Advertisement

எனக்கானவளே நீதானே…
10 
(வசமிழக்கும் வானம் நான்….)
IAS ஓவ்வரு படிகளும்… ஓவ்வரு அனுபவம்… ஒவ்வரு படிப்பினை… எனவே சுந்தரம் தாத்தாவின் ஓவ்வரு வார்த்தையும் இங்கு உயிர் பெற்றது போல் நின்றது…
ஏதோ வேலைக்காகவோ… பணத்திர்காகவே … கௌரவத்திர்காகவோ சேரவில்லை வீரா… அவனின் நினைப்பு எல்லாம், நாட்டின் வளர்ச்சியில் என் பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான்.
இதுபோல எல்லோருக்கும் தோன்றும் என சொல்ல முடியாது… ஒவ்வருவருக்கும் ஒவ்வரு எண்ணம்… தன்னை ப்ருவ் செய்ய இங்கு வருவர்… சிலர் கௌரவத்திற்கு வருவர்… சிலருக்கு கனவாக கூட இருக்கும்… சிலருக்கு சிறுவயது லட்சியம்… வீராவினது முற்றிலும் வேறாய்… ‘பொறுப்பு’ சமூக பொறுப்புக்காக வருவதனாலோ என்னோ… ஐம்பத்து ஓராவது, இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டான் வீரா. பெரிய வெற்றி, சாதனைதான்….
இதோ வந்துவிட்டான் எல்லாம் முடித்து….  இது ஒரு கிரேட் சிஸ்டம்.. எனவே, இப்போது நேரடியாக மாவட்ட ஆட்சியாளராக வந்தான்.
அடுத்த வாரம் வீரா, பொறுப்பேற்க உள்ளான். அதற்குள் சொந்த ஊருக்கு சென்று… அனைவரையும் பார்க்க… இப்போது சென்னை வந்திறங்கினான். அங்கிருந்து அந்த விடிகாலையிலேயே பஸ் ஏறிவிட்டான் திருவண்ணாமலைக்கு. இன்னும் வீரா, அப்படியேதான் அதிகம் செலவு செய்வதில்லை.
கல்யாணியும் வைதியலிங்கமும் ஆசையாக வரவேற்றனர் தன் மகனை… அவனின் தாத்தா அருணாசலம்… உடல் நலன் அவ்வபோது பாதிக்க தொடங்கியது… எனவே, அப்போ அப்போ மருத்துவமனை, வீடு.. என பாவம் போராடிக் கொண்டிருக்கிறார்…
பேரன் வருகிறான் என்பதால்… தெம்பு வந்தது போல, மெல்ல எழுந்து நடமாட தொடங்கினார்… எனவே, கோவிலில் அபிஷேகம், அரச்சனை எல்லாம் செய்து பிரசாதத்துடன் அமர்ந்திருந்தார் அருணா தாத்தா… ஹாலில்.
அர்ச்சனா… வீராவின் அக்கா… ஊரிலிருந்து வந்திருந்தாள்… நேற்றே, தன் தம்பியை காண. எனவே, எல்லோரும் அங்கிருந்தனர்… கைலாஷ் அவன் மனைவியை தவிர…
வீரா வந்துவிட்டான், எல்லோரும் ஆனந்தமாக வரவேற்றனர்…. தாத்தாவின் முன் வந்து நின்றான்… ஆசையாக அவனின் தலை கோதினார்… கண்களில் கண்ணீர் வரவில்லை… எப்படி உருபடுவானோ என்ற நிலை மாறி… உசந்த பதவிக்கு வந்து நிற்கும்… தன் பேரனை பார்க்க… ப்பா… சொல்ல வார்த்தைகள் இல்லைதானே…  
வீரா, மௌனத்தை களைத்தான்… “எப்படி இருக்கீங்க தாத்தா….” என்றான். 
காது சரியாய் கேட்பதில்லை இப்போது “ம்…” என்றார் கேள்வியாய்.. அதன்பிறகு சைகையில் கேட்டான்… பதில் சொன்னார்.. பாட்டியின் அருகில் சென்றான்… 
அவனை, தனக்கும் கணவருக்கும் இடையே, சோபாவில் அமர வைத்துக் கொண்டார்… பாட்டி. மெல்ல வருடியது அவரது விரல்கள், தன் பேரனை… அவ்வளவு வயதாகவில்லைதான் பாட்டிக்கு… திடமாகவே இருந்தார்… என்ன பேசுவது தெரியவில்லை.. அவனின் தோற்றம் பெரியமனிதனாக காட்டியது, இயல்பாக அவருக்கு பேச வரவில்லை. எனவே அந்த வயதான பெண்மணி… சற்று அமைதியாக இருந்தார்.
