Advertisement

அத்தியாயம் –24

 

 

“என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.

 

 

“இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.

 

 

“நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.

 

 

மனோ இப்போதும் கூட அவனை பாராமல் விளையாட்டாகவே “ஆமாங்க புரிஞ்சு தான் சொன்னேன்” என்றாள்.

 

 

“என்னை பார்த்து சொல்லு” என்று அவன் கூறவும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். “ஹ்ம்ம் இப்போ சொல்லு” என்றான் அவன் தொடர்ந்து.

 

 

“என்ன சொல்லணும்”

 

 

“நீ சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு தான் சொன்னியான்னு கேட்டேன்”

 

 

பிரணவின் பார்வையின் வித்தியாசம் அவளுக்கு அப்போது தான் புரிந்தது. இப்போது அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தே தான் அவனுக்கு பதில் சொன்னாள்.

 

 

“புரிஞ்சு தான் சொன்னேன், அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு” என்றுவிட்டு மயூரியை தூக்கியவாறே எழுந்து நின்றாள்.

 

 

“ஹேய் எங்க எழுந்து போறே!!”

 

 

“மயூரியை வீட்டில விடவேண்டாமா நேரமாச்சே!! வாங்க போய் விட்டுட்டு வந்திடலாம்”

 

 

“நான் வரலை நீ போய் விட்டுட்டு வா!!”

 

 

“என்ன நான் மட்டும் தனியாவா!! என்ன விளையாடுறீங்களா!!”

 

 

“நம்மவிளையாட்டுஎல்லாம்அப்புறம் வைச்சுக்கலாம்.ஆனா இப்போ நான் சொன்னது சீரியஸா தான் நீ போயிட்டு வா… நான் வண்டி சொல்றேன்”

 

 

“வண்டியில போயிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் வைடிங் போட்டுட்டு திரும்ப அதே வண்டியில வந்திடு சரியா”

 

 

“ஏன் நீங்க வந்தா என்ன??”

 

 

“நீ தனியா போக கத்துக்கோ எல்லாத்துக்கும் எப்பவும் நான் உன்கூடவே இருக்க முடியாது ரதிம்மா”

 

 

மனோ எதுவும் பேசாமல் பல்லைக் கடித்து நின்றாள். பிரணவ் கூலாகவே இருந்தான். அவளுக்கு வண்டியை சொல்லிவிட்டு காத்திருக்க சற்று நேரத்தில் வாயிலில்வண்டி வந்து நிற்க அவளை ஏற்றி அனுப்பினான்.

 

 

1மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவள் வீட்டின் அமைதியில் அப்படியே நின்றாள். ‘டிவி கூட போடலை எங்க போனார் வெளிய போயிட்டாரா’ என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

 

 

மனோவிடமும் பிரணவிடம் ஆளுக்கொரு சாவி எப்போதும் உண்டு. அதனால்மூடியிருந்த கதவை அவள் சாவிக்கொண்டு திறந்து உள்ளே வந்திருந்தாள். ‘எங்கே போயிருப்பார் ஆளைக்காணோமே’ என்று நினைத்துக்கொண்டே அவர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

 

 

பிரணவ் தலையில் கையை வைத்து கண்களை மூடி படுத்திருந்தான். “என்னாச்சுங்க தலை வலிக்குதா!! இங்க வந்து படுத்திருக்கீங்க!!”

 

 

“நான் நைட் டிபன் அக்காகிட்ட வாங்கிட்டே வந்திட்டேன். அதான் கொஞ்சம் லேட்” என்றவள் பேசிக்கொண்டே அவனருகே வந்திருந்தாள்.

 

 

அவன் நெற்றில் கை வைத்து “என்னாச்சுங்க” என்றாள் இயல்பான அக்கறையுடன். அதுவரை தான் அவளுக்கு ஞாபகமிருந்தது.

 

 

எப்போது பிரணவ் அவள் கையை பிடித்து இழுத்தான். எப்போது அவள் அவன் பிடியில் வந்தாள் என்பதே அறியவில்லை அவள். கண் இமைக்கும் நேரத்தில் அவன் அணைப்பில் இருந்தாள்.

 

 

“என்… என்ன பண்றீங்க??”

 

 

“நீ சொன்னது நிஜமா!!”

 

 

“எதை கேட்கறீங்க!!”

 

 

“நமக்கும் லட்டு வேணும்ன்னு சொன்னியே, அது நிஜம் தானே.நீ ஒண்ணு கேட்டு நான் இல்லைன்னு சொல்வேனா” என்றவன் அவள் கழுத்தில் முகம் பதித்திருந்தான்.

 

 

மனோவிற்கு கூச்சமாகவும் வெட்கமாகவும் இனம் புரியா பயமொன்றும் எழுந்தது.

