Advertisement

அத்தியாயம் இருபத்திரண்டு(1):

இந்தியாவில் இவளை ரிசீவ் செய்ய வர்ஷா வந்திருந்தாள். அவள் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் கால்லேஜில் இருப்பதால் கிரி அவளிடம் சொல்லியிருந்தான், உஷாவை அழைத்து அவளை பத்திரமாக கோவைக்கு ஃப்ளைட் ஏற்றி விடுமாறு.

உஷாவிற்க்கு இது தெரியாது. இவள் கிளம்பிய பிறகு தான் அவளை அழைத்து சொல்லியிருந்தான். வர்ஷாவை பார்த்த அவள், “நீங்க எப்படி இங்க”, என.

கிரி மாமா போன் பண்ணியிருந்தாங்க. உங்க கோவை ப்ளைட் ஈவினிங் மூணு மணிக்கு தான். இப்போ தானே பத்து மணி ஆகுது. உங்களுக்கு கம்பெனி குடுக்க சொல்லி எனக்கு உத்தரவு”, என்று அவள் சிரிக்க.

இவர்கள் பேசுவதற்கு பொறுமையாக முத்து விநாயகம் நிற்க. அப்போது தான் அதை உணர்ந்தவளாக உஷா, வர்ஷாவை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். “இவங்க கிரி மாமாவோட மாமா பொண்ணு, வர்ஷா”, என அறிமுகப்படுத்தி, வர்ஷாவிற்கும் முத்து விநாயகத்தை அறிமுகப்படுத்த போக, அவள்எனக்கு  தெரியும்! டாக்டர் முத்து விநாயகம் மாமாவோட ஃபிரன்ட்! இவங்க புகழ் மாமா என்கிட்ட  பாடிட்டாங்க.   யார் அந்த அதிசய பிறவி, சிரிக்காத எங்க மாமாவை என்கிட்ட சிரிச்சு ரெண்டு வார்த்தை சேர்த்து பேசற அளவுக்கு இம்ப்ரெஸ் பண்ணினதுன்னு பார்க்க நானே ஈகரா இருந்தேன். நைஸ் மீட்டிங் யூ சர்”, என்றாள்

முத்து வினாயகத்திற்கு என்ன பேசுவது என்று தெரியாமல், “ஹலோ!”, என்றவன், “தேங்யு!”, என்றான்.

ஈவினிங் தானே பிளைட். வீட்டுக்கு வாங்க!”, என்றான்.

இல்லை நான் இங்க ஹாஸ்டல்ல இருக்கேன். அங்க போறோம்!”, என்றாள் வர்ஷா.

அதெல்லாம் பாஸ்ஸிப்ல் இல்லை, வீட்டுக்கு வாங்க!”, என்று அழைத்து போனான்.

போகும் வழியில்லையே, “டாடி, எங்க இருக்கீங்க!”, என்று அவனுடைய அப்பாவிற்கு போன் செய்தவன். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வீட்க்கு வாங்களேன்”, என்றான்.

வீட்டில் அவனுடைய அம்மா இருக்க, அவர்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்திலேயே அவன் தந்தை வந்தார்.

வந்தவர் அவன் இரண்டு பெண்களோடு இருப்பதை பார்த்து அவன் சர்ப்ரைஸ் என்று சொன்னதை வைத்து தவறாக நினைத்து, “அட்லாஸ்ட் ஒரு வழியா லவ் பண்ணி வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா”, என கேட்டு கொண்டே ஆர்பாட்டம்மாக உள்ளே நுழைந்தார்.

அப்பா!”, என்று தர்மசங்கடமாக கத்தினான். “அப்படியெல்லாம் இல்லை, ஏதாவது உளறாதீங்க”, என்றவன். திரும்ப பேசும் முன்னரே,

அவன் அருகில் வந்திருந்தவர், அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக,   “அப்படியெல்லாம் இல்லையா, அப்போ, இப்போ பண்ணு, ரெண்டு பேர்ல யார்னாலும் .கே ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க”, என்றார்.

இவனும் மெதுவாக அவரை பார்த்து, “அவங்க கணவர் மட்டும் இதை கேட்டாங்க, நம்ம டோட்டல் ஃபாமிலியும் காலி பண்ணிடுவாங்க. வெரி டேன்ஜரஸ்”, என்றான். இப்போது முழித்தார்.    

