எனை மாற்றியவள் நீ 

அத்தியாயம்-2

காலை பொழுது ரம்யமாக விடிந்தது. அந்த காலணியில் இருக்கும் மிகப்பெரிய வீட்டின் தோட்டத்தில் குருவிகள் தன் இறைகளை தேடிக் கொண்டிருந்தது அந்த வீட்டின் மேல் அறையின் உள்ளே தன் டெடி பியரை கட்டிப்பிடித்து தூங்கிக் கொண்டிருந்தால் வைஷ்ணவி. 

கீழே சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி செல்வி”அம்மா சமையல் முடிச்சுட்டேன் வேற ஏதாவது வேலை இருக்கா சொல்லுங்கம்மா பார்க்கிறேன்” என்றாள்.

“ஒன்னும் இல்ல செல்வி நீ போய் வேற வேலைய பாரு மீதியை நான் பார்த்துக்கிறேன் “என்றார் ராதா.

தன் மகள் வைஷ்ணவிக்கு காபியை எடுத்துக்கொண்டு மேலே சென்றார், அறையின் உள்ளே சென்றவர் தூங்கும் வைஷ்ணவியை பார்த்தார்.

சிறுபிள்ளையாக தூங்கும் வைஷ்ணவியை ரசித்தவர் காபியை மேஜை மீது வைத்து விட்டு வைஷ்ணவியை எழுப்பினார். 

“வைஷு எழுந்திருமா நேரமாச்சு பாத்தியா… எங்கேயோ போகணும் சீக்கிரமா எழுப்பி விடுங்கன்னு சொன்ன”என்றார். 

மெல்லிய தூக்க கலக்கத்தில் அம்மாவை பார்த்தால் வைஷ்ணவி” மணி என்னமா?”என்றாள்.

“மணி 8 ஆச்சுடா மா நீ யாரையோ 10 மணிக்கு பாக்க போகணும்னு சொன்ன போ போய் குளிச்சிட்டு கெளம்பு” என்றார்.

கட்டிப்பிடித்து இருந்த டெடிபியருக்கு ஒரு முத்தம் கொடுத்தவள் “குட் மார்னிங் பட்டு”என்றாள். பின் எழுந்து அம்மாவிற்கு முத்தம் கொடுத்தவள் “குட் மார்னிங் அம்மா “என்றாள். இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் தன் மகளை ரசித்தவர் அவளிடம் காபியை கொடுத்தார். 

வைஷ்ணவி குளித்து முடித்து கீழே வந்தாள். அனைவரையும் வசியம் செய்யும் கண்கள்,அவள் சிரித்தால் கன்னத்தில் விழும் குழி இங்கு பல பேரை வீழ்த்தி இருக்கிறது,நேர்த்திய உடல்வாகு நீல நிற குர்த்தியை அணிந்து வந்தாள்.கையில் சிறு வளையம் காதில் உடைக்கேற்ற தோடு மெல்லிய டாலர் வைத்த செயின் பார்ப்பதற்கு ஓவியமாக இருந்தாள்.

“அம்மா என்னம்மா சாப்பாடு” என்று டைமிங் டேபிள் மேல் அமர்ந்தாள். 

“எல்லாம் உனக்கு பிடித்தது தான் வைஷு” என்று சாப்பாட்டை வைஷ்ணவிக்கு பரிமாறினார் ராதா.

அறையில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணமோகன் தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே வந்தார். 

“ஆமா டேவிட் அந்த ஸ்பைல்ஸ்லாம் எடுத்து வச்சிடு நான் இன்னும் ஒரு 15 மினிட்ஸ்ல வந்துருவேன்” என்றார். 

கிருஷ்ணமோகன் வைஷ்ணவியின் அப்பா பெரிய தொழில் அதிபர் வைஷ்ணவி கார்மெண்ட்ஸ் ஓனர். “சாப்பிட வாங்க”என்று ராதா அழைத்தார். 

மகளின் அருகில் அமர்ந்தார் கிருஷ்ணமோகன் இருவருக்கும் சாப்பாட்டை பரிமாறினார் ராதா. “வைஷு வாட்ஸ் பிளேன் டுடே “என்று சாப்பிட்டுக் கொண்டே  மகளை விசாரித்தார்.

“என்னோட ரிசர்ச்காக ஒரு பெர்சனை மீட் பண்ணனும் டாட் அதான் கிளம்பிட்டு இருக்கேன்”என்றாள் .” ஓகே மா பார்த்து பத்திரமா போயிட்டு வா “என்று கூறி மகளின் தலையை தடவி விட்டு “வரேன் மா வரேன் ராதா” என்று கிளம்பினார்.

