ரமேஷ் மாறனிடம் பேசி கோட்டே வண்டியை வளைவில் திருப்பினான்.எதிரில் வரும் காரை கவனித்து திருப்புவதற்க்கு முன் ,எதிரே வந்த கார் இவர்களை மோதியது.
இதை சற்றும் எதிர்பாக்காதவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தார்கள். அதில் இருவருக்கும் சில சிராய்ப்புகள் ஏற்பட்டது.
தன்னை நிலைப்படுத்தி காரில் வந்தவர்கள் யாரென்று கவனித்தனர்.அதில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கினார்கள்…..
வினோத்திடம் பேசி முடித்தவுடன் வண்டியை திருப்பியவள் எதிரே வரும் வண்டியை கவனிக்காமல் அதன் மீது மோதினாள் வைஷ்ணவி.
இருவருக்கும் அடிபட்டதை உணர்ந்தவள் காரை விட்டு கீழே இறங்கினாள். எழ முடியாமல் சற்று தடுமாறி எழுந்தான் மாறன் அவன் நெற்றியில் இருந்து இரத்தம் வடிந்தது.
அதனை பார்த்து பதறினாள் வைஷ்ணவி அவன் அருகில் சென்று “சாரி தெரியாம ….என்னோட தப்பு தான்… வாங்க ஹாஸ்பிடல் போகலாம் ஐ அம் ரியலி சாரி…”என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள் அவளின் கண்ணில் பதட்டமும் கவலையும் தெரிந்தது.
எழுந்த மாறன் வைஷ்ணவியின் கண்களை பார்க்க அவளின் பதட்டத்தை உணர்ந்தவன் அவள் பதட்டம் அவனுக்கு ஏதோ செய்தது .அவனுக்கு அது சற்று திகைப்பை தான் தந்தது அவளின் கவலை உண்மை என்று உணர்ந்தான்.
“ஒன்னும் இல்ல…. பரவால்ல…..நாங்க பாத்துக்குறோம்…” என்று வண்டியை தூக்க முயன்றான்.
“என்னடா கேட்ட” என்று காவியாவை பார்த்துக்கொண்டே மாறினிடம் பேசினான்.
வைஷ்ணவி வண்டியில் மோதியதில் யாருக்கோ அடிபட்டுவிட்டது என்று எண்ணி இறங்கினாள் காவியா, ஆனால் அங்கு விழுந்து கிடந்த ரமேஷை பார்த்து இன்னும் பதட்டம் அடைந்தாள் பின்பு வேகமாக அவன் அருகில் சென்று அவனை எழ முயற்ச்சித்தாள்.
தனக்கு உதவுவது யார் என்று நிமிர்ந்து பார்த்தான் ரமேஷ் .அது காவியா என்று அறிந்ததும் ஒரு ஆச்சரியத்துடனே எழுந்து நின்றான் . “காவியா நீ ….இங்க ..”என்று வியப்புடன் கேட்டான்.
“நான் இங்கதான் அத்தான் படிக்கிறேன்… உங்களுக்கு ஒன்னும் ஆகலையே வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று பதட்டம் குறையாமல் கேட்டாள்.
வைஷ்ணவியிடம் பேசும் பொழுது கூட அவனைப் பார்த்து பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டுதான் இருந்தாள்.அவனை நேரில் பார்த்த பொழுதும் அவளால் அவனிடம் பேச முடியவில்லை.
தன்னவனை எண்ணித்தான் இவ்வளவு நாள் காத்து கிடந்தாள், ஆனால் தன்னவனே கண் முன்னால் நிற்கும் பொழுது அவளால் அதனை நம்பவும் முடியவில்லை அவள் கண்கள் அவனை விட்டு இம்மியும் அசையவில்லை
அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் அதற்கு மேல் பேச தெரியவில்லை.
மாறனை பார்த்த ரமேஷ்”ஒன்னும் பெருசா அடிப்படல மச்சான் வண்டி எப்படி இருக்கானு பாரு நல்லா இருந்தா ஓட்டிட்டு போயிடலாம்” என்று கூறினான்.
மாறன் வண்டியை மெதுவாக தூக்கினான் பின்பு அதன் மேல் ஏறி ஸ்டார்ட் செய்தான் ஆனால் வண்டி கீழே விழுந்ததால் ஸ்டார்ட் ஆகவில்லை
ரமேஷ் உடனே” சரி மச்சான் விடு நான் மெக்கானிக்குக்கு கால் பண்றேன் அவங்க வந்து எடுத்துட்டு போய் சரி பண்ணி கொடுத்துடுவாங்க “என்றான்.
