Advertisement

அத்தியாயம் பண்ணிரெண்டு :

. இதை எதுவும் உணரதவலாக உஷா ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசியது என்னவோ. ? .

அவள் உள்ளே நுழைந்த போது ஆனந்த் அவளுக்காக காத்திருந்தான்.

ஏற்கனவே கிரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒரு மாதிரியான கோபத்தில் இருந்தாள் உஷா.

இருந்தது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே அவன் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தான். ஆனால் நிறைய வருடங்கள் ஆகிவிட்டதால் அவளுக்கு சரியாக தெரியவில்லை. யாரவன் அவன் இஷ்டத்திற்கு தன்னை பார்த்தது என்ற கோபம் இருந்தது.

“சொல்லுங்க.”, என்றாள் அவனை நோக்கி என்னவோ அவனை புதிதாக அன்று தான் பார்ப்பது போல.

“என்னை உங்களுக்கு தெரியலையா.”, என்றான்.

“முன்னாடி தெரியல. இப்போ தெரியுது.!”, என்றாள்.

“ முன்னாடின்னா எப்போ.”, என்றான்.

“ஒரு ரெண்டு மூணு மாசமா என்னை பார்த்துக்கிட்டு இருக்கீங்களே அப்போ.”, என்றாள் நக்கலாக.

அவள் சொன்ன விதம் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

“அப்போ நீங்க என்னை பார்த்தீங்களா.”, என்றான்.

“நான் உங்களை பார்க்கலைங்க.  நீங்க என்னை பார்த்ததைதாங்க பார்த்தேன்.”, என்றாள்.

“ஏங்க நான் பார்க்கிற மாதிரி இல்லையா.”, என்றான் முகத்தை பாவம் போல் வைத்து. .

இப்போது உஷாவிற்க்குமே சிரிப்பு வர பார்த்தது. ஆனாலும் கஷ்டப்பட்டு முகத்தை சீரியசாக வைத்துகொண்டாள்.

மறுபடியும் அவளை பார்த்து, “பதில் சொல்ல மாட்டீங்களா.”, என்றான்.

“உங்களுக்கு என்ன தாங்க வேணும்.”, என்றாள். இந்த முறை அவளையும் மீறி புன்னகை வந்தது.

“ஒரே ஒரு பதில் தாங்க.”, என்றான்.

“நீங்க நல்லா தாங்க இருக்கறீங்க.”, என்றவாறு இடத்தை விட்டு நகர போக.

“இது இல்லீங்க. நீங்க ஏன் என்னை வேண்டாம்னு சொல்லிடீங்க”, என்றான் அவசரமாக.

நான் சொல்லலை. என் மாமா தான் சொன்னாங்க என்று அவனிடம் சொல்லவா முடியும். “இது என்னங்க கேள்வி மாப்பிள்ளைங்க தான் பொண்ண பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லுவாங்களா. ஏன் பொண்ணுங்க சொல்லக்கூடாதா.”, என்றாள்.

“சொல்லலாங்க. ஆனா பார்த்ததுக்கு அப்புறம் தானே சொல்லனும், பார்க்கறதுக்கு முன்னாடியே ஏன் சொன்னீங்க. வேற பொண்ண வேற உங்க வீட்ல காட்ட இருந்தாங்க. ஏன் இந்த கன்புஷன்”, என்றான்.

“நான் உங்களை பாக்கலையா. யார் சொன்னது?. அதுதான் கொஞ்ச நாளா கண்ல படறீங்கலே. அப்போ பார்த்திருக்கேன். அதனால பிடிக்கலைன்னு சொன்னேன்”, என்றாள்.

“இப்போ தான் நீங்க என்னை பார்க்கலை. நான் பார்த்ததைதான் பார்த்தேன்னு சொன்னீங்க. அப்போ நீங்க என்னை நோட் பண்ணியிருக்கீங்க.”, என்றான் சின்ன சிரிப்போடு.

“ஐய்யோ. என்ன இது.! நோட்டும் பண்ணலை, புக்கும் பண்ணலை, ஆளை விடுங்க சார்.”, என்றாள் சிரிப்போடு.

