Advertisement

அத்தியாயம் –27

 

 

பிரணவ் யாரிடமோ போன் பேசி வைத்ததுமே கேட்டான் ராகவ். “ஆமாஉனக்கெப்படி தெரியும் அவங்க பழனில இருக்காங்கன்னு??” என்றான்.

 

 

“ஏன் உனக்கு கூட தெரிஞ்சிருக்குமே இந்நேரம் முகுந்தன் சொல்லியிருப்பானே உன்கிட்ட?? என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லி சொல்லியிருப்பான்”

 

 

“சோ நீயும் சொல்லலை சரி தானே” என்று புட்டுபுட்டு வைத்தவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை ராகவால்.

 

 

“என்னமோ நேர்ல பார்த்த மாதிரியே சொல்றியேடா எப்படிடா உனக்கு தெரியும்” என்றான் வியப்பாய்.

 

 

“ரதி அவளோட போன் நம்பர் மாத்திட்டா. அவ நம்பர் மாத்தினதும் என்னோட மொபைல்க்கு அலர்ட் வந்திடுச்சு”

 

 

“பிரகாஷ் அண்ணாகிட்ட சொல்லி அவளுக்கு மொபைல் வாங்கும் போது சில ஆப்ஸ் எல்லாம் அதுல போட சொல்லியிருந்தேன்”

 

 

“அது இப்போ எனக்கு யூஸ் ஆகுது. அவளோட IMEI நம்பர் எனக்கு வந்திடுச்சு”

“அவ என்ன நெட்வொர்க்ல இருக்கா இப்போ என்ன நம்பர் யூஸ் பண்ணுறா எல்லாமே எனக்கு தெரியும். எனக்கு தெரிய வேணாம்ன்னு அவ நினைச்சா, நானும் தெரியாத மாதிரியே காட்டிக்கறேன் அவ்வளவு தான்”

 

 

“நம்மால ஒருத்தரோட மொபைல் நம்பர் வைச்சு அவங்க எந்த சர்ரௌண்டிங்ல இருக்காங்கன்னு கண்டுப்பிடிக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன”

 

 

“இரண்டு மாசமா அவளோட நம்பர் பழனியை விட்டு நகரலை.ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு ஊகிச்சுட்டேன்” என்றான்.

 

 

“இந்த பத்திரிகை எனக்கு அனுப்பறதுக்கு நம்ம தலைவர் எவ்வளவு யோசனை பண்ணியிருப்பார்ன்னு உனக்கு தெரியாது ராகவ். அதனால தான் நானும் யோசிக்கறேன் அவனோட கல்யாணத்துக்கு போகலாமா வேணாமான்னு”

 

 

“நீ அவன் கல்யாணத்துக்கு போ இல்லை போகாம இரு அது உன்னோட இஷ்டம். உனக்கு உன்னோட மகனை பார்க்கணும்ன்னு தோணவேயில்லைடா”

 

 

“நெறைய இருக்கு ராகவ் ரொம்ப அதிகமா நான் அவனை மிஸ் பண்றேன். அவன் கூடவே இருக்கணும்ன்னு நினைச்சு தான் நான் எப்பவோ ட்ரான்ஸ்பர் அப்பிளை பண்ணேன்”

 

“அப்புறம் ஏன்டா வீம்பு செய்யற??”

 

 

“எனக்கு மட்டும் தான் வீம்பிருக்கா என்ன?? வேணாம் ராகவ் இதெல்லாம் பேச பேச என்னமோ நான் தான் வில்லன் போல ஆகுது. எனக்கே அப்படி தோண ஆரம்பிச்சிருச்சு”

 

 

“நான் ஒண்ணும் அவ்வளவு வில்லன் எல்லாம் இல்லைடா. சில காரணங்களுக்காக சில விஷயத்தை மறைச்சிருக்கலாம் அதுக்காக எல்லாம் என்னை வில்லன் ஆக்காதடா”

 

 

“நான் எவ்வளவு பலவீனமா இருக்கேன்னு இந்த இரண்டு மாசமா தான் நான் அதிகம் உணர்றேன். என்னால முடியலை”.

 

 

ராகவ் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. பிரணவ் எதிர்பார்த்த ட்ரான்ஸ்பர் அடுத்த வாரமே வந்திருந்தது.

