Advertisement

அத்தியாயம் –19

 

 

 

பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.

 

 

பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது. அங்கு கோவிலுக்கு வந்திருந்த அவனின் உறவினர் ஒருவர் பிரணவ் திருமண கோலத்தில் இருப்பதை கண்டுவிட்டார்.

 

 

நல்லவேளையாக அவர் பிரகாஷையும் மோனாவையும் பார்க்கவில்லை. அவர் கடவுள் தரிசனம் முடிந்து வெளியில் வரும் போது பிரணவ் யாரோ ஒரு பெண்மணியுடன் (நளினியுடன்) பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார்.

 

 

அவனின் அந்த நெருங்கிய உறவினர் வம்பில் அதிக ஆர்வம் உள்ளவர் மலையில் இருந்து கீழே இறங்கியதும் முதல் வேலையாக பிரணவின் வீட்டினருக்கு தான் அழைத்தார்.

 

 

சசியின் திருமணம் முடிந்து பிரணவின் வீடு முதல் நாள் தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருந்தது. சசியும் அவள் கணவரும் மறுநாள் மறுவீட்டுக்கு வருவதாய் இருக்க வீட்டை சுத்தம் செய்ய ஒதுங்க வைக்க மறுநாளைக்கு தேவையானது வாங்க என்று வீடு மீண்டும் பரபரப்பாகியது.

 

 

ஆளுக்கொரு வேலையில் இருந்ததால் தொலைபேசி அழைப்பை யாரும் பெரிதாய் கண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்ட உறவினர் நேரிலேயே சென்று சொல்லிவிடுவது என்று முடிவுக்கு வந்து பஸ்ஸை பிடித்து சென்னைக்கு வந்து அவர் பார்த்ததை சொல்லிவிட்டே சென்றார்.

 

சென்னை வரும் முன்னே மீண்டும் ஒரு தரம் அவ்வீட்டுக்கு முயற்சி செய்வோம் என்று எண்ணி அவர் போன் செய்ய பிரணவின் அன்னை மாலதி தான் போனை எடுத்தார்.

 

 

விஷயம் கேட்டதும் அவருக்கு கோபம் வர உறவினரிடம் எதுவும் பேசாமல் போனை வைத்துவிட்டார். போனை வைத்தவர்வேலை இல்லாம கண்டதையும் பேசுறதை பாருஎன் புள்ளை ஒரு நாளும் அப்படி செய்ய மாட்டான்என்று மனதிற்குள் எண்ணியவருக்கு சற்று கலக்கம் தான்.

 

 

மனமோ மகனை நம்புவதும் நம்பாததுமாக கண்ணாமூச்சி ஆட ஹேமா தான் அன்னையின் போக்கில் வித்தியாசம் கண்டு என்னவென்று கேட்க போன் வந்த விஷயத்தை மகளிடம் உரைத்தார் அவர்.

 

 

ஹேமாவுமே பிரணவ் அப்படி செய்திருப்பான் என்று நம்பவில்லை.அம்மா அவருக்கு பொறாமைம்மா நம்ம வீட்டு மேலஅவங்களுக்கு எல்லாம் நம்ம குடும்பத்தை பத்தி ஏதாச்சும் பேசிட்டே இருக்கணும்

 

 

விட்டுத்தள்ளுங்கம்மா அவங்களைஎன்னையும் சசியையும் பேசியாச்சுபிரணவ் தான் பாக்கின்னு அவனையும் குத்தம் சொல்றாங்கஎன்று சொல்லி அன்னையை சமாதானம் செய்தாள்.

 

 

தாயும் மகளும் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்துக் கொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்தார் அந்த உறவினர். மரியாதை நிமித்தம் அவரை அழைத்து பேசினர்.

 

 

அவர் வரும் போது வீட்டில் பிரணவின் தந்தை வெங்கடேசன், மாலதி, ஹேமா, அவளின் கணவர் அர்ஜுன் மற்றும் மேலும் சில உறவினர்களும் இருந்தனர்.