அந்த நேரம் பார்த்து தான் கிரி உள்ளே நுழைந்தான். அவள் ஆனந்த்தோடு சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை பார்த்துக்கொண்டு நின்றான். அவன் பார்ப்பதை உணர்ந்த உஷா இன்னும் உற்சாகமாக ஆனந்த்திடம் பேசலானாள்.

“இப்படி எல்லாம் மத்தவங்களை அவங்க பெர்மிச்ஷன் இல்லாம பார்க்ககூடாதுங்க. நீங்க முன்னாடியே அங்க அங்க பார்த்ததினால இன்னைக்கு எதுக்கு தனியா வரணும். அதனால நான் பார்க்காமயே வேண்டாம்னு சொல்லிட்டேன்”, என்றாள்.

“எங்க மாமா தான் நான் வேண்டாம்னு சொன்னதனால நீங்க டிஸ்அப்பாயின்ட் ஆககூடாதுன்னு. என்னை விட அழகா. அறிவா. உங்களை மாதிரியே டாக்டருக்கு படிச்ச பொண்ணா. சொன்னாங்க. நீங்க ஏன் அவங்களை பார்க்காம வேண்டான்னு சொன்னீங்க.”, என்றாள் திருப்பி.

“அவங்க அழகா இருக்கலாம். அறிவா இருக்கலாம். என்னை மாதிரியே படிச்சிருக்கலாம். ஆனா அவங்க நீங்க இல்லீங்களே. “, என்றான் அவளையே பார்த்தவாறு.

பேச்சின் திசை மாறுவதை உணர்ந்த உஷா சட்டென்று அமைதியானாள்.

இப்போது ஆனந்துமே அவளை நோக்கி சீரியசாக, “சொல்லுங்க ஏன் என்னை வேண்டாம்னு சொல்லிடீங்க. உங்க பெர்மிச்ஷன் இல்லாம உங்களை பார்ததுனாலையா”,

“நான் வேணும்னு பார்க்களைங்க. நீங்க வேலை முடிச்சி சாயந்திரம் ஏறுவீங்கலே பஸ் ஸ்டாப். அது பக்கத்துலை தாங்க நான் திருப்பூர்ல  விசிடிங் வர்ற ஹாஸ்பிடல் இருக்கு. வாரத்துல ரெண்டு நாள் வருவேன். நான் வர்றப்போ நீங்க பஸ் ஏற நின்னுட்டு இருப்பீங்க.”,

“முதல் நாள் உங்களை பார்த்தப்போ எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. எனக்கு சட்டுன்னு அடையாலாம் தெரியலை. ஆனா உங்களை பார்கறதுக்காகவே அடுத்த நாளும் வந்தேன். அப்போ தான் ஸ்ட்ரைக் ஆச்சு எனக்கு ஒரே ஷாக் சின்ன வயசுல உங்க பாட்டி கூட வரும் போது பார்த்திருக்கேன். பொம்மை மாதிரி இருப்பீங்க. சொல்லப்போனா நான் அப்போ எம் பி பி எஸ் கடைசி வருஷத்துல இருந்தேன். என்னோட சிஸ்டர் மாரேஜ்க்கு வந்து இருந்தீங்க.”,

“எனக்கு அப்போவே உங்க கிட்ட வம்பு வளர்க்க தோணும். ஏதாவது சொல்லிட்டே இருப்பேன். நீங்க என்னை ரொம்ப அலட்சியபடுதுவீங்க. பொதுவா எல்லோரும் எங்கிட்ட எப்பவுமே ஆர்வமா பேசுவாங்க. எனக்காகவா. என் படிப்புக்காகவா. இல்லை அப்பாவோட பதவிக்காகவா. எனக்கு தெரியாது. ஆனா நீங்க டிப்பிறேண்டா இருந்தீங்க. எனக்கு அதனாலயே உங்க கிட்ட பேச இன்னும் ஆர்வமா இருக்கும். உங்க கிட்ட திட்டு வாங்கவே உங்களை இரிட்டேட் பண்ணுவேன்”.

