Advertisement

அத்தியாயம் ஆறு :

ஒரு வழியாக உஷாவை கிளப்பினால்,……… அவளுடைய சித்தி அவர்களை மட்டும் போய் வருமாறு கூற,………. அவர்களையும் ஒருவாறு கிளப்பி வீடு போய் சேர்ந்தனர்.

உஷாவிர்க்கு வீட்டை பார்த்ததுமே கண்களில் மறுபடியும் கண்ணீர் தேங்கத் துவங்கியது. அதனை சமாளித்தபடி உள்ளே நுழைந்தாள். அது மிகவும் பெரிய ஹால். ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அளவு இருக்கும். முக்கிய உறவுகள் எல்லோருமே அங்கு கூடியிருக்க சல சல என்று பேச்சு சத்தமாக இருந்தது. ஓரிடத்தில் நீரஜாவுடைய போட்டோ வைக்கப்பட்டுயிருந்தது, பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. நந்தினி உஷாவை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததுமே எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு இவர்களையே பார்க்கத் துவங்கினர். எல்லோருக்குமே ஆச்சர்யம்……….!!! ஏனென்றால் பாட்டி இறந்த சமயத்தில் பார்த்தது,. பிறகு இப்போதுதான் பார்கிறார்கள். அப்போது பார்க்க சிறிது குண்டாக கொலுக்மொழுக் என்று அமுல் பேபி போல் இருப்பாள். ஆனால் இப்போதோ உயரமாக வளர்ந்து இளைத்து பார்பவர்களுக்கு அவளா இவள் என்று தோன்றும்படியாக இருந்தாள். இதில் தலையில் அடிபட்டு தையல் போட்டிருப்பதால் அங்கே பிளாஸ்டர் இருந்தது. கையில் வேன்ப்லான் ட்ரிப்ஸ் போடுவதற்காக போட்டது வேறு இருந்தது. பார்பதர்க்கே பரிதாபமாக இருந்தாள். நிமிடத்தில் உஷா உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தாள். அழுகை போன இடம் தெரியவில்லை.

மெதுவாக ஒருவர்ஒருவராக அவளிடம் பேச்சு குடுக்கத் தொடங்கினர். எல்லோருமே தலையில் என்ன கட்டு விசாரிக்கத் தொடங்கினர். விஸ்வநாதன்னும் சாம்பவியும் அப்போது தான் அவளை பார்த்துவிட்டு வேகமாக வந்து உஷாவையும் அவரது சித்தியையும், “”வாருங்கள்””  என்று கூறினர்.

உஷா அவர்களை பார்த்து மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.சாம்பவி இப்போது “”உடம்பு பரவாயில்லையா””. என்று விசாரிக்க, பரவாயில்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

அதற்குள் பூஜைக்காக அழைப்பு வர நந்தினி உஷாவின் கையை பிடித்து அழைத்துபோய் அருகமர்த்தி கொண்டாள். சின்னதாக ஹோமம் போல் வளர்த்திருந்தார் அய்யர் எல்லோரும் வந்தாகிவிட்டதா என்று அவர் கேட்க எல்லோரும் இருக்கிறார்களா என்று ஒருவரை ஒருவர் பார்த்தனர். பொதுவாக இம்மாதிரி காரியங்கள் வீடுவரை அல்லது நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருப்பர். இவர்களது கூட்டமே பெரிது அண்ணன் தம்பி வகையராக்கள் அதிகம். அதிலும் பாட்டி இருந்தவரையிலும் சரி அல்லது இப்போது விஸ்வநாதனும் சரி எல்லா விஷயத்திற்கும் ஒரு வரையும் விடாமல் அழைப்பர். எல்லோருக்கும் தாரளாமாக உதவியும் செய்வர். அதனால் எல்லோருமே கூடியிருந்தனர்.

கிரி அய்யருக்கு பக்கமாக ஒருபுறத்தில் அமர்ந்திருந்தான். உஷா அப்போதுதான் அவனை பார்த்தாள். கிரியும் அப்போது அவளைதான் பார்த்துகொண்டிருந்தான். வா என்பதுபோல் அவளை பார்த்ததற்கு அடையாளமாக அவன் தலையை அசைக்க பதிலுக்கு அவளும் அசைத்தாள்.