பிரணவின் கை அவளின் இடையில் அழுந்தியது. அதற்கு மேல் அவளால் முடியவில்லை. “பயமாயிருக்கு” என்று அவள் சொல்லவும் அவன் உணர்வுகள் வடிந்தது போன்று சட்டென்று அவளிடமிருந்து விலகினான்.

 

 

“சாரி” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான். மனோ அவன் விட்டு சென்ற நிலையிலேயே இருந்தாள். எழ வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை.

 

 

‘தான் எதுவும் பேசியிருக்கக் கூடாதோ!! தப்பு செய்துவிட்டாமோ!!’ என்று யோசித்துக்கொண்டே இருந்தவள் எப்போது உறங்கினாள் என்பதே அறியவில்லை.

 

 

உணவருந்தாமல் இருக்கிறாளே என்று பிரணவ் உள்ளே வந்து அவளை பார்த்து சென்றதையோ பின் விளக்கணைத்து சென்றதோ அவளறியவில்லை.

 

 

காலையில் எழுந்தவளுக்கு அருகில் படுத்திருந்தவனை காணாது பதற்றம் தொற்றிக்கொண்டது. இரவு நடந்ததிற்காய் கோபித்துக் கொண்டானோ என்று எண்ணிக்கொண்டு மெதுவாய் கட்டிலை விட்டிறங்கினாள்.

 

 

எழுந்து வெளியில் வந்து பார்க்க பிரணவ் எழுந்ததிற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. அவர்களின் படுக்கையறைக்கு எதிர்புறம் மற்றொரு படுக்கையறை உண்டு.

 

 

எப்போதும் திறந்திருக்கும் கதவு அடைத்திருப்பது வித்தியாசமாய் பட மெதுவாய் அந்த அறைக்கதவை தள்ள அது திறந்து கொண்டது. பிரணவ் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான்.

 

 

‘இவர் எப்போ இங்க வந்து படுத்தார். என் மேல ரொம்ப கோபமா இருக்காரோ’ என்று எண்ணிக்கொண்டே அவனருகே சென்றாள்.

“என்னங்க…” என்ற அவளின் ஒரே குரலிலேயே அவன் எழுந்து அமர்ந்திருந்தான்.

 

 

“என்னாச்சு உங்களுக்கு!! என் மேல கோபமா!! சாரி!!”

 

 

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் “நீ எதுக்கு சாரி சொல்ற, தப்பு என்னோடது தானே!!”

 

 

“இல்லை அது வந்து… நீங்க ஏன் இங்க வந்து படுத்திருக்கீங்க என்னை தனியா விட்டு”

 

 

“நான் கொஞ்சம் தப்பு பண்றேன் ரதிம்மா!! அதான் இங்க வந்துட்டேன்!!”

 

 

“என்ன சொல்றீங்க புரியலை!!”

 

 

“உன் பக்கத்துல இருந்தா என் கண்ணு தப்பு தப்பா பார்க்குது!! உன்னை கஷ்டப்படுத்த விரும்பலை. எதுவும் இயல்பா நடக்கணும். நான் காத்திட்டு இருப்பேன் அதுவரைக்கும்”

 

 

“உன் பக்கத்துல என் கண்ட்ரோல் மிஸ் ஆகுது, ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு நான் இப்படியே இருக்கனே, விட்டிறேன்” என்றான்.

 

 

மனோவிற்கு அவன் சொன்னதை கேட்டு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

 

“நீ கண்டதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம்… கூல்… ஓகே வா… டைம் ஆச்சு ஆபீஸ் கிளம்புவோம்… போ நேரமாச்சு குளி…” என்றுவிட்டு அவன் அதே அறையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

‘இவருக்கு என்னை பிடிச்சிருக்கா!! எனக்கு இவரை பிடிச்சிருக்கா!! எதுவுமே புரியலையே!! இதெல்லாம் தெரியாம எப்படி!!’ என்ற யோசனை தான் இப்போது அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

 

 

இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் அவளுக்கு இருவர் மனமும் புரிந்து போயிருக்கும். மனோ இதுவரை அவள் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யாததாலேயே அவளுக்கு அவளை புரியவில்லை.

 

 

நாட்கள் மிக மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது எந்தவித முன்னேற்றமும் இல்லாமல். அவ்வப்போது சீண்டும் பிரணவ் இப்போதெல்லாம் அவளருகில் கூட வருவதில்லை. இரவிலும்இருவரும் தனித்தனி அறையிலேயே உறங்கினர்.

 

 

அங்கு அவர்கள் வந்துவிளையாட்டாய்மூன்று மாதங்களுக்கு மேல் சென்றுவிட்டது. இருவருமாக ஒன்றாய் ஒரே இடத்தில் வேலை செய்தாலும் பிரணவ் இங்கும் அவளுக்கு டீம் லீடரே!!