 

 

என்னம்மா நான் சொன்னதை நீங்க நம்பலைன்னு நினைக்கறேன். போன் பேசிட்டு இருக்கும் போதே வைச்சுட்டீங்கஎனக்கு பொய் சொல்ல அவசியம் இல்லைம்மா

 

 

ஒருவேளை அங்க நீங்க எல்லாரும் இருந்திருந்தா கூட எனக்கு பெரிசா எதுவும் தோணியிருக்காது. கல்யாணம் ஏதோ சிம்பிளா பண்ணுறாங்கன்னு நினைச்சுட்டு போயிருப்பேன்

 

 

அங்க ஒருத்தர் கூட தெரிஞ்ச முகமே இல்லை. அதுவுமில்லாம பிரணவ் அங்க யாரு கூடவோ சண்டை போடுறா போல பேசிட்டு இருந்துச்சு

 

 

எனக்கென்னமோ யாரோ ஒரு பொண்ணை இழுத்துட்டு போயி தான் தம்பி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. உங்களுக்கு விஷயம் தெரியுமோ தெரியாதோன்னு தான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்

 

 

இப்போ தான் சசிக்கு கல்யாணம் முடிஞ்சுது. எப்போடா அந்த கல்யாணம் முடியும்ன்னு காத்திருந்து உங்க பிள்ளை இழுத்திட்டு ஓடினா மாதிரி இருக்குஎன்று அவர் பேசப் பேச ஒருவருக்கும் பதில் பேச முடியாது போயிற்று.

 

 

அர்ஜுனுக்கு தான் கொஞ்சம் கோவம் வர ஆரம்பித்தது.ரொம்ப சந்தோசங்க நீங்க வந்து சொன்னதுக்கு. எவ்வளவு நல்லது பண்ணியிருக்கீங்க நீங்க எங்களுக்கு

 

 

எவ்வளவு பொறுப்புங்க உங்களுக்குதிருத்தணிக்கு சாமி கும்பிட போனவர் அந்த வேலையை விட்டுப்புட்டு நேரா இங்க வந்து சொன்னீங்க பாருங்க. உங்க கடமை உணர்ச்சியை நான் பாராட்டுறேங்க

 

 

நீங்க வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன்நாம இன்னொரு நாள் பார்ப்போம்போயிட்டு வாங்கஎன்று முகத்துக்கு நேராகவே அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தேவிட்டான்.

 

 

மாலதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் ஜாதகத்தில் உள்ளது போல் அவன் திருமணம் முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்வதா இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டானே என்று அழுவதா ஒன்றும் புரியவில்லை அவருக்கு.

 

 

தன் குடும்பத்திற்கே சாபம் போலும் உற்றார் எல்லாம் பேசுவது போலாகவே உள்ளதே என்று எண்ணி கண்ணீர் வடித்தார். முதலில் ஹேமாவின் திருமணம் முடிவதற்குள் ஆளுக்கொன்றை சொல்லி வதைத்தனர்.

 

 

பின்னர் குழந்தை இல்லை என்பதை சொல்லிக்காட்டி பேசினர், அதன் பின் இந்த ஓராண்டுகளாய் சசிக்கு மாப்பிள்ளை அமையவில்லை என்று புரளி பேசினர். இதோ இப்போது பிரணவும் அவர்கள் வாய்க்கு அவலாகிப் போனானே!! என்று வருத்தம் எல்லோருக்கும் இருந்தது.

 

 

அர்ஜுன் அவனுக்கு போன் செய்ய பிரணவ் அதை அணைத்து வைத்திருக்க அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பிரணவிற்கு ஒரு மெசெஜ் அனுப்பி வைத்தான் அர்ஜுன்.

 

 

இரவெல்லாம் வீட்டினர் யாருமே சரிவர உறங்கவில்லை. பொழுதும் விடிந்தது, சசி வீட்டினர் விருந்துக்கு வருவர், இந்த நேரத்தில் இவன் இப்படி செய்து வைத்திருக்கிறானே யாருக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாமல் கடமைக்கு எல்லாரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

திருமணம் முடிந்து முதல் முறையாய் வீட்டிற்கு வரும் மகளை நல்லவிதமாய் கவனித்து அனுப்ப வேண்டும் என்ற கவலை மாலதியை அரிக்க பிரணவை பற்றி யாரும் கேட்டால் வெளியூருக்கு சென்றிருக்கிறான் என்று கூறிவிட வேண்டும் என்று பேசி வைத்திருந்தனர்.

 

 

அவர்கள் எண்ணம் இப்படியிருக்க வாயிலில் செருப்பை விட்டு உள்ளே நுழைந்தவனை தூரத்திலேயே கண்டுவிட்ட மாலதி தான்வெளியே போடாஎன்று கர்ஜனையாய் கூறியது.

