Advertisement

 

அத்தியாயம் இருபத்தி மூன்று (2):

மொட்டை அடித்து காது குத்தின பிறகு, பூஜையின் பொருட்டு நடராஜர் சன்னதியில் நிற்க. நிரஞ்சன் கார்த்திக் அவளிடம் தூக்கம் வர அழ ஆரம்பித்தான். அவள் ஹம் செய்து பாடினாள் தானே தூங்குவான்.

கடவுள் சன்னதியில் எப்படி ஹம் செய்வாள். பாட்டியோடு வரும் போதெல்லாம் இவள் பாடாமல் அவர் விட்டதேயில்லை. அந்த நினைவுகள் மேலோங்கஅவளுக்குமே மனம் நிறைவாய் இருக்க, இறைவனின் சன்னதியில் பாட வேண்டும் என்ற உணர்வு ஓங்க,. முன்பே இந்த பாடலை அவள் அந்த சன்னதியில் பாடியிருக்கிறாள். அது தைரியம் தர

முத்துதாண்டவர் இயற்றிய மாயாமாளவ கௌளை ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனை ஒன்றை பாடினாள். அவள் ஆரம்பித்தவுடன் சிணுங்கி கொண்டிருந்த அவளுடைய மகன் அமைதியாக அவள் தோள் சாய்ந்தான்.

ஆடிகொண்ட்டார் அந்த வேடிக்கை காண கண்                               ஆயிரம் வேண்டாமோ

நாடித்துடிப்பவர் பங்கில் உரைபவர்                                              நம்பதிருச்செம்பொன் அம்பலவாணர்

ஆர நவமனியாமாலகல் ஆட ஆடுமரவம் படம் விரித்தாட              சீரணிகொன்றை மலர்த் தொடையாட சிதம்பரத்தேர் ஆட              பேரணிவேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும் பூஜித்து கொண்டு நின்றாட    காரணி காளி எதிர்த்து நின்றாட கனக சபை தனிலே.

ஆடிகொண்ட்டார் அந்த வேடிக்கை காண கண்                               ஆயிரம் வேண்டாமோ

பாடல் முடிந்தவுடன் அனைவரின் மனமும் இசையால், அது உணர்த்திய நடராஜ பெருமானின் சிறப்பால் நிறைந்திருந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு பாடியதால் உஷாவிற்கு சரியாக பாடினோமா இல்லையா என்று ஒரே சந்தேகம். பாடிய பிறகு அவள் சிறு வயதின் நாட்களுக்கு போய் விட்டாள் என்றே சொல்ல வேண்டும். நந்தினியிடம், “அக்கா எப்படி இருந்தது. ஸ்ருதி சேர்ந்துச்சா, அபஸ்வரம் வரலயே, சங்கதி எல்லாம் கரக்டா இருந்ததா”, என்றாள் ஆவலாக, இருவரும் தான் பாட்டு கற்று கொண்டனர். நந்தினியும் பாடுவாள், ஆனால் இவள் அளவுக்கு அனுபவித்து இருக்காது. அது நந்தினிக்கு மற்ற பாடங்களை போல் ஒரு பாடம்.

அதனால் எப்பொழுது பெர்பெக்ஷன் எதிர்பார்த்து உஷாவை தப்பு சொல்லுவாள். “நல்லா இருந்தது பெர்பெக்ட். கட்டாயம் தினமும் சாதகம் பண்ணு அன்னு, விட்டுடாத.”, என்றாள். அன்னலட்சுமி ப்ரத்யுஷாவின் முகத்தில் திரும்பிய சந்தோஷம் கிரியின் முகத்தில் எதிரொலித்தது

 

நீரஜாவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மனதிற்குள் சிறிய வருத்தம். தங்கள் மகள் இல்லாத தாங்கள்., இந்த வைபவத்தில் மேலோங்கி இருந்தது. அன்னலட்சுமி ப்ரத்யுஷாவின் பாடலால் மனம் அமைதியடைந்தது.

 அர்ச்சகர் வந்து, “அருமையாய் பாடினே குழந்தே!, கடவுளை வணங்குவதில் சிறப்பே பாடி வணங்குவதும், பூக்களால் அர்சிப்பதும் தான்”, என்றார். கிரியிடம் இவள் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, விரல்களால் அருமை என்று அவன் நர்த்தனமாடினான். அருணிற்கு ஆச்சர்யம் இவ்வளவு நன்றாக பாடுவாளா என்று.

இனிதே எந்த சங்கடமும், தடங்களும் இல்லாமல், முடியெடுத்து, காது குத்தும் வைபவம் சிறப்பாகவே நடைபெற்றது.

