Advertisement

ஹரே கிருஷ்ணா
எனக்கானவளே நீதானே… 
(வசமிழக்கும் வானம் நான்….)
(நான்கு வருடத்திற்கு முன்பு தொடங்குகிறது கதை….)
இரவு… மணி ஏழிருக்கும்…. நீண்ட பின்னல் அசைந்தாட… இரவு கவிழும் வேளையில் அந்த ஆட்டோகாரனிடம் சண்டை… “நில்லுங்க, என்ன இப்போ கொஞ்ச நேரம்….  நிக்க மாட்டீங்களா…
பேசின இடத்தில்தானே இறக்கி விடனும்… 
இங்கேயே நிருத்தி இருக்கீங்க… 
இப்போ சத்தம் வேற போடறீங்க… இருங்க…” என்றவள்… அந்த ஆட்டோகாரருக்கு பதில் சொல்கிறாளா… தனக்கே சொல்லிக் கொள்கிறாளா… சண்டையிடுகிராளா.. இல்லை சலித்துகொள்கிறாளா என தெரியாத குரலில் சொல்லிவிட்டு… முகத்தை எப்போதும் போல சிடுசிடுப்புடன் வைத்துக் கொண்டு… மொத்தம் நான்கு பெரிய பெரிய சில்வர் சம்படங்கள்.. தாங்கிய கட்டை பையையில் ஒன்றை மட்டும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு… மள மளவென அந்த கூட்டம் நோக்கி நடந்தாள்.. 
அது கூட்டம் அல்ல… மாநாடு… மெரீனா மாநாடு… அப்படிதான் சொல்ல வேண்டும் கெளவ்ரவமாக…
அந்த ஆட்டோகாரர் “நில்லு ம்மா…. எங்க போற” என கத்த….
அவள் திரும்பியும் பார்க்கவில்லை… அவருக்கு ஏறியது… ”சரியான சாவுக்கிராக்கி… காசையும் கொடுக்கல… இப்படி நிக்க வைச்சு உயிரை எடுத்தினிருக்கு… 
போலீஸ்காரன் பார்த்தா, அவனுக்கு வேற கப்பம் கட்டனும்…” என தனக்குள் புலம்பியபடியே அவள் சென்ற வழி பார்த்து நின்றிருந்தார்… 
போனவள் போனவள்தானோ பத்து நிமிடம் வரை ஆளையே காணம்….
வந்தாள் மீண்டும், ஒரு பையை எடுத்துக் கொண்டாள்… அந்த ஆட்டோகாரர் “இந்தா பொண்ணு…. காச எடுத்து வை… எனக்கு மணியாவுது” என்றார்.
மீண்டும் இவள் “என்ன என்ன…. நான் ஒரு இடம் சொன்னால்… நீங்க ஒரு இடத்தில் இறக்கி விட்டுட்டீங்க… எப்படி மனசாட்சியோட காசு கேட்க்குறீங்க நீங்க….
எப்படி இவள்ளோ வெயிட்ட தூக்கிட்டு நடக்கறது…” என முடிக்க கூட இல்லை…
அந்த ஆட்டோகாரார் “ஏம்மா… எத்தினி போஸில் நிக்குது பார்த்தில…. உள்ள வுட மாட்டாங்க ம்மா… காச கொடும்மா… இந்தா… ” என.. சொல்லியபடியே பைகள் எல்லாவற்றையும் எடுத்து கீழே வைத்தார்…
பார்த்தவளுக்கு கோவம், ஆனாலும் “அப்படியே…. இத அந்த இடத்தில் வைச்சிட்டு வாங்க… 
வாங்க, நானும் கூட வரேன்..” என சொல்லி அவர் எடுத்து வைத்த பையில் இரண்டை அவர் கையில் கொடுத்தாள் சங்கடமே  படாமல்… 
அந்த மனிதரும்…”பேஜாரா போச்சும்மா” என புலம்பியபடியே  எப்படியோ பணம் வந்தால் சரி, என எண்ணி… ஒன்றும் பேசாமல் தூக்கிக் கொண்டு நடந்தார்…
உடனே இவளும்… இன்னொரு பையை எடுத்து கொண்டு நடந்தாள்… எல்லாம் சுட சுட.. சாப்பாடு நிறைந்த, சாப்பாட்டு பை…. இவளின் நிழல் பார்த்த நண்பர்கள்… இல்லை.. இப்போதுதான் பழக்கமான கருப்புசட்டைகாரர்கள்… வந்தனர்.. அருகில்…
“கொடுங்க” என சொல்லி இவளிடமிருந்து அந்த பையை வாங்கினர்… கூடவே அந்த ஆட்டோகாரரிடமிருந்தும் வாங்கினர்…
அதில் கொஞ்சம் பொறுப்பாய் இருந்த ஒருவர் “எவ்வளோ ண்ணா…” என அந்த ஆட்டோகாரரிடம் பேசியபடியே பணத்தை எடுக்க… பைரவி… “இருங்க ண்ணா… நான் தரேன்” என்றாள்.
