Advertisement

அத்தியாயம் –25

 

 

மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.

 

 

“நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது வெளிய வராம ப்ரெஷர்ல தான் இருந்தார் ராகவ். நவ் ஹீஸ் ஓகே, என்ன பிரணவ் நீங்க எப்படி பீல் பண்றீங்க” என்றார்.

 

 

“ஹ்ம்ம் கரெக்ட் தான் டாக்டர். சில விஷயங்களை மனசுக்குள்ளவே போட்டு வைக்குறது ரொம்பவும் தப்புன்னு இப்போ எனக்கு புரியுது”

 

 

“அதோட பலன் தான் நான் இப்படி ஆகிட்டேன்னு நினைக்கிறேன்”

 

 

“நோ நோ பிரணவ் இது ஒண்ணும் வியாதி இல்லை… சோ அப்படி திங்க் பண்ணாதீங்க… சில விஷயங்களை பகிரங்கமா எல்லார்கிட்டயும் சொல்ல முடியாத சூழல் எல்லார்க்குமே வர்றதுண்டு”

 

 

“உங்க விஷயத்துல உங்களை ஒரேடியா தப்பு சொல்ல முடியாது. ஆனா இனியும் நீங்க அப்படி இருக்காதீங்க. சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றது தான் எப்பவும் நல்லது”

 

 

“சீக்கிரமே உங்க மனைவியை நேர்ல பார்த்து பேசுங்க. உங்களை அவங்களுக்கு புரிய வைங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். போயிட்டு வாங்க. உங்களுக்கு பர்தர் ட்ரீட்மெண்ட் எதுவும் தேவையில்லை”

 

“ராகவ் டேக் கேர் ஆப் ஹிம்” என்று புன்னகையுடன் இருவருக்கும் விடை கொடுத்தார் அந்த மருத்துவர்.

 

 

இருவருமாக வெளியில் வந்தனர் ராகவ் எதுவும் பேசவில்லை. இவ்வளவையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு எதற்கு இவனுக்கு இவ்வளவு அவஸ்தையோ என்று நண்பனுக்காய் மனம் வருந்தினான் அவன்.

 

 

இதில்தன்னிடம்சொல்லாமல் விட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையும் அவனுக்கு எழாமலில்லை, இருந்தும் எதையும் வாயை திறந்து அவன் கேட்கவில்லை.

 

 

ராகவ் வண்டியை எடுக்க பின்னால் அமைதியின் திருவுருவாய் அமர்ந்து வந்த பிரணவ் இன்னமும் சரியாகிவிட்டான் என்ற நம்பிக்கை ராகவிற்கு இல்லை.

 

 

அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையே அவனுக்கு. பிரணவின் வீட்டில் வண்டியை நிறுத்த இறங்கிக்கொண்ட பிரணவிடம் “சரிடா நான் கிளம்பறேன் பை” என்றான் ராகவ்.

 

 

“உள்ள வாடா உன்கிட்ட பேசணும்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான் பிரணவ். யோசனையாக பிரணவை பின் தொடர்ந்தான் ராகவ்.

 

 

“உட்காருடா” என்ற பிரணவ் “உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்ன்னு தோணலையாடா”

 

 

“நான் ஏன் உன்கிட்ட சொல்லலைன்னு இப்படி எதுவும் என்கிட்ட கேட்க தோணலையா!!”

 

 

“தோணுதுடா ஆனாலும் உன்கிட்ட கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேணாம்ன்னு தான் பேசாம இருக்கேன். நீ எதுக்காக சொல்லாம இருக்கியோ அந்த காரணம் இப்பவும் இருக்காலாமில்லை”

 

 

“சோ உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு” என்று அமைதியாய் நண்பனை பார்த்தான் ராகவ்.

 

 

“அதான் முழுக்க தெரிஞ்சு போச்சேடா இனிமே எதுக்கு இந்த முக்காடு எல்லாம். ஆனாலும் அவர்கிட்ட நான் இன்னமும் சில விஷயங்களை சொல்லலை”

 

 

“அது நானும் ரதியும் பேசிக்க வேண்டிய விஷயம் அதான் அங்க வைச்சு சொல்லலை. சரி அந்த கதை விடு, நாம இப்போ நம்ம கதைக்கு வருவோம்”

 

 

“உன்கிட்ட என் கல்யாணத்தை பத்தி ஏன் சொல்லலைன்னு உனக்கு தோணும். உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னோ முகுந்த்கிட்ட சொல்லக் கூடாதுன்னோ நான் நினைக்கலை ராகவ்”

 

 