 

 

உள்ளே நுழைந்த பிரணவிற்கோஎன்னாச்சு அதுக்குள்ள விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சா எப்படிஎன்று எண்ணிக் கொண்டே அன்னையை ஏறிட்டான்.

 

 

என்னம்மா என்னாச்சு!! ஏன் ஒரு மாதிரியா பேசறீங்க!!

 

 

நீ தான் ஒரு மாதிரியா பேச வைக்கிற??”

 

 

என்ன சொல்றீங்க??”

 

 

இப்போ எதுக்கு இங்க வந்த, சொல்லாம கொள்ளாம கல்யாணம் முடிச்சவனுக்கு இங்க மட்டும் என்ன வேலைஎன்று பட்டென்று உடைத்தார்.

 

 

அப்போ உங்களுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு…”

 

 

அப்புறம் தெரியாம எப்படி போகும்வீடு தேடி வந்து சொல்லிட்டு போறாங்களே, தெரியாம இருக்குமா என்ன!!

 

 

யார் வந்தாங்க!!

 

 

அது இப்போ முக்கியமில்லைஎன்று மூக்குடைத்தார் அவர். மற்றவர்கள் எல்லாம் அமைதியாய் இருந்தனர் மாலதியே பேசட்டும் என்று. சசி வீட்டினர் இன்னமும் வந்திருக்கவில்லை நல்ல நேரம் பார்த்து அவர்கள் கிளம்பி வர நேரமாகும் என்றிருந்தனர்.

 

 

நான் சொல்றதை கொஞ்சம் கேட்கறீங்களா!!

 

 

தேவையில்லை!! நீ எதுவுமே பேசத் தேவையேயில்லை!! எங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தாங்கறதையே நாங்க மறந்திர்றோம். உன்னை ஒரேடியா தலை முழுகிட்டோம்…”

 

 

இனி நீ எங்களுக்கு வேண்டாம்!!என்று கத்தியவரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது.

 

 

அம்மா ப்ளீஸ்ம்மா எதுக்கு அழறீங்க!! நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்களேன்!!என்றவனின் குரல் சற்றே இறங்கியிருந்தது.

 

 

அப்போது சரியாக சசியும் அவள் கணவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். சசியோ வேகமாய் வந்துடேய் பிரணவ் எங்கடா போன, என் கல்யாணம் முடிச்சு போனவன் இப்போ தான் வர்றியாஎன்று கேட்டுக்கொண்டே அவனருகில் வந்தாள்.

 

 

சசி…” என்று அதட்டிய மாலதி உடன் இருந்த மருமகனை கண்டு குரலை தழைத்தவர்அவன் இப்போ யாரோநீ அவன்கிட்ட பேச வேண்டிய அவசியமில்லை. இன்னும் ஏன் நீ இங்க நிக்கற கிளம்பு

 

 

அம்மா ஏம்மா இப்படி பண்றீங்க??” என்றான் ஆதங்கமாய்

 

 

நீ நடிச்சு எதுவும் சீன் போட வேண்டாம், கிளம்பு முதல்லஎன்றவரின் குரலில் உறுதி தெரிந்தது.

 

 

எனக்கு எப்பவும் நடிச்சு பழக்கமில்லை, பொய் பேசியும் வழக்கமில்லை. நல்லவங்க போர்வையில நெறைய பேரு நடிக்கறாங்க அதெல்லாம் உங்களுக்கு தெரியறதில்லைஎன்றவன் எங்கோ பார்த்து கொண்டு அதை சொல்ல அர்ஜுன் மட்டும் அவனை கேள்வியாய் பார்த்தான்,என்ன சொல்ல வர்றான்என்று.

 

 

அர்ஜுனுக்கு மட்டும் அவன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது பிரணவ் தவறாய் ஏதும் செய்திருக்க மாட்டான் என்று. அவனை பார்க்க பாவமாய் இருந்தது அவனுக்கு.

 

 

மற்றவர்கள் எல்லாம் வீட்டு மனிதர்களாய் இருந்து அவன் பிரச்சனையை பார்க்க அர்ஜுன் மட்டும் வெளியாளாய் இருந்து அவனை புரிந்து கொள்ள முயன்றான்.

 

 

இப்படி செய்பவனல்ல ஆனால் நடந்துவிட்டது. நிச்சயம் அதற்கு வலுவான காரணம் இருக்கும் என்பதை அவனால் முழுதாய் உணர முடிந்தது. ஹேமாவை அவன் திருமணம் செய்யும் போது பிரணவ் கல்லூரில் படித்துக் கொண்டிருந்தான்.

