Advertisement

அத்தியாயம்-9
அதனை கண்டதும் தமிழ் ஆத்திரம் பொங்க,
“ம்மாஆஆ..”
என்று கர்ஜித்தவன் வேகமாய் சென்று அந்த பையை எடுத்து மூடினான்.
“உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா..அன்னிக்கே என் ரூம்ல எதையும் தொடாதேனு சொன்னேன்ல…எதுக்கு வந்த..எல்லா விசயத்துலையும் தலையிடாதனு சொன்னா கேக்குறீயா ..”
என்றவனை தீப்பார்வை பார்த்தவர் வேகமாய் எழுந்துவந்து அவன் சட்டையை பிடித்தார்.
“ஏன் நான் தலயிடமா வேற எவ தலயிடுவா..இத மறைக்க தான் என்ன உள்ளியே விடாம தடுத்தியா..ஏதுடா இந்த பணம்,,சொல்லுடா..தோளுக்குமேல வளர்ந்துட்டா நீ செய்யுற எதையும் நான் கேட்க மாட்டேன்னு நினைச்சியா…சொல்லுடா..”
என்று அவன் அன்னை அவனுக்குமேல் கோபமாய் உறும அவன் பதில் எதுவும் சொல்லவில்லை எனவும் ஆத்திரம் அழுகையாக,
“ஏண்டா உன் புத்தி இப்படி போகுது.. நீ மறுபடியும் அந்த வீணாபோனவனோட சேர்ந்துட்ட தானே..அவன் கொடுத்தது தானே இந்த பணம்..சொல்லுடா…அய்யோ பாவி..என் மேல சத்தியம் செஞ்சியேடா இனிமே அவனோட எந்த சகவாசமும் வச்சுக்க மாட்டேனு.அப்போ எல்லாம் பொய்.வெறும் நடிப்பு அப்படிதானே..அவன் நல்ல இருப்பானா..என் புள்ளை வாழ்க்கையை பாழாக்கவே இருக்கானே..ஊருல எவன் எவன்கோ சாவு வருது..அவனுக்கு அது வராது..”
என்று அவர் சொல்லி முடிக்கவில்லை,
“அம்மாஆஆ..”
என்று அவன் போட்ட சத்தத்தில் அவர் உடல் நடுங்கிவிட்டது.கண்ணெல்லாம் கோவைபழமாய் சிவந்து கலங்கியிருக்க கோபத்தில் உதடுகள் துடிக்க நின்ற தோற்றம் ஒரு நிமிடம் பழைய தமிழே வந்ததுப்போல் இருந்தது.
“அவனை பத்தி இன்னும் ஒரு வார்த்தை..ஒரு வார்த்தை பேசினீங்க..”
என்று விரல் நீட்டி எச்சரித்தவன் பின்,
“உன்னால எப்டிம்மா இப்படிலாம் பேச முடியுது..உனக்காக தான் எல்லாத்தையும் விட்டுடு இருக்கேன்.அவனும் விலகி போய்ட்டான்..அப்படி என்ன வஞ்சம் சாவுனுலாம் பேசுற அளவுக்கு..நல்லா கேட்டுக்கோ இந்த பணம் ஐயா சம்மந்தப்பட்டது..என் கையிலே இப்போதைக்கு இருக்கட்டும்னு ஐயா சொன்னத்தால தான் வச்சிருக்கேன்..”
என்றதும் அவர் முகத்தில் அதிர்ச்சியும் அதை தொடர்ந்து குற்றவுணர்ச்சியும் பிரதிபலிக்க அவர் ஏதோ சொல்ல வரவும் கைநீட்டித் தடுத்தவன்,
“எதுவும் சொல்ல வேண்டாம்.. ஒரு விசயம் நியாபகம் வச்சிக்கோங்க.. நான் ஒன்னு செய்ய நினச்சிட்டால் யாரு தடுக்க நினைச்சாலும் முடியாது..அதை மறைத்து நடிக்க எனக்கு எந்த அவசியமும் இல்ல..இருந்தும் சொன்ன வார்த்தையை நான் மாத்த மாட்டேன்..அவனை தேடி நான் மறுபடியும் போக மாட்டேன்..ஆனா அவனை நீங்க பேசுறது என்ன பேசுறா மாதிரி தான்..மறந்திடாதீங்க…”
என்று அழுத்தமாய் கூறியவனுக்கு தெரியாது அவனை தேடி தான் செல்ல போகும் நாள் வெகு தூரம் இல்லையென்று..
“தமிழ்..”
“தயவு செஞ்சி என்னை கொஞ்சம் தனியா விடுங்க..”