பாட்டி, அவனுக்கு கோவில் பிரசாதத்தை நெற்றியில் வைக்க வர… தன் தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு முறைத்தான்… வீரா… “ச்சு…. பாட்டி… எனக்கு வேண்டாம்…” என்றான் அப்போதே…
பாட்டி “என்ன டா… ஆண்டவன் நினைக்காமையா நீ, இப்படி உசந்திருக்க… எல்லாம் வைச்சிக்கலாம்” என்றார்…
“ஆமாம், நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு அது நிஜம். ஆனா… அதுக்காக… காச கொட்டித்தான்… நான், அதோட அருளையோ, அன்பையோ வாங்கனும்னு இருந்தா… அது எனக்கு வேண்டாம் பாட்டி…. 
எவ்வளோ செலவு பண்ணீங்க இப்போ… சொல்லுங்க “ என்றான் காரமான குரலில்… வீரா தொலையவில்லை….
பாட்டி அமைதியாக இருக்க… “அது… நீங்க, இல்லாத யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம்…. ச்சு…….நீங்க விடுங்க, 
நீங்க மாற மாட்டீங்க…. நானும் மாற மாட்டேன்….” என்றான் சற்று கறாராக.. அந்த இடம் சற்று சூடாக…
பாட்டியின், முகம் வாடியது. அவன் எப்போதும் இப்படிதான் தெரியும்… ஏதோ ஆசை… பாட்டியின் முகம் பார்த்த, அர்ச்சனா… “டேய்… விடுடா… பாட்டிக்காக… வைச்சிக்க டா” என்றாள்…
“க்கா….” என்றவன் பாட்டியை கட்டிக் கொண்டான்… 
அவரிடமிருந்த வீபூதியை… அவருக்கே, நெற்றியில் வைத்து விட்டு “நீ வைச்சிகிட்டா… நான் வைச்சிகிட்ட மாதிரி” என்றான் இன்னொருமுறை அவரை கட்டிக் கொண்டு… கொஞ்சமாக சிரித்தார் பாட்டி…
தாத்தா… அமர்ந்திருந்த பேரனின் கன்னம் வருடினார் “நம்ம வம்சத்திலேயே யாரும் அரசாங்க வேல… கிடையாது.. நீதான் டா, முதல்ல” என்றார்… மெதுவான குரலில்… 
வீரா சிரித்துக் கொண்டான்… 
மீண்டும் தாத்தாவே பேசினார் “எங்க போஸ்டிங், பக்கத்திலா ” என்றார்… வீரா, அவரின் கையை பிடித்துக் கொண்டான்..
“இல்ல தாத்தா… “ என சொல்லி ஊர் பெயர் சொன்னான்… பின் அவனே  “மாத்திரை சாப்பிட்டீங்களா… “ என விசாரித்தான்… ஒன்றும் கேட்கவில்லை அவருக்கு, மீண்டும் சைகையில் கேட்டு, பதில் பெற்றான்.
அவரே “ம்… அதுதான் என்னை பிடிச்சு வைச்சிருக்கு… ஏதோ என் சின்ன பேரன் உருப்படியாகி… கல்யாணம் ஆகிடுச்சின்னா… இந்த கட்டை கரை சேர்ந்திடுமோ என்னமோ…
சீக்கிரம் அதையும் செய்துக்க ப்பா, வீரா…” என்றார் வேண்டுகோளா… தனது ஆசையா… என தெரியாத குரலில் சொன்னார்…
வீரா சிரித்தான்… ஓட்ட வெட்டிய முடி… அளவான மீசை, வழு வழுப்பான இருகிய தாடை… மடிப்பு கலையாக ஹல்ப் ஹன்ட் ஷர்ட்… படிப்பு தந்த தேஜஸ்… என அந்த சாதாரண சிரிப்பிலும்… அவ்வளவு கம்பீரமாக இருந்தான்… அதனை பார்த்த படியே கல்யாணி நிற்க…
வீரா “என்னை நம்பி யாரு பொண்ண குடுப்பா… “ என்றான் இளகிய குரலில்… அவனின் அப்பா, தாத்தா, பாட்டி எல்லாம் சிரிக்க… 
கல்யாணிக்கு “ஏன், என் பையனுக்கு இப்போ போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு நிக்குது… சொல்லு அடுத்த முகூர்த்தத்தில் செய்திடலாம்..” என்றார் பெருமையாய்.
