சில ஆண்டுகளுக்கு பிறகு:-
ஊர்மிளா கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருக்க, அவள் பின்னால் இருந்து அவளை அணைத்த சித்தார்த்தன் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “லவ் யூடி அம்லு” என்றான் காதலுடன்.
அவள் மென்னகையுடன், “மீ டூ லவ் யூடா சித்” என்றாள்.
“டா வா!”
“நீங்க மட்டும் டி சொல்லலாம் நான் டா சொல்லக் கூடாதா?”
அவன் புன்னகையுடன், “சொல்லலாமே! முதல் முறை சொன்ன இந்த வாய்க்கு பரிசு தர வேணாமா!” என்றபடி அவளை திருப்பியவன் அவளது இதழில் ஆழமான முத்தமொன்றை பரிசளித்தான்.
அவன் முத்தமிட்டதும், “உங்களுக்கு ஏதாவது காரணம் வேணும்” என்று அவனது தோளில் செல்லமாக அடித்தாள்.
“காரணம் இல்லாமலும் தருவேன்டி என் செல்ல அம்லு பேபி” என்றவன் மீண்டும் அவளது இதழ்களை சிறை செய்திருந்தான்.
சில நொடிகள் கழித்து இதழ்களை விலக்கியவன் அவள் முகம் பார்த்து புருவம் உயர்த்தினான்.
அவளோ நாணத்தை மறைத்து அவனிடமிருந்து விடுபட போராடியபடி, “கொஞ்சினது போதும்.. கீழே போய் மித்து சித்து என்ன பண்றாங்க னு பாருங்க.. நான் கிளம்பிட்டு ருதுவை கிளப்பணும்..” என்றாள்.
அவனோ அவளை விலக விடாமல் பிடியை இறுக்கியபடி, “உன் சித்து தான் இங்கே இருக்கிறேனே!” என்றான்.
அவள் முறைப்புடன், “நான் உங்களை எப்போ சித்து னு கூப்பிட்டிருக்கிறேன்?”
“சரி.. உன் சித் இங்கே இருக்கும் போது உன் நினைப்பு இங்கே தான் இருக்கணும்” என்றபடி அணைப்பை மேலும் இறுக்கியபடி அவள் நெற்றியில் முட்டினான்.
“ப்ச்.. என்ன விளையாட்டுங்க இது! நேரமாச்சு.. எல்லோரும் வந்திருவாங்க.. அதுவும் மகியும் சவியும் வரதுக்குள்ள நான் கிளம்பனும்.. இல்லை ரெண்டு பேரும் என்னை ஓட்டித் தள்ளிடுவாங்க”
“நீயும் அவங்களை ஓட்டு” என்றபடி அவளது கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவன், “உன் பக்கத்தில் வந்தாலே காந்தம் மாதிரி இழுக்கிறடி அம்லு” என்றான் கிறக்கத்துடன். ஊர்மிளாவும் மெல்ல கிறங்கத் தொடங்கினாள்.
அப்பொழுது அவர்களின் ஒரு வயது தவ புதல்வன் ருத்ரன் தூக்கத்திலிருந்து எழுந்து, ‘ம்மா’ என்று அழைக்கவும் ஊர்மிளா சட்டென்று சித்தார்த்தனை உதறிவிட்டு மகனிடம் சென்றாள். 
ஓடி சென்று மகனை தூக்கியவள், “அம்மா இங்கே தான் கண்ணா இருக்கிறேன்” என்றபடி கன்னத்தில் முத்தமிட்டாள். 
குழந்தை அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவள் தோளில் சாய்ந்து தூக்கத்தை தொடர்ந்தான்.
மகனின் முதுகை தட்டிக் கொடுத்தபடி திரும்பிய ஊர்மிளா சித்தார்த்தனின் நிலை கண்டு சிரித்தாள்.
அவள் உதறிய வேகத்தில் கீழே விழுந்திருந்தவன், ‘அதானே! உன் அம்மாவை நெருங்க விட மாட்டியே! அது எப்படி டா தூக்கத்தில் கூட அலர்ட்டா இருக்கிற!’ என்று மனதினுள் புலம்பியபடி மெல்ல எழுந்து மனைவியை முறைத்தான்.
அவள் மென்னகையுடன், “கீழே போய் மித்ரா சித்ரா கிளம்பிட்டாங்களா னு பாருங்க” என்றாள். 
“ருது வந்ததில் இருந்து நீ என்னை கவனிக்கிறதே இல்லை.. இப்படியே பண்ணிட்டு இருந்த ஒரு நாள் உன்னை மட்டும் கடத்திட்டு ஹனிமூன் கிளம்பிடுவேன்”
“அதை அப்பறம் பார்க்கலாம் இப்போ உங்க பொண்ணுங்களை போய் பாருங்க.. அத்தையை என்ன பாடு படுத்திட்டு இருக்காங்களோ!” என்றாள்.
