காக வீராவ, பேசுறாரு தங்கைக்கு…
அவருக்கு தனியா தொழில் செய்யனும்ன்னு எண்ணம் வந்திடுச்சி… அவங்க அண்ணன்களுக்கு கீழ இருக்க பிடிக்கல, 
அதான் தங்கச்சிய கொடுத்த தன் பெயரை… இங்க தக்க வைக்க பார்க்கிறார்.. 
இன்னும் கொஞ்ச நாளில் மாமனார் ஏதோ நிலத்த வித்து, பணம் தரேன்னு சொன்னார்… இவருக்கு பொறுமை இல்ல… 
அதனால, நான் பார்த்துக்கிறேன்… அவர….
நீங்க வீராக்கு பிடிச்ச மாதிரியே செய்ங்க…. 
இன்னொரு பத்துநாள் பேசுவாரு, அதுக்கப்புறம் விட்டுடுவாரு… வீராவ, சொல்லுங்க பிடிவாதமா இருக்கான்னு…
கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்… 
என்ன, பெண்ணு பார்க்க…. புடவை எடுக்கன்னு… எதுக்கும் என்னை அனுப்பமாட்டார்… 
விடுங்க ப்பா, பார்த்துக்கலாம்…” என்றாள்… 
வைதியலிங்கத்திற்கு.. ஒன்றும் சொல்ல முடியவில்லை… என் பெண், சின்ன பெண்… என்ற எண்ணம் மறந்தது… இவள் என் அன்னையோ என எண்ணினார்… வாயடைத்து அமர்ந்திருந்தார்.. மகள்களுக்கு தந்தையின் நிலை புரியாதா…
அதேபோல் தந்தைக்கும் பெண் நிலை தெரியாதா… தன் பெண்ணை கண்ணீர் சிந்த விடுவதா… அடுத்த இரண்டுநாளில்.. ஆரணியில் ஒரு துணி கடை விற்பனைக்கு வந்தது… 
தன் மாப்பிளையை அழைத்து பேசினார்… “நீங்க, பாருங்க மாப்பிள்ளை… எவ்வளோக்கு முடிக்கலாம் சொல்லுங்க…” என பிள்ளையார் சுழி போட்டார்… வைத்தியலிங்கம். 
எனவே சின்ன.. சின்ன.. உரசல்கள் களையப்பட்டு… வீராவின் பேச்சு… அங்கே மீண்டும் வந்தது…
அந்த வாரத்தின் கடைசியில் கல்யாணி, கோதையிடம்… பேசினார்… பைரவியை தங்களின் கனிஷ்ட்ட குமாரனுக்கு… தாருங்கள் என கேட்டு பேசினார்.
கோதைக்கு, உள்ளுக்குள் உற்சவம்தான்.. அதனை வெளிக்காட்டாமல் பேச மிகுந்த சிரமபட்டார்… “கலந்து பேசி சொல்கிறோம்” என்று போனை வைத்து விட்டார்…
போகா ஊர்… என எண்ணியிருந்த கோதைக்கு, ‘சின்னதாக மேப்’ கிடைத்த சந்தோஷம்… தன் மாமனாரை நாடி சென்று விஷயத்தை சொன்னார்… 
தாத்தாக்கு யோசனை… “இரண்டு பேரும்…….. ஒவ்வரு வகையில் பிடிவாதம்… சரி வருமா கோதை” என்றார் அமைதியாக..
வடிந்து போனது.. எல்லா சந்தோஷமும்… இதென்ன…….. நாள் பொருத்தம், ஜாதக பொருத்தம், நட்சத்திர பொருத்தம்… என எதுவும் இல்லாமல்… புதிதாக இவர் ஒன்று சொல்கிறாரே… என தோன்றியது கோதைக்கு…
என்ன சொல்ல முடியும்… ‘ஆம், பிடிவாதம்தான் இருவரும்…… பிடித்த, முயலுக்கு காலே இல்லை என வாதாடும் பிடிவாதம் தான், இருவரும்…..’ ஆனால் நல்லவர்கள் இல்லையா.. எப்படி பொருந்தாமல் போகும் என எண்ணம்… 
ஆனால், எல்லாம் தெரிந்த தன் மாமனாரிடம் என்ன பேசுவது… “தெரியல மாமா, நீங்க பைரவி கிட்ட பேசுங்க… உங்க பையன் கிட்டயும் பேசுங்க…” என்றார் பட்டும் படாமல்… 
சுந்தரம் தாத்தாவிற்கு தன் மருமகளின் நிலை கண்ணில் படாமல் போகுமா… இந்த நொடியில், வாடிய அவரின் முக தெரிய… “நீ கவலை படாத…. நம்ம பசங்கதான்… பேசி பார்க்கலாம்.. ஒத்துகிட்டா சரி… இல்லைன்னா.. பெருசா… நீ எதுவும் சொல்ல கூடாது” என முடித்துக் கொண்டார்.
நாட்கள் வேகமாக சென்றது… சுந்தரம் பொறுமையாக தன் பேத்தியிடம் பேசினார்… ஆனால், பைரவி… எனக்கு என்ன, சொல்றதுன்னு தெரியலை தாத்தா… 
பிடிச்சிருக்கா தெரியலை… ஆனா பிடிக்காமா இல்ல, நீங்க சொல்லுங்க… நான், என்ன செய்யட்டும்” என்றாள் பாவமாக…
சிரித்தார் தாத்தா… “இதென்ன டா பதில்…” என்றார்… அவளுக்கு குழப்பம்… எங்கிருந்து இது தொடங்குகிறது… போனில் பேசவே அவன் சங்கடபடுகிறான்… இப்படி இதற்கு சம்மதிப்பான்… என எண்ணம். ஆனாலும், ‘இது தனக்கான நேரம்… ஒருமுறை தானே வரும்… எனவே விடமாட்டேன்’ என்ற எண்ணம்… அவளுக்கு.