 

____________________

 

 

முகுந்தன் மனோபாரதியை காண வீட்டிற்கு வந்திருந்தான். வாசலிலேயே மீரா நின்றிருந்தாள். “என்ன மாமா என்னை தான் பார்க்க வந்தீங்களா!!” என்று ஆர்வமாய் கேட்டாள்.

 

 

“இல்லைமீரு மனோவை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவன் அவளை ஏறிட்டும் பார்க்காமல் அடுத்திருந்த வீட்டிற்குள் நுழைந்தான். மீராவிற்கு முகம் விழுந்துவிட்டது. ‘போடா’ என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.

 

 

“மனோ” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

 

“வாங்கண்ணா உட்காருங்க. என்ன மீராவை பார்க்க வந்தீங்களா!!” என்றாள்.

 

 

“இல்லைம்மா உன்னை தான் பார்க்க வந்தேன். ரொம்ப தேங்க்ஸ்ம்மா நீ பிரணவ்க்கு பத்திரிகை அனுப்ப ஒத்துக்கிட்டதுக்கு”

 

 

ஆம் முகுந்தனின் திருமண பத்திரிகை வந்ததுமே அவன் முதல் வேலையாக அதை எடுத்துக்கொண்டு மனோவை தேடி வந்திருந்தான்.

 

 

அன்றும் இன்று போலவே மனோ என்று அழைத்தவாறே உள்ள நுழைந்த முகுந்தன் எதிரில் வந்த அபராஜித்தை தூக்கி உச்சி முகர்ந்தான்.

 

 

“வாங்கண்ணா என்ன இந்த பக்கம் அடிக்கடி வராப்புல இருக்கு. தேவி மீராவின் தரிசனம் வாங்கவா” என்று கிண்டல் செய்தாள் மனோ.

 

“அவளை பார்க்கறதுக்கு நான் ஸ்பெஷலா வேற வரணுமா என்ன. நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சாலே போதும் அவளே என்ட்ரி கொடுத்திருவா”

 

 

“என் மேல அவ்வளவு பாசம்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மீரா உள்ளே வந்திருந்தாள்.

 

 

“எப்போ மாமா வந்தீங்க” என்று அவள் கேட்கவும் முகுந்தன் மனோவை அர்த்தமாய் பார்த்தான்.

 

 

“என்ன?? நான் உள்ள வந்ததும் ரெண்டு பேரும் என்னை பார்த்து சிரிக்கறீங்க என்ன விஷயம்??” என்றாள்.

 

 

“உன்னை பார்க்க தான் வந்தேன்னு இப்போ தான் மீரு மனோகிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்றதும் அழகாய் வெட்கப்பட்டாள் மீரா.

 

 

“அடியே சொல்லிட்டு செய்ய மாட்டியா பயந்தே போனேன்” என்றான் முகுந்தன் மொட்டையாய்.

 

 

“என்னாச்சு மாமா?? நான் என்ன செஞ்சேன்” என்றாள் மீரா பாவமாய்.

 

 

“வெட்கப்படுறேன்னு சொல்லி என்னமோ செஞ்சியே… ப்ப்பா பார்க்க முடியலை மீரு. தயவுசெய்து இது போல நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் செஞ்சு வைக்காத. அப்புறம் சந்நியாசம் வாங்கிட்டா அதுக்கு நீ தான் பொறுப்பாவே!!” என்று சீரியஸ் போல் சொன்னான்.

 

 

மீராவுக்கு சுர்ரென்று வந்துவிட்டது அவனிடம் கழுத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். “எதுக்குண்ணா அவங்ககிட்ட இப்படி சொன்னீங்க பாவம் அவங்க” என்றாள் மனோ.

 

 

“நான் அப்புறம் அவளை சமாதானம் செஞ்சுக்கறேன் மனோ. இப்போ நான் உன்கிட்ட பேச தான் வந்தேன்”

 

 

“சொல்லுங்கண்ணா”

 

 

“எங்ககல்யாண பத்திரிகை வந்திடுச்சு” என்றுவிட்டு நிறுத்தினான்.

 

 

“ரொம்ப சந்தோசமாயிருக்கு அண்ணா. எங்க காட்டுங்க பார்ப்போம்” என்றாள் ஆர்வமாய்.

