Advertisement

அத்தியாயம் நான்கு:

      கிரி அவரிடம் சிறிது அச்சத்தோடு,” இங்க எல்லா சௌகரியமும் இருக்கா, இல்ல வேற எங்கையாவது ஷிப்ட் பண்ணனும்மா”, என்றான்.

      “தேவையில்லை, எதுக்கும் நீங்க சீப் டாக்டர் கிட்ட பேசிக்கங்க” என்றார்.

அருணையும் நந்தினியும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, கிரியும் விஸ்வநாதனும் டாக்டரை பார்க்கச் சென்றனர்.

    அவர்களை பார்த்த உடனே டாக்டர்,” உங்க பேஷன்ட் ரிபோர்ட்ஸ் தான் பாத்துட்டு இருந்தேன்”, என்றார்.

   “ ஏன் இன்னும் அவங்களுக்கு  கான்ஷியஸ் வரலைன்றதுக்கு சில ரீசன்ஸ் சஸ்பெக்ட் பண்ணறோம். ஆனா அதுதான்னு நிச்சயமா சொல்ல முடியாது. கம்ப்ளீட் எம் ஆர் ஐ ஸ்கேன் பண்ணிட்டோம். ஒன்னும் பிரச்சினை இல்லை. ப்ளட் டெஸ்ட்டும் பண்ணிட்டோம். பெருசா பிரச்சினை இல்லை. ஷி இஸ் அனிமிக். தட் ஹாஸ் டு பி டெக்கென் கேர்”.”எப்படி அவங்க மயக்கமானாங்க சொல்ல முடியுமா”, என்றார்.

கிரி தான் அங்கே இல்லை என கூறி நந்தினியை அழைக்க, நந்தினி வந்து அவளை கார்மென்ட்ஸ்ஸில் பார்த்ததில் இருந்து நடந்ததனைத்தும் கூறினாள்.

     கிரி அவள் கூற கூற அவனுடைய தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் சிறிது தவிப்போடு கேட்டிருந்தார்.

     டாக்டர் இதையெல்லாம் கேட்டுவிட்டு ,” நான் நினைக்கிறேன் ஷி மஸ்ட் பி இன் எ ஸ்டேஜ் ஒப் ஷாக். அதனால பாடில உள்ள எலக்ட்ரோலைட்ஸ் லெவல் கம்மியாகி ஸடன்னா அன்கான்ஷியஸ்  ஆயிருக்கணும்”, என்றார்.

     “என்ன ஷாக்கா இருக்கும் டாக்டர்” என்றார் விஸ்வநாதன்.

    “ எதுன்னு சரியா சொல்ல முடியாது. மே பி நந்தினி அவங்களை பாக்கும் போது. யாரோ ஒருத்தன் அவங்களை ப்ரோபோஸ் பண்ணியிருக்கான். இவங்க முன்னாடி அப்படி ஆயிடிச்சேன்னு ஒரு பீலிங் இருந்திருக்கலாம். அல்லது. இவங்க அவங்க மேல ஒரு பழி சுமத்தியிருக்காங்க. அவங்க ஏதாவது அந்த மாதிரி பேசி இருந்தா அதனால வந்த குற்றவுனற்சியா இருக்கலாம். அல்லது இப்படி பழி சொல்லிட்டாங்களேன்னு இருக்கலாம். அல்லது. அவங்க படிப்ப பத்தி பேசி இருக்கீங்க அப்போ ரொம்ப எமோஷன் ஆனதா சொல்றீங்க .அதோட ரிலேட்டடா இருக்கலாம். இதெல்லாம் இல்லாம வேற ஏதாவதா கூட இருக்கலாம். வீ கான்ட் ப்ரெடிக்ட். இப்பத்திக்கு பயம் ஒன்னும் இல்ல”.

    “எல்லாமே நார்மல். கான்ஷியஸ் வந்துட்டா ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. ஒரு டூ டேஸ் ஒப்செர்வேஷன்ல இருக்கட்டும்.அதுக்குள்ள தலை காயமும் கொஞ்சம் செட்டில் ஆயிடும். அப்புறம்கூட தையைல் பிரிச்சுக்கலாம், “ என்றார்.

   “ பயபட்றமாதிரி எதுவும் இல்லையே டாக்டர்”, என்றார் விஸ்வநாதன்.

  “ அப்படி எதுவும் இல்லை சார் “,என்றார் டாக்டர்.

