Advertisement

எனக்கானவளே நீதானே…
11 
(வசமிழக்கும் வானம் நான்….)
பைரவிக்கு காரில் செல்ல செல்ல…. வீராவே சிந்தனையே… ‘ஏன், எப்படியிருக்கேன்னு கேட்கமாட்டானா… நான் பேசினேனே… எங்க போஸ்டிங்ன்னு…. கேட்டேன்…. பதில் கூட சொல்லல…
என்னை கேட்கமாட்டானா… என்ன பண்றீங்கன்னு, கேட்க மாட்டானா… பெரியாள் ஆகிட்டார்… அதான்… 
நானே வந்து பேசுவேன்னு நினைச்சியா, முடியாது போடா…’ என இவள் எண்ணிக் கொண்டே அந்த பயணம்..
என்றும் இல்லாமல் இன்று மிகவும் வாட்டியது அவளை.. ‘பேசாமல் வெட்கம் பார்க்காமல் நானே போய் சொல்லிடலாம என கூட தோன்றியது.. 
ஆனால், இவனை வேண்டாம் என்றுதானே வேறு மாப்பிளை பார்க்க சொன்னேன்… அம்மா இப்படி மாறி மாறி யோசிச்சா எப்படி…’ என தனக்குதானே பின்னி பின்னி யோசித்து நொந்தாள் பைரவி. அவனின் நினைவை தள்ளி வைக்க முடியவில்லை இவளால்…
பைரவிக்கு…. வீராவின், பார்வையே எல்லாம் சொன்னது…. அவளுக்கு, பிடித்தமில்லை என்றால் அவளை பார்வையால் கூட அவன் தீண்ட முடியாது… 
எனவே ஹாலில் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்… அவன் பேசுவான் என கூட எதிர்பார்த்திருக்கலாம்… ஆனால் வீராவிற்கு தெரியவில்லை… அவளின் நிலை. இன்னும் அவளிடம் அவனால் ஒட்ட முடியவில்லை…
சொல்ல போனால் வீராவுக்கு தைரியம் இல்லை.. அதுவும் பைரவியை நினைத்து சற்றே பயந்தான், ஏதேனும் கேட்டு… அவள் மறுத்துவிட்டால் என எண்ணம் வந்தது அவளின் தோரணையில்…
ஸ்திரமாக அமர்ந்திருந்தாள்…. ‘அமைதியான ஸ்திரம்’ அவ்வளவு அருகில் இருந்தும் கண்டு கொள்ளவில்லையே என்னை. 
அழகுதான்… அதுதானே அவளுக்கு அழகு… என்னை பிடிக்கும்தானே அவளுக்கு…. பார்த்துக் கொள்ளலாம்… நான் கேட்டால் இல்லையென மறுப்பார்களா… சுந்தரம் தாத்தா… அம்மாவை பேச சொல்லாம் என எண்ணிக் கொண்டிருந்தான்.. வீரா.
அவனுக்கு தெரியவில்லை பழகி, நேசம் கொண்டு… அந்த நேசம் கனிந்து திருமணத்தில் முடிந்து… அதனால் வரும் உரிமையில்.. அவளை நெருங்கி… அதனில் வரும் இனிமைக்கு இந்த உலகம் கூட ஈடாகாது என தெரியவில்லை அவனுக்கு. 
எனவே எளிதாக நினித்தான்… ‘என்ன இப்போ… கல்யாணம் ஆனா அவ என் கூட இருப்பா, அப்புறம் என்ன வேண்டும்’ என ஒரு அசட்டு துணிச்சல் போலும்… ‘பேசிக்கிறேன்…’ என எண்ணினான்.. 
எனவே, அன்று பைரவி வரும் முன்பே வீரா, கிளம்பிவிட்டான்… நாகை நோக்கி. அவனுக்கு பணியில் சேர இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது… 
ஆனாலும், எப்போதும் போல, இப்பவும் யார் பேச்சையும் கேட்காமல்… முன்பே சென்று எங்கெங்கோ சுற்றிவிட்டு பணியில் சேர்ந்து கொண்டான். ஆம், அவனுடைய சுதந்திரத்தை இன்னமும் இழக்கவில்லை அவன்.