ஏதோ அவன் காதை இவர் கடிப்பதை பார்த்த பார்த்த அவன் அம்மா, “இதே இவருக்கு வேலையா போச்சு. எந்த பொண்ணுங்களை பார்த்தாலும் பையனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட வேண்டியது”, என்று முனுமுனுத்தவராக,

முத்துப்பா, இங்க வாங்க”, என்றவர். அவர் அருகில் வந்ததும் உஷாவையும் வர்ஷாவையும் பார்த்து, “சாரிம்மா தப்பா எடுத்துக்காதீங்க. இது பசங்களுக்கு திருமணமாகம இருக்கற எல்லா பேறன்ட்சும் பண்ற விஷயம். யாரை பார்த்தாலும் அப்படியே தோன்றும்”, என

   “ நெவர் மைன்ட் ஆன்டி”, என்றாள் உஷா. திருமணமானவள், சட்டென்று சொல்லிவிட்டாள். திருமணமாகாத, வர்ஷா சங்கடத்தில் இருந்தாள்.

இப்போவாவது என்னை சொல்ல விடுறீங்களா”, என்ற முத்து விநாயகம் இவங்கஅன்னலட்சுமி பிரத்யுஷா! இது அவங்க கசின் வர்ஷா”, என்றவன். உஷாவை பார்த்து, “இவங்க யாருன்னு தெரியுதா அப்பா”, என்றான்.

உஷாவை அவருக்கு தெரியவில்லை என்றாலும், “அன்னலட்சுமி பிரத்யுஷா!”, என்ற அவளுடைய பெயர் அவளை அடையாளம் காட்ட. “கிரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்”, என கேட்க, “ஆமாம்என்பது போல் முத்து விநாயகம் தலை யசைக்க.

நிஜமாவே இது ப்ளேசன்ட் சர்ப்ரைஸ் தான்”, என்று சந்தோஷமானவர், “டேய், இப்படி பண்ணிட்டியேடா. மொதல்லயே என்கிட்ட சொல்லியிருந்தா ஏர்போர்ட் வந்துருப்பேன். பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருப்பேன்”, என்று படபடவென பொறிய, “அதனால தான்பா சொல்லலை. உங்க அன்பு தொல்லையால வந்தவங்களை வாசலோட துரத்திவிட்டுடுவீங்கன்னு தெரியும்”, என்றவன்.

 “இப்போ தான் என்கூட தான் லண்டன்ல இருந்து வந்திருக்காங்க. சாயந்தரம் கோவை கிளம்பறாங்க. ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. கிரி சார் கோபிப்பார்”, என்றான்.

அவரையும் உனக்கு தெரியுமா”, என அவன் அப்பா கேட்க, “எனக்கு ஃபிரன்ட்பாஎன்றான் பெருமையாக.

எப்படிடா நான் ஒரு தடவை பார்த்திருக்கேன். அவங்க அப்பா கூட என்கூட பேசினார். ஆனா தம்பி கிட்ட பேசவே முடியலையே”.

அப்படியெல்லாம் இல்லங்க அங்கிள்பேசினா நல்லா பேசுவாங்க. ஆனா கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரப்ல்”, என உஷா உடனே பரிந்து வர,

மேடம், இருக்கும் போது நீங்க சர் பத்தி ஒரு வார்த்தை கூட பேச முடியாது அப்பா”, என கிண்டல் அடித்தான்.

ஆனந்த் ஃபிரன்ட்பா இவங்க. என்னோட ஃப்ளைட்ல வந்தாங்க. அப்புறம் சார் எனக்கு ஃபிரன்ட் ஆயிட்டார்”, என்றான் கவனமாக, அவள் ட்ரீட்மெண்ட பற்றி அவள் உளறி வைத்து விடாமல்.

மாலை வரை அவன் வீட்டிலேயே இருந்து, அவனே வந்து உஷாவை ஏற்றி விட்டு வர்ஷாவை ஹாஸ்டலில் விடுவதாக கூற. வர்ஷா மிகவும் தயங்கினாள்.