 

 

“எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கணும்” என்று சொல்லி மீண்டும் ஒரு இடைவெளி விட்டான்.

 

 

அதுவரை அவன் சொல்வதை சாதாரணமாய் கேட்டவளுக்கு அவன் சொல்ல வருவது புரியவும் உடலில் ஒரு இறுக்கம் பரவியது.

 

 

“கொடுக்க வேண்டியது தானே அண்ணா. அதை சொல்லவா இவ்வளவு தூரம் வந்தீங்க”

 

 

“நான் என்ன சொல்ல வர்றேன்னு இந்நேரம் உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் மனோ. சோ நேரடியாவே நான் விஷயத்துக்கு வரேன்”

 

 

“ராகவ், பிரணவ்க்கு பத்திரிகை அனுப்பணும்”

 

 

“அனுப்புங்க அண்ணா என்னை எதுக்கு அதெல்லாம் கேட்டுகிட்டு”

 

 

“கல்யாணத்துக்கு எல்லா வேலையும் நீ தான் பார்க்கணும்”

 

 

“கண்டிப்பா பார்ப்பேன் அண்ணா…”

 

 

“ஆனா கல்யாணத்தன்னைக்கு நான் இருக்க மாட்டேன்” என்றாள். எதை அவள் சொல்லக் கூடாது என்று நினைத்தானோ அதை அவள் வாயாலே சொல்லிவிட்டாள்.

 

 

“சரிம்மா அப்போ நான் கிளம்பறேன். நீ வராத கல்யாணத்துக்கு யாருக்கும் பத்திரிகை போகாது” என்றுவிட்டு எழுந்து நின்றான் முகுந்தன்.

 

 

“அண்ணாஎனக்காக எதையும் நீங்க ஏன் மாத்திக்கணும். நான் நேத்து வந்தவ ஆனா உங்க நட்பு அப்படியில்லை அதுக்கு உரிய மரியாதையை நான் கொடுத்து தான் ஆகணும்”

 

 

‘அந்த நண்பனோட வாழ்க்கைக்காக தானேம்மா நீ இப்போ இங்க இருக்க. இல்லைன்னா நீ யாரும்மா எனக்கு’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான் முகுந்தன்.

 

 

“ஓ நீங்க தான் அந்த நட்புக்கு மரியாதை கொடுக்கறவங்களா!! அதே மாதிரி அண்ணனோட பேச்சுக்கும் மரியாதை கொடுக்கலாமே!!”

 

 

“எனக்கு நட்பு எந்தளவுக்கு முக்கியமோ அதே மாதிரி இப்போ நீயும் அபராஜித்தும் முக்கியம்மா!!”

 

 

“அண்ணா ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க”

 

 

“நீயும் என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா. எல்லாரும் வந்து எங்களை ஆசிர்வதிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன். நீ இப்படி பேசின அது எந்தவிதத்துல சரின்னு சொல்லு”

 

 

மனோவிற்கு சோர்வாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டாள் என்ன சொல்லி இவரை சமாதானம் செய்வது என்ற எண்ணம் அவளுக்கு.

 

“சரிண்ணா நான் வர்றேன் ஆனா நான் எங்காச்சும் ஒரு மூலையில இருந்து தான் கல்யாணத்தை பார்ப்பேன். அதுக்கு சம்மதம்மா சொல்லுங்க”

 

 

இந்தவரையில் அவள் ஒத்துக்கொண்டதே பெரிது என்று எண்ணிக்கொண்டு அவளுக்கு சம்மதமாய் தலையசைத்தான் அவன்.

 

 

இருவரையும் எப்படி ஒன்றாக ஒரே இடத்திற்கு வரவைப்பது என்பது தான் இத்தனை நாளாக அவன் கவலையாய் இருந்தது.

 

 

இதோ அதற்கு ஒரு வழியும் கிடைத்துவிட்டது. இனி அவர்கள் இருவரையும் நேருக்கு நேராய் பார்க்க வைத்தால் போதும் அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று எண்ணினான் முகுந்தன்.

 

 

அன்று அவள் ஒத்துக்கொண்டதிற்காய் இன்று தான் அவளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 

“எதுக்குண்ணா நன்றி எல்லாம்” என்றாள்.

 

 

“சொல்லணும்ன்னு தோணிச்சிம்மா” என்றான்.