இவன், பார்த்தறியாத ஊர். எனவே நான்கு நாட்கள் சுற்றினான்… பின்புதான்… தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு அலுவகலம் சென்றான்… 
மறுநாள், அலட்டளில்லாம்  பதவியில் அமர்ந்தான்.. பெரியதலைகள் எல்லாம் எப்போதும் போல… வரவேற்பு நிமித்தமாக புதிய கலெக்டரை பார்க்க வந்தனர்.. 
எல்லோரையும் நான்கு மணி நேரம் காக்க வைத்தான் பாரபட்சமே இல்லாமல். 
மதியம் போல் பொறுமையாக வந்து “என்னை வரவேற்க வந்தமைக்கு நன்றி… நான் அரசு சேவகன்… 
எனவே எனக்கு இந்த பரிசு, பாராட்டு எல்லாம் கொஞ்சம் அலர்ஜி… ப்ளீஸ்… “ என சங்கோஜமாக நெளிந்தான்… பத்திரிக்கையாளர்கள் அவனின் கூச்சத்தை படம்பிடித்துக் கொண்டனர்…
வந்திருந்த பெரிய தலைகள் எல்லோரும்… “அட சின்ன பையன்… ப்பா…. எல்லாம், நம்ம பார்த்துக்கலாம்…” என பேசியபடியே டீ, பிஸ்கட் சாப்பிட்டு கிளம்பினர்.
ஆனால், மறுநாள் காலையில் சத்தமில்லாமல் எழுந்தது, ஜாக்கிங் என்ற பெயரில்… எல்லா இடங்களுக்கும் நேரில் சென்றான்… 
ஒவ்வரு நாளும், ஒவ்வரு தாலுக்கா… என பிரித்தே சென்றான்… முதலில் யாரும் பெரிதாக எடுக்கவில்லை… நாட்கள் ஆக.. ஆக… இவன் பின்னால் பத்திரிக்கையாளர்களும், சிறுசுகளும் சுற்றியது.
அதுவும் காலை வேளையில், இன்று எந்த ஏரியா என பசங்க கேட்க்கும் அளவுக்கு வீரா அவர்களை மாற்றியிருந்தான்… போனில் இவனின் வீடியோ அதிகமாக வர தொடங்கியது.
ஜாக்கின் பண்ட.. ஒரு ட்-ஷர்ட்டில்… பக்கவாக ஷூ அணிந்து, அதிகாலை  நான்கு முப்பதுக்கு கிளம்பிவிடுவான்…. எந்த இடம் என அப்போதுதான் டிரைவர்க்கு சொல்லுவான்… அங்கு நிற்கும் வண்டி, பார்த்துதான்… உடனே கூட்டம் கூடும்…
அப்படியே கொஞ்ச தூரம் ஓட்டம்… சிறிது ஏதேனும் விளையாடுவான் பசங்களுடன்.. அப்புறம் ஒரு பாக்கரியில் அமர்ந்து கொண்டு… ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான்…
அங்கேயே காலை உணவை உண்டு கிளம்பிவிடுவான்… அதன்பின் அலுவலகம்… 
அதிகாலையில் அவன் வலம்வர காரணமே… கேரி பாக்கை ஒழிப்பதற்குத்தான்… 
முதலில்.. திமிராக இருந்த சின்ன சின்ன கடைகாரர்கள்.. இப்போது கலெக்டரே சொல்கிறார் என மாறியது… 
சிலது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலையில் மாறியது. ஆக.. ஏதோ மாற்றம் வந்தது அங்கு. எல்லா… எளிய மக்களிடம்தான் சென்றான்… முதலில்.      
