Advertisement

அத்தியாயம் பத்து:

 கிரிக்கு என்ன வென்று புரியாத நிலை. நடந்ததற்கும் தானே பொறுப்பு. இனி நடக்கபோவதற்க்கும் தானே பொறுப்பு. நடந்தது தன்னுடை அஜாக்ராதையால் அலட்சியத்தால் அல்லது பெற்றவர் மேல் வைத்த நம்பிக்கையால் இல்லை. அதெல்லாம் சில காரணங்கள்தான் என்றாலும்கூட உண்மையில். உஷாவை அவன் மறக்கவில்லை. என்றாலும் அவள் அவனுடைய ஞாபகத்தில் இல்லை.?????????????

அவள் குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்தது போல அவன் அவளை மறந்துவிட்டான். அவன் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் யாராலும் தடுத்திருக்க முடியாது. அவனை பெற்றவர்கள் சந்தர்பம் அமையாமல் பார்த்துகொண்டிருக்கலாம் ஆனால் அவன் நினைத்திருந்தால் அது முடியாத காரியமல்ல.

அவன் இயல்பிலேயே சிறு வயது முதலே family oriented manஇல்லை. சிறுவயது முதலே அவன் ஒரு பிசினஸ்மேனுடைய பையனாகவே ஒவ்வொரு விஷயத்திலும் இருப்பான். அவனுடைய தாத்தா அந்த கம்பெனியை தமிழ்நாடு அளவில் வளர்த்தார். விஸ்வநாதன் மிகவும் திறமையான பிசினஸ்மேன். அவருடைய அம்மா சேர்பெர்சன் ஆக இருந்தவரைக்கும் மிகவும் ரிஸ்க் எடுக்க விட்டதில்லை. அவர் போனா பிறகு இந்த ஆறேழு வருடங்களில் கம்பெனி என்பது போய் குரூப் ஓப் இண்டஸ்ட்ரீஸ் ஆகியிருந்தது.

அந்த வழி என்பதாலோ என்னவோ கிரி ஒரு  independent persona with big dreams ஆக இருந்தான். படிக்கும்போதே அவனிடத்தில் ஒரு தனித்துவம் இருக்கும். இன்னும் உயரங்களை எட்ட வேண்டும் என்பது அவனுடைய கனவோ கட்டாயமோ கிடையாது அது அவனுக்கு இயல்பான ஒன்று.  அவனை கணிப்பது என்பது இயலாது. ஆனால் சிறு வயதில் இருந்து பார்த்தாலோ என்னவோ இல்லை அதையும் மீறி ஏதோ ஒன்றோ இவன் செய்வது ஓரளவு உஷாவிற்கும் அவள் செய்வது ஓரளவு இவனுக்கும் தெரியும்.  

அவன் ஸ்கூல் படித்தவரை உஷா அவன் கவனிப்பில் கண்காணிப்பில் இருந்தாள்.

அவன் கல்லூரி சென்றவுடன் தொடர்புகள் மிகவுமே குறைந்தது. வரும்போது பேசும் இரண்டொரு வார்த்தைகள் அவ்வளவே. பாட்டி இறந்தவுடன் அவளை பார்த்தது. பிறகு எக்ஸாம் முடிந்து  industrial visit சென்று வந்து அவளை கேட்கும் போது அவள் தந்தையுடன்   இருந்ததால் விட்டு விட்டான். பிறகு கல்லூரி முடித்து ஹய்யர் எஜுகேஷன் முடித்து.

அவன் யோசனை எல்லாம் பிசினஸ். பிசினஸ்.  பிசினஸ்.  மட்டுமே. லண்டனில் ட்ரைனிங் பீரியட் போனதே அங்கே ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸில் நுழைய வேண்டும் என்பதற்காக தான். அவன் தந்தை அங்கே அனுப்பிய போதிலும் அவனுடைய திட்டத்தை  அவன் தந்தையிடம் கூட ஆலோசிக்கவில்லை.

