Advertisement

அத்தியாயம் –17

 

 

சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.

 

 

என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை கேட்டபின்னே தான் மோனாவுடன் இருந்தது அவனின் அண்ணன் என்பது புரிந்தது.

 

 

உனக்கு தெரியாததா இன்னைக்கு நாங்க அங்க போகணும் அப்பா வந்திடுவார், அவரை சமாளிக்க முடியாது தெரியும்லநாளைக்கே எல்லாரும் ஊருக்கு கிளம்பறாங்க…”

 

 

ஹ்ம்ம் சரிண்ணா பெரியப்பாகிட்ட நீங்க எதுவும் சொல்லலையே

 

 

நீ சொல்லாம நான் எதுவும் அப்பாகிட்ட சொல்ல மாட்டேன்டாஆனா நீ எப்போ வர்ற??”

 

 

நாளைக்கு

 

 

ரெண்டு பேரும் தானே

 

 

இப்போ வேண்டாம் நான் மட்டும் தான் வருவேன்…”

 

 

டேய் நான் சொல்றது…” என்று பிரணவின் அண்ணன் பிரகாஷ் ஆரம்பிக்கும் போதே கையமர்த்தியவன்வேண்டாம் இப்போ வேண்டாம்நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறேன்விட்டுடுங்கஎன்றான்

 

 

அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை மனோவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததுஅவர்கள் பேசியது புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தது.

 

 

சரிடா அப்போ நாங்க கிளம்பறோம்போயிட்டு வர்றோம்மா பார்த்து பத்திரமா இருங்கஇனிமே உனக்கு எந்த கவலையும் வேண்டாம். நடக்கறது எல்லாம் நல்லதுக்கு தான்என்ற பிரகாஷின் பேச்சு அவளுக்கு இதமாகவே இருந்தது.

 

 

வெகு நாளைக்கு பின் ஆறுதலாய் கேட்ட பேச்சு என்பதால் வந்த இதம் அது.சரி மனோ நாங்க போயிட்டு வர்றோம். அப்புறம் நைட் நீங்க அந்த ரூம்ல படுத்துக்கோங்கஎன்ற மோனா இருவரையும் பார்த்து லேசாய் சிரித்து வைத்தாள்.

 

 

என்ன அண்ணி எதுக்கு இவ்வளவு பர்டிகுலரா சொல்றீங்க??”

 

 

அங்க தான் அலங்காரம் எல்லாம் பண்ணி வைச்சிருக்கேன் அதுக்கு தான் சொன்னேன்என்று பட்டென்று உடைத்தாள் அவள்.

 

 

அண்ணீ…” என்று பல்லைக்கடித்தான் பிரணவ்.

 

 

மனோவிற்கு அவள் சொன்னதின் அர்த்தம் புரிய ஏனோ காரணமில்லா பயமும் கூச்சமும் லேசாய் வெட்கமும் எட்டி பார்த்து முகம் சிவந்தது.

 

 

என்ன அண்ணி?? இல்லை என்ன அண்ணிங்கறேன்இன்னைக்கு வேணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா உங்களுக்கு தோணாம இருக்கலாம். என்னைக்காச்சும் உங்க வாழ்க்கையை நீங்க திரும்பி பார்க்கும் போது நமக்கு இப்படி ஒண்ணு நடக்கவே இல்லையேன்னு உங்களுக்கு தோணக் கூடாது

 

அதனால தான் இதெல்லாம் செஞ்சிருக்கேன்ஒருத்தியா கஷ்டப்பட்டு ரெடி பண்ணியிருக்கேன் உங்கண்ணன் எனக்கு ஒரு ஹெல்ப் கூட செய்யலை…”

 

 

டேய் உங்கண்ணிக்கு விவஸ்த்தையே கிடையாதுடாஅம்மா தாயே நாம கிளம்புவோமாசரி நாங்க கிளம்பறோம்என்றவனுக்கு இருவருமாய் தலையசைத்து வைத்தனர்.

 

 

வாசல் வரை வந்து இருவரையும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தனர். மனோபாரதிக்கு ஏனோ பிரணவுடன் தனித்திருப்பது புதிதாய் வயிற்றில் பயப்பந்து ஒன்று உருண்டது.

 

 

நீ சாப்பிடுறியா எதுவும் நான் போய் வாங்கிட்டு வரேன்என்ற பிரணவை ஏறிட்டு பார்த்தாள்.

 

 

இருந்த கவலைல நீ சரியா சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு தெரியலை. உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு நான் வாங்கிட்டு வரேன்இல்லன்னா ரெண்டு பேரும் சேர்ந்தே ஹோட்டல் போய் சாப்பிட்டு வருவோமாஎன்றான்.

