“நான் ஏதாவது லேட்டா வந்து இருந்தா நீ விட்டுருப்பியா? இப்ப நீங்க ரெண்டு பேரும் லேட்டா வந்திருக்கீங்களே உங்கள என்ன பண்றது” என்று கோபமாக கேட்டான்.
“அட லூசு மெண்டல் வர வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் லேட் ,எதுவும் தெரியாமல் லபோ துபோனு கத்தாதே” என்று டென்ஷன் ஆனால் வைஷ்ணவி.
“என்ன லூசுங்கலா சொல்றீங்க எங்க போய் என்ன பண்ணி தொலைச்சீங்க எந்த ஏழரைய இழுத்திங்க “என்று பதறினான் வினோத்.
“ஆமா ஏழரை இழுக்குறாங்க ,அது ஒன்னும் இல்லடா உன்கிட்ட கால் பேசிட்டு ஒரு டர்னிங்ல வளைக்கும் போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் லேட் ஆயிடுச்சு” என்று அதனைப் பற்றி விவரித்தாள்.
“லூசுங்களா ஒரு கார ஒழுங்கா ஓட்ட தெரியுதா… நீங்க எல்லாம் எதுக்கு கார் ஓட்டுறீங்க…உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல எல்லாம் ஓகே தானே” என்று அக்கறையுடன் கேட்டான்.
“ஓகே நான் டா, சரி அத விடு நீ மூர்த்தி சார பாத்தியா என்ன சொன்னாரு ..?”என்று விசாரித்தாள்.
“ஆமா உங்களை தான் கேட்டாரு ஏதோ சொல்லி சமாளிச்சேன் ,அப்புறம் கொஞ்சம் டீடைல்ஸ் சொல்லி இருக்காரு ரெண்டு மூணு காண்டாக்ட் நம்பர் குடுத்து இருக்காரு நம்ம காண்டாக்ட் பண்ணி தான் டீடைல்ஸ் கேதர் பண்ற மாதிரி இருக்கும் இல்லன்னா நேரா போய் விசாரிப்போம் வேற டீடைல்ஸ் வேணும்னா கேக்க சொல்லி இருக்காரு” என்று சில விவரங்களை விவரித்தான் அவர்களிடம்.
அதனை இருவரும் கேட்டு தெரிந்து கொண்டனர். “சரிடா அப்போ நீ இந்த விஷயத்தை பாத்துக்கோ நாங்க அது என்னன்னு நாளைக்கு போய் பாக்குறோம் “என்று சில விபரங்களை வினோத்திடம் கொடுத்துவிட்டு சில விவரங்கள் தான் சேகரிப்பதாக சொன்னாள்.
“சரி நாளைக்கு நான் போறேன் நீங்களும் பாத்து கவனமா போயிட்டு வாங்க, எதுனாலும் கால் பண்ணுங்க, கொஞ்சம் கவனம் ,இது சீரியஸா போகுற மாதிரி இருக்கு பாத்துக்கோங்க”என்றான் சற்று யோசனையோடு.
“ஏண்டா அப்படி சொல்ற” என்றால் காவியா.
“இல்ல ஸ்டார்டிங்ல நானும் இது நார்மல் ஆன விஷயம் தான் நினைச்சேன் ஆனா போக போக கேஸ் கொஞ்சம் சீரியஸா போற மாதிரி இருக்கு பாப்போம் முடிவுல என்ன நடக்குதுன்னு” என்றான்.
பின் மூவரும் உணவு விடுதிக்குச் சென்று உணவை முடித்துவிட்டு கிளம்பினார்கள்.
சரி என்பதை போல் தலையை ஆட்டினாள் காவியா.பின் காரை தன் வீட்டிற்கு திருப்பினாள் வைஷ்ணவி. உள்ளே நுழைந்த வைஷ்ணவியை பார்த்த ராதா “என்னடா வேலை எல்லாம் முடிஞ்சதா” என்று அன்புடன் கேட்டார்.
“ஆமாம்மா முடிஞ்சுச்சு நாளைக்கு தான் வெளியே போற மாதிரி இருக்கும்” என்று புன்னகைத்தாள்.
“வைஷு நீ ஈவினிங் ஃப்ரீனா கோவிலுக்கு போயிட்டு வருவோமாடா,வரியா..?” என்று கேட்டார்.
“ஓகே மா நான் ப்ரீ தான் ஈவினிங் போயிட்டு வருவோம் , நானும் உங்க கூட கோயிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சு இல்ல ,இன்னைக்கு போயிட்டு வருவோம்”என்றாள்.
“சரி மா நான் போய் பிரஷ்ஷப் ஆகிட்டு வரேன் “என்று அவள் அறைக்கு சென்றாள்.