 

 

அவனுக்கு தனியறை உண்டு. மனோ அவள் இருக்கைக்கு செல்ல பிரணவ் அவனறைக்கு சென்றான். சற்றே நேரத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக மனோவையும் அவளுடன் இருக்கும் ஜாக்குலினையும்அவனறைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.

 

 

சற்று நேரத்தில் பிரணவின் அறைக்குள் அவன் மேலதிகாரியான சான்ட்ரா ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தாள் கையில் பூங்கொத்துடன்.

 

 

“ஹாப்பி பர்த்டே பிரணவ் டியர்” என்றவள் அவன் கையில் பூங்கொத்தை கொடுக்க அவளுக்கு பதில் கூட சொல்லாமல் எதிரில் காளியின் உருவத்தை எடுக்க ஆரம்பித்த தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

‘இவருக்கு பிறந்த நாளுன்னு எனக்கு மட்டும் சொல்லவேயில்லை’ என்ற பொருமலுடன் அவள் நிற்க ‘ரதிம்மா எனக்கே அது ஞாபகமில்லை’ என்று பிரணவ் அவளுக்கு மனதிற்குள்ளாக பதில் சொல்லிக்கொண்டான்.

 

 

சான்ட்ரா அத்தோடு நிற்கவில்லை பிரணவை அணைத்து அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்து வாழ்த்து சொல்ல மனோவின் அருகில் நின்றிருந்த ஜாக்குலினும் சான்ட்ராவை போன்றே வாழ்த்தினாள்.

 

 

பின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் மாறி மாறி வந்து வாழ்த்து தெரிவிக்க மனோ கொதிநிலைக்கே சென்றுவிட்டாள்.

 

 

இதற்கு மேல் உஷ்ணம் தாங்கதடா சாமி என்று எண்ணிய பிரணவிற்கு ஆஸ்திரேலியாவின் குளிர் கூட உறைக்கவில்லை. உஷ்ணத்தில் லேசாய் அவனுக்கு வியர்வை கூட அரும்பிவிட்டது.

 

 

மனோவிற்கோ முள் மேல் நிற்பது போல் இருக்க தலை வேறு வலிக்கத் தொடங்கியது. எதுவும் சொல்லாமல் அவள் வெளியே சென்றுவிட்டாள்.

 

 

சான்ட்ராவோ “வாட் பிரணவ் யூ ஹவ் எனி சர்ப்ரைஸ் கிப்ட்பிரம் யூவர் வைப்??” என்று கேட்டு கண்ணடித்தாள்.

 

 

பிரணவோ அவளுக்கு பதில் சொல்லாமல் லேசாய் சிரித்து வைத்தான். ‘கிப்டா அவளா!! இன்னைக்கு எனக்கு உன்னால பெரிய அடி இருக்கு. இவ நான் கிரண் மேல கையை போட்டதுக்கே அந்த முறை முறைச்சா’

 

 

‘இதுல நீங்க எல்லாம் சேர்ந்து ஏழெட்டு எலுமிச்சை பழத்தை வேற பிழிஞ்சு எனக்கு செய்வினை வைச்சுட்டீங்களேம்மா’

‘விஷ் பண்ணா பத்தாதா முத்தம் வேற கொடுக்கணுமா!! அதும் என் பொண்டாட்டி முன்னாடி வேற கொடுக்கணுமா!! இன்னைக்கு எனக்கு பெரிய ஆப்பிருக்கு’ என்று மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டான்.

 

 

“எனி ப்ளான் டூடே??” என்று அடுத்த கேள்வியை சான்ட்ரா கேட்க “எஸ் வி வான்ட் பர்மிஷன் பார் ஹாப் டே, ப்ளீஸ் கிரான்ட்”

 

 

“ஆப் கோர்ஸ் கிரான்டட், கோ அஹேட் மேன், டேக் கேர் பை” என்றுவிட்டு சான்ட்ரா நகர பிரணவ் அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

 

 

மனோவும் சான்ட்ராவிடம் பெர்மிஷன் கேட்க நகர்ந்தாள் போலும். சான்ட்ரா பிரணவை கைக்காட்டி சிரித்துக் கொண்டே எதுவோ சொல்லி நகர்ந்தாள்.

 

 

பிரணவ் மனோவின் அருகில் வந்து “கிளம்பலாமா” என்றான்.

 

 

“நான் வரலை எனக்கு தலை வலிக்குது” என்றாள்.

 

 

“நான் உன்னை எங்கயும் கூட்டிட்டு போகலை, நாம வீட்டுக்கு தான் போகப் போறோம் வா!!” என்று அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

 

 

“அதானே உங்களுக்கு என்னை எல்லாம் கூட்டிட்டு போக தோணுமா!!” என்றவளின் பேச்சில் அப்பட்டமான பொறாமை தெரிந்தது.