இருவருக்கும் காலில் சிறிய அடிபட்டதினால் அவர்களால் நடக்க முடியவில்லை சற்று தள்ளாடியே நடக்க முயற்சித்தார்கள் அதனை பார்த்த வைஷ்ணவி “கொஞ்சம் இருங்க” என்று காரில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை அவனிடம் எடுத்துக் கொடுத்தாள் பின் அவர்களது காயத்திற்கு மருந்து போட்டனர் இருவரும்
“வேண்டாம் .. குடுங்க நான் போட்டுக்கிறேன்” என்று மாறன் தடுத்தாலும் “பரவாயில்லைங்க நான் போட்டு விடுறேன்” என்று அவன் நெற்றியில் உள்ள காயத்தில் மருந்து தடவினாள். வைஷ்ணவியின் கண்ணில் தெரிந்த வருத்தம் அவளை தடுக்க மறுத்தது
காவியா ரமேஷ் கையில் இருந்தா காயத்திற்கு மருந்தை போட்டுவிட்டால் அப்பொழுதுதான் ரமேஷ் காவியாவை ஒழுங்காக கவனித்தான். சிறு வயதில் சிறு குழந்தையாக ஓடித்திருந்தவள் இப்பொழுது ஒரு குமரியாக இருப்பதை ஆச்சரியமாக பார்த்தான் நம்ம சண்டை போட்டு அடைத்து விளையாடும் காவியாவா இது என்று பிரமிப்பாக இருந்தது அவனுக்கு.
சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாகவே வளர்ந்தனர் அவளின் தங்கை நித்யாவிடம் சண்டை போடுவது போல் காவியா விடமும் சண்டை போட்டுக்கொண்டு அலைந்தான் .
பின் அவனின் தாய் கோமதிக்கும் அவன் மாமன் முத்து வேலுக்கும் இடையே வந்த பிரச்சினையில் இவர்களது குடும்பம் பிரிந்து சென்றது அதிலிருந்து அவன் அவளை பார்த்தது இல்லை அப்பொழுது அவன் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயம் அப்பொழுது அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.
“இல்ல பரவால்ல நாங்க கிளம்புறோம்”என்று இருவரும் எழுந்தனர்.
வைஷ்ணவிக்கு ஒரு மாதிரியாக இருந்தது “சாரி நான் தெரியாம…..கவனிக்காமல் வந்தது என்னோட தப்பு தான் சாரி” என்று வருத்தமாக மன்னிப்பு கேட்டாள்.
அவளின் வருத்தம் உண்மை என்று உணர்ந்தவன்” பரவா இல்லை எங்க மேலும் தான் தப்பு இருக்கு நாங்களும் தான் கவனிக்காமல் டர்ன் பண்ணிட்டோம் விடுங்க ” என்று கிளம்பினார்கள்.
“நீங்க எங்க போகணும்னு சொல்லணும் நாங்களே ட்ராப் பண்ணிடுறோம் .ப்ளீஸ்… உங்கள இந்த நிலைமையில விட்டு போறது எனக்கு ஏதோ மாதிரி இருக்கு “என்று கூறினாள் வைஷ்ணவி.
இதற்கிடையில் காவியா ரமேஷிடம் தனியாக பேச எண்ணினாள் அவனிடம் பேச வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள் இங்கு தற்செயலாக அவனை சந்தித்த இந்த தருணத்தை அவள் இழக்க மனம் வரவில்லை. அவனிடம் பேசி அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பினாள்.
ரமேஷ் மாறனை பார்த்தான் என்ன “மச்சான் போகலாமா?” என்பதைப் போல் அவன் செய்கை இருந்தது. மாறனுக்கு காலில் சிறு அடிபட்டதினால் அவனால் அதிக தூரம் நடக்க முடியவில்லை வேறு வழியும் இல்லை என்பதை அறிந்தவன் “ம்…”என்று கண் அசைத்தான்.
“சரி காவியா ஆனால் வண்டி..”என்று சிறிது யோசித்தனர் ,உடனே வைஷ்ணவி “வண்டிய நான் சரி பண்ணி கொடுக்கிறேன் நீங்க உங்க நம்பர் குடுங்க நான் சரி பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்று மறுத்தான் மாறன்.