“விடும்மா…. நான் தரேன்….” என்றார்… எப்படியும் நாற்பது வயதிருக்கும்… அந்த விரேஷ்வரின் நண்பர்க்கு… ம்கூம்… சீனியருக்கு… 
அது ஒரு போராட்ட களம்… ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்… அன்றைய போராட்ட களம்… அதில் இவர்களின் குழுவும் ஒன்று…
இந்த கூட்டம்… முழுவதும் கருப்பு சட்டை அணிந்து… தங்கள் குழுக்கு மட்டும்… என மைக் வைத்துக் கொண்டு, கத்திக் கொண்டிருந்தது… 
அதில் அந்த மைக்கை பிடித்து… ஆவேசமாக உரக்க உரக்க தன் குரலால் அந்த வானை பிளந்து கொண்டிருந்தான் விரேஷ்வர்…. 
ஏதோ போராடும் இவர்களை தவிர மற்ற எல்லோரும்… மனிதர்களே இல்லை என்னும் உணர்ச்சி வருமாறு… அவனின் வாயிலிருந்து வந்தது அந்த போராட்ட வாசகங்கள்…
அதை கேட்க.. கேட்க… அப்படியொரு வெறி வந்தது பைரவிக்கு… யார் மீது வெறியென போக போக புரியும்…
அப்பா…. பேராபத்தான கூட்டம் அது… கடலுக்கு நிகராய் சேர்ந்த கூட்டம் அது… கோரிக்கை நிறைவேறும் வரை… அப்படியே இருந்த கூட்டம்  கொஞ்சம் அண்டத்தையே மிரளத்தானே வைத்தோம்… அதே அந்த போராட்டம்தான்… 
மணி இரவு எட்டை நெருங்க… எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ளியது… இவர்கள் போடுகிற சத்தத்துக்கு… இந்த உணவு எம்மாத்திரம்… எனவே… இவர்களின் குழுவிலிருந்த நான்கு… மகளிர்… பைரவியுடன் சேர்ந்து அந்த முப்பது நபர்களுக்குமான உணவை… பகிர தொடங்கினர்.
தங்கள் குழுக்கு மட்டுமல்லாது… வேறேனும் யாராவது இருந்தால்… அவர்களையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தான் வீரேஷ்வர்… இவர்கள் எல்லோரும் சோழிங்கநல்லூரில் ஒரு பெயர்பெற்ற மென்பொருள் கம்பனியில் வேலை செய்பவர்கள்… 
இவர்களுக்கு… அர்த்த ராத்திரி தொடங்கி மதியத்துடன் ஷிபிட் முடிந்து விடும்… அதன்பின் இங்கே வந்து எல்லோருடனும் அமர்ந்து போராடிவிட்டு, இரவு… ஒருமணிக்கு கிளம்புவர்… 
பெண்கள்.. இப்போது பைரவியுடன் கிளம்பி விடுவர்…  இப்படியாக இந்த பதினைந்து நாளாக நடந்து கொண்டிருக்கிறது.