 

 

அவன் அப்படி கேட்டதும் மளுக்கென்று கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டு வெளியில் வந்து விழுந்தது. அவன் சொன்னது உண்மை தான் அவள் அத்தையும் அவள் மகனும் வீட்டிலிருந்ததில் ஏனோ மனோவால் நிம்மதியாய் ஒரு வாய் உணவு கூட விழுங்க முடியாமல் போனது.

 

 

அதை உணர்ந்தவன் போன்று பிரணவ் கேட்டதும் அவன் அக்கறையில் மனம் குளிர்ந்து கண்ணீர் வந்துவிட்டது.நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு நீ அழறம்மா..

 

 

இல்லை ஒன்னுமில்லைங்கஇவ்வளோ நாளா யாரும் நீ சாப்பிட்டியான்னு கூட கேட்கலை. நீங்க கேட்டதும் என்னமோ பண்ணிடுச்சுஎங்க அம்மாப்பா ஞாபகம் வந்திடுச்சு அதான்என்று கண்ணீரை துடைக்க அவள் கை நீளும் முன் அவனே துடைத்துவிட்டான்.

 

 

சரி சொல்லு நான் வாங்கிட்டு வரட்டுமா, இல்லை சேர்ந்து போகலாமாஎன்னோட வர உனக்கு சங்கடமா இருந்தா நான் வாங்கிட்டே வந்திடறேன்என்றான்.

 

 

உங்களோட வர்றதுக்கு எனக்கு என்ன சங்கடம் இருக்கப் போகுது. நாம வெளிய போய் சாப்பிடலாம்என்று அவள் கூற பிரணவ் நிறைவாகவே உணர்ந்தான்.

 

 

வேறவேற டிரஸ் எதுவும் மாத்தணும்ன்னா நீ போய் மாத்திட்டு வாம்மா. நான் இங்க வெயிட் பண்ணுறேன்

 

 

ஒரு அஞ்சு நிமிஷம் மாத்திட்டு உடனே வந்திர்றேன்என்றுவிட்டு உள்ளே சென்று மறைந்தவள் உடுத்தியிருந்த பட்டுப்புடவையை மாற்றிவிட்டு வேறு புடவையை அணிந்து கொண்டு வந்தாள்.

 

 

பிரணவிற்கு தான் அவளுடன் தனித்திருப்பது மூச்சையடைப்பது போல் இருந்தது. தனக்கு பிடித்த பெண் தன்னருகில் அதுவும் மனைவியாய் என்று நினைக்கும் போதே இனித்தது அவனுக்கு.

 

 

வீட்டை பூட்டி வெளியில் வந்தவள் அவனுடைய வண்டி அங்கு நின்றிருந்ததை அப்போது தான் பார்த்தாள்.வண்டி எப்போ இங்க வந்திச்சி…”

 

 

பிரகாஷ் அண்ணா எடுத்திட்டு வந்து விட்டுட்டு போனார்

 

 

ஓ அவர் பேரு பிரகாஷா!!என்று அவள் கூறவும் தான் அவளுக்கு பிரகாஷையும் மோனாவையும் முறைப்படி அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்பதே அவனுக்கு ஞாபகம் வந்தது.

 

 

சாரிம்மா ஏதோ ஞாபகத்துல அவங்களை உனக்கு அறிமுகம் செய்ய மறந்திட்டேன். அவர் என்னோட அண்ணா பிரகாஷ் பெரியப்பா பையன் என் மேல ரொம்ப ப்ரியம் அவருக்கு

 

 

கூட இருந்தது எங்கண்ணி அவங்களுக்கும் நான்னா பிடிக்கும். நான் எங்கண்ணன் கிட்ட எப்பவும் எதையும் மறைச்சதில்லை அதான் நம்ம கல்யாணத்துக்கு அவனை வரவைச்சேன்

 

 

சரி வா போய் சாப்பிட்டு வந்து பேசிக்கலாம்என்றுவிட்டு சாவியை போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

 

 

இருவருமாக சாப்பிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இரவு நெருங்க நெருங்க மனோவை கலவையான உணர்வுகள் ஆட்டிப்படைத்தன.

 

 

அவளே உணராத இன்னொன்று அவளின் இந்த பதட்டம் அச்சம் கலந்த நாணம் எல்லாமே பிரணவிடம் மட்டுமே உண்டாதை. கொஞ்சம் யோசித்தால் அவளுக்கே புரிந்திருக்குமோ!! என்னவோ!!

 

 

பிரணவ் அவள் அண்ணி அலங்கரித்து வைத்திருந்த அறையில் இருந்தான் போலும் உள்ளே விளக்கெரிந்து கொண்டிருந்தது. குளியறையில் இருந்து நீர் விழுகும் ஓசை கேட்டது.