“எனக்கு நிச்சயம் ஒரு விஷயம் மட்டும் தெரியும். அம்மா உன்னை எந்த விதத்துலயாச்சும் காண்டக்ட் பண்ணுவாங்கன்னுநான் நினைச்சது போல தான் நடந்திச்சு”

 

 

“நீ இங்க வேலை பார்க்கறது எனக்கு தெரியும். அந்த தைரியத்துல தான் நானும் எக்ஸாம் எழுதினேன். உன்னை பார்ப்பேன்னு எனக்கு தெரியும்”

 

 

“அம்மாக்கும் தெரியும் ஆனா அவங்க நான் ஏதோ கவர்மென்ட் எக்ஸாம் எழுதறேன் ஐபிஎஸ் எக்ஸாம் படிக்கறேன்னு நினைச்சாங்க”

 

“அவங்களுக்கு நான் சிபிஐ எக்ஸாம் எழுதினது தெரியாது. உன்னோட நான் இருப்பேன்னு அவங்களுக்கு எப்படியும் தெரியும். அவங்களோட குணமும் எனக்கு தெரியும்”

 

 

“உன்கிட்ட என்னை பத்தி விசாரிக்க மட்டும் செய்ய மாட்டாங்க. நீ இருக்கற இடத்துக்கே என்னை தேடி அவங்க வருவாங்கன்னு எனக்கு தெரியும் ராகவ்”

 

 

“நான் அவங்ககிட்ட உன்னை பத்தி சொல்லிடுவேன்னு நினைச்சியா பிரணவ்”

 

 

“ச்சே!! ச்சே!! நான் அப்படி நினைக்கலைடா!! எனக்கு தெரியும் நீ எதுவும் சொல்ல மாட்டேன்னு. ஆனாலும் அவங்க நம்ப மாட்டாங்க நம்மை தேடி வருவாங்கன்னு எனக்கு தெரியும்”

 

 

“அதனால தான் உன்கிட்ட நான் எதுவுமே சொல்லலை. அம்மா ஒண்ணும் லேசானவங்க இல்லை ராகவ். நான் என்ன பண்ணறேன் எங்க வேலை பார்த்தேன் இப்போ எங்க வேலை பார்க்கறேன் எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு”

 

 

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, இந்து இங்க வந்து வேலை பார்க்கறது ஒண்ணும் தற்செயல் இல்லை”

 

 

“அம்மா சொல்லாம அவ இங்க வரலை. அவ வந்த அன்னைக்கே எனக்கு அதெல்லாம் புரிஞ்சு போச்சு. நான் தெரியாத மாதிரி நடந்துக்கிட்டேன்”

 

 

“அம்மாக்கு நான் லவ் மேரேஜ் பண்ணதுல பெரிய கவுரவ குறைச்சல் அவங்க அண்ணன் பொண்ணை நான் கட்டலைன்னு அவங்களுக்கு பெரிய வருத்தம்”

 

 

“இதுலஅவங்க என்னை போன்னு சொன்னதும் நான் வேற கிளம்பி வந்துட்டேன்ல அதுல அவங்களுக்கு பெரிய வருத்தம். சொந்தக்காரங்க எல்லாம் அவங்களை துக்கம் விசாரிச்சதுல என் மேல இருந்த வருத்தம் ரதி மேல கோவமா மாறிடுச்சு”

 

 

“என்னை அவங்ககிட்ட இருந்து அவ தான் பிரிச்சதா நினைச்சுட்டு இருக்காங்க. எங்களை பிரிக்கணுங்கறது தான் அவங்களோட எண்ணம். அதான் நான் நெறைய யோசிச்சேன்”

 

 

“ஆபீஸ்ல எனக்கு ஆஸ்திரேலியா போகணும்ன்னு நானே தான் கேட்டு வாங்கினேன். எனக்கும் ரதிக்கும் சேர்த்து பேசினதும் நான் தான்”

 

 

“கொஞ்ச நாளைக்கு யார் கண்ணுலயும் படாம இருக்க நினைச்சேன்…அதான் ஆஸ்திரேலியா போயிட்டேன். அஜிகுட்டிக்காக தான் திரும்பி வந்தேன். அதுமட்டுமில்லாம எனக்கு எக்ஸாம் எழுதறதுக்காகவும் தான் வந்தேன்”

 

 

“ஏன்டா வந்தது தான் வந்தே அந்த பொண்ணையும் உன்னோடவே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. அவங்களை சென்னையில விட்டுட்டு நீ மட்டும் இங்க ஏன்டா வந்தே”

 

 

“இப்போ மட்டும் உங்கம்மாக்கு அவங்களை தெரிஞ்சிருக்காதா அவங்களும் அங்க தானே இருக்காங்க” என்றான் ராகவ்.

