Advertisement

எனக்கானவளே நீதானே…
17 
(வசமிழக்கும் வானம் நான்….)
காலையில் கோதை, கதவை திறக்க…. முதலில் ரவி அமர்ந்திருந்த காட்சிதான் தெரிந்தது… எனவே போன் செய்தார் ரவிக்கு…. போன் டேபிள் மேலிருந்து அடிக்க…. தன் அறைக்கே சென்றுவிட்டார் கோதை…
ரவிக்கு, அந்த போனின் சத்தம் கேட்கவில்லை போல…. வீரா, ஒரே ரிங்கில் எழுந்துவிட்டான்… அடித்து பிடித்து போன் எடுத்தான்… 
கோதைதான்… தன் மகள் என நினைத்து “ரவிம்மா….” என அழைக்க…
“சொல்லுங்க ஆன்ட்டி…” என்றான் மருமகன்.
கோதைக்கு என்ன சொல்லுவது என தயக்கம்… பெண்ணிடம் பேசலாம்.. ‘வீராவை வீட்டுக்கு போக சொல்லு டா’ என பேச நினைத்தார்… ஆனால் வீராவே எடுக்கவும்… “ரவிய, எழுப்புங்க மாப்பிள்ளை” என்றார் தயக்கமாக…
“”ம்… சரி ஆன்ட்டி” என்றவன்.. போனை வைத்து விட்டு… அவளிடம் சென்றான்… ஷோபா வளைவில் சாய்ந்து, அசந்து உறங்கியிருந்தாள்… எழுப்ப மனம் வரவில்லை… வீராக்கு. 
யோசித்தது நேரத்தை வீணாக்கவில்லை இளமையடிகள்… அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டு, அவளறை நோக்கி சென்றான்.
மெல்ல கட்டிலில் கிடத்தி, கழுத்துவரை போர்வை போத்தி… நிமிர “தேங்க்ஸ், வீரா சார்” என்றாள் அவள்…
“தூங்களையாடி ப்ராடு….” என்றான்… குனிந்தபடியே… அவளின் முன்னுச்சு முடிகளை ஒதுக்கியபடியே கேட்க…
ரவியும் கண்களை திறக்கமால்… “தூக்கும் போது முழுச்சிட்டேன்….” என்றாள் திரும்பிபடுத்தபடியே..
அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் “உங்க அம்மா வெயிட் பண்றாங்க…. “ என தன் விரலால், அவளின் உதடு தொட… ரவி கண் திறக்க… ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தான்… வீரா.
அவளும் “பத்து மணிக்கு ஷாப்பிங் போகணும் ரெடியா இருங்க…. ஒன்பது மணிக்கு சாப்பிட வந்துடுங்க…” என சொல்லி மீண்டும் உறங்க தொடங்கினாள்.
வீரா, கீழே இறங்கினான்… கோதை கிட்சனில் நிற்க… வீரா “ஆன்ட்டி, நான் கிளம்பறேன்” என்றான்…
“காபி தரேன்… வீரா” என்றார்.
“இல்ல ஆன்ட்டி… அப்புறம் வரேன்” என்றவன் கோதை சாவி தர வாங்கிக் கொண்டு தன் வீடு நோக்கி சென்றான்… 
காலையிலே தன்னவளின் த்வய தரிசனம் பார்த்து சற்று கிறக்கத்தில் இருந்தான்… எனவே ஏதோ ஒரு குதுகலம் வந்து ஒட்டிக் கொண்டது அவனிடத்தில்… அப்படியே வீடு சென்று ஜாக்கிங் கிளம்பினான்… மணி ஆறு தான் ஆகியிருந்தது.
ரவி பொறுமையாக எட்டு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி கீழே வந்தாள்…
வீராவுக்கு அழைத்தாள்…
வீரா, எடுக்கவும் டிபன்னுக்கு வருமாறு அழைத்து வைத்தாள்.
வீராவும் வர… எல்லோரும் உண்டு முடித்தனர்… அப்போது வீராவுக்கு அவளின் தந்தை அழைக்க… வீரா போனுடன் வெளியே நகர்ந்தான்…
வீரா பேசி முடித்து உள்ளே வரவும் கோதை உண்ண அழைத்தார்.. வீராவின் முகமே சரியில்லை… ரவி அதனை கவனித்தபடியே உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
ராகவ், தாத்தா… வீரா என உண்டனர்… நேரம் சென்றது.
