Advertisement

அத்தியாயம் –31

 

 

‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ… அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.

 

 

“என்னடா நான் சொல்லி முடிச்சிட்டேன் நீ இன்னும் என்ன யோசனையில இருக்கே??” என்று சொல்லி நண்பனின் யோசனையை கலைத்தான் முகுந்தன்.

 

 

“ஹான் ஒண்ணுமில்லைடா… சரி நீ வீட்டுக்கு போ எனக்கு தூக்கம் வருது” என்று சொன்ன நண்பனை ஏகமாகமுறைத்தான்.

 

 

“என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு. உனக்கெல்லாம் நான் நண்பனா இருந்தா இப்படி தான் நடக்கும். ஆமா இந்த ராகவ் எப்படி சமாளிக்கறான் உன்னை” என்று அதிமுக்கிய சந்தேகம் கேட்டான் முகுந்தன்.

 

 

“அதை நீ அவகிட்ட கேட்டுக்கோ. இப்போ வீட்டுக்கு கிளம்பு” என்று நண்பனை அனுப்பி வைத்தவனுக்கு மனோ தனக்காக பேசியதில் உள்ளே குளிர்ந்திருந்தது.

 

 

காயத்திற்கு மருந்திட்டது போலிருந்தது அவள் தனக்காக பேசியிருந்தது. உடனே அவளை பார்க்க வேண்டும் போல் தோன்ற அந்த அறைக்குள் நுழைந்தான்.

 

 

மருந்தின் வீரியத்திலோ களைப்பிலோ உறங்கியிருந்தாள் அவள். அபராஜித்தை அவன் கீழே போட்டுக்கொண்டு குழந்தையுடன் படுத்துக் கொண்டான்.

 

 

அவனும் சிறு குழந்தை தானே எங்கே மனோவின் வயிற்றில் எட்டிகிட்டி உதைத்துவிடுவானோ என்ற பயம் அவனுக்கு.

 

 

இதெல்லாம் தான் எங்கு கற்றோம் என்று கூட அவனுக்கு தோன்றவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் மனதில் தோன்றிய நிம்மதி அவனை நிம்மதியாக உறங்கச் செய்திருந்தது.

 

 

மறுநாள் அவனுக்கு விடுப்பு சொல்லியிருந்த போதும் காலையிலேயே அழைத்து விட்டிருந்தான் பரணி.

 

 

அலுவலகம் தொடர்பாக அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் குளித்து முடித்து வருவதற்குள் மனோ எழுந்திருந்தாள்.

 

 

அன்றும்அவர்களுக்கு முகுந்தனின் வீட்டில் இருந்து உணவு வந்திருந்தது. கணவன் மனைவி இயல்பாக பேசிக்கொள்ளாவிடினும் கேட்பதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். முகுந்தன் காலை உணவை அவர்களுக்கு கொடுத்து சென்றவன் அஜியை கையோடு தூக்கிச் சென்றுவிட்டான்.

 

 

பிரணவிற்கும் அது சரியென்றே பட அவனும் எதுவும் பேசவில்லை. அவனுக்கு மனோவுடன் பேச வேண்டியிருந்தது.

 

 

“ரதிம்மா” என்றழைத்தான்.

 

 

மனோவிற்கு தான் அவன் அழைப்பு இன்னமும் ஆச்சரியப்பட வைத்தது. என் மேல் அவனுக்கு கோபமிருக்கும் வருத்தமிருக்கும் எல்லாம் தான்டி என்னை இன்னமும் கனிவாக அழைக்கிறான் என்பதே மனதை வருடியது.

 

 

“சொல்லுங்க” என்றாள்.

 

 

“இப்போ உன்கிட்ட பேசலாமா” என்றான்.

 

 

“எதைப்பத்தி??”

 

 

“உங்க அப்பாப்பத்தி”

 

 

“ஏன் உங்க மாமனாருன்னு சொன்னா என்னவாம்??” என்றவளின் குரலில் வழக்கமான பேச்சு எட்டிப் பார்த்தது.

 

 

“சரி மாமா பத்தி போதுமா!!. நீ கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு நான் சொல்றதை. நீயும்நானும் பேசிக்கும் போது மாமான்னே சொல்றேன்”

 

 

“ஆனா பரணி இருக்கும் போது உங்கப்பான்னு எனக்கு வந்தா கோவிக்காத… அது நான் டீல் பண்ற கேஸ் எல்லார் முன்னாடி நான் அப்படி தான் பேசுவேன்” என்றான்.