 

 

இவன் உடைமைகள் எல்லாம் இங்கு எப்போது வந்தது அவனின் அண்ணன் கொண்டு வந்திருப்பாராய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள்.

 

பின் ஏதோ தோன்றியவளாய் அவளுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு வேறு உடை மாற்றினாள். பின் கண்ணை மூடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள்.

 

 

காலையில் அவள் அத்தை குதித்த குதி என்ன விட்டால் கண்டிப்பாய் தன்னை அவள் அடித்தேயிருப்பாள் பிரணவ் மட்டுமே குறுக்கே நில்லாதிருந்தால்.

 

மீண்டும் அவள் நினைவுகள் திருமணம் முடிந்த பின்னே அவள் அத்தை ஆடிய ஆட்டத்தை நினைத்து சிலிர்க்க ஆரம்பித்தது.

 

_____________________

 

 

மனோவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து முடித்தவுடன் மோனோ அவளிடம்தாலி எடுத்து உள்ளே போட்டுக்கோ மனோஎன்று கூற பிரணவோஇல்லை கொஞ்சம் நேரம் வெளிய இருக்கட்டும் ஒரு வேலை இருக்கு…” என்றவன் மனோவின் கையை பிடித்து வெளியில் வந்தான்.

 

 

அவன் அவளை நேரே அழைத்து சென்றது அவள் அத்தையிடம். நளினியோ வெகுநேரமாய் மனோவை காணாமல் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்க மனோவுடன் அனுப்பியவள் கையை பிசைந்து நின்றுக்கொண்டிருந்தாள் அவள் முன்.

 

 

பரபரப்பில் இருந்த நளினி அப்போது தான் நிமிர்ந்து எதிரில் இருந்தவர்களை பார்க்க கண்கள் ரௌத்திரத்தை சுமந்தது. வந்த ஆத்திரத்தில் மனோவின் தலை முடியை கொத்தாக பற்ற கையை கொண்டு போனவளின் முன்னே வழிமறித்து நின்றான் பிரணவ்.

 

 

நீ யாருடா இவளுக்கு வந்துட்டான் ஊடையிலநீ எப்படிடா தாலி கட்டலாம்எல்லாம் இவளை சொல்லணும் ஓடுகாலி…”

 

 

போதும் வார்த்தையை கொஞ்சம் பார்த்து பேசுங்க

 

 

என்னத்தை பார்த்து பேச சொல்லுறசொத்து இருக்கு இவளை கேட்க ஆளில்லைன்னு தானே கட்டிகிட்டஎன்று பொரிந்தாள் நளினி.

 

 

மனோவை தேடிச் சென்ற கார்த்திகேயன் அப்போது தான் அங்கு வந்தான். கண்கள் இடுங்க இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவன்எல்லாம் உன்னால தான்ம்மா ஒழுங்கா அன்னைக்கே எல்லாம் முடிச்சிருந்தா இப்படி செஞ்சுட்டு வந்து நிப்பாளா இவ

 

 

என்னமோ கதை சொன்னே?? போச்சா எல்லாம் போச்சா கல்யாணம் நின்னு போச்சா இனி ஒரு பய என்னைய மதிக்க மாட்டான். சொத்தும் கூடவே சேர்ந்து போச்சுஎன்று கத்தியவனை ஓங்கி ஒரு குத்து வைக்க வேண்டும் போல தோன்றியது பிரணவிற்கு.

 

 

கோவில் என்பதாலேயே அமைதி காத்து நின்றான்.

 

 

டேய் எனக்கென்னடா தெரியும் இவ இப்படி செய்வான்னுஇவன் மட்டும் என்ன இவளை சும்மாவா கட்டியிருக்கான், சொத்துக்காக தானேடா கட்டியிருக்கான்என்று ஆங்காரமாய் ஓங்கரித்தாள்.

 

 

ஹலோ போதும் பேசினது எல்லாம், கிளம்பறீங்களா!!

 

 

நீ யாருடா எங்களை கிளம்ப சொல்றதுக்கு…” என்றவர் கோவில் என்றும் பார்க்காமல் இருவரையும் வசவு சொற்களால் பேச ஆரம்பிக்கநீங்க இப்போ நிறுத்தறீங்களா இல்லையா!!

 

 

நீங்க நிறுத்தலைன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்க்கு தான் போவேன். நீங்க என்னென்ன பண்ணீங்கன்னு இவ கையால எழுதி கொடுக்க சொல்லி உங்க ரெண்டு பேரையும் தூக்கி உள்ள வைச்சிருவேன்…”

 

 

என்னடா மிரட்டுறியா??”