“அப்படி ஒரு ஞாபகங்கள் எனக்கு உங்களை பத்தி. திடீர்ன்னு உங்களை இப்படி பார்த்தவுடனே எனக்கு ஷாக். தாத்தாகிட்ட உடனே  போன்ல பேசினேன். நீங்க உங்க அப்பாவோட போயிடீங்கன்னு சொன்னாங்க. என்னவோ அன்னைல இருந்து உங்க ஞாபகம் தான் நிறைய எனக்கு. தாத்தா கிட்ட பேசி. உங்க மாமா கிட்ட பேசி. ஜாதகம் வாங்கி. பொருத்தம் பார்த்து. எங்க அப்பாவ கன்வின்ஸ் பண்ணி. இப்படி நிறைய வேலை பார்த்து. நடுவுல நடுவுல உங்களை பார்த்து. பாருங்க நான் பேசும்போதே மூச்சு வாங்குது”.

“ இவ்வளவு வேலை பண்ணி இருக்கேன். நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு என்னை பிடிக்கலைன்னு சொன்னா எப்படி.”, என்றான்.

இப்போது உஷா உணர்ந்தாள் அவர்களை தாண்டி கிரி மாடிஎறிக்கொண்டு இருந்தான். அநேகமாக அவளுடைய ஹாஸ்பிடல் ரூமிற்கு போவான் என்று அனுமானித்த உஷா அவனையே பார்த்துகொண்டிருந்தாள். அதற்குள் ஆனந்த் அவளை நோக்கி, “என்னங்க.!”, என அழைக்க.

“சரி அப்ப ஒண்ணு பண்ணலாம். கொஞ்சம் டைம் குடுங்க. யோசிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு பிடிக்கலைன்னு சொல்லறேன்.”, என்றாள் உஷா. ஏனோ இப்போது உஷா மறுபடியும் பார்ம்மிற்கு வந்திருந்தாள்.

“பாருங்க சார். நீங்க டாக்டர் நிறைய படிச்சிருக்கீங்க. ஒரு ஹார்ட் சர்ஜன் கூட. அதனால தான் இவ்வளவு பொறுமையா பேசினேன். நீங்க பெரியவங்க மூலமா அப்ரோச் பண்ணுனீங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். வீட்டுக்கு வர சொல்லி. மறுபடியும் கொஞ்சம் குழப்பி. இப்படியெல்லாம் ஆயிடுச்சுன்னு பொறுமையா பேசினேன். நீங்க உங்க மரியாதையை காப்பாதிக்குவீங்கன்னு நினைக்கிறன். திரும்பவும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என் முடிவு மாறாது.” என்றாள்.

“நால்லா தானே போச்சு. என்ன ஆச்சு. என்று முழித்தான் ஆனந்த். ஆனாலும் வாக்கு வாதத்தில் இறங்காமல், “சரி விடுங்க. டென்ஷன் ஆகாதீங்க. Why don’t we be friends.”என்றான் கையை நீட்டியவாறே.

நீட்டிய அவன் கைகளை பார்த்த உஷா, “ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. நான் போறேன்.”, என்று பதிலை கூட எதிர் பார்க்காமல் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவளுடைய ரூமை நோக்கி சென்றாள்.

ஆனந்த்திற்கு  திடீரென்று என்ன ஆயிற்று என்று புரியவில்லை. அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். உஷா ஆனந்திடம் சாதாரணமாக தான் பேச ஆரம்பித்தாள். சொல்லப்போனால் ஆனந்திற்கு எல்லோரையும் பேச்சில் மயக்கிவிடும் தன்மை இருந்ததை சில நிமிடங்களிலேயே உணர்ந்தாள். ஆனால் அதற்கெல்லாம் உஷா அசைய மாட்டாள். கிரி அங்கே வருவதை பார்த்தவுடனே ஆனந்திடம் இன்னும் உற்சாகமாக பேசலானாள்.