 

 

“தெரியாதுடா ஏன்னா அம்மா இப்போ சென்னையில இல்லை. அவங்க ஹேமாக்கா குழந்தையை பார்த்துக்க யூஎஸ் போயிருக்காங்க”

 

 

“உனக்கு தான் தெரியுமே அக்கா லேட்டா தானே குழந்தை உண்டானாங்க. சசி அக்கா கல்யாணம் முடிச்சு கொஞ்ச நாள் கழிச்சு மாமா வந்து அக்காவை கையோட ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டார்”

 

 

“கூடவே அம்மாவும் அப்பாவும் அவங்களோட போயிருக்காங்க. அக்காவோட மாமியார் கூட வந்து இருக்க முடியாதுன்னு சொன்னதால அம்மாவே அவங்களோட கூட போய்ட்டாங்க”

 

 

“அவங்கஅடுத்த மாசம் தான் இந்தியாக்கு வர்றாங்க. ரதியை நான் சென்னை சிட்டிக்குள்ள எல்லாம் வைக்கலை. அவங்க அவுட்டர் சென்னைல தான் இருக்காங்க”

 

 

“அது மட்டுமில்லாம ரதிக்கு இன்னும் நெறைய பிரச்சனை இருக்குடா, அவளுக்கே தெரியாம அவளை சுத்தி சில விஷயம் நடக்குது”

 

 

“டேய் அப்படியிருந்தா நீ அவங்களை கையோட கூட்டிட்டு வந்திருக்கணுமேடா. ஏன்டா தனியா விட்ட”

 

 

“டேய் அவ எல்லாத்துக்கும் என்னையவே சார்ந்து இருக்காடா!! சின்ன வயசுல இருந்தே அவ யாரையாச்சும் சார்ந்தே வளர்ந்திட்டா!!”

 

 

“சின்ன வயசுல இருந்து அவங்கப்பா அம்மாவை எப்பவும் சார்ந்து இருந்தே பழகிட்டா!! அதான்அவங்க இல்லாதப்போ அவங்க அத்தையை நம்பி ஏதேதோ நடந்து கடைசில எங்க கல்யாணம் நடந்திச்சி”

 

 

“கல்யாணத்துக்கு பிறகு நடந்த கதை எல்லாம் தான் உனக்கு இப்போ தெரியுமே!! சில மாசத்துக்கு முன்னாடி எனக்கு என்ன நடந்துதுன்னு உனக்கு தான் தெரியுமே!!”

 

 

“டேய் அதை பத்தி நீ யார்கிட்டயும் சொல்லலையாடா!! டேய் உன் மனசுல நீ என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க!!” என்று சத்தம் போட்டான் ராகவ்.

 

 

“டேய் மெதுவா பேசுடா!! இதுவரைக்கும் நான் அவகிட்ட எதுவும் சொல்லலை!!”

 

 

“எப்படிடா அந்த தழும்பு!! அதை பார்த்தும் அவங்களுக்கு தெரியலையா!!”

 

 

“அந்த தழும்பை அவளை பார்க்கவே நான் விடலை!!” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

 

“உன் மனசுல என்ன தான்டா வைச்சுட்டு இருக்க, உன்னிஷ்டத்துக்கு அந்த பொண்ணை நீ ஆட்டி வைக்கறியோன்னு தோணுதுடா எனக்கு”

 

 

“அப்படி எல்லாம் இல்லைடா ராகவ். அவளுக்கு கொஞ்சம் தைரியம் பத்தாது அதை அவ வளர்த்துக்கணும்ன்னு நினைச்சேன் அதை தவிர வேற எதுவும் நினைச்சு நான் அப்படி செய்யலை”

 

 

“நாம டீல் பண்ணற கேஸ்ல எத்தனை விதமான மிரட்டல் எல்லாம் வருது நீ பார்க்கறதானே!! கிரண் முதல்ல இருந்தே இதெல்லாம் பார்த்து பழகிட்டா!! எல்லாரையும் எப்படி பேசி சமாளிக்கணும்ன்னு அவளுக்கு தெரியும்”

 

 

“அது போல இவளும் ஆக வேண்டாமாடா!! அதுக்காக தான் அப்படி செஞ்சேன். அவளும்முன்ன இருந்ததுக்கு இப்போ எவ்வளவோ மாறியிருக்கா தெரியுமா!!”

 

 

“இந்த முறை அவளையும் ஊருக்கு கூட்டிட்டு வரலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா என்னென்னமோ நடந்து போச்சு!!”

 

 

“சரி இதெல்லாம் கூட விடு நீ சொல்றது சரின்னே நானும் ஒத்துக்கறேன். இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கவாடா”

 

 

“ஹ்ம்ம் சொல்லுடா”

 

 

“நீ அந்த பொண்ணை விரும்பின விஷயத்தையும் உங்க மாமா தான் சரவணன்னும் ஏன் சொல்லலை”

 

 

“என்னடா ஒண்ணுன்னு சொல்லிட்டு ரெண்டு கேள்வி ஒண்ணா கேட்டுட்ட!!”

