Advertisement

அத்தியாயம் பதினைந்து(2):

நந்தினியிடம் தன்னை ஐந்து மணிக்கு எழுப்புமாறு கூறி தூங்கிவிட்டாள்.

வீட்டில் அவன் அடி வாங்கியதே பேச்சாக இருந்தது. நந்தினி வேறு சாம்பவியிடம் போய், “அம்மா அவனையே அடிச்சிட்டா. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. உங்களை அடிச்சா கூட பரவாயில்லை, அப்பாவை அடிச்சிட போறா. அதுவும் கிரியை அடிச்ச மாதிரி ஆபீஸ்ல அடிச்சா என்ன ஆகும் யோசிச்சு பாருங்க. “, என சாம்பவியை பயமுறுத்தினாள். அவளுக்கு தெரியும் அப்பாவுக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்தால் தான் அவளுடைய அம்மா அடங்குவார் என்று.

எதிர்பார்த்த ஐந்து மணியும் ஆயிற்று. நந்தினி அட்லீஸ்ட் சுரிதார் போடலாமே என்று கூறியும், அது சாரீ மாதிரி ரிச் லுக் குடுக்காது அக்கா  என்று மறுத்து விட்டாள்.  

சிறிது கூட டென்ஷன் என்பதே இல்லை கூலாக இருந்தாள்.யாருடையதையும் அவள் உபயோகிக்க மாட்டாள் என்பதால் தன்னிடம் புதிதாக இருந்த சாரீஸ் நந்தினி காட்ட ஒரு டார்க் க்ரீன் கலர் பட்டு சாரீ பார்டர் இல்லாமல் சாரீ ஃபுல்லாக மெல்லிய ஜரி வொர்க் செய்ததை தேர்ந்தெடுத்தாள்.

இது எனக்கு நீரஜா ப்ரெசென்ட் பண்ணது. உனக்கு பரவாயில்லையா. அப்புறம் அதை குடுத்துடேன்னு திட்ட கூடாது”.

யாரு கிரி மாமா வோட மனைவியா.”, என்றாள். ஆமாம் என்று நந்தினி தலையசைக்க, “நல்ல செலக்ட் பண்ணியிருக்காங்க. அருமையான ரசனை அவங்களுக்கு.”, என்று பாராட்டினாள்.

அவள் ஏதாவது ஃபீல் செய்தாள் என்ன செய்வது என்று நந்தினி முன்னச்சரிக்கையாக சொல்ல இப்போது நந்தினி விழித்தாள். நந்தினி ஏற்கனவே ஆள் ஏற்பாடு செய்திருந்ததால் ஒரு மணி நேரத்தில்  ப்ளௌஸ் தைத்து வந்தது

நகை.”, என நந்தினி இழுக்க, “பாட்டி வாங்கி குடுத்தது ஏதாவது உங்க கிட்ட இருந்தா குடுங்க.”, என்றாள். பாட்டி எப்போது நந்தினிக்கும் உஷாவிற்க்கும் ஒரே மாதிரியாக தான் வாங்குவார்கள். பொதுவாக எல்லாமே உஷாவுடைய செலக்ட்ஷன் ஆகவே இருக்கும் அதனால் தான் அதை கேட்டாள். அதிலிருந்த அதிகம் கவனத்தை கவராத வகையில் பெரியதாகவும் சிறியதாகவும் இல்லாமல் ஒரு செட் அணிந்து கொண்டாள்.

நான் ரெடி.”, என்றாள். அப்போது தான் கணேஷ் வர அவன் பார்வையில் பாராட்டு தெரிந்தது, “நல்லா இருக்கீங்க அக்கா.”, என்றான். ஆனால் அந்த தோற்றத்தில் அவனுடைய அக்கா அவனை விட்டு விலகிப்போய்விட்டதாக தோன்றியது

சாம்பவி கீழே இறங்கவேயில்லை. இப்படி எல்லாம் நடக்க கூடாது என தானே நந்தினியும் கிரியும் உஷாவை பார்க்க விடாமலே செய்தார். இப்போது அவளும் அந்த கன்செர்நில் சார்ஜ் எடுப்பதா. சில சமயம் நாம் நடந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருக்கும் விஷயங்கள் நடந்து விடும். இப்போது அதுதான் நடந்தது.