இப்போது ராகவ்க்கு லிங்கத்திடமிருந்து போன் வந்தது… பேசி முடித்தனர். கோதையிடம் விஷயம் சொன்னார் ராகவ் “கோதை… ஞாயிறு காலையில் கோவிலில்… பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம்… சம்பந்தி ஏற்பாடு செய்திட்டாராம்…. இப்போதான் கூப்பிட்டு சொன்னார்…” என்றார் சிரித்த முகமாக…
அப்போதே எழுந்து வீரா வெளியே சென்றான்… 
ரவியும் “ப்பா… நாங்க பர்சேஸ் கிளம்பறோம் ப்பா… வரேன் ம்மா” என சொல்லி கார் சாவி எடுத்து வெளியே வந்தாள்.
வீரா போனில் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்… ரவி “போலாமா” என கேட்க… சைகையால்… கையசைத்தான்… 
இருவரும் கடை நோக்கி சென்றனர்… வீரா மௌனமாக தன் அம்மா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் ஏதும் பதிலே சொல்லவில்லை… ஒருவழியாக போனை வைத்தான்.
கடை வர இறங்கினர் இருவரும்… ஏதும் பேச்சுகள் எழவில்லை… ரவிக்கு திருமணம் கோவிலில் என்றவுடன் வீராவின் முகம் காட்டிய பாவம் மனதில் பதிந்து போனது… எனவே, அவனுக்கு இதில் பிடித்தமில்லை என தெரிந்தே போனது… என்ன சொல்ல முடியும்… என அமைதியானாள் ரவி.
அது ஒரு பெரிய ஷோ ரூம்… வீராவிற்கு இதுவும் சங்கடத்தை தர… ரவியை பின் தொடர்ந்தான்… அமைதியாக.
ரவி “சைஸ்… என்னங்க” என்றாள்.
“தெரியல…” என்றான். ரவி அங்கிருந்த பணியாளரை அழைத்து… வீராவின் சைஸ் மேஷர் செய்ய, செய்தாள். 
வீரா அமைதியாக சென்று அமர்ந்து கொண்டான்… ரவி அழகான மெரூன் கலர் ஷெர்வானி செலக்ட் செய்தாள்… அவனின் நிலையுணர்ந்து… எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல்… அவனின் விருப்பமும் கேளாமல் தானே செலக்ட் செய்தாள்.
போட்டு பார்க்க சொன்னாள்… சொன்னதை செய்யும் ரோபாவானான் வீரா.
அதே அமைதியுடன் மீண்டும் வீடு நோக்கி வந்தனர்… அந்த ஹாலில், எதை பற்றியும் கவலையே இல்லாமல், ‘என்னை தூங்க வைடி’ என கேட்ட வீரா எங்கோ காணம் இப்போது… அதெல்லாம் ஏதோ முன்ஜென்மம் என இவர்கள்… அமைதியாகினர்.
அதன்பிறகு… அன்றையநாள் வேகமாக சென்றது… வீரா தனது சர்குளில் யாருக்கும் அழைக்கவில்லை… எனவே ரவி, வீராவின் உதவியாளருக்கு… தன் தந்தை மூலம் அழைப்பு விடுக்க செய்தாள். அத்தோடு.. முக்கிய நபர்களின் நம்பர் பெற்று… அழைக்கவும் செய்தாள் ரவி.
மாலையில் திருவண்ணாமலையிலிருந்து எல்லோரும் வந்தனர் வீராவின் வீட்டிற்கு… காபி, டிபன் என உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது.
இரவு… பிள்ளைகளுடன் அர்ச்சனா… குடும்பம் வந்தது. வாழை மரம் தோரணம்… குழந்தைகள்… பெண்களின் சத்தம் என இருவீடும் கல்யாண கலை கொண்டது. 