திருமணத்திற்கு இருபது நாட்களே இருக்க, திருமணம் முடித்தே நந்தினியும் அருணும் செல்வது என்பது முடிவாக.,

திருமண வேலைகள் எந்த குறைவு மில்லாமல் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் கிரி மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டான். வர்ஷாவிற்கு வேண்டிய அனைத்தையுமே கிரியே தான் செய்தான். “உங்கள் மகளுக்கு நீங்கள் செய்வதை திருமணத்திற்கு பிறகு செய்து கொள்ளுங்கள்”, என்று விட்டான். முத்து விநாயகத்தின் அப்பா கிரி எதை கேட்டாலும், எதை சொன்னாலும், அவன் விருப்பத்திற்கு தலையாட்டினார். வீட்டிலும் கிரி அவன் அம்மா, உஷாவிடம் நடந்த வருத்தங்கள் இருந்தாலும், அதை காண்பிக்காது உறவை சற்று சீர்படுத்தி கொண்டான்

சாம்பவி உஷாவிடம் இணக்கமாக நடக்க முயற்சித்தாலும், உஷா பட்டும் படாமல் தான் இருந்தாள். விஸ்வநாதன் கூட சாம்பவியின் பொருட்டு சமாதானம் பேச. “என்னால யாரையும் மன்னிக்க முடியாது மாமா. மறக்க என்னாலான முயற்சிய எடுக்கறேன். எனக்கு டைம் குடுங்க”, என்றாள், இவளும் சமாதான மாகவே.      

அந்த பதில் விஸ்வநாதனுக்கு திருப்தியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். அவள் விரோதம் பாராட்டவில்லை என்பதே அவருக்கு நிம்மதியை கொடுத்தது.

திருமண வைபவமும் வர நிச்சயத்தின் போதே, அவர்கள் பெண்ணுக்கு கொண்டு வந்த சீர்வரிசைகளை பற்றி ருக்மணி பாட்டி வேண்டுமென்றே ஏதாவது நொட்டை நொள்ளை மாப்பிள்ளை வீட்டாரின் காது பட பேசினார். தங்கதில் செட்டாக அவர்கள் ஆரம், நெக்லஸ், வலையல், கம்மல் என்று ஜெர்கான் வொர்க் செய்தது, இருபத்தியைந்து மற்ற தட்டுகளோடு அவர்கள் சீராக கொண்டுவந்து இருக்க, வேண்டுமென்றே, “வைரத்துல கொண்டு வருவாங்கன்னு நினைச்சேன், தட்டும் அப்படி ஒண்ணும் பெருசா இல்லையே”, என்றார். நீரஜாவின் அப்பாவும் அம்மாவும் அவரிடம் செய்த மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகவில்லை.

முத்து விநாயகத்தின் அப்பாவின் முகமும் அம்மாவின் முகமும் சுருங்கி விட்டது. அவர்களுக்கு புரிந்தது பெண்ணின் அப்பா அம்மா உறவுகள் எல்லாரும் நல்லவர்களே, ஆனால் இந்த பாட்டி பேசுவதால் உறவுகள் முன்னாள் தலை குனிவு தானே என்று. பதில் கொடுக்க அவருடைய மீசை துடித்தது என்றே சொல்ல வேண்டும். கிரிக்காக அவர் பொறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

உஷாவிர்க்கு புரிந்தது அவர் கிரிக்காக மட்டுமே பொறுத்து போகிறார் என்று. இதை பார்த்திருந்த முத்து விநாயகத்தின் முகம் கடுமையாக, அவள் திரும்பி கிரியை முறைத்தாள், பார்வையேஏதாவது செய்யலைன்னா மகனே நீ தொலைஞ்சடா”, என்று கிரிக்கு உணர்த்தியது. அவனும் ஏதாவது செய்தாக வேண்டும். மாப்பிள்ளையின் அப்பாவும் அம்மாவும்  திருமண வேலைகள் என்று ஆரம்பித்ததில் இருந்து தங்களுடைய விருப்பம் என்று எதுவுமே சொல்லவில்லை, எல்லாமே பெண்வீட்டினரின் இஷ்டதிர்கே விட்டனர். முத்து விநாயகம் அவர்களுக்கு ஒரே மகன் வேறு.    

தனியாக பாட்டியை மிரட்டலாம் என்றாள் அவர் மற்றவர்கள் முன்னாடி பேச, இவனும் மற்றவர்கள் முன்னாடி பேச வேண்டிய கட்டாயம்

பாட்டி உன்னை பார்த்து, உங்க வசதிய பார்த்து அவங்க பொண்ணை எடுக்கலை, பொண்ணை மட்டும் தான் பார்த்தாங்க. இனி ஒரு வார்த்தை பேசினாலும். நீங்க இல்லாம தான் இந்த கல்யாணம் நடக்கும். அவங்க பொண்ணை நிச்சயம் பண்ணி ஊருக்கு கூட்டிட்டு போய் தாலி கட்ட வந்திருக்காங்க. நீங்க ஏதாவது கலாட்டா பண்ணினா, பொண்ண தூக்கிட்டு போய் தாலி கட்டுவாங்க, யாருன்னு நினைச்ச அவங்களை, எனக்காக அமைதியா இருக்காங்க”, என்றான். கேட்டிருந்த முத்து விநாயகத்தின் முகம் சற்று தெளிந்தது.  

எழுந்த சலசலப்பு கிரியின் இந்த பதிலால் நிமிஷத்தில் மறைந்து எல்லாரும் அவரவர் வேலையை பார்க்க மாப்பிள்ளை வீட்டாருமே, பெண்ணையும் மாபிள்ளையையும் இருத்தி  நலுங்கு வைக்கும் வேலையில் இறங்கினர்.