வைஷ்ணவி கிருஷ்ணமோகன் ராதா தம்பதியருக்கு ஏழு வருடம் கழித்து பிறந்த குழந்தை அதனால் வைஷ்ணவி வீட்டின் செல்லம் அவள் எது கேட்டாலும் மறுக்காமல் செய்வார் அவள் தந்தை. 

கிருஷ்ணமோகன் ராதா இருவரும் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் .அதனாலேயே வீட்டில் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை ,இருப்பினும் தன் சொந்த முயற்சியினால் முன்னேறினார் கிருஷ்ணமோகன். ஏழு வருடம் குழந்தை இல்லை என்றாலும் ராதாவை சிறிதும் அவர் வெறுத்ததில்லை கடிந்து பேசியதில்லை,ராதாவின் மேல் அதிகம் காதல் கொண்டவர்.வைஷ்ணவி பிறந்ததும் அவளின் மேல் அதிக அன்பு கொண்டனர் இருவரும் ,தங்களுக்கென்று இருக்கும் ஒரே சொத்து வைஷ்ணவி என்றே எண்ணினர்.

வைஷ்ணவி சிறு வயதில் இருந்தே சொந்தங்களின் அன்பு அறியாதவள்.அவளின் உலகம் அவள் அப்பா அம்மா மட்டுமே.

வைஷ்ணவி 22 வயது ஆகும் பதுமை பெண் மிகவும் சுட்டி பெண் ,ஆனாலும் சுற்றுச்சூழல்களை புரிந்து நடந்து ரன்கொள்வாள் .அவளுக்கு ஆராய்ச்சி பண்ணுவதில் மிகவும் விருப்பம் அதற்கு ஏற்ற படிப்பினையே அவள் படித்தால் அவளின் இறுதி ஆண்டு புராஜக்ட்காக சில விவரங்களை சேகரித்தாள்.அதற்காகவே இன்று ஒருவரை சந்திக்க இருக்கிறாள்.

 வைஷ்ணவியின் தோழி காவியா அவளை தொலைபேசியில் அழைத்தாள். “சொல்லு கவி கிளம்பிட்டு தான் இருக்கேன் 5 மினிட்ஸ்ல வந்துடுவேன் நீ வெளிய வந்துரு நான் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்”.என்று கூறிவிட்டு “அம்மா நான் போயிட்டு வரேன் பாய்”என்று கிளம்பினாள்.

மான் போல் துள்ளி குதித்து ஓடியவளை கண்டு ரசித்தார் ராதா.

தன் சாம்பல் நிற ஷிப்ட் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள காவியாவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினாள். காவியா வண்டியில் ஏறியதும் இருவரும் கிளம்பினார்கள்.

“கவி எல்லாம் அந்த சார் கிட்ட பேசிட்டல்ல நம்மக்கு வேண்டிய எல்லா டீடெயில்ஸும் அவங்க கிட்ட இருந்து கிடைச்சிருந்தானே அவங்க சொல்றத வச்சு தான் நம்மளோட ப்ராஜெக்டை கம்ப்ளீட் பண்ண முடியும்” என்றாள் வைஷ்ணவி.

“ம்….சொல்லிட்டேன் வைஷு எல்லா டீடைல்ஸும் அவங்களுக்கு தெரியும்னு தான் நினைக்கிறேன்.நீ அத பாத்தியா அதுல நிறைய மிஸ்டரி இருக்கிற மாதிரி தெரியல… உனக்கு.?” என்றாள் காவியா.

“ஆமா கவி எனக்கு ஃபர்ஸ்ட் அதுல ஒரு டவுட் இருந்துச்சு அதனால தான் இந்த ப்ராஜெக்ட் எடுத்தேன் பட் அத பத்தி இன்னும் ரிசர்ச் பண்ணும் போது நிறைய விஷயம் கிடைச்சிருக்கு இப்போ அந்த சார பாத்தும் பேசினா நிறைய விஷயம் தெரியும்னு நினைக்கிறேன்” என்றாள் வைஷ்ணவி.

“ம்…ஆமா வைஷு என்னன்னு இன்னைக்கு பார்ப்போம்….. இன்னைக்கு ஈவினிங் வேற வீட்டுக்கு சீக்கிரம் போகணும் அப்பா சீக்கிரம் வர சொன்னாங்க”என்றாள் காவியா.

