Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

விஸ்வநாதன் குழப்பத்துடன் உள்ளே சென்று சுபாவை அழைத்து விவரம் கேட்க, “வேலைல ஏதாவது டென்ஷனா உஷா சீக்கிரமா கிளம்பிட்டா”, என, “இல்லையேங்க சார்”, என்றார் அவர்.

“பின்ன ஏன் சீக்கிரம் கிளம்பிட்டா? பார்த்த உடம்பு சரியில்லாத மாதிரி தோணுது”, என்றார். சுபா அவரிடம் தயக்கத்துடன், “கிரி சார் டெய்லி பன்னிரெண்டு மணிக்கு போன்ல பேசுவாங்க, இன்னைக்கு அவங்களும் பேசலை, இவங்க பேசுனப்பவும் போன் அட்டென்ட் செய்யலைன்னு நினைக்கிறேன். ஒரு வேலை அதனால அப்செட்டோ?”, என்று அவர் தன்னுடைய மனதில் தோன்றியதை கூற. 

அவரிடம் வேறு இரண்டொரு வார்த்தை பேசி அனுப்பிவிட்டு, அவர் சென்றவுடனேயே விஸ்வநாதன் கிரிக்கு அழைக்க, அவருக்குமே அது சுவிட்ச் ஆஃப் என்றது. உடனே அங்கே ஆபீஸ் பிரைவேட் நம்பர்க்கு அழைக்க. அவனுடைய கேபினில் அது எடுக்கப்படவில்லை. பின்பு  ஆபீஸ் போன் செக்ஸனுக்கு தொடர்பு கொள்ள விஸ்வநாதன் என்பதால் விவரம் கூறினார்கள். உள்ளே இண்டஸ்ட்ரியில் தொழிலார்கள் இருபிரிவினரிடையே தகராறு அதில் நடந்த அடிதடியில் இரண்டொருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அதனால் இரு பிரிவினரிடையே சமரச பேச்சுவார்த்தையில் எம் டி ஈடுபட்டிருக்கிறார் என்றார்கள்.

“HOW THE EXISTING SITUATION IS”

“ITS BIT SERIOUS IT WILL TAKE TIME TO SETTLE”

“IS THE WORK HAS BEEN STOPPED?”

“NO SIR IT’S GOING ON WITH ANOTHER SET OF PEOPLE WHO ARE UNINVOLVED”

“ THE NUMBER?”

“IT’S NEARABOUT HALF OF THE PEOPLE ONLY”

“IS THERE ANYWAY SO THAT I CAN TALK TO MR.SURYA GIRI VAASAN ?”

“NO SIR UNLESS UNTILL HE CONTACTS IT IS NOT POSSIBLE “

“IS HE SAFE”

“YES SIR, HE IS PERFECTLY SAFE. OUR SECURITY PEOPLE ARE AROUND HIM AS WELL AS POLICE MEN HAS ALSO ARRIVED. NOW THE WHOLE FACTORY IS UNDER FULL SECURITY AND THE THINGSARE UNDER CONTROL”

 இப்படி சொல்கின்றனர் என்றால் நிலைமையின் தீவிரம் புரிந்தது.

முன்பே கிரி சொல்லியிருந்தான், அங்கே சிலருக்கு அட்மினிஸ்ட்ரேஷன் மாறியது பிடிக்கவில்லை. அதுவும் வேற்று நாட்டவர் அதனை வாங்குவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் கிரி அவர்களோடு இரண்டு வருடமாக இருப்பதால் சற்று அமைதியாக இருகின்றனர். அவர்கள் எல்லாரும் பெர்மனன்ட் எம்ப்லாயி.    அவர்களை சற்று  ஜாக்கிரதையாக  கையாள வேண்டும் என்று.

ஏதாவது அவர்கள் பிரச்சினை செய்து விட்டார்களா. கிரி சமாளித்து கொள்வான் என்று தெரியும். இருந்தாலும் தந்தையல்லவா சற்று பயம் கொடுத்தது.

அவருக்குமே வேலை ஓடவில்லை. அவருமே சற்று நேரம் இருந்து விட்டு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தவர்களை மட்டும் பார்த்து விட்டு கிளம்பி விட்டார்.

அங்கே வீட்டில் மதிய நேரத்தில் உஷாவை பார்த்த சாம்பவியுமே ஆச்சர்யபட்டார். எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை உஷா. அவள் செல்லும் போது குழந்தைகள் உறங்கி கொண்டிருக்க இவளுமே உறங்க முற்பட்டாள். கிரி முழுவதுமாக அவள் சிந்தனையை தழுவி இருந்ததால் உறக்கம் அவளை தழுவவில்லை.

வீட்டிற்கு விஸ்வநாதனுமே சீக்கிரம் வந்துவிட சாம்பவி என்ன இவரும் வந்துவிட்டார் என்று அவரை பார்க்க, “அவர் சும்மா லேசா தலை வலிக்கற மாதிரி இருந்தது வந்துட்டேன்”, என்றார்.