அங்கு தலையிலும் கையிலும் கட்டுடன் வீட்டிலுள்ளே நுழைந்த மாறனையும், ரமேஷையும் பார்த்த புவனா பதறினார்.
“ஒன்னும் இல்லம்மா போற வழியில் ஒரு சின்ன ஆக்சிடென்ட் பெரிய அடி எல்லாம் இல்ல” என்று இருவரும் அமர்ந்தனர்.
“ஒன்னும் ஆகல இல்லப்பா பார்த்து கவனமா போகக்கூடாதாப்பா , கடவுளே ஏன் என் பிள்ளைக்கு மட்டும் இப்படி நடக்குதோ தெரியலையே, ஏன் என் பிள்ளைக்கு மட்டும் இம்புட்டு சோதனை கொடுக்கிற” என்று கண் கலங்கினார்.
“ஒன்னும் ஆகல அம்மா நான் நல்லா தான் இருக்கேன்” என்றான் மாறன்.
“சரிப்பா நீங்க உட்காருங்க நான் ஏதாவது குடிக்கிறதுக்கு எடுத்துட்டு வரேன்” என்று அடுப்படிக்குள் நுழைந்தார்.
இருவரும் உணவு உண்டு சிறிது நேரம் கழித்து ரமேஷ்” சரி மச்சான் நானும் வீட்டுக்கு கிளம்புறேன் கொஞ்சம் வேலை இருக்கு “என்றான்.
“வண்டி இல்லையேடா எப்படி போவ ?”என்று கேட்டான் மாறன்.
“இல்ல மச்சான் நிவேதாவோட காலேஜ் இங்க பக்கத்துல தானே…அவ ஸ்கூட்டில தான் காலேஜ் போவா சோ, ரிட்டன் வீட்டுக்கு போகும் போது என்ன வந்து கூட்டிட்டு போக சொன்னேன்” என்றான்.
“சரி மச்சான் பார்த்து போயிட்டு வா அப்புறம் கால் பண்ணு” என்றான் மாறன்.
நிவேதா அவனுக்காக காத்திருந்தாள் “என்னடா காலையில பைக்ல தான போன இப்போ என்னைய எதுக்கு வர சொன்ன..?” என்று அவனிடம் கேட்டாள். பின் தான் அவன் கையில் உள்ள கட்டை கவனித்தாள் “என்ன ஆச்சுடா என்ன கையில கட்டு..?” என்று பதறினாள் நிவேதா.
“ஒன்னும் இல்ல வர வழியில ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதான் வண்டிய ரிப்பேருக்கு கொடுத்து இருக்கேன் நாளைக்கு தான் எடுத்துக்கணும் அதனாலதான் உன்னை வர சொன்னேன்” என்று விவரத்தை சொல்லி வண்டியில் ஏறினான்.
மாலை நேரம் ,முருகன் கோவிலில் மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தார் புவனா.”என்னோட பையன் என்ன தப்பு பண்ணா முருகா..? ஏன் அவனுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறீங்க ,அவர் என்ன விட்டு போனதுல இருந்து என்னோட உலகமே அவன் தானு இருக்கேன். அவன் சந்தோஷமா இருக்கணும்னு தான் தினமும் கடவுள் கிட்ட வேண்டுறேன்”என்று கண்ணீர் விட்டு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
அம்மாவுடன் கோவிலின் உள்ளே நுழைந்தாள் வைஷ்ணவி. கருவறைக்குச் சென்று கடவுளை வணங்கியவள் , பின் ராதா ஒரு இடத்தில் அமர்ந்தார்.
வைஷ்ணவி கோயிலை சுற்றுவதற்கு வெளியே வந்தாள் அப்பொழுது தான் அங்கு கவலையாக அமர்ந்திருக்கும் புவனாவை கவனித்தாள்.
அவரின் மனக்கலக்கத்தை பார்த்தவளுக்கு அவரை அப்படியே விட்டுச்செல்ல மனம் வரவில்லை பின் அவர் அருகில் சென்றாள்.
புவனாவின் அருகில் அமர்ந்தாள் வைஷ்ணவி “வணக்கம் அம்மா நீங்க எதுக்கோ கவலையா இருக்கீங்கன்னு தெரியுது ஆனா கவலைப்படாதீங்க அம்மா எல்லாம் கூடிய சீக்கிரத்துல சரியாயிடும் வாழ்க்கையில சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வரத்தான் செய்யும் எதுவுமே நிலையானது இல்ல இப்ப கவலையா இருக்கிற நம்ம கண்டிப்பா ஒரு நாள் சந்தோஷமா இருப்போம், நீங்க ரொம்ப மன குழப்பத்துல இருக்குன்னு நினைக்கிறேன் எதையும் போட்டு ரொம்ப குழப்பிக்காதீங்க அம்மா எல்லாம் சரியாயிடும் “இதுவும் கடந்து போகும்” என்று மென்மையாக புன்னகைத்தாள்.