“டாக்டர் நமக்குள்ளேயே இந்த விஷயம் இருக்கட்டும், ஏன்னா உங்க ஹாஸ்பிடல்ல இருக்குற ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆனந்த்தோட அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிறமாதிரி இருக்கு. ஜஸ்ட் பொண்ணும் பையனும் பார்த்துக்கணும் அவ்வளவுதான். அதனால எந்த இஸ்ஸுசும் வர்றத நான் விரும்பல “.என்றார்.

இதை கூறும் போது விஸ்வநாதன் கிரியையே பார்த்துகொண்டிருந்தார்.

அவனும் அவரையே பார்த்துகொண்டிருந்தான். இரு பார்வையுமே பொருள் விளங்காப் பார்வை.

டாக்டர் “ஒஹ் சூயூர்” என்றார்.

    பிறகு டாக்டர் கிரியை பார்த்து” குழந்தைங்க எப்படி இருக்காங்க” என்றார்.

   “ நல்லா இருக்காங்க டாக்டர் “ என்றான்.

“வி பீல் வெரி சாரி. லட்சத்துல ஒருத்தருக்கு தான் அந்தமாதிரி நடக்கும். உங்க மனைவிக்கு அந்த மாதிரி நடந்தது அன்போர்சுநேட். நாங்க காப்பாத்த ரொம்ப முயற்சி செஞ்சோம் முடியல”.

 “சாரி சார்”, என்றார் விஸ்வநாதனையும் பார்த்து.

அதற்குள் கிரி,” சார், அந்த இன்சிடேன்ட்க்கு அப்புறம் நான் வேற எதையும் கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டேன். அதனால  குழந்தைங்களோட பர்த் செர்டிபிகேட் இன்னும் வாங்கல அத கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்”, என்றான்.

 “கண்டிப்பா நீங்க போறதுக்குள்ள டீடைல்ஸ்  சொல்லறேன்’’, என்றார்.

வெளியே வந்தவுடனே,.” நீ போ நந்தினி, நான் அப்பா கூட கொஞ்சம் பேசணும்” என்றான் கிரி. நந்தினி ஏதோ சொல்லவர,” நீ போ”. என்றான் கடுமையாக.

நந்தினி எதுவும் பேச முடியாதவளாக அருணை நோக்கி சென்றாள்.

“என்ன நடந்தது அப்பா”, என்றான்.

“உனக்கு சொன்னா புரியாது”, என்றார்.

“முதல்ல சொல்லுங்க, அப்புறம் புரியுதா இல்லையான்னு பாப்போம்”, என்றான்.

“எனக்கு இப்ப அத பத்தி பேச விருப்பமில்ல நடக்கறத பாப்போம் வா”, என்றார்.

அவர் பேசிய விதத்திளிருந்தே  அவர் எதுவும் கூறமாட்டார் என்பது புரிய,  “சரி,. நீங்க எதுவும் சொல்லாதீங்க. என்னோட ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லுங்க, .  இல்லைன்னா நான் இந்த இடத்த விட்டு அசைய கூட மாட்டேன்”,. என்றான்.

என்ன என்பது போல் பார்த்தார்.

“பாட்டி இறந்தவுடனே அவளா அவங்க அப்பா கூட போனாளா நீங்க அனுப்பிநீங்களா “

“ நான்தான் அனுப்பினேன் “என்றார்.

அங்கே ஒரு கணமான அமைதி நிலவியது. கிரிக்கு மனதிற்குள் ஏதோ பிசையத் துவங்கியது.

“கிரி நீ நான் சொல்றத எப்படி எடுத்துக்குவேன்னு தெரியல. சில விஷயங்கள் நாம வேணும்ன்னு செய்யமாட்டோம்,. சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி அமைஞ்சிடும் அவள நான் வீட்டை விட்டு அனுப்பினது, அப்படி ஒரு விஷயம்தான். எனக்கு சில விஷயம் நடக்கவேண்டி இருந்தது அட் எனி காஸ்ட். ஐ வாஸ் ஹெல்ப்லஸ்”

“அடிச்சு விரட்டினிங்களா”

“இல்லை , உங்கம்மாக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் அவ போகும்போது இல்ல, அவ பிளஸ் டூ முடிச்ச டைம்ல ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்தா .அப்போ .

ரெண்டு பேரையுமே என்னால கன்ட்ரோல் பண்ண முடியல இவ ஏதோ பேச அவ ஏதோ பேச கோபத்துல உங்கம்மா அவள அடிச்சிட்டா,.நீயே சொல்லு அன்னலட்சுமி  என்ன பண்ணியிருப்பான்னு”

“என்ன பண்ணுவா கோபம் வந்தா எங்கம்மாக்கும் மேல அவ. திருப்பியடிச்சுட்டாளா. “

“இல்லை.அடிக்கப்போனா அதனால கோபத்துல முதல்ல நீ கிளம்புன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் அவ என்ன பேசியும் சமாதானமாகள .சொல்ல தான் முடியும் வேற என்ன பண்ண முடியும்”.