 

 

“உங்… உங்க பிரண்ட்ஸ் எ…எல்… எல்லாரும் வர்றேன்னு சொல்லிட்டாங்களா” என்று திக்கி திணறி கேட்க முகுந்தனுக்கு சந்தோசமாய் இருந்தது.

இதைத்தானே அவன் எதிர்பார்த்தான். “ஹ்ம்ம் வர்றேன்னு சொன்னாங்க ஆனா யாரும் இன்னும் உறுதியா சொல்லலை” என்று எத்தனுக்கு எத்தனாய் பதில் சொன்னான் அவன்.

 

 

“வெளியூர்ல இருந்தெல்லாம் வருவாங்கல அண்ணா”

 

 

“ஹ்ம்ம் அப்படி தான் நினைக்கிறேன்” என்றவன்“சரிம்மா நான் கிளம்புறேன். போய் மீராக்கு கொஞ்சம் ஐஸ் வைக்கணும் வரும் போதே அவளை ரொம்ப ஒட்டிட்டேன்” என்றுவிட்டு அவளை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.

 

____________________

 

 

பிரணவிற்கு சென்னைக்கு மாற்றாலாகியிருந்தது. ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்த மறுநாளே அவன் புறப்பட வேண்டியதாய் இருக்கராகவும் கிரணும் அவனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

 

 

கூடிய சீக்கிரமே அவனும் மாற்றல் வாங்கி கொண்டு வருவதாக கூறி நண்பனை வழியனுப்பி வைத்தான் ராகவ்.

 

 

சென்னை வந்த அடுத்த பத்து நாளில் பிரணவிடம் ஒரு முக்கியமான வழக்கு பற்றி துப்பறிந்து குற்றவாளியை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

 

 

அந்த வழக்கு பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் என்று பிரணவே எதிர்பார்த்திருக்கவில்லை. வழக்கு பற்றிய விசாரணைக்காக அவன் திருச்சியை நோக்கி தன் பயணத்தை மேற்க்கொண்டான்.

 

 

அன்று அவன் வழக்கு சம்மந்தமாய் ஒருவரை விசாரணைக்கு வரச்சொல்லியிருந்தான். அவரால் அங்கு நேரே வரமுடியாது என்று தெரிவித்திருக்க அவனே அவர்களைத் தேடி செல்ல வேண்டியதாகி போனது.

 

 

அந்த ஊருக்கு வந்து இறங்கியவன் அவரை ஒரு ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தான்.

 

 

“மனோ எனக்கு ஒரு உதவி பண்றியா ப்ளீஸ்” என்று வந்து நின்றாள் அவளுடன் பணிபுரியும் ரம்யா.

 

 

“என்ன ரம்யா உன்னோட கிளாஸ் நான் எடுக்கணுமா!!” என்றாள் அவள்.

 

 

“கிளாஸ் எடுக்க வேண்டாம் என்னோட ஒரு இடத்துக்கு வரணும். எனக்கு தனியா போக பயமாயிருக்குப்பா”

 

 

“தனியா போக உனக்கென்ன பயம். அதெல்லாம் தனியா போக நீயே பழகிக்கணும் இப்படியே இருந்தா அப்புறம் நான் அவஸ்தை பட்ட மாதிரி தான் படுவ”

 

 

“மனோ மனோ என் செல்லம்ல இந்த ஒரு முறை நீ என் கூட வருவியாம். அதுக்கு அப்புறம் நான் தனியா போவேனாம் ப்ளீஸ் ப்ளீஸ் மனோ” என்று கெஞ்சினாள் ரம்யா.

 

 

“அப்படி எங்க தான் போகணும், நீ எதுக்கு இப்படி பயப்படுற” என்றாள் மனோ.

 

 

“ஒரு ஹோட்டல்க்கு போகணும்”

 

 

“ஹோட்டல்க்கா?? எதுக்கு??”

 

 

“இல்லை மனோ எங்க மாமாவோட கேசை விசாரிக்க வந்த ஆபீசர்என்னை திருச்சிக்கு வரச் சொன்னாரா. அம்மா அவரை இங்க வந்து பார்த்திட்டு போக சொல்லிட்டாங்க”

 

 

“அவரு வீட்டுக்கு வந்தா எங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்திடுமோன்னு என்னை பொது இடத்துக்கு வர சொல்லி இருக்கார் மனோ”

 

 

“உங்க மாமாவோட கேசா?? என்ன கேஸ் ரம்யா??”