 

 

பிரணவ் அவனுக்கு உடன்பிறந்த சகோதரன் போலவே தோன்ற அவனிடம் இயல்பாக பழகினான் அர்ஜுன். பிரணவுக்கும் அர்ஜுன் என்றால் ஒரு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

 

 

பிரணவின் தந்தைக்கு சற்று உடல் நலம் குன்றியிருந்தது. திடிரென்று வந்த ஸ்ட்ரோக்கால் கை கால் இழுத்துக்கொண்டு விட அத்தோடு பேச்சும் தடைபட்டு நின்று போனது.

 

 

அதன்பின்னே அவன் அன்னை மாலதி தான் முன்னின்று குடும்பத்தை கவனிக்க கணவரை கவனிக்க குழந்தைகளை கவனிக்க என்று வாழ்க்கை சென்றது.

 

 

வெங்கடேசனுக்கு இப்போது தான் கை கால்கள் கொஞ்சம் சரியாகி நடக்க முடிந்திருந்தது. ஆனால் பேச்சு இன்னமும் சரிவர தெளிவாய் வந்திருக்கவில்லை.

 

 

அவருக்கும் மகனின் மேல் நம்பிக்கை இருந்தது ஆனால் அதைச் சொல்ல தனக்கு முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கண்ணில் நீர் வழிய அமர்ந்திருந்தார் அவர்.

 

 

நீ போகலாம்…” என்று மீண்டும் மாலதி குரலெடுக்க பிரணவிற்கு அவமானமாகத் தான் இருந்தது. அவனால் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.

 

 

தானே சொல்லியிருந்தாலும் இதெல்லாம் நடந்திருக்க தான் செய்யும், ஆனால் யாரோ பார்த்துவிட்டு வந்து சொல்வதென்பது இன்னமும் வலியாயிற்றே!!

 

 

அவனுக்கு கோபம் பாதி இயலாமை மீதியாய் எதுவும் பேசாமலே நின்றிருந்தான். அர்ஜுன் தான் நிலைமை கை மீறி போவதறிந்து வேகமாய் அவனருகில் வந்தான்.

 

 

நீ கிளம்பு பிரணவ்

 

 

மாமா!!

 

 

நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு இப்போ நிலைமை சரியில்லை!! அப்புறம் பேசிக்கலாம்

 

 

இவன் எப்போ வந்தாலும் இந்த வீடு பூட்டி தான் இருக்கும். நாங்க தலை முழுக்கிட்டோம்ன்னு சொல்லுங்க அவன்கிட்டஎன்றது மாலதியின் குரலே தான்.

 

 

அர்ஜுன் எதுவும் பேசாமல் திரும்பி அவரை ஒரு பார்வை பார்க்க அவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

 

நீ போ பிரணவ்!!என்றவன் தணிந்த குரலில்நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன் நைட் பதினோரு மணிக்கு பிளைட் எனக்குநான் மட்டும் தான் போறேன்!!என்றவனின் பேச்சில் பிரணவிற்கு சேதி இருந்ததை அவனும் புரிந்து கொண்டான்.

 

 

செல்லும் முன் சசியையும் அவள் கணவரையும் மாறி மாறி பார்த்தான்.இவன் ஏன் என்னை வில்லனை பார்க்கற மாதிரி பார்க்கறான்என்று நினைத்தது சசியின் கணவனே.

 

 

சசியின் கணவன் சரவணனை பார்த்து பிரணவ் முறைப்பதை அர்ஜுன் பார்த்துக் கொண்டு தானிருந்தான். பிரணவ் எதுவும் பேசாமல் வெளியேறி சென்றுவிட்டான்.

 

 

கிளம்பும் முன் மீண்டுமொரு முறை சசியின் முகத்தை உற்று நோக்கினான், அவள் சந்தோசமாய் தானிருக்கிறாளா என்று. பின்னர் சரவணனின் முகத்தை பார்த்தான்நீ ஏதாவது தில்லுமுல்லு செய்தால் தொலைந்து போவாய்என்பதானா பார்வை பார்த்து நகர்ந்தான்.

 

 

சசியின் கணவன் சரவணனே தான். மனோ அவள் தந்தை அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை என்று சொன்ன அதே சரவணன் தான். சசியின் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் பிரணவின் நண்பன் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் இருந்து வந்த தகவல்களை நண்பனுக்கு போன் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தான்.