அப்போது கரக்டாக கிரி அழைத்தான், உஷா அவனிடம், “நான் இங்கே இறங்கினவுடனே கூப்பிட்டேன். நீங்க எடுக்கலை”, என்று முன்னெச்சரிக்கையாக கூறினாள்.

இல்லையென்றால். போன் பண்ண கூட முடியாதா”, என்ற அவன் ஆரம்பிப்பான் என்று தெரியும்.

தூங்கிட்டேன். இப்போ தான் எழுந்தேன். உடனே கூப்பிட்டேன்!”, என்றவன், “பக்கத்தில யாராவது இருக்காங்களா”, என, “இல்லை, தனியா வந்து தான் பேசறேன்”, என்றாள்.

முத்து விநாயகம், நம்ம வர்ஷாக்கு எப்படி இருப்பாங்க”, என.

டேய் திருடா, இந்த வேலையெல்லாம் பண்ணுறியா நீ”, அதான் வர்ஷா கிட்ட அவனை புகழ்ந்தியா, என்னடான்னு பார்த்தேன்”,

எனக்கே திடீர்ன்னு நேற்று, உங்களை சென்ட் ஆப் பண்ணும் போது தான் தோணிச்சு. எதுவும் யார்க்கிட்டையும் சொல்லாத நான் வந்ததுக்கு அப்புறம் பேசலாம். ஆனந்த்க்கு விருப்பமில்லை போலஇருந்தா இவ்வளவு நாள்ல அவங்களே பேசியிருப்பாங்க. நான் வேற என்னோட வெச்சு அவளை பேசவேண்டாம்ன்ற காரணத்துக்காக  ஆனந்த்க்காக வேற சொல்லி அவன் பார்க்க கூட வரலை. எனக்கு அது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ப்ரத்யு. அது நான் பண்ண ஒரு தப்பு. அப்படி நான் பண்ணியிருக்க கூடாதில்லையா”, என்றான் வருத்தமாக.

யார் யாருக்கு எது, எதோ, அது தான் நடக்கும். இது நம்ம கையில் இல்லை. நீங்க வாங்க பார்த்துக்கலாம்”, என்றவள், “எப்போ வருவீங்க”, என்றாள் உடனேயே.

சொல்லமாட்டேன், திடீர்ன்னு வருவேன்”, என்றான்.

அந்த திடீர் எப்போ வரும். “,

வரும் போது வரும்!”, என்று ரைமிங்காக சொன்னவனிடன், “போடா ரொம்ப தான் பண்ற , டாக்டர் கிட்ட குடுக்கறேன்”, என்றவள் முத்து வினாயகத்திடம் கொடுக்க, அவனிடம் இரண்டு வார்த்தை பேசியவனிடம், “சார் என் அப்பா கிட்ட பேசறீங்களா!”, என்று அவன் கொடுக்க அவருக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.

எல்லாவற்றையும் ஒரு அமைதியான புன்னகையோடு வர்ஷா பார்த்து கொண்டு இருந்தாள்.

சொன்னபடியே உஷாவை ஃப்ளைட் ஏற்றி, வர்ஷாவை விட முத்து வினாயகமே சென்றான்.

கோவையில் இறங்கும்போதே டிரைவர் முத்து காரோடு நின்றிருக்க, அவனிடம் நலம் விசாரித்து கொண்டே வீட்டை அடைந்தாள்.

சென்றவுடனே குழந்தைகளிடம் தான் ஓடினாள். அவர்களை சிறிது நேரம் கொஞ்சிய பிறகே வெளியே வந்தாள். விஸ்வநாதன் வீட்டில் தான் இருந்தார். அவர் லண்டனின் ஷேமலாபத்தை கேட்க, இவள் முழித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

அவள் தான் எங்கேயும் செல்ல வில்லையே. ஹாஸ்பிடலில் நேரம் சென்று விட்டதே. “என்னை ட்ரீட்மென்ட் க்கு கூட்டிட்டு போயிட்டாங்க”, என்றாள்.

எங்கேயும் போகலையா?”, என அவர் கேட்க, “இல்லை”, என்றே தலையசைத்தாள்.