வீரேஷ்வர்… அவன், போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இங்குதான் குடியிருக்கிறான்… குளித்தானா… தூங்கினானா… வேலைக்கு சென்றானா.. ஏன், உயிரோடு இருக்கிறானா என கூட அவர்களின் வீட்டிற்கு தெரியாது.
இன்று… இந்த விரேஷ்வர் டேன்… அதனால் இன்று சாப்பாடு இவன் வீட்டிலிருந்து… அதுதான் பைரவிக்கு கோவமே… இவன் வீடு என்பது எங்கள் வீடா… என்பதுதான் அவளின் கேள்வியே… 
ஆனால் மொத்த குடும்பமும் அப்படிதான் என சொன்னது.. அதற்கு சாட்சியாக இப்போது இவள் கையிலேயே அந்த சாப்பாடை கொடுத்துதான் அனுப்பி வைத்துள்ளது… விதி எப்போதும் என்னிடமே விளையாடும்… 
ராகவேந்தர்… பூங்கோதை தம்பதியின் மூத்தபெண்… பைரவி.. இவளுக்கு அடுத்து ஒரு தங்கை… ஐஸ்வர்யா… ராகவேந்தர்க்கு கப்பலில் வேலை… நாடாருமாதம்… காடாறுமாதம் வேலை அவருக்கு…
இப்போது அவர் சீப் என்ஜினியர்… மிகவும் பொறுப்பான பதவி என்பதால்.. அதிகம் லீவ் கிடைப்பதில்லை.. எப்போதும் நடுகடல் வாசம்தான்… அதுவும் பிள்ளைகள் பெரிதாக… இன்னும் பத்து வருடத்தில் ஒய்வு எனும்போது… உழைப்பை அதிகமாக்கிறார் போல ராகவ்… 
பூங்கோதை… இல்லத்தரசி… ஆம் அப்படியே… எதற்கும் அலட்டாமல்… தன் குடும்பத்தை.. கணவன் அருகில் இல்லை என்றாலும் அவரின் இடத்திலிருந்து தானே பார்த்துக் கொள்ளும் பொறுப்பான அரசிதான்..
ராகவ்வின் அப்பா சுந்தரமூர்த்தி… ஒய்வு பெற்ற… பத்திரிகை ஆசிரியர்…(எடிட்டர்).. வயது எழுவதை நெருங்குகிறது.. அவ்வபோது தற்று தள்ளாமையால் அவதிபடுவார்.. மற்றபடி திடமானவர்… 
இந்த குடும்பத்திற்காகவே.. அதுவும் இரண்டு பேத்திகளை வைத்துக் கொண்டு தன் மருமகள் படும்பாட்டை குறைக்கவே… தான், திடமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்…  
மகன், ஒரு அவசரம் என்றால் கூட தகவல் சொல்லி வரவைக்கவே.. மூன்றுநாள் ஆகும் என்ற நிலையில், தன்னால்.. ஏதும் அவர்களுக்கு வந்துவிட கூடாது என… திடமாக தன் உடலை பேணிக் கொள்வார்… 
ஆயிற்று பையனின்ன் வேலையும் பொறுப்பும் தெரிய.. இன்னும் கொஞ்ச  ஆண்டுகளில் வந்துவிடுவான்… அதுவரை நான்தான் பாதுகாப்பு இந்த சிறுபிள்ளைகளுக்கு என எண்ணி காலம்தள்ளும் பேத்திகளின் அன்பான தாத்தா… 
இங்கு, இப்போது எல்லோரும் உண்ண தொடங்கினர்… என்ன வேண்டும் என பைரவி கேட்டு.. அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்… அந்த நான்கு பெண்களும் உண்ண தொடங்கினர்… 
வந்தான் வீரா “சாப்பாடு எப்படி கைய்ஸ்” என்றான்..