 

 

“ஆக்ஸிடென்ட் கேஸ் மனோ அதை பத்தி நீ இப்போவே கேட்காதே!! அதை நினைச்சாலே எனக்கு இப்பவும் பதறுது” என்ற ரம்யாவின் உடலில் ஒரு நடுக்கம் ஓடுவதை மனோவால் உணர முடிந்தது.

“சரி கேட்கலை ஆனா ஒண்ணு”

 

 

“என்ன??”

 

 

“அந்த கேஸ்க்கும் உனக்கும் என்ன சம்மந்தம்” என்றாள்.

 

 

“அன்னைக்கு நானும் எங்க மாமாவோட போயிருந்தேன் மனோ. யாருபண்ண புண்ணியமோ நான் பிழைச்சிட்டேன்”

 

 

“என்… என்ன சொல்ற ரம்யா”

 

 

“மனோ அந்த கதை எல்லாம் உனக்கு இன்னொரு நாள் சொல்றேன். இப்போ நாம கிளம்புவோமா ப்ளீஸ்” என்றாள்.

 

 

“சரி வா” என்றவள்“ஒரு நிமிஷம் ரம்யா நான்அபிராமி அம்மாக்கு போன் பண்ணி நான் வர்றதுக்கு கொஞ்சம் தாமதம் ஆகும்ன்னு சொல்லிடுறேன்” என்றவள் அவருக்கு போன் செய்து பேசிவிட்டு அஜியிடமும் மழலை மொழியில் மிழற்றிவிட்டு போனை வைத்தாள்.

 

 

“பேசிட்டியாம்மா உன்னோட பிள்ளைக்கிட்ட அவன் பேசுறது உனக்கு மட்டும் தான் புரியுது போ” என்றாள் ரம்யா.

 

 

இருவருமாக ஆட்டோ பிடித்து அந்த ஹோட்டலுக்கு வந்திறங்கினர். “அவர் எங்க இருக்கார்ன்னு கேளு” என்று மனோ கூற ரம்யா அவருக்கு போன் செய்தாள்.

 

 

“ஹேய் மனோ மேலே ஏசி ஹால்ல பாமிலி ரூம்ல இருக்காராம், வா போவோம்” என்றுசொல்லி அவள் கையை பிடித்துக்கொண்டாள்.

 

 

“உன் கை ஏன் ரம்யா இப்படி சில்லுன்னு இருக்கு”

 

 

“பயமாயிருக்குடி இவரு என்ன கேட்பாருன்னு தெரியலையே”

 

 

“ஒண்ணும் பயப்படாதே அதான் நானும் கூட வர்றேன்ல. ஆமா ரம்யா அவரு பாட்டுக்கு ஏசி ரூம்ல போய் உட்கார்ந்திட்டாரே”

 

 

“அவர் கன்னாபின்னான்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டிட்டா என்ன பண்ணுறது. கையில காசு வைச்சிருக்கியா. என்கிட்ட இன்னைக்கு வெறும் நூறு ரூபாய் தான்டி இருக்கு” என்று தோழியை மேலும் பயமுறுத்தினாள் மனோ.

 

 

“நீ வேற ஏன் மனோ என்னை பயமுறுத்துற!! அவர் தானே நம்மை வரச்சொன்னாரு அப்போ அவரு தான் காசு கொடுக்கணும்…” என்றாள் ரம்யா.

 

 

இருவருமாக மாடியேறி வந்தனர். அங்கிருந்த நான்கு அறையில் இரண்டாமதில் அவன் அமர்ந்திருப்பதாக கூற நாசுக்காய் கதவைத் தட்டி இருவரும் உள்ளே நுழைய பிரணவ் பின்னால் வந்த மனோபாரதியை கண்டு எழுந்து நின்றே விட்டான்.

 

 

மனோவும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். உடலில் ஏதோ ஒரு அதிர்வு உண்டானதை உணர முடிந்தது அவளால்.

 

 

கால்கள் நிற்பேனா என்பது போல் துவள ஆரம்பித்தது. ஒருவாறு தன்னை சமாதானப்படுத்தி ரம்யாவை நோக்கி “நீ பேசிட்டு வா ரம்யா நான் கீழ வெயிட் பண்றேன்” என்று நகரப் போனவளின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள் ரம்யா.