யார் வந்தும்… என்ன செய்தும்… வீரா, முகம் மட்டும் வாடியேதான் இருந்தது. எல்லோருக்கும் அவன் நிலை தெரியும்தான்… ஆனால், என்ன செய்ய முடியும்… கழுத்தில் தாலி இல்லாமல், எப்படி… ரிஷப்ஷனின் மணமக்களை நிறுத்த முடியும்… 
மேலும் அந்த விழாவை தள்ளி போடவும் முடியாதே… எனவே.. பிரம்ம முகூர்த்த நேரத்தில்… கோவிலில் திருமணம்… என பெரியவர்கள் முடிவு செய்தனர்… அதனைத்தான் வீராவின் அம்மா… காரில் செல்லும் போது அவனுக்கு ‘விளக்கி’ கொண்டிருந்தார்…
வீராவுக்கும் அது புரிவதால் அமைதியாக இருந்தான்… எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான்… ஆனால் அறிவு எப்போதும் போல.. கொள்கையை பிடித்து தொங்க… மனம் ஊமையாக… முகமும்… கலையிழந்தது.
தாத்தா… வீராவின் ஒட்டா தன்மையை பார்த்தார்… மெல்ல தன் பேத்தியிடம் பேச… ரவியும் “நான் என்ன தாத்தா செய்ய… அவருக்கு கோவில்ன்னா அலர்ஜி… அதான் முகம் அப்படியிருக்க… 
என்ன செய்ய முடியும்.. இவர் சொன்ன நாளில் இவரே வரல…  
இப்போ போயி யார்கிட்ட சொல்றது… மாமாகிட்ட நான் சொல்லிட்டேன் அவங்களும் கேட்கல…” என்றாள் சலிப்பான குரலில்..
தாத்தாவிற்கு தாங்கவில்லை… என்னவோ இப்போதும் அவருக்கு, வீராவே முக்கியமாக தெரிந்தான் போல… லிங்கத்திடம் மீண்டும் இரவு எட்டு மணிக்கு பேச்சு சென்றது..
ஆனால், லிங்கம் “ப்பா… அவன் இந்த ஒருதரம் நம்ம பேச்சை கேட்கட்டுமே…“ என்றார் சிரித்தபடியே… ஒன்றும் பேச முடியவில்லை தாத்தாவால்… ஆக, சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் வாய்க்கும்… இப்போது வீராவின் குடும்பத்திற்கு அது அமைந்தது போல… ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கை நம்மை மடக்கிவிடும்… இப்போது வீராக்கு அது நடக்கிறது போல…
அதிகாலையில், வீராவின் தாத்தா பாட்டி… பெற்றோர்.. அண்ணன் அண்ணி என எல்லோரும் இரண்டு காரில் செல்ல… அக்கா அர்ச்சனாவின் குடும்பம் தனி காரில் சென்றது.. 
இப்போது பைரவியின் குடும்பமும் ஒரு காரில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நோக்கி சென்றனர். ஐஸ் மட்டும்… தரையில் கால்படாமல் குதித்துக் கொண்டிருந்தாள்…
ஐஸ் “க்கா.. இந்த புடவை இங்க தெரியுது… பின் செய்து விடுக்கா…” என்றாள்.
“க்கா… இன்னிக்கே நீ… மாமா கூட போயிடுவியா க்கா…”  என எதையோ பேசிக் கொண்டே இருந்தாள்… கள்ளமில்லா மனமாக…
கோவிலில்…… வீரா, பட்டு வேட்டி… மேலே சிவப்பு நிற பட்டு அங்கவஸ்த்திரம் அணிந்து இறங்கினான்… அத்தனை கம்பீரமாக இருந்தான். ஆனால், முகத்தில் கலையே இல்லை… அத்தனை இருக்கம்.
ஆனால் அதற்கு நேரெதிர்…. பைரவிக்கு, அத்தனை இன்பம்… அது முகத்தில் மிளிர… அதே சிவப்பு வண்ண பட்டு கட்டி… அதற்கு தோதான அலங்காரம் செய்து… தன்னவனை கரம்பற்றும்… நேரத்திற்கான… இன்பத்தை முகத்தில் காட்டி.. மெல்ல அவள் நடக்க… வீராவும் உடன் சென்று, சேர்ந்து  கொண்டான்.
முதலில் வீராவை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை… வீராவும் கூடவே வந்தானேயன்றி ஏதும் பேசவில்லை… அவஸ்தையான மௌனம் நிரம்பியிருந்தது இருவருக்குள்ளும்.
எல்லோரும் உள்ளே சென்று… வணங்கி, சன்னதியின் எதிரே அமர… அர்ச்சகர்… வீராவின்.. குடும்பம் தந்த தாலியை… உள்ளே சாமி பாதத்தில் வைத்து.. அர்ச்சனை செய்து… இரண்டு மாலைகளுடன் மணமக்களை நெருங்கினார்.