விஸ்வநாதன் கிரி உஷா மூவரும் போக அருண் கணேஷை அழைத்துக்கொண்டு தனியாக வருவதாக கூறிவிட்டான். கிரி பலமான யோசனையில் இருந்தான்.

இறங்கி எப்போதும் போல் அவன் வேகமாக நடக்க உஷா விஸ்வநாதனுடன் தான் வந்தாள். அவரோடு அவள் பேசவில்லை என்றாலும் அவருடனே இருப்பது போல் பார்த்துக்கொண்டாள்.

பிரஸ் மீட்டில் விஸ்வநாதன் நடுவில் அமர்ந்திருக்க இரு புறமும் உஷாவும் கிரியும் அமர்ந்திருந்தனர். கன்செர்நில் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகள் கூட கீழே தான் அமந்திருந்தனர். வேறு யாரும் அமரவைக்கபடவில்லை. கிரி தான் சிறிது பதட்டமாக இருந்தான். ஆனால் உஷா அவளது தாய்மாமா விஸ்வநாதனை போலவே சிறிது கூட பதட்டம் என்பதே இல்லாமல் இருந்தாள்.

அங்கே கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். கடைசி வரிசையில் அருணும் கணேஷும் அமர்ந்திருந்தனர். முன்னே சொல்லியும் வரவில்லை. தொலைக்காட்சி, பத்திரிகை, ஆங்கிலம், தமிழ், என  எல்லா தரப்பில் இருந்தும் வந்திருந்தனர். விஸ்வநாதனே அவர்கள் ஸ்டீல் இண்டஸ்ட்ரியில் கால் பதிப்பது குறித்து விவரித்தார். லண்டனில் தாங்கள் வாங்கபோகும் இண்டஸ்ட்ரீஸ் எத்தனை சிறப்பு வாய்ந்தது. இங்கே இந்தியாவில் அதனால் என்ன முன்னேற்றங்கள் ஏற்படும் என அவர் விவரித்தார்.

எல்லோருக்கும் புரியும்படியாகவும் சிறப்பாகவும் இருந்தது அவருடைய இண்டஸ்ட்ரீஸ் பிரமோஷன். உஷாவிற்க்கும் கிரிக்கும் பிரமிப்பாக இருந்தது அதனால் தான் அவர் இவ்வளவு உயரத்தை சீக்கிரம் எட்ட முடிந்தது என புரிந்தது.

இந்த ஸ்பீச்சை அவர் முடித்து விட்டு கிரி , உஷா இருவரையுமே அறிமுகப்படுத்தினார். இது சூர்ய கிரி வாசன் மை சன். இது அன்னலட்சுமி பிரத்யுஷா என் சிஸ்டரோட பொண்ணு இவங்க ரெண்டு பேருமே எங்க கன்செர்னோட ஃப்யூசர்ஸ் என்றார் பொதுவாக. அவள் மனப்பாடம் செய்து வைத்த டீடைல்ஸ் கெல்லாம் வேலையே இல்லாமல், எல்லாவற்றையும் அவரே பேசிவிட்டார். கிரிக்குமே அங்கே பேச வேலையேயில்லை.

தங்களுடைய வேலை முடிந்தது இனி யாராவது கேட்க வேண்டும் என்றால் கேட்கலாம் என அறிவிக்கப்பட்டது.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், சில பேர்ஏதாவது பழைய காரணங்களுக்காக எதையாவது கேட்டு எதிராளியை திணற வைக்க வேண்டும் என்றே வருவார்கள். இல்லை அவர்களுடைய இன்டியுசன் நன்றாக இருந்தாலும் சில சமயம் சொதப்பி விடும். அப்படி ஒருவர், “ஏன் இவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மெண்டை ஃபாரின் கண்ட்ரில பண்ணறீங்க, நம்ம நாட்லயே பண்ணலாமே.”, என்றார்.