பைரவி “எங்க வீட்டு சாப்பாடு… எப்படி இருக்கும்… இத நீ கேட்கிற” என தான் சொல்லும் சொல் தன் உதட்டுக்கு மட்டும் கேட்க்குமாறு சொல்லி கொண்டு… நிமிர்ந்து பார்த்தாள்… 
எல்லோரும் “ஹேய்…. சூப்பர் டா மச்சி…. வீரா, மாதிரியே காரமா இருக்கு… “ என பலவித குரல் வர… ஏதோ இவன் சாதனை செய்த மாதிரி… பைரவியை திரும்பி  மிதப்பாக ஒரு பார்வை பார்த்தான்… அவர்களின் புகழில் இவள் முகம் மலர்ந்திடுமோ என… எங்கே அதற்கான அறிகுறிகூட இல்லை அவளிடம்…
வீரா தனது மீசையை முறுக்கியபடியே அவளை பார்க்க… ம்கூம் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்… 
வீரா எப்போதும் போல… “போடி…. போடி… உனக்கு எந்த மொழியும் புரியாது… “ என எப்போதும் போல தன்னை நொந்து கொண்டான். 
இவன் மனமொழிக்கும்… வேலை செய்யும் இடத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவன்… ஒட்டாமல்தான் வேலை செய்கிறான்… 
அழுக்கு நீலநிற ஜீன்ஸ்… இந்த பதினைந்து நாட்களாக… ஒன்றே மதியாய்… சுற்றிக் கொண்டிருக்கிறான்… ஏதோ எல்லோருமாக சேர்ந்து சாதிக்க போகிறோம் என எண்ணி அந்த கூட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறான்…
ஓய்ந்த தோற்றம்… பாதி இளைத்திருந்தான்… எப்போதும் அவனுக்கு கருப்பு வண்ண சட்டைதான் பிடிக்கும்… ஏதோ கொள்கை… பிடிப்பு.. என்பான்…
எனவே அதுதான் இன்றும்… திமிரான உடல்மொழி… எங்கு எப்போதும் கொதிநிலையிலேயே இருப்பான் அவனின் தலைவனுக்கு… ஏற்ற தொண்டனாக… 
ஆனால், அதெல்லாம் அவளுக்கு தெரிந்தும், தெரியாதுது… அதுவும் அவனின் கருப்புசட்டைக்கு அவள் முதல் எதிரி… எப்போதும் அவனை ஏதோ.. கல்லுமண்ணை பார்ப்பது போல் பார்த்து வைப்பாள்…
இப்போது அவனின் கைக்கு ஒரு ப்ளேட் வந்தது… சாம்பார்சாதம் தயிர் சாதம்.. தொட்டுக்கொள்ள சிப்ஸ்… ஊறுகாய்… சகிதம் வந்தது….
ப்பா… வாசனையே அவனின், எல்லா நிலையையும் ஒடுக்க… பசியில் பத்தும் பறந்தது போல… உண்டான்.. அரக்க பரக்க…
உண்டு முடித்து.. இவன், “இன்னும் கொஞ்சம்..” என கேட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே எல்லாம் காலி… பைரவி எல்லாவற்றையும் மூடி வைத்தாள்… ஏளனமாக ஒரு பார்வை அவனை பார்த்தபடி… 
வீராவும் ஒன்றும் சொல்லாமல் தனது முறுக்கு மீசையை மற்ற கையால் முறுக்கியபடியே… எழுந்து கொண்டான்… திமிரான உடல்மொழியுடன்.
இரண்டு பைகளை இரண்டு கைகளில் பிடித்துக் கொண்டு இவள் கிளம்ப… அவளுடன் அந்த மகளிரும் வர… எல்லோருமாக மீண்டும் நடந்தே வந்து… மெயின் ரோட்டில்.. ஆட்டோ ஏறி… அவரவர்.. வீட்டுக்கு கிளம்பினர்.
வீராவும் அங்கு கையில் மைக்குடன் மீண்டும் தனது வேலையை தொடங்கினான்… அந்த இடம் இப்போது இவனின் பேச்சில் தகித்தது… ஓவ்வரு நட்சத்திரமும் ஒவ்வருவருக்கும் காவல் இருக்க… இனிமையான போராட்டமும் தொடந்து கொண்டிருந்தது..