 நடுவில் நீரஜாவுடன் திருமணம். திடீரென்று நிகழ்ந்த நிகழ்வு. ஏதேதோ காரணங்கள் கூறி கட்டாயத்தால் நிகழ்ந்தது. ஆனால் அங்கேயும் மறுக்க முடியாத உண்மை நீரஜாவை அவனுக்கு பிடித்திருந்தது. இல்லையென்றால் யார் என்ன செய்திருந்தாலும் திருமணம் நடந்திருக்காது. முடிந்து இரண்டு நாட்களில் அவன் கிளம்ப வேண்டிய சூழல் அங்கே சென்று அவளை அழைக்க மிகுந்த முயற்சி எடுத்தான். முதலில் வீசா ப்ராப்லம் பின்பு ட்வின் பேபிஸ் அவளுடைய உடல் நிலை முடியவில்லை.

இதற்கு நடுவில் உஷா அவன் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவளோடான இன்சிடன்ட்ஸ் ஏதாவது வேலைக்கு நடுவிலோ இல்லை வெளியே போகும்போதோ நினைவில் வரும். ஆனால் அதையும் மீறி அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவலோ, அவளை மிஸ் செய்வது போன்ற உணர்வோ எழுந்ததில்லை. அதிகம் தன்னுடைய உணர்வுகளை யாரிடமும் அவன் பகிர்ந்ததில்லை. இப்படி உஷா அவனை நினைத்துகொண்டிருப்பாள் என்பது அவன் நினைக்காத ஒன்று.

இப்போது அவன் உஷாவை தேடியது. பார்த்தது. எல்லாம்.????????????????????.

அவனுள் மிகுந்த குற்ற உணர்ச்சியாக இருந்தது. அது தெரிய வரும் போது.?

ஆனால் அவளுக்கு தெரிந்திருக்குமோ என்று தோன்றியது. விளைவுகள்.

பாட்டி தன்னிடமாவது பேசி இருக்கலாமோ என்று தோன்றியது. இனி இவளை விடுவது என்பது முடியாது. ஆனால் இவள்.????????????????

யோசனைகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்காக காலம் ஓடாமல் நிற்காதே. 

“நந்தினி.” என்றான் அருண். “இன்னும் கொஞ்ச நேரத்தில மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துருவாங்க. நீங்க எல்லாரும் இப்படி இருந்தா எப்படி.?. நம்ம தான் ஆரம்பிச்சோம். நல்லபடியா விஷயங்களை கொண்டு போவோம். அப்புறம் என்ன நடக்கனுமோ நடக்கட்டும்.” என்றான்.

அழுது ஓய்ந்திருந்த நந்தினியும் குழந்தையோடு வெளியேறினாள். அருண் கிரியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளோடு சென்றான்.

கிரிக்கு உஷாவோடு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அமைதியாகவே இருந்தான்.

உஷா இப்போது சற்று தெளிவாகி இருந்தாள். அவன் பேச விழைந்த போது,“நம்ம அப்புறம் பேசலாம் போய் வேலைய பாருங்க”, என்றாள்.

“நீ…………”, என்றான் கிரி

“நான் இங்கேயே இருக்கேன் நான் வந்தா தேவையில்லாம ஏதாவது பேச்சுவரும் நீங்க போங்க”, என்றாள்.

கிரி பிறகும் தயங்க,“பயம் வேண்டாம்………. நான் தனியா இருப்பேன். இது என்னோட ரூம் போங்க. நான் கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன்”, என்றாள்.

கிரி வெளியே வரவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது. ஒரு பெரிய கும்பலே உள்ளே நுழைந்தது. இத்தனை பேரை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. கிராமத்து ஆட்கள் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது. சில பேர் மட்டுமே அதில் நாகரீகமாக தோற்றாமலித்தனர். கிரிக்கு மலைப்பாக இருந்தது பிஸினஸ் டீலிங்க்ஸ் என்பது வேறு பாமிலி மேட்டர்ஸ் என்பது வேறு.

பிஸினஸில் விட்டால் அடித்து நொறுக்கிவிடுவான். இவர்களை எப்படி டீல் செய்வது.