 அப்போது ஏதோ ஒரு பெருசு குழந்தைகளையும் பூஜை இடத்திற்க்கு அழைத்துவருமாறு கூற., தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை நீரஜாவின் அம்மாவும் அவளது தங்கையும் தூக்கிவர., அய்யர் குழந்தைகளும் தந்தைக்கு அருகிலேயே இருக்கவைக்கும்படி கூற., எப்படி மாப்பிள்ளையின் அருகில் அமர்வது என்பது போல் அவரது அத்தை நிற்க., உடனே ருக்மணி பாட்டி, “”வர்ஷா நீ முதல்ல உக்காரு குழந்தைய மடில வெச்சிக்கோ, இன்னொரு குழந்தைய. “” என்று நாட்டாமை செய்ய ஆரம்பிக்கும்போதே. அங்கே இருந்த பெருசு, “” வீட்டு ஆளுங்க தான்மா உக்காரணும் “” என்று ஒரு சவுண்ட் விட., பதிலுக்கு ருக்மணி பாட்டி பேசும் முன்பாகவே, நந்தினி அவசரமாக எழுந்து வர்ஷாவிடம் இருந்த குழந்தையை வாங்கி. சாம்பவி எங்கே மற்றுமொரு குழந்தையை வாங்க. என்பது போல் பார்க்க,

அருகே இருந்த கிரி, “” குழந்தைய பிரத்யு கைல குடுத்துட்டு இன்னொரு குழந்தைய நீ வாங்கு ”” என்றான்.

 நந்தினி அதற்கு, “” இப்போதான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கா. கைல வேன்ப்லான் வேற இருக்கு ”” என்று கூற,. அதைகேட்ட உஷா ஒரு நிமிடம் கூட தயங்காது கையில் இருந்த பிளாஸ்டரை எடுத்து வேன்ப்லானை டக்கென்று எடுத்துவிட்டு,.”” இப்போ குடுங்க “” என்று கையை நீட்டினாள்.

 நந்தினி கிரியை பார்க்க, அவன் கொடுக்குமாறு தலை அசைத்தான். நந்தினி குழந்தையை உஷாவிடம் கொடுத்துவிட்டு அவளும் அமர ருக்மணி பாட்டிக்கு பொறுக்கவில்லை ,

“” என் பேத்தி உக்காரக்கூடாது சரி ஒத்துக்கறேன்…………. அந்த பொண்ணு மட்டும் உக்காரலாமா…????”” என்று உஷாவை நோக்கி கூற,

அதற்கு அந்த பெருசு , அவர் விஸ்வநாதனுடைய பெரியப்பா, அவருக்கு தெரியாத விஷயம் என்று அந்த குடும்பத்தில் இல்லை. நல்லதோ கெட்டதோ பொதுவாக அவருக்கு தெரிந்திருக்கும். அவருக்கு தெரியும் உஷாவினுடைய பாட்டி இருந்தபோது அவளுக்கு இருந்த முக்கியத்துவம். அவருக்குமே உஷாவை சட்டென்று அப்படி அனுப்பியது மனதுக்கு ஒப்பவில்லை. அவருக்கு உஷாவினுடைய தந்தை குடும்பத்தையும் நன்கு தெரியும் வாழ்ந்து கெட்டவர்கள். விஸ்வநாதன் எல்லாம் அவளுக்கு  செய்வதாக கூறி தான் அனுப்பினார். ஆனால் அவருக்கு தெரியும் அவர்கள் வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று.

அவரை உஷாவினுடைய பாட்டி வீட்டிற்கு பெரியவர் என்று மரியாதையாக வைத்திருந்தார். அவருக்கு மனதிற்குள் சிறு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது உஷாவை அனுப்ப முடிந்தவரை விட்டுருக்க கூடாது என்று. அதுவும் இன்றைய அவளுடைய தோற்றத்தை பார்த்ததுமே முடிவு செய்துவிட்டார், இனி அவளை இப்படி விடக்கூடாது………. என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று. அவரைமீறி பேசுபவர்கள் அவரது உறவுகளுக்குள் யாருமே கிடையாது. ஏனென்றால் அவரது முடிவு எப்போதுமே நியாயமாகத்தான் இருக்கும்.