 

 

“ஓகே” என்றாள் மனமேயில்லாமல்.

 

 

“சரிகொஞ்சம் நான் கேட்கறதுக்கு எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லு”

 

 

இப்போது சற்று நிதானித்திருந்தாள் அவள். “ஹ்ம்ம் சொல்லுங்க”

 

 

“உங்கப்பா அவரோட வேலை பத்தி எல்லாம் உங்ககிட்ட எதுவும் சொல்லுவாரா எப்பவும்??”

 

 

“ஹும் ஹும் சொன்னதில்லை…”

 

“நல்லா யோசிச்சு சொல்லு…”

 

 

“இல்லை அவர் எப்பவும் எதுவுமே சொன்னதில்லை. எனக்கு ஞாபகமிருக்கு”

 

 

“ஏங்கஒரு இடத்தோட டாக்குமென்ட் காணோம்ன்னு தேடினோமே அதுக்காக அவரை யாரும் கொல்ல நினைச்சு இருப்பாங்களா!! உங்க மா… மாமா கூட…” என்று ஆரம்பித்தவள் முடிக்காமல் நிறுத்திக்கொண்டாள்…

 

 

“எதுக்கு அப்படி பார்க்கறீங்க அவரும் அந்த டாக்குமென்ட் தேடி தானே வந்தார். அது மாதிரி வேற யாரும் அதுக்காக இப்படி செஞ்சிருக்கலாம்ல”

 

 

“நான் அங்க இருந்து இங்க வரும் போது கூட வீட்டை முழுசா அலசி பார்த்திட்டேன் அந்த டாக்குமென்ட் எங்கயும்….” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசலில்பரணி நின்றிருந்தான்.

 

 

வாயிலை திரும்பி பார்க்காமலே ஏதோ உணர்ந்தவன் “கொஞ்சம் நிறுத்தறியா??”

 

 

“இல்லைங்க… அது எங்கயும்” என்று அவள் முடிக்கும் முன் “கொஞ்சம் வாயை மூடு, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு”

 

 

“கேட்காததுக்கு எல்லாம் சொல்லாத” என்று அவளை அதட்டிவிட்டு பரணியை நோக்கினான் என்ன என்பது போல.

 

 

“உள்ள வாங்க பரணி, உட்காருங்க” என்றவன்“என்ன பரணி காலையில தான் பேசினோம். இப்போ வந்திருக்கீங்க, என்ன விஷயம்??” என்றான் கேள்வியாய்.

 

 

“சார் நான் அந்த அரியலூர் முருகன்க்கு போன் பண்ணியிருந்தேன். அவன் ஏதோ வேண்டுதல்ன்னு இங்க பழனிக்கு வந்திருக்கறதா சொன்னான்”

 

 

“சரி உங்ககிட்ட சொல்லிட்டு போய் பார்க்கலாம்ன்னு போன் பண்ணேன் நீங்க எடுக்கலை. அதான் சார் ஒரு எட்டு மேடமை பார்த்த மாதிரியும் இருக்கும் உங்ககிட்ட சொன்ன மாதிரியும் இருக்கும்ன்னு வந்திட்டேன்”

 

 

“எப்படியிருக்கீங்க மேடம்?? இப்போ ஓகே வா??” என்றான் மனோவை பார்த்து.

 

 

“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்”

 

 

“உங்களுக்கு காபியா?? டீயா??” என்றாள் பரணியை பார்த்து.

 

 

“எதுவும் வேண்டாம் மேடம்” என்றான் அவன்.

“பரணிசாப்பிடுங்க” என்று பிரணவ் சொன்னதும் “எதுனாலும் ஓகே தான் மேடம்” என்றான்.

 

 

மனோ உள்ளே செல்லப் போக “நீ இரு நான் போடறேன்”

 

 

“ஏன்?? நான் நல்லா போடுவேன்” என்றாள்.

 

 

“தெரியும் ஆனா நான் போடுறேன் நீ இரு” என்றவன் எழுந்திருந்தான்.

 

 

“எதுக்குன்னு சொல்லுங்க” என்றாள்.