எனவே இந்த மூன்று மாதத்தில் அவன் மாற்றியது பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாகதான்… வேறு எதிலும் அவன் கவனம் திருப்பவில்லை… இப்படியாக நாட்கள் நகர்ந்தது…
‘அலுவலகம்……’ இங்குதான் இவனின் கோவம் அரங்கேறும் இடம்… பாவம் வீராவின் உதவியாளர்… தாமோதரன்… கிட்டத்தட்ட பத்து வருட சர்வீஸ். காரணமே இல்லாமல் திட்டுவாங்கினார்.
ஆம், சென்ற முறை கொடுக்கப்பட்ட எல்லா டெண்டர்களும்… இவனின் பார்வையில் சிக்கியது.. யாரு, என்ன என விசாரிக்க… ப்பா..பா… எல்லாம் பெரியகை. 
அடுத்த ஒருவருடத்திற்கு அவர்களை நெருங்கவே முடியாது. எனவே குடைய தொடங்கினான் வீரா. சும்மாவே…
முன்போல், யாரையும் காக்க வைக்க கூடாது என இவனே… மக்களை சந்தித்தான்.. அடுத்த நடவடிக்கையாக. எனவே, அரசு அலுவலகம் சுறுசுறுப்பானது.
அப்படி ஒவ்வன்றாக இவன் கண்ணில் பட பட கணக்குகள், மீன்பிடி வாகன தணிக்கை… அதன் போக்குவரத்து தணிக்கை எல்லாம் கண்ணில் பட்டது… 
வீராவுக்கு நேரம் போதவில்லை அதை தணிக்கை செய்ய… எனவே.. அந்த  தாமோதரன் எல்லாவற்றிக்கு பதில் சொன்னார்.. அவர் வாங்கிய காசுக்கு வேலை செய்தார். அவரையும் சேர்த்து குடைந்தான் வீரா.
மாலை எப்போதடா ஆகும் என தாமோதரம் எண்ணினார்.. அவ்வளவு தூரம் வீரா கண்ணில் பூத கண்ணாடியுடன் வேலை செய்தான்… 
இதில் அவனுக்கு தன்னுடைய வேலையை நினைக்க நேரமே இல்லை… இத்தனை மாதங்களில் சுந்தரத்திற்கு இரண்டுதரம் அழைத்திருந்தால் அதிகம்.
ஆனால், தாத்தா.. தானே அழைத்து பேசுவார். இந்த ஊரில் நீ பேசினத கேட்டேன்… உன் வீடியோ பார்த்தேன் என போன் செய்வார்… வாரத்தில் ஒருதரம். ஆக தாத்தா இப்போது அவனுடம் டச்சில் இருந்தார்.
ஆனால், மீண்டும் வீட்டோடு வீராவின், உறவு விட்டு போனது. கல்யாணிக்கு எப்போது அவனுக்கு போன் செய்ய வேண்டும் என தெரிவதில்லை… 
காலை பத்துமணிக்கு அழைப்பார் “ம்மா… ஆபீஸ் வந்துட்டேன்… ஈவ்னிங் கூப்பிடுறேன்” என்பான்.
அவனும் மறந்து விடுவான். இவரும் அழைக்க பயந்து விட்டு விடுவார். வேறு யார் இவனை அழைப்பது… ஆக இப்படியாகத்தான் வீரா இருந்தான்.
இன்று இரவு பத்து மணிக்கு சரியாக அழைத்தார் கல்யாணி. 
வீரா பொறுமையாக பேசினான்… “என்ன மா… இந்த நேரத்தில்” என்றான்.
மகன் தன்மையாக கேட்டவுடன்… “தம்பி… எப்படி இருக்க” என அந்த தாய் தேனொழுக பேசினார்.
“ம்….ம்மா… சாப்பிட்டீங்களா” என இன்னும் இயல்பாக பேச… கல்யாணி குளிர்ந்து போனார்… வீட்டில் இத்தனை நாட்கள் நடந்தது எல்லாம் சொன்னார்…
“நீ நல்லா இருக்கியாப்பா…. உன்ன போனில் பார்க்கிறேன்… தாத்தாவும், பாட்டியும் கூட பார்த்தாங்க….