 

 

இருந்தாலும்பிரணவால் அதற்காக எல்லாம் சந்தோசப்பட முடியவில்லை. மனைவியை சமாதானம் செய்வது ஒன்றே அவன் கடமையாய் தோன்றியது அவனுக்கு.

 

வரும் வழியில் “எதுவும் சாப்பிட்டு போகலாமா” என்று கேட்க திரும்பி அவள் முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டான் அவன்.

 

 

வீட்டிற்கு வந்ததும் சோபாவில் சென்று தலையை பிடித்து அவள் அமர்ந்து கொள்ள மெதுவாய் அவளருகில் சென்று அமர்ந்தான் பிரணவ்.

 

 

“ரதிம்மா.. ரதி என்னாச்சுடா என் மேல எதுவும் கோபமா!!” என்று தெரிந்தே கேட்டான்…

 

 

“கோபம்ன்னு எதுக்கு சின்னதா சொல்றீங்க!! உங்க மேல கொலைவெறில இருக்கேன் நானு!!” என்று முறைத்தாள்.

 

 

“அதான் ஏன்னு கேட்கிறேன்??”

 

 

“தெரிஞ்சுட்டே கேட்கறீங்க”

 

 

“நீ சொன்னா தானே எனக்கு தெரியும்” என்றான் விடாமல்.

 

 

“உங்களுக்கு பிறந்த நாளுன்னு எல்லாருக்கும் தெரியுது என்னைத் தவிர. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு உங்களுக்கு தோணவே இல்லைல”

 

 

“இங்க பாரு ரதி இன்னைக்கு என்னோட பிறந்தநாள்ன்னு நிஜமாவே எனக்கு ஞாபகமேயில்லை. தெரிஞ்சிருந்தா உன்கிட்ட தானேம்மா முதல்ல சொல்லியிருப்பேன்”

 

 

“நீங்க சொல்லாமலா அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். எனக்கு சொல்ல தான் உங்களுக்கு மனசில்லை” என்று பொரிந்தாள்.

 

 

“நிஜமாவே எனக்கு ஞாபகமில்லை ரதிம்மா… என்னோட ஒரு பிறந்தநாள்ல தான் அப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சு. அதுல இருந்து நான் அதை கொண்டாடுறதே இல்லை. எனக்கு அது ஞாபகமும் வர்றதில்லைடா”

 

 

“ஆபீஸ்ல அவங்க ரிகார்ட்ஸ் பார்த்து விஷ் பண்ணியிருக்காங்க. லாஸ்ட் இயர் கூட நான் இங்க தான் இருந்தேன். அப்பவும் இவங்க விஷ் பண்ணாங்க”

 

 

“அப்போ அந்த சான்ட்ரா முத்தம் கொடுத்திட்டு நிக்கறா நீங்க பாட்டுக்கு பேசாம நிக்கறீங்க. கட்டின பொண்டாட்டி பக்கத்துல இருக்கேன் என்னை பத்தி யோசிச்சீங்களா” என்றாள் உஷ்ணமாய்.

 

 

“ரதிஇங்க இதெல்லாம் சகஜம் அது ஏன் உனக்கு புரியலை. ஏன் ஜாக்குலின் அந்த தாமஸ் எல்லாருமே என்னை அப்படி தானே விஷ் பண்ணாங்க”

 

 

“அதுவும் இல்லாம அவங்க என்னை விஷ் பண்ணும் போது நான் என்ன செய்ய முடியும்டா”

 

 

“ஓ!! எதுவுமே செய்ய முடியாதுல உங்களால ரொம்ப பண்ணாதீங்க… யாரும் வைப் பக்கத்துல வைச்சுட்டு இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க”

 

 

“நீங்க வேணுமின்னே அதை ரசிச்சுட்டு தான் இருந்தீங்க… என்னை அழ வைக்கணும் அதானே உங்களுக்கு வேணும்” என்று மனதில் தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

அவள் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததில் பிரணவிற்கு சட்டென்று கோபம் மூண்டது. “ஆமா ரசிச்சேன், இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்லு”

“புருஷன் புருஷன்னு சொல்றல அவனோட பிறந்தநாள் என்னைக்கு கூட தெரியாத பொண்டாட்டி நீயா தான் இருப்பே!! உன்னோட பிறந்தநாள் என்னைக்குன்னு எனக்கு தெரியும்”

 

 

“அது போல நீ ஏன் தெரிஞ்சு வைச்சுக்கலை. ஏன்னா நீ இன்னும் என்னை புருஷனா ஏத்துக்கவே இல்லை. நீ எப்படி என்னை தப்பு சொல்லலாம்”

 

 

“ஒரு புருஷனா இருந்தாலும் சரி மனுஷனா இருந்தாலும் பிறந்த நாள் அன்னைக்கு யார்கிட்டயும் திட்டு வாங்க கூடாதுன்னு தான் நினைப்பான். எனக்கு இன்னைக்கு மனசு ரொம்ப நிறைஞ்சு போச்சு உன்னால”