தன்னுடை கணவரை நன்கு அறிந்த சாம்பவி அவர் எதையோ மறைக்கிறார் என்றுணர்ந்து,“என்ன விஷயம் ரெண்டு பேரும் வந்துடீங்க?”, என…………

மிகுந்த கவலையில் இருந்த விஸ்வநாதனும், “கிரியோட பாக்டரியில் கலவரம். அவனோட போன்ல கூட பேசமுடியல. ரெண்டு மூணு பேர் கவலைக்கிடம்னு  சொல்றாங்க. கிரி பத்திரமா இருக்கானான்னு  போன்ல தான் கேட்டேன்”, என்ற அவர் பேசிகொண்டிருக்கும் போதே தண்ணீர் தாகமாக இருப்பது போல் உஷா உணர்ந்ததால் வெளியே ஹாலிற்கு வந்தவள், “கவலைக்கிடம்னு சொல்றாங்க கிரி பத்திரமாக இருக்கானான்னு” என்றுவரை அவர் சொன்னது மட்டும் தான் அவள் காதில் விழுந்தது.

அவளுக்கு அதற்கு பிறகு அவர் கூறியது காதில் விழவேயில்லை. அவர்களை பார்த்து கொண்டே தான் நிற்கிறாள். அதிகமாக வேர்கிறதோ. “மாமா!”, என்று விஸ்வநாதனை கூப்பிட முயற்சித்தாலும் முடியவில்லை. அவளுக்கு தெரிகிறது எதையாவது பிடித்து கொண்டு நில் இல்லையென்றால் விழுந்து விடுவாய் என்று மூளை ஆணையிடுகிறது. பிடிக்க முயற்சித்து முடியாமல். தடால் என்ற சத்தம் கேட்டு விஸ்வநாதனும் சாம்பவியும் திரும்பி பார்க்க அவள் கீழே விழுந்திருந்தாள்.

பதறி இருவரும் வந்து பார்க்க மயக்கத்திற்கு சென்றிருந்தாள். விஸ்வநாதன் டாக்டருக்கு போன் செய்ய போக. தண்ணீர் தெளித்தும் சிறிதும் அசைவில்லாததால் சாம்பவி அவருடைய அண்ணியை அழைத்து கேட்க. அவர் ஹாஸ்பிடல் செல்வது தான் பரவாயில்லை என. “ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்.”, என்றார் டென்ஷனாக.

ஏற்கனவே இந்த மாதிரி அவளுக்கு ஒரு முறை நடந்துள்ளதால், முத்துவை கூப்பிட்டு அவரும் முத்துவும்மாக சேர்ந்து அவளை தூக்கி அதே ஹாஸ்பிடலுக்கு உடனே விரைந்தனர். குழந்தைகளை தனியாக விடமுடியாததால் சாம்பவி வீட்டிலேயே தங்க. அவருக்கு கிரியை நினைத்து ஒரு பயமுமில்லை அவருக்கு தெரியும் அவன் சமாளித்து விடுவான் என்று.

ஆனால் உஷாவை நினைத்து பயமாக இருந்தது. அவளிடம் சிறிதும் அசைவேயில்லை. ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விட்டால் எல்லோரும் தன்னை தான் பழி சொல்வார்கள் என்று அவருக்கு கலக்கமாக இருந்தது.

விஸ்வநாதன் போனில் சொல்லியிருந்ததால் அங்கே வெளியே ஸ்ட்றச்சர்  ரெடியாக இருந்தது. தலைமை மருத்துவர் அவளுக்கு முன்பே சிகிச்சை அளித்துள்ளதால் அவரே வந்தார். அவளுக்கு எலக்ட்ரோலய்ட்ஸ் லாஸ் தான் முன்பு ஸ்டேஜ் ஆப் ஷாக்கிற்கு கொண்டு போனதால் முதலில் அதை மனதில் வைத்து சிகிச்சை தொடங்கினர்.

விஸ்வநாதன்  ஐ. ஸி. யு. வாசலில் டென்ஷனாக அமர்ந்திருந்தார். அந்த நேரம் பார்த்து ஆனந்த் ரௌண்ட்ஸ் வர இவரை பார்த்தவன் நின்றான்.

அவரை நோக்கி வந்து விவரம் கேட்க. உஷா மயக்கமாகி விட்டாள், அவளை ஐ. ஸி. யு. வில் வைத்திருப்பதாக கூறினார். அவளுக்கு கிரியோடு திருமணம் ஆனது அவனுக்கு தெரியும். அது தான் விருப்பம் என்றால் யாராவது ஒரு சின்ன கோடி காட்டியிருந்தால் கூட விலகியிருப்பானே, வீணாக தந்தையை கூட்டி சென்று உறவுகள் முன்னால் ஒரு தர்மசங்கடமான நிலைமை உருவாகியிருக்காது.

அவனுக்கு அந்த வருத்தம் இருந்தாலும் உஷாவிற்க்காக உள்ளே சென்றான். அங்கே சீப் டாக்டர் இருப்பதை பார்த்து விவரம் கேட்க, “போனதடவை செஞ்ச சேம் மானேஜ்மென்ட் தான் செஞ்சிருக்கோம். ஷி இஸ் ஸ்டேப்ள் நொவ். ஆனா சேம் ப்ராப்ளம் கண் விழிக்கலை. மென்டலா நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும்னு நினைக்கிறேன். மூணு மணி நேரத்திற்கும் மேலே இப்படியே இருக்கா. ஸ்ட்ரேஞ் கேஸ். போனதடவையே இன்னும் அப்செர்வ் பண்ணியிருக்கணுமோ.”, என்றார் டாக்டர்.  