வைத்தியலிங்கம் “ஆமாம்… வீரா… காலம் கடத்த கூடாது… இந்த ஒரு விஷயத்திலாவது நாங்க சொல்றத கேளு….” என இன்னும் ஏதோ சொல்ல வர…
அதற்குள் அவனின் அண்ணன் கைலாஷ்… அவன் மனைவி அஞ்சலி வந்தனர். இப்போதுதான் எழுந்து, குளித்து கீழே வந்தனர்… மணி காலை எட்டுதான் ஆகியிருந்தது…
கைலாஷ் “வா வீரா… சாரி,  வாங்க கலெக்டர்… 
எப்படி நடக்குது உங்க அரசாங்கம்” என்றான் கிண்டலாய்…
நம்ம புது கலெக்டர் “எல்லாம் உங்கள மாதிரி இருக்கிறவங்க சொல்ற படிதானே நடக்குது… “ என்றான் அசராமல்… 
கைலாஷ் “டேய்…” என தோளில் கை போட்டுக் கொண்டான்.
தன் அண்ணி அஞ்சலியை, பார்த்து “எப்படி இருக்கீங்க…” என  முறையாக விசாரித்தான் வீரா. நீண்ட மிக நீண்ட வருடம் சென்று அந்த வீடு சந்தோஷத்தை தனக்குள் வாங்கிக் கொண்டது…
அர்ச்சனாவிடம் “எப்போ க்கா, வந்த… மாமா எப்படி இருக்கார்…. பாப்பா, தம்பி  வரலையா…” என அடுக்கினான்…
“இருடா நேத்தி… சாயந்திரம் வந்தேன்… பாப்பா… டென்த்… லீவ் கிடையாது… தம்பியை மட்டும் கூட்டி வந்தா.. அவ்வளவுதான்… ரெண்டும் அடிச்சிக்கும்… அதான் நான் மட்டும் வந்தேன்…” என பொறுமையாக பேசினாள் அர்ச்சனா…
பின், இயல்பாய் உடைமாற்றி உண்ண வந்தான் வீரா… எல்லோரும் அவனை சுற்றி அமர்ந்து கொண்டனர்… ஏதோ பிள்ளை ஹாஸ்டலிலிருந்து வந்து போல… அவனுக்கு பிடித்ததை சமைத்து… போதும் போதும் என்றாலும்… விடாமல் பாசத்தையும் சேர்த்து பரிமாறி… அவனை திக்குமுக்காட வைத்தனர்… 
அடுத்த இரண்டு நாட்கள்… வீரா, வீட்டில் சீராடிவிட்டு… சென்னை வந்தான்…
நேரே எப்போதும் தங்கியிருக்கும் தன் வீட்டுக்குத்தான் வந்தான்… தாத்தாக்கே இன்னும் சொல்லவில்லை… அதிகாலைதான் வந்தான் மூன்று மணிக்கு. எனவே தூங்கிவிட்டான்.
பொறுமையாக ஏழுமணிக்கு எழுந்து கிளம்பினான்… சுந்தரம் தாத்தா வீட்டுக்கு. இப்போது எந்த தயக்கமும் இல்லை போல அவனுக்கு… உள்ளே வர… வாசலில் அமர்ந்திருந்த தாத்தா… “வீ, வீரா… வா… வா வா ப்பா… கலெக்டர்” என வரவேற்றார்..
சத்தம் கேட்டு ஐஸ்… அடித்து பிடித்து வந்தாள்… வாசலுக்கு… “அண்ணா” என அவனை நெருங்க… அழகாக கைபிடித்துக் கொண்டான் வீரா. 
ஐஸ் “எப்படி இருக்கீங்க ண்ணா…” என மூச்சு வாங்க கேட்டாள்…
“ம்… பாரு” என இரு கைகளையும் விரித்து… நிமிர்ந்து நிற்க… சிரித்தாள்
ஐஸ் “சுப்பர் ண்ணா… காக்கா காக்கா… சூர்யா மாதிரி இருக்கீங்க” என்றாள்..