சாம்பவி விஸ்வநாதனிடம் பேசுவது போல், “இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டே வந்திருக்கலாமே”, என கூற அவரிடம் பேசாமல், “நான் தூங்க போகட்டுமா மாமா”, என்றவாறே இடத்தை அகல, “சரியான திமிர். பதில் சொன்னா என்னவாம், இவளை வெச்சு யார் சமாளிக்கறது” ,என அவர் கூறஎன்கிட்ட கேட்டா அவ பதில் சொல்லுவாளா”, என்றபடியே விஸ்வநாதன் விஷயத்தை முடிக்க.

மறுபடியும் இவளுக்கு ஏதாவதுன்னா என்ன செய்யறது. அவனோடயே இருக்க வேண்டியது தானே”,

சாம்பவியை சமாதானபடுத்தும் விதமாக, “என் பையன் இல்லையா என்னோட கெஸ் சரின்னா, இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவான்”, என்று இவர் கூற.

இவருடைய கூற்றை பொய்யாக்கி மூன்று நாட்களிலேயே வந்தான்.

அவன் வந்த போது விடியற்காலை நான்கு மணி வீடே தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, இவன் பெல் அடித்த போது சமையல் அம்மாவே வந்து திறந்தார்.

என்னம்மா இந்த நேரத்துல முழிச்சிருகீங்க.”, என கேட்க என்னவோ தெரியலை தம்பி. இன்னைக்கு ஒரே அழுகை குழந்தைங்க. பால் கலந்து கொடுத்தேன். ரொம்ப அழுதா என்ன பண்றதுன்னு கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தேன். சத்தம் காணோம். அம்மாவும் பசங்களும் தூங்கிட்டாங்க போல”, என்றார்.

நீங்க தூங்குங்க, ஏதாவதுன்னா எழுப்பறேன்”, என்றான்.

ஃகாபி கலக்கட்டும்மா தம்பி”, என அவர் கேட்க. “ரெண்டா கலக்குங்க ஒரு வேளை ப்ரத்யு முழிச்சிடான்னா என்னோடதை எடுத்துப்பா. அப்புறம் உங்களுக்கு ரெண்டு வேலை”, என்று கூறி அவன் ரூமுக்குள் செல்ல, அங்கே அவன் பார்த்த காட்சி கட்டில் ஒரு ஓரமாக போய் இருந்தது. கீழே தான் மெத்தையை போட்டு படுத்திருந்தாள். கார்த்திக்கும் சுவாதியும் நீளவாக்கில் படுக்கவைத்து விட்டு இவள் அவர்கள் கால் சிறிது அசைந்தாலும் தன் மேல படும்படி சைடு ஆக படுத்திருந்தாள்.

அம்மாவும் குழந்தைகளும் தூங்கும் காட்சியே அவனுக்கு சொல்லொணா சந்தோஷத்தையும் மன நிறைவையும் கொடுத்தது. தூங்கி கொண்டிருந்த குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டு அந்த வேலையை அவர்கள் அன்னையிடம் காண்பிக்க, கண் விழித்த அவள், நினைவிலும் கனவிலும் வருடக்கணக்காக பார்த்த அவன் முகம் நனவில் வந்த போதும். கனவாகவே தோன்ற, “எப்போவும் உனக்கு என்னை தூக்கத்தில டிஸ்டர்ப் பண்றதே வேலை போ”, என்றபடி திரும்பி படுத்தாள்.

அவன் வந்ததை அவள் உணரவில்லை என்றுணர்ந்த கிரி நெற்றியில் பதித்த உதடுகளை அவளுடைய உதடுகளுக்கு இடம் மாற்ற சட்டென்று விழித்த அவள்நிஜமாஎன்பது போல் அவனை கிள்ள. “முத்தம் குடுத்தா தெரியாதா, கிள்ளுனாதான் தெரியுமா”, என்றான்.

வரேன்னு சொல்லவேயில்லை, நான் இப்போ தான் தூங்கினேன்”, என்றவள் அடுத்த கேள்வியாக, “உடனே திரும்ப போகனுமா”, என அவள் கேட்க ஏக்கத்தோடு சீக்கிரமாக திரும்ப போய்விடுவானோ என ஒலித்த அந்த குரல் அவனை ஏதோ செய்ய.