 

 

“ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்ன்னு சொல்றேன்”

 

 

“இதுல என்ன ஸ்ட்ரெயின் இருக்கு. ஒரு காபி போட மாட்டேனா நானு. பேசாம போய் உட்காருங்க” என்று சொல்லி ‘அவர் இருக்காரு போங்க’ என்பதாய் பரணியை ஜாடை காட்ட பிரணவ் பேசாமல் நகர்ந்து போனான்.

 

 

பரணிக்கு உள்ளே சிரிப்பு வந்தது. “சார் எங்க வீட்டில நான் தான் காபி போடுவேன். இங்க மேடம் போடறேன் சொல்றாங்க. நல்லதுன்னு வாங்கி குடிங்க சார்” என்றான் சிரிப்பாய்.

 

 

பிரணவிற்கும் சிரிப்பு வந்தது, கொஞ்சம் டூ மச்சா பண்ணிட்டமோஎன்று. மனோ இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க குடித்து முடித்ததும் பரணி எழுந்தான்.

 

 

“சரி சார் நான் கிளம்பறேன். நீங்க மேடமை பார்த்துக்கோங்க. தேங்க்ஸ் மேடம் கிளம்பறேன்” என்று தலையசைத்தான்.

 

 

“பரணி ஒரு நிமிஷம் நானும் வர்றேன்” என்று எழுந்து நின்றான் பிரணவ்.

 

 

‘ஒருநாள் லீவு போட்டு என்னோட இருக்க முடியலையா இவருக்கு’ என்று மனம் சிணுங்கியது. ஆனாலும் எதுவும் பேசவில்லை.

 

 

“சரிநாமகிளம்பலாம்” என்று பரணியிடம் சொல்லியவாறே எழுந்து நின்றான். “நான் போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்.உன்கிட்டஅப்புறம் பேசறேன்” என்றுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான்….

 

 

அவனை கோபமாக மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள். எவ்வளவுநேரமானதோ தெரியவில்லை. ஏதோ நினைவு வர வேகமாய் உள்ளே சென்றாள்.

 

 

பிரணவும் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான். ‘கதவை திறந்து போட்டுட்டு எங்க போய்ட்டா’ என்று யோசித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

 

 

உள்ளே அறைக்கு சென்றவன்“ஏய் என்ன பண்ணுற??” என்று அரட்ட “என்னங்க??” என்றாள் அவள் திரும்பி.

 

 

“ஸ்டுல்ல ஏறி நின்னு என்ன எடுக்கிற?? இப்போ என்ன அவசரம் அதுக்கு??” என்றவன் அவளை கோபமாய் முறைத்தவாறே அருகே வந்தான்.

 

 

“ஒரு பைல் அதை உங்ககிட்ட காட்டணும் அதுக்கு தான் அதை தேட வந்தேன்” என்றவள் எட்டி எட்டி எதையோ தேட “லூசாடி நீ. இறங்கு முதல்ல” என்று கத்தினான்.

 

 

“எதுக்கு இப்படி கத்தறீங்க?? ஒரு ரெண்டு நிமிஷம் எடுத்திருவேன்” என்றாள்.

 

 

“நீ இறங்குன்னு சொன்னேன்” என்ற அவன் குரல் லேசாய் பயத்தை கொடுத்தது. மெதுவாய் கீழே இறங்க ஒரு காலை வைக்க “நீ இறங்க வேணாம்” என்றவன் அவள் இடையை பற்றி மெதுவாய் கீழே இறக்கினான்.

 

 

இறக்கிவிட்டவனுக்கு அவள் இடையில் இருந்து கையை எடுக்கும் எண்ணம் வரவேயில்லை. இன்னும் நன்றாக வளைத்தவன் அவளை தன் புறம் இழுத்திருந்தான்.

 

 

இருவரின் கண்களும் ஒன்றாக கலந்திருந்தது. மனோ யோசியாமல் “டூ யூ லவ் மீ??” என்றாள் அவனிடம்.

 

 

‘என்ன கேள்வி இது??’ என்பதாய் இருந்தது அவன் பார்வை. “வாட்??” என்றான்.

 

 

அவளோ மீண்டும் “டூ யூ லவ் மீ??” என்றாள்.

 

 

“ஏன் அது உனக்கு தெரியாதா!!” என்றான்.

 

 

“சொல்லுங்க” என்றாள்.

 

 

“கையில ஒரு பிள்ளையும் வயித்துல ஒரு பிள்ளையும் சுமக்குற உனக்கு இன்னும் என்னோட அன்பு தெரியலையா” என்றான்.