உன் அண்ணன்தான்… திட்டிக்கிட்டே இருக்கான், பார்த்து இருப்பா…. 
அதிகம் யாரையும் பகைச்சிக்காதா… ப்பா….” என்றார். 
வீராக்கு ஸ்ருதி ஏறியது ‘என் வேலையை செய்ய, நான் ஏன் மத்தவங்களை பகைச்சிக்கனும்’ என கோவம்… அன்னையிடம் என்ன சொல்ல முடியும் 
“ம்ம்.” என்றான். பின் “சொல்லும்மா” என்றான்
பொறுமையாய் பேசினார் அந்த தாய் “கல்யாணத்திற்கு பொண்ணு பார்த்திருக்கு ப்பா…” என்றார்..
வீராவுக்கு அப்போதுதான் பைரவி நினைவே வந்தது… அதுவரை அவள் அவனை இம்சிக்கவே இல்லை… சட்டென அவள் நினைவு வந்தது திருமணம் என்றவுடன்..
தன் மீதே கோவம் வந்தது வீராக்கு… அதன் கோவம் சுர் என தலைக்கேற… “யார கேட்டு செய்தீங்க….” என்றான்.. 
கல்யாணி ஆடிபோனார்… ‘நான்றாகதானே பேசினான் மகன், இப்போது வரை……’ என எண்ணம் வந்தது..
எனவே “இல்லப்பா… இ… இப்போதான் பார்க்கிறேன்… 
அர்ச்சன்னா… க்கா, சொந்தம் தான்… 
அ.. அதான்… உன்கிட்ட பார்க்கலாமான்னு… கேட்…கேட்கலாம்ன்னு” என்றார்… இன்னமும் பயந்த அன்னை.. 
இன்னமும் தன் கணவனை, மாமனாரை, ஏன் மகன்களை கூட எதிர்த்து பேசாத அந்த உள்ளம் எப்போதும் போல பயந்து போய்… திக்கியது.
வீராவுக்கு, பைரவியிடம் பேச தயக்கம்.. பயம்… என எல்லாம் இருந்தது. நான் பேசி எங்கே அவள், மறுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்தவன் இப்போது அன்னை கேட்கவும் தன்மீதான… இயலாமை கோவமாக வர… கல்யாணியை, காய்ச்சினான் வார்த்தையால்…
மீண்டும் “எதுக்கு இப்போ அவசரம்… நீங்க பார்க்கற பொண்ணெல்லாம் எனக்கு ஒத்து வராது…. 
ம்… 
ராகவ் அங்கிள் பொண்ண பாருங்க… 
பேசுங்க…” என்றான். அவர்க்கு ஏதோ புரியாத மொழி கேட்ட உணர்வு… “எ……..என்ன ப்பா” என்றார்.
மீண்டும் ஒருதரம் சொன்னான்… “பேசுங்க… ஏதாவதுன்னா… கூப்பிடுங்க” என்றான் அசால்ட்டாக.
போனை வைத்த கல்யாணிக்கு ஒன்னும் புரியவில்லை… வைத்தியலிங்கம் “என்னச்சு… கல்யாணி” என்றார்..
“அ… உங்க பையன், சுந்தம் தாத்தா…. பேத்திய பொண்ணு கேட்க சொல்றான்” என்றார் தன் கணவரிடம் மறையாது. அவர் என்ன சொல்லுவாரோ என அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்…
நல்லவேலை, வைத்தியலிங்கம் லேசாக சிரித்தார்… கல்யாணிக்கு அப்போதுதான் உயிரே வந்தது…
தந்தையாக அவருக்கு ‘எப்படியோ என் மகன் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என வாழ்ந்தால் சரியென’ அவர் நினைத்து சிரித்தார்.. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எனவே தீவிர யோசனைக்கு சென்றார்… 
காலையில் எல்லோரிடமும் சொல்லி, எப்போது பேசுவது என தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்…
தகவல் எல்லோருக்கும் சொல்லப்பட்டது… முதலில் மாப்பிள்ளை கேட்டது அர்ச்சனாவின் வீடு… அர்ச்சனாவின் கணவரின் ஒன்றுவிட்ட தங்கைக்கு… கேட்டார்கள். 