ஆனால் கிரி அவர்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றவுடனே என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. அதுவுமில்லாமல் இந்த மாதிரி சகஜமாக பேசும் தன்மை ஆனந்த் மனதில் இன்னும் அதிகமாக எண்ணங்களை வளர்த்து விட்டால் தேவை இல்லாமல் தான் தவறு செய்தது போல் ஆகிவிடும் என்று உணர்ந்து நிமிடத்தில் இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

அதுதான் உஷா. அவளை இந்த மாதிரி மற்றவர்களோடு  ஒரு பேச்சுக்காகவேனும் யாரும் ஒரு சொல் பேச இடம் குடுக்க மாட்டாள்.  அவளை திமிரான பெண் என்றும் யாருக்கும் மரியாதை குடுக்கமாட்டாள் என்றும் சிறு வயதில் இருந்தே பேச்சு உண்டு. ஆனால் மற்றபடி யாரும் தவறாக ஒரு சொல் பேச இடமே இருக்காது.

அவளுடைய ரூமிற்கு சென்று பார்த்தால் கிரி இல்லை. அங்கே கணேஷும் கலைவாணியும் இருந்தனர். அவர்கள் உற்சாகமாக அவளை பார்த்தவுடன், “அக்கா எப்படி இருக்கீங்க.”, என.

அவர்களிடம் அவள் சகஜமாக பேசினாலும் முழு கவனமும் அங்கே இல்லை. மற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியா விட்டாலும்கூட கணேஷிர்க்கு தெரிந்தது.

அவளை நோக்கி, “ஏதாவது பிரச்சனையா. ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா இருக்கீங்க. “, என்றான்.

உடனே சித்தி அவளை நோக்கி, “முடியலையா கண்ணு. எங்கேயாவது வலிக்குதா. சிஸ்டர் கிட்ட சொல்லட்டுமா. படுத்துக்கறியா.?”, என்றார் கரிசனமாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தி. கொஞ்சம் டயர்டா இருக்கு. மற்றபடி நான் நல்லா இருக்கேன். யாராவது வந்தாங்களா.”, என்றாள்.

“இல்லையே கண்ணு.”, என்றார்.

“ஏன் அக்கா. யாரையாவது எதிர் பாக்கறீங்களா.?”, என்றான் கணேஷ். அவன் ரொம்ப ஷார்ப் சட்டென்று விஷயத்தை கணித்து விடுவான்.

“இல்லையே.”, என்றாள் உஷா சிறிது தடுமாற்றத்தோடு.

“ஏம்மா தனியாவா வந்த. கிரி தம்பி வரேன்னு சொல்லிச்சு”, என கேட்டார் சித்தி.

“அவங்களோட தான் வந்தேன் சித்தி. மேலே வர்றதை பார்த்தேன்.”, என்றாள்.

“நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.”,  என்றான் கணேஷ்.

“அது டாக்டர் ஆனந்த் கூட பேசிட்டு இருந்தேன்.”,

“அவங்க நமக்கு தெரிஞ்சவங்களா.”, என்றான் கணேஷ்.

என்ன சொல்வது என்று தெரியாத உஷா சட்டென்று அவனிடம் கோபப்பட்டாள்.  “நீ என்ன என்னை பார்க்க வந்தியா. இல்லை இன்டெர்வியு எடுக்க வந்தியா.”, என்றாள்.

அவளிடம் சிறிது பதட்டத்தை உணர்ந்த கணேஷ், “என்னக்கா ஏதாவது பிரச்சனையா.”, என்றான்.

“ப்ளீஸ். நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா.”, என்றாள்.

கணேஷிர்க்கு தெரியும் உஷா முடிந்தவரை பொய் பேச மாட்டாள். பதில் சொல்ல விருப்பமில்லை என்றாள் அமைதியாகி விடுவாள். அதைத்தான் இப்போது அவள் செய்வதாக தோன்றியது.

“சரி தூங்கு.!”, என்றான். அமைதியாக ஏறி படுத்துக்கொண்டாள். எப்பொழுதுமே கணேஷ் உஷாவிடம் பேசும் பொழுது அவன் தம்பி இவள் அக்கா போல தோணாது. இவன் பெரியவள் போலவும் அவள் சிறியவள் போலவும் தோணும்

அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஊருக்கு போன அப்பா திடீரென ஒரு அக்காவை கூடிக்கொண்டு வந்தார். நீ தான் இவளை பார்த்துக்கொள்ள வேண்டும், என்று சொன்னார். அவர் குழந்தைகள் ஒருவரிடத்தில் ஒருவர் நன்றாக பழக வேண்டும் என்று கூறிய ஒன்று அவன் மனதில் ஆழபதிந்து விட்டது.