 

 

உங்க யோக்கிய பிள்ளை மேல ஏற்கனவே உங்க ஊரு போலீஸ் ஸ்டேஷன்ல நெறைய கம்பிளைன்ட் இருக்கு. இதுல இதுவும் கூட சேர்ந்துக்கும்

 

 

எங்க அண்ணாவும் போலீஸ்ல தான் இருக்காரு. ஒரு வார்த்தை சொன்னேன்னா இப்போவே வந்திடுவார், வரச்சொல்லவாசும்மா விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க

 

 

என்னை பத்தி உங்களுக்கு தெரியாது. கண்டிப்பா செஞ்சிடுவேன்உங்க புள்ளைய பத்தி தெரிஞ்சுகிட்ட எனக்கு அவன் வெளியவே வரமுடியாம உள்ள அனுப்பறதுக்கு என்ன வழி பண்ணணும்ன்னும் தெரியும்…” என்று அமைதியான குரலிலேயே சொன்னான்.

 

 

அவர்களை போல ஆர்ப்பாட்டாமோ கத்தலோ எதுவுமின்றி ஆனால் அழுத்தமாகவும் அவர்களுக்கு உரைக்குமாறும்  சொன்னான்.

 

 

கார்த்திகேயனும் நளினியும் வாயை சட்டென்று மூடிக்கொண்டனர். பிரணவ் அவர்கள் கையில் ஒரு பையை நீட்டினான். இருவருமே என்னவென்பது போல் பார்த்தனர்.

 

 

நீங்க என் மனைவிக்கு வாங்கிக்கொடுத்த சேலைஅப்புறம் வீட்டு சாவியை கொடுக்கறீங்களா இனிமே உங்களுக்கு அங்க வேலையில்லைஎன்று கூற நளினியின் கை தன்னை போல சாவியை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டது

 

 

போகலாம் வா…” என்று சொல்லி மனோவை அழைத்துச் சென்றான்.

 

 

நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க…” என்ற நளினியின் குரல் அவர்களின் பின்னால் கேட்டது. மணமக்கள் வீட்டிற்கு வந்து இறங்கிய சற்று நேரத்திற்குள் நளினி மட்டும் வந்தாள்.

 

 

எங்க பை இங்க தான் இருக்கு எடுக்க வந்தேன்என்று பிரணவை பார்த்து மெதுவாக மொழிந்துவிட்டு அறைக்குள் சென்று அவர்கள் கொண்டு வந்த பையை தூக்கிக்கொண்டு வெளியேறி சென்றும்விட்டாள்.

 

 

உண்மையாக மனோவிற்கு அந்த நேரம் நிம்மதி பெருமூச்சு வந்தது. அவ்வளவு தானா இதற்கா தான் அவ்வளவு பயந்தோம் என்று எண்ணிக் கொண்டாள்

 

 

அவன் தன் எண்ணத்திலேயே உழன்று கொண்டிருக்க அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்க எழுந்து சென்று கதவை திறந்தாள்.

 

 

எதிரில் நின்றவளை பார்த்ததும் அவனுக்கு முதலில் திகைப்பு தான்.இங்க என்ன பண்ணுறஎன்றான்.

 

 

டிரஸ் மாத்த வந்தேன் அப்படியே ஏதோ யோசனை இங்க உட்கார்ந்திட்டேன்

 

 

சரி வா!!என்று சொல்லி அவன் கையை நீட்ட தயக்கமாய் உணர்ந்தவள்எங்க…” என்று பதட்டமாய் கேட்டு வைத்தாள்.

 

அப்போது தான் அவளின் பதட்டம் உணர்ந்தவன்இங்க பாரும்மா என்னை பார்த்து உனக்கு பயம் எல்லாம் வேண்டாம். நான் எப்பவும் அதே பிரணவ் தான்

 

 

நீ எப்பவும் போல என்கிட்ட ஏட்டிக்கு போட்டியாவே பேசலாம். இவ்வளவு அமைதியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை

 

 

அப்புறம் இப்போ நாம அந்த ரூம்க்கு தான் போகப் போறோம். நிச்சயம் வேற எதுவும் நடக்காது நீ என்னை நம்பலாம். அதுவுமில்லாம நாம இன்னும் முழுசா பேசி முடிக்கலை அதனால தான் சொல்றேன் வா

 

 

இல்லை எனக்கு பயமெல்லாம் ஒண்ணுமில்லைஎன்று சொல்லும் போதே துளி வியர்வை அரும்பிய அவள் நெற்றியில் கையை ஒற்றி எடுத்தவன்சரி நம்பிட்டேன் வாஎன்றான்.