வீராவிற்கு ஒரு மாலை அணிவிக்க… வீரா நெளிந்தான்.. வீராவின் கையில் ஒருமாலை.. கொடுத்து, பைரவியின் கழுத்தில் போட சொல்ல… அவனும் அவ்வன்னமே செய்தான்… ரவி பரவச நிலையில் இருந்தாள்… வீராவின் அமைதி பார்த்து…
அர்ச்சகர்… “சுவாமிய ப்ராத்தனை செய்துக்கோம்மா….” என்றவர்..
வீராவின் கையில் மங்களநாண் கொடுத்தார் “மாங்கள்யம் தந்துனாநேனா…” என சப்த்தமாக சொல்ல…
பைரவி, அவர் சொன்னபடியே கரம் கூப்பி… கண் மூடி… ப்ராத்திக்க…. சூழ்நிலைலைகளுக்கு இறங்கிய வீரேஷ்வரின்… மனம் இன்னும், பைரவிக்கு இணங்கவில்லை போல… அப்படியே நின்றான்… அந்த ஷணம். 
பைரவியும் கண்களை திறக்கவில்லை… வீராவிடம் பெருமூச்சு வந்தது, ஏனோ அவளிடம் கோவமே வந்தது… இப்போதும்.
அந்த மந்திரம் முடியும் நிலையில், தாத்தா “வீரா..” என்றார்…
வீரா, சுதாரித்து… அவளுக்கு மங்களநாண் அணிவிக்க.. கண்களை திறந்தாள்… நீர் தழும்பிய விழிகளால்.. ஆனந்தமாக அவனை பார்த்தாள்… பைரவி.
ஆனந்தமான நேரத்தில் வலது கண்ணிலிருந்துதான் முதலில் நீர் வருமாம்… அப்படிதான் ரவியின் வலது கண்ணிலிருந்து ஒருபொட்டு… கண்ணீர் அவன் கைகளில் பட்டு சிதறியது…. 
ஏனோ அறிவால் நிறைந்திருந்தவனும்… அந்த நிமிடத்தை உணர்வு பூர்வமாக,  அவளையே பார்த்தபடியே உள்வாங்கினான்… அந்த நிகழ்வை. அழகான எதிரெதிர் மனநிலையில் உள்ள இருவரும்… ஒரே புள்ளியில் இணைந்தனர்…
பின் குங்குமம் வைக்க சொல்ல… ஏதும் முகத்தில் காட்டதவனாக… அந்த தாழம்பூ குங்குமத்தை அவளுக்கு வைத்து விட்டான்… 
அதன்பின், சன்னதியிலிருந்து வெளியே வந்து… பிரகாரம் சுற்றி வந்து.. அமர்ந்தனர்… எல்லோரும். 
வீரா இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை… இன்னும் அதே இறுக்கத்தில் முகம் இருக்க, யாரும் அவன் அருகில் நெருங்கவில்லை….
இருவரும் அமர்ந்தனர்… கூட்டம் அதிகமில்லை… அந்த ஈர காற்று… பொன் விடியல்… கழுத்தில் மாலையுடன் அவன் அணிவித்த பொன்தாலி.. சந்தனம்..  குங்குமம்.. என பைரவி அந்த நிமிடத்தை அனுபவிக்கவும்… கடவுளுக்கு நன்றி சொல்லவும் தன் கண்களை மூடிக் கொண்டாள்.
பார்த்திருந்த வீரா, பொறுக்க முடியாமல் “என்ன எல்லாம் உன் விருப்படிதானே நடக்குது… அப்புறம் என்ன… சந்தோஷமா இரு” என்றான் கர்ண கொடூரமான குரலில்…
வீராவின் கோவம் தெரியாது இல்லையே… ரவிக்கு, எனவே கண்டுகொள்ளவில்லை தன்னவனின் பேச்சை….