காலையிலேயே அவன் தந்தை கூறிவிட்டார். “நான் உஷா என்று தான் அவர்களை வரச்சொன்னேன். அவர்கள் பேசியவரை அவர்களுக்கு உஷா மேல் தான் விருப்பம் இருப்பது  போல் தெரியுது. பெண் மாறியதை அவர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. நான் என்ன வென்று சொல்வேன்”, என்று விட்டார். “நீங்களே பார்த்துகொள்ளுங்கள்.”,. என்றார்.

இதென்ன பெரிய விஷயமா. என்று நினைத்தான். ஆனால் இத்தனை பேரை பார்த்தவுடன் தடுமாறினான்.

எல்லோரும் வந்து விட ஆளுக்கொருவராக உபசரித்தார்கள். கிரி நந்தினியை பார்க்க நந்தினி கிரியை பார்த்தாள். அங்கே அவனுடைய தாத்தா பாட்டி மாமனார் மாமியார் என்று அனைவரும் இருந்தனர். உபசரித்தவுடன் தங்கள் வேலை முடிந்தது என்பது போல் விஸ்வநாதனும் சாம்பவியும் அவர்களிடம் விஷயத்தை கூறாமல் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவசரமாக நந்தினியை கண்ஜாடை காட்டி கிரி அழைத்துச் சென்றான். உஷா இருந்த ரூமிற்குள் தான் சென்றனர். இஞ்சின் சென்றவுடன் செல்லும் பெட்டி போல் அருணும் பின்னோடு சென்றான்.

அங்கே போய் நந்தினியும் கிரியும் நீ சொல்லு. நீ சொல்லு. என்பது போல் வார்தையாடிகொண்டிருக்க உஷா என்னவென்று கேட்க இருவரும் முழித்தனர்.

 எப்படி அவளிடம் சொல்லுவார்கள். மாப்பிள்ளை வீட்டார் உன்னை பார்க்க வந்திருக்கிறார்கள். நாங்கள் வர்ஷாவிர்க்கு என்று மாற்றி விட்டோம். அதை அவர்களிடம் கூறி சம்மதம் பெறவேண்டும் என்று.

அருணிற்கு ஏனோ உஷாவிடம் மறைப்பது சரியாக படவில்லை. அவன் பட்டென்று விஷயத்தை போட்டு அவளிடம் உடைத்துவிட்டான்.

விஷயத்தை கேட்ட உஷாவிடம் சிறு யோசனையை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

நந்தினியும் கிரியும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார்கள்.

 சாம்பவி உள்ளே வந்தார். அவர்களை நோக்கி, “இங்கே வந்து உக்கார்ந்துட்டா. என்ன செய்றது.? வர்ஷாகிட்ட வேற சொல்லிடீங்க. இவளுக்கு வேனான்னா வேண்டாம்னு சொல்லி இருக்கணும். வீடு வரைக்கும் கூப்பிட்டு இப்போ என்ன சொல்லறது.”,  என்றபடி முறைத்தார்.

“கல்யாணம்னா சாதாரணம்னு நினைச்சீங்களா. யார் பேசுவா அவங்களோட. எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா. சின்னபசங்க பன்னாட்டம்ன்றது சரியாத்தான் இருக்கு. அவங்க யார் தெரியுமா. நமக்கு எத்தனை வருஷ பழக்கம் தெரியுமா. அந்த அப்பா காங்கேயத்துல பெரிய ஆளுங்க. அவங்க பையன் ஹை கோர்ட்ல ஜட்ஜ். ஜட்ஜ்  பையனுக்கு தான் பார்க்க வந்திருக்காங்க. நம்ம வர்ஷா ஒண்ணும் குறைச்சல் கிடையாது. ஆனா இது தேவையில்லாதது அவளுக்கு என்ன குறைச்சல்ன்னு அவளைப் போய் அவங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்கணும். அவங்க உறவுகளுக்கு மத்தியில யார் பேசுவா.”, என்றார் கோபமாக. இதை கேட்க கேட்க உஷாவிர்க்கு எங்கோ உதைத்தது.