தனியாக முத்து விநாயகத்தின் அப்பாவிடம் சென்றவன், “சாரி அங்கிள்!”, என்றான். “எனக்காக அவங்களை பொறுத்துக்கோங்க, என் பாட்டி அவங்க, நிறைய பேசுவாங்க ஒண்ணும் செய்ய முடியாது. நான் பேசுன எஃபக்ட் இன்னும் எவ்வளவு நேரம் தாங்கும்னு சொல்ல முடியாது. முடியலைன்னா நீங்களே பேசிடுங்க. நான் ஒண்ணும் நினைக்க மாட்டேன்”, என்றான்.

விடுங்க தம்பி, அதுதான் நீங்க பேசிடீங்கள்ள. இனி பேசட்டும் நான் பார்த்துக்கறேன்”, என்றார் மீசையை முறிக்கியபடியே.

பேசிமுடித்தவன், உஷாவிடம், வந்துகரக்டாஎன, “ம், ரொம்ப”, என்றாள்.  

இதையெல்லாம் எல்லாரும் பார்த்தே இருந்தனர். முன்பென்றால் சாம்பவி அவருடைய அம்மாவிற்காக ஏதாவது பரிந்து பேசுவார். இப்போதுதான் கிரி மறுபடியும் நன்றாக அவரிடம் பேச ஆரம்பித்திருக்கிறான், அதை கெடுத்து கொள்ள விரும்பவில்லை.

அருண் கிரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தவன், “எப்படிடா நான் தான் என் பொண்டாட்டி பார்த்தா, அடுத்த நிமிஷம் ஓடுரேன்னு நினைச்சேன், நீ என்ன மிஞ்சிட்டடா, எனக்கு அவ பார்த்து சைகை பண்ணினா தான் தெரியும், உனக்கு பார்த்தாலே தெரியுதுஎன்றவனை கிரி புன்னகையோடு ஒரு பார்வை பார்க்க, அது முறைப்பா, இல்லை சந்தோஷமா, இல்லை என்னவென்று, அருணிற்கு புரியவில்லை, கிரி மனதிற்குள் நினைத்தது, “உங்களால தான் மாமா இவ்வளவு சீக்கிரம் எங்க கல்யாணம் நடந்தது”, என்பதே.

என்னடா ஒரு மார்க்கமா பார்க்கிற”,

அதற்குமே புன்னகைத்தான், “டேய் என்னை வச்சு ஏதாவது காமெடி கீமெடி பண்றீங்களா”, என்றான்.

இல்லைங்க அண்ணா, அப்படி எல்லாம் இல்லை”, என்றாள் உஷா,

அங்க கேள்வி கேட்டா இங்க பதிலா, உனக்கு அவன் என்ன நினைக்கிறான்னு தெரியுமா”,

ஏன் தெரியாம”, என்றாள் உஷா, அருனுமே வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான், அவர்கள் மற்றவர்கள் முன்னாள் அதிகம் பேசிக்கொள்வதே இல்லை. ஆனால் கிரிக்கு  தேவையானதை உஷா செய்தாள், உஷா கண்ணசைவில் கிரி நடந்தான்.            

அப்படியா.?”, என்ற அருண், “டேய் நீ என்ன நினைச்சன்னு பேப்பர்ல எழுது, அதை என் கிட்ட கொடு. அப்புறம் அன்னு கிட்ட கேக்கறேன், ரெண்டு சரியான்னு பார்க்காலாம்”.

அண்ணா எல்லா நேரமும் சரியா இருக்காது”, என்று அவள் மறுக்க, “அப்ப என்னை கிண்டல் பண்றீங்க”, என்றான் அருண்.

ஏன் இப்படி?”, என்றாள் நந்தினி, அவனிடம் கோபத்தை உணர்ந்த உஷா, அது பொய் கோபம் என்று அறிந்தாலும், “நீங்க எழுதுங்க”, என்றாள் கிரியை பார்த்து, அவன் பேப்பரில் எழுதி முடித்து அருணிடம் கொடுத்த பின், அதையே வாய் மொழியாக, “எங்க கல்யாணம் நடந்ததுக்கு உங்களுக்கு தேன்க் பண்ணியிருப்பாங்க”, என்றாள்.

அதையே தான் வேறு வார்த்தைகளில் கிரி எழுதியிருந்தான். அருண் அவர்களையே பார்க்க உஷாவை நெருங்கி அமர்ந்த கிரி அவள் தோளில் கைபோட்டு, “தேங்க்ஸ் மாமா”, என்றான், அந்த வார்த்தைகளில் தெரிந்த நிறைவு, உஷாவின் கண்களில் தெரிந்தது. பார்பதர்கே அருணிற்கு சந்தோஷமாக இருந்தது.

அருண் பார்த்தது பார்த்தபடியே இருந்தான். அதற்குள் நலுங்கு வைப்பதற்கு அழைப்பு வர எல்லாரும் எழுந்து சென்றனர்.