“இல்லங்க தப்பு என் மேல தான் நான் தான் அது சரி பண்ணி கொடுக்கணும் உங்களுக்காக இல்லனாலும் என்னோட மனசு திருப்திக்காக இதை பண்ணிக்கிறேன் ப்ளீஸ்” என்றாள்.
அதற்கு மேல் மாறனால் ஒன்றும் பேச முடியவில்லை சரி என்பதைப் போல் தலையாட்டினான் பின் மெக்கானிக் ஷாப்பிற்கு கால் செய்தவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு போக செய்தனர்.
காரில் மாறனும் ரமேஷும் ஏறினார்கள் காரில் ஏறிய நேரத்தில் இருந்து காவியா ரமேஷிடம் பேச எண்ணினாள் ஆனால் அவளால் பேச முடியவில்லை
ஆனால் அவள் கண்கள் நிமிடத்திற்கு ஒரு முறை அவனை பார்த்து நீங்கியது.
அதை கவனித்த வைஷ்ணவி இவர்தானா என்று சைகையில் காவியாவிடம் கேட்டால் ஆம் என்பதை போல் தலை அசைத்தால் காவியா
இதை அறிந்த வைஷ்ணவி இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.
ஒரு இடத்தில் காரை நிறுத்தியவள் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்வதுபோல் பாஉலா காட்டினாள்.
“என்னவாயிற்று” என்று கேட்டதற்கு “தெரியல நான் போய் பாக்குறேன்”என்று காருக்கு முன்னால் சென்று காரை சரி செய்வதுபோல் நின்றாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மாறனும் அதை சரி செய்வதற்கு அங்கு சென்றான்.
காரில் உள்ளே ரமேஷும் காவியாவும் மட்டுமே இருந்தனர். தனக்காக தான் தன் தோழி இவ்வாறு செய்தால் என்று புரிந்து கொண்டாள் காவியா. இந்த தருணத்தை விட்டு விடக் கூடாது என்று எண்ணினால் எப்படியாவது அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள்.
“அத்தான் நித்தியா எப்படி இருக்காள் நல்லா இருக்காள..? இப்போ என்ன பண்ற..? வீட்ல அத்தை மாமா எப்படி இருக்காங்க..?”என்று பேச்சை ஆரம்பித்தாள்.
“நீ இங்க எப்படி காவியா..? மாமாவும் அத்தையும் இங்க தான் இருக்காங்களா..? ஊர்ல இருந்த வீடு என்ன ஆச்சு..? நீ ஆளே மாறிட்ட காவியா என்றான்.
“ஆள் மட்டும் தான் அத்தான் மாதிரி இருக்கேன் மனசு இன்னும் மாறல” என்றாள் அவனை ஊடுருவும் பார்வையில்.
அவளுடைய பார்வை அவனை ஏதோ செய்தது. “நீ இன்னும் எதையும் மறக்கலையா காவியா” என்றான் சிறு குற்ற உணர்வுடன்.
“எப்பவும் என்னால அதை மறக்க முடியாது அத்தான்” என்றால் வலி நிறைந்த கண்களுடன்.
அவளின் கண்களில் உள்ள வழி அவனை ஆட்கொண்டது.
வெளியே வைஷ்ணவி என்ன செய்வது என்று தெரியாமல் முளித்தாள். மாறன் இறங்குவதை பார்த்தவள் அவன் எதையும் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில் அதில் இருந்த ஒரு வயரை கட் செய்தாள்.
மாறனும் என்னவென்று பார்க்க காரின் முன் பக்கம் சென்றான். பின் அந்த வயர் அறுபட்டதை உணர்ந்தவன் இதனால் தான் பிரச்சனை என்று அதனை சரி செய்தான்
“இப்போ சரியாயிடுச்சு கிளம்பலாமா “என்றான் மாறன் இதற்கு மேல் தாமதப்படுத்த முடியாது என்று உணர்ந்த வைஷ்ணவி சரி என்று காரில் ஏறினார்கள் அதற்கு இடையே காவியா பேசி முடித்து இருந்தன காரில் ஏறிய வைஷ்ணவி காவியாவை பார்த்தால்
பின் காரை ஸ்டார்ட் செய்து அவர்களின் பயணம் தொடர்ந்தது
இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தை மாற்றும் ஒரு முக்கிய தொடக்கமாக இருந்தது இவர்களுக்கு.