அவரை பார்த்த உடனே விஸ்வநாதனுக்கு தெரிந்து விட்டது இது பிரச்சனையாகும் என்று. விஸ்வநாதன் பதில் சொல்லப்போக, அவர் உடனே, “உங்க கன்செர்ன் ஃப்யூசர்ஸ்ன்னு சொல்றிங்க. அவங்க சொல்லலாமே.”, என்றார்.

அவர் மிகப் பெரிய பத்திரிக்கையாளர் இப்போது ஒரு நியூஸ் சேனலும் நடத்தி வருகிறார். நல்லவரே. நேர்மையானவரே. ஆனால் .அவருக்கும் விஸ்வநாதனுக்கு சிறிது டெர்ம்ஸ் சரியில்லை. ஒரு முறை ஏதோ அப்ரூவல் வாங்க விஸ்வநாதன் மத்திய அமைச்சர் ஒருவருக்கு பெரும் பணம் கொடுத்தார். அதை அவர் தனது பத்திரிகையில் எழுத அப்போதிருந்து பிரச்சினை. ஆனால் அவரால் லஞ்சம் கொடுத்ததை நிரூபிக்க முடியவில்லை. அவருடைய நிருபர் விஸ்வநாதனிடம் விலை போய்விட்டான். தான் தனது பத்தரிக்கை ஆசிரியருக்கு குடிபோதையில் தவறான தகவல் கொடுத்துவிட்டதாக யாருக்கு எந்த பாதிப்புமில்லாமல் பிரச்சனையை முடித்து விட்டான்.

அதற்கு ஏதோ ஒரு இடத்தில், “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுஎன்ற வார்த்தையை விஸ்வநாதன் சொல்லியிருக்க. அதன் பாதிப்பு அவரிடம் இருந்தது. அவர் வர வேண்டும் என்ற அவசியமேயில்லை. வேறு யாரையாவது தனது சேனல் சார்பாக அனுப்பி இருக்காலாம். ஆனால் அவரே வந்திருந்தார். இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தை விட அவருக்கு மனமில்லை. எப்படியாவது அவர்களை திணற வைக்க வேண்டும் என்று வந்திருந்தார்.

 

விஸ்வநாதன் கிரியை பார்க்க அவன் பதிலளிக்க ஆரம்பித்தான். “இது எங்க கன்செர்னை மட்டும் டெவலப் பண்ணற விஷயமில்லை. நம்ம நாட்லயிருந்து அங்க போய் ஒரு இண்டஸ்ட்ரீஸ் வாங்க போறோம்ங்றது பெரிய விஷயம். எப்போவுமே மத்த கன்ட்ரீஸ் இந்தியன் மார்க்கெட் நோக்கி வரும் போது நம்ம வெளில போறோம். ஏன்னா அங்க அந்த வளம் அதிகமா இருக்கு. அதுவுமில்லாம அதுல வர்ற ப்ராஃபிட்ஸ் இன்னுமே எங்களை இங்க பெஸ்ட்டா  டெவலப் ஆக உதவும். இன்னும் நிறைய இந்தியால நாங்க தொடங்க அது உதவும்”,.

இருந்தாலும் இவ்வளவு ஹ்யூஜ் இன்வெஸ்ட்மென்ட் நம்ம கண்ட்ரி லயே செய்யலாமே.”,  என்றார் விடாமல் அவர்.

நாங்க ஃப்யூசர்ல பண்ணபோறோம்னு தானே சொல்றோம். பண்ண மாட்டோம்னு சொல்லாளியே.”.

அது தான் நானும் கேக்கறேன். ஏன் ஃப்யூசர்ல பண்ணறது. இப்போ பண்ண கூடாது ஏன் கேக்கறேன்னா. நிறைய இப்படி தான் ஆரம்பிக்கறாங்க. அப்புறம் எல்லாத்தையும் அங்கேயே இன்வெஸ்ட் பண்ணி நிறைய அவங்க தான் டெவலப் ஆகறாங்க நாடு ஆக மாட்டேங்குது.”, என்றார்.