 

 

“இது பதிலில்லை”

 

 

“என்ன வேணும் உனக்கு??”

 

 

“பதில்”

 

 

“அதான் சொல்லிட்டனே”

 

 

“நேரடியா சொல்லலை”

 

“உன்னோட கேள்விக்கு என்னோட பதில் எஸ் போதுமா”

 

 

“போதாது”

 

 

“இன்னும் என்ன??”

 

 

“எப்போல இருந்து??”

 

 

“கண்டுபிடி” என்றுவிட்டு அவளைவிட்டு தள்ளிச் சென்றான்.

 

 

“என்ன கண்டுப்பிடிக்கணுமா என்ன விளையாட்டு இது” என்றாள் அவள்.

 

 

“விளையாட்டு இல்லை நிஜமா தான் சொல்றேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.

 

 

“ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்று அவள் செவ்விதழுக்கு போட்டியாய் கண்களும் பேச அதில் விழுந்தவன் அப்படியே நின்றிருக்க அவன் கைபேசி அவனை நினைவுலகுக்கு அழைத்தது எனக்கென்ன ஆச்சு என்ற பாடலை பாடி.

 

எனக்கென்ன ஆச்சு

வரவில்லை வாய் பேச்சு

அருகில் உன்னை பார்த்து

உறைந்தது என் மூச்சு

பார்க்க பார்க்க ஏனோ சலிக்கவில்லை

உன் முகம்

கொஞ்சம் கூட உன்னால் துடிக்கவில்லை

என் மனம்

 

எனக்கென்ன ஆச்சு

வரவில்லை வாய் பேச்சு

அருகில் உன்னை பார்த்து

உறைந்தது என் மூச்சு

 

என்ற பாடல் அவன் கைபேசியில் இருந்து சூழ்நிலைக்கு தக்கவாறு ஒலிக்க சுதாரித்தவன் அவளிடம் இருந்து தள்ளி வந்து  கைபேசியுடன் வெளியில் சென்றான்.

 

 

‘எங்க இருந்து தான் இவரு பாட்டெல்லாம் பிடிக்கிறாரோ’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மனோ.

 

 

பின் திரும்பி வந்த பிரணவ் அவன் போட்டிருந்த பனியை கழற்றி வேறு மாற்றப் போக அப்போது தான் அவன் இடையில் இருந்த தழும்பை கண்டாள்.

 

 

அவனின் இடைப்பகுதில் ஒரு விரல் நீளத்திற்கு இருந்தது அந்த தழும்பு. வேகமாக அவனை நெருங்கியவள் “என்ன இது?? எப்படி வந்துச்சு??” என்றாள் அதை தடவியவாறே.

 

 

அவள் கையை மெதுவாய் தட்டிவிட்டவன் “ஒண்ணுமில்லை” என்றான்.

“என்னாச்சுன்னு சொல்லுங்க காயம் பெரிசா தெரியுது. இதுக்கு முன்னாடி நான் இதை பார்த்ததில்லையே. என்கிட்ட எதுவும் மறைக்கறீங்களா!!” என்றவளுக்கு கண்ணில் லேசாய் நீர் அரும்பியது.

 

 

“ஒண்ணுமில்லை ரதிம்மா… இது ஒரு கேஸ் விஷயம்”

 

 

“புரியற மாதிரி சொல்லுங்க. இன்னும் என்னெல்லாம் இப்படி சொல்லாம விட்டீங்க” என்றதும் அவன் அவளை பார்த்தான்.

 

 

அவன் பார்வையின் பொருள் புரிய “நான் இதை பத்தி மட்டும் தான் கேட்டேன் வேற எதுவுமில்லை” என்றாள்.

 

 

“ஒரு தீவிரவாதி அவனை பிடிச்சு கொடுத்தேன். ரொம்பநாளா முடியாம இருந்த கேஸ் அது. அதை எப்படியோ நான் கண்டுப்பிடிச்சிட்டேன்”

 

 

“அவனுக்கு அதுல என் மேல கோபம், கோர்ட் வாசல்ல வைச்சு லேசா கிழிச்சுவிட்டுட்டான். நான் கொஞ்சம் சுதாரிச்சதுல கொஞ்சம் லேசா அடிபட்டிச்சு போதுமா” என்றான் சாதாரணமாய்.