 

 

ஒரு நிமிஷம்… ஹ்ம்ம்… ஒண்ணு சொல்லணும் தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நம்பி சொல்லலாமா

 

 

என்னனு சொல்லுங்க

 

 

இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்நமக்கு நிறைய இரவுகள் இருக்கலாம் வாழ்க்கை முழுக்கஇன்னைக்கு தான் நம்மோட முதல் இரவு… ஐ மீன் நீயும் நானும் சேர்ந்து நம்மோட வாழ்க்கையில இணைஞ்ச முதல் நாள் இரவு…

 

 

பின்னால நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நம்ம வாழ்க்கைநல்லபடியா போயிட்டிருக்கும் போதுஒரு நாள் நம்ம பொண்டாட்டி முதல் இரவு அன்னைக்கு சுடிதார் போட்டுட்டு வந்து நின்னான்னு எனக்கும்ச்சே இப்படி போய் நாம நின்னுட்டோமேன்னு உனக்கு தோணலாம்…” என்றுவிட்டு அமைதியாய் பார்த்தான்.

அவனுக்குமே இதை எப்படி சொல்ல என்ற கூச்சமோ எதுவோ ஒன்று இருந்திருக்க வேண்டும். அதை சொல்லும் போது எங்கோ பார்த்து சொன்னது போல் இருந்தது அவளுக்கு.

 

 

அவன் சொல்ல வந்தது புரியவும்இல்லை நைட் இதான் வசதின்னு…” என்று வார்த்தைகள் தந்தி அடித்தது அவளுக்கு.

 

 

சரி உனக்கு எப்படி வசதியோ அதே சரி தான் வா

 

 

என்ன தோன்றியதோ அவளுக்குஒரு நிமிஷம் இதோ வந்திர்றேன்என்றுவிட்டு அவள் முன்பிருந்த அறைக்குள் நுழைந்தவள் வேறு உடைமாற்றி வெளியில் வந்தாள்.

 

 

இப்போ ஓகேவா…” என்றவள் குனிந்து அவள் புடவையை பார்க்க பிரணவ் அதற்குள்ளாக தன் மனைவியை உச்சி முதல் பாதம் வரை அவளறியாமல் ரசித்துவிட்டான்.

 

 

ரொம்ப நல்லாயிருக்குஎன்று வாய்விட்டு சொன்னவன்நல்லாயிருந்து என்ன புண்ணியம் ஒண்ணும் நடக்கப் போறதில்லைஎன்று தனக்கே சொல்லிக்கொண்டான் மனதிற்குள்ளாக தான்

 

 

முதல் இரவுக்காய் அலங்கரித்திருந்த அந்த அறை அவளுக்குள் மெல்லிய நாணத்தை கொடுக்க தலை குனிந்தவாறே உள்ளே நுழைந்தாள்.

 

 

உட்காரு…” என்று சொன்ன பிரணவ் அவளுக்கு புதிதாய் வேறு தெரிந்து தொலைந்தான். என்னவென்றே தெரியாத பதட்டம் அரும்பி ஏசியிலும் வியர்த்தது அவளுக்கு.

 

 

சொல்லும்மா உனக்கு வேற என்ன தெரியணும்…”

 

மனோவோ இவன் என்ன சொல்லுகிறான் என்ற ரீதியில் திருதிருவென்று விழித்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

சரவணன் பத்தி நான் சொன்னதுல உனக்கு வேற எதுவும் சந்தேகம் இருக்காஎன்று நேரடியாய் விஷயத்திற்கு வந்துவிட்டான்.

 

 

அப்போது தான் அவளுக்கு எல்லாம் நினைவு வந்தது போல்என்ன சொன்னீங்க??” என்றாள்

 

 

மதியம் சொன்னேனே சரவணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு

 

 

ஹ்ம்ம் சொன்னீங்கஅவன் தான் வரலையே இனி நான் என்ன பண்ண முடியும்நான் தப்பிச்சுட்டேன்னு நினைக்கறதா!! இல்லை ஏமாத்திட்டான்னு நினைச்சு அவன்கிட்ட போய் கேள்வி கேட்கிறதா!!

 

 

விடுங்க எல்லாமே நல்லதுக்கு தான்…” என்றவளுக்கு சத்தியமாய் புரியவில்லை தான் எப்படி இப்படி என்ன ஆரம்பித்தோம் என்று

 

 

அவளுக்கு பிரணவுடனான திருமணம் ஏனோ மனதிற்குள் ஒரு இதத்தை உணர்த்தியிருந்தது. கார்த்திகேயனிடம் இருந்து தப்பித்துவிட்டோம் என்பதினால் வந்த நிம்மதியா இல்லை வேறு எதுவுமா என்பது அவளால் வரையறுக்க முடியவில்லை.

 

 

சரவணன் வருவான் என்று தான் காத்திருந்தது எல்லாம் எவ்வளவு முட்டாள்த்தனம் என்று இந்த நிமிடம் தோன்றி அவளுக்குள் அருவருப்பை விதைத்தது.