 

பிரணவிற்கு அதிர்ச்சியே கடைசி நேரத்தில் இப்படி ஒரு தகவலா என்று!! சரவணனை பற்றி இன்னமும் முன்னரே விசாரித்திருக்க வேண்டுமோ என்று எண்ணி தவித்து போனான்.

 

 

சசியின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ!! திருமணம் நின்று போனால் எல்லாரும் இன்னமும் அதிகமாய் பேசி பேசியே கொன்றுவிடுவரே!! என்று கலங்கினான்.

 

 

என்ன முடிவெடுக்க என்று தெரியாமல் அவன் திணற அதற்குள் திருமண வைபவமும் நிகழ்ந்தேறியது. இது தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவன் நடப்பவற்றை கவனிக்கலானான்.

 

 

மனோ எங்கோ ஏதோ தவறாய் கணித்திருக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. சரவணனை பற்றி தன் வீட்டினர் அவ்வளவு சாதாரணமாய் எல்லாம் விசாரித்திருப்பார்கள் என்று தோன்றவில்லை அவனுக்கு.

 

 

மனோ தான் அப்படி சொன்னாள் என்றால் சரவணன் ஏன் அதை உறுதிப்படுத்தும் விதமாய் ஆமோதிப்பாய் சொல்லியிருக்கிறான் என்ற குழப்பம் தான் மிஞ்சியது அவனுக்கு.

 

 

சொத்து தான் காரணம் என்று இறுதியில் முடிவுக்கு வந்தான். ஆனாலும் மனம் சமாதானமடையவில்லை. மனோ கொடுத்த எண்ணும் தன்னிடமிருந்த சரவணனின் எண்ணும் ஒன்றே என்பதை அப்போது தான் பார்த்தான் அவன்.

 

 

இப்படியாக மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பத்துடன் மனோவின் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்திய பின்னே தான் உணர்ந்தான். மதிய உணவை வாங்காமலே வந்தது, இவ்வளவு தூரம் வந்தாயிற்று அவளையும் அழைத்துச் செல்வோமா!!

 

 

அவனுக்கு இரண்டு மனமாய் இருந்தது வெளியே சென்று சாப்பிட பிடிக்கவில்லை. வாங்கி வந்தே சாப்பிடலாம் என்று எண்ணி மீண்டும் வண்டியை கிளம்பிக்கொண்டு சென்றான்.

 

 

அதற்கு வாயிலில் அவன் வண்டி சத்தம் கேட்டு வெளியில் வந்தவள் அவனை காணாமல் கேட்டில் நின்று எட்டிப்பார்க்க அவன் வண்டியோடு சென்றுக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

 

 

என்னாச்சுஉள்ள கூட வராம மறுபடியும் வெளிய போறாருஎன்று எண்ணிக்கொண்டவளுக்கு மனம் தவிக்க ஆரம்பித்தது.

 

 

அவங்க வீட்டில என்னாச்சோ!! என்னவோ தெரியலையே!! அதுல மூட் அவுட் ஆகி திரும்பவும் போறாரா!!என்று கண்டதும் மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டு அவனுக்கு போன் செய்தால் அது சுவிட்ச் ஆப் என்று வந்ததில் இன்னமும் அதிகமாய் கலங்கித் தான் போனாள்.

 

 

அரைமணி நேரம் கழித்து வாசலில் மீண்டும் கேட்ட வண்டியின் ஒலி மட்டுமே அவளுக்கு நிம்மதியை கொடுத்தது என்றால் மிகையாகாது. வேகமாய் வாசலுக்கு ஓடிவந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியிருந்தது கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தான் அவன்.

 

 

என்னாச்சு ரதி?? எதுக்கு இவ்வளவு அவசரமாய் ஓடி வர்றே??”

 

 

வீட்டுக்கு வந்திட்டு மறுபடியும் எங்க போனீங்க??”

 

 

சாப்பாடு வாங்க மறந்திட்டேன், அதான் போனேன்என்றான்.

 

 

சொல்லிட்டு போயிருக்கலாம்ல, என்னாச்சோ ஏதாச்சோன்னு நான் கவலைப்பட்டுட்டு இருந்திருக்க மாட்டேன்லஎன்றவளின் குரல் உடைந்திருந்தது.