ருக்மணி பாட்டியை நோக்கி,.”” இதுக்கு பதிலை நான் சொல்லரதவிட, இந்த வீட்டை சேர்ந்தவங்க சொன்னா நல்லா இருக்கும். ஏன்னா நான் சொன்னா நீங்க யாரு இதை சொல்லுரதுக்குன்னு நீங்க கேப்பிங்க””. அவருக்குமே தெரிய வேண்டி உஷாவிர்க்கு இன்றைய சூழலில் இந்த வீட்டில் என்ன இடம் என்று.         

அவர் விஸ்வநாதனையும், அப்போதுதான் அங்கே வந்த சாம்பவியையும் நோக்கி,. “”என்னம்மா மருமகளே .உங்கம்மா அவங்க பேத்திய குழந்தைய வெச்சிக்கிட்டு உக்கார சொன்னாங்க, நான் இந்த குடும்பத்த சேர்ந்தவங்க தான் உக்காரனும்னு சொன்னேன். என்ன அந்த பொண்ணு உங்க வீட்டை சேர்ந்த பொண்ணா?????????????”” என்றார்.

சாம்பவி சங்கடமாக நின்றாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் சொல்லும் ஒரு பதில் அவள் பிறந்த குடும்பத்தையே சபையில் அன்னியமாக்கிவிடும். இப்போது அவர்கள் அவளை பெற்றவர்கள் மட்டுமல்ல அவள் வீட்டில் பெண் குடுத்தவர்களும் கூட. அதுவும் இன்றைய சூழலில் மகளை இழந்து நிற்பவர்கள். உண்மையாகவே அவள் அந்த வீட்டை சேர்ந்த பெண் இல்லையென்றாலும் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்க முடியாமல் அமைதியாக நின்றார்.    

“”எதுக்கு பெரியப்பா இந்த ஆராய்ச்சி யார் உட்கார்ந்தா என்ன.?””, என்றார் விஸ்வநாதன்.

“”அப்படி சொல்லாதடா விஸ்வநாதா……….!!!!. இன்னொரு வீட்டு பொண்ணு, அதுவும் கல்யாணமாகாத பொண்ணு, அப்படி எல்லாம் உக்காரக்கூடாது. நம்ம சம்பந்தி வீட்டுக்காரங்களா இருந்தா கூட நாம நாலும் யோசிச்சு தான் செய்யணும். என்ன நான் சொல்றது சரிதானுங்களே””, என்றார் விஸ்வநாதனுடைய மாமனாரை நோக்கி,.

“”அவரும் நீங்க சொல்லறது சரிதானுங்க. நான் தப்புன்னு சொல்லல. எங்க வீட்லயும் தப்புன்னு சொல்லல. ஆனா எங்க பொண்ண உக்காரக்கூடாதுன்னு சொல்லிட்டு அந்தபொண்ணு யாருன்னு அத மட்டும் உக்கார வைக்கறீங்க. எங்க வீட்டு பொன்னுக்காவது குழந்தைகங்ளோட அம்மாவோட தங்கச்சின்ன்ர உரிமை இருக்கு, தாய்மாமன் பொன்னுன்ற உரிமை இருக்கு.நாளைக்கு அடுத்தவீட்டுக்கு போகப் போற பொண்ணுதான்….!!!!. ஆனாலும் என் ஒரு பேத்தியோட குழந்தைங்க அம்மா இல்லாம நிக்கும்போது நான் எப்பிடி அவள வேற வீட்ல கட்டிகொடுக்க முடியும். அவனும் என் பேரன்தான் சின்ன வயசு வேற அப்படியே விட்டர முடியுமா……….???????????. வேற யாராவது வந்தா குழந்தைங்கள எப்படி பாத்துக்குவாங்களோ சொல்ல முடியாது. அதனால என் பேத்தியவே உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துட்டா பரவாயில்லை “”, என்றார் பட்டென்று.

ருக்மணி அம்மாளுக்கும் அந்த எண்ணமே இருந்தது. ஆனாலும் சபையின் நடுவில் அந்த வீட்டு பெரியவர் பேசவும் அமைதி காத்தார். ஆனால் கணவரே இப்படி பேசுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை வர்ஷாவும் அவளது பெற்றோர்களுமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் வீட்டுக்கு பெரியவர் பேசுவதால் எல்லோருமே அமைதி காத்தனர்.