முடித்தவுடன் எல்லாரும் உஷாவை பாடச்சொல்ல, “எனக்கு நலுங்கு பாடல் எதுவும் தெரியாது”, என்றாள். “அது தெரியலைன்னா என்ன வேறு பாடேன்”, என்றாள் நந்தினி.

நீங்க ரொம்ப நல்லா பாடறீங்கலாமே. வர்ஷா கோயில்ல பாடினத சொன்னா எங்களுக்காக பாடுங்களேன்”, என்றான் முத்து விநாயகம். மாப்பிள்ளையே கேட்கும் போது என்ன செய்வது என்பது போல் உஷா கிரியை பார்க்க, பாடலாம் என்ற அவனின் ஆசையோடு கூடிய அனுமதி கண்களில் தெரிய,            

யாரோ இவர் யாரோ என்ன பேரோ  அறியேன்

காருலாவும் சீருலாவும் மிதிலையில்                                      `           கன்னி மாடம தனில் முன்னே நின்றவர்

சந்த்ர பிம்பமுக மலராலே என்னை                                                     தானே பார்க்கிறார் ஒரு காலே                                                              அந்த நாளின் சொந்தம் போலே உருகிறார்                                               இந்த நாளில் வந்து சேர்வை தருகிறார்

யாரோ இவர் யாரோ

என்று உருகி பாட அதன் அர்த்தம் என்ன பாடல் என்று கிரிக்கு புரியவில்லை ஆனால் அது தனக்காக பாடப்பட்டது என்று புரிய,

நந்தினி, அன்னலஷ்மி ப்ரத்யுஷாவிடம், “அர்த்தம் சொல்லு அன்னு”, என்றாள். இருவரும் இந்த பாடலை சேர்ந்தே பயின்றார்கள். இதன் அர்த்தத்தை அவர்களுடைய குரு அனுபவித்து சொல்வார். நந்தினிக்கு தெரிந்தாலும் எடுத்து சொல்லும் அளவுக்கு ஞாபகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.    

அக்கா நீங்க சொல்லுங்க”, என்றாள், “நீயே சொல்லு”, என்று நந்தினி சொல்ல, “கொஞ்சமா பிச்சி பிச்சி தான் தெரியும்”, என்றாள், “தெரிஞ்சவரைக்கும் சொல்லு”, என்று இருவரும் வழக்காடிகொண்டு இருக்க, “நான் சொல்லட்டுமா”, என்ற ஒரு குரல் கேட்க,

அங்கே ஆனந்த் நின்று கொண்டு இருந்தான். முத்து விநாயகத்தின் உற்ற நண்பன் அல்லவா, “டேய் எப்போ வந்த”, என்று அவனை அணைத்து வரவேற்பதர்க்காக, முத்து விநாயகம் எழப்போக, “டேய் ஆரத்தி எடுக்காம எந்திரிக்காத”, என்று அவனை கடிந்த ஆனந்த்,  “நான் அவங்க பாட ஆரம்பிச்சப்போவே வந்துட்டேன்”, “எல்லாரும் அனுபவிச்சு கேட்டுட்டு இருந்தீங்க, அதனால டிஸ்டர்ப் பண்ணலை”, என்றான். அது வார்த்தைக்காக அவனுமே அதை அனுபவித்து நின்றிருந்தான்.      

சொல்லுங்க”, என்றான் கிரி ஆவலுடன்.

இது அருணாச்சல கவிராயர் எழுதிய ராம நாடகத்துல வரும் கீர்த்தனை, ஃபர்ஸ்ட் டைம் ராமர் சீதாவை பார்க்கும் போது ராமருடைய உணர்வுகளை இப்படி கொண்டு வந்து இருப்பார்”.  

      “இதுக்கு அர்த்தம்!. யார் இவர்?. இவரின் பெயர் என்ன?. இந்த அழகான மிதிலையில், கன்னி மாடத்திலிருந்து என்னை பார்ப்பவர் யார்? , அவருடைய அழகான நிலவு போன்ற முகத்தினாலே என்னை பார்க்கிறார், முன்னே இருந்த ஒரு ஜென்ம பந்தத்தனாலே, இந்த ஜென்மத்தில் என்னை சேர்கிறார்”,

இதை சொல்லனும்னா, இது அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள், அப்படி நம்ம சீதாவும்  ராமனும் முதலில் பார்க்கும் போது சொல்வாங்க, அருனாச்சலகவி, இதை லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் அப்படின்னு சொல்லலை, இது ஒரு ரெகக்நிஷன்னு சொல்லறார். முன்னாடி இருந்த பந்தத்தினால. இப்போ பார்த்தவுடனே சேர்கிறாங்கன்னு”, என்று அவன் விளக்கங்களை கூற. அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் தங்களுடைய துணையை அப்படி நினைக்க தோன்றியது.