பைரவி… வீடு வரவே நேரமானது… அன்னை கோதை… “கொடுத்துட்டு நீ வரவேண்டியதுதானே… பாத்திரத்தை, நாளை எடுத்திருக்கலாம்… எவ்வளோ லேட் ஆகுது பாரு” என்றார்..
“ஆமாம்… அவங்களுக்கு அங்க இடமே பத்தல.. இதுல பாத்திரத்தை வேறு பாதுகாக்கிறாங்க… எல்லாம் இருக்கிற பசில.. பாத்திரத்தை முழுங்கிடுவாங்க…. இல்ல, வித்து திண்ணுடுவாங்க” என்றாள் காட்டமாக…
அப்போதுதான் கொஞ்ச கொஞ்சமாக போராட்டம் வெற்றிபெற தொடங்கியிருந்தது… ஆரம்பகாலத்தில்.. யாரும் உதவவரவில்லை. இப்போதுதான் கொஞ்சம் கூட்டமும் சேர்ந்திருந்தது… ஆங்காங்கே… உதவும் கரங்களும் கூடின… எனவே… அதனை நேரில் பார்த்த பைரவி.. இருக்கும், கடுப்பில் புலம்பினாள்..
‘இன்னும் எனக்கு… படிக்கணும்… இந்த வாரம் வேற… கம்பன் கழக போட்டி இருக்கு… இவங்க வேற இதுல… ஏன், லேட்ன்னு கேள்வி வேற…’ என எண்ணியபடியே… உடைமாற்ற தங்களது அறைக்கு நகரவும்…
கோதை “பாவம் டி, பசங்க… என்னமோ நம்மால முடிஞ்ச ஹெல்ப்… தாத்தாவே ஒன்னும் சொல்லல… நீயேன் இப்படி பொரியற… 
வா சாப்பிட” என்றார்.. பைரவியும் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
உடைமாற்றி… வந்து அமர்ந்தாள்.. அதே சாம்பார் சாதம்… கடைசியாக… வீரா… தட்டுடன் முன் வந்தது நினைவு வந்தது… அது ஒரு கிண்டல் சிரிப்பு, அவளின் உதட்டுக்கு தர… சட்டென தலையை உலுக்கினாள் பைரவி… என்னமோ அவன் வந்து பிடிங்கிக் கொள்வான் என எண்ணினாள் போல… அவசரமாக உண்ண தொடங்கினாள்.
சின்ன பெண்… இருபது வயதே அடுத்த ஒரு வாரத்தில்தான் தொடங்குகிறது… கல்லூரியில் இரண்டாம் வருடம் BA தமிழ் படிக்கிறாள்… பாதி ராமாயணம் கரைத்து குடித்தவள்… இன்னும் முழுதாக முடிக்கவில்லை… கம்பனின் அடிமையவள்… பாரதியின் காதலியவள்..
பள்ளியிலிருந்தே… எல்லா பேச்சு போட்டியிலும்… வெற்றிதான்… வாய்சொல் வீராங்கனை… அந்த தமிழ் தந்த திமிர் இவளிடம் ஜொலிக்கும்… கொஞ்சம் பிரகாசமான நிறம்தான்… 
முகத்தில், எப்போதும் தேஜஸ்… கொஞ்சமும் முதுகு வளையாமல்.. நடக்கும் திமிர் என பைரவிக்கு.. கொஞ்சம் அறிவு செருக்கு அதிகம்தான்.. அது அவளின் ஒவ்வரு அசைவிலும் தெரியும்…
அவளின் தங்கை… “க்கா…. ஏய்…. ரவி…. வாடி… இது சொல்றேன்… கொஞ்சம் பார்க்கிறியா” என்றாள்… ஏதோ அறிவியல் பாடத்தை கையில் எடுத்து வந்து… “பாப்…ப்பா… சாப்பிடும் போது டிஸ்ட்ரப் பண்ணாத… “ என சொல்லியவள் தனது விரல்களை ருசிக்க தொடங்கினாள்…
அதற்குள் கோதை “ஏய்… என்னடி… இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ… ஏன் கைய கடிக்கிற” என்றார்… சிரித்தபடியே…
பைரவி அரை மயக்க நிலையில்…. “ம்மா… உன் சாப்பாட்டுக்கு நான் அடிமைம்மா… எப்படிம்மா ஒரே மாதிரி சமைக்கிற… நாலுபேருக்குனாலும் சரி… நாப்பது பேருக்குனாலும் சரி… டேஸ்ட் மாறவேயில்ல ம்மா…. 