 

 

என்னம்மா என்ன யோசனைஎன்ற பிரணவின் குரல் கேட்கும் வரை அவள் மனதிற்குள்ளாக ஏதேதோ சிந்தனை அலைகள்.

 

 

நான் சொன்னதை நீ நம்பறியான்னு கேட்டேன். உனக்கு நான் ஒரு மெயில் அனுப்பியிருந்தான் சரவணன் பத்தி பார்த்தியா!! இல்லை இப்போ உனக்கு சரவணன் மனைவியோட இருக்க போட்டோ காமிக்கணும்ன்னா சொல்லு காட்டுறேன். நீ கஷ்டப்படுவியேன்னு தான் நான் காட்டலைஎன்றான்.

 

 

எனக்கு அதெல்லாம் பார்க்க வேண்டாம்என்று திட்டவட்டமாய் மறுத்தாள் அவள்.

 

 

அவள் மறுத்தது அவனுக்குள் ஏதோவொரு நிம்மதியை கொடுத்தது. ஒரு பெருமூச்சுடன்அப்போ நான் சொன்னதை நீ நம்புறியாஎன்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தான்.

 

 

எங்கப்பாவே நம்பினவரு நீங்கஅதை பார்த்தும் கூட நான் உங்களை நம்பாம இருப்பேனேஎன்று அவள் சொன்ன கணம் அப்படியே அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

 

 

உள்ளுக்குள் பொங்கி பெருகிய மகிழ்ச்சியை கவனமாய் மறைத்துக்கொண்டுஉங்கப்பா நம்பின என்னை நீயும் நம்புறேன்னு சொன்ன பார்த்தியா ரொம்ப சந்தோசமா இருக்கு இதை கேட்கும் போது….”

 

 

இந்த நம்பிக்கை உனக்கு எப்பவும் என் மேல இருக்கணும்என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பதை அவளால் உணர முடியவில்லை.

 

 

எப்பவும் இருக்கும்என்று உறுதியாய் கூறியவள் பின்னாளில் அதை காற்றோடு விடுவாள் என்று அவளே அறியவில்லை….

மனோவிற்கு ஏதோ தோன்ற அவனிடம் எப்படி கேட்க என்று அவள் தயங்கி தயங்கி பார்க்கஎன்கிட்ட என்ன கேட்கணும் சொல்லும்மாஎன்றான்.

 

 

இல்லை நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… ஆனா ஏன்?? உங்உங்க வீட்டில எல்லாம் என்ன சொல்லுவீங்கஎன் மேல பரிதாப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாஎன்று கேட்கும் போதே அவளுக்கு தொண்டை அடைத்தது.

 

 

பரிதாபத்திற்காய் ஒரு மணம் என்பதை அவளால் தாங்க முடியாது போன்ற ஒரு உணர்வு. ஆனாலும் அது தான் உண்மை என்று மனசாட்சி அடித்து கூறியது. இருந்தாலும் ஒரு நப்பாசையில் அவனை கேட்டாள்.

 

 

உன் மேல பரிதாப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னு ஒரேடியா சொல்லிட முடியாது…”

 

 

அப்போ வேற என்ன காரணம்என்று அவள் இழுக்கவும் சற்று உஷாரானான்.

 

 

உன் மேல பாவம் எல்லாம் படலைம்மா…”

 

 

அப்போ என்னை பார்த்தா உங்களுக்கு பாவமா தோணலையாஎன்று மீண்டும் பழைய மனோவாய் எகனை மோகனையாய் பேச ஆரம்பித்தாள்.

 

 

அவளின் பேச்சு புரியவும் லேசாய் சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டுஉன்னை பிடிக்கும், உன்னோட பிரச்சனை முதல்ல தீரணும்ன்னு நினைச்சேன்

 

 

கார்த்திகேயன்கிட்ட இருந்து நீ தப்பிக்கவும் உனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவும் உனக்கு கண்டிப்பா கல்யாணம் வேணும்ன்னு தோணிச்சு

 

 

சரவணனோட உன்னோட கல்யாணம் நடக்கணும்ன்னு நினைச்சு தான் விசாரிச்சேன். அது தோல்வியில முடிஞ்சுது அவசரமா வேற மாப்பிள்ளை தேடி அவங்க உன்னை புரிஞ்சு இப்படி எல்லாம் யோசிக்க யோசிக்க எனக்கு வேற வழியே தெரியலை

 

 

நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தோணிச்சு. எனக்கு உன்னை பிடிச்சும் இருந்துச்சு. அதான் சட்டுன்னு முடிவு பண்ணி உன்கிட்ட கேட்டுட்டேன்

 

 

உங்க வீட்டில பிரச்சனை வருமாஎல்லாம் என்னால தானே!!