“பாரு டா… புதுசா…. ஏதாவது சொல்லும்மா… 
என்ன காலேஜ்… கிராஷ்ஷா…. 
ம்… நடக்கட்டும் நடக்கட்டும்” என்றான்.. சிரித்தபடியே…
தாத்தா, வீராவிடம் “எப்படி இருக்க…” என்றார்.
“ம்…. நல்லா இருக்கேன் தாத்தா…” என்றவன் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினான்…
அவரும், ஐஸுவிடம் பணம் எடுத்து வர சொல்லி “நல்லா இருப்பா…. நீ நினைச்ச மாதிரியே… உன் வேலை அமையட்டும்… ” என்றார்.
வீரா “தேங்க்ஸ் தாத்தா…” என்றான்.. அவனின் கையில் நூறு ரூபாய் கொடுத்தார்… மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
கோதையும் வந்தார்… “செம பிட்டா ஆகிட்ட… இவ்வளோ யாங் கலெக்டர்…. சூப்பர்….“ என்றார். 
வீரா, சிரித்தான்.. ஆஹா… என்ன கலைடா சிரிப்பில்… முகம்மெல்லாம் அறிவின் ஒலி… கோதையின் மனம்.. ரவியை, நினைத்துக் கொண்டது… சம்மந்தமே இல்லாமல்….
எத்தனை வரன்கள் பார்க்கிறார்கள்… அது, எதுவும் இவன் அருகில் கூட வரமுடியவில்லையே… முன்பே நல்லவன், இப்போது வல்லவனாகவும் வந்து நிற்கிறானே… இவனை ஏன் பைரவிக்கு பார்க்க கூடாது என எண்ணம் வந்தது… அந்த… ஷணமே வந்தது…. 
அன்று வரை தெரியவில்லை வீட்டு பையன்… ஆனால், அன்று.. ஐஸ் பேசியது முதல்… ஏதோ ஒரு ஓரமாக… தோன்ற தொடங்கியதுதான்… இன்று, வீராவை பார்க்கவும் விஸ்வரூபம் எடுத்தது….
ஆனால், பைரவியை நினைத்தால் பயமாக இருந்தது… இவன் பேச்செடுத்தாலே எரிந்து விழுந்தாள்… இந்த ஆறுமாதமாக. எனவே ‘வீராவை, பிடிக்காது போல’ என எண்ணிக் கொண்டார்…  
மேலும் இங்கு இருக்கம் போதும் வீரா, பைரவி பெரிதாக பேசி, பழகி பார்த்ததில்லை யாரும். எப்போது… எங்கு… கண்டாலும் சண்டைதானே பார்த்திருந்தனர். எனவே… கோதைக்கு தயக்கம்… 
இத்தனை நாள் வீராவை கன்சிடர் செய்யவில்லை… இருந்துவிட்டார்… இன்று மொத்தமாய்… இப்படி வந்து நிற்கவும்… மனம் சுட்டது… ம்கூம் அடித்துக் கொண்டது… கண்ணெதிரே இருப்பவனை விட்டு வேறு யாரையோ தேடுகிறோமோ… என தோன்றியது.
ம்…. என பெருமூச்சு வந்தது… அதெல்லாம் ஒன்றும் செய்வதற்கில்லை… இப்போது அவன் பெரிய இடம், என்னதான் பணிவாக இருந்தாலும்… அவனின் பதவி இப்போது வேறு… எனவே அவனிடம் கேட்டக… இல்லை, இதை பற்றி பேச ஒரு தயக்கம் இந்த நொடி வந்தது…. அத்தோடு ‘பைரவி…’ என நினைத்து அமைதியாகிவிட்டார்.
தன்னை சுதாரித்து, கோதை “வா, சாப்பிடு… வீரா” என்றார்.. 
“ம்” என்றவன் உள்ளே வந்தான்.