எப்பொழுது போல் ஒற்றை புருவம் உயர்த்தி எப்படி என்று உஷா கேட்க, இந்த முறை அருமை என்று சைகையால் கூட சொல்ல தோன்றாமல் அவளை பார்த்தபடியே இருந்தான் கிரி. இப்பொழுதெல்லாம் அந்த பார்வையில் உஷாவிர்க்கு காதல் தெரிந்தாலும் இன்று அதையும் மீறி ஏதோ தெரிய அவளுமே பார்வையை விலக்காமல் பார்த்து நின்றாள்.

இதை பார்த்திருந்த ஆனந்தின் கண்களில் தெரிந்தது என்ன?, ஏக்கமா, வலியா, இல்லை உஷா சந்தோஷமாக இருக்கிறாள் என்ற உணர்வா, எதுவாக இருந்தாலும் அதில் பொறாமையோ காழ்புனற்ச்சியோ இல்லை ஒரு நிறைவே இருந்தது.

அவன் அர்த்தம் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, முத்து விநாயகம் தன்னுடைய நண்பனையே தான் பார்த்திருந்தான், சட்டென்று ஏதோ தோன்ற ஆனந்த் திரும்பி முத்து விநாயகத்தை பார்க்க, அவன் பார்வையில், “நீ இன்னும் அவளையே நினைத்து கொண்டிருக்கிறாயா”, என்ற குற்ற சாட்டு தெரிந்தது.

உஷாவும், கிரியுமே இப்பொழுது ஆனந்தை ஆராய்வதை போல் பார்க்க, தன்னை அவர்கள் பார்ப்பதை உணர்ந்தவன், முகத்தில் சந்தோஷத்தை பூசிக்கொண்டு தன்னுடைய நண்பனை வாழ்த்து சொல்வதற்காக நெருங்கியது போல் நெருங்கி, மெதுவாக அவன் காதோடு கேட்கும்படி, “டைம் இஸ் பிக் ஹீலர். காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும், உடனே கொஞ்சம் கஷ்டம்டா”, என்றான். பார்பவர்களுக்கு அவன் முத்து வினாயகதிற்கு வாழ்த்து சொல்வது போல் தான் தோன்றியது

அவனுடைய சஞ்சலமில்லாத, சந்தோஷமான முகத்தை பார்த்த பிறகே, அன்னலட்சுமி ப்ரத்யுஷாவிர்க்கும் சூர்ய கிரி வாசனுக்கும் முகம் தெளிந்தது.              

ஒரு வாறாக நிச்சயம் முடிந்து நாளை மறுநாள் நடக்க விருக்கும் முகூர்த்ததிர்க்கு எல்லாரும் சென்னைக்கு பயணப்பட,

ஆனந்தும் கிரிவாசனும் ஏதோ தனியாக பேசிக்கொண்டே வந்தனர். உஷா தன்னுடைய குழந்தைகளிடம் லயித்திருந்தாள். இதனை கவனித்தாலும் அவளால் என்ன ஏதென்று தனியாக கிரியிடம் கேட்க முடியவில்லை.

பிறகு திருமண வேலைகளில் எல்லாரும் ஆழ்ந்து விட, கிரியுமே பிஸியாக இருந்தான். ஆனந்துமே கிரியோடே இருந்தான். இவள் மக்கள் செல்வங்களோ. புது இடம் நிறைய பேர் இருப்பதினால், யாரோடும் செல்லாமல் இவளோடே இருக்க வேண்டும் ஒரே அழுகை, எல்லாரும் உதவிக்கு வந்தாலும், இவளால் சமாளிக்க முடியவில்லை.

 விஸ்வநாதனும் சாம்பவியும் மேடையில் இருந்தனர். கிளம்பும் சமயம் கலைவாணிக்கு காய்ச்சல் இருந்து அது அதிகமாகியதால் சித்தியும், அவளும் வரமுடியாமல் போயிற்றுநந்தினியும் அருணும் இவளோடே இருக்க, அவர்கள் மூவருமே கிரியை தேட, அவன் கண்களாலேயே கெஞ்சினான், “மேனேஜ் செய்”, என்பது போல, என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன் என்று எரிச்சலாக வந்தது உஷாவிர்க்கு, எப்போதடா முகூர்த்த நேரம் முடியும் பேசாமல் இவர்களை கூட்டிக்கொண்டு ஊருக்கே சென்று விடலாம் என்ற மனநிலைமைக்கு வந்து விட்டாள் உஷா,

ஒரு வழியாக தாலி கட்டி முடிய, கிரி விஸ்வநாதனிடம் ஏதோ சொல்லி கொடுத்து விட்டு வந்து,“அப்பாடா”, என்று அமர்ந்தான், அமர்ந்தவன் ஆனந்தையும்உட்க்காருங்க ஆனந்த் நிறைய வேலை செஞ்சிருக்கீங்க”, என்றான்.

நீங்க செய்யும் போது என் நண்பனுக்கு நான் செய்யமாட்டேனா. இதுல நான் ஒண்ணுமே செய்யலை என்னன்னு சொன்னேன். மத்ததெல்லாம் நீங்க தானே”, என்றான்.    

என்னடா செய்யற?”, என்று அருண் கேட்க, “என் பொண்டாட்டி எனக்கு ஒரு வேலை குடுத்தா மாமா, செய்ய வேண்டாமா”, என்றான்.