 

 

“மனோ ப்ளீஸ் கொஞ்சம் நேரம் தான் என்னோட உட்காரேன்”

 

 

“எனக்கு தலைவலிக்கு ரம்யா நீ பேசிட்டு வா நான் போறேன்”

 

 

“நான் காபி வாங்கி தரேன் குடிச்சா எல்லாம் சரியா போகும் மனோ ப்ளீஸ் ப்ளீஸ் உட்காரேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ரம்யா.

 

 

“ஒருபதினஞ்சு நிமிஷம் தான் பேசி முடிச்சுடறேன். ரொம்ப லேட் பண்ண மாட்டேன்” என்ற பிரணவ் பதிலை ரம்யாவுக்கு கொடுத்து பார்வையை மனோவிடத்தில் வைத்திருந்தான்.

 

 

அவன் தன்னை பார்ப்பதே தனக்குள் ஏதோ ரசாயன மாற்றத்தை உருவாக்கியது அவளுக்கு.

 

 

அவர்கள் இருவருக்கும் காபியை ஆர்டர் செய்துவிட்டு அவனுக்கு தேவையான தகவல்களை ரம்யாவிடம் இருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரணவ் வேலையில் சீரியசாய் மூழ்கியிருக்க இப்போது அவனை பார்ப்பது மனோவின் முறையானது.

 

 

‘ஏன் இப்படி இளைச்சு போயிட்டாரு. சரியா சாப்பிடுறாரா இல்லையா!! கன்னமெல்லாம் இப்படி வத்திப் போயிருக்கே’ என்றவள்அவனை பார்வையால் வருட ஆரம்பித்தாள்.

 

 

ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மனோபாரதி தன்னை பார்ப்பது போன்ற உணர்வு எழ ஓரிரு முறை திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைத்தவன் முயன்று தன் பார்வையை கட்டுப்படுத்திக்கொண்டான்.

 

 

விசாரணை எல்லாம் முடிந்த பின்னே ரம்யா அவனிடம் “சார் நீங்க எதுவுமே சாப்பிடலையா!!” என்றாள்.

 

 

“இல்லை எனக்கு சாப்பிட பிடிக்கறதில்லை” என்றான் மனோவை பார்த்துக்கொண்டே.

 

 

‘இப்போ எதுக்கு என்னை பார்க்கறாரு. நானா இவரை சாப்பிட வேணாம்ன்னு சொன்னேன்’ என்று எண்ணியவள் அவள் அவனிடம் பேசிய பேச்சை முற்றிலும் மறந்திருந்தாள்.

 

 

“நாங்க கிளம்பலாம்ல சார்” என்று எழுந்து நின்றாள் ரம்யா. ஏனோ மனோபாரதிக்கு இன்னும் சற்று நேரம் அவள் பேசிக்கொண்டிருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.

 

 

தன் எண்ணவோட்டம் அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பிரணவை கண்டதும் அவனுடனான நினைவுகள் போட்டிப் போட்டுக் கொண்டு அணிவகுத்து வர எதையும் தடுக்கவும் மறைக்கவும் வழி தெரியாது அங்கிருந்து கிளம்பினாள்.

 

 

தன்னையுமறியாமல் அவனிடம் விடைபெறுமாறு அவள் தலையசைந்திருந்தது. அதைக்கண்ட பிரணவின் இதழோரம் குறுநகை கொண்டதும் மனோவிற்கு தோற்று போன உணர்வு ஏற்பட வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதை போல் ஆனது.

 

 

பிரணவை கண்ட மாத்திரத்தில் இறக்கி வைத்திருந்தஅவள் பிடிவாதம், கோபம் எல்லாம் மீண்டும் அவள் முதுகில் ஏறி சவாரி செய்தது.

வேண்டுமென்றேகோபமாய் அவனை முறைத்து பார்த்து அங்கிருந்து நகர்ந்தாள். பிரணவ் அவளின் பார்வை மாற்றத்தை கண்டுக்கொண்டு தானிருந்தான்.

 

 

ஒரு பெருமூச்சுடன் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு கீழே வர இருவரும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர் போலும்.