“எதுக்கு கவி “என்றாள்.”சரியா தெரியல வைஷு ஆனா வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க நினைக்கிறேன் அதை பத்தி பேச தான் கூப்பிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் டி”என்றாள் காவியா.

“என்ன கவி சாதாரணமா சொல்ற நீ என்ன மனசுல நினைச்சு இருக்கேன்னு வீட்ல எல்லாருக்கும் தெரியுமா…?”என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் வைஷ்ணவி.

” இல்ல வைஷு எனக்கு அதுல ஒரு கிளாரிட்டியும் இல்ல இதுல எப்படி அவங்க கிட்ட போய் சொல்றது அதான் இன்னும் எதுவும் சொல்லல”என்றாள்.

“ஏன் கவி நீ இன்னும் அவங்க கிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லலையா சொல்லு அவங்க மனசுலயும் என்ன இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கோ அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது”என்றாள் வைஷ்ணவி.

“அதுதான் வைஷு எனக்கும் பயமா இருக்கு அவங்க கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியல என் மனசுல இருக்குறத சொன்னா அவங்க அத ஏத்துப்பாங்களான்னு கூட தெரியல எனக்கு பயமா இருக்கு வைஷு”என்றாள் காவியா.

“ஏன் கவி இப்படி பயப்படுற அவங்க உன் அத்தை பையன் தானே அப்புறம் என்ன தயக்கம்” என்றாள் வைஷ்ணவி.

“இல்ல டி சின்ன வயசுல எல்லாரும் ஒண்ணா தான் இருந்தோம் ஆனா அப்போ அப்பாவுக்கும் அத்தைக்கும் கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு அதுல இருந்து ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாது ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்தே அவங்கல தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னதான் அவங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஆகாம இருந்தாலும் எனக்கு அவங்கல தான் புடிச்சிருக்கு  இதை எப்படி நான் அப்பாகிட்ட சொல்றதுன்னு தான் தெரியல… சொல்லப்போனால் அவங்க மேல எனக்கு காதல் இருக்குன்னு நான் அவங்களுக்கே தெரியாது  நான் இன்னும் சொல்லல வைஷு… நான் காதல் சொன்னா அவங்க ஏத்துப்பாங்களான்னு கூட எனக்கு தெரியல அவங்க  குடும்பமும் இதை புரிஞ்சுக்கணும் இல்லையா அப்பா அத்தை பேச்ச எடுத்தாலே ரொம்ப கோபப்படுறாங்க அப்படி இருக்கும்போது நான் எப்படி இந்த விஷயத்தை சொல்றது வைஷு அதுக்கு முன்னாடி நான் அவங்க கிட்டயும் பேசணும் பாப்போம்..” என்றாள் மனக்குழப்பத்துடன்.

“ரொம்ப பயந்து மனச போட்டு குழப்பிக்காத கவி எல்லாம் நல்லதா தான் நடக்கும் நீ வேணா பாரு” என்று தோழியை ஆறுதல் படுத்தினாள்.

தோழியின் ஆறுதலில் சற்று மனம் அமைதி கொண்டவள்.வேறு விஷயங்களை பேசிக் கொண்டு வந்தாள்.

இருவர்கள் பேசிக்கொண்டே அவர்களின் பயணம் தொடர்ந்தது.

அப்பொழுது வைஷ்ணவியின் தொலைபேசி அழைத்தது எடுத்து பார்த்தாள்.காவியா “யார் வைஷு ?”என்றாள்.

“இந்த மெண்டல் வினோத் தான் கால் பண்றேன்” என்றாள்.”எடுத்துப் பேசு வைஷு” என்றாள்.

தொலைபேசியை எடுத்தவுடன் வினோத்”ஏய் லூசுங்களா எங்க வந்துட்டு இருக்கீங்க?”என்று கேட்டான். 

“இருடா மெண்டல் பக்கத்துல வந்துட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் வந்துரும் நீ வந்துட்டியா முதல?”என்று கேட்டாள்.

“ஹலோ நாங்க எல்லாம் டான்னு கரெக்டா ஃகன் மாதிரி வருவோம்” என்று தன்னை பெருமை படுத்திக் கொண்டான் வினோத். 

“சரி சரி அடங்குடா நாங்க வந்துட்டோம் வை”என்று போனை வைத்தவள்.

சிறுவளைவில் காரை திருப்பியவள் எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல் இடித்தாள்.

சற்று நிலை தடுமாறியவள் சிறு தொலைவில் சென்று காரை நிறுத்தினாள். யாருக்கேனும் ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று பயந்து காரை விட்டு இருவரும் இறங்கினார்கள். 

                               …… இனி.