“கிட்ட தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே உஷாவுக்கு வேண்டாம்னு சொல்லிட்டோம். வர்ஷாக்கு பாக்கலாம்னு சொன்னதுக்கு சும்மா இருந்துட்டு இப்போ வந்து இந்த குதி குதிக்கறீங்க.”, என்றான் கிரி கோபமாக. 

இந்த விவரங்களை கேட்டிருந்த உஷாவிற்கு, “ஐய்யோ.!” என்றிருந்தது பிரச்சனை தெரிந்துவிட்டது. விடுபடுவது சாதாரணமில்லை.

கிரியை பார்த்து எரிச்சலாக வந்தது.

“என் விஷயம் ஏன் என்ன கேக்காம முடிவெடுத்தீங்க.”, என்றாள் கிரியை நோக்கி.

“என்ன உங்கிட்ட கேக்கணும். ஏன் உனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கனுமா.”, என்றான் கோபமாக.

அவனை பார்த்து முறைத்தாள்.

“கோபப்படறதுல பிரயோஜனமில்லை. நான் பேசறேன்.”, என்றபடி எழுந்தாள்.

“நீயா.!” என்றான் கிரி. இவள் என்ன பேசுவாள் என்ற சந்தேகத்தோடு.

ஆனால் ஒரே பார்வையில் அவனை அடக்கிய உஷா, “என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு இன்னும் உங்களுக்கு தெரியலை.  வாங்கண்ணா நம்ம போகலாம்”, என்றாள் அருணை பார்த்து. அருண் அவள் பின்னோடு செல்ல.

வெளியே வந்த உஷாவை பார்த்தார்கள். அவளுக்கு அந்த தாத்தாவை நன்றாக தெரியும். சாம்பவி பேசும்போதே அவளுக்கு தெரிந்து விட்டது யாரென்று.

அவளை பார்த்தவுடனே அவருக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை.

“என்னை தெரியல்லையா தாத்தா.”, என்றாள்.

 மனதிற்குள், “உங்களுக்கு தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன. உங்க பேரன் அந்த லூசுக்கு என்னை  நல்லா தெரியுமே. என்ன திட்டுனாலும் சிரிச்சிட்டே நிப்பானே. அவன் ஹார்ட் சர்ஜென்னா. மறுபடியும் ஐய்யோ என்றிருந்தது.”.

 “இந்த கிரி மடையன் என்ன செஞ்சு வெச்சிருக்கான். கொஞ்சம் முன்னாடி தெரிஞ்சிருந்தா கூட ஒண்ணு நான் எஸ்கேப் ஆயிருக்கலாம், இல்லாட்டி ஏதாவது பண்ணி அவங்களை வர விடாமல் பண்ணியிருக்கலாமே”.

கண்கள் அந்த ஆனந்த்தை தேடியது. அவனை இல்லை என்றவுடனே சற்று நிம்மதியானது.

“தெரியாமல் என்னம்மா. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லையா. ரொம்ப வளர்ந்துட்டே சட்டுன்னு தெரியல்லை”, என்றார் தாத்தா.

“தலைகாயம் பரவயில்லையாம்மா. மாமா சொன்னாங்க அடிபட்டுடுச்சுன்னு.”, என்றார்.

அவள் மிகவும் சாதாரணமாக இருந்தாள். தாங்கள் அவளை பெண் பார்க்க வந்திருப்பது போல் தெரியவில்லையே. அவருக்கு புரிந்து விட்டது ஏதோ சரியில்லை என்று. அவர் தன்னுடைய மகனையும் மருமகளையும் மனைவியையும் பார்த்தார். எல்லோர் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. ஆனந்த் வரவில்லை ஏதோ எமர்ஜென்ஸி கேஸ் என்று சிறிது நேரம் கழித்து வருவதாக இருந்தது.

அவர் விஸ்வநாதனை பார்க்க. அவர் கிரியை பார்க்க. கிரிக்கு பார்வை அனிச்சையாக உஷாவை நோக்கி திரும்பிற்று.