 

 

“கேட்டதுக்கு பதில் சொல்லு”என்றான் மற்றவனும் விடாமல்.

 

 

“சரவணன் மாமா விஷயத்தை சொல்லாததுக்கு காரணம் அவ அதை எப்படி எடுத்துக்குவாளோன்னு எனக்குள்ள ஒரு பயம் தான்”

 

 

“என்ன உனக்கு பயமா!!”

 

 

“நான் ஒரு விஷயத்துக்காக தணிஞ்சு போறேன், ஒதுங்கி போறேன் அமைதியா போறேன்னா அது ரதி விஷயத்துல மட்டும் தான்டா”

 

 

“நீ சொல்றது எல்லாம் எதும் நம்புற மாதிரியாடா இருக்கு”

 

 

“ஏன்டா கிரண்க்காக நீ செய்யாததா நான் செய்யறேன்” என்று நண்பனை திருப்பினான் பிரணவ்.

 

“அதுமில்லாமசரவணன் மாமா எப்படின்னு என்னால முழுசா விசாரிக்க முடியாததால அவரை பத்தி முழுசா தெரியாம ரதிகிட்ட நான் சொல்ல விரும்பலை”

 

 

“எங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி கண்டிப்பா அவரை பத்தி விஷயத்தை அவகிட்ட சொல்லணும்ன்னு தான் நினைச்சேன். கொடைக்கானல்ல அவரை பார்த்தப்போ தான் அவர் அவ்வளவு மோசமில்லைன்னு நானே நேர்ல அவரை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்”

 

 

“ஆனா அதுக்கு கொஞ்சம் முன்னாடி அவர் ரதிக்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு அவரை பத்தி நான் அவகிட்ட சொல்லியிருந்தா என்னை என்ன நினைப்பான்னு தான் சொல்லலைடா”

 

 

“நான் கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கணும். காலம் தாழ்த்தி சொல்லலாம்ன்னு இருந்ததுல பிரச்சனை பூதாகரமாகி என் பக்கமே திரும்பிடுச்சு”

 

 

“அப்போ நீ விரும்பின விஷயம்” என்று மறக்காமல் கேட்டான் ராகவ்.

 

 

“நான் சொன்னா அவ நம்புவான்னு நினைக்கறியா நீ!!”

 

 

“நம்ப மாட்டாங்கன்னு நீ ஏன் நினைச்ச பிரணவ்!!”

 

 

“உங்களை எல்லாம் விட எனக்கு அவளை நல்லா தெரியும்!! அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும் ராகவ். அவளுக்கா புரியற வரை என்னால அவளுக்கு சில விஷயத்தை சொல்லி புரிய வைக்க முடியாது!!”

 

 

“இப்பவும் என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு வீம்பா போயிருக்காளே!! அப்படியே இருப்பான்னு நினைக்கறியா நீ!!”

 

 

ராகவோ‘இவன் என்ன சொல்றான், என்னடா ஓவரா லவ்ஸ் விடுறாங்க’ என்றதினுசில் மற்றவனை பார்த்தான்.

 

 

“ஓவரா லவ்ஸ் விடுறோம்ன்னு நினைக்கறியாடா!!”

 

 

‘இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை. மனசுல நினைக்கறது எல்லாம் சரியா கண்டுப்பிடிக்கற வரை எல்லாம் சரியா தான் இருக்கு அப்புறம் உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா’ என்று நினைத்துக் கொண்டான்.

 

 

“சரி உன் அமைதியே நீ அதை தான் நினைச்சேன்னு சொல்லுது!! நானே சொல்லிடறேன், நான் வேணாம்ன்னு சொல்லிட்டு போனவ அப்படியே எல்லாம் இருக்க மாட்டா!!”

 

 

“என்னை தான் அதிகம் தேடுவா!! என்னோட பேசாம அவளால இருக்க முடியாதுடா!!”

 

 

“அப்புறம் என்ன நீயே போய் அவகிட்ட பேச வேண்டியது தானே!! எல்லாம் தெரிஞ்சும் ஏன்டா பைத்தியக்காரன் மாதிரி இருந்த இத்தனை நாளா!!” என்றான் ராகவ்.

 

 

“டேய் சில வார்த்தைகள் கொல்லும்!! சில வார்த்தைகள் வெல்லும்ன்னு!! சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கியா!! அவ பேசின ஒவ்வொரு வார்த்தையும் கொஞ்சம் கொஞ்சமா என்னை கொல்லாம கொல்லுச்சுடா ராகவ்!!”