ஆனந்த்திற்கு வருத்தமாக இருந்தது. வெளியே வந்து அவளுடைய கணவனை பற்றி கேட்க அவன் அவளோடு இல்லாதது தெரிந்தது.  விஸ்வநாதனிடம் எப்படி மயக்கமானாள் என்ற விவரம் கேட்க, “அவள் மதியமே மிகவும் சோர்வாக தெரிந்தாள், உடம்பு சரியில்லையா அல்லது தாங்கள் பேசிகொண்டிருந்ததை கேட்டிருப்பாளா, தங்களுக்கு தெரியவில்லை”, என்றார்.

கிரிக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்ற நினைவே இவளை இப்படி ஆக்கிவிட்டதோ, அவனுக்கு உஷா கிரியின் மேல் வைத்திருந்த காதல் பிரமிக்க வைத்தது. இவன் கார்டியாக் சர்ஜென் என்பதால் இவனுக்கு அதிகம் தெரியவில்லை. அவனுடைய மற்ற பிரிவை சேர்ந்த மருத்துவ நண்பர்களுக்கு விவரம் கூறி என்ன செய்யலாம் என்று கேட்க துவங்கினான். ஆளுக்கொரு முறையை கூறினர். ஆனால் பெரும்பாலானவர்கள் அவளுடைய து ஒரு மாதிரியான ஷாக், இட் மே பி எ ஸ்டேட் ஆப் டேலிறியம், ஆர் ட்ரௌஸி நெஸ் என்றனர். அதாவது அவளுடைய கான்ஷியஸ்நெஸ்  நார்மலுக்கு மேலேயாகவும் இருக்கலாம் கீழேயாகவும் இருக்கலாம். என்ன வென்று தெரியா விட்டால் மிக சில சமயம் கோமாவிற்கு கூட கொண்டு சென்று விடும் என்றனர்

சில சமயம் அவளுடைய எண்ணங்கள் தடை பட்டிருக்கலாம். அவள் மயக்காமான காரணம் நடக்கவேயில்லை என்று அவள் உணர வேண்டும் அவள் மூளையில் பதிய வேண்டும் என. ஆளுக்கொன்றாக சொல்ல 

ஆனந்த் குழப்பத்தின் உச்சியில் இருந்தான். ஆனால் அப்படியே சீஃப் டாக்டர் பார்க்கிறார் என்று விட்டு செல்ல மனமில்லை. மறுபடியும் உள்ளே சென்று அவளை பார்க்கும் பொழுது மூடிய கண்களுக்குள் அவள் கண்விழி அசைய ஒரு முயற்சி செய்யலாம் என்று அவள் அருகில் அமர்ந்தான்.  பல்ஸ் , ஹார்ட் பீட் , பிரஷர் எல்லாமே நார்மலாக இருந்தது. சோடியம் லெவல் குறைந்து இந்த மாதிரி ஆகியிருக்குமோ. எலக்ட்ரோலைட் இம்பாலன்ஸ் சப்ளிமென்ட் செய்திருந்தனர். கண்விழி அசைந்தது. பக்கத்தில் இருந்த நர்சை அழைத்தான். அவரை அருகினில் வைத்து கொண்டு அவனுடைய மற்றொரு டாக்டர் நண்பன் சொல்லிக்கொடுத்த முறைப்படி.  “ஹலோ உஷா எப்படி இருக்கீங்க”, என்று சத்தமாக அழைத்தான். “கண் முழிங்க” என அசைவே இல்லை. “சிஸ்டர் இவங்களோட கணவர் போன் செய்தாரே. இவங்க கிட்ட குடுக்கலையா.”, என்றான் சத்தமாக. “என்ன ரெண்டு மூணு தரம் கூப்பிட்டரா. இவங்க தூங்கறாங்களா எழுப்புங்க.”, என்றான் சத்தமாக.

இதே மாதிரி அரை மணிக்கொருதரம் இரண்டு மூன்று முறை  இவன் பேச  மெதுவாக கண்திறந்து பார்க்க முயற்சித்தாள். உடனே சீஃப் டாக்டர் வர அவருமே குட் வொர்க் என அவரை புகழ்ந்தார்.  உடனே விஸ்வநாதனை அழைக்க அவர் அவள் கண்விழிக்கு போது உடன் இருக்குமாரு செய்தான். அவள் விழி திறந்தவுடனே, “கிரி நல்லா இருக்கான்மா, போன் செஞ்சான். நான் நீ தூங்கறேன்னு சொல்லிட்டேன்”, என்றார். இதையெல்லாம் அவர்களுக்கு செய்ய நான்கைந்து மணிநேரம் ஓடிவிட்டது.