நான் என்ன குடுத்தேன் ஒண்ணும் குடுக்கலையே”, என்று குழம்பினாள் உஷா.

நீதானே என் பாட்டி கத்திட்டே இருக்காங்க, அவங்க வாயை அடைக்கிற மாதிரி ஏதாவது செய்ய சொன்னே, அதான் செஞ்சேன்”, என்றான்.

என்ன?”,. என கிரி புன்னகைத்தான், எரிச்சலில் இருந்த உஷா, நிரஞ்சன் கார்த்திக்கை தூக்கி அவன் மடியில் வைத்து, “இவன் எவ்வளவு நேரம்மா அழறான். நாங்க சமாளிக்க முடியாம திண்ட்டாடிட்டு இருக்கோம், உங்களுக்கு சிரிப்பா. இதுல நான் ஏதோ சொன்னேன்னு வேற”, என்று இடத்தை விட்டு எழுந்து போக,                      

 கையை பிடித்து அவன் சட்டென்று இழுக்க. அவன் மேலே ஏறக்குறைய விழுந்தாள். “என்ன பண்றீங்க, கார்த்திக் இருக்கான். மேல விழுந்துட்டன்னா?”. என்று பதட்டப்பட,

அப்போ விழுந்தது பிரச்சினை இல்லையா”, பக்கத்தில் இருந்த அருணிடம், “மாமா நீங்க என் பைய்யன பிடிங்க, என் பொண்டாட்டிக்கு என் மடிமேல உட்க்காரனுமாமா”, என்று சொல்ல, அவன் சொன்ன விதத்தில் அங்கே சிரிப்பு கிளம்பியது.   இவ்வளவு நேரமாக படுத்தி கொண்டிருந்த அவளுடைய மகன், இப்போது சிரித்தான்.      

“.டேய் அப்பாவும், பையனும், என்னை இம்சை பண்ணுறீங்களா”, என்று மெதுவாக கிரியிடம் கூறிகொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். அவளுடைய முகச்சிவப்பு அங்கே இருந்த அனைவருக்குமே ஒரு திருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது

      எல்லோருமே இவர்களை ரசித்து பார்த்தனர் என்றே சொல்ல வேண்டும். “டேய் உன் பொண்டாட்டிய கொஞ்சிட்டியா, இப்போவாவது சொல்லு”, என்றான் அருண்.

அண்ணா, நீங்களுமா”, என்று உஷா முறைக்க,

ஒரு வழியாக விஷயத்தை சொன்னான் கிரி, “முத்து வினாயகதுக்கும் வர்ஷாக்கும், நம்ம மேரேஜ் கிஃப்டா ஒரு மெடிக்கல் காலேஜ் குடுக்க போறோம் என்றான். “என்ன!!!”, என்று சந்தோஷமாக அதிர்ந்தாள் உஷா.

எனக்கு அதிகமா மெடிக்கல் ஃபீல்ட் பத்தி தெரியாது. அதனால ஆனந்த் கிட்ட தான் கேட்டேன். பெருசா செயின் ஆப் ஹாஸ்பிடல் மாதிரி பண்ணலாம்னு நினைச்சு தான் கேட்டேன். ஆனந்த் தான் கொஞ்சம் ப்ரோப்ளேம்ல இருக்கற மெடிக்கல் காலோஜோட இருக்கற யுனிவர்சிட்டி ஒண்ணு டேக் ஓவர்க்கு இருக்கு, பணம் செலவழிச்சு குறைகளை நிவர்த்தி பண்ணினோம்னா பெர்மிஷன் வாங்கிடலாம்னான், பேசி வாங்கிட்டோம். இனி அம் ரெடி டு ஸ்பென்ட். முத்துவிநாயகமும் வர்ஷாவும் தான் பிளான் பண்ணி, என்ன ப்ரோப்ளேம் எப்படி சரி பண்ணனும், எல்லாம் அவங்க தான் பார்க்கணும்”, என்றான்.

இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒரு யுனிவர்சிட்டி ஒனர்ஸ். இனிமே பாட்டி ரொம்ப குறை சொல்ற மாதிரி ஒண்ணும் இருக்காது”, என்றான்.

மேலே மேடையில் முத்து வினாயகதிடம், விஸ்வநாதன் விவரங்களை சொல்லி ஏதோ கொடுத்து கொண்டிருக்க, அவன் தயக்கத்தோடும், சந்தோஷத்தோடும் அவனுடைய தந்தையை பார்க்க., அவர் விஸ்வநாதனை பார்க்க., அவர் கிரியை பார்க்க., அப்போது தான் விவரம் தெரிந்து வர்ஷா, அப்பா, அம்மா, சாம்பவி, தாத்தா, பாட்டி, என அனைவரும் கிரியை பார்க்க.

