Advertisement

அத்தியாயம்-4
நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் ‘சுளீரென்று..’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான் கையில் இருந்தக் கட்டு நேற்று நடந்தவற்றையும் தான் இருக்கும் இடத்தையும் உணர்த்தியது.
வலித்த இடத்தில் நீவிவிட்டப்படி சுற்றும் முற்றும் பார்த்தாள்.நேற்று அமர்ந்திருந்த சோஃபாவிலே தான் தூங்கியிருப்பது புரிந்தது.ஆனால் எப்பொழுது தூங்கினாள் என்று தெரியவில்லை.
“குட் மார்னிங் யவ்வனா..”
என்று புன்னகைமுகமாய் வந்த அனு,
“யப்பா..நல்ல தூக்கம் போல..எழுப்பினாலும் கொஞ்சம் கூட அசையவே இல்ல..”
என்று சிரித்தவள்,
“நேரா போய் லெஃப்ட் திரும்பினேனா பாத்ரூம்..உனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்..போய் ப்ரெஸாகிட்டு வா.. சீக்கிரம் கிளம்பனும்..”
என்று சொல்ல தன்னை கிளப்பிவிடுவதில் முனைப்பாக இருக்கிறாள் என்றே நினைத்தாள்.
இயல்பிலே சற்று கலகலப்பான பெண் தான் யவ்வனா எனினும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத இன்றைய நிலையில் ரொம்பவும் சோர்ந்து காணப்பட்டாள். பேசக்கூட தோன்றவில்லை.
சற்று நேரத்தில் ரெப்ரெஸாகி வந்த யவ்வனா கூடத்தில் அவள் இல்லாததால்,
“அனு மேடம்…”
என்று சத்தமாய் அழைக்க,
“இங்கே இருக்கேன்..வா யவ்வனா..”
என்று அடுபறையில் இருந்து குரல் கேட்கவும் தயக்கதோடே அங்கே செல்ல அனு ஏதோ மும்முரமாய் செய்து கொண்டிருந்தாள்.
“இந்தோ காஃபி வச்சிருக்கேன்..சாப்பிடு..”
கைகள் வேலையாய் இருந்ததால் கண்ணால் காட்ட,
“இல்ல மேடம் வேண்டாம்..உங்க உதவிக்கு ரொம்ப நன்றி மேடம்.நான் வரேன்..”
என்றாள் விடைப்பெரும் விதமாய்..
“போறீயா எங்க…”
“தெரில..கடவுள் விட்ட வழில..”
“அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம்..கடவுள் ஏற்கேனவே உனக்கான வழிய டிசைட் பண்ணிட்டாரு..”
என்றவளை புரியாமல் பார்க்க,
“நீ என்கூட தான் வர போற போதுமா..உன் பிரச்சனை தீர்ரவரை என்னோடவே இருக்கலாம்..”
என்று சிரிப்போடு சொன்னவளை நம்பமுடியாமல் பார்த்தவள்,
“நிஜமாவா மேடம்…”
என்றாள் திக்கிதிணறி..
“உண்மை தான் ம்மா..”
என்றவள் தன்னை பற்றி மேலோட்டமாய் சொல்லி,
“என் வீட்டுகாரு ‘நான் அனீமிக்கா இருக்குறதால..என் ஹெல்த்தை கவனித்துக்கொள்ள  ஏற்பாடு செஞ்ச டயடீசியன்னும் உன் கான்ராக்ட் முடியுற வரை என் கூடவே தான் இருக்கணும்னும்..’ வீட்டில் எல்லாருக்கும் சொல்லி வச்சிருக்கார்..ஸோ நீயும் அதையே மெய்ன்டைன் பண்ணிக்கோ…”
என்றவளை குழப்பமும் சந்தோஷமும் போட்டிப்போட,
“டயடீசியன்..அப்படினா…என்ன மேடம்..”
என்று அப்பாவியாய் கேட்டவளிடம்,
“நான் என்னெல்லாம் சாப்பிடனும்..எப்யெப்ப சாப்பிடனும்னு.எவ்வளவு சாப்பிடனும்னு என்னை வழி நடத்துறது தான்..டயடீசியன் வேலை..”என்று அவளுக்கு புரியும்படி கூறினாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்..நேத்து நைட் கூட நம்பிக்கையா இருந்தேன்..ஆனால காலைலேந்து அடுத்து எங்க போறது..?என்ன செய்றது..?கையில ஒத்த பைசா இல்ல மேடம்..வீட்டில் என்னை காணாம பதறிப்போய் இருப்பாங்களே அவங்களுக்கு என்ன சொல்றதுனு..? தலையே வெடிக்கிற மாதிரி இருந்தது..இப்ப தான் போன நம்பிக்கை வந்த மாதிரி இருக்கு..”
என்று சொன்னவளின் கண்கள் கொஞ்சம் கலங்கிதான் போனது.
“நேத்தி அவ்வளவு இரணகளத்திலையும் கன்னு மாதிரி இருந்துட்டு  இன்னைக்கென்ன கண்கலங்கிட்டு இருக்க..இனி ஆக வேண்டியதை பாரு.. முதல்ல நீ உன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி பத்திரமா இருக்கிறதா சொல்லு..”