மறுபடியும் கண்களை மூட. அவர் ஆனந்தை பார்க்க. “அவங்க சரியாயிடுவாங்கன்னு நினைக்கறேன். மிஸ்டர் கிரிவாசன் வந்தா பரவாயில்லை. உடனே முடியாதுன்னா அட்லீஸ்ட் போன்ல பேச வைங்க.”, என்றார்.

அவனுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து விட்டு முயற்சி செய்வதாக கூறினார். மற்ற பேஷன்ட்ஸ் பார்க்க வேண்டி இருந்ததால் சீஃப் டாக்டோரோடு சேர்ந்து அவள் சிகிச்சைக்கு ஆலோசனை செய்து விட்டு பிறகு வருவதாக கூறி கிளம்பினான்.  சற்று முன்னர் தான் உஷாவின் சித்திக்கு தகவல் கொடுத்திருக்க அவர் வந்தவுடனேயே அவரிடம் விவரம் கூறி விட்டு விட்டு கிரியை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

சித்தி இருக்கும் அத்தனை கடவுள்களுக்கும், “என் பொண்ண நல்லா ஆக்கிடுப்பா, கடவுளே அவ புருஷனோட சேர்த்திருப்பா.”, என வேண்டுதல் வைக்க துவங்கினார்.

இது எதையும் அறியாதவனாக கிரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தான். அடிபட்டவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர் என்று செய்தி வருவதற்காக காத்திருந்தான். அவர்கள் பிழைத்துவிட்டால் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவான். ஆனால் அங்கே அவர்கள் உயிருக்கு ஏதாவது பாதிப்பு என்றால் விஷயம் சிக்கல்லாகிவிடும். அவன் அதை பார்த்து கொண்டிருக்க. இங்கே அவன் வந்தால் பரவாயில்லை என எல்லாரும் பார்த்துகொண்டிருக்க. அவன் வரை உஷாவின் உடல்நிலை எட்டவேயில்லை.  தெரிந்தா. தெரியாமலா. விதியா. சதியா. ஏதோ ஒன்று உஷா கிரியை தேடும் நேரங்களில் எல்லாம் அவன் அவள் அருகில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் அவர்கள் நெருங்க முயற்சித்தாலும்.?  விஸ்வநாதன் எவ்வளவு முயன்றும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

சாம்பவியை விஸ்வநாதன் தொடர்பு கொள்ள, “கண்விழித்து விட்டாள்”, என்ற உடனே பெரு மூச்சு விட்ட அவர் விஸ்வநாதனிடம், “அவ பொசிஷன் என்னன்னு தெரிஞ்சுட்டு வாங்க, அவ நல்லாயிருக்கான்னு சொன்னா, கொஞ்சம் உடம்பு சரியாய் அவள் எப்போது பயணம் செய்யலாம் என்று கேட்டுட்டு வாங்க. மொத்தல்ல அவளை கிரிக்கிட்ட அனுப்பிடலாம். ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா யார் பொருப்பாகறது அப்புறம் நான் தான் காரணம்னு எல்லாரும் என்னை கடிச்சு மென்னு துப்பிடுவாங்க. முக்கியாமா உங்க மாப்பிள்ளை சொல்லவே வேணாம். ஏற்கனவே என்னை வில்லியை பார்க்கற சமீப காலமா பார்க்கிறாங்க.”, என்றார் டென்ஷனாக,

“இப்போவே அதெல்லாம் கேட்க முடியாதும்மா. அவ டிஸ்சார்ஜ் ஆகிற மாதிரி உடம்பு தேறட்டும் கேட்கலாம். ஆனந்த் தான் அவளை அட்டென்ட் செய்யறான். அவன் கிட்ட கேட்கலாம். அவன் இல்லைனா இன்னைக்கு இன்னும் கஷ்டமாயிருக்கும் “, என்றார். “ஆனா அவ குழந்தைகளை விட்டுட்டு போக ஒத்துக்குவாளா தெரியலையே”, என்றார் உடனே கவலையாக.

“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. கிரிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சொன்னா கிளம்பிடுவா”, என்றார் சாம்பவி. அவருக்குமே இது நல்ல யோசனையாக பட்டது. இப்படி அடிகடி நடந்து பெரியதாக ஏதாவது தொந்தரவு வந்து விட்டால் தானும் சாம்பவியும் மட்டுமே பொருப்பாவோம் என அவருமே சற்று பயந்து தான் இருந்தார். இந்த யோசனை தோன்றிய பிறகு அதற்கு முழு மூச்சாக ஏற்பாடுகளை செய்ய துவங்கினார்.  

. ஒரு வழியாக அவள் உடல் நிலையை தேற்றி. கிரிக்கு  உடம்பு சரியில்லை என்று பொய்யாக ஒரு காரணத்தை கூறித்தான் சிரமப்பட்டு அவளை எல்லோருமாக சேர்ந்து கிளப்பிவிட்டனர். அவள் அதனை நம்பவில்லை. அவள் சாமான்யத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. கணேஷ் பேசினால், “சின்ன பையன் நீ உனக்கு ஒண்ணும் தெரியாது”, என்றாள். சித்தி பேசினாள், “உங்களுக்கு விவரம் பத்தாது சித்தி”, என்றாள். எப்படியோ அவளை சமாளித்து லண்டன் கிளம்ப வைப்பதற்குள் எல்லோரையும் ஒரு வழியாக்கினாள். இதற்கு நடுவில் கிரி போன் செய்த போது இரண்டொரு அவசியமான வார்த்தை மட்டுமே பேசி வைத்துவிடுவாள். அவனையும் பேச அனுமதிக்கவில்லை.  