வீராவின், கண்கள் அப்பட்டமாக பைரவியை தேடியது… தோற்றும் போனது… ஆசையாக வந்தான்… சொல்ல போனால் நிறைய ஏக்கமாக வந்தான்… 
‘தகுதியோடுதான் உன் முன் நிற்பேன்’ என்ற தனது சவாலையே நிறைவேற்றி… அவளிடம் பேசிவிடலாம் எனதான் வந்தான்… என்னை பார்த்தால்… அவளின் முடிவு கூட மாறும் என்ற திமிருடன்தான் வந்தான்… 
மெல்ல கண்களை சுழற்றியபடியே கேட்டான்… “பைரவி, எங்க ஆன்ட்டி” என…
கோதை “தோ… வருவா… மேலேதான் இருக்கா… இன்னிக்கு ஈவனிங் மதுரையில், தமிழ் சங்கத்தில் பேச்சு… பத்து மணிக்கு எல்லோரும் சேர்ந்து இங்கிருந்து கிளம்பறாங்க… அதான் ரெடியாகிட்டு இருக்கா…” என்றார்… ஆனால் அழைக்கவில்லை…
வீராவின் குரல்… மேலே பைரவிக்கு கேட்டது. ஆனால், அவனாக இருக்கும் என தோன்றவில்லை. எனவே, அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்…
கோதை “நீ சாப்பிடு வா” என மீண்டும் அழைக்க… 
தயக்கமே இல்லாமல் வந்தான். ஒரு ஜாக்கிங் பேன்ட்… கிரீன் டி-ஷர்ட் அணிந்திருந்தான்… அலட்டாமல் வந்து அமர்ந்து, எப்போதும் போல உண்டான்.. 
ஆனால் முந்தைய பேச்சு இல்லை… தாத்தாவுடன் எப்போது போலான பேச்சு… ஐஸ்சுடன் பொதுவாக பேசினான், படிப்பு… கல்லூரி.. என பொதுவாக பேசினான்… 
ஏதோ வீராவிடம் முன்பு போல் அடித்து.. பிடித்து கிண்டலாக பேச முடியவில்லை.. ஐஸ்சுவாலும்… அவன் சரியாகத்தான் பேசினான். ஆனால்… இப்போது மரியாதை தன்னால் வந்தது… அதனால் ஒரு ஒதுக்கம் வந்தது அவளிடம்..
மெல்ல அப்படி பேசியபடியே உண்ண.. பைரவி இறங்கி வந்தாள், கீழிருக்கும் அவனை பார்த்ததும்… சுவாசம் தப்பியதுதான் உண்மை… 
‘வந்துட்டானா’ என மனம் எண்ணினாலும்… ஒன்றும் புரியவில்லை… எந்த பிடிப்புமே இல்லாமல்… ஒரு பிடித்தம் இவர்களிடம்… எனவே வந்துவிட்டானா என்பதை கூட அவள் எப்படியோ உணர்ந்தாள்…
கூடவே ‘என்ன வீட்டுக்கெல்லாம் வரமாட்டாரே…’ என எண்ணினாலும்… அவன் முகம் பார்க்க ஆவல் வந்தது…
ஆனாலும். அவன் மீதிருந்து கண்ணை எடுக்காமல்….. வந்தாள். வீராவுக்கு அவள் வருவது தெரியவில்லை…
தாத்தா “வா டாம்மா… எல்லாம் எடுத்து வைச்சிடியா… 
வீரா வந்திருக்கார் பாரு” என சொல்ல……..
வீரா, பின்னால் திரும்பினான் அவளை பார்க்கும் ஆவலில்… அந்த ஷணம்… எந்த ஈகோவும் இல்லை அவனிடம்… தேடிய கண்களுக்கு.. அமிர்தமாக வேண்டும் என எண்ணி… திரும்பினான்…
அவளுக்கு அப்படியேதும் இல்லை போல, மெல்ல அருகில் வந்தவள் அவனின் எதிரில், சேரில் அமர்ந்து கொண்டாள்… “எப்படி இருக்கீங்க…” என்றாள் அவனை பார்க்க கூட இல்லை… எதையோ தனது தட்டில் வைத்த படியே கேட்டாள்… 
என்ன உணர்ந்தான் வீரா… அப்படி பூரித்து போய் பார்த்தவனது…. முகம், அப்படியே வாடி போனது… நான் அவளுக்கு ஏதுமில்லையா… கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து நேரில் பார்க்கிறேன்… நான் பாதிக்கவில்லையா.. அவளை….. அப்படியே அந்த கன்னம் பூரித்த ஒரு சின்ன சிரிப்பு… கண்ணீர் பூத்த பெரிய விழிகளை… எதிர்பார்த்தவன்… ஓய்ந்தான், அவளின் பார்வையில். 