 

 

மனோவிற்கு கண்ணில் மளமளவென்று கண்ணீர் வந்தது. அவள் கண்ணீரை கண்டவன் “ஹேய் ஒண்ணுமில்லைம்மா எதுக்கு அழற”

 

 

“நீ பயப்படுவன்னு தான் உன்கிட்ட சொல்லவேயில்லை. பாரு இவ்வளோ நாளாச்சு இப்போ போய் அழற” என்றான்.

 

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல. நான் பயப்படுவேன்னா சொல்லாம இருப்பீங்களா!! எதை சொல்லணுமோ அதையும் சொல்லாதீங்க எதை சொல்லக் கூடாதோ அதையும் சொல்லாதீங்க”

 

 

“அப்போ எதை தான் என்கிட்ட சொல்லுவீங்க. நான் உங்க பொண்டாட்டி தானே இதெல்லாம் என்கிட்ட சொல்லணும்ன்னு உங்களுக்கு தெரியாதா”

 

 

“உங்களுக்கு எதாச்சும் ஆகியிருந்தா நான் என்ன பண்ணுவேன்னு யோசிச்சீங்களா”

 

 

“இங்க பாரு நிஜமாவே நான் உன்கிட்ட சொல்லாதது தப்பு தான். ஆனா இதை சொல்லி உன்னை கலவரப்படுத்த வேணாம்ன்னு தான் நான் சொல்லலைம்மா”

 

 

“ப்ளீஸ் ரதி புரிஞ்சுக்கோ” என்றான்.

 

 

“இப்படியே மறைச்சு மறைச்சு என்ன செய்யப் போறீங்க” என்றாள் அழுகையினூடே.

 

 

“சரி இனிமே இப்படி செய்ய மாட்டேன் போதுமா!!”

“நிஜமா”

 

 

“நிஜமா தான் சொல்றேன், ஓகே வா”

 

 

“ஹ்ம்ம்” என்றவள் மீண்டும் அவன் தழும்பையே தடவிப்பார்க்க “ரொம்ப வலிச்சதா” என்றாள்.

 

 

“இல்லை வலிக்கலை”

 

 

“ரொம்ப எல்லாம் வலிக்கலைம்மா நிஜமா தான் சொல்றேன். உங்க ரெண்டு பேரையும் நினைச்சுட்டே இருந்தேன் அதான் வலியே இல்லை” என்றான்.

 

 

“சரி கொஞ்சம் உட்காரு உன்கிட்ட பேசணும்” என்றவன் இப்போது தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

 

 

“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றவள் அவனருகே அமர்ந்தாள்.

 

 

“உனக்கு என் மேல கோவமிருக்கா??”

 

 

“வருத்தமிருக்கு” என்றாள் தயங்காமல்.

 

 

“என்ன வருத்தம்??”

 

 

“தெரிஞ்சதை கேட்கறீங்க??” என்றாள் கேள்வியாய்.

 

“அதை தவிர்த்து உனக்கு என் மேல கோபமில்லையா??”

 

 

“இல்லை” என்றாள் அவளும்.

 

 

“உங்களுக்கு என் மேல கோபம்…” என்று அவள் இழுக்க “இல்லை எனக்கு வருத்தமும் வலியும் தான்” என்ற போது அவன் முகத்தில் வேதனையின் சாயல்.

 

 

“இன்னும் அதே நினைச்சுட்டு இருக்கீங்களா??” என்றாள்.

 

 

“நான் அன்னைக்கு பேசினது எல்லாம் அந்த நேர கோபத்துல பேசினது தான். எதையும் நான் யோசிச்சு பேசினதா உங்களுக்கு தோணுதா”

 

 

“நீங்க என்கிட்ட முன்னாடியே அதைப்பத்தி முன்னாடியே சொல்லியிருக்கலாமேன்னு வருத்தம் அந்த ஏமாற்றம் தான் எனக்கு கோபமா இருந்துச்சு அன்னைக்கு”

 

 

“எனக்கு நீங்க மட்டும் தானே இருக்கீங்க. நீங்களே என்கிட்ட எதையும் சொல்லலைன்னா எப்படி?? நான் உங்ககிட்ட அப்படி இருக்கலையே”

 

 

“நல்லா யோசிச்சு பாருங்க எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நான் எல்லாத்துக்கும் உங்களை மட்டும் தான் தேடியிருக்கேன்”

 

 

“இப்போ வரைக்கும் நான் உங்களை மட்டும் தான் யோசிக்கறேன். அன்னைக்கு நான் நடந்துகிட்ட முட்டாள்த்தனத்துக்கும் அதான் காரணம்” என்றாள்.