 

 

அவன் வேண்டுமென்று அப்படி செய்யவில்லையேஆனால் சொல்லி சென்றிருக்கலாம் என்று தோன்றியது.சாரிம்மா, நான் ஏதோ ஞாபகத்துல அப்படியே போயிட்டேன்

 

 

சாரி ப்ளீஸ்வா உள்ள போகலாம்என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.

 

 

ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கியா, ஒரு அஞ்சு நிமிஷம் இரு. நான் முகம் கை கால் கழுவிட்டு வந்திடறேன் சாப்பிடலாம்என்றுவிட்டு உள்ளே செல்ல அவள் இன்னமும் அப்படியே நின்றிருந்தாள்.

 

 

ரதி அதான் சாரி சொன்னேன்லஇன்னும் என்னம்மாநீ சாப்பாடு எடுத்து வைஎனக்கு ரொம்ப பசிக்குது ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்என்று கூறவும் கைகள் தானாய் உணவு பொட்டலத்தை பிரிக்க ஆரம்பித்தது.

 

 

சாப்பிடும் முன்என்னாச்சுஎன்று ஆரம்பித்தவளிடன்சாப்பிட்டு பேசலாம்என்று அவன் முடித்துவிட இருவருமாய் அமைதியான மனநிலையிலேயே சாப்பிட்டு எழுந்தனர்.

 

 

யோசனையுடன் அவன் சோபாவில் அமர்ந்துவிட தயங்கி தயங்கி அவனெதிரில் வந்து நின்றாளவள்.இப்படி வந்து உட்காரு ரதிஎன்று அவன் பக்கம் கையை நீட்ட மறுக்காமல் வந்து அமர்ந்தாள்.

 

 

என்ன சொன்னாங்க!!

 

எதிர்பார்த்தது தானேம்மா அது தான் நடந்ததுஎன்று சுருக்கமாய் உரைத்தான்.

 

 

ரொம்ப திட்டிட்டாங்களா!!

 

 

நான் சொல்லாம கல்யாணம் பண்ணா அது அவங்களுக்கு கஷ்டமா தானே இருக்கும்அதுவும் அந்த விஷயத்தை நான் சொல்ல முன்னாடி நம்மளை கோவில்ல பார்த்த என்னோட ரிலேஷன் ஒருத்தர் போய் சொல்லிடாரு வீட்டில

 

 

எல்லாரும் ரொம்ப கோபமா தான் இருக்காங்கஎன்றவன் சரவணன் பற்றி அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தை மனதிற்குள் நிகழ்த்திக் கொண்டிருந்தான்.

 

 

சொன்னால் வேதனைப்படுவாள் என்று எண்ணி அவன் மறைத்த விஷயம் பின்னால் தன்னை வேதனைப்படுத்தும் என்று எண்ணியிருந்தால் சொல்லியிருப்பானோ!!

 

 

எல்லாம் என்னால தான், நான் தான் இப்படி தனிமரமா நிக்கறேன். இப்போ உங்களையும் இப்படி ஆக்கிட்டேன், எல்லாமே என்னால தான்என்று சட்டென்று முகத்தில் அறைந்து கொண்டு அவள் அழவும் பதறிப்போனான் அவன்.

 

 

முட்டாள்…” என்று கோபமாய் பேசவும் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

 

 

இனிமே இப்படி நீ பேசின நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!! இது தான் நான் உனக்கு கடைசி முறையா சொல்றதுன்னு நினைச்சுக்கோ!!

 

 

உனக்கு நான் இருக்கேன், எனக்கு இப்போ நீ இருக்கநம்ம வீட்டுல நம்மளை புரிஞ்சு ஏத்துக்க கொஞ்ச நாளாகும் அதுக்காக நமக்குன்னு யாருமேயில்லைன்னு நினைக்காத

 

 

நமக்கு எல்லாரும் இருக்காங்கஎன்ன கொஞ்சம் தள்ளியிருக்காங்ககொஞ்ச நாளைக்கு உறவுகளை விட்டு தனியா வெளிநாட்டுல இருக்கறதா நினைச்சுக்கோ”

 

 

“சும்மா கண்டதை உளறின அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்என்று கோபமாகவும் கண்டிப்பாகவும் சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.

 

 

மனோபாரதி அவன் கோபத்தை கண்டு வாயடைத்து போனாள். கண்ணீர் சட்டென்று நின்று போயிருந்தது….

 

Advertisement