அவளை முறைத்துவிட்டு பெற்றோர் அறைக்கு சென்றவன் மகள்களை கண்டதும் புன்னகைத்தான். தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த அன்னையை பார்த்ததும் புன்னகையை மறைத்துக் கொண்டு சற்று இறுகிய குரலில், “மித்து சித்து என்ன இதெல்லாம்?” என்றான்.
தந்தையின் குரலை கேட்டதும் இருவரும் கண்களால் பேசிக் கொண்டு ஒரு ஆடையை கையில் எடுத்து ஒன்றாக, “பாட்டி இதை போட்டுக்கிறோம்” என்றுவிட்டு சிட்டாக ஓடினர் அங்கே இருந்த ஆடை மாற்றும் அறை நோக்கி.
இருவரும் சென்றதும் சாரதா, “இவ்வளவு நேரம் என்னை படுத்திய பாடென்ன! உன் குரலை கேட்டதும் ரெண்டும் நல்ல பிள்ளைகளா ஓடுறதை பார்!” என்றார்.
“அப்படி என்ன படுத்தினாங்க?”
“ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் தான் போடுவாங்களாம்………………..”
“அதில் என்ன?”
சாரதா முறைப்புடன், “இவ எடுக்கிற டிரஸ் வேணாம்னு அவ சொல்றா.. அவ சொல்றதை இவ வேணாம்னு சொல்றா..” என்றவர் கட்டிலை சுட்டிக்காட்டி, “பார்! இருக்கிற டிரஸ் எல்லாத்தையும் எடுத்து போட்டிருக்கிறதை!”
“சின்ன பிள்ளைங்க தானே மா..”
“நாளுக்கு நாள் அவங்க சேட்டை கூடிட்டே போகுது.. என்னால் சமாளிக்க முடியலை”
“சொன்னா கேட்டுக்குவாங்க மா”
“யாரு உன் பொண்ணுங்க தானே!”
“உங்களிடம் மட்டும் தான் ரெண்டு பேரும் இப்படி வம்பு பண்றாங்க”
“அவங்க வம்பு பண்ண நானா கிடைத்தேன்!!”
அப்பொழுது “நாங்க டிரஸ் பண்ணியாச்சு.. பாட்டி தலை சீவி விடுங்க” என்றனர் ஏழு வயது மித்ராவும் ஆறு வயது சித்ராவும்.
சாரதா, “நீயே உன் மகள்களை கிளப்பு.. நான் போய் அப்பாவுடன் சேர்ந்து விழா ஏற்பாட்டை கவனிக்கிறேன்” என்றவர் ‘இதுங்களை மேய்க்கிறதுக்கு வேறு எந்த வேலையை வேணாலும் பார்த்திடலாம்’ என்று முணுமுணுத்தபடி வெளியே சென்றார்.
சித்தார்த்தன் கண்ணை சுருக்கி மகள்களை பார்க்கவும் இருவரும் “டாடி” என்று கத்தியபடி அவனின் இருபுறம் கட்டிக் கொண்டனர்.
மென்னகையுடன் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டவன், “ஏன் டா பாட்டியை டென்ஷன் படுத்துறீங்க?”
மித்ரா, “நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும் னு அம்மா சொல்லியிருக்காங்க”
சித்தார்த்தன், “அதனால்!”
சித்ரா தலை சரித்து, “அதனால் பாட்டிக் கூட சண்டை போடுறோம்.. பாட்டிக் கூட சண்டை போடலைனா ரொம்ப போரிங்கா இருக்கும் பா” என்றாள்.
அவன் புன்னகையுடன், “சரி சரி.. கொஞ்சமா டென்ஷன் பண்ணுங்க” என்றதும் இருவரும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ டாடி” என்றனர்.
“மீ டூ லவ் யூ பேபீஸ்” என்றவன் இருவருக்கும் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
அதன் பிறகு மகள்களை கிளப்பி வெளியே அழைத்துச் சென்றபோது ஊர்மிளா மகனுடன் கீழே இறங்கி வந்தாள்.
இன்று அவர்கள் வீட்டு குட்டி இளவரசனின் முதல் பிறந்த நாள் விழா. ஊர்மிளா கருவுற்றதும் தனது தந்தையே மகனாக பிறப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்க பெண் குழந்தை தான் பிறந்தது. இரண்டாம் முறையும் பெண் குழந்தை பிறக்கவும் ஊர்மிளா உள்ளுக்குள் வருந்தினாள். இரு மகள்கள் அவளுக்கு உயிர் தான் இருப்பினும் தந்தை தனக்கு மகனாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. அவளது ஏக்கத்தை போக்க வந்தவன் தான் அவளது செல்ல குட்டி கண்ணா ருத்ரன். 