எனது வருகை அவளுக்கு, ஏதுமில்லையா… அவள் முகம் இப்படி இருக்காதே… எப்போது துரு துருவென… யாரை எப்போது வம்பிழுக்கலாம்… என பரபரக்கும் கண்களை காணோமே… 
சின்ன கல்வைத்த மூக்குத்தி, அவளின் துடுக்கு பேச்சில் ஒளிவீசும்… அழகை காணுமே… வெடுக் வெடுக்கென காட்டும் உடல்மொழி இல்லையே… என அவன் ஆராய… மீண்டும் பைரவி “எங்க சர்… போஸ்டிங்” என்றாள்… சாதாரண குரலில்..
தாத்தா பதில் தந்தார், இவன் யோசனையில் இருக்கவும்… 
பைரவி அமைதியாக உண்ண தொடங்கினாள்… ‘ப்பா…’ என்ன கம்பீரம்… முகத்தில் எதுவுமே இல்லாமல் துடைத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்… 
அவன்தான் ‘இவள்தானே கோவத்தில் ரெமொர்ட்டை உடைத்தவள்’ என பார்த்திருந்தான்… பின் சுதாரித்துக் கொண்டான்.
அவளிற்கும்… அதே நேரம்… அவனிற்கும் அதே ஒன்றரை வருடம்தானே…  ‘பார்த்துக்க்றேண்டி…; என நினைத்தான்… அமைதியாக உண்டான்.. பின் வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான்.
ஐஸிடம், பைரவியின்.. போன் நம்பர் வாங்கிக் கொண்டான்… வீரா. ஐஸ், கிளம்பினாள் கல்லூரிக்கு… பைரவி… அங்கேயே அமர்ந்திருந்தாள்… ஹாலில்.
வீரா, கோதையிடம் “அங்கிள் எப்படி இருக்கார் ஆன்ட்டி… எப்போ வரார்…” என… அப்படியே பேசிக் கொண்டிருந்தான்… 
இவள் டைரி வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. இருவரும் ஏதும் பேச முற்படவில்லை… 
நீ பேசு முதலில்… என அவளும். ‘ஏன், தேடினேன் என கண்ணில் கூட காட்டாதவளிடம் எப்படி நான் போய் பேசுவது’ என அவனும் அமர்ந்திருந்தனர்…
ஆனால் வீரா, அவளை ரசித்துக் கொண்டிருந்தான்… கண்ணை உறுத்தாத லேவண்டர் கலர் லாங் டாப், லெகின்… நீண்ட கூந்தலை… பிரெச் பிளேட் போட்டு… சின்ன கல்வைத்த தோடு, காதில் உரச.. அழகாக இருந்தாள்.. என்ன, வீராவின் கண்களுக்கு அந்த ஷால் மட்டும் உறுத்தியது… இளமையடிகள் விழித்துக் கொண்டார்.
ஆனால், பேச்சு கோதையிடம் நடந்து கொண்டே இருந்தது வீராக்கு. பைரவி எதற்கும் அசையாமல்.. தனது குறிப்பே, வேதமென பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளை ரசித்தது போதும்… என நினைத்தான் போல ‘எப்படி என் வழிக்கு வரவைக்க வேண்டுமென எனக்கு தெரியும்’ என எண்ணி கிளம்பினான்… வீட்டுக்கு.
கோதைக்கு தாங்க முடியவில்லை… நல்லவன் எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன்… ‘குணம்’ சொல்லவே வேண்டாம்… இப்படி ஒருவன் நம் பெண்ணுக்கு கொடுத்து விக்கவில்லையோ என மனம் அடித்துக் கொண்டது… 
சுந்தரத்திற்கு இதெல்லாம் தோன்றவில்லை… எப்போதும் போல அவனை வழியனுப்பி வைத்தார்… 
அடுத்த ஒரு வாரத்தில், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் ஆட்சியாளராக வந்தான் வீரேஷ்வர். இவனுக்கு நேரடி போஸ்டிங்… அத்தனை கிரேட் கையில் வைத்திருந்தான்.
நாகபட்டணம், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் என நான்கு நகராட்சிகளை கொண்டுள்ள கடலோர கிழக்கு மாவட்டம் இது. மீன்பிடித்தொழில்.. மீன் பதனிடுதல்… ஏற்றுமதி என அதை சார்ந்த முக்கிய தொழிகள்தான் பிரதானம். 
வேதாரணிய கோவில்கள், கோடியக்கரை சரணாயலாம், வேளாங்கண்ணி சர்ச்… என பல சுற்றுலதளங்களை கொண்டது..

Advertisement