கிரி அவரிடம், “எல்லாமே ஒரு நம்பிக்கை தானே சார். செய்யறோம்னு சொல்றோம் செய்வோம்.”, என்றான்.

இப்படி சொன்னா எப்படி நீங்க ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பனி. எல்லாமே ப்ரீ ப்ளாண்டா இருக்க வேண்டாமா.”, என்றார்.

கிரியும் பொறுமையை விடாமல் அனைத்திற்கும் பதில் கூறினான்.

அவர் மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்ட விதம், அவர் வேண்டும் என்றே அவனை கார்னர் செய்கிறார். என புரிந்தது.

ஆனால் எல்லாரும் இருப்பதால் அவரிடம் என்ன சொல்ல முடியும்.

ஒரு கட்டத்தில் கிரி பொறுமை இழக்க ஆரம்பித்தான். “இவ்வளவு சொல்றோம். அப்புறமும் கேட்டா நாங்க என்ன சொல்லறது.”, என்றான்.

இதில் சில உரையாடல்கள் மட்டுமே தமிழில் இருந்தது பாக்கி ஆங்கிலத்திலேயே இருந்தது. அப்போது அந்த பத்திரிக்கையாளர் நல்ல தமிழில், “குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்றது உங்க அப்பா சொன்ன டைலாக். இப்போ நீங்க இவ்வளவு பேசறீங்க நீங்களும் இங்க இந்தியா வந்ததுல இருந்து தினமும் குடிக்கறீங்க. அப்போ உங்க வாக்குறுதியும் இது மாதிரி தானா.”, என்றார் நேரடியாக. அங்கே இதை கேட்டவுடனே பின் ட்ராப் சைலன்ஸ் நிலவியது.

விஸ்வநாதனே இப்படி ஒரு நேரடியான தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. அவர்  உடனே கிரியை பார்க்க அவன் கோபத்தை அடக்குவது தெரிந்தது. விஸ்வநாதன் ஆதரவாக அவன் கையை பிடித்து அழுத்தினார்.

உஷாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது கிரி குடிக்கிறானா அதுவும் இப்படி ஒரு பத்திரிக்கையாளர் வந்து பப்ளிக்க்காக கேட்கும் அளவுக்கு. உஷா கிரியை பார்க்க அவன் இந்த கேள்வியால் மிகவும் டிஸ்டர்ப்பாக இருப்பது புரிந்தது

கிரி சும்மா கலங்குவது மாதிரி தெரிந்ததற்காகவே தன்னுடை இத்தனை வருஷ வைராகியத்தை மறந்து நிமிடத்தில் இங்கே வர முடிவு செய்தாள். அப்படி இருக்கும் பட்ச்சதில் சூர்ய கிரி வாசனை இப்படி பப்ளிக்க்காக ஒருவர் இன்சல்ட் செய்வதா. இந்த செய்தி எங்கும் வெளி வர கூடாது ஏதாவது செய்ய வேண்டும்.

கிரியை விட விஸ்வநாதனை விட அவள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள். அவள் கிரியை பார்த்தாள். அந்த பார்வை நான் பேசட்டுமா என கேட்க கிரியுமே சிறு சைகை மூலம் என்ன வேணா செஞ்சுக்கோ என்று பெர்மிச்ஷன் கொடுத்தான். அவனுக்கு ஏதோ காலையிலிருந்து தப்பாகுமோ என்று சொன்ன உள்ளுணர்வு இப்போது அவளை பேச விடு என்று சொல்ல அங்கே அவன் பார்வையாளர் ஆனான்.