அப்பொழுது வசந்தன் மகிஷா அவர்களின் மகள் மற்றும் மகனுடன் வர, கௌதமனும் சவிதாவும் அவர்களின் மகனுடன் வந்தனர்.
சிறியவர்கள் விளையாட ஓடிவிட,
மகிஷா, “பார் டா ஊர்மி ரெடியாகி இருக்கிறாள்!” என்று கூற,
சவிதா, “அதானே! நாம தான் வந்து அவளுக்கு அலங்காரம் செய்து கிளப்பணும்னு நினைத்தேன்” என்று கூற,
ஊர்மிளா, “நீங்களே கிளம்பி வந்துட்டீங்க!” என்றாள்.
சவிதாவும் மகிஷாவும், “நாங்க சீக்கிரம் கிளம்பி வரது விஷயம் இல்லை.. நீ சீக்கிரம் கிளம்பிட்டியே!” என்று ஒன்றாக கூறி கை தட்டிக் கொண்டனர்.
ஊர்மிளா இருவரையும் செல்லமாக முறைத்து, “ஒரே ஒரு நாள் நான் லேட்டா கிளம்பினதுக்கு இப்படி படுத்துறீங்களே!” என்றாள்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க, கௌதமனை தோளோடு அணைத்த சித்தார்த்தன், “இப்ப தான் மூணார் வரதுக்கு வழி தெரிஞ்சுதா டா” என்றான்.
கௌதமன், “மூணு மாசம் முன்னாடி தானே டா மித்து குட்டி பரத்டேக்கு வந்தோம்.. நீங்க ரெண்டு பேரும் ஊட்டி வரவேண்டியது தானே!” என்றான் வசந்தனையும் சேர்த்து.
சித்தார்த்தன், “ருது கொஞ்சம் பெரியவனாகட்டும்.. அப்பறம் நாம எல்லோரும் பசங்களை பெரியவங்க கிட்ட விட்டுட்டு ஹனிமூன் போகலாம்” என்று கூறி கண்சிமிட்டினான்.
வசந்தன் முறைப்புடன், “ஏன் டா வாழ்க்கையில் என்னை தனியாவே ஹனிமூன் போக விட மாட்டீங்களா?” என்றான் சிறு கடுப்புடன். 
“மாட்டோம்” என்று புன்னகையுடன் கூறிய கௌதமனும் சித்தார்த்தனும் கை தட்டிக் கொண்டனர்.
அதன் பிறகு விழாவிற்கு ஒவ்வொருவராக வர தொடங்கவும் நண்பர்கள் பேச்சை குறைத்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்றனர். 
விழாவிற்கு விக்னேஷ் அவன் மனைவி மகளுடன் வந்திருந்தான்.
விழா முடிந்து அனைவரும் கிளம்பினர். 
கௌதமனின் குடும்பம் இன்று சித்தார்த்தன் வீட்டில் தங்கி நாளை கிளம்புவதாக இருந்ததால் சித்தார்த்தன் மகிஷாவிடம், “மகி இன்னைக்கு நீங்களும் இங்கே தங்கலாமே!” என்றான்.
மகிஷா வசந்தனை பார்க்க, அவன் கண் மூடி திறக்கவும் அவள், “சரி” என்றாள்.
இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சிறியவர்கள், “ஏய்!!” என்று கூச்சலிட்டபடி ஓடினர்.
சாரதா, “கொஞ்ச நேரம் விளையாடிட்டு தூங்கனும்” என்றபடி சிறுவர்கள் பின்னே சென்றார். அதை பார்த்த சுதர்சன் மென்னகையுடன் அறைக்கு சென்றார்.
அசதியில் உறங்கியிருந்த ருந்தரனை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு ஊர்மிளா வந்ததும் பேச்சு களைகட்டியது.
பேச்சின் நடுவே வசந்தன் சித்தார்த்தனை ஓரப்பார்வை பார்த்தபடி, “ஊர்மி போன வாரம் கிளைன்ட் மீட்டிங்கில் என்ன நடந்ததுன்னு சித்து சொன்னனா?” என்றான்.
ஊர்மிளா சித்தார்த்தனை பார்க்க அவனோ தோளை குலுக்கியபடி, “அன்னைக்கு இவனை ரிபோர்டர் ரீடா ஹக் பண்ணது போல் ரோஸி ஒரு ஹக் பண்ணாங்க” என்று கூற வசந்தன் திகிலுடன் மகிஷாவை பார்க்க அவள் இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
வசந்தன், “இவன் பொய் சொல்றான் மஹா.. நம்பாத” என்றான்.