 

 

ஆட்டோ ஒன்றும் கிடைக்கவில்லை போல மனோ சலிப்பாய் நின்றிருந்தாள். ரம்யா தான் இங்குமங்கும் ஓடி ஓடி ஆட்டோவை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

திரும்பி மனோவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரம்யாவை நோக்கிச் சென்றான் பிரணவ். “என்னாச்சு ஆட்டோ கிடைக்கலையா??”

 

 

“ஆமா சார்கிடைக்கலை மனோவுக்கு வேற நேரமாகுது. இப்போவே அவளோட பையன் அழ ஆரம்பிச்சுட்டான்னு வீட்டில இருந்து போன் வந்திருச்சு” என்று அவள் கூறவும்பிரணவிற்கு உள்ளுக்குள் உருகிப் போனது.

 

 

அவன் குழந்தையை உடனே சென்று பார்க்கத் துடித்த உள்ளத்தின் உணர்வுகளை அடக்க அரும்பாடுப்பட்டான்.“உங்களுக்கு ஆ… ஆட்டோ கிடைக்கலைன்னா என்னோடவே கார்ல வேணா வாங்க”

 

 

“ஆபீஸ் வண்டில தான் வந்தேன் ஒண்ணும் பயமில்லை”

ரம்யா திரும்பி மனோவை பார்க்க அவள் வரமுடியாது என்பதாய் சைகை செய்து அவளை முறைக்க ஆரம்பித்தாள்.

 

 

“சார் எங்க ஆத்தா மலையேற ஆரம்பிக்குறா!! நீங்க போங்க சார் நாங்க எப்படியாச்சும் வீட்டுக்கு போய்க்கறோம்” என்றாள் ரம்யா.

 

 

“இங்க என் பிரண்டோட வீடிருக்கு. நான் இப்போ அவனை பார்க்கத் தான் போறேன். நீங்க வந்தா உங்களை ட்ராப் பண்ணிட்டு போயிருவேன்” என்று வேண்டுமென்றே மனோவை பார்த்துச் சொன்னான்.

 

 

‘அப்போ நான் இங்க இருக்கறது தெரிஞ்சு தான் வந்திருக்காரா!! இந்த முகுந்தன் அண்ணா சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி எல்லாமே சொல்லிட்டாங்களே’ என்று முகுந்தனுக்கு வேறு திட்டு விழுந்தது.

 

 

“சரிங்க ரம்யா நான் கிளம்பறேன்” என்றவன்டிரைவரை அழைத்து வண்டியில் முன்புறம் ஏறி அமர்ந்தான்.

 

 

“அழகான பொண்ணா இருக்கீங்க தனியா ரொம்ப நேரம் நிற்க வேணாம். பார்த்து போங்க ரம்யா… பை ரம்யா… டேக் கேர்…” என்று சொல்ல மனோவிற்குபயங்கரமாகபுகைந்தது.

 

 

“டி மனோ சார் என்னை பார்த்து அழகான பொண்ணு பார்த்து போங்கன்னு சொல்லிட்டாரு. அய்யோ எவனுமே என்கிட்ட இப்படி ஒரு வார்த்தை சொன்னதேயில்லை”

 

 

ரம்யாவிற்கு பேக் ரவுண்டு மியூசிக்காக ஒத்த சொல்லால என்ற பாடல் ஒலிக்க அவள் முகம் ஜொலித்ததில் மனோவின் முகம் கடுத்தது.

 

 

“என்னடி பெருசா சொல்லிட்டாரு அந்தாளுக்கு கண்ணு தெரியலை போல” என்று பட்டென்று சொல்லிவிட ரம்யாவின் முகம் வாடிப்போனது.

 

 

“சாரி சாரி ரம்யா… அது வந்து அந்தாளு சரியில்லைடி, அவர் பார்வையும் பேச்சும் சரியில்லை. நீ அவர் சொல்றது எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு ரொம்ப சந்தோசப்பட்டியா அதான் அப்படி சொல்லிட்டேன்”

 

 

“போகலாமா…” என்ற மனோவிற்கு பிரணவ் முகுந்தனின் வீட்டிற்கு சென்று விடுவானோஅஜியை தூக்கிச் சென்று விடுவானோஎன்றெல்லாம் கலவரம் எழுந்தது…. இனி…

Advertisement