அவனுடைய சங்கடத்தை பொறுக்க முடியாதவளாக உஷா நிமிடத்தில் அந்த இடத்தின் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.

 பாட்டிக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். அதனால் அவர்களை உஷாவிர்க்குமே நன்றாக தெரியும். வீட்டு விஷேங்களுக்கு பாட்டியோடு அவள் அதிகம் சென்றதால் எல்லோரையும் நன்றாக தெரியும். நந்தினிக்கும் கிரிக்கும் தெரிவதை விட தெரியும். இவர்களுக்கு அதிகம் தெரியாது. அவள் சிறு பெண்ணாக இருந்தபோதே ஆனந்த் அவளோடு ஏதாவது வம்பு வளர்த்துக்கொண்டே இருப்பான். எவ்வளவு தான் அவனை தவிர்த்தாலும் எங்கிருந்து வருவான் என்று சொல்ல முடியாது.

 இப்போது இரண்டு மூன்று மாதங்களாக கண்ணில் பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றான். ஆனால் இவளுக்கு சரியாக தெரியவில்லை. ஆண்கள் வளர்ந்தவுடன் சிறிது மாறிவிடுகிறார்கள். அவளுக்கு எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருந்தது. சரியாக தெரியவில்லை. இப்போது இவர்களை எல்லாம் பார்த்தவுடன் புரிந்து விட்டது.      தனியாக அவர்கள் மட்டும் என்றால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் உறவுகளோடு வந்திருப்பதால் ஏதாவது என்றால் எல்லோருக்குமே தலை குனிவு.  

நந்தினியை பார்த்து, “அக்கா எல்லோருக்கும் சாப்பிட ஏதாவது குடுக்கலாமே.” என்றாள். எல்லோரும் அந்த வேலையை கவனித்தால் தாத்தாவிடம் தனியாக பேசமுடியுமா என்று பார்க்கலாமே என்று எண்ணினாள்.

வீட்டினராய் எல்லோரும் உபசரிப்பில் இறங்க அந்த தாத்தாவின் அருகில் போய் உட்கார்ந்து மெதுவாக, “நம்ம கொஞ்சம் பேசலாமா தாத்தா.”, என்றாள்.

அவர் என்ன என்பது போல் பார்க்க, “தனியா போயிடலாமா.”, என்று வினவினாள்.

ஆனால் எழுந்து போனால் என்னவென்று எல்லோரும் பார்ப்பார்களே. கையில் காபி இருக்க அதை சட்டையில் லேசாக கொட்டி தண்ணீர் தொட்டு துடைக்க என்பது போல் அவர்  எழுந்து போக பின்னோடு அவர் மனைவியும் போக.

 பின்னேயே உஷாவும் சென்றாள். கிரியை விஸ்வநாதனை கூட்டி வர சொல்லியபடியே. அருண் அவளோடு இருந்தான். தனியாக பேசினாள் அது மரியாதையில்லை என்பது அவளுக்கு தெரியும்.

தனியிடம் வந்தவுடனே, “என்னம்மா.?”, என்றார். அவர் கேட்கும் போதே அவருடைய மகனும் மருமகளும் வந்திருந்தனர். அவர்கள் முகத்தில் என்னவோ ஏதோவென்ற கலவரம் தெரிந்தது.

“அது தாத்தா நீங்க என்னை மன்னிக்கணும்.”, என்றாள்.

“ஏம்மா கல்யாணத்துல இஷ்டமில்லையா.?”, என்றார்.

உஷா அமைதியாக இருக்க அவருக்கு அதுதான் என்பது தெளிவானது.