மகிஷா, “சித்து ஏன் பொய் சொல்லணும்?” என்று முறைப்புடன் வினவ,
நண்பனை முறைத்த வசந்தன், “பிலீவ் மீ பேபிமா.. அப்படி எதுவும் நடக்கலை” என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
மகிஷா, “உன்னை அப்பறம் கவனிச்சிக்கிறேன்” என்றாள்.
சித்தார்த்தன், “இதுக்கு போய் டென்ஷன் ஆகுறியே மகி! அன்னைக்கு லிஸா கௌதமை கிஸ் பண்ணதுக்கே சவிதா கோபப்படலை” என்று கூற கௌதமன், “ஏன் டா எருமை என்னை மாட்டி விடுற!” என்று முணுமுணுத்தான்.
சவிதா கௌதமனை பார்க்க அவன், “லிஸா பாரினர் டா.. மீட்டிங் முடிந்து கிளம்பும் போது சின்னதா கிஸ் பண்ணி பை சொன்னாங்க” 
“ஓ! சித்தார்த்தையும் கிஸ் பண்ணாங்களா?”
“அது” என்று அவன் திணற,
அவள் முறைப்புடன், “அவ கிஸ் பண்ணதும் நீ என்ன பண்ண?” என்று கேட்க,
சித்தார்த்தன், “என்ஜாய் பண்ணான்” என்று கோர்த்து விட, கௌதமன் அவனை முறைத்துவிட்டு சவிதாவை ஆழ்ந்து நோக்கினான்.
அவள், “நீ என்ஜாய் பண்ணியிருக்க மாட்ட பட் நம் கலாசாரத்தை பற்றி அவளிடம் சொன்னியா?”
“நீ என்ன நினைக்கிற?”
அவனை ஒரு நொடி பார்த்தவள் சித்தார்த்தன் பக்கம் திரும்பி, “இவன் சொன்னதையும் மீறி அவ அடுத்த முறை முத்தம் கொடுத்தா அவள் கன்னம் பழுத்திரும்.. உங்க லாஸ்க்கு நான் பொறுப்பில்லை” என்றாள்.
மகிஷாவும் ஊர்மிளாவும் சவிதாவின் கையை பற்றி, “ரிலாக்ஸ் சவி.. சும்மா கிண்டல் தான் பண்றாங்க” என்றனர்.
சவிதா, “எனக்கும் தெரியும் ஆனா தமன் விஷயத்தில் நான் இப்படி தான்” என்றாள்.
வசந்தன் ஊர்மிளாவை பார்த்து, “ஊர்மி நீ இவனை எதுவும் சொல்றது இல்லை.. அதான் ஜாலியா எங்களை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறான்” என்றான்.
ஊர்மிளா புன்னகைக்கவும் சித்தார்த்தன் வசந்தனிடம் வெற்றி புன்னகையை சிந்திவிட்டு மனைவியை காதல் பார்வை பார்த்தான். அவளும் பதில் பார்வை கொடுக்க, இருவரும் தனி உலகிற்குள் சென்றனர்.
சவிதா, “ஹலோ பாஸ் நாங்கலாம் இங்கே தான் இருக்கிறோம்” என்று கிண்டல் பண்ண,
சிதார்த்தனோ அலட்டிக் கொள்ளாமல், “ஸோ வாட்! நீங்களும் உங்க ஆளுங்களை லுக் விடுங்க” என்றபடி பார்வையை தொடர்ந்தான். ஊர்மிளா நாணத்துடன் பார்வையை தாழ்த்தினாள்.
மகிஷா, “டேய் உங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு பிள்ளைங்க இருக்காங்க”
“அதனால் என்ன!”
“அது சரி” என்றவள், “உங்க காதல் படத்தை பார்க்கத் தான் எங்களை இங்க தங்க சொன்னியா?”
கஷ்டப்பட்டு தோழியின் பக்கம் பார்வையை திருப்பியவன், “வசந்த் தான் நீ அவனை சரியாவே கவனிக்கிறது இல்லை னு புலம்பினான்.. அதான் உனக்கு கொஞ்சம் படம் ஓட்டினேன்” என்று கூற,
வசந்த், “இன்னைக்கு ஏன் டா உனக்கு என் மேல் இந்த கொலைவெறி!” என்று அலற அனைவரும் சிரித்தனர்.
இவர்கள் என்றும் இதே நட்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்தி விடை பெறுவோம்.. 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥இனி இவர்கள் வாழ்வில் என்றும் காதல் சாரலே!!!♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