அவனையே பார்த்தப்படி தயக்கதோடு அவர் வெளியேற சோர்ந்துபோய் பொத்தென்று அமர்ந்துவிட்டான்.பழைய நினைவுகள் மனசை தீயாய் காந்தியது.
அதிலிருந்து மீள முடியாமல் தவித்தவன் பார்வையில் அந்த பணம் இருந்த பைப்பட,
“எல்லாம் இந்த கருமத்தால வந்தது”
என்று தலையிலே அடித்துக்கொண்டான்.அது தன் கையில் வந்து சேர்ந்த நாள் நினைவு வந்தது.
நடராஜனின் தொழில் பாதி இங்கே என்றால் மீதி திருச்சியில் என்பதால் இங்கேயும் அங்கேயும் மாறி மாறி இருப்பது தமிழுக்கு பழக்கபட்ட ஒன்று தான்.அப்படி அவன் திருச்சியில் தங்க நேரிடும் போதெல்லாம் அவன் கல்லூரி நண்பன் விவேக் உடன் தங்கிக்கொள்வான்.
அப்படி ஒருமுறை இருக்கும் பொழுது,
“மச்சான் ஒரு ஹெல்ப் செயுறீயா..”
என்று எங்கேயோ கிளம்பி இருந்தவன் அவசரமாய் தமிழிடம் வந்து கேட்டான்.
“சொல்லுடா..”
“எங்க பெரியப்பா புதுசா ஓப்பன் பண்ணிருக்க ஹோம்பியோபதி க்ளீனிக்கு விளம்பரம் தர நோட்டீஸ் அடிக்கிற பொறுப்பை என் அப்பா என் தலையில கட்டிடாருடா..ஆர்டர்லாம் கொடுத்துட்டேன்..ஆனால் போய் வாங்க தான் நேரமே இல்லை.ரெண்டு நாளா கடையும் இல்ல..அவர் வேற பணத்த ஏதோ நான் முழுங்கிட்டா மாதிரி டெயிலீ போன் பண்ணி படுத்தி வைக்கிறார்..இன்னிக்கு கொஞ்சம் நீ போய் வாங்கிட்டு வந்திடுறியா..உனக்கு வேலை இருந்தால் வேணாம்..”
என்று அவன் கேட்க,
“என் வேலைலா முடிஞ்சிருச்சுடா,,இன்னிக்கி ஊருக்கு கிளம்புறேன்.. நீ கொடு.. நான் வாங்கி கொடுத்துட்டு போறேன்..”
என்று சொல்ல “தேங்க்ஸ் மச்சி..”
என்றவன் இரசீதையும் மீத பணத்தையும் கொடுக்க அதை பெற்றுக்கொண்டு அவன் நேராக சென்ற இடம் விநாயகா பிரிண்டர்ஸ்..
அவனை எதிர்க்கொண்ட ராஜிடம் இரசீதை கொடுத்து கேட்க அது அவன் எடுத்த ஆர்டர் தான் என்பதால் அவனுக்கு நன்றாக நினைவு இருந்தது.
“இதோ வெய்ட் பண்ணுங்க சார்..”
என்று ராஜ் உள்ளே செல்ல விநாயகம் கொடுத்த பணத்தில் இரண்டு நாளாய் அடித்த கூத்தை பற்றி தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
ராஜும் அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டாலும் கைக்கள் இயல்பாக தான் வைத்த இடமான அலமாரி செலப்பில் கீழே இருந்த பேக்கை எடுத்து தனியே வைத்திருந்த செம்பிள்ளோடு பில் போட்டு எடுத்து சென்றான்.
பேச்சு சுவாரசியத்தில் ராஜும் பையை மீண்டும் ஒரு முறை சரிப்பார்க்க விழையவில்லை.
பில்லைக் கொடுத்துப் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பையை தமிழிடம் ஒப்படைத்தான்.
அதனை வாங்கிய தமிழும் உள்ளே சரியாக இருக்கிறதா என்று பார்க்க விழையவில்லை.
எடுத்துக் கொண்டு வெளியே வந்த தமிழ் தன் பைக்கில் டேன்க் மேல் வைத்து ஹெல்மெட் அணிந்தவன் வண்டியை கிளப்பிய சில அடிகளிலே ஒரு பெண் வண்டி முன் விழுவதுபோல் வர,
“ரோட்ட பாத்து போக மாட்ட சாவுகிறாக்கி..”
என்று கத்திய அவனும் அவள் முகத்தை சரியாக பார்க்கவில்லை.
“நீ வண்டிய ஒழுங்கா ஓட்டிடு போடா,,மெட்டல் மண்டைய்யா..”