என் நாக்கு… இன்னும் இன்னும்னு கேட்குதும்மா…. ஆனா, வயிறு.. போதும்ன்னு சொல்லுதும்மா….” என்றாள் ராகமாக… ஏதோ காதலனை பிரியும் காதலியாக… 
கோதை “என்ன டி வேணும்… இன்னும் கொஞ்சம் போடவா… இல்ல போதுமா” என்றார் சலிப்பாக…  இந்த மாதிரி ரசனைகளை வைத்து சமாளிக்க முடியாத அன்னையாக…
“ம்மா…. உன் சாப்பாட்டை சாப்பிடும் போது நானும் கும்பகர்ணன் மாதிரி… ஆறுமாதம் முழுசா… சாப்பிட்டுட்டே இருக்கணும்னு தோனுதும்மா…” என்றாள் தன் சுண்டு விரலை வாயில் வைத்தபடியே…
ஐஸ்… அவளின் தங்கை… “ம்மா… அவங்க இப்போ… ரசிக்கிராங்களாம்… நீ இப்போ எது பேசினாலும் கேட்காது… 
ஒரு பத்து நிமிஷம் இரும்மா… தரையிரங்கட்டும்… அப்புறம் பேசு..” என மென் குரலில் சொன்னாள்… தன் அன்னைக்கு மட்டும் கேட்க்குமாறு…
பைரவி… “ம்மா… அவ பேச்சை கேட்காதம்மா… அவ வெறும்… போர்முலா… கால்குலேட்டர்… அவ்வளவுதான்… அனுபவிக்க முடியாதும்மா…
ஆனா… கம்பன் அப்படியில்லம்மா…  
காலமேனும் ஆழியிலும்…
காற்றுமழை ஊழியிலும்…
சாகாது எங்கள் கம்பன்பாட்டு…. கம்பன் பாட்டு….
அவன் தலைமுறைக்கும் எழுதிவைத்த சீட்டும்மா… சீட்டு… “ என ஏதோ கவிதை சொல்லியவள், அந்த சேரில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்..
மீண்டும் “இதெல்லாம் ரசனைம்மா… கம்பனை பற்றி, கண்ணதாசன் சொன்னது…. எப்படி இருக்கு…
ராமன் தோளழகும்…. சீதை நடையழகும்… படிக்க, ரசிக்க… ப்ராப்தம் இருக்கனும்மா…” என தன் கை காய்வது கூட தெரியாமல்… வியாக்கானம் பேச… 
கோதை “ஏய்… அப்படியே அந்த பாட்டை சொல்லிக்கிட்டே… அந்த ரெண்டு பாத்திரத்த தேய்த்து வைத்துடுடி… வேலைக்காரம்மா காலையிலதான் வருவா… அதுவரைக்கும் தட்டு காய வேண்டாம் பாரு…” என்றார்… டைனிங் டேபிளை துடைத்தபடியே…
பைரவி “ம்…. என்ன சொல்லி என்ன… இன்னமும் உங்களுக்கு தமிழையும் தெரியல… இந்த ரவியையும் புரியல….” என்றவள்… மெதுவாக எழுந்து தட்டை வைத்துவிட்டு சென்றாள், தங்களது அறைக்கு….
  
“எடுடா… அந்த சூரிய மேளம்…
அடிடா நல்ல வாலிப தாளம்…
எழுந்து விட்டோம் இமயம் போலே…
உயர்ந்து நிக்கும் சிகரமெல்லம் நமக்கு கீழே…
ஆணையிட்டால் விண்ணும் கூட…. 
வந்து நிற்க வேண்டும் நமது காலின் கீழே…”

Advertisement