விஸ்வநாதனிடம், “நான் பேசட்டுமா மாமா.”, என மெதுவான குரலில் வினவ,  “நீயாம்மா வேண்டாமே. ஏற்கனவே அவன் ப்ரோப்ளம் பன்னறான். உன்னை இன்னும் கேட்பான்.”, என்றார். ஆனாலும் அவளுடைய முகத்தில் பிடிவாதத்தை பார்த்து அவருடைய தலை தானாகவே ஆடி பெர்மிசன் கொடுத்தது. அவர் யார் எந்த பத்திரிகை எந்த சேனல் என்று மட்டும் கேட்டு கொண்டாள். ஆனால் என்ன பிரச்சினை என்று இரண்டொரு வரிகளில் அவளுக்கு புரியுமாறு உரைத்தார்.

அந்த பத்திரிக்கயாளரை நோக்கி, “சாரி சார். திடீர்ன்னு எல்லாரும் சைலன்ட் ஆகிட்டாங்களா. அதனால உங்க கேள்வி எனக்கு புரியல்லை. மறுபடியும் கேக்கறீங்களா.”, என்றாள் ஒரு அழகான புன்னகையோடு. அது அவரை எரிச்சல் படுத்துவதற்காக சொன்னாள். அவர் அதை புரிந்து கொண்டாரோ இல்லையோ, இல்லை உஷாவினுடைய வயதிற்கும் மேல் அவருக்கு எக்ஸ்பீரியான்க்ஸ் இருப்பதாலோ எதையும் காட்டி கொள்ளாமல்  அவர் மறுபடியும் அதை தெளிவாக சொல்ல, “தாங்க்யூ.”, என்றாள் அதே புன்னகையோடு.

நான் பதில்  சொல்லட்டுமா. நீங்க இந்த ச்பீச்சை ஆப் தி ரெகார்ட் பண்ணுநீங்கன்னா பெட்டர்.கட்டாயம் கேள்வியும் வெளில வர கூடாது.”, என்றாள்.

ஏன் பயமா.”, என.

எங்களுக்கு எதுக்கு பயம். நீங்க ஒரு தேர்ந்த மனிதர். தவிர்க்கபட்டிருக்க வேண்டிய கேள்விய நீங்க கேட்டுடீங்க. நான் பேசும் போது கொஞ்சம் கோபம் வந்து என்ன முட்டாள்தனமான கேள்வி இதுன்னு கேட்டேன்னு வச்சிகோங்க, நாங்க ரொம்ப மதிக்கற இந்த மீடியா பீப்ள் எல்லோருக்கும் மனக்கஷ்டம், அதை குடுத்த நாங்க இன்னும் பீல் பண்ணுவோம். சில விஷயங்கள் நீங்க இப்படி கேட்க கூடாது.”, என

அவர், “அது பத்திரிக்கை சுதந்திரம் நீங்க கேட்க கூடாதுன்னு எப்படி சொல்லலாம் அப்புறம் எதுக்கு இந்த ப்ரெஸ் மீட்.”, என

பார்த்தீங்களா கோபப்படறீங்க. இதுக்கு தான் ஆப் தி ரெகார்ட் பேசறேன்னு சொல்லறேன். ஒத்துக்கங்கலேன். என்ன நஷ்டம்.”,

சரி ஒண்ணு பன்னலாம். நீ சொல்றது கரக்ட்னு நான் பீல் பண்ணா. இது ஆப் ரெகார்ட். இல்லைன்னா இது ஒளிபரப்பாகும்”, என கட் அண்ட் ரைட் ஆக பேச எரிச்சலானாள் உஷா. அவளுக்கு கிரியை பற்றி தவறாக எதுவும் பரவக்கூடாது என்று டென்ஷன் ஆக ஆரம்பித்தது.  