தாத்தா பதில் எதிர்பார்ப்பது தெரிந்து… “பிடிக்கமா போக காரணம் இல்லை…, 
நீங்க பார்த்து செய்ங்க… 
அவரையும் கேட்டுகோங்க..” என்றாள் கெத்தாக…
இப்போது பந்து அவனிடம் நகர்ந்தது… ‘நீ சொல்லேன்… ஏன், நீயே சொல்லேன்’ என விளையாட்டு… முடிவுக்கு வந்தது…
தாத்தா எல்லோரிடமும் பேசினார்… ராகவ்க்கு சந்தோஷம்… இத்தனை நாட்கள்… வரன் அமையாமல் இருந்தது இதற்குத்தான என எண்ணிக் கொண்டார். சந்தோஷமாக சம்மதம் சொன்னார்.. பைரவியின் தந்தை.
வீராவின் வீட்டுக்கு, நல்ல பதிலாக சொல்லினர் சுந்தரம் தாத்தா. முறையாக எல்லாம் நடக்க தொடங்கியது… 
ஜாதகம்… பொருத்தம்… எதுவும் பார்க்கவில்லை.. மனபொருத்தம் போதும் என்றுவிட்டார் அருணாசலம் தாத்தா…
இதில் யாருக்கு, எவ்வளவு குறையோ, நிறையோ இருந்தாலும் கள்ளமில்லாமல் சந்தோஷபட்டது ஐஸ்வர்யாதான்… ஐஸ்க்கு அப்படியொரு சந்தோஷம்….. “வீராண்ணா… இனிமேல்… இவ, எனக்கு அண்ணியா…” என பைரவியிடம் வெறுப்பேற்ற தொடங்கினாள்…
கோதை “அடிங்க…. வீராவதான், நீ மாமான்னு கூப்பிடனும்…. உளற கூடாது.” என அதட்டினார்.
இன்று ராகவ்… முறையாக எல்லாம் செய்ய ஆசைபட்டார்…. “பெண்பார்க்க எப்போது வருகிறீர்கள்… நிச்சையம் எப்போது வைக்கலாம்… அதற்கு தக்க நான் லீவ் எடுக்க வேண்டும்” என சம்மந்தி வீட்டாரிடம் பேச…
“வீரா, நிச்சையம் வேண்டாம்… என்கிறார் “ என்ற செய்தி கிடைத்தது… பைரவிக்கு… 
பைரவிக்கு ஒரே யோசனை… ஏன் வேண்டாம்… இதுவரை அவனாக போன் செய்யவில்லை… அன்றும், சரியாக பேசவில்லை… பிடிச்சிருந்தது அப்படின்னா… எங்கிட்ட சொல்லமாட்டாங்களா… 
‘நான் என்ன அவங்களுக்கு தெரியாதவங்களா… குறுகுறுன்னு பார்த்தாங்க… பேசமட்டும் வராதா… இல்ல, இவளிடமெல்லாம் சொல்ல வேண்டுமா… என்ற எண்ணமா…’ என இதுவரை சாய்ந்திருந்த குறைகள் எல்லாம்… பிரமாதமாக…. அலங்காரமாக… எழுந்து நின்றது. ஆக, பந்தை எப்போதோ… பொற்றோரிடம் தந்துவிட்டு… வேடிக்கை மட்டுமே பார்க்கிறான் அவன், என தோன்றியது பைரவிக்கு. 
தன் அம்மாவிடம் சென்றாள் “ம்மா… வீராக்கு, பிடிச்சித்தானே நடக்குது” என்றாள் தயக்கமாக… ஏனோ மனம் உறுத்தியது…
இதோ, நாளை மறுநாள் சண்டே. அன்று… அவர்களின் அகாடமியில் அவனுக்கு விழா… இன்று இரவு வருவான்… வந்து பேசுவானோ… இப்படி நிச்சையம் வேண்டாம் என்கிறான்…. என நிறைய எண்ணம்… அவளுக்கு.
கோதை “அடி, அசடு…. வீராதான் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாராம்… அப்புறம்தான், அவங்க நம்மகிட்ட பேசுறாங்க…
நாளைக்கு வருவாரு… ஏன் நிச்சையம் வேண்டாம்ன்னு சொன்னீங்கன்னு நீயே கேளு…….
ஏன்… இவ்வளோ டயடா இருக்க…. முகமே சரியில்ல டா… ரவிம்மா…” என்றார். அவளின் அருகில் அமர்ந்து. என்ன சொல்லமுடியும் அவள்… அமைதியாக சிரித்தாள்.. பின் எழுந்து சென்றுவிட்டாள்.
மிக தெள்ளிய தெளிந்தறிவு… இருவருக்கும். எங்கும் சறுக்கலில்லா பொது வாழ்க்கை… ‘நான் எதற்கு பேச வேண்டும்’ என்ற அன்பான ஈகோ… அதை கொண்டு… இணை குறித்த, தவறாக புரிதல்… அதில் தன் பங்குக்கு, சதிராடும் காதல்… இதில் தள்ளாடும் பைரவியின் உள்ளம்… பெண்… தைரியம் எல்லாம் காதலில் இல்லை போல… கலங்கி நின்றாள்… தன்னவன் குறித்தே…
 
 

Advertisement