மனைவி குழந்தைகளோடு அமர்ந்திருந்தவன், “வாங்குங்க!!!!!!!!!!”, என்பது போல் சைகை செய்ய, முத்து விநாயகம் தயங்க, அமர்ந்தந்திருந்த அன்னலஷ்மி பிரத்யுஷா, “நான் வந்தேன், ஒரு வழியாயிடுவீங்க”, என்பது போல் எழப்போக. டக்கென்று விஸ்வநாதன் கையிலிருந்து வாங்க, அங்கே எல்லோர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருந்தது. ருக்மணி பாட்டியின் முகமும் சந்தோஷத்தில் பூரித்தது.      

போட்டோ செஷன் வர, விஸ்வநாதனும் சாம்பவியும் போட்டோவிற்கு நிற்க, “பசங்களை கூப்பிடுங்க”, என்றார் சாம்பவி. நந்தினி, கிரி, உஷா, என குழந்தைகளோடு மேடையேற, அருண்னை, “வாங்க மாப்பிள்ளை”, என்று ஸ்பெஷலாக சாம்பவியும் அவர் தந்தையுமே வந்து அழைக்க எழுந்து போனான். “என்ன மாமா?, மாப்பிள்ளை முறுக்கா”, என்று கிரி கிண்டலடிக்க,

அப்போது தான் முத்து விநாயகமும், வர்ஷாவும், கிரிக்கும் உஷாவுக்கும்தேங்ஸ்சொல்லிகொண்டிருக்க, அருண் அவர்களின் காலை வாரினான்.

டாக்டர் ரொம்ப சந்தோஷப்படாதீங்க. கிரி சதி பண்ணியிருக்கான். அவன் ஹனி மூன் போகலைன்னு, உங்களையும் போக விடாம சதி பண்றான். பெரிய பொறுப்பா கொடுத்து”, என கிண்டலடிக்க

மாமா ஹனி மூன் எல்லாம் தனியா போகனும்னு இல்லை. இருக்கிற இடதில்லேயே கொண்டு வரலாம்”, என. வெட்கத்தில் உஷாவின் முகம் சிவந்து அவன் பின்னே ஒன்டினாள். “ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்கஎன., “ஏன் நீ தான் என் மானத்தை வாங்கணுமா, நானே வாங்ககூடாதா.”, என., கேட்டிருந்த முத்து வினாயகதிற்கு, அன்றைய. இன்றைய. நினைவுகள் புன்னகையை மட்டுமின்றி சத்தமாக ஒரு சிரிப்பை வரவழைக்க.

ஆனந்த் இதையெல்லாம் கீழே உட்கார்ந்து ரசித்து பார்த்திருந்தான். யார் கூப்பிட்டும் மேலே மட்டும் வரவில்லை.

போட்டோ செஷன் முடிந்து கீழே இறங்க. அப்போது பார்த்து மேல, தாளம் முடிந்து, மண்டபத்தில் பாட்டுகள் ஒலிக்க. முதலாக ஒலித்த பாடலே., கேட்ட உஷா கிரியையே பார்க்க. அவன் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டே வந்தவன், அவளிடம் பிரதிபலிப்பு எதுவும் இல்லாததால், “என்ன”, என்பது போல் பார்க்க, அவனுக்கு புரியவில்லை, அவள் ஹம் செய்த வரிகள் வரும் பொழுது, அவள் பார்வை உணர்த்த, “இதையா நீ பாடினே?”, என்றான்அவன் அதை உணர்வதற்குள் பாடலே முடிந்திருக்க,  “அச்சோ மிஸ் பண்ணிட்டேனே”, என்றவன், “எனக்காக பாடேன்”, என்றான்.

எல்லாரும் இருக்காங்க, முடியாது”, என தலையாட்ட, “வெளில போலாமா?”, என்றான்.

அவள் கையில் நிரஞ்சன் கார்த்திக் இருக்க, அவன் கையில் ஸ்வாதி ரஞ்சனி இருந்தாள், பதில் சொல்லாமல் அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்க, “ஜஸ்ட் ஒரு ஹால்ப் அன் ஹௌவர்”.

தூங்கட்டும்”, என்று சைகை செய்தாள்.

அவர்களை தூங்க வைத்து, நந்தினியிடம் விட்டு யாருக்கும் தெரியாமல் மண்டபத்திலிருந்து வெளியே வந்தார்கள். “இப்படி திருட்டுத்தனமா வர்றது நல்லா இருக்கு”,

என்ன திருட்டுதனமா வர்றோமா”,

பின்ன. என் பசங்களுக்கு தெரியாம வர்றேன் இல்லையா”, என்று அவள் கூறும்போதே கிரியின் போன் அடிக்க, “உங்க சித்தி”, என்று கொடுத்தான்.

அவள் ப்ளீஸ், ப்ளீஸ், என்று இவனிடம் சைகை காட்டி கொண்டே பேசிமுடிக்க, வைத்தவுடன். “போகலாமா”. என்று இவன் கேட்டு முடிக்க கூட இல்லை, மறுபடியும் போன் அலறியது. அதை விடவும் போனில் நந்தினி அலறினாள்,

கிரி கார்த்திக் ரொம்ப அழறான், அழுது, அழுது, முகமெல்லாம் அப்படியே ரெட் ஆயிடிச்சு”, என.