அப்படியே ஸ்தம்பித்தான் கிரி, அவளையே பார்த்தவன், அவளை அருகில் இழுக்க அவன் சொல்லபோகும் பதிலுக்காக அவள் காத்திருப்பது புரிய, “ஆரம்பிச்ச வேலைய முதல்ல முடிச்சிடலாம்”, என்றவன் அவள் இதழில் இதழ் பதித்து நீண்ட நேரத்திற்கு பிறகே விடுவித்தான். அந்த க்ஷண நேர மயக்கத்தின்  தாக்கத்தில் இருந்தவள் அவன் மேல் சாய்ந்து நின்றிருக்க,

“,அட பரவாயில்லை, தேறிட்ட மூச்சு முட்டளை போல”, என கூறி அவளிடம் கையில் ஒரு அடியை பரிசாக பெற, “உஷாம்மா”, என்ற குரல் மெதுவாக கேட்க பதறி விலகினாள்.

சிரித்தபடியே கிரி வெளியே சென்று ஃகாபியை வாங்கி வந்தான். கூடவே பிரட் டோஸ்ட் ஆம்லெட் இருந்தது. அவளுக்கு தனியாக வேறு ப்ளேட்டில் பிரட் மட்டும் இருந்தது, “நீ ஏன் நான் வெஜ் சாப்பிடறதில்லை, உனக்கு ரொம்ப இஷ்டமாச்சே”, என அவன் கேட்க, “நான் தான் முதலில் கேட்டேன். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க”, என்றவளிடம்,  

ஆறிடும் முதல்ல காப்பிய குடி, எனக்கு பசிக்குது”, என மளமளவென்று எல்லாவற்றையும் காலி செய்தான். அவள் வெறுமனே காபியை மட்டுமே அருந்தினாள். “காலைல நாலு மணி காபியே அதிகம். எனக்கு பசியில்லை. நீங்க சாப்பிடுங்க”, என்றவள் அவன் சாப்பிடும் வரை காத்திருந்து, “இப்போ சொல்லுங்க உடனே வந்துடீங்க திரும்ப போகனுமா”. 

நீ ஏன் மூணு நாளா ஆபீஸ் போகலை”, என, “நான் என்ன கேக்கறேன் நீங்க என்ன கேக்கறீங்க”, என கோபப்பட.

நீ ஆபீஸ் போனா தெரிஞ்சிருக்கும்”, என்றான்.

ஒழுங்கா பதில் சொல்வீங்களா, இல்லையா”, என எரிச்சல் பட.

அவ்வளவு வேகமா என்னை விட்டுட்டு வந்துட்டு, இப்போ கோபப்பட்டா”.

சரி நீ ஒண்ணும் சொல்லாத போ”, என்றவள் முன்னே இருந்த மாதிரியே குழந்தைகள் அருகில் போய் படுத்து கொண்டாள்.

ஒன்றும் சொல்லாமல் டிரெஸ் சேஞ் செய்தவன், அவள் அருகில் வந்து அவளை அணைத்தவாறு படுத்து உறங்கியே விட்டான். அவன் செய்கை இப்போதைக்கு அவன் திரும்பி செல்ல மாட்டான் என்ற நிம்மதியை தர அவளுமே உறங்கி விட்டாள்.

காலை எட்டு மணியாகியும் ரூம் திறக்கப்படாமல் இருக்க, சாம்பவி குழந்தைகள் சத்தமே காணோமே, இவளும் எழுந்திருக்கவில்லையே, கதைவை தட்டலாமா வேண்டாமா என்று யோசித்து, கதவை தாள் போட மாட்டாளே குழந்தைகள் அழுதால் யாரும் வருவதற்க்கு வசதியாக என்று குழம்பியவர்எதற்கும் சமையல் அம்மாவை கேட்போம் என்று கேட்க. “நாலு மணிக்கு தம்பி வந்தாங்கம்மா, குழந்தைங்களும் அப்போ தான் தூங்குனாங்க, உஷாம்மாவும் அப்போ தான் தூங்குனாங்க. அதான் முழிக்கலை போல”, என சொல்ல. விஸ்வநாதன், “அதுக்குள்ள வந்துட்டானா. நான் நினைச்சதவிட ரொம்ப பாஸ்ட் தான்”, என்றார்

  கிரி வந்துவிட்டான் என்ற நிம்மதியிலேயே உஷா லண்டனில் விட்ட தூக்கத்தை இந்தியாவில் கண்டினியு செய்ய, கார்த்திக் எழுந்து அழ கிரி தான் விழித்தான். அம்மாவும் மகளும் அவனுடைய அழுகை சத்தத்திற்கு கூட விழிக்கவில்லை.