 

 

“போதும் போதுங்கற அளவுக்கு இருந்துச்சு உன்னோட கிப்ட்!! ஏன்டி மனுஷனை போட்டு இப்படி இம்சை பண்ணுற!! ச்சே!! என்னை டென்ஷன் ஆக்கி பார்க்கறது தான் உன்னிஷ்டம் போல”

 

 

“ஏன் தான் என்னை இப்படி வதைக்குறியோ தெரியலை!!” என்றவன் கோபமாய் பேசிவிட்டு கதவை வேகமாய் இழுத்து அறைந்து வெளியில் சென்றுவிட்டான்.

 

 

அவன் பேசிய பின்னே தான் மனோவிற்கு உரைத்தது அவனை அதிகம் காயப்படுத்தி விட்டோம் என்று. பிறந்தநாள் அதுவுமாக அவரை அதிகம் பேசிவிட்டோமே தப்பு தானே என்று தன்னையே திட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

 

 

கோபமே அதிகம் வராதவருக்கு கூட கோபம் வந்திருச்சே எல்லாம் என்னால தான் என்று எண்ணி எண்ணி வருந்தி அமர்ந்திருந்தவள் ஒருவாறு சமாதானம் ஆகி பிரணவிற்கு போன் செய்தாள்.

 

 

அவனோ இவள் அழைப்பை கண்டுவிட்டு வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் போனையே வெறித்தவாறு பார்க் ஒன்றில் அமர்ந்திருந்தான் தலையில் கைவைத்து.

 

 

நான் என்ன பொம்பிளை பின்னாடி சுத்திட்டு எவ கிடைப்பான்னு காத்திட்டு இருக்கேனா என்ன. என்னை போய் எப்படிலாம் பேசுறா!!

 

 

எனக்கென்ன ஆசையா பொண்டாட்டி முன்னாடி மத்தவ முத்தம் கொடுக்கறது வேடிக்கை பார்க்கணும்ன்னு. நடந்ததுக்கு நான் என்ன பண்ண முடியும்.

 

 

நடந்ததில் என் தப்பு என்ன இருக்கிறது. நான் இவ மேல பைத்தியமா இருக்கேன் இவளுக்கு ஏன் என்னை புரியவே மாட்டேங்குது. அவனுக்கு மனமே ஆறவில்லை வெகு நேரம் வரை.

 

 

பொதுவாய் சட்டென்று உணர்ச்சி வசப்படும் ஆளல்ல அவன். கோபம் வந்தால் அதை அவனை தவிர வேறு யாராலும் அடக்கவே முடியாது.

 

 

அவனே அதை அடக்கினால் தான் உண்டு. இல்லையென்றால் சற்று கடினமே அவனை சமாதானம் செய்ய. எதுவோ தோன்ற போனை எடுத்து பார்த்தான் மனோவிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள்.

 

 

ச்சே!! பாவம் திட்டிட்டு வந்திட்டோமே!! அவளுக்குன்னு யாரிருக்கா என்கிட்ட தானே உரிமையா கோபப்படுறா!! ரொம்ப பேசிட்டமோ!! என்று எண்ணிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினான்.

 

 

பிரணவ் கதவை திறக்கவும் அதற்காகவே காத்திருந்தார் போன்று தாவி அவனை அணைத்துக் கொண்டாள் மனோ. அவளின்கண்ணீர் அவன் சட்டையை நனைப்பதை அவனால் உணர முடிந்தது.

 

 

அவள் மேல் இருந்த கோபமும் நெருப்பை அணைத்த நீராய் அவன் உள்ளத்தையும் குளிரச் செய்திருந்தது. “ரதிம்மா இப்போ எதுக்கு அழற நான் தான் வீட்டுக்கு வந்திட்டேன்ல” என்றவன் அவளை அணைத்தவாறே சோபாவிற்கு கூட்டி வந்தான்.

 

 

“இங்க பாரு அப்போல இருந்து அழுதிட்டே இருக்கியா!! விடும்மா!!”

 

 

“நான் தான் தப்பு பண்ணிட்டேன் சாரிங்க!!” என்றவள்அவனை மேலும் ஒண்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள்.

 

 

“இங்க பாரும்மா விடுன்னு சொன்னேன் எதுக்கு அழுதிட்டே இருக்கே!! எனக்கு ரொம்ப பசிக்குது நீயும் மதியத்துல இருந்து சாப்பிடலைன்னு நினைக்கிறேன். வா வெளிய போய் சாப்பிட்டு வருவோம்” என்றான்.