உன் பையன், உன்னை கூப்பிடறான்”, என்றான் உஷாவை பார்த்து,

அவள் உடனே உள்ளே விரைய, இவன் உள்ளே சென்றவுடனே, அருண் அவனை பார்த்து சிரித்தான், “அவனவன் ஒன்னை விட்டுட்டே போக முடியலை, நீ எங்க ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு போற”, என சிரித்தான்.  

மாமா எங்க ப்ரத்யு?”, 

 “உன் பையன மேல ரூம்ல தூங்க வைக்க போயிருக்கா, நான் தான் அங்கே அனுப்பினேன்”, என்றான் அருண்,

தேங்ஸ் மாமா”, என்றான் கிரி.

எதுக்குடா, மேல அவளை அனுப்பினதுக்கா”,

இல்லை, இனிமே யாரையும் அனுப்பாம இருக்கிறதுக்கு”, என்றபடியே சென்றான் கிரி

அருணுக்கு இதெல்லாம் சகஜமப்பா”, என்றான் அருண் அவனுக்கு அவனே.

சிரித்தபடியே கிரி ரூமிற்கு வர, “சத்தம் வேண்டாம்”, என்றாள் உஷா அவசரமாக. அப்போது தான் நிரஞ்சன் கார்த்திக் தூங்கலாமா, வேண்டாமா, என்று கண்ணை மூடுவதும் திறப்பதும் ஆக இருந்தான். கட்டிலில் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் ஸ்வாதி ரஞ்சனி நல்ல உறக்கத்தில் இருக்க, பக்கத்தில் நந்தினி இருந்தாள். “மாமா தனியா இருக்காங்க, கீழ போ”, என்று அவளை அனுப்பிய கிரி, அவள் வெளியேறிய பிறகு, “உஷ், அப்பா”, என்றான்தூங்க ஆரம்பித்திருந்த கார்த்திக்கை கட்டிலில் கிடத்தியபடி சிரித்தாள் உஷா.

சிரிக்கற நீ!!!!!!!!!!!”, என அவளை கடிந்தவன், “என் பொண்டாட்டி, என்னை பார்த்து முதல் முதலா சைட் அடிச்சு பாடின பாட்டு, பாடேன்”, என்றவன் அவன் அமர்ந்து அவளை மடிமேல் இழுத்து அமர்த்தி, இடையில் கையை அணைவாய் கொடுத்து, “பாடு!!!!!!!!!!!” என. இடையில் பதிந்த அவனுடைய கை ஏதோ செய்ய, “இப்படி எப்படி பாட்டு வரும்”, என்றாள் அவள், உட்கார்ந்திருந்த நிலைமையை உணர்த்தி , “வெறும் காத்து தான் வரும்”, என்றாள் கிசுகிசுப்பாய், ட்ரெஸ்ஸிங் கண்ணாடியின் முன் அவர்கள் அமர்ந்திருக்க, அதில் தெரிந்த உஷாவின் முகச்சிவப்பு பல கதைகளை அவனுக்கு சொல்ல

அவன் கை, உஷாவினுடைய  இடையை இன்னும் இறுக்கமாக அணைக்க, சினுங்கியபடியே பாட ஆரம்பித்தாள்.            

 

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ

இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

ஒளிசிந்தும் இரு கண்கள்

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்.” என்று அவள் பாட.

 

இதெல்லாம் வேண்டாம் நீ பாடின வரிகள் பாடு என்றான்

 

என்னுள்ளே என்னுளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அது என்னென்று அறியேனடி

 

ஓரப்பார்வை பார்க்கும் போதே

உயிரில் பாதி இல்லை

மீதி பார்வை பார்க்கும் துணிவு

பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும் துணிவு

உனக்கே உனக்கே.

 

என்று அவள் மெல்லிய குரலில் அவனை எதிரே கண்ணாடியில் பார்த்தவாறே பாட, அந்த குரலின் இனிமையை விட அது உணர்த்திய செய்தியின் உண்மை, அவனுக்கு எல்லையில்லாத சந்தோஷத்தையும் நிறைவையும் கொடுக்க, எல்லையில்லாத சந்தோஷத்தையும் நிறைவையும் அதனோடு காதலையும் சேர்த்து வாழ்நாள் முழுவதுமே அவளுக்கு கொடுக்க அவன் உறுதி பூன, அவனுடைய பார்வை அந்த செய்தியை அன்னலட்சுமி பிரத்யுஷாவிற்கு உணர்த்த, சூரியனை பார்த்து மலர்ந்து சிரிக்கும் தாமரையாய் அவனை பார்த்து முகம் மலர்ந்து சிவந்தாள்.

நம் வாழ்க்கைத்துணை நமக்கு என்ன அன்பை கொடுக்கிறார்கள் என்ற நினைவை விட்டு, நாம் அவர்களுக்கு கொடுக்கும் அன்பை நினைத்தோமானால், நம் வாழ்கை என்றுமே  நிறைவாக இருக்கும். அதையே அங்கே இருவரும் அவரவர்க்கு தெரியாமலேயே அதை செய்து கொண்டிருந்தனர்.                          

                           (நிறைவுற்றது)

Advertisement