அன்றிலிருந்து அவள் தேவைகளை அவன் பார்த்து பார்த்து செய்வான். கலைவாணிக்கு அவள் அண்ணன் தான் ஹீரோ. அவன் எது சொன்னாலும் செய்வாள். அவனுக்கு உஷாவை பிடித்து விட்டதால் அவளுக்கும் பிடித்து விட்டது.  கலைவாணி கூட அவனுக்கு இரண்டாம் பட்சம் தான்.

ஆனால் உஷா யாரிடத்திலும் சரியாக பழக மாட்டாள். அவளை அவளுடைய உலகத்திலிருந்து வெளியே வர வைப்பதற்குள். ஆனால் அவளை படிக்க வைக்க மட்டும் முடியவில்லை. உறுதியாக மறுத்து விட்டாள்.

அவள் வேலைக்கு போகாமல் கூட குடும்ப சூழ்நிலையை சமாளித்து விடுவார்கள். கணேஷ் கூட இந்த இரண்டு மூன்று வருடங்களாக பக்கத்தில் உள்ள டாக்டரின் கிளினிக்கிற்கு நோயாளிகளை உள்ளே அனுப்பும் வேலை பார்த்து வந்தான்.

ஆனால் அவள் வீட்டில் இருந்தாள் இன்னும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பாள் என்று தான் அவளை அவன் அம்மாவோடு வேலைக்கு போக அனுமதித்ததே. எல்லா பையன்களை போல் இல்லாமல் குடும்ப சூழ்நிலை உணர்ந்த பொறுப்பான பிள்ளை.

அதைவிட அவனுடைய அக்காவை நன்கு புரிந்து வைத்திருந்தான். ஓரளவு கணேஷ் இருந்ததால் தான் மற்றவர்களால் உஷாவை சமாளிக்க முடிந்தது.

உஷாவிற்க்கு தூக்கம் வந்ததோ இல்லையோ கண்களை மூடி படுத்துகொண்டாள். அவளுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. இரண்டு நாட்களுக்குள் மிக அதிகமான நிகழ்வுகளை பார்த்தது போல் தோன்றியது.

அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. யார் வந்தாளும் கண்களை திறக்கக்கூடாது என முடிவெடுத்து தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். இல்லையென்றால் இந்த கணேஷ் கேள்வி கேட்டே ஒரு வழி செய்து விடுவான் என்று தெரியும்.

கிரி அங்கே ரூமிற்கு வெளியே சற்று தள்ளி வெளியே பால்கனி மாதிரி இருந்தது. அங்கு நின்று கொண்டு இருந்தான். ஏனோ நந்தினி வராமல் செல்ல மனமில்லை. அவளுக்கு போன் செய்து அவள் வருவதற்காக காத்து இருந்தான்.

அவன் உஷாவையும் ஆனந்த்தையும் கடக்கும் போது…………………… என்னை பிடிக்கலைன்னு சொன்னா எப்படி…………………. என்று ஆனந்த் உஷாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவள் பிடிக்கவில்லை………………. என்று கூறிவிட்டாள் என்று தெரிந்து சற்று நிம்மதியாக இருந்தாலும், யார் அவன் அவளை பார்த்து அப்படி கேட்க………………… என்று கோபம் வந்தது. இத்தனை நாட்கள் தான் அவளை பார்க்கவேயில்லை என்பது அவனுக்கு உரைக்கவேயில்லை.

இப்படி அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே, கணேஷும் அவன் அம்மாவும் வெளியே வந்தார்கள். இவன் இருந்த பக்கமாக தான் வந்தார்கள். இவன் சற்று உள் இருந்ததால் மாலை நேரம் என்பதால் இவன் இருப்பதை கவனிக்கவில்லை.

“என்னம்மா அக்காக்கு என்ன ஆச்சு.”, என்றான்.