“”என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புதே.!!!!!””, என்று மனதிற்குள் நினைத்த பெரியப்பா செய்வதறியாமல் நிற்க,. சாம்பவி இதை பற்றி பேச இது சரியான சமயமில்லை என்று உணர்ந்தவளாக, “”அப்பா. நாம இதை பத்தி அப்புறம் பேசலாம்”” என்று கூறி,”” பூஜைய முதல்ல முடிச்சிடுவோம் மாமா. ”” என்றுவிட்டு உஷாவிடம் இருந்து குழந்தையை வாங்க முற்பட்டாள்.

 உஷாவிர்க்கு மனதிற்குள் எந்தவிதமான எண்ணமுமில்லை. ஆனால் யார் இந்த பெண் என்று இவ்வளவு உறவுகளுக்கு மத்தியில் சாம்பவியின் தாயும் தந்தையும் பேச.! அதற்கு எந்தவிதமான பதிலும் யாரும் சொல்லாமல் வேலையை பார்க்க முற்பட, அவளுக்கு மிகுந்த வருத்தமாக போய் கண்களில் மறுபடியும் கண்ணீர் தளும்ப ஆரம்பித்தது.

 குழந்தையை சாம்பவியிடம் கொடுத்தவாறே அந்த இடத்தை விட்டு எழ ஆரம்பிக்க,. கிரிக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் அவர்களோடே வளர்ந்ததினால் வீட்டு ஆளுங்க தான் உட்காரனும் என்ற உடனே நந்தினியை ஒரு குழந்தையை அவளிடம் கொடுக்கச்சொல்லி விட்டான்.

இப்போது உஷா கண் கலங்கியவாறு எழவும், அதனை பார்க்க முடியாமல்,”” நீ உக்காரு பிரத்யு.”” என்றவாறு, “”அம்மா குழந்தைய அவ கிட்ட குடுங்க. அவ இந்த வீட்டு பொன்னுதாம்மா.”” என்றான்.

“” இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் வேண்டாம் கிரி. அவளும் வேற வீட்டுக்கு கல்யாணமாகி போக வேண்டிய பொண்ணுதான். அதனால நானே வெச்சிருக்கேன்.”” என்றார்.

உஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வர ஆரம்பித்தது. எல்லோருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த சித்தியால் பொருக்கவே முடியவில்லை. அவருக்கு தெரியும் இவ்வளவு பெரிய புறக்கணிப்பை உஷாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்று. குழந்தையை வாங்குவதற்காக அவள் எவ்வளவு சீக்கிரம் கையில் இருந்த ஊசியை பிய்த்து எறிந்ததை பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அவர் வரும்போதே அதை எடுத்துவிடலாம் என்று உஷாவிடம் கூற, “”வேண்டாம் சித்தி. வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் போடுவாங்க. வலிக்கும்.”” என்றவள் இப்போது குழந்தைகளை வாங்குவதற்காக ரத்தம் வருவதையும் போருட்படுதாது எடுத்துவிட்டாள்.

உஷா மறுபடியும் எழ ஆரம்பிக்க,”” நீ உக்காரு உஷா.!!!”” என்றார் அவளுடைய சித்தி, “” என்னங்க, நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். அவளுக்கு கேக்க ஆளிலன்னு ஆளாளுக்கு ஒன்னொன்னு பேசுரிங்களா. அந்த பொண்ணு யாருன்னு நாக்கு மேல பல்ல போட்டு ரெண்டு பேரும் கேக்கறாங்க, ஒருத்தருக்கு கூடவா பதில் தெரியாது. பதில் என்னங்க பதில் இந்த கேள்விய அவ பாட்டி உயிரோட இருந்தா யாராவது கேட்டு இருப்பீங்களா. பெரியவரு பேசறாரு அந்த பொண்ணுக்கு சித்திங்கற உரிமை இருக்காம் தாய்மாமன் பொன்னுன்ர உரிமையிருக்காம் என்ன பேச்சு இது. அவ பாட்டி மட்டும் உயிரோட இருந்திருந்தா வேற பொண்ண அவங்க பேரனுக்கு கட்ட விட்டு இருப்பாங்களா. என்ன பெரியப்பா நீங்க இருந்தும் இப்படி நடக்க விடறீங்களே””, என்றார்.