இல்லை இவ்வளவு நிச்சயமா டெய்லி குடிச்சார்னு சொல்றீங்களே. நீங்க தான் அவருக்கு கம்பனி குடுத்தீங்களா”, என்றாள் அவரை நோக்கி தைரியமாக. நாங்க அந்த மாதிரி எதுவும் அவர் குடிக்கவே இல்லைன்னு சொல்றோம்.”,  கிரியின் முகம் சற்று தெளிந்தது. டேய், உனக்கு இது தேவையா, என்பது போல விஸ்வநாதன் அந்த பத்திரிக்கையாலரை பார்க்க எல்லாரும் உஷாவினுடைய தைரியத்தை வியந்து பார்த்தனர். இந்த சின்ன பெண் ஏன் இவரிடம் வாய் குடுக்கிறது என்று பரிதாபமாக நினைத்தவர்கள் இப்போது அவளை கவனிக்க ஆரம்பித்தனர்.

என்ன பேசறீங்க தெரிஞ்சு தான் பேசறீங்களா.”, என்றார்.

தெரியாம நான் பேசறதில்லை சர்.”,

குடிபழக்கம் அப்படின்றது ஒரு கெட்ட. ரொம்ப மோசமான பழக்கம். அதுவும் எப்போன்னா அடுத்தவங்களை பாதிக்கும் போது அது மன்னிக்க முடியாதது கூட.”, என கேப் விட்டாள். இவள் என்னடா இது இப்படி பேசுகிறாள் என்பது போல் எல்லாரும் பார்க்க. சில நொடிகள் விட்டு    “ஆனா குடிக்கறவங்க கெட்டவங்க கிடையாது. டூ யூ அக்ரி வித் மீ”, என்றாள் அந்த பத்திரிக்கையாளரை பார்த்து. இப்போது சிரிப்பு மறைந்து சீரியஸ்னஸ் தெரிந்தது.

பதில் சொல்லுங்க சார்.”, என

நீங்க நேரடியா பேசலை திசை திருப்பறீங்க.”, என்றார்.

எங்கயும் திருப்பலை சார்யார் வேணா தத்துவத்தை பேசலாம். பைத்தியக்காரனும் தத்துவத்தை தான் பேசறான். ஞானியும் தத்துவத்தை தான் பேசறாங்க. ஆனா பேசற ஆட்களை பார்த்து தான் அது தத்துவப் பேச்சா இல்லை பைத்தியக்காரத்தனமான பேச்சான்னு முடிவு பண்ணறோம். அது மாதிரி நாங்க எது வேணா பேசலாம் அது மேட்டர் இல்லை. ஆனா நீங்க பேசற. எழுதற. ஒன்னோன்னும் நிறைய இம்பாக்ட் கொடுக்கும்.   இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க குடிபழக்கம் கெட்ட பழக்கம். குடிக்கறவங்க கெட்டவங்க கிடையாது. ஆமாவா இல்லையா.”. என்றாள்.

அதற்கு என்ன சொல்ல முடியம் ஆம் என்பதை தவிர, “சரி ஆமானே இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் இது ஆகாதே.”, என்றார்.

இதுலயே பதில் இருக்கே.”, என்றாள்.

உங்க  பதில் என்ன சொல்லுதுன்னு புரியலையே. ஒரு லாஜிக்கே இல்லையே.”, என்றார்.

நானும் அதைத்தான் சர் சொல்லறேன். உங்க கேள்வில லாஜிக் இல்லை. நாங்க என்ன அரசியல் கட்சி ஆரம்பிக்கறோமா என்ன?.நீங்க என்ன நாட்டுக்கு செய்யறீங்கன்னு வந்ததுல இருந்து நீங்க கேக்கறீங்க. இதை நம்ம பிரதமர் கிட்ட கூட யாரும் கேக்கறதில்லைன்னு நினைக்கிறேன். பல நூறு கோடி ப்ரொஜெக்ல. சின்ன பசங்க மாதிரி கேள்வி கேக்கறீங்க.”

மிஸ்டர் சூர்ய கிரி வாசன் என்ன பொது வாழ்கையிலையா இருக்கார். நீங்க அவரை கிரிடிசைஸ் பண்றதுக்கு. இல்லை நாங்க தேர்தல்ல நிக்கறோமா வாக்குறுதி குடுத்து அதை நிறை வேற்றாம விடறதுக்கு.”, என்றாள் ஆவேசமாக.