“தெரியலை கண்ணு. அங்க கொஞ்சம் பிரச்சனையாச்சு. ஆனா அவளே சமாளிச்சிட்டா.”, என்று நடந்ததை முழுவதுமாக சொன்னார்.

“நம்ம வீட்டுக்கு வந்த புதுசுல தூக்கத்துல அழுவாலே. அந்த மாதிரி தூக்கத்துல இருந்து எழுப்புனப்போ அவ பாட்டிய வேற கேட்டா கண்ணு.”.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை கண்ணு. இத்தனை வசதி வாய்ப்ப வெச்சிட்டு அங்க என்னோட வேலைக்கு வந்துட்டு இருக்கா.  மனசுக்கு சங்கடமா இருக்கு. ஏதோ டாக்டர் மாப்பிள்ளை, அவங்க மாமா சொன்னாங்க. கடைசியில பார்த்தா அது இவ அத்தையோட அண்ணன் பொண்ண பார்க்க வராங்கன்றாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல்லை கண்ணு. நான் போய் யார் கிட்ட கேப்பேன் சொல்லு.”, என்றார்.

“அவளுக்கு அங்க போனதுல பழைய ஞாபகமா என்னவோ. அதனால வருத்தமா இருக்காளோ. என்னவோ தெரியலையே.”, என்றார்.

எல்லாவற்றையும் கணேஷ் கேட்டுக்கொண்டு இருந்தானே தவிர பதில் பேசவில்லை.

இவை எல்லாவற்றையும் கிரியும் கேட்டுக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் கழித்து சித்தி உள்ளே போக, கணேஷ் அங்கேயே நின்று கொண்டு இருந்தான்.

அவன் மட்டும் இருப்பதை பார்த்த கிரி வெளியே வந்தான். அவனிடம், “ஐ அம் சூர்ய கிரி வாசன்.”, என்று அறிமுகப்படுத்தி கொண்டான்.

சிறிது ஆச்சர்யமாக கணேஷ் அவனை பார்த்தான். மற்றபடி முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல், “ஹலோ.!”, என்றான்.

இப்போது ஆச்சர்யப்படுவது கிரியின் முறை ஆயிற்று. அவன் தன்னை பார்த்து கோபப்படுவான்., அதிர்ச்சியடைவான். இப்படி பலவித பாவனைகளை எதிர்பார்த்திருந்த கிரியிடம், சிறிதும் எந்த வித தயக்கமும் இல்லாமல் ஒரு பதினேழு பதினெட்டு வயது பையன் தன்னை எதிர்கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.

“என்னை உனக்கு தெரியுமா.!”, என்றான் கிரி அவனை பார்த்து.

“பார்த்திருக்கேன் உங்க கல்யாணத்தப்போ.”, என்றான்.

“ஒஹ்.! என் கல்யாணத்துக்கு வந்து இருந்தியா”, என்றான்.

பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினான். கிரிக்கு அவனை பார்த்தவுடனே தெரிந்து விட்டது, இவன் மிகவும் தைரியமானவன் என்று.

“எனக்கு சரியா ஞாபகமில்லை.”, என்றான் கிரி.

“நீ எங்க யாரையாவது  பார்த்தியா.  உனக்கு பொண்ண பார்க்கவே நேரம் சரியா இருந்ததே.”, என மனதுக்குள் நினைத்த கணேஷ், “நீங்க ஞாபகம் வெக்க வேண்டிய எங்க அக்காவையே மறந்துட்டீங்க.”, என்றான்.

கிரி பதில் பேசாமல் அவனை பார்க்க. அவனும் சளைக்காமல் பதில் பார்வை பார்த்தான்.அவன் பார்வை மிகவும் கூர்மையாக இருந்தது கிரியை குற்றம் சாட்டியது. மெலியதாக புன்னகை புரிந்த கிரி, “தைரியம்டா தம்பி உனக்கு.”, என்றான்.

கணேஷ் மெளனமாக நின்றான். “என்னவோ தெரியலை உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு தைரியமான மனுஷங்களை ரொம்ப பிடிக்கும். சரி சொல்லு நீ என்ன பண்ணற.”, என்றான் கிரி அவனை பார்த்து.