என்று திட்டிய யவ்வனாவும் அவனையும் அவன் வண்டியில் இருந்த பேக்கையும் கவனிக்கவில்லை.இது தற்செயலோ இல்லை விதியின் செயலோ யான் அறியேன்.
பாதி தூரம் சென்றதும் தான்,
“நாம் பாட்டிற்கு வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம் எண்ணிக்கை சரியாக இருக்குதானு கூட பார்க்கல…அடுத்தவன் வேலைனா உனக்கு அவ்வளவு அலட்சியம் இல்ல…”
என்று மனசாட்சி கேள்வி கேட்க,
“சரி இப்போ பார்த்துட்டு எதாவது சரியில்லேனா..மறுபடியும் நாமே போய் மாத்திக்கொடுப்போம்..”
என்று சமாதானப் படுத்திக்கொண்டவன் விவேக்கின் அறைக்கு வந்ததும் முதல் வேலையாய் அந்த பேக்கை திறந்துபார்க்க பார்த்த நொடி திகைத்துவிட்டான்.
அவ்வளவு பணம்!!!அதன் மேல் சிகப்பு மையில் வட்டமிட பட்டிருந்த மனோவின் புகைப்படம்!
“எப்படி…யாருக்கு இந்த பணம்..அதுவும் மனோவின் புகைப்படத்தோடு..என்னிடம் வேண்டுமென்றே சேர்க்க நினைத்து வந்ததா..”
ஒரு நிலையில் நில்லாமல் குழம்பிய மனதை அமைதிப்படுத்தி நிதானமாய் சிந்திதான்.
“இவ்வளவு பணம் இருப்பது தெரிந்தால் நிச்சயம் அசால்ட்டாக எவனும் தூக்கி கொடுக்க மாட்டான்..இது வேறு எங்கோ செல்ல வேண்டியது தன்னிடம் வந்து சிக்கியுள்ளது…”
என்பதை யூகித்தவன் துரிதமாக செயல்பட தொடங்கினான்.
நோட்டீஸிற்கு வேறு ஏற்பாடு செய்து தந்தவன் அவனுக்கு தெரிந்த ப்ரெய்வேட் டிடெக்டிவ் ஏஜண்ட் ஒருவரை அன்றே அணுகி விநாயகம் பிரிண்டர்ஸின் முதலாளியையும் அங்கே வேலை செய்யும் மற்றவர்களையும் பற்றியும் முழுமையான தகவல் திரட்டி தர கேட்டுக் கொண்டு நேராக நடராஜனிடம் வந்து நின்றான்.
அவரிடம் அவன் அனைத்தையும் கூற கேட்ட அவருக்கும் அதிர்ச்சி தான்.
‘நான் என்ன நடக்க கூடாதுனு நினைச்சி மனோவை விலகி வச்சேனோ அதுவே நடக்குது..’
என்று மிகுந்த வருத்தோடு அவர் சொல்ல,
“என்ன ஐயா சொல்றீங்க அப்போ உங்களுக்கு தெரியுமா..”
என்று அதிர்ந்தவன் பின்,
“அது யாருனு சொல்லுங்கய்யா.. அப்புறம் இந்த தமிழ் யாருனு நான் அவங்களுக்கு காட்றேன்..”
என்று கூற,
“எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யுற விசயமில்ல தமிழ்.. நீ தான் விசாரிக்க சொல்லிருக்கேல..எதுவும் ஊர்ஜிதம் ஆகட்டும்..அதுவரை நமக்குள்ளே இந்த விசயம் இருக்கட்டும்.. அந்த பணம் உன்னிடனே இருக்கட்டும் தமிழ்..அதை தேடி யாராவது வந்தாலும் நல்லது தான்..”
என்றவர் இனியும் மனோவையும் மருமகளையும் தனியாக விடமுடியாது..
என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.அதன் பின்னர் தான் அனுவை அழைத்தது எல்லாம் நடந்தது.
மற்றவர்களை பற்றி முழுமையான விவரம் வந்துவிட்டாலும் இன்னும் விநாயகத்தை பற்றி தகவல் சரிவர தெரியவில்லை.அவர் நேரடியான தொழிலாய் பிரிண்டிங் பிரெஸ் இருந்தாலும் மறைமுகமாய் இன்னும்  ஏதோ இருப்பதை தோண்டி துருவி கண்டு பிடித்த டிடெக்டிவ் சில நாளில் அவரை பற்றி எல்லாம் அடங்கிய ரிப்போட்டை சொல்வதாக சொல்ல அதற்காகவே காத்திருந்தான்.அதில் யவ்வனாவும் இருப்பது தெரிய வரும் போது????

Advertisement