இதை கேட்டுகொண்டிருந்த ருக்மணிம்மாவுக்கு கோபம் வர ஆரம்பித்தது. இது என்னடா இது வெண்ணை திரண்டு வருகிற நேரத்தில் தாழி உடைந்த கதையாக போய்விடுமோ என்று. “”என்னம்மா நீங்க.??? இவ்வளவு நாளா இல்லாம இப்போ வந்துட்டு இந்த பேச்சு பேசறீங்க. உன் நிலைமை என்ன தெரியுமா பணங்க்காசு ஏதாவது தேவைனா வாங்கிக்க, அனாவசியமா பிரச்சினை பண்ணாத.””, என்றார்.

“” பணமா யாருக்கு வேணும் பணம். இந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்தாங்கன்னா என்ன இல்லாதவங்களுக்கா கொடுத்திருப்பாங்க. நாங்க பாக்காத பணமா. எத்தனை தொழில் இருந்தது தெரியுமா எங்களுக்கு. எத்தன இருந்து என்ன பண்ண என் புருஷன் சூது வாது தெரியாத நல்ல மனுஷனாப் போய்ட்டாரு. இவரும் இன்னும் ரெண்டுபேரும் சேர்ந்து பைனான்ஸ் ஆரம்பிச்சாங்க ஓஹோன்னு போச்சு. ஒரு நாள் இருந்த மொத்த பணத்தையும் சுரிட்டுட்டு ரெண்டு பேரும் ஓடிபோயிட்டங்க. ஊருல யாராவது சொன்னா நம்புவாங்களா.!!!!!!!!!!! காதும் காதும் வெச்சமாதிரி யாருக்குமே தெரியாம இருந்த எல்லா சொத்தையும் வித்து பத்தாம மேலும் கடன வாங்கி எல்லோருக்கும் கொடுத்தாரு. விஷயம் தெரிஞ்சு இவங்க பாட்டி உதவி செய்ய வந்தப்போ கூட ஏத்துக்கல. அவரு உயிரோட இருந்திருந்தா எப்படியாவது மேல வந்திருப்போம். போயிட்டாரு.!!! இனி என்ன பண்ண.!!!! என்ற பொறந்தவமூடு மட்டும் சாதாரணமானவங்க கிடையாது. இந்த பொண்ண விட்டுட்டு வா நாங்க உன்னை பார்துக்கிறோம்னாங்க. அந்த பேச்சுகப்புறம் அவங்க வீட்டு வாசப்படிய நான் மிதிச்சது கிடையாது. நீங்க எங்கிட்ட பணத்தை பத்தி பேசுறீங்களா. நாங்க பிரச்சனை பண்றோம்னு சொல்றீங்களா. இப்போ கூட எம் பொண்ணு வர மாட்டேன்னு தான்மா சொல்லிச்சு. இந்த தம்பியும்நந்தினியும் தாம்மா கட்டாயபடுத்தி கூட்டிட்டு வந்தாங்க.””, என்றார் ஆவேசமாக.

 மேலும் அவர் என்ன பேசியிருப்பாரோ தெரியாது அதற்குள் சாம்பவி,”” எங்கம்மா பணத்த பத்தி பேசுனது தப்பு தான் விட்ருங்க. தேவையில்லாதது பேசாதீங்க.””  என்று உஷாவினுடை சித்தியை நோக்கி சிறிது கடுமையாக கூற, 

பெரியப்பா பிரச்சினை பெரிதாகிக் கொண்டு வருவதை பார்த்து இருவரையும் சமாதானப்படுத்தும் நோக்குடன்,”” நம்மல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு!!!! ஏன் தேவையில்லாம பேசிக்கிட்டு, விடுங்கம்மா .ஆகற வேலைய பார்க்கலாம் “”,என்றார்.