பிறகு அவள் பிளைட் ஏறும் சமயத்தில் தான் அவனுக்கு ஒன்றுமில்லை பாக்டரி பிரச்சனையால் அவன் வர முடியவில்லை என்று கூறினர். இதற்க்கெல்லாம் ஆனந்த் மிகவும் உறுதுணையாக இருந்தான். எல்லாரும் அவளிடம் பேச பயந்த போது ஆனந்த்தான் நயமாக பேசி அவளை ஒப்புக்கொள்ள செய்தான்.  உஷாவிற்க்கு எரிச்சலாக இருந்தது என்ன நடந்து விட்டது என்று இப்படி ஆளாளுக்கு தன்னை அவனிடம் துரத்துகிறார்கள் என்று. வேண்டுமென்றால் அவன் வரமாட்டானா?. இவர்களெல்லாம் நேரில் செய்த தொந்தரவு போதாது என்று நந்தினியும் அருணும் வேறு தொலைபேசி மூலமாக தொல்லை செய்தனர். எல்லோருடைய இம்சையையும் பொறுக்க முடியாமல் கிளம்பினாள். 

பிளைட்டில் அறிவிப்பை தொடர்ந்து ஆழ மூச்செடுத்து மெதுவாக இறங்கினாள் அன்னலட்சுமி பிரத்யுஷா. தூரத்தில் அவள் வரும்போதே கிரி அவளை பார்த்துவிட்டான். அவளையே பார்க்க இத்தனை வருடம் கழித்து அவளை பார்த்த பிறகு ஃபர்ஸ்ட் டைம் அவளை வெஸ்டர்ன் அவுட் ஃபிட்டில் பார்க்கிறான். சாரியில் பார்ப்பதை விட இன்னும் சிறிய பெண்ணாக தோற்றமளித்தாள். அழகாக என்பதை விட சார்மிங்காக ஸ்டைலிஷாக இருந்தாள். டைட் ஜீன்ஸ் டி ஷர்ட் மேலே குட்டியாக ஏதோ கோட் போல அணிந்திருந்தாள். புது இடம் என்பதால் அவள் கண்கள் தன்னை தேடும் என எதிர்பார்க்க. அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. அமைதியாக நடந்து வந்தாள். அவளுடைய கண்களில் தேடல் இல்லை அலட்சியம் தான் தெரிந்தது. அப்போதே கிரிக்கு தெரிந்து விட்டது அவளை சமாதானப்படுத்த ரொம்பவே சிரமப்படவேண்டியிருக்கும் என்று.

அவளுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இந்திய இளைஞனிடம் சற்று முன்னே நடையை எட்டி போட்டு ஏதோ கேட்க அவன் ஆர்வமாக தலையாட்டுவது தெரிந்தது. அவனோடு சிரித்து பேசும்போது கிரிக்கு அவளுடைய தோற்றம் முதன்முறையாக மனதில் பதிந்தது. மிகவும் அழகாக தோற்றமளித்தாள். 

இவள் என்ன செய்கிறாள் என்று ரசித்து பார்க்க துவங்கினான். தான் இருந்த இடத்திலேயே நின்று விட்டான். அவனிடம் லக்கேஜிற்காக விசாரித்திருப்பாள்  போல அந்த இளைஞன் உற்சாகமாக அவளிடம் வளவளத்தபடியே அவளோடு சென்று அவள் பொருட்களை எடுக்க உதவினான்.

பிறகு அவன் ஏதோ கேட்க இவள் மறுத்து தலையசைப்பது புரிந்தது. பின்பு அவனிடம் கைகுலுக்கி இவள் விடை கொடுப்பது தெரிந்தது. அவன் ஆனாலும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தான். இவள் அங்கேயே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்க்க தொடங்கினாள். கண்கள் சிறிதும் கிரியை தேடவில்லை.

வேறு வழியில்லாமல் கிரி போய் அவளுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர திரும்பி பார்த்து மெலியதாய் ஒரு புன்னகை மட்டுமே புரிந்தாள். பக்கத்தில் பார்க்கு பொழுது ஹாஸ்பிடலில் இருந்து வந்த சோர்வு நன்றாகவே தெரிந்தது. பார்க்கும்போது எமோஷனல் ஆவாள் அல்லது திட்டுவாள் அல்லது சந்தோஷப்படுவாள் என்று இவன் பலவாறான கற்பனையில் இருக்க.

இது எதுவுமே இல்லாமல் தெரிந்தவரை பார்ப்பது மட்டுமே போன்ற ஒரு எக்ஸ்பிரஸனை எதிர்பார்க்கவில்லை. இவள் என்ன மூடில் இருக்கிறாள் தெரியவில்லையே.