 

 

எங்க வீட்டில பிரச்சனை வராம எல்லாம் இருக்காது. அதுக்காக எல்லா தப்பையும் நீ உன் மேல போட்டுக்க வேண்டிய அவசியமில்லை எங்க வீட்டை நான் பார்த்துக்கறேன்

 

 

உங்க வீட்டில என்னை அக்செப்ட் பண்ணிப்பாங்களா

 

 

உண்மை சொல்லட்டுமா

 

 

அவன் பேச்சே கலவரமாக அவனை மிரட்சியாய் பார்த்தாள்.உடனே எதுவும் சரியாகாது. எங்க வீட்டில கொஞ்சம் ஆர்தோடக்ஸ் போக போக தான் அவங்களை சரி பண்ணணும்

 

 

நீ அதையெல்லாம் போட்டு குழப்பிக்க வேணாம் நான் பார்த்துக்கறேன் ப்ளீஸ் வேற எதுவும் பேசலாமே

 

 

எல்லாம் என்னால தான் நானும் எங்கம்மா அப்பாவோடவே போய் இருக்கலாம்லஎன்னால எல்லாருக்கும் கஷ்டம்என்றவளின் விழிகளில் சட்டென்று நீர் நிறைய ஆரம்பித்தது.

 

 

கொஞ்சம் அழறதை நிறுத்தறியாஅதென்ன எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்க, இனிமே இந்த வார்த்தை பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்

 

 

போறவங்க உன்னை விட்டு போயிருக்காங்கன்னு அது ஏன்னு யோசிச்சியா!! அவங்க வாழ்ந்து முடிச்சிட்டாங்க நீ வாழணும்ன்னு தான் உன்னைவிட்டு போயிருக்காங்க

 

 

நீயும் போய் தான் தீரணும்ன்னு இருந்திருந்தா அன்னைக்கு அவங்களோட நீயும் போய் இருப்ப, எதுக்காக இந்த உலகத்துல நீ இருக்கணும் சொல்லு

 

 

உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு அதை நீ சந்தோசமா வாழணும்ன்னு அவங்க நினைப்பாங்க…. இந்த முட்டாள்த்தனமான பேச்சை எல்லாம் இனிவிட்டுட்டு வாழ்க்கையை அதன் போக்குல எப்படி வாழணும்ன்னு மட்டும் யோசிஎன்றவனின் பேச்சு அழுத்தமாய் வந்து விழுந்தது.

 

 

இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமாஎன்னை திட்டுற மாதிரியும் இருக்கு திட்டாத மாதிரியும் இருக்குஎன்றவளின் பார்வை மிரட்சியாய் அவனையே பார்த்திருந்தது.

 

 

சரி கேட்க மறந்துட்டேன் நான் கொஞ்சம் கூட உனக்கு நேரமே கொடுக்காம உன்கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை கூட கேட்காம கல்யாணத்தை முடிவு பண்ணிட்டேன்னு உனக்கு என் மேல கோபம் எதுவுமில்லையே

 

 

அவளுக்கு சற்றும் முன் அவன் காட்டிய கடுமை(?) எல்லாம் மறந்து போனது. தற்போது அவன் கேட்ட விஷயத்தில் வந்து நின்றது அவள் எண்ணமெல்லாம்.

 

 

அவளுக்கு கோபமெல்லாம் இல்லை மாறாக ஏதோவொரு இதம் இருந்தது. அதை அவனிடம் உடனே ஒத்துக்கொண்டாள் அவள் மனோவே அல்ல தானே.

 

 

என்னது உங்களுக்கு என்னை பிடிச்சுதா!! நம்புற மாதிரி இல்லையே!!என்றவளை சிரிப்பாய் பார்த்தான்.

 

 

நம்புறது கஷ்டம் தான் பிடிக்கும் அவ்வளவு தான்ல…ல…லவ் பண்றேன்னு எல்லாம் நான் சொல்லவேயில்லையே…” என்றான்.

 

 

ஆனா உங்களுக்கு எதனால என்னை பிடிச்சுதுஎன்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

 

 

கடவுளே இவளுக்கு கொஞ்சம் தூக்கம் வரக்கூடாது கேள்வியாய் கேட்கிறாளே. என்னோட வாயால நானே இவளை விரும்பினது எல்லாம் இப்போவே சொல்லிடுவேன் போலவே

 

 

பொறுமையா சொல்லலாம்ன்னு பார்த்தா வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குறாளேஇவ வாயை எப்படி அடைப்பேன்என்று யோசிக்க ஆரம்பித்தான் பிரணவ்.

 

 

அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ நீ கேள்வி கேட்டுட்டு இருந்த விடிஞ்சுரும். எனக்கு தூக்கம் வருதுஎன்று வராத கொட்டாவியை அவன் விடவும்சரி தூங்கலாம்என்றாள்.