“அப்படி என்ன பிரச்சினை’ என்றான் கிரி.

“அப்பா ப்ளீஸ் என்னன்னு சொல்லுங்க கிட்டதட்ட ஆறு மணி நேரமா கண்முழிக்காம படுத்திருக்கா”

“அவ படிப்ப பத்தி பேசுனப்பதான் ரொம்ப எமோஷனல் ஆகியிருக்கா”

“அப்பா ப்ளீஸ் ஏதாவது தப்புன்னா, சரி பண்ண ஒரு முயற்சி பண்ணறேன்”.

“நானும் அதுக்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதனால தான் அவளுக்கு பெஸ்ட்டா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன். நல்ல பையன், அருமையான குடும்பம். நான் நந்தினிக்கு கூட இவ்வளவு கேர் எடுத்து மாப்பிள்ளை பாக்கலை. புரிஞ்சிக்கோ”

“உங்களுக்கு என்னை புரியலையா அப்பா”.

“கிரி என்னோட இந்த ஐடேண்டிட்டி .விஸ்வநாதன் தி சேர்பெர்சன் ஒப் கிரி குரூப் ஓப் இன்டஸ்ட்ரீஸ்.என்னோட உழைப்பு அது. அதை எதுக்காகவும் அட் ப்ரெசென்ட் என்னால விட முடியாது. பட் எதிர்காலத்தில என்ன பண்ணுவேன் சொல்லமுடியாது. அதே மாதிரி உங்க அம்மா. ஐ லவ் ஹெர் வெரி மச். அவளுக்கு இஷ்டம் இல்லாத எதையும் நான் செய்யமாட்டேன். அதே சமயம் நீயும் எனக்கு முக்கியம். அதனால உனக்கு ஏதாவது செய்யனும்னா நீ செஞ்சிக்கோ, அது எனக்கு பிடிக்கலன்னாலும் பரவாயில்லை. இது உன்னோட லைப். அத நீதான் வாழணும். எனக்கு தெரியும் உனக்கு அன்னலட்சுமிய ரொம்ப பிடிக்கும்னு. அதனால தான் நீ அவள மீட் பண்ற மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையாம உங்க அம்மா பாத்துக்கிட்டா.இனி என்ன பண்ணனும்னு நீ தான் டிசைட் பண்ணனும்”.

“இனி என்ன பண்ணமுடியும்”.

 அதற்கு அவர் பதிலேதும் பேசவில்லை.

“ஏம்ப்பா அவ படிக்கல. என்ன நடந்தது”.

விஸ்வநாதன் அவனை பார்த்து மெதுவாக,” அது. அவங்களுக்குள்ள அன்னைக்கு ரொம்ப பிரச்சனை அப்போ உங்கம்மா அவளோட. செர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் கிழிச்சிட்டா“.

“அப்பா.” என்றான்.

அவனால் அதிர்ச்சியில் பேசவே முடியவில்லை.

“வேறே இன்னும் என்னவெல்லாம்பா பண்ணியிருக்கீங்க”.

விஸ்வநாதன் மெளனமாக திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

கிரிக்கு தன் மீதே நிறைய கோபம் வந்தது. என்னவெல்லாம் நடந்து விட்டது தான் ஒன்றுமே தெரியாமல் இப்படி இருந்து விட்டோமே என்று.

அவனை மேலும் எதுவும் சிந்திக்கவிடாமல் போன் அடித்தது. அருண் பேசினான் “கிரி அன்னலட்சுமிக்கு நினைவு திரும்பிடிச்சி, மாமாவும் நந்தினியும் அவள பாக்க போய் இருகாங்க. நீ எங்க இருக்க?” என்றான்.

“வரேன் மாமா” என்றான்.

ஐ .ஸி. யு வாசலில் அருண் நின்றிருந்தான்.

“கிரி நீ உள்ள போகலியா”, என்றான் அருண்.

“இல்லை நீங்க போயிட்டு வாங்க”

“ஏன் கிரி நீ ஏன் வரலை”

“எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் மாமா. கட்டாயம் அவள பாக்குறதுக்கு முன்னாடி யோசிக்கணும் அதனால நான் வரலை”.