இவளா காலையில் தன் பையனை அடித்தாள் என விஸ்வநாதன் உஷாவையே பார்த்தார். தான் என்ன அவளுக்கு செய்திருக்கிறோம் ஆனால் ஒரு பிரச்சினை என்று வரும்போது எப்படி தங்களுக்காக வாதாடுகிறாள். விஸ்வநாதன் தனக்குள்ளேயே வருந்தினார், சூரியனை கை வைத்து மறைக்கும் முட்டாள் தனத்தை தான் செய்திருக்கிறோமா என்று.

எல்லாரும் அவளுடைய பேச்சை ரசிக்க ஆரம்பித்தனர்.

நாங்க பாரின் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணறத இவ்வளவு கிரிடிசைஸ் பண்ணற நீங்க மத்த கன்ட்ரி நம்ம நாட்ட குறி வைக்கும்போது என்ன பண்ணறீங்க. பழைய காலத்துல கிழக்கு இந்தய கம்பனியா நம்ம நாட்டுக்குள்ள வந்து ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமா நம்மை அடிமை படுத்தினாங்க. மறுபடியும் ஒரு கிழக்கு இந்திய கம்பெனி மாதிரி நம்ம நாட்டுக்குள்ள வர்றதுக்கான வாய்ப்புகளை நாம அதிகரிக்கிறோமே அதுக்கு என்ன செய்றீங்க. அவன் இங்க வந்தா மூணு ரூபா பென்சிலை இருவதஞ்சு காசுக்கு குடுப்பான். நம்ம பென்சில் கம்பெனி எல்லாம் முன்ன கூட நிக்க முடியாது. எல்லாம் இழுத்து மூட வேண்டியது தான். இது ஜஸ்ட் ஒரு எச்க்ஸாம்ப்ல். இது மாதிரி நிறைய இருக்கு. நம்ம அண்ணாச்சி மளிகை கடையெல்லாம் அவங்க ரீடெயில் முன்னாடி எங்க நிக்கும். நம்ம ஆளுங்களுக்கு வேலையே இருக்காது. அஃப்கோர்ஸ் அப்கமிங் வோர்ல்ட்ல சில டிரா பாக்ஸ் இருக்க தான் செய்யும். ஆனா இதெல்லாம் நம்மை நோக்கி வர்ற டேன்ஜெர்ஸ். எனக்கு இப்போதைக்கு ஞாபகம் வர்ற சில விஷயங்கள் தான் இது. இன்னும் என்னென்னவோ இருக்கு. அதுக்கு என்ன செய்யறீங்க நீங்க. இப்படி பல விஷயங்கள் இருக்கும் போது, நீங்க என்ன செய்ய போறீங்கன்னு எங்களை பார்த்து  கேக்கறது.?”  என்றாள் வார்த்தையை முடிக்காமல் ஆவேசமாக.

இப்படி ஒரு புத்திசாலித்தனமான விவரமான நியாயமான பேச்சை, தன்னுடைய கருத்துக்களை அவர்கள் அறியாமலேயே ஒத்துகொள்ள வைக்கும் திறமையை யாரும் அந்த சிறு பெண்ணிடம் எதிர் பார்க்கவில்லை.

கிரி அவளையே பார்த்து கொண்டு இருந்தான். என்ன மாதிரி எதுவுமே எதிர்பார்க்காமல் இருந்தவள் தனக்காக மீடியாவுடன் இன்று சண்டை போடுகிறாள். எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறாள். தானோ அப்பாவோ கட்டாயம் இப்படி பேசியிருக்க மாட்டோம் என்று தோன்றியது.