 

 

“பேசின அவளுக்கும் வேதனை தான்!! அதை கேட்ட எனக்கும் வலி தான்!!” என்றவனின் வலி இப்போதும் அவன் முகத்தில் படர்ந்திருந்ததை உணர்ந்தான் ராகவ்.“என்னை யாரும் அப்படில்லாம் பேசினதே இல்லை!! அதான் கொஞ்சம்… இல்லை ரொம்பவே கஷ்டமாயிருந்தது!!”

 

 

“தேங்க்ஸ்டா ராகவ் நீ மட்டும் என் மனசுல உள்ளதை வெளிய கொண்டு வரவைக்கலைன்னா நான் என்னாகியிருப்பேன்னு எனக்கே தெரியலை!!”

 

 

“உன்னால தான் இப்போ மனசு லேசா உணர்றேன். இனி நான் சரியாகிடுவேன்டா!!” என்றவன் ராகவை நெருங்கி அவனை அணைத்துக் கொண்டான்.

 

 

“டேய் இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்கேடா!!”

 

 

“ட்ரான்ஸ்பர்க்கு அப்ளை பண்ணலாம்ன்னு இருக்கேன்டா”

 

 

“அதுக்கு முன்னாடி அந்த கேஸ்…” என்று இழுத்தான் ராகவ்.

 

 

“அதை அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சுன்னு வை!! அதை முடிச்சிட்டா இந்த வார்னிங் எல்லாம் ஒண்ணுமே இல்லாம போய்டும்ன்னு எனக்கு தெரியும்டா”

 

 

“சரி வீட்டுக்கு வா கிரண் கூட உன்னை கேட்டுட்டே இருந்தா!! இன்னைக்கு அங்க வந்து சாப்பிடு!!” என்றான்.

 

 

“ஹ்ம்ம் கண்டிப்பா வர்றேன்டா”

 

 

“டேய் இப்போவாச்சும் சொல்லுவியாடா!!” என்றான் ராகவ்.

 

 

“அதான் எல்லாமே சொல்லிட்டனேடா!!”

 

“இப்போ வரை நீ ஒரு போட்டோ கூட காட்டலை” என்று முறைத்தான் ராகவ் நண்பனை பார்த்து.

 

 

கைபேசியில் இருந்த தங்கள் குடும்ப புகைப்படத்தை எடுத்து நண்பனுக்கு காட்டினான் பிரணவ்.

 

 

“அழகான குடும்பம்டா!! மருமகன் செம கியூட்டா!!”

 

 

“கியூட்ன்னு சொன்னது எல்லாம் இருக்கட்டும்… சீக்கிரம் பொண்ணு பெத்து குடுக்கற வழியை பாரு!! உனக்கு பின்னாடி கல்யாணம் ஆனவன் எவ்வளோ சீக்கிரம் எல்லா வேலையும் முடிச்சிட்டேன் பாரு” என்று பெருமை பீத்திக் கொண்டான் பிரணவ்.

 

 

“நாங்க என்ன உன்னை மாதிரி அமுக்குணி வேலையா செஞ்சோம். இல்லை இல்லைன்னு சொல்லிட்டு முழு பூசணிக்காயை இத்தனை நாளா மறைச்சுட்டியேடா” என்றவன்“இன்னும் ஒண்ணுடா” என்றான்.

 

 

“என்னடா”

 

 

“நீ திரும்ப பேசினியாடா உன்னோட வைப்கிட்ட”

 

 

“இல்லை பேசலை”

 

 

“ஏன்டா இப்படியே விடற விஷயமாடா இது. யாராச்சும் ஒருத்தர் இறங்கி வர வேணாமா!!”

 

 

“நான் இனியும் இறங்கி போக விரும்பலைடா!! என்னைத் தேடி அவ வந்தா நான் எல்லாம் அவகிட்ட சொல்றேன். இல்லைன்னா இப்படி தான் என்னோட மீதி லைப்” என்று அவன் சொல்லும் போது அவன் முகத்தில் அவ்வளவு வேதனை இருந்ததை ராகவால்உணர முடிந்தது.

 

 

“எதுக்குடா இப்படி பிடிவாதம் பிடிக்கற!!”

 

 

“இது பிடிவாதம் இல்லை ராகவ், என்னோட வலி. அவ்வளவு லேசுல சில வலிகள் மறையாது, ரணமாகி போச்சுடா!! நான் அவகிட்ட சில விஷயங்கள் சொல்லாம இருந்ததுக்கு பின்னாடி எதாச்சும் காரணம் இருக்கலாம்ன்னு ஏன் அவளுக்கு தோணாம போச்சு”

 

 

“நான் என்ன லைப் வாழ்ந்திருக்கேன் அவகூட!! இத்தனை நாள்ல என்னை நான் அவளுக்கு புரிய வைக்க தவறிட்டனா!! இல்லை அவ தான் என்னை புரிஞ்சுக்கலையா!! எனக்கு நிஜமாவே புரியலைடா!!”