கிரி தான் குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்படி ஆயிற்று.

வந்தவன் சாம்பவியிடத்தில் குழந்தையை கொடுக்க அவரும் ஒரு வார்த்தை பேசவில்லை அவனும் ஒரு வார்த்தை பேசவில்லை.

விஸ்வநாதன், “எப்போடா வந்த வரேன்னு சொல்லவேயில்லை”, என ஆரம்பித்து லண்டனில் உள்ள நிலைமையை பேச. நேரம் ஓடியது. சுவாதியும் எழுந்து கொண்டு அழ, அப்போதும் கிரி தான் உள்ளே சென்று தூக்கிக்கொண்டு வந்தான்.

விஸ்வநாதனே, “என்ன கிரி அன்னு இப்படி தூங்கறா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே குழந்தைங்க சத்தம் கேட்டாளே முழிச்சுப்பாளே”, என.

இல்லைப்பா நல்லா தான் இருக்கிறா, ஏன் பா அவ ஆபீஸ் வரலை”,

தெரியலை கிரி வந்த ஃபர்ஸ்ட் டே டயர்ட்ன்னு நினைச்சேன். ஆனா நேத்து நான் இனிமே வரமாட்டேன்னு சொல்லிட்டா. நீயே பேசிக்கோ. எனக்கு டைம் ஆச்சு”, என்று கிளம்ப உஷா எழும்போது மணி பத்துக்கு மேல் ஆக. அவள் எழுந்தவுடனே கிளம்பு கிளம்பு ஆபீஸ் போகணும்”, என்றான்.

இல்லை நான் வரலை”, என்றாள் அவள் குரலில் ஒலித்த பிடிவாதம் அவள் கட்டாயம் வரமாட்டாள் என்றுனர்த்த, “ஏன்”, என்றான்.

ஏன் நான் இங்கேயே இருந்தா என்ன? எனக்கு குழந்தைகளோட இருக்கணும்”.

உன் குழந்தைங்க தானே. இங்கே தான் இருப்பாங்க. சாயந்திரம் பார்க்கலாம் வா”, என.

வரமாட்டேன்”, என்ற அவள் பிடிவாதமே வென்றது. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

நேரமான காரணத்தினால் அவன் கிளம்ப, மாலை அவன் வரும்போது அவனுடன் சுபாவும் வந்தார்.

 “ நீங்க ஆபீஸ் வருவீங்கன்னு பார்த்தேன். நீங்க வரலை மேம். நாளைக்கு என் ஃப்ளைட். அதான் சொல்லிட்டு கிளம்பலாம்னு வந்தேன்”, என்றவரை புரியாமல் பார்க்க.

கிரி, “அவளுக்கு தெரியாது”, என்றவன். “நம்ம லண்டன் பாக்டரி இவங்க தான் சார்ஜ் எடுக்க போறாங்க”, என.

அப்போ நீங்க போகலையா”, என்றாள் உஷா குதூகலமான குரலில். அப்போது அந்த குரலில் ஒலித்த சந்தோஷம் எதிரில் இருந்த யாரையுமே தொற்றும்.

சுபாவின் கையை பற்றி அவள், “தாங்க்ஸ்”, சொல்ல. “நான் தான் மேம் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லனும். என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைச்சதுக்கு. அப்படியே என்னை என் பாமிலி யோட அனுப்பறதுக்கு”, என.

இப்போது அவள் கிறியை பார்க்க, “அவங்க லண்டன்ல தான் இருந்தாங்க. அப்படிதான் எனக்கு அவங்களை தெரியும். உனக்காக இங்க கூட்டிட்டு வந்தேன். இப்போ நான் இங்கே வந்துட்டதால அவங்க போறாங்க”, என அவள் முகமே சந்தோஷத்தில் மலர்ந்து விட்டது.