சார் நீங்களும் நல்லவரா இருக்கலாம். நாங்களும் நல்லவங்களா இருக்கலாம். ஆனா உங்களுக்கு எங்களை பிடிக்கனும்னோ எங்களுக்கு உங்களை பிடிக்கனும்னோ அவசியமில்ல. அதனால நமக்குள ஏதாவது தகராறு இருந்தா அதை விட்றலாம். அதுக்காக நீங்க யாரோட நேமையும் பெர்சனலா டேமேஜ் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன். Still we are ready to answer all your questions as we respect media andthe people over there.  As we know…………. no one is perfect here…………… please try to avoid personal questions. “, என்றாள்பணிவாக. அந்த பத்திர்க்கையாளர் மனதிற்குள்ளேயே ப்ரில்லியன்ட் என்றார்

ஏதோ சின்ன பெண். சும்மா நீங்க கம்பனி குடுத்தீங்களா. என்று மரியாதையில்லாமல் கேட்கிறாள் என்று அவளை பற்றி நினைத்தவர்கள் இப்போது  அவளை ஆச்சர்யத்துடனும் மரியாதையுடனும் பார்த்தனர். “டேய் உங்க அக்கா பின்னிட்டாட.”, என்றான் அருண் கணேஷை நோக்கி. காலையில் இந்த பெண்ணை பார்த்து உன்னால எங்க நிம்மதி போய்டும் என்று கிரியினுடைய அம்மா கூறியது என்ன.? இவள் செய்வது என்ன.? இவளால் மடடுமே வீட்டில் நிம்மதி கொடுக்க முடியும் என அருணிற்கு தோன்றியது. “அண்ணா எங்க அக்கா கிரேட் இல்லை.”, என்றான் அருணை நோக்கி கணேஷ்.

அப்போ நீங்க செய்யறது எல்லாமே சரின்னு சொல்றிங்க.”, என வேறொரு பத்திரிக்கையாளர் கேட்க, உஷா அவருக்கு இன் முகத்துடனே பதிலளித்தாள்.

சார் நாங்க சிவாஜி சினிமால வர்ற ரஜினி கிடையாது. எல்லாத்தையும் கொண்டு வந்து விட்டுட்டு ஒரு ரூபாயை வச்சு முன்னேற்றத்துக்கு. அங்க நம்ம முதல் பாதில பாக்கற மாதிரி ஒரு விஷயம் முடிக்கறதுக்குள்ள எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கும். பிஸினெஸ் சில ஸ்டேஜ்ல புலி வாலை பிடித்த கதை தான். விட்டோம் நம்மளையே சாப்பிட்டிடும். புரிஞ்சுபீங்கனு நினைக்கிறேன்.”, என்றாள் சிரித்தவாறே. எல்லாருக்கும் சிரிப்பு வந்தது. யாருமே அவள் அதிகம் படிக்காதவள் தொழில் தெரியாதவள் என்று நினைக்கவே முடியாது.

அருமை என்று யாரோ சொன்னார்கள். சிலர் கை தட்டினர்.

ஆனாலும் காரியத்திலேயே குறியாய் அவரை பார்த்து, “ஆப் தி ரெகார்டா இல்லையா.”, என்றாள்.

விஸ்வநாதன் வியந்து பார்த்தார். எடுத்த வேலையை இவள் முடிக்காமல் விடமாட்டாள்.

யூ வொன் மை சைல்ட்.”, என்றார் அந்த பத்திரிக்கையாளர். .

நன்றி”, என்றாள் அவரை பார்த்து. அடுத்த நிமிடம் கிரியை நோக்கி எப்படி என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டு புன்னகைக்க, கிரிக்கு அந்த புன்னகை நிறைய சக்தியை கொடுத்தது. பதிலுக்கு அவன் புன்னகைக்க அவள் மலர்ந்து சிரித்தாள். அந்த சிரிப்பு நிறைய காமேராக்களை அவளை நோக்கி பிளாஷ் செய்ய வைத்தது

 கிரிக்கு இப்போது தோன்றியது இவள் தன்னை ஒரு நிமிடம் கூட மறந்ததே இல்லையோ. என்ன மாதிரியான அன்பு இது. தன்னால் இதற்கு என்றாவது ஈடு கொடுக்க முடியுமா என்று.

Advertisement