 

 

“நான் ஒண்ணும் மன்னிக்கவே முடியாத அளவுக்கு எந்த தப்பும் பண்ணிடலையே!! ஆப் கோர்ஸ் நான் அவகிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்லைன்னு சொல்லலை!! அந்த தப்புக்காக நான் அவ கால்ல வேணாலும் விழுந்திருப்பேன்”

 

 

“ஆனா அவ என்னை பேசக்கூட விடலை. சரி கோபமாயிருக்கா நான் பேசுறதை உடனே அவளால ஏத்துக்க முடியாதுன்னு தெரியும். அதை கூட என்னால தாங்கிக்க முடியும்”

 

 

“ஆனா பேசுற வாரத்தையில எல்லாம் காயப்படுத்தினா என்னால எப்படிடா தாங்க முடியும். நானும் மனுஷன் தானே, ஒரு வாய் சோறு கூட என்னால சாப்பிட முடியலை தெரியுமா!!” என்றவனின் கண்கள் அன்றைய நாளை நினைத்து லேசாய் கலங்கியது.

 

 

“டேய்” என்றவாறே அருகில் வந்திருந்தான் ராகவ்.

“ஒண்ணுமில்லைடா விடு!! என்னை எதுவும் கேட்காதே!! கொஞ்சம் ஆறப்போட்டா எல்லாம் சரியாகுமோ!! என்னமோ!! நான் சொன்னதை வைச்சு எல்லாம் நீ அவளை தப்பா நினைக்காதேடா!!”

 

 

‘இவன் என்ன சொல்றான், இது என்ன மாதிரி லவ்’ என்று சத்தியமாக ராகவிற்கு புரியவில்லை. அவன் மனோவை தப்பாக எல்லாம் நினைக்கவில்லை ஆனால் அவள் என்ன பெண்ணாக இருப்பாள் இப்படி நண்பனை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம் எழுந்தது மட்டும் உண்மை.

 

 

“சரி கடைசியா ஒண்ணு, நீயா போய் இனி பேசவும் மாட்டே!! பார்க்கவும் மாட்டே!! அப்புறம் எதுக்கு ட்ரான்ஸ்பர் கேட்கற, ஊருக்கு போகணும்ன்னு எதுக்கு நினைக்கற!!”

 

 

“நானா போய் பேச மாட்டேன்னு தான் சொன்னேன் பார்க்க மாட்டேன்னு எப்போ சொன்னேன்.நான்பார்க்கணும்நினைக்கிறது என் பையனை”

 

 

‘பையனை பார்ப்பாராம் கூடவே அம்மாவையும் சேர்த்து பார்க்க போறேன்னு சொன்னா தான் என்ன’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராகவ்.

 

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை பிரணவ். சீக்கிரமே உங்க பிரச்சனை சரியாகி நீங்க ஒண்ணாகணும் என்னுடைய வேண்டுதல் அது தான்” என்றான் நண்பன்.

 

 

“ராகவ் சொல்ல மறந்திட்டேன் உங்கப்பா உன்கிட்ட எதுவும் சொன்னாராடா!!” என்றான் பிரணவ்.

 

 

ஆம் ராகவ் திருமணம் முடித்த சில மாதங்களிலேயே அவன் தந்தையுடன் ஒன்று சேர்ந்துவிட்டான்.

“ஒண்ணும் சொல்லலையே!! நேத்துகூட போன் பண்ணியிருந்தாரே ஏன்டா கேட்குற!!” என்றான் ராகவ்.

 

 

“உங்கப்பாகிட்ட நான் தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைச்சேன்னு உண்மையைசொல்லிட்டேன்டா!!” எனவும் ராகவ் வாயை பிளந்தான்.

 

 

“என்னடா சொல்ற??”

 

 

“ஹ்ம்ம் ஆமாடா சொல்லிட்டேன்”

 

 

“என்னன்னு சொல்லி வைச்சடா, நான் தான் எங்கப்பாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டனே… நான்ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு. நீ வேற ஏன்டா இப்போ ஊடையில புகுந்து குழப்பிவிட்ட அவரை”

 

 

“நான் அவரை குழப்பறதுக்காக சொல்லலைடா!! அந்த மனுஷன் பாவம் என்னைத் தேடி ஆபீஸ்க்கு வந்தப்போ எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொன்னேன்”

 

 

“தப்பு பண்ணிட்டமோன்னு தோணிச்சு அதான் அவரை நேர்ல பார்த்து எனக்கு தெரியும்ன்னு சொல்லிட்டேன்”

 

 

“உங்களுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் அவர்கிட்ட சொல்லி வைச்சிருந்தா நீ வேற இப்படி போட்டு குட்டையை குழப்பி விட்டிருக்கியேடா ஆமா இதெல்லாம் எப்போ நடந்திச்சு” என்றான் ராகவ்.