 

 

“ப்ளீஸ் அதெல்லாம் மறந்திடுங்க” என்றாள்.

 

 

“நானும் மறக்கத் தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

 

 

அவன் பதிலில் அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அமைதியாய் இருந்தாள் அவனை கவலையுடன் பார்த்தவாறே.

 

 

பிரணவிற்கு அவள் மேல் கோபமெல்லாம் இல்லை. ஆனால் அவனால் சட்டென்று உடனே இயல்பாக காட்டிக் கொள்ள முடியவில்லை.

 

 

அவன் விசாரிக்கும் வழக்கில் மனோஒரு முக்கிய நபர் என்பதை அவன் முன்னமே அறிவான். இருவரில்யார் முதலில் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் வெகு நாளாய் அவனுக்கு இருந்தது.

 

 

வழக்கிற்காய் தான் தான் முதலில் அவளை சந்திக்க வேண்டி வரும் என்று எண்ணியிருந்த வேளை எதிர்பாராத சந்திப்பு ரம்யாவுடன் அவள் வந்தது.

 

 

அவளை ரம்யாவுடன் பார்த்ததில் இருந்து அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றி இருந்ததால் தான் ரம்யாவை பார்க்கும் சாக்கில் அவள் பள்ளிக்கு சென்றான்.

 

 

தன்னை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை தான். அன்று மாலையே வழக்கை விசாரிக்கும் பொருட்டு அவளை சந்தித்தான்.

 

 

தூரத்தில் இருக்கும் போது பார்க்க வேண்டும் என்று துடித்த மனது அருகே பார்த்த போது அவள் பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைக்க ஆரம்பித்தது.

 

 

எல்லாவற்றையும் ரப்பர் கொண்டு அழிக்க அவனால் முடியாதே. மறக்க முயற்சித்தான் தான் ஆனால் முடியவில்லை அவனால்.

 

 

மனோவின் மேல் அவனுக்கு காதலுண்டு. அதையும் மீறி இவளா பேசியது என்பது மட்டும் தான் அவன் எண்ணத்தில் இப்போது.

 

 

என்னை நம்பவில்லையே!! புரிந்துக் கொள்ளவில்லையே!! என்பது தான் இன்னும் வருத்தமாய்!! வலியாய்!! சுமையாய்!! அவன் நெஞ்சில்.

 

 

“நீங்க மறக்கறதுக்கு நான் என்ன செய்யணும்” என்றாள் அவன் முகத்தை பார்த்து.

 

அவள் பேச்சு வலிக்கு மயிலிறகாய் இருக்க “மறக்கணும்ன்னா இதை மறக்கற அளவுக்கு ஒரு பெரிய விஷயம் வரணும்”

 

 

“அதாவது சின்ன கோட்டுக்கு மேல பெரிய கோட்டை போடுற மாதிரி”

 

 

“புரியலை” என்றாள் அவன் சொல்ல வருவது புரியாமல்.

 

 

“ஹ்ம்ம் அப்போ நீ தான் கண்டுப்பிடிக்கணும்”

 

 

“என்ன கண்டுப்பிடிக்கணும்??”

 

 

“கொஞ்சம் முன்னாடி பேசினோமே எப்போல இருந்துன்னு என்னை கேள்வி கேட்டியே!! ஞாபகமிருக்கா!! முடிஞ்சா அதுக்கு பதில் கண்டுப்பிடி”

 

 

“அது வேணும்ன்னா என்னோட இந்த வலியை போக்குற மருந்தா இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்றான்.

 

 

“அதெப்படி முடியும்!! நீங்க சொல்லாம எனக்கு எப்படி தெரியும்!!” என்றாள்.

 

 

அவளருகே வந்தவன் அவள் கேட்ட அதே கேள்வியை அவளை பார்த்து கேட்டான். “டூ யூ லவ் மீ??” என்று.

 

 

“என்ன??”

 

 

“பதில் சொல்லு”

 

 

“நீங்க கண்டுப்பிடிங்க” என்றாள் அவள் இப்போது.

 

 

“நான் உண்மையை சொல்லுவேன் ஆனா அதை உன்னால ஒத்துக்க முடியாது” என்றான்.