எனவே அவர்களிடம் சொல்லுவதுதானே முறை. அதனால்… ‘சரிவரவில்லை’ என பொதுவாக சொல்லி வைத்துவிட்டார் வைத்தியலிங்கம்…
அடுத்த ஒருமணி நேரத்தில் அர்ச்சனாவிடமிருந்து போன்… வைதியலிங்கத்திற்கு… ‘எப்படி நீங்க… எங்கள் பெண்ணை மறுத்து, வேறு… பார்க்கலாம்… உங்க பொண்ணு இங்கு வாழ வேண்டாமா’ என சத்தம் போனில். 
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வைதியலிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை… ‘நம் பெண்ணா இப்படி பேசுவது’ என… 
ஒரு இரண்டுநாள் மீண்டும் அர்ச்சனாவிடமிருந்து போன் வரவில்லை…
வைதியலிங்கமும் கல்யாணியும் தவித்து போயினர்… இருவரில் யாரிடம், யாருக்காக பேச முடியும்… ஓருவன் இப்போதுதான் காலூன்றி இருக்கிறான்… 
இன்னொருவள்… வேரோடு… காய்காய்த்து.. படந்து… பரவி.. நிற்கிறாள்… இதில் யாரை விட முடியும் என பெரிய யோசனை… ஒன்றும் தெரியாத நிலையில் அமைதியாக இருந்தனர்…
அதன்பிறகு இரண்டுநாட்கள் சென்றது… மீண்டும் அர்ச்சனா அழைத்து “என்ன ப்பா… என்ன சொல்றீங்க… நீங்க கேட்கற சீர் செய்வாங்க… அதவிட அதிகமா கூட செய்வாங்க… யோசிக்காதீங்க ப்பா… அவன்கிட்ட பேசுங்க…” என்றாள் பொறுமையாக.
தர்மசங்கடம் வைதியலிங்கத்திற்கு. ‘பேச முடியுமா அவனிடம்… கேட்பானா… அவன்…’ என்ற எண்ணம்தான்… அவருள்… 
அவரும் முயன்று “என்ன ம்மா… அவன, நாம இழுத்து பிடிக்க முடியாது டா… 
சித்தர் போக்கு… சிவன் போக்குன்னு… சொல்லுவாங்கல்ல அத மாதிரி அவன்…. உனக்கு தெரியாதா… 
ஏதோ எங்கையாவது போயிருப்பான்… இப்படி, நல்லபடியா வந்து நிக்கறான்….
இப்போ நாம அவன கட்டயாபடுத்த கூடாது டா… திரும்பவும்… ஏதாவது ஆகிட்டா… கைவிட்டு போயிட்டா… என்ன பண்றது… 
அத்தோட… அவனே, அந்த பெண்ணை பிடிச்சிருக்குன்னு… கேட்க சொல்றான்… அப்புறமும்… இன்னொரு பொண்ணை பார்க்கறது சரியா வராது டா” என பொறுமையாகவே சொன்னார்..
அர்ச்சனாக்கு, அங்கு…. இதே தர்மசங்கடநிலை… கண்ணீர் வரவில்லை… அமைதியாக நின்று கொண்டு.. போனை ஸ்பீக்கரில் போட்டிருந்தாள்… அவள் கணவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அர்ச்சனாக்கு இது கௌரவ பிரச்சனை… தன் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு கேட்கிறார்கள்… 
அவர்களின் துணி கடையில்… இவர்களும் பங்குதாரர்கள்… வெளியில் அதிகம் வரன் தேடாதவர்கள்… 
எனவே வீரா, படித்து… நல்ல அரசாங்க வேளையில் அமரவும்… நல்லபடியாக பார்த்து முடித்துவிட்டால்.. இங்கும், அங்கும் அர்ச்சனாவின் கணவருக்கு சற்று செல்வாக்கு உயரும்… 
மேலும் அர்ச்சனாவின் வீட்டில்…. எல்லோரும் வியாபராம், தொழில் என இருப்பதால்… கண் நிறைந்து அரசாங்க உத்தியோகம் பார்க்கும் வீராவின் மேல் ஒரு கண் வந்தது…. அர்ச்சனா, வீட்டினருக்கு. இது ஒரு கௌவ்ரவம் அல்லவா… அதுவும்தான் காரணம்… 
எனவே, அர்ச்சனாவின் கணவருக்கு… சற்று வீராவை, தன் தங்கைக்கு பார்த்துவிட்டால் பரவாயில்லை என்ற எண்ணம்… அதன் தாக்கம்தான் அர்ச்சனாவின் பேச்சு… அன்று.