 

 

“இல்லை வேணாம் இங்கவே சாப்பிடலாம்”

 

 

“இனிமே சமையல் செஞ்சு எப்போ சாப்பிடறது எனக்கு ரொம்ப பசியா இருக்குடா”

 

 

“நானே செஞ்சிட்டேன் உங்க பர்த்டேஸ்பெஷல் சாப்பாடு. நீங்க கிளம்பினதும் கொஞ்ச நேரம் அழுதிட்டே இருந்தேன் அப்புறம் உங்களுக்கு பிடிச்சது செய்யலாம்ன்னு நெட் பார்த்து சமைச்சேன்”

 

 

“உங்களுக்கு போன் பண்ணி பண்ணி நீங்க எடுக்காம போகவும் தான் ரொம்ப பயம் வந்திட்டு என்னாச்சோ ஏதாச்சோன்னு. அதான்!!” என்றவள் வேறு எதுவும் சொல்லாமல் மீண்டும் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். “என் மேல இவ்வளவு கோபப்படாதீங்க”

 

 

“அப்படியே கோபம் வந்தாலும் பேசாம மட்டும் இருக்காதீங்க!! என்னால தாங்க முடியலை!! நெஞ்சு வலிக்கற மாதிரி பீல் ஆகுது” என்று சொல்ல பிரணவ் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

 

 

“சரி விடும்மா வா சாப்பிடுவோம்” என்று அவளை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றான். “என்ன ஸ்பெஷல் செஞ்சீங்க பொண்டாட்டி!!”

 

 

“ஸ்வீட் எதாச்சும் செய்யலாம்ன்னு கேசரி பண்ணேன். அப்புறம்ப்ரைடு ரைஸ், சப்பாத்தி, சிக்கன் கிரேவி”

 

 

“இவ்வளோ செஞ்சியா!!”

 

 

“ஹ்ம்ம்”

 

 

“சரி எடுத்து வை நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்று எழுந்து உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் வெளியில் வந்தான்.

 

 

அவனுக்கு தட்டில் உணவை வைத்துவிட்டு அருகே நின்று அவள் பார்த்துக் கொண்டிருக்க அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான் அவன்.

 

 

“சாப்பாடு செஞ்சா மட்டும் போதாது” என்று நிறுத்தினான்.

 

 

“என்ன செய்யணும்” என்றாள்.

 

 

“அதை ஊட்டியும் விடணும்” என்று கூற கண்கள் லேசாய் கலங்க ஆரம்பிக்க தட்டை கையில் எடுத்தவள் அவனுக்கு முதலில் இனிப்பை ஊட்டினாள்.

 

 

மனோ இப்போதெல்லாம் நன்றாகவே சமைக்க ஆரம்பித்துவிட்டாள். அவனுக்காய் ஸ்பெஷலாய் வேறு சமைத்திருக்க பிரணவ் விரும்பி சாப்பிட ஆரம்பித்தான்.

 

 

“ஹ்ம்ம் கையை விடுங்க அதையும் சேர்த்து சாப்பிட்டிருவீங்க போல” என்றாள்.

 

 

“கையை மட்டும் இல்லை நீ சரி சொன்னா உன்னை மொத்தமா சாப்பிட்டிருவேன்” என்று சொல்ல மனோ முகம் சிவந்து போனாள்.

 

 

“போதும் ரதி, இப்போ உன் டர்ன் நான்ஊட்டுறேன் நீ சாப்பிடு” என்றவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

 

 

இருவருமாக சாப்பிட்டு அறைக்கு சென்றனர். பிரணவ்தனியறைக்கு செல்ல மனோவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது.

 

 

இப்போதெல்லாம்தினமும்அவன் அங்கு தான் படுப்பது இருந்தாலும் இன்றும் அங்கு தான் சென்று படுக்க வேண்டுமா!! என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

 

 

தன் வாயால் எப்படி சொல்வது என்ற கூச்சம் அவளை தடுக்க அவள் அறைக்குள் நுழைவதும் பின் வெளியே வருவதும் என்றும் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்ததை பிரணவ் கண்டுவிட்டான்.

 

 

எதுவாக இருந்தாலும் அவளே வரட்டும் என்று எண்ணி பேசாமல் அவனறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான். மனோவின் மாற்றம் மனதிற்கு நிறைவாய் இருந்தது அவனுக்கு.

 

 

மெல்ல அவன் அறையில் இருந்து எதிரிலிருந்த அறையை எட்டிப் பார்த்தான் கதவு அடைத்திருந்தது. ‘ஹ்ம்ம் ஏமாத்திட்டாளா இன்னைக்கும்!! டேய் பிரணவ் இவ்வளவு தான்டா உனக்கு விதிச்சது!! பேசாம படுடா’ என்று மனசாட்சி சொல்ல பெருமூச்சுடன் கண்களை மூடினான்.