 

 

“நான் சென்னையில் இருந்து டெல்லிக்கு வர்றத்துக்கு முன்னாடி அங்க ஹோட்டல்ல தங்கியிருந்தேன்ல. அப்போ தான் யோசிச்சேன் நைட் தான் பிளைட் எனக்கு”

 

“அதான் நேரா கிளம்பிப் போய் உங்கப்பாவை பார்த்து உண்மையை சொல்லி அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்”

 

 

“அவர் மன்னிச்சாரா!!”

 

 

“உங்கப்பா ஜென்டில்மேன்டா!! என்னை ரெண்டு அடி போட்டார்”

 

 

“என்னது அடிச்சாரா!! அடேய் ஒரு நாளைக்கு எத்தனை ஷாக் தான்டா கொடுப்பே!! அப்புறம் என்னடா சொன்னாரு!! நீ நல்லவனா ஆனது பத்தாதுன்னு எனக்கு வேற அடி வாங்கி கொடுக்க பார்க்குறியேடா”

 

 

“அந்த ரணகளத்துலையும் விடாமஎனக்குஆப்படிச்சிருக்க!! உன்கிட்ட பல்ப் வாங்குறதே எனக்கு பொழப்பா போச்சு!! ஹ்ம்ம் சொல்லு இன்னும் என்னெல்லாம் நடந்திச்சு!!” என்றான் ராகவ் பாவமாய்.

 

 

“நீ இவ்வளவு பாவமாலாம் போஸ் கொடுக்காதடா உனக்குஅது சூட் ஆகலை” என்று கூற ராகவ்க்கு நிஜமாகவே வடிவேல் எபெக்ட் தான்.

 

 

“நீ மட்டும் தான் என்னை எப்பவும் என்டர்டெயின் பண்ணுற… அதென்னமோ உன்னைகிட்ட மட்டும் தான் எனக்கு இந்த ப்ளோ வருது”

 

 

“சரி சரி விடு முறைக்காத என்ன நடந்திச்சுன்னு சொல்லிடுறேன். எனக்கும் ரதிக்கும் உன்னலா தான்டா பேச்சு வார்த்தையே ஆரம்பமாச்சு. உங்கப்பாகிட்ட நான் உண்மையை சொல்லலைன்னு தான் சண்டையே முதல்ல போட்டா”

 

 

“என்னமோ அது மனசுல ஒரு குறையா இருந்ததுனால தான் அப்பாகிட்ட சொல்லிட்டேன். எங்கப்பா அடிச்சா வாங்கிக்க மாட்டேனா. அதான் உங்கப்பா அடிச்சப்போ ஒண்ணுமே சொல்லலை”

 

 

“தப்பு தான்னு சொல்லி அவர் கால்லேயே விழுந்திட்டேன். அதுக்கப்புறம் அவர் எதுவும் பேசலை. அவன் நல்லா இருக்கான் அது போதும் எனக்கு. அந்தபொண்ணும் நல்ல பொண்ணா இருக்கா, எனக்கு அதுவே நிறைவு தான்னு சொல்லிட்டார்டா”

 

 

‘அப்பாடா தப்பிச்சேன்’ என்று பெருமூச்சை விட்டான் ராகவ். அவன் பேச்சு எழுந்ததில் அவன் கவனிக்க மறந்த ஒன்றை சட்டென்று நினைப்படுத்தி பிரணவிடம் கேட்டேவிட்டான் ராகவ்.

 

 

“கேட்க மறந்திட்டேன், ஆமாநீ எதுக்கு ஹோட்டல்ல தங்கினே!!”

 

 

‘ஆஹா உண்மையை சொல்றேன்னு ஒரு ப்ளோல அதையும் சொல்லிட்டமா!!’ என்று யோசித்த பிரணவ் “அது ஒண்ணுமில்லை சும்மா தான்” என்று சமாளித்தான்.

 

 

“உனக்கு கொழுப்பாடா ஏற்கனவே நீ இழுத்து வைச்ச ஏழரை பத்தாதுன்னு ஹோட்டல்ல வேற தங்குனியா!! உன்னையலாம் என்ன தான்டா செய்ய”

 

 

“அந்த பொண்ணு என்னடா பாவம் பண்ணிச்சு. நீ சொல்லாம இருந்தது தப்பு தானே, அதுக்காக கொஞ்சம் கோவமா பேசிருச்சு. அதுக்காக ஹோட்டல்ல போய் தங்கலாமா!! உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலைடா!!” என்றான் ராகவ்.