 

 

“நீங்க சொல்லுங்க நான் ஒத்துக்கறனா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்” என்றாள்.

 

 

“உனக்கு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே என்னை பிடிக்கும்”

 

 

“ஹா ஹா… தப்பு” என்றாள்.

 

 

“நீ ஒத்துக்க மாட்டேன்னு சொன்னேன்ல”

 

 

“நீங்க சொன்னது தப்பு அதான் அப்படி சொன்னேன். உங்களுக்கே தெரியும் எனக்கு அப்போ உங்களை கண்டா ஆகாதுன்னு” என்றாள்.

 

 

“நீ இன்னும் ஆழ்ந்து யோசிக்கலை. நீ மட்டும் சரியா சொல்லிடு உனக்கு நெறைய கேள்விக்கு பதில் கிடைக்கும். சில உண்மைகளை உனக்கு நானே சொல்றேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டான்.

 

 

‘இவர் என்ன சொல்றாரு… இவருக்கு எப்போ என்னை பிடிக்க ஆரம்பிச்சுது. ஒரு வேலை கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே இருக்குமோ’

 

 

‘ச்சே ச்சே இருக்காது… நாம தான் அப்போ இவரை போட்டு வறுத்தோமே… நம்மளை மாதிரி தான் இவரும் இருந்திருப்பாரு’ என்று எண்ணிக் கொண்டாள்.

 

 

தன்னைப் பற்றியும் தன்னவனை பற்றியும் சுய ஆராய்ச்சியை அப்போதிருந்து அவள் மனம் தீவிரமாய் எண்ணத்தொடங்கியதை உணராமல் வேறு வேலை பார்க்கச் சென்றாள்.

 

 

அப்போது தான் அவளுக்கு அவள் பீரோவில் இருந்து ஒரு பைலை தேடிய ஞாபகம் வர பிரணவை அழைத்தாள்.

 

 

“என்னங்க”

 

 

“என்ன ரதி??”

 

 

“நான் பீரோல தேடிட்டு இருந்தேன்ல ஒரு பைல் நீங்க வர்றதுக்கு முன்னாடி”

 

“ஸ்டுல் போட்டு தேடிட்டு இருந்தியே அதா” என்றான்.

 

 

“ஹ்ம்ம் ஆமாங்க அதை கொஞ்சம் எடுங்களேன். அது அப்பாவோட பைல் தான். அது இப்போ ரிசென்ட்டா வீடு காலி பண்ணி இங்க வரும் போது தான் பார்த்தேன்”

 

 

“அப்பாவோடதாச்சேன்னு பத்திரமா எடுத்து பீரோல வைச்சேன். அது உங்களுக்கு உபயோகமா இருக்குமான்னு பாருங்க” என்றாள்.

 

 

பிரணவிற்கு பரபரவென்றிருந்தது பீரோவை திறந்தவன் பைலை துழாவ மனோ “ஒரு ரெட் கலர் பைல் மேல ரேக்ல அடியில இருக்கும் பாருங்க” என்றாள்.

 

 

மனோவே அறியாத ஒன்று அந்த பைல் தான் இந்த வழக்கிற்கு திருப்புமுனையாக அமையப் போகிறது என்று.

 

 

பிரணவ் அதை தேடி எடுத்தவன் தன் கைபேசியில் அதை போட்டோ எடுத்துக்கொண்டு பரணிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தான்.

 

 

அவனுக்குமே அந்த வழக்கின் நுனி மட்டுமல்ல மொத்தமும் பிடிப்பட்டது. மறுநாள் பிரணவ் திருச்சிக்கு கிளம்பிச் சென்றுவிட்டான். வார விடுமுறைக்கு மட்டுமே வர முடியும் என்பதை சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

 

மனோவிற்கு அவன் கிளம்பிச் சென்றதும் துக்கம் தொண்டையடைத்த போதும் பக்கத்தில் தானே இருக்கிறான் என்று எண்ணி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்….

 

 

இரண்டு நாளில் பிரணவ் அந்த வழக்கின் முக்கிய நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்திருந்தான்.

 

 

இரண்டு பேரில் ஒருவரை அவன் கைது செய்த போது எதிரில் இருந்தவனின் கண்களில் இருந்த வன்மத்தை பார்த்த பிரணவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை இவரா இப்படி செய்தது என்று….

Advertisement