கணேஷ் பதில் சொல்லாமல் அவனை பார்த்துக்கொண்டே நிற்க, “அட என்னப்பா நீ. இன்னும் எவ்வளவு நேரம் என்னை பார்த்து லுக் விடுவ நீ.”, என்றான் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு.

அந்த நேரம் பார்த்து நந்தினியும் அருணும் வர, நந்தினி கிரியை ஆச்சர்யமாக பார்த்தாள்.

கிரி பொதுவாகவே யாரோடும் அதிகம் பழக மாட்டான். ஒருவரோடு பழக்கம் வைத்துக்கொள்ள நிறைய யோசிப்பான். அப்படியே பழகினாலும்.  இப்படி க்லோசாக யாரோடும் தோள் மேல் கை போட்டு எல்லாம் அவள் பார்த்ததே இல்லை. கொஞ்சம் ஸ்டேட்டஸ் கூட பார்ப்பான். இவன் யாரோடு இப்படி நிற்கிறான் என்று ஆச்சர்யமாக பார்த்தாள்.

அருண் அதற்குள் கிரியை நோக்கி, “யார் கிரி இது.”, என்க “ப்ரத்யுவோட தம்பி மாமா.”, என்றான்.

ஏனோ கணேஷிர்க்கு அந்த இடத்தை விட்டு போக வேண்டும் போல தோன்ற, கிரியை பார்த்து “நான் போகட்டுமா சார்.”, என்றான்.

கிரி அவனிடம், “சர்ன்னு  கூப்பிடாதப்பா. நான் உனக்கு மாமா ஆகணும். அதனால அப்படியே கூப்பிடு. ப்ரத்யு கூட அப்படிதான் கூப்பிடுவா.”,  என்றான்.

“அக்கா கிட்ட கேக்கறேன்.”, என்று அவனை பார்த்துவிட்டு போக.

அருண் கிரியை  பார்த்து, “என்னடா இவன் உன்னை பார்த்து நீ. நல்லவனா. கெட்டவனா. அப்படின்னு லுக்கு விடறான்”.

“அட. நீங்க வேற மாமா. இவ்வளவு நேரமா கெட்டவன்னு தான் லுக் விட்டான். இப்போ போகும்போது தான் நீங்க சொல்லற மாதிரி கொஞ்சம் மாத்தி இருக்கான்”.

“இப்போதைக்கு இவனையெல்லாம் பகைச்சிக்க கூடாது. இவன் ப்ரத்யுவோட கொஞ்சம் க்ளோஸ்னு நினைக்கிறேன். என்னை முறைச்சு பார்க்கிறான்.”, என்றான்.

“என்ன முறைச்சு பார்க்கறானா.! அதுக்காக நீ ஏன் அவன இவ்வளவு கன்சிடர் பண்ணனும்.”, என்றாள் நந்தினி. அவளுக்கு சொத்து பத்தின விவரங்கள் தெரியாது.

“அவன் என் பாஸ்ஸோட தம்பி. இந்த ஒரு குவாலிபிகேஷன் போதாது. பாஸ்ஸ கூட பகைச்சுக்கலாம். ஆனா பாஸ்க்கு க்ளோஸ் ஆனவங்களை பகைச்சுக்கவே கூடாது. என்னோட ட்ரைனிங் சமயத்துல நான் கத்துகிட்ட ஒரு விஷயம் இது.”,  என்றான்.

“யார் உன்னோட பாஸ். என்ன உளர்ற.”,

“உளறல.! ப்ரத்யு தான் என்னோட பாஸ்”.

“புரியற மாதிரி சொன்னா பரவாயில்லை.”, என்றான் அருண்.