அருண் அவனை புரியாமல் பார்த்துவிட்டு உள்ளே போக திரும்பினான்.

“மாமா ஒரு நிமிஷம்”, என்றான் கிரி.

அருண் என்ன என்பது போல் பார்க்க,“யாராவது கேட்டா நான் உள்ள வரலேன்னு சொல்லிட்டேன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்”, என்றான்.

அருண் ஒன்றும் பேசாமல் அவன் தோளை தட்டி விட்டு சென்றான்.

அருண் உள்ளே சென்றபோது நந்தினி அன்னலட்சுமியிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

“பயப்படறதுக்கு ஒன்னும் இல்லை. நீ கொஞ்சம் டென்ஷன் ஆனதால மயக்கம் போட்டுட்ட. நான் பார்த்து பிடிக்கறதுக்குள்ள கீழ விழுந்து அடிபட்டிடுச்சு”.

அருண் அருகில் சென்றவுடன், நந்தினி அருணை பார்த்து “பயபட்றாங்க”, என்றாள்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே டாக்டர் வர அவரிடம் கூறினர்.

“பயம் ஒண்ணுமில்லை மிஸ் உஷா. நீங்க நல்லா இருக்கீங்க”, என்றார்.

“அப்புறம் ஏன் நான் ஐ. ஸி .யு ல இருக்கேன்”.

“நீங்க இங்க வந்தப்ப மயங்கி இருந்ததனால, இங்க இருக்கீங்க. இப்போ ரூம்க்கு மாத்திடுவாங்க”, என்றார்.

விஸ்வநாதனையும் பார்த்து,“ஷி இஸ் ஆல்ரைட்” என்றார்.

பிறகு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வெளியே சென்றனர்.

உஷா நந்தினியை பார்த்து,“அக்கா சித்தி எங்கே” என்றாள்.

“வீட்டுக்கு போய் இருக்காங்க, இப்போ வந்துடுவாங்க”, என்றாள்.

நந்தினி அருணை பார்த்து,“கிரி எங்கே”, என்றாள்.

“வெளிய இருக்கான்”.

“ஏன் உள்ள வரல”

“கூப்டேன் வரலைன்னு சொல்லிட்டான்”. அருண் இதை சொல்லும்போது உஷாவையே பார்த்து கொண்டிருக்க உஷா கண்களை மூடிகொண்டாள்.

“இருங்க நான் போய் பாத்துட்டு வரேன்” என்று நந்தினி கிளம்ப, அருண் அவன் பின்னோடு செல்லவும்,”அண்ணா” என்றாள் உஷா அருண் திரும்பி பார்க்கவும் மெல்லியதாய் புன்னகை செய்தாள்.

அருண் என்ன என்பது போல பார்க்க பக்கத்தில் வருமாறு தலை அசைத்தாள்.

அருண் அருகே செல்லவும்,“மாமா என்ன சொன்னாங்க”, என்றாள்.

“இப்போதானே வெளியே போனாங்க, உன் கிட்ட பேசலியா”, என்றான்.

“நான் இவங்களை சொல்லலை, கிரி மாமாவ சொன்னேன்”, என்றாள்.

“ஒன்னும் சொல்லலியே”

“நான் பாக்கனும்னு சொன்னேன்னு சொல்றீங்களா”

“கண்டிப்பா” என்று கூறி வெளியே சென்றான்.

நந்தினி வெளியே வந்த போது உஷாவினுடைய சித்தி வந்திருக்க, அவரை உள்ளே சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறினர்.

“ஏன் கிரி, அவள பாக்கலையா “

“பாக்கலை”

“ஏன்”

“ஏன்னா,. பாத்து என்ன பண்ணபோறேன்”.

“இவ்வளவு வருஷமா நாம பாக்காம இருந்ததே சரியில்ல. இப்போ அடிபட்டு படுத்துட்டு இருக்கா இப்போகூட பாக்கலன்னா ரொம்ப தப்பு. வா உள்ள போகலாம்”, என்றாள்.

“வரலைன்னா விட்டுடு கம்பெல் பண்ணாத” என்றான்.

அதற்குள் அப்பா,” வர பாருங்கப்பா இவன் என்ன பேசுறான்னு” , என்றாள் நந்தினி.

விஷயம் தெரிந்து விஸ்வநாதன் அவனை கேள்வியாக பார்க்க கிரி ஒன்றுமே பேசவில்லை.