 

 

“ஆமாடா எனக்கு வேண்டுதல் பொண்டாட்டிகிட்ட கோவிச்சுகிட்டு ஹோட்டல்ல போய் தங்கணும்ன்னு. ப்ளீஸ் மேல ஏதாச்சும் பேசி என்னை திரும்பவும் மூட் ஆப் பண்ணாதே” என்ற பிரணவிற்கு அன்றைய நாளின் நினைவில் மனம் சுணங்கியது.

 

 

எல்லாரும்இருந்தும்சென்று தங்க ஒரு இடம் கூட இல்லாமல் அவன் நடுரோட்டில் நின்ற வேதனை அவன் மட்டும் அறிவான். மனம் அந்நாளை நினைவு கூர்ந்ததில் மீண்டும் தன் கூட்டிற்குள் ஒளிந்து கொண்டான் அவன்.

 

 

‘அச்சோ நல்லா தானே பேசிகிட்டு இருந்தோம். என்னை வைச்சு காமெடி எல்லாம் கூட பண்ணிட்டு இருந்தானே. நாம தான் சொதப்பிட்டமா!! இப்போ தான் சரி பண்ணி கூட்டிட்டு வந்தோம். என்ன செய்ய!!’ என்று விழித்தான் ராகவ்.

 

 

“டேய் வா வீட்டுக்கு போகலாம், கிரண் நமக்காக காத்திட்டு இருப்பாடா!! உனக்கு சேர்த்து சமைக்க சொல்லிட்டேன்” என்று அழைத்தான் ராகவ்.

 

 

“நான் வரலைடா!! நீ கிரண்கிட்ட நான் சாரி கேட்டேன்னு சொல்லிடு!! நீ போயிட்டு வா!! நான் இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கறேன்”

 

 

“டேய் சாரிடா நான் எதுவும் தப்பா பேசியிருந்தா அன்னை அடிக்க வேணா செய்டா!! ப்ளீஸ்டா இப்படி மட்டும் முகத்தை வைச்சுக்காத எனக்கு என்னவோ போல இருக்கு” என்ற ராகவ் பிரணவின் கையை பிடித்துக் கொண்டான்.

 

 

“உன் மேல எதுவும் கோவமில்லைடா நீ கிளம்பு. நான் நல்லா தான் இருக்கேன். இனிமே இப்படி எல்லாம் ஆக மாட்டேன் நீ பயப்படாதே சரியா!! நீ வீட்டுக்கு கிளம்பு கிரண் காத்திட்டு இருப்பா!!” என்று சொல்லி நண்பனை வழியனுப்பி வைத்தான் பிரணவ்.

 

____________________

மனோ வீட்டை காலி செய்துக்கொண்டு அவள் சொந்த ஊரை நோக்கி பயணப்பட்டாள். பிரகாஷ் மோனாவிற்கு கூட எந்த தகவலும் கொடுக்கவில்லை.

 

 

அவள்போனை அணைத்து வைத்தாள். ட்யூயல் சிம்மில் வேறு புது எண்ணை வாங்கிப் போட்டுக்கொண்டாள். சொந்த ஊருக்கு செல்லப் போகும் விபரத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை அவள்.

 

 

பிரணவின் நினைவுகள் அவளை வெகுவாய் தாக்கியது. அவனுடன்கழித்த இனிய பொழுதுகள் ஒவ்வொன்றும் வரிசைக்கட்டி கண் முன் நிற்க அவனை மனம் தேடத் தொடங்கியது.

 

 

அவனை பற்றிய நிகழ்வுகளை நினைக்கத் தொடங்கும் போது சந்தோஷிக்கும் மனது, கடைசியாய் இருவருக்கும் நடந்தவைகளை நினைக்கும் போது அவள் மனதை அறுக்கத் தொடங்கியது.

 

 

நினைவுகளின் வெக்கை தாளாமல் தான் எங்காவது சென்றுவிட முடிவு செய்தாள் அவள். எங்கு செல்வது என்ற யோசனையின் முடிவில் தன் பூர்விகத்திற்கே சென்றுவிடுவது என்று முடிவு செய்து இதோ புறப்பட்டும் விட்டாள்.

 

 

ரயிலில் பழனி வரை சென்றவள் அங்கிருந்து பஸ் பிடித்து தன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்கு செல்ல பேருந்தில் ஏறி காத்திருக்க “நீஇங்க எப்படி??” என்று அருகே கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் மனோபாரதி….

 

Advertisement