 

 

அந்நேரம்“என்னங்க!!” என்று தேனாய் காதில் பாய்ந்த குரலில் சட்டென்று விழி திறந்தவன் எதிரில் மனோ நின்றிருந்தாள். “என்னாச்சு ரதி!! உள்ள வா!! ஏன் அங்கவே நின்னுட்டு இருக்க!!” என்றான்.

 

 

“இன்… இன்னைக்கு… எப்.. இனி… எப்பவும் நா… நானு… இங்க… இங்கவே படுத்துக்கவா!!!” என்று திக்கி திக்கி கேட்டு முடித்தவளை ஆர்வமாய் பார்த்தான் பிரணவ்.

 

 

கணவனின் பார்வை தன்னை முழுதுமாய் அலசுவதை உணர்ந்தவளுக்கு உள்ளுர குளிர் பிறந்தாலும் ஒரு இனிய அவஸ்தையும் உணர்ந்தாள்.

 

 

“நீ என்ன சொல்றன்னு…”

 

 

“புரிஞ்சு தான் சொன்னேன்…” என்று முடித்தாள்.

 

 

பிரணவ் எழுந்து சென்று டோர் லாக் செய்துவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர மனோ அப்போதும் அமராமல் நின்றேயிருந்தாள்.

 

 

பிரணவின்வலது கை அவளை நோக்கி நீட்ட அவனிடத்தில் கரம் கொடுத்தாள். பிரணவிற்கு இது ஆனந்த அதிர்ச்சி தான். பற்றிய அவள் கரத்தை வேகமாய் இழுக்க மனோபாரதி அவன் மீது வந்து விழுந்தாள்.

 

 

அவளை இறுக்கி அணைத்தவன் “ரதிம்மா திரும்பவும் கேட்குறேன் உனக்கு சம்மதமா” என்று கேட்க பதில் சொல்லாதவள் அவன் கன்னத்தில் தன்னிதழ் பதித்தாள்.

 

 

முதல் முத்தம் மனைவியிடம் இருந்து கணவனுக்கு, பிரணவிற்கு இனித்தது. அவனும் தன் தேடலை அவள் இதழில் தொடங்கி கவிதை எழுத இருவருக்குமான முதல் இதழணைப்பு நீண்ட நெடிய நொடிகளை கடக்க அவளை தன்னவளாக்கிக் கொண்டான் அவன்.

 

 

இருவரும் தாம்பத்தியத்தின் மூலம் தங்கள் இல்லறத்தை தொடங்கினர். காலையில் முதலில் கண் விழித்த பிரணவிற்கு தன் நெஞ்சின் மீது சாய்ந்துறங்கும் தன்னவளை கண்டு காதல் பொங்கி வழிந்தது.

 

 

மெல்ல அவள் நெற்றில் இதழொற்றி மீண்டும் தன் தேடலை துவங்க கண் விழித்த மனோ அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

 

 

“ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, என்ன பண்றீங்க நீங்க. நைட் எல்லாம் தூங்க விடலை, இப்போ ஆபீஸ் போக வேண்டாமா!!” என்றவள் அவனிடமிருந்து விலக முற்பட அவன் அவளை விலக விட்டால் தானே.

 

 

“இன்னைக்கு நமக்கு ஆபீஸ் லீவ் செல்லம். பேசாம படு நான் அப்போவே சான்ட்ராக்கு மெசெஜ் பண்ணிட்டேன். இன்னைக்கு முழுக்க ஜாலி தான்” என்றவன் அவளை பேசவே விடவில்லை.

 

மனதாலும் உடலாலும் இணைந்த அவர்களின் இல்லறம் நல்லபடியாக சென்றுக் கொண்டிருந்தது. பிரணவை பாராட்ட என்று சான்ட்ரா அவ்வப்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை பார்த்து மனோ கடுப்பாவாள்.

 

 

பிரணவ் அதெல்லாம் கண்டுக்கொள்ள மாட்டான். “அவ தானே முத்தம் கொடுத்தா நானா கொடுத்தேன். நான் உனக்கு மட்டும் தான் கொடுப்பேன்” என்பவன் சான்ட்ரா செய்யும் அலும்புக்கெல்லாம் மனோவிற்குபதில் கொடுப்பான் முத்தத்தால்.

 

 

இருவரின் இல்லறத்திற்கு இனிய சாட்சியாய் கருத்தரித்தாள். முதல்மூன்று மாதங்கள் அவள் படும்பாட்டை பார்த்தவன் அவளை பூவாகவே தாங்கினான்.

 

 

இப்போதெல்லாம் பிரணவே சமைக்க கற்றிருந்தான் மனோவிற்கு பிடித்த மாதிரி உணவுகளை அவன் கையாலேயே அவளுக்கு சமைத்துக் கொடுத்தான்.