ஆனாலும் நிதானத்தை கைவிடாமல், “முன்னமே சொல்லியிருந்தா. நாங்க வராம இருந்திருப்போமே. ஆனந்த்க்கு நான் என்ன சொல்வேன். ஏன் என்னாச்சு திடீர்ன்னு. காலையில உங்க மாமா தானேம்மா எங்களை வர சொன்னாங்க. சரி என் பையனும் கோர்ட் லீவ்ல இருந்தான். உடனே கிளம்பி வந்துட்டோம். எங்க கூட்டமே கொஞ்சம் பெருசு யாரையும் விட முடியல்ல எல்லாரும் வேற வந்திருக்காங்க. என்னம்மா பண்றது இப்போ.” என்றார் தவிப்புடன்.

“தாத்தா. தப்பு என்னோடதுதான்”, என்று எல்லாப் பழியையும் தூக்கி தன் மேலேயே போட்டுகொண்டாள். கிரி ஏதோ சொல்லவர பார்வையாலயே அவனை அடக்கி, “எங்கிட்ட சொல்லிட்டு தான் தாத்தா எல்லா ஏற்பாடும் செஞ்சாங்க. நானும் சரின்னு தான் சொன்னேன். இப்போ எனக்கென்னவோ சரியாவரும்னு தோணலை.”, என்றாள்.

அவளுடைய மறுப்பு அந்த இடத்தில் அவசியம் என்பதை போல் உணர்ந்தாள். வேறு ஏதாவது பேசினாள் அவளை கன்வின்ஸ் பண்ண அவர் முயல்வார் என்று தோணியது.

விஸ்வநாதன் அவளை ஆச்சரியமாக பார்த்தார். இந்த திருமண ஏற்பாடு செய்தது அவளுக்கு தெரியவே தெரியாது. ஆனாலும் ஏன்.? ஏன் இப்படி பேசுகிறாள்.? என்று பார்த்தார்.

“மாப்பிள்ளையையே பார்க்காம எப்படிம்மா முடிவு செஞ்சே.” என்றார் அந்த தாத்தா.

இதற்கு என்ன பதில் சொல்வது. எனக்கு அவனை தெரியும் என்று சொல்வதா. இல்லை ஞாபகம் இருக்கு என்று சொல்வதா. என்று உஷா யோசிக்கும் போதே அவருடைய பையனின் செல் அடித்தது. “அப்பா கிளம்பிட்டேன்.”, என்றான் ஆனந்த் போனில்.

அவனை வர வேண்டாம் என்று சொல்லபோகிறார் என்று உணர்ந்து கிரி, “அவரை வர சொல்லுங்க அங்கிள்.”, என்றான். அவனுக்கு என்ன தெரியும் பையனுக்கு உஷாவை மிகவும் பிடித்து தான் வருகிறான் என்று. தெரிந்தால்.?

இப்போது உஷாவிர்க்குமே தோன்றியது வர்ஷாவிர்க்கு அவன் ஒ. கே. சொல்லிவிட்டால் பரவாயில்லை என்று. ஆனால் நடக்குமா.?.

“எதுக்கு.?”, என்றார் அவர்.

“ப்ளீஸ் வர சொல்லுங்க.”, என்றாள் உஷா. அவளுக்கு இந்த விஷயம் வளர்வதில் உடன்பாடில்லை முடித்துவிட விரும்பினாள். எல்லாவற்றியும் விட அவளுக்கு இது ரொம்ப முக்கியம் இப்பொழுது .

“என்னம்மா குழப்பர. இப்போதானே கல்யாணம் பண்ண முடியாதுன்ன. அவன் வந்து என்ன செய்ய போறான்.”, என்றார்.

“சாரி அங்கிள். என்னோட சில பெர்சனல்  ப்ராப்ளம்ஸ்னால இப்படி ஆயிடுச்சு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நான் ஒரு யோசனை சொல்லட்டா.”, என்றாள்.

அதற்குள், “ஹலோ அப்பா.”, என்று ஆனந்த் போனில் கத்த, “வா.”,  என்று ஒற்றைசொல்லாக சொல்லி அவருடைய கோபத்தை காண்பித்தார்.

“அங்கிள். எங்க அத்தையோட அண்ணா பொண்ணு. எம் பி பி எஸ் பைனல் இயர்ல இருக்காங்க. வர்ஷான்னு பேரு. அப்பா அம்மா ரெண்டு பேரும் கூட டாக்டர்ஸ் தான் அவங்களை பார்க்கலாமா. உங்க எல்லோருக்கும் பிடிச்சு, அவங்களுக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.”,, என்றாள்.