இவ்வளவு நேரமாக பேசவேண்டாம் என்று அமைதியாக இருந்த உஷா, சாம்பவி சித்தியிடம் கடுமையான முகபாவத்துடன் பேசியதை காண சகியாமல், பெரியப்பாவை நோக்கி,”’ இருங்க தாத்தா,. அவசரபடாதீங்க.!!!!!!!!!!!!!!! இவங்க என் சித்திய பார்த்து   தேவையில்லாதது பேசாதீங்கன்னு சொன்னாங்க அது என்னன்னு எனக்கு தெரியணும்””, என்றாள்.

வார்த்தைகளில் சிறிது கூட கோபமில்லை, ஆத்திரமும் இல்லை, ஆனால் அவள் சொன்ன விதம் எதிரே பேசுபவருக்கு கட்டாயம் ஒரு பயத்தை கொடுக்கும்.

மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் கிரிக்கும் நந்தினிக்கும் நன்றாக தெரியும், அவள் இந்த மாதிரி பேசினாள் எதிராளியை காயப்படுத்தாமல் விடமாட்டாள் என்று. அவள் ஸ்கூல் படிக்கும்போதும் சரி, வீட்டிலும் சரி யாருமே அவளிடம் பேச முடியாது. அவள் சிறு வயதாக இருக்கும்போதே அப்படி என்றாள் இப்போது .

சாம்பவிக்கு அவள் கேட்ட விதம் பயத்தை கொடுத்தது அவள் செய்வதறியாது விஸ்வநாதனை பார்க்க, அவர் உஷாவை பார்த்து, ”விடும்மா! அவ தெரியாம பேசிட்டா” என்றார்.

”யாரு? அவங்க தெரியாம பேசுனாங்களா . அவங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்ன உடனே பேசத்தொனுதே, இவ்வளவு நேரமா நான் யாருன்னு உங்க மாமனாரும் மாமியாரும் கேட்டாங்களே அப்போ இங்க தானே இருந்தீங்க அப்ப ஏன் பேசல நீங்க.

சித்தி உடனே உஷாவை நோக்கி, ”விடு கண்ணு. நான்தான் ஏதோ கோபத்துல பேசிட்டேன். விட்டரு. நமக்கு யாரோடையும் பிரச்சினை வேணாம்”, என்றார்.

அதற்கு உஷா அவரிடம், ”நீங்க அமைதியா இருங்க சித்தி ஒரு வார்த்தைகூட பேசாதீங்க. அந்த அளவுக்கு தகுதியானவங்க இவங்க கிடையாது””, என்று கூறி மறுபடியும் விஸ்வநாதனை நோக்கி, “யாரு அவங்க? அவங்களுக்கு எத்தனை நாளா என்ன தெரியும்?. இந்த ஆறு வருஷமா தான் தெரியும். அவங்க நான் வருத்தபடறேன்னு எல்லாறோடையும் வார்தையாடுறாங்க! ஆனா நீங்க பேசாமதான் இருந்தீங்க.

அவங்க என்ன அப்படி தேவையில்லாததை சொன்னாங்க. அவங்க சொன்னது எல்லாமே நிஜம்! என் பாட்டி இருந்திருந்தா நான் இந்த வீட்டு பொண்ணா இல்லையான்னு யாராவது கேட்டிருப்பங்களா?

என் பாட்டி இறந்தவுடனே என்ன வீட்டை விட்டு அனுப்பிட்டீங்க. என்ன அனுப்பனதால உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. ஆனா எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் கூட அவங்க என்ன அனுப்பல.

அந்த பொண்ண அனுப்பிருன்னு, நாங்க உன்னை பாத்துக்கறோம்னு அவங்க அப்பா வீட்ல சொன்னப்ப கூட அனுப்பலை. எனக்காக அவங்க எல்லோரும் கஷ்டப்படறாங்க!”, என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே…

 சாம்பவி உஷா விஸ்வநாதனை அவமதிப்பது போல் பேசுவதை பொறுக்கமுடியாமல், ” யார் உங்கள கஷ்டப்பட சொன்னா? நாங்க தான் குடுக்கறோம்னு சொன்னோமே?” என்றார்.