அவர் விடை பெற்று கிளம்ப, கணேஷ், சித்தி, கலைவாணி, என வர நேரம் அவர்களோடே கடந்தது.

கணேஷிடம் அவன் படிப்பை பற்றி கிரி விசாரித்து கொண்டிருக்க, எல்லாவற்றிக்கும் இது வேண்டாம், அது வேண்டாம், என தட்டி கொண்டே போனாள் உஷா,

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கிரி, “உனக்கு இதை பத்தி என்ன தெரியும். அவனை கன்ஃப்யுஸ் பண்ணாத, அவன் முடிவு பண்ணட்டும், நம்ம சஜ்ஜெச்ஷன் மட்டும் தான் சொல்லனும்”, என அவளிடம் கூறினான். அதை அதட்டலாகவோ இல்லை அதிகாரமாகவோ ஏன் சத்தமாக எல்லாரும் கவனிக்கும் படி கூட சொல்லவில்லை.  

ஆனால் அந்த சாதாரணமாக சொல்லப்படும் வார்த்தை, அவளுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ண மறந்து போனான் என்றே சொல்ல வேண்டும். அவளுள் ஓடிக்கொண்டிருந்த சில எண்ணங்கள் வலு பெற்று அவளை சில முடிவுகள் எடுக்க வைத்தது.  

அவர்கள் சென்றவுடன் இவன் தந்தையோடு பேச அமர, அவளை கவனிக்கவில்லை. மாற்றி மாற்றி குழந்தைகளை கவனிக்கவே அவளுக்கு சரியாக இருந்தது. சினுங்கிகொண்டிருந்த கார்த்திக்கை தொட்டில்லில் போட்டு ஆட்டிக்கொண்டே ஸ்வாதியை  கட்டில் மேல் போட்டு ஆட விட, அவள் கை கால்களை ஆட்டிஃகொண்டிருந்தாள். ஸ்வாதியை விட கார்த்திக் எப்பொழுதும் நை நை என்று அம்மாவை தேடுவான். அதனால் முதலில் அவனை தூங்க வைத்து விட்டே ஸ்வாதியிடம் வருவாள்.

கிரி படுக்க உள்ளே வந்தவன், ஏதோ சொல்ல வரும் போதுஷ்என்று அடக்கியவள், சைகையில்லேயே கார்த்திக் தூங்க வேண்டும் ஸ்வாதியை பக்கத்தில் படுத்து தட்டி கொடுங்கள் என.

ஸ்வாதி அவளுடைய தந்தை கரங்கள் தன்மேல் பட்டவுடன் இன்னும் உற்சாகமாக கால் கைகளை அசைக்க துவங்க.

கார்த்திக் தூங்கவே கால் மணி நேரத்திற்கு மேல் ஆக, அது வரை அவனுடைய தாயும் தந்தையும் சைகை பாஷையில்லேயே உரையாடினர்.

அவன் தூங்கி உஷா வந்து ஸ்வாதியின் அருகில் படுத்து தட்டி கொடுத்த பிறகே அவள் உறங்க ஆரம்பித்தாள்.

களைப்பில் உஷாவும் உறங்க ஆரம்பிக்க, ஒரு நிமிடம் கூட இருக்காது, கார்த்திக் மறுபடியும் சிணுங்க முழித்து கொண்டிருந்த கிரி எழும்முன்னரே அவள் எழுந்து அவனை மறுபடியும் ஆட்ட. கிரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு அழகாக பார்த்துக்கொள்கிறாள்.

கார்த்திக் தூங்கிய பிறகு, நேற்று கிரி பார்த்தது போல, அவனை ஸ்வாதியின் பக்கத்தில் போட்டு இவள் குறுக்காக படுப்பதற்காக கிரியை எழுந்து மேலே படுக்குமாறு சைகை செய்ய, “நானும் இங்கே தான் படுப்பேன்”, என்றான்.

இடம் பத்தாது. அதுவுமில்லாம நீங்க கையை காலை ஆட்டி இவங்களை இடிச்சிடுவீங்க. மேல போய் படுங்க, என. “நீ வா”, என்று அடம் பிடித்தான்.

Advertisement