தன் அருகில் அமர்ந்தது யார் என்று பார்த்தார் புவனா. வைஷ்ணவியின் முகத்தில் இருந்த வசீகரம் அவரை ஈர்த்தது.அவள் அவருக்கு சொன்ன ஆறுதலை கேட்டதும் அவருடைய மனம் சற்று அமைதி ஆனது.
பார்த்த முதல் கனமே அவருக்கு வைஷ்ணவியை பிடித்து விட்டது.அவளின் பேச்சு அவளின் குணத்தை வெளிப்படுத்தியது அது அவருக்கு இன்னும் பிடித்துப் போனது. பின் இருவரும் சிறிது நேரம் பேசி இருவரைப் பற்றியும் அறிந்து கொண்டனர். பின் தன் வீட்டிற்கு கண்டிப்பாக ஒருநாள் வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் புவனா.
தன் அறையில் இருந்த காவியாவை அவள் அம்மா மரகதம் அவளை அழைத்தார் “காவியா அப்பா உன்னை கூப்பிடுறாங்க” என்றார்.
அப்பா எதைப் பற்றி கேட்க வருகிறார் என்று அறிந்த காவியா மனதை தைரியப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
“என் கூட வேலை பாக்குற சேகர்ற உனக்கு தெரியும்ல அவரோட பையன் ஷாம் அமெரிக்கால படிச்சிட்டு இப்போ அங்கேயே வேலை பாக்குறானாம்,இப்போ லீவுக்கு இங்க வந்து இருக்கானா இங்க இருக்கும்போதே அவனுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சேகர் ஆசைப்படுறான்.அவனுக்கு நம்ம குடும்பத்துல சம்பந்தம் பண்ணனும்னு ஆசை, உனக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சுரும் பையனும் ரொம்ப நல்ல பையன் எனக்கு புடிச்சிருக்கு நீ என்ன சொல்ற?”என்று கேட்டார்.
மனதில் தைரியத்தை வர வைத்தவள் “இல்லப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று மறுத்தாள்.
“ஏன் அப்படி சொல்ற பையன் ரொம்ப நல்ல பையன் ,குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை, கல்யாணம் பண்ணிட்டு உன்னை வெளிநாட்டுக்கே கூட்டிட்டு போயிருவாங்க உன்ன ரொம்ப நல்லா வச்சுப்பான் கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலைக்கு போகணும்னாலும் போகலாம் அது உன் இஷ்டம் தான், இதுக்கு மேல என்ன வேணும் “என்று கோபத்தோடு கேட்டார்.
“இல்ல அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றாள்.
“இல்லப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அப்படியே நான் கல்யாணம் பண்றதா இருந்தாலும் இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க “என்று சொல்லி எழுந்தாள் காவியா.
“என்னடி அப்பா பேசிகிட்டு இருக்காங்க நீ பாட்டு போற” என்று திட்டினார் மரகதம்.
“காவியா நீ வேணாம்னு சொல்றதுக்கு ப்ராப்பர் ரீசன் வேணும் எதுவும் சொல்லாமல் வேணாம்னு சொன்னா எங்களால அதை ஏத்துக்க முடியாது” என்று கண்டிப்புடன் கூறினார் முத்துவேல்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் பா “என்றாள் எதுவும் சொல்லாமல்.
“எடுத்துக்கோ ஆனா நல்ல முடிவா சொல்லுவேன்னு நம்புறேன் “என்றார்.
பின் எதுவும் பேசாமல் அறையினுள் சென்று கதவை சாத்தினால் காவியா.அறையினுள் வந்தவள் பழைய நினைவுகளை நினைத்து கண்ணீர் விட்டாள்.
காலில் உள்ள காயம் சிறிது சரியானதும் அங்கு அருகில் உள்ள லைப்ரரிக்கு சென்றான். அவனுக்கு அதிகமாக புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது இல்லை ஆனால் அமுதினியின் புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு அவளுடன் நேரம் செலவழிப்பதற்காகவே அவனும் லைப்ரரி வருவான்.
அவளின் ஞாபகம் வரும் போதெல்லாம் இங்கு சிறிது நேரம் அமர்ந்து அவளுக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து படித்தால் அவள் அவன் அருகில் இருப்பது போல் அவன் உணர்வான் அதனால் அங்கு சென்றான்.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தவன் நேரம் போகுவது கூட அறியாமல் புத்தகத்தில் மூழ்கினான்.
புத்தகத்தை படித்து முடித்தவன் பின் எழுந்து சில புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுது முகம் மறையும் அளவிற்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்த வைஷ்ணவி எதிரில் வரும் மாறனை கவனிக்காமல் அவன் மீது மோதினாள் அவளின் கையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் கீழே விழுந்தது.