எல்லோருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“நான் ஆனந்த் கிட்ட பேசிட்டு சொல்றேன்மா.”,  என்றார்.

“உன்னை அவன் சின்ன வயசுல பார்த்திருக்கான். இந்த சம்மந்தம் வந்தப்போ எல்லோரையும் விட இன்ட்ரெஸ்ட் காட்டினது அவன்தான். தப்பா எடுத்துக்காதம்மா. நம்ம உண்மையா பேசிக்கறது பெட்டர்.”, எனக்கூறி தான் ஒரு நீதிபதி என்று நிரூபித்தார்.

“சொல்லுங்க அங்கிள்.”

“நீ கொஞ்ச நாள் உங்க அப்பா வீட்ல இருந்த, அவர் ஐ பீ குடுத்த மனுஷன். நிதி நிறுவன ப்ராப்ளம்ல வேற இருந்தார்.  நீ வேலைக்கு வேற போன. இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவாராதுன்னு நினைச்சேன். நீ படிக்கலைன்றது ஒரு பெரிய  டிரா பாக்”.

“இதையெல்லாம் நாங்க சொன்னப்போ கூட. நோ ப்ரோப்லம் பா நான் தான் இவ்வளவு படிச்சிருக்கனே, அப்படின்னுட்டான். அவன் ரிபீட்டடா பேசுனதால தான் ஒத்துக்கிட்டேன். சொல்லப்போனா நீ சொல்லறது பெட்டர் ஆப்ஷன் தான். நாங்க ஹாப் மைன்ட்ஆ தான் வந்தோம். தாத்தாவும் பேரனும் தான் ரகளை. நீ அவனோட தான் பேசணும். இது அவன் டிசைட் பண்ணனும்.”, என்றார் பட்டென்று.

உஷாவினுடைய திருமண பேச்சு மட்டுமென்றால் அவர் பேசும் பேச்சிற்கு.,  ஒரே நிமிடத்தில் முடியாது போடா.! என்று தூக்கி எறிந்துவிட்டு போய் இருப்பாள்.

வர்ஷாவிடம் வேறு தேவையில்லாமல் சொல்லியாகிவிட்டது. இது கிரி ஆரம்பித்து வைத்தது.

மேலும் ஆனந்த் அவ்வளவு சுலபமாக அவளை விடுவான் என்று தோன்றவில்லை. கிரியிடம் இதை கூற முடியாது. இந்த விஷயம் சுமுகமாக முடிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கிரி மற்றவர்களிடம் பேச தயங்குகிறான் என்பதற்காக மட்டுமே வந்து தப்பை தன் மீது போட்டு பேசினாள்.

 அவர் அந்த மாதிரி பேச அவள் மனது வருத்தப்பட்டது. அவருடைய மகன் அவளை பார்த்து விடும் ஜோள்ளில் தமிழ்நாட்டுடைய தண்ணீர் பிரச்சனையே தீர்ந்து விடும் என்பது அவள் மட்டுமே அறிந்தது.

 இவர் என்னடா என்றால். வர்ஷா பெட்டர் ஆப்ஷன்னா. அவள் விஸ்வநாதனை பார்த்தாள். அவர்கள் சொல்லும் அவளுடைய நிலைக்கெல்லாம் காரணம் அவர்தானே. கிரியை திரும்பி எல்லாம் உன்னால் தான் என்பது போல் பார்த்தாள். எல்லாப் பிரச்சனைகளும் அவளுக்கு மறந்து ஆனந்த் பிரச்சனை மட்டுமே பெரியதாக தோன்றியது. 