என்று அலைபேசியை கொடுத்த அனு யவ்வனாவின் கண்களுக்கு தன்னை காக்க வந்த தேவதையாகவே தெரிந்தாள்.
“இங்க கிட்சனில் டவர் இருக்காது..ஹால்ல போய் கால் பண்ணு..”
என்று அனு சொல்ல உதவி கிடைத்ததில் மனசு இலேசாக மறைந்திருந்த துடுக்குத்தனம் மீண்டும் தலை தூக்கியது.
“அது இருக்கட்டும் மேடம்..வயித்து புள்ளக்காரி எல்லா வேலையும் நீயே செஞ்சா பின்ன நான் எதுக்கு..நகருங்க..நான் இதெல்லாம் பார்த்துக்குறேன்..”
என்ற அனுவின் கையிலிருந்த சாரணியை வாங்கியவள் அவள் சமைக்க எடுத்து வைத்திருந்த பொருட்களை ஆராய்ந்தாள்.
“ஹே…என்ன பண்ற…”
“ஆமா..ஒரு கேரக்டர் எடுத்தா..அதாவே மாறிடனும்..மேடம்…உண்மைக்கோ இல்ல சும்மாகிச்சிக்கோ ஆனால் இன்னைலேந்து உங்களை பார்த்துகிறது தான் என் டியூடி..அதனால அப்படியே ஓரமா நின்னு என்னென்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க..”
அவள் பரபரவென்று கையை தேய்த்தபடி சொன்னதில் சிரித்தவள்,
“ஹாஹா..டயடீசியனா சமையல் செய்றவங்க இல்ல… டாக்டர் மாதிரி..”
என்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது மேடம்..அதனால எனக்கு தெரிந்ததை நான் செய்றேன்..சும்மா இல்ல மேடம்..என் ரெண்டக்காகும் பிரசவம் முழுசும் கூடவே இருந்து பார்த்திருக்      கேன்..அதனால இந்த நேரத்தில் என்னென்ன சாப்பிடுவாங்கன்றது தெரியும்..”
என்றாள் வேலையின் மும்முரத்துடன்.
“உன் கடமை உணர்ச்சியெல்லாம் இருக்கட்டும்.உனக்கு கையில் அடிப்பட்டிருக்கு நியாபகம் இருக்குல்ல.அது சரியாக வேண்டாமா..அனல் பட்டால் எரியும்..நீ போ.”
என்று சொல்ல,
அட ஏன் மேடம்…வாழ்கையிலே சில அடிகள் விழதான் செய்யும்..அதுக்குனு பொம்மை மாதிரி உட்கார்ந்தேவா இருக்க முடியும்..வகை வகையா செஞ்சி அசத்த வேண்டாம்..”
என்றாள் யவ்வனா.
“பர்ரா..நீ கொடுக்குற பில்டப் பார்த்தால் நல்லா சமைப்பியோ..”
“என்ன இப்படி கேட்டுடீங்க..அறுசுவையும் எனக்கு அத்துப்படி..நீங்க லிஸ்ட் மட்டும் போடுங்க..”
என்றவள் வாய் ஓயாமல் பேசினாலும் சொன்னபடியே நேர்த்தியாய் ஒவ்வொன்றையும் செய்ய அவளை மெச்சுதலாய் பார்த்தாள்.
“ஸ்மெல்லே ஆஸமா இருக்கு…யவ்வா..”
என்று வாசம் பிடித்தபடி சொல்ல,
“டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்..எங்க அம்மா கை பக்குவம்..”
என்று பெருமையாய் சொன்னவள் பின் சட்டென்று தலையில் கைவைத்து,
“வீட்டுக்கு கால் பண்ணவே இல்ல..எல்லாம் ரொம்ப பயத்துல இருப்பாங்க..மேடம் உங்க ஃபோன் கொடுங்களேன்..”
என்று அவள் அலைபேசியை வாங்கி கொண்டு அப்பாவின் எண்ணிற்கு அழைத்தபடி கூடத்திற்கு நகர்ந்தாள்.
சில நிமடங்களுக்கு பின் கிட்சனை ஒழுங்கு படுத்துவிட்டு வந்த அனு வெளியே காதில் ஃபோனை வைத்தபடி சிலையாய் நின்ற யவ்வனாவை வித்தியாசமாய் பார்த்தவள் தோளில் கை வைத்து உலுக்க திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஏன்..இப்படி நிக்கிற..வீட்டுக்கு பேசிட்டியா..”
“ஆங்…ம்ம்.. பேசிட்டேன்.. இந்தாங்க..”
என்று போனை நீட்டியவள் கண்கள் கலங்கியிருந்தது.
அனுவின் பார்வையை உணர்ந்து,
“இல்ல..வீட்டில் எல்லாம் ரொம்ப பயந்து போயிருக்காங்க..அவங்க அழுகவும் எனக்கும்..”
என்றாள் முகத்தை அழுத்த துடைத்தபடி…
ஆனால் விதியோ புது ஆட்டத்தை துவங்கி வைத்ததை எண்ணி பரிகாசமாய் சிரித்தது.

Advertisement