 

 

அவளுக்கு ஐந்தாம் மாதம் பிறந்திருக்கும் பிரணவ் இந்தியா திரும்பி செல்லலாம் என்றான். “என்னாச்சுங்க இங்க ஒரு வருஷம் இருக்கணும்ன்னு சொன்னீங்களே!!” என்றாள்.

 

 

“இல்லைம்மா நாம ஊருக்கு போவோம். நம்ம குழந்தை நம்ம ஊர்ல பிறக்கட்டும்” என்று கூற மனோவிற்கும் அந்த கருத்தில் உடன்பாடு இருக்க அங்கு அவர்கள் முடிக்க வேண்டிய வேலைகளை துரித்தப்படுத்தி அடுத்த ஒரு மாதத்தில் முடிந்தவரை முடித்துக் கொடுத்து அவர்களின் அனுமதியுடன் தாய் நாட்டிற்கு பயணப்பட்டனர் அம்மூவரும்.

 

 

ஒன்பதாம் மாதம் பிரகாஷும் மோனா மட்டும் உடனிருக்க மனோபாரதியின் வளைக்காப்பை நடத்தி முடித்திருந்தான் பிரணவ். அலுவலகத்தில் மீண்டும் அவர்களை கண்ட கணேஷிற்கு மனோவின் மேடிட்ட வயிற்றை பார்த்து இன்னமும் காந்தலாகிப் போனது,

 

 

பிரணவ் அந்த வாரத்தில் ஏதோ பரிட்சை என்று ஓரிரு நாட்கள் மோனாவை மனோவுடன் இருக்க வைத்துவிட்டு அவன் ஊருக்கு சென்றிருந்தான்.

 

 

அவன் ஊரிலிருந்து திரும்பி வரவும் மனோவிற்கு பிரசவ வலி எடுக்கவும் சரியாக இருந்தது. அருகில் இருந்த மருத்துவமனையில் அவளை சேர்க்க அடுத்த சில மணி நேரத்தில் அவர்களின் செல்ல மகன் பிறந்தான்.

 

 

அபராஜித் பிறந்தது முதல் பிரணவ் இருவரையும் தன் சேயாகவே கவனித்துக் கொண்டான். ஒரு கணவனால் தாயை போல இருக்க முடியுமா என்று எண்ணி மனோ எத்தனையோ நாட்கள் கண் கலங்கியிருக்கிறாள் அவனின் கவனிப்பில்.

 

 

பிரணவ் தன் கனவு வேலைக்காக முன்னர் எழுதிய தேர்வில் தோல்வியடைந்திருந்தான். இரண்டாம் முறை அபராஜித் பிறப்பதற்கு முன்பு எழுதியிருக்க இம்முறை அவன் அதில் தேறியிருந்தான்.

 

 

மனோவிடம் வேறு வேலைக்காக டெல்லி செல்வதாக கூறியவன் அவளிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி அவளை தனியே விட்டு டெல்லிக்கு பயணமானான்.

 

 

அவன் நினைத்திருந்தால் அவளையும் உடன் அழைத்து சென்றிருக்க முடியும். இரண்டு காரணங்கள் அதற்காகவே அவளை அவனுடன் அழைத்துச் செல்லவில்லை.

 

 

முதல் காரணம் குழந்தைக்கு டெல்லியின் சீதோஷ்ணநிலை ஒத்துக்கொள்ளாது என்பது. இரண்டாவது எவ்வளவு தான் சொன்னாலும் மனோ இன்னமும் அவன் எல்லாவற்றிருக்கும் எதிர்பார்த்து இருப்பது.

 

 

அவளுக்கு பல முறை கூறிய போதும் அவளால் அவனில்லாமல் அணுவுமில்லை என்பது போல் தானிருந்தாள். அவள் தந்தைக்கு பின் அவள் அதிகம் நேசிக்கும் ஒரு ஆண் பிரணவாகிப் போனான்.

 

 

பிரணவ் தன் வேலையில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து நன்கறிவான். ஆனால் மனோ அதை அறியாள். தானில்லாமலும் அவள் தன்னிச்சையாக செயல் பட வேண்டுமென்றால் அவளை விட்டு சற்று விலகியிருப்பது என்று முடிவெடுத்தான்.

 

 

அதன் பொருட்டே அவளை தனியே விட்டு டெல்லிக்கு சென்றான். அவளையும் குழந்தையையும் பிரிவது அவனுக்குமே வேதனையாய் இருந்தாலும் அவளை தன்னுடன் அழைத்துக் கொள்வதற்கு முன் அவளை தயார்படுத்தினான்.

 

 

ஆனால் அதற்கும் அவன் மனைவி அவனையே குற்றம் சொல்லுவாள் பின்னாளில் என்றறிருந்தால் அப்படி விட்டுச் சென்றிருக்க மாட்டானோ!!!!

 

 

இனி நிகழ்காலத்தில்!!!!!!!!!!

Advertisement