கிரிக்கு தோன்றியது யார் இவர்கள் தங்கள் முன்னால் நின்று தங்கள் வீட்டு பெண்ணையே விமர்சிக்கிறார்கள். வர்ஷா தனக்கு பிரச்சனை ஆகிவிடக்கூடாதே என்று தான் சொன்ன யோசனை இப்படியாகிவிட்டதே. யார் அவன் அந்த ஆனந்த். அவனோடு போய் உஷா ஏன் பேச வேண்டும். என்ன ஆனாலும் சரி முடியாது. என்று மனதிற்குள் நினைத்தவனாக 

 “பாருங்க அங்கிள். தப்பு எங்க மேல அப்படிங்கறதுக்காக மட்டும்தான் இந்த யோசனை.  கிட்டதட்ட ரெண்டு மாசமா இந்த பேச்சு வார்த்தை நடக்குது. எல்லாமே முடிவான மாதிரிதான்னு அப்பா சொன்னதால. நீங்க ஒரு மரியாதைக்குரிய மனிதர் அப்படின்றதால  இந்த மாதிரி ஒரு யோசனைய சொன்னோம்”.

 “எங்க ஸ்டேடஸ் பத்தி உங்களுக்கு தெரியாததில்லை. மனுஷங்க எங்களுக்கு முக்கியம் அப்படின்னு நினைக்கறதுனால தான் இப்படி. உங்களுக்கு இஷ்டமிருந்தா பாருங்க இல்லைன்னா உங்களுக்கு என்ன சௌகரியமா பண்ணிகோங்க. அவ யாரோடயும் பேச மாட்டா.”, “வா.”, என்று அவளை கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.

அருண் முழித்தான். இரண்டு நாட்கள் முன்பு வரை அவளை பார்க்க கூட இல்லை. ஆனால் இன்று அவள் யாரோடு பேச வேண்டும் என்று இவன் முடிவு செய்கிறான்.

“அவசரப்படாதீங்க.”, என்று அவள் சொல்ல சொல்ல கிரி அவளை கூட்டிச்சென்றான். இத்தனை நாட்கள் அவளை பற்றி அதிகம் நினைத்தது கூட கிடையாது. ஆனால் இன்று அவள் யாரோடும் பேசுவதை கூட அவனால் அனுமதிக்க முடியவில்லை. அவனை நினைத்து அருணுக்கு விசித்திரமாக இருந்தது.

உஷாவிர்க்கு கிரி ரொம்ப ரியாக்ட் செய்வதாக தோன்றியது. “இவ்வளவு நாள் இல்லாம இப்போ என்ன அக்கறை.”, என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.

 தன்னை மீறி எல்லாம் நடப்பதாக தோன்றியது. தான் நினைத்தது என்ன. நடப்பது என்ன. இவன் எனக்கு வேண்டாம் என்றுவிட்டு இவன் சொல்கிறபடி தான் ஏன் கேட்டுக்  கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாள்.

“என்ன விஸ்வநாதன் கூப்பிட்டு இப்படி பண்றீங்க.”, என்று அவருடைய ஹை கோர்ட் நீதிபதி என்ற ஹோதாவில் ஆனந்த்துடைய அப்பா விஸ்வநாதனை நோக்கி எகிற.

“அதனால தான் இவ்வளவு பொறுமையா பேசறோம். நீங்க சொன்ன மாதிரி வர்ஷா பெட்டர் சாய்ஸ் தான். தெரிஞ்சோ தெரியாமலோ நடந்திடுச்சு. பையனோட நீங்க பேசுங்க. எங்களை பத்தி உங்களுக்கு தெரியாததில்லை. உங்களோட சம்பந்தம் பண்ணா நால்லாயிருக்குமே. அப்படின்னு தான் இண்டறஸ்ட் காட்டினேன். அப்புறம் உங்க இஷ்டம்”, என்றார் விஸ்வநாதன்.

ஆனந்த்துடைய அப்பாவிற்க்குமே தெரியும். தன்னுடைய பதவியையும் மீறி அவர்கள் சொந்தத்தில் சம்பந்தம் செய்வதே பெரிய விஷயம் என்று. 

சட்டென்று தணிந்தார், “ஆனந்த் வரட்டும் பேசிக்கலாமே”, என்று.  

Advertisement