ஆனால் அவனுக்கு புரியவில்லை அவளை அணுஅணுவாக அவன் ரசித்து கொண்டிருந்தாளும் அவளும் அவனிடம் அப்படி ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்க கூடும் என்று. அவன் அமர்ந்த உடனே நான்கைந்து பேர் சுற்றி நிற்க. இவள் சற்று கலவரமாக அவன் கையை பிடிக்க, “முன்னாடியே இவங்களை வரசொல்லியிருக்கலாமோ.”, என்று கூறியவாறே, “என் கூட தான் நின்னுட்டு இருந்தாங்க, என் செக்யுரிடி.”, என்றான்.

“ஒ! அவ்ளோ பெரிய தில்லாலங்கிடியா நீ.”, என அவள் குரலில் ஆச்சர்யத்தையும் அதற்கு சம்பந்தமேயில்லாமல் முகத்தில் அலட்சியத்தையும் காட்டி சொல்ல, அவனையும் அறியாமல் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். அதுவும் அவள் ஒ என்று உதட்டை குவித்து சொல்லிய விதம். . அவனை அறியாமலேயே அவன் அவளை பார்த்த சந்தோஷமான மனநிலையிலிருந்து உல்லாசமான மனநிலைக்கு மாறி.

“வெல்கம் டு கிரிவாசன்”, என்றான்.

அவள் என்ன இது என்பது போல் முகத்தில் ஒரு பாவனையை காட்ட இன்னுமே அவளை சீண்டும் எண்ணத்துடன்,

“நீ என்ன லண்டனா வந்திருக்க, நீ கிரி கிட்ட தானே வந்திருக்க, அதுதான் இந்த வெல்கம் டு கிரிவாசன்”, என்றான். மனதின் சந்தோஷம் முகத்தில் அப்படியே எதிரொலித்தது.

“அதுதான் ஊர்முழுசும் நான் டமாரம் அடிச்சிட்டு தானே வந்திருக்கேன், நீ இல்லைன்னா எனக்கு ஏதோ ஆகிடற மாதிரி. நம்ம ஊர் மட்டுமில்லாம அமெரிக்கா வரைக்கும் நான் உன் மேல பைத்தியம் எல்லாருக்கும் தெரிய வச்சிட்டு தானே வந்திருக்கேன். எல்லோருமா சேர்ந்து என்னை உங்கிட்ட துரத்தி விட்டிருக்காங்களே, அப்புறம் என்ன”, என்றாள் குரலில் ஆவேசத்தை அடக்கியவாறே.

அவளை புரியாமல் அவள் வந்ததில் இருந்து மண்டையை உடைத்து கொண்டிருந்த கிரிக்கு உடனே புரிந்து போனது இது தான் உஷாவினுடைய ஆதங்கம் என்பதை.

அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது. ஆனாலும் முயன்று அடக்கியவாறே, “அதனால என்ன? நான் உன் மேல பைத்தியம்னு வேணா எல்லாருக்கும் காட்டிடறேன்”, என்றான் சிறு புன்னகையோடு.

அவள் அப்படியே அமர்ந்திருக்க, “சரி எழுந்திரு ப்ரத்யு, டைம் ஆகுது போகலாம்”, என்றவாறே அவள் கை பிடித்து எழுப்பினான்.

அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று புரியாவிட்டாளும் அதை மாற்றும் நோக்கத்தோடு அவள் கையை பற்றியே நடந்து செல்ல, “விடுங்க, நான் என்ன சின்ன பொண்ணா நானே நடந்து வருவேன்”, என்றாள். அமைதியாக வந்து காரில் ஏறி அமர்ந்தாள். டிரைவரும் ஒரு செக்யுரிடியும் முன்னால் அமர இவர்கள் இருவரும் பின்னால் அமர்ந்தனர்.

“இப்போ எப்படி இருக்கு உடம்பு”, என்றான்.

“உனக்கு பார்க்க எப்படி தெரியுதோ அப்படி தான் இருக்கு”,

“கேக்கறதுக்கு எல்லாம் இப்படியே இடக்கா பதில் சொல்லனும்னு வேண்டுதலா உனக்கு”.

“ஒ. இப்படி கூட வேண்டுதல் வைக்கலாமா, சரி வைக்கறேன்”, என்றாள்.

மறுபடியும் அவள் ஒ என்று உதட்டை குவித்து சொல்லிய விதம் அவனை முத்தமிட தூண்டியது.  

“சிரிச்ச மாதிரி இறேன். ஏன் இப்படி இருக்க?”,

அவள் உதட்டை சிரிப்பது போல் இழுத்து வைத்து, மறுபடியும் முகத்தை சீரியசாக வைக்க. “அம்மாடி! இப்போ என்ன பண்ண நான் பயந்துட்டேன்”, என்று பாவனையோடு இவன் சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்தே விட்டது.

அவள் சிரிப்பதை பார்த்திருந்தவன், அவள் சற்றும் எதிர்பாராதவிதமாக விதமாக அவளை நிமிடத்தில் அருகில் இழுத்து புன்னகைத்த அவள் இதழ்களில் தன் இதழ்களை பதித்து விடுவிக்க.