இதை கேட்டவுடன் உஷா அவரைப் பார்த்து, ” நீங்க யாரு? எனக்கு குடுக்கறதுக்கு நீங்க சம்பாரிசிங்களா… இல்லை உங்க அப்பா வீட்ல இருந்து கொண்டு வந்தீங்களா?இதெல்லாம் எங்க பாட்டியோடது. எனக்கு எதுவும் தேவை இல்லைன்னு தான் ஒதுங்கிட்டேன். எனக்கு இது தேவைன்னா நீங்க என்ன குடுக்கறது நானே எடுத்துப்பேன். போனா போகுதுன்னு என் பங்கையும் சேர்த்து நீங்க அனுபவிக்கட்டும்னு விட்டு இருக்கேன். தேவை இல்லாதத அவங்க பேசல… நீங்க தான் பேசறீங்க”, என்றாள்.

“நான் என்ன உங்க மாதிரி திமிரா மார்க்ஷீட்ஸ்…” என்று உஷா ஆரம்பிக்கும் போதே இதற்கு மேல் அம்மா தாங்க மாட்டார்கள் என்று உணர்ந்த கிரி நல்லதோ கெட்டதோ உறவுகளுக்கு முன்னால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் உஷாவிடம் மறுபடியும் மிரட்டலை ஆரம்பித்தான். அவனுக்கு தெரியும் சிறிது மிரட்டாவிட்டால் அவள் வாயை அடைக்க முடியாது என்று.

“ப்ரத்யு கொஞ்சம் வாயை மூடுறியா?” என்றான் மிரட்டலாக. ” இப்போ என்ன பிரச்சனை? நீ இந்தவீட்டு பொண்ணுன்னு சொல்லாம விட்டதா? அத சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. நீ இந்த வீட்டு பொண்ணுன்னு எல்லோருக்கும் தெரியும். என்ன தாத்தா… நான் சொல்லறது சரியா.? தப்பா?” என்றான் பெரியப்பாவை பார்த்து. 

“சரியா சொன்னப்பா. இதை நீ சொல்லனும்னு நான் எதிர்பார்த்துதான் நான் சொல்லாம இருந்தேன்! ஆனா நீ இவ்வளவு லேட்டா சொல்லி இத்தனை பிரச்சனை வர விட்டுட்டியேப்பா” என்றார் சலிப்பாக. உணர்ச்சிமயமாக எல்லோருமே பார்த்திருக்க, அவருடைய இந்த பேச்சு சிறிது சூழ்நிலையை தளர்த்தியது.

 “நேரமே முடிஞ்சிடும் ஆகற வேலைய பாருங்கப்பா” என்று அவர் கூற,

இவ்வளவு நடந்ததற்கு பிறகும், சாம்பவி குழந்தையை கொடுக்காமல் அமர்ந்து கொள்ள, கோபத்தில் உஷா அங்கிருந்து நகர போக., அதனை கண்ட கிரி உட்கார்ந்த நிலையிலேயே  உஷாவின் கையை பிடித்து இழுக்க… சட்டென்று விழாமல் உஷா சமாளித்தாலும், கிரியை இடித்துக்கொண்டு அமரும்படி ஆயிற்று.

 ”இடத்தைவிட்டு விட்டு எந்திரிச்சே தொலச்சிருவேன்” என்றான் கிரி.

 சட்டென்று நகர்ந்து அமர்ந்த உஷா எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்பதால் சத்தமாக பேச முடியாது, ” அதுதான் ஏற்கனவே உன் பொண்டாட்டிய தொலைச்சிட்டு வந்து நிக்கற, இன்னும் என்ன தொலைக்கபோற.”” என்றாள்.

கிரி அவளை பார்த்து, “”அடங்கவே மாட்டியாடி நீ? என்று கேட்க.

“எதுக்கு அடங்கனும்?” என்று உஷா திருப்பி பேச,

 இதனை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த நந்தினி ஒன்றும் பேசாமல் தன் கையில் இருந்த குழந்தையை உஷாவின் மடியில் சட்டென்று வைத்து கிரிக்கும் உஷாவிர்க்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள். மறுபடியும் யாரும் எதுவும் தொடங்கும் முன்னரே, ”பூஜைய ஆரம்பிங்க அய்யரே.”” என்று தன் கோபத்தை அய்யரை நோக்கி திருப்பினாள்.                 

Advertisement