எனவே, இவள் ஏதேனும் நடுவில் செய்கிறாளா… என கேட்கத்தான் அந்த நல்ல கணவர்… போனை ஸ்பீக்கரில் போட செய்திருந்தார்.. பெண்கள் பலசமயம்  பகடைகாய்கள்தான்… ஏமாந்தால்… தட்டி தூக்கிடுவர்.
எனவே, அர்ச்சனா… தந்தையின் பேச்சை கேட்டு, அருகில் கணவனும் இருப்பதால்… “எல்லாம் அவன் இஷ்ட்டம்தானா… எங்களுக்கெல்லாம் அப்படியா செய்தீங்க… 
அதென்ன அவனுக்கு மட்டும் ஒரு நியாயம்… 
இப்போ நாங்கெல்லாம் நல்லா இல்லாமையா போயிட்டோம்… 
எனக்கு தெரியாது… நீங்க அவன் கிட்ட பேசுங்க… இல்ல நான் பேசுறேன்” என்றாள் திடமாக.
ஆக மீண்டும் வீராவுக்கு, எதிராக வீடு… அர்ச்சனா வீடு… போர்கோலம் கொண்டது.
இப்போது நடப்பது எதுவுமே சம்மந்தப்பட்ட இருவருக்கும் தெரியாது. 
வீரா, தன்னுடைய பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில்.. இன்றுதான் அவளின் பேச்சுகளை… யூ டியுபில்…  பார்த்துக் கொண்டிருந்தான்…
புடைவையில் பார்க்கும் போது.. சற்று பெரிய பெண்ணாக தெரிந்தால்… அன்று சுடியில் அழகாக இருந்தாலே… இதென்னவோ.. புடவை நல்லாவே இல்ல’ என அவளுக்கு மார்க் போட்டுக் கொண்டிருந்தான்…
மென்மையானவள் இல்லை நான் என்பதாக முழங்கிக் கொண்டிருந்தாள் மேடையில்… ‘பார்த்துடி… எங்கம்மா பொண்ணு கேட்டு வந்ததும் அடிச்சிட போற’ என திரையில் பேசிக் கொண்டிருந்தவளை கிண்டல் செய்து கொண்டான் தனக்குள்…
சின்ன பெண்தான் என மனம் சொன்னாலும் அவள் பேசும் கருத்துகள்… உயர்ந்ததாக இருந்தது… வீராக்கு, மீண்டும் பயம் ‘ஐயோ! இவ்வளோ அறிவாளிய நான் எப்படி சமாளிப்பேன்’ என அறிவு அடித்து கொண்டது…
வீராவின் கைகள் தன்போல் அவளின் என்னை அழுத்தியது… மணி இரவு பத்திருக்கும்… 
பைரவிக்கு, அவளின் போன் ஒலிக்க தொடங்கியது… அதில் ‘IAS’ என்ற எழுத்து வர… சின்ன சிரிப்பு அவளின் முகத்தில்… ஆனால் அத்தனை அழகாக இருந்தது…. 
‘அஹா’ என ஒரு எதிர்பார்ப்பு… பெரிய ஆனந்தம்தான்… பைரவிக்கு. அன்பு சிலசமயம் எதிர்பார்க்கும்… இப்போது அவனின் நேசத்தை எதிர்பார்த்தது…

Advertisement