உஷா என்ன நடந்தது என்பதை உணர்ந்தாளா என்பதை விட, யாராவது பார்த்து விட்டார்களா என்று அவசரமாக முன்னால் பார்த்தாள்.

அவளுடைய செய்கையை புரிந்தவனாக, “அவங்க திரும்ப மாட்டாங்க”, என்றான்.

“திரும்பலைன்னா இப்படி பண்ணுவீங்களா.”, என்றாள் கோபமாக.

“இப்போ எதுக்கு கோபம் ஜஸ்ட் லண்டன் ஸ்டைல்ல வெல்கம் பண்ணினேன்”, என்றான் சிரித்த முகமாகவே.

“இது லண்டன்னாலும் நான் இந்தியன் தான். அதனால பப்ளிக்ல இந்த மாதிரி பிஹேவியர்ஸ் வேண்டாம்”, என்றாள் சீரியசாக.

“சரி ட்ரை பண்றேன்”, என்றான் இன்னுமே சிரிப்புடன்.

அந்த சிரிப்பு உஷாவை கடுப்படிக்க, “எதுக்கு சிரிப்பு, இதுக்கு தான் சொன்னேன், என் பசங்களோட அப்பாவுக்கு திறமை கம்மின்னு”,

“என்ன இது?. ஒரு கிஸ்ல என் திறமை தெரிஞ்சிடுச்சா”, என.

“பின்ன தெரியலையா, கிஸ் பண்ணத நான் ஃபீல் பண்ண கூட இல்லை. யாராவது பார்த்துட்டாங்களான்னு டென்ஷன் தான் ஃபீல் பண்ணினேன். இதுல இருந்தே உங்க திறமை தெரியலை”, என்றாள் நக்கலாக.

இப்போது கிரி வாய்விட்டு சிரிக்க ஆராம்பித்தான். “அப்போ உன்னை ஃபீல் பண்ண வைக்கலைன்னு தான் இந்த ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா. சாரி கொஞ்சம்  ராங் டைமிங்கா போச்சு”, என்றான்.

உஷாவிற்க்கு வந்த எரிச்சலில், “போடா!”, என்று முகத்தை திருப்பி வெளியே பார்ப்பது வைத்து கொண்டாள்.

சிரிப்பு அடங்கியவுடன் மெதுவாக அவள் கையை எடுத்து, “சாரி ப்ரத்யு. நிஜமாவே இங்க விட்டுட்டு நகர முடியாத சூழ்நிலை. என்னால ஒண்ணுமே பண்ண முடியலை. உனக்கு அங்கே உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சு நான் இங்கே நிம்மதியா இருந்திருப்பேன்னு நினைக்கிறியா என்ன.? எப்போ உன்னை பார்ப்பேன்னு தான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். உன்னை பார்த்த சந்தோஷத்தில. உனக்கு தெரியாது இந்த ஒரு வாரமா எனக்கு இருந்த டென்ஷன். அது ரீலிவ் ஆனதுல கொஞ்சம் உன்னை சீன்டிட்டேன்னு நினைக்கிறேன். சாரி.”, என்றான் சமாதானமாக மறுபடியும்.

“சும்மா எதையாவது பண்ணிட்டு அதுக்கு காரணம் கற்பிச்சிட்டே இருக்காத. நான் உன்னை பார்த்த இந்த மூணு மாசமா இதை கேட்டு.! கேட்டு.! வொய் ப்ளட்.! சேம் ப்ளட்.! ரேஞ்சுல இருக்கேன்.  கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வா! என்னை லண்டனை கொஞ்சம் பார்க்க விடு!”, என்றவள் கிரி ஏதோ சொல்ல வாயெடுக்க, “உஷ்”, என்றாள் உதட்டில் கையை வைத்து. மிரட்டுவது போல.

அவள் பக்கத்தில் இருப்பதே சந்தோஷமாக இருக்க, அதனை அனுபவிக்கும் விதமாக அவனும் அதற்கு பிறகு அமைதியாக வந்தான்.

வீடு வந்ததும் அவர்கள் இறங்க. அதன் அழகை பார்த்து ரசிப்பாள் என நினைக்க இவள் அதை மிகவும் சாதாரணமாக பார்த்து வைத்தாள். இருவரை மட்டும் இருக்க சொல்லி மற்றவர்களை அனுப்பிவிட்டு வர., சோபாவில் கையை கட்டி அமர்ந்திருந்தாள். “ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கே”, என்று மனதில் மறுபடியும் நினைத்தான். அருகே அமர்ந்து குழந்தைகளை பற்றிய பேச்செடுத்து  மெதுவாக அவளை சகஜ நிலைமைக்கு திருப்பினான். கணேஷின் ரிசல்ட் பற்றி கேட்க, “கவுன்ஸ்லிங் அப்பிளை பண்ணியிருக்கான், இன்னும் டேட்ஸ் வரலை.”, என்றாள்.

“என்ன லைக் பண்றான் அவன்”, என்று கிரி மேலே பேச்சுகுடுக்க.

“இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தீங்கன்னா, இந்த சோபா நாஸ்தியியாயிடும் பரவாயில்லையா”, என்றாள்.

என்னடா இது சம்பந்தமில்லாமல் பேசுகிறாளே என்பது போல் கிரி முழிக்க.  ஒற்றை சுண்டு விரலை காட்டி, “அர்ஜென்ட் எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் ரூம் காட்டுறீங்களா”,  என்றாள்.

“எங்க கத்துக்கிட்ட இந்த ஸ்லாங்க”, என்று சிரிப்போடு கேட்டு அவன் மெதுவாக எழுந்திருக்க, “போடாங்  கொய்யாலே.”, என்றாள் வடிவேலு பாணியில். “அவசரம் வா”, என்று இழுத்துக்கொண்டு போனாள். காட்டிவிட்டு, “உள்ள போய் ஏதாவது ஹெல்ப் வேணுமா”, என்று சொல்லி இரண்டு அடியை வேறு வாங்கி கொண்டுதான் உள்ளே விட்டான். 

அவள் வருவதற்குள்ளாக சமைத்து வைத்திருந்ததை எல்லாம் நீட்டாக சாப்பிட எடுத்து வைத்தான். அவள் திரும்பவும் அதே உடையில் வரவும், “நீ குளிச்சு ப்ரெஷ் ஆகலையா”, என. “என்ன குளிக்கறதா, நான் என்ன மண்ணுல உருண்டு புரண்டுட்டா வந்தேன். எனக்கு பசிக்குது சாப்பிடாம எதுவுமே என்னால முடியாது, சாப்பாடு போடுவியா, மாட்டியா நீ” என்றாள் அதட்டலாக.  

கிரிக்கு அவளோடு வார்தையாடுவது மிகவும் பிடித்து இருந்தாலும் அவள் கோபத்தில் சரியாக சாப்பிடா விட்டால் என்ன செய்வது என்று சாப்பிடும் வேலையை மட்டும் செய்தான்.

சாப்பிடும் போது அமைதியாக இருப்பது பிடிக்காமல், “ யார் அது நீ வெளில வரும் போது பேசுனது”.

“நீங்க பார்த்தீங்களா.”.

“ஆமாம்” என்பது போல் தலையை மட்டும் அசைத்தான் .

“என் பக்கத்துல தான் உட்கார்ந்துட்டு வந்தான் ஜர்னில. என் கிட்ட பேச ட்ரை பண்ணிட்டே வந்தான். ஹலோ சொல்லிட்டு ஏதோ கேட்டான், என்ன கேட்டான் தெரியலை, நான் என்ன பதில் சொன்னேன்னு ஞாபகமில்லை, ஆனா அவனை கொஞ்சம் கடுப்படிச்சிட்டேன்னு நினைக்கிறேன், அதுலேயே பயந்துட்டு மறுபடியும் என்கிட்ட பேச ட்ரை பண்ணலை. சாதரணமா தான் ஏதோ கேட்டான். பட், நான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். ஆனாலும் என்னை  கொஞ்சம் கூட டிஸ்டர்ப் பண்ணாம வந்தானா. அதனால மனசு கேக்காம சும்மா ரெண்டு வார்த்தை பேசினேன். போகும்போது அட்லீஸ்ட் சந்தோஷமா போகட்டுமேன்னு”, என்றாள்.

“ஆனா பாரு அவன் மனசே இல்லாம உன்னை திரும்பி திரும்பி பார்த்துட்டே போனான். ஸோ லண்டன் என்டர் ஆகும்போதே ஒரு ரசிகனை உனக்கு உருவாகிட்டே”, என கிரி கூற,

“நான் கொஞ்ச நாள் இங்கே தானே இருக்க போறேன். வேண்டிய மட்டும் நீங்க  என்னை எரிச்சல் பண்ணலாம். இப்போ என்னை சாப்பிட விடுங்க. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”, என்றாள் கோபமாக.

“டேய் கிரி அடங்குடா”, என மனதிற்குள் தன்னை தானே திட்டி கொண்டு சாப்பிடும் வேலையை மட்டும் மறுபடியும் செய்தான்.       

அவள் வந்த போதே இரவு நெருங்கி இருந்தது. சாப்பிட்டு சிறிது நேரம் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். அவளுக்கு பேச இஷ்டமில்லாதது தெரிந்து தன்னுடைய வேலைகளை கிரி பார்க்க. இவள் குளித்து மெதுவாக வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தாள். எல்லாமே மிகவும் நேர்த்தியாக அது அது இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருந்தது. இது என்ன வீடா. இல்லை ம்யுஸியமா. எல்லாவற்றையும் கலைத்து விடலாமா என்று தோன்ற இன்றைக்கே வேண்டாம். நாளை செய்யலாம், என்று பெரிய மனது வைத்து முடிவு செய்தாள். கணவன் தனியாக இருக்குமிடத்திற்கு வர நேரும் பெண்கள் பொதுவாக எல்லாவற்றையும் அடுக்கி ஒழுங்குபடுத்தி செல்ல நினைக்க நம் உஷா. கிரியின் பாடு.?      

Advertisement