“மாமா ப்ரோபெர்டி நிறைய அவ பேர்ல இருக்கு. நான் நினைக்கறேன் நம்ம கன்செர்ன்ல அவ மேஜர் ஷேர் ஹோல்டர். சரியா எதுவுமே தெரியல்லை. அவ நாலேட்ஜ் இல்லாம அப்பா நிறைய பண்ணியிருக்காங்க. அவ எதுவும் எதிர்ப்பு தெரிவிக்காததுனால ப்ராப்லம் வரல.”,

“நம்ம வளர்ச்சி நமக்குள்ளயே இருந்ததினால தெரிவிக்களை. ஆனா நான் இப்போ போறது இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட். நம்ம ஓவர் சீஸ் போறோம். எல்லாமே பக்காவா இருக்கணும். அக்ரிமெண்ட் போட்டுட்டேன். கான்சல் பண்ணா ஹெவி லாஸ். அதுமட்டுமில்லாம நம்ம ரெபுடேஷன் ஸ்பாயில் ஆயிடும் .”,

“ஏன் அவ ஏதாவது சொல்றாளா.”,

“இல்லை அவ சண்டை போட்டான்னா. எங்களோடது இதுன்னு நானும் சண்டை போடுவேன். . நிமிஷத்துல அவளை அவுட் ஆப் போகஸ் பண்ணிடுவேன். ஆனா இது எல்லாம் அவ பேர்ல இருக்குன்னு தெரிஞ்சும் அமைதியா தான் இருக்கா.  இன்னும் சொல்லபோனா பேப்பர்ஸ் எல்லாம் அவ கிட்ட இருக்கு. ஆனாலும் எது வேணுமோ எடுத்துக்கோங்க. அப்படின்றா.”,

“எடுத்துக்கோன்னா.! எடுத்துக்க வேண்டியது தானே. அதுக்கு சமமா வேற ஏதாவது குடுத்துடலாமே.”, என்றான் அருண்.

“அது பாஸிபில் இல்லை மாமா.”, என்றான் கிரி.

“ஏன்.?”, என அருண் கேட்க கிரிக்கு அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. என்ன கூறுவான் அவன். என்னை வேண்டாம்னு சொல்லறா. அதனால சொத்தும் வேண்டாம்னு சொல்லறா. என்றா சொல்ல முடியும்.

“இனி பேசி ஒண்ணும் ஆகபோறதில்லை மாமா. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நம்ம ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் டேக் ஓவர் பண்ணியாகணும். அதுக்காக நான் எனக்கு பிடிக்குதோ இல்லையோ யாருக்கு பிடிக்குதோ இல்லையோ சில வேலைகளை பண்ணியாகணும். நோ அதர் கோ.!”,

“நந்து நீ என்ன பண்ணற, நாளைக்கு அவ டிஸ்சார்ஜ் ஆகும்போது நம்ம மெயின் ஆபீஸ் வர சொல்லு. சில பேப்பர்ஸ்ல சைன் பண்ணனும்னு சொல்லு.”,

“அவ வரமாட்டேன்னு சொன்னா.!”,

“வருவா ஒண்ணும் சொல்ல மாட்டா நீ கூட்டிட்டு வா.”, என்றான்.

போனில் தனது தந்தையிடம், “அப்பா நீங்க லாயர் கிட்ட பேசி. என்கிட்ட பேச சொல்லுங்க. நான் சொல்லற மாதிரி சில பேப்பர்ஸ் ரெடி பண்ண சொல்லுங்க.”, என்று விவரங்களை சொல்ல.

“நீ என்ன சொல்றன்னு புரிஞ்சு தான் சொல்லறியா. நீ என்னோட வாரிசு அதை மறந்துடாத.”, என்றார்.

“அதை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை. உங்களுக்கு எப்படி உங்க பொசிஷன் முக்கியமோ எனக்கும் அப்படிதான். என்ன நீங்க உங்க மனைவிய பத்தி மட்டும் நினைச்சிடீங்க. ஆனா எனக்கு என் மனைவி. குழந்தைங்க. என் அப்பா அம்மா. எல்லோரும் முக்கியம்.”.

“நீ உஷாவை ஈஸியா எடுத்துக்கற. அப்படி கிடையாது அவ. எல்லாம் இருந்தும் எதுவுமே அவ உபயோகிக்களை அதுக்கு ரொம்ப மன தைரியம் வேணும். யோசிச்சுக்கோ.”, என்றார்.

“அப்பா நான் சொன்னதை மட்டும் செய்ங்க.”, என்றான்.