 

 

யப்பா தப்பிச்சேன்என்று மனதிற்குள்ளாக சொல்லிக்கொண்டு அவன் எழவும் மனோ அவனை திருதிருவென்று பார்த்தாள்.

 

இவ எதுக்கு இப்படி பார்த்து வைக்குறாஎன்று யோசித்துக் கொண்டேஇது தானே லைட் சுவிட்ச் ஆப் பண்ணிரட்டுமா!!என்றான்.

 

 

இல்லை வேணாம் எனக்கு லைட் இருந்தா தான் தூக்கம் வரும்என்றாள் அவள்.

 

 

விடி லைட் போடுறேம்மா

 

 

இல்லை எனக்கு இந்த லைட் தான் வேணும்

 

 

சரி ஓகேஎன்றுவிட்டு அவன் கட்டிலில் அமரவும் மனோ கட்டிலையும் கீழேயும் மாறி மாறி பார்த்தாள்.

 

 

என்னாச்சும்மா என்ன பார்க்கிற

 

 

இல்லை நான் கீழ படுக்கணுமா…” என்று அவள் இழுக்கஇங்கவே படும்மாகீழ வேணாம், இப்படியே நாம ஒண்ணும் காலத்துக்கும் இருக்க போறதில்லை

 

 

மனசு ஒத்துப்போகற நாள் ரொம்ப தூரத்தில இல்லைஎதையும் யோசிக்காம நிம்மதியா தூங்குஉங்கப்பா அம்மா இருந்தா எப்படியிருப்பியோ அப்படியே இருஎன்றான்.

 

 

இன்னொரு விஷயம்

 

 

என்னம்மா

 

 

எனக்கு உங்க அம்மா வயசு ஆகுதா என்ன??”

 

 

ஏன் அப்படி கேட்குற??”

 

 

அப்புறம் எதுக்கு அடிக்கொரு அம்மா போடுறீங்க!!என்றதும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

 

 

சரி எப்படி கூப்பிடலாம் சொல்லு

 

 

மனோன்னு கூப்பிடுங்க இல்லை பாரதின்னு கூப்பிடுங்கஆபீஸ்ல அப்படி தானே கூப்பிடுவீங்க

 

 

நான் ரதின்னு கூப்பிடவா…” என்று யோசனையாய் அவளை பார்த்தான்.

 

 

ரதியா…. உங்களுக்கு அந்த பேருல யாரும் பிரண்டு இருந்தாங்களா!! அன்னைக்கு ஆபீஸ்ல கூட என்னை அப்படி கூப்பிட்டீங்கள்ள!!ஞாபகமாய் கேட்டு வைத்தவளை திகைப்பாய் பார்த்தான்.

 

 

ஹ்ம்ம் ஆமா ரதின்னு எனக்கு ஒரு பிரண்டு சின்ன வயசுல இருந்தா இப்போ அவ எங்க போனான்னு தெரியலை அதன் அவ ஞாபகமா உன்னை கூப்பிடுறேன், அப்படி கூப்பிடுவா

 

 

ஹ்ம்ம் சரி கூப்பிடுங்கதிரும்பவும் அம்மா போட்டு என்னை கிழவியாக்காதீங்கஎன்றவள் நிஜமாகவே உணரவில்லை தான் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று

 

 

சரி குட் நைட்

 

 

குட் நைட் ரதிம்மாஎனவும் அவள் முறைக்கசரி ரதி போதுமா“… ஹ்ம்ம் என்றவிட்டு அவனுக்கு முதுகுக்காட்டி படுத்துக்கொண்டாள்.

மனோவிற்கும் அவன் பேச்சு இதமாய் இருக்க வெகு நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் வந்து அவளை தழுவியது. பிரச்சனைகள் முடிந்துவிட்டதில் வந்த நிம்மதியான உறக்கமோ அன்றி களைப்பினால் வந்த உறக்கமோ படுத்ததுமே உறங்கிவிட்டாளவள்.

 

 

பிரணவிற்கு தான் உறக்கம் கைவசப்படவில்லை. அவள் உறங்கி விட்டதை பார்த்ததும் எழுந்து அமர்ந்து கொண்டான். கட்டிலில் சாய்ந்தவாறே மனைவியை பார்த்து ரசித்தான்.

 

 

அவன் எதிர்பார்க்காத இரண்டு விஷயங்கள் இன்னமும் அவனுள்ளே உழன்று கொண்டிருந்தது. ஒன்று சரவணனை பற்றிய தகவல் மற்றொன்று ஷாலினிக்கும் அவனுக்குமான உரையாடல்…  அவன்  ஊருக்கு சென்ற பின்னர் நடந்த நிகழ்வுகளை அசை போட்டானவன்….

 

 

 

 

Advertisement