மேலும் ஐந்து நிமிடம் சென்றது.. இப்போதும், கண் திறக்கவில்லை அவள். வீராவின் பொறுமையும் அந்த ஈர காற்றில் பறந்தது… “கண்ண திறடி… படுத்தற…” என்றான்… கடுகடு குரல்தான்.. ஆனால், ஏதோ ஒரு ஆசை… அந்த பரவசமான நீர் நிரம்பிய கண்களை மீண்டும் பார்க்கலாமோ என்ற எண்ணத்தில்… கத்தினான்… 
அவனிற்கு சாதகமான சூழல் இல்லை.. ஆனால்… தன்னவளுக்கு பிடிக்கிறதே என அந்த நேரத்தில், அவன் உணர்ந்தான்… அந்த பரவசம் தாங்கிய கண்கள்.. இதுவரை அவன் காணாதது… அப்போதுதான் அவளின் காதலை அந்த கண்களில் உணர்ந்தான்… எனவே அதை மீண்டும் பார்க்கும் ஆவல், ஆனால் எப்படி என தெரியாமல் கத்திவிட்டான்… 
இதெல்லாம் புது பெண்ணுக்கு எப்படி தெரியும்… பைரவி, கண்களை திறந்து “இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு அதுக்குள்ள சண்டை போடுறீங்க… அமைதியா…. காதலா… பேசுங்க… வரலைன்னா.. பேசாதீங்க… “ என்றாள் அவளும் கடுப்பாக…
அவளின் கோவம் அவனுக்கு சிரிப்பை தந்தது போல… வீரா லேசாக சிரித்தான்… “ம்…. காதல்… அமைதி… வரமாட்டேங்குது.. நீங்க படுத்தற பாடுல….” என்றான் மெல்லிய குரலில்… சற்று குறைவான கடுப்புடன்…
ரவி சிரித்தபடியே… “காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்….. கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்…. அப்படின்னு பாரதியார் சொல்லியிருக்கார்…. புரியுதா…” என்றாள் அவனின் மனநிலையை மாற்ற…
கடுப்பான வீரா… “அதே பாரதியார்தான்… கதையிலே கணவன் சொல்லுகெல்லாம்.. எதிர் செய்யும் மனைவி போலன்னு சொல்றார்… சும்மா பேசாத ரவி… 
கிளம்பளாமா….” என்றான் கடுப்பாக…
“ம்…” என்றவள் அங்கு அமர்ந்திருந்த பெரியவர்களை பார்க்க… எல்லோரும் எழுந்தனர்… பைரவி.. கொடிமரத்தருகே நமஸ்கரித்து… எழுந்து கொண்டாள்… வீரா, ஓரமாக நின்றுகொண்டான்.
எல்லோரும் வீடு வந்தனர். ஆர்த்தி எடுத்து.. பால்பழம் கொடுத்து என அடுத்த அரை மணி நேரம் மணமக்களை… அதுவும், வீராவை படுத்திய பெரியவர்கள்… இப்போதுதான் அவர்களை ப்ரீயாக விட்டனர்.
இப்போது வீரா… அமைதியாக ஹாலில் ஷர்ட் அணைந்து அமர்ந்து கொண்டான். யாரும் அவனிடம் நெருங்கவில்லை….
பைரவியை சூழ்ந்து கொண்டது வீராவின் வீடு மொத்தமும்… அங்கே டைனிங் ஹாலில்… சின்ன சிரிப்பு சத்தத்துடன்.. இளையவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்… பெரியவர்கள் இன்னும் ஏதோ பேசியபடியே அமர்ந்திருந்தனர்… காலை உணவுக்கு இன்னும் நேரமிருந்தது.
அர்ச்சனா.. “நீ எப்போ அங்க நாகை போற…. ஏதாவது சொன்னனா” என கேட்க…
ரவி “தெரியாது அண்ணி… எனக்கு அடுத்த வாரம் ஒரு பட்டிமன்றம் இருக்கு… அத முடிச்சிட்டு போகணும்… அவங்க எப்போ டுயிட்டி ஜாயின் பண்றாங்க தெரியலை” என்றாள்…
அர்ச்சனா “கேட்டுக்கோ ரவி… இனி நீதான்… 
நான் எது பேசினாலும் கத்துவான்.. கேட்டு சொல்லு.. 
அதுக்கு தக்க… அப்பா அம்மாவ வர சொல்லலாம்” என்றார் நாத்தனார்… எல்லோரையும் காப்பாற்றி… மனைவியை மட்டும், மாட்ட வைக்கும் குடும்ப அரசியலில் அழகாக சிக்கிக் கொண்டாள் ரவி.
 

Advertisement