உஷாவினுடைய சித்தி வெளியே வர விஸ்வநாதன் அவரைப் பார்த்து விவரம் கூறிவிட்டு காலையில் வீட்டில் முப்பது கும்பிடுவதால் தங்கள் யாராலும் வர முடியாது என்று கூறி அது முடிந்தவுடன் நந்தினியை அனுப்புவதாகக் கூறினார்.

நந்தினி அதற்கு,” அவளும் வரணுமேப்பா “என்றாள்.

“நான் டாக்டர்கிட்ட பேசிட்டேன் நந்தினி. காலைல போன் பண்ண சொன்னார். அவ நல்லா இருந்தான்னா கொஞ்ச நேரம் வந்துட்டு வரட்டும்னார்”.

“போய் அவ கிட்ட சொல்லிட்டு வந்துடு கிளம்பலாம்” என்றார்.

நந்தினியும் சித்தியும் உள்ளே போக, “நீ என்ன பண்ணற” என்றார் விஸ்வநாதன் கிரியை பார்த்து.

“நீங்க போங்க, நான் வரேன்” என்றான்.

நந்தினி வர விஸ்வநாதனும் நந்தினியும் கிளம்பினர்.

அருண் அங்கேயே இருந்தான்.

நந்தினி,” நீங்க வரலையா” என்றதற்கு “நான் கிரியோடு வரேன்” என்றான்.

கிரி அவனை யோசனையாக பார்த்தான், ஆனால் ஒன்றும் கூறவில்லை.

கிரி நந்தினியை பார்த்து போனவுடனே,” குழந்தைங்கள பாத்துட்டு எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு” என்றான்.

“எதுக்கு மெசேஜ் போன் பண்ணறேன்” என்றாள்.

“பண்ணாத நான் எடுக்கமாட்டேன்”.

விஸ்வநாதன் நந்தினியை பார்த்து,” அவன சும்மா டிஸ்டர்ப் பண்ணாத வா”  என்று கூட்டிக்கொண்டு போனார்.

அவர்கள் சென்றவுடனே, அருண் கிரியிடம் உஷா அவனை பார்க்கணும் என்று கூறியதாக கூறினான்.

“மாமா ஏதாவது சொல்லி சமாளிங்க எனக்கு இப்ப அவள பாக்க முடியாது”.

“ஏண்டா”

“போங்க மாமா”

அருண் உள்ளே சென்று உஷாவிடம்,“அர்ஜென்ட்டா ஒரு போன் வந்தது. உடனே கிளம்பிட்டான்”, என்றான்.

உஷா ஒன்றுமே பேசாமல் அருணையே பார்த்தாள்.அருண் “என்னம்மா” எனவும் “அவங்க கிட்ட பாக்க இஷ்டமில்லைன்னா தைரியமா சொல்ல சொல்லுங்க, அதுக்காக பொய் எல்லாம் சொல்ல வேண்டாம்”, என்றாள்.

“இல்லைம்மா நான் அவன் வந்தவுடனேயே கூட்டிட்டு வரேன்”, என அருண் கூறவும்.

“எனக்கு தெரியும் அண்ணா சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா எனக்கு தெரியும்னு அவங்களுக்கும் தெரியும்”, என்றாள்.

அருண் வெளியே வர,“போகலாமா”, என்றான் கிரி.

“அவ என்ன சொன்னானு நீ கேக்கவேயில்லையே”

“என்ன சொல்லுவா. நான் பொய் சொல்லறேன்னு சொல்லுவா”

“டேய் என்ன வச்சு காமெடி பன்னரீன்களா”

“அதத்தான் நாலு வருஷமா நந்தினி பன்னராலே. நான் வேற எதுக்கு?”.

“டேய் .உனக்கு ரொம்ப ஏத்தம்டா”, என்று அருண் கூற,“ஏத்தம் எல்லாம் இல்லை. இனிமே தான் ஏத்தவே போறேன் வாங்க”, என்றான். இருவரும் வெளியே வந்தனர்.

முத்துவிடம் அவர்களுக்கு என்ன தேவையோ செய்யுமாறு கூறி பணத்தை குடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

“என்ன கிரி, எங்க போகலாம்”, என்றான் அருண்.

“எங்கயாவது பார்க்கு போங்க மாமா”, என்றான்.

“என்ன குடிக்கபோரியா, ஏண்டா என்னடா பிரச்சினை”.

“இப்பத்திக்கு நீங்க தான் ஏன் பிரச்சனை அமைதியா வாங்க.”

“என்னடா அருணுக்கு வந்த சோதனை”, என்று மனதோடு அருண் புலம்பிக்கொண்டே கிரியோடு சென்றான்.

Advertisement