Advertisement

அத்தியாயம்-3
மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை,
“என்ன விளையாடுறீங்களா..”
என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது.
வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை மறந்து அவர் பேச்சை நின்று கவனித்தாள்.
“நேத்து நைட்டே உன்னுட்ட சேர்க்க வேண்டியதை சேர்த்துட்டேன் பரமா..இனி அது உன்னோட பொறுப்பு..நீ தொலச்சிட்டு என்மேல் பழிப்போட நினைச்ச..நான் மனுஷனா இருக்க மாட்டேன்..”
என்று உச்சகட்ட கோபத்தில் உறுமிய விநாயகத்திற்கு சுற்றத்தை பற்றியோ தான் இருக்கும் இடம் பற்றியோ சிறிதும் நினைவில்லை.
“…….”
“என்னது..ஹோமியோவா..யோவ் அதெல்லாம் நான் எதுவும் வைக்கல..எப்படி பேக் மாறும்..ஐயாக்கு விசயம் தெரிஞ்சிது உன்னோட என்னையும் பொலிப்போட்டுடுவாரு….”
“……”
மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ கோபமாய் அலைப்பை துண்டித்தவர் படபடவென அலைபேசியாலே தன் கையில் தட்டி டென்ஷனை குறைக்க முயன்றார்.
பின் ஏதோ தோன்றியவராய் சட்டென்று பார்வையை உயர்த்தி பார்க்க அதுவரை அவரையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த யவ்வனா விநாயகம் திடீரென பார்க்கவும் திருதிருவென விழித்தாள்.
அவள் பார்வையும் உடல்மொழியில் தெரிந்த பதற்றமும் அவளை காட்டி கொடுத்தது.
“யவ்வனா இங்க வா…”
என்று அதட்டலாய் அழைக்க வெடவெடத்துப் போனவள் அருகில் வந்து,
“எ-என்ன அண்ணே..”
என்றாள் அலைப்பாயும் விழிகளோடு..
“எதுக்கு என்ன பார்த்து பதறுற..எதை மறைக்க நினைக்கிற..”
என்று அழுத்தமாய் நேரடியாக கேட்க,
“அப்படி..அப்படிலா ஒன்னும் இல்ல அண்ணா..எனக்கு எதுவும் தெரியாது..”
என்று அவள் தட்டு தடுமாறி சொல்ல,
“நான் ரொம்ப காண்டுல இருக்கேன்…ஒழுங்க உண்மைய சொல்லு..இல்ல நடக்குறதே வேற…”
என்ற உறுமலில் கண்கள் இரண்டும் கலங்கிவிட,
“சத்தியமா..பணத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியாது அண்ணே..”
 என்றாள் அழுகையின் ஊடே..
சுற்றி ஒருமுறை பார்த்தவர் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு தன் அறையுள் தள்ளிவிட தடுமாறி கீழே விழுந்தவள் பார்வையில் ரூத்ரமூரத்தியாய் காட்சியளித்தார் விநாயகம்.
“நான் பணத்தை பத்தி கேட்கவே இல்லையே..நீயா சொல்ற..உண்மைய சொல்லுடி..பணம் எங்க..”
“எனக்கு எதுவும் தெரியாது..சத்தியமா தெரியாது அண்ணா..”
என்று அவள் முடிக்கும் போது பளீர் என்று கன்னத்தில் ஒரு அறைவிழ அதிர்ந்து விழித்தாள்.
“பொய் சொன்ன..மவளே தொலச்சி கட்டிருவேன்..நான் பணம் பை இங்க வைத்து நேத்து கைமாறுற வரைக்கும் கடை பசங்க யாரும் இல்ல உன்னை தவிர..நேத்து நீ உள்ளேந்து திருதிருனு வந்தபோதே எனக்கு உறுத்துச்சு..உன்னை நம்பி சந்தேகப்படாமல் விட்டுட்டேன்..அதுக்கு நல்லா காட்டிடே…ஒழுங்கு மரியாதையா சொல்லுடி…”
என்று முடியை பிடித்து தூக்க வலியில் கத்தினாள் யவ்வனா.
“சொல்லிடுறேன்..சொல்லிடுறேன்”
என்று அலறியவள் தேம்பியபடி நேற்று நடந்ததை அப்படியே சொன்னாள்.
“அப்போ பேக் மாறிப் போயிடுச்சு..அப்படி தானே..சரி வா..வந்து எங்க வைச்சேனு காட்டு..”
என்று அவளை இழுத்து செல்ல முகம் சிவக்க அழுது நிற்கும் அவள் கோலத்தை கண்டு மற்றவர்கள் “என்னாச்சு..”
என்று அருகில் வர,
“டேய்..எவனும் வரகூடாது..கிளம்புங்க…”
என்று புலியாய் விநாயகம் கர்ஜித்ததில் ‘என்ன ஏதென்று கேட்டால் தங்கள் வேலைக்கு ஆபத்து என்று புரிந்து வெளியேறிவிட்டனர்.. அங்கே மிஞ்சியது அவளும் விநாயகமும் மட்டுமே..
“ம்ம்..போ..எங்கேயோ மாத்தி வைச்சேனு சொன்னியே.. போய் எடுத்துக் காட்டு..”
என்று சொல்ல அவசரமாய் ஓடிச் சென்று அலமாரியை திறந்தவள் கீழ் தட்டில் தேட அங்கே அந்த ட்ராவல் பேக் இல்லை!!!!
தலையே சுற்றுவது போல் இருக்க அழுத்த பிடித்துக் கொண்டவள் மீண்டும் முழு அலமாரியையும் தேட அப்பை இருந்ததற்கான சுவடே இல்லை.
“நீ தானே சொன்னே ரெண்டு பேக் இருந்துதுனு..ஒன்னு நான் கொடுத்துட்டேன்..இன்னொன்னு எங்கே..”
“அண்ணே..இங்க தானே இருந்துச்சு..”
என்று நடுங்கும் குரலோடு சொல்ல,
“என்னை பார்த்த பைத்தியம் மாதிரி இருக்கா..வச்ச எனக்கு தெரியாதா..இங்க நான் வச்சது ஒரு பேக் தான்..அதில் உள்ள பணத்தை எடுத்துட்டு வேற ஏதோ நோட்டீஸால நிரம்பிட்டு செந்தில் மாதிரி ‘அந்த பழம் தானே இதுனு..’ நக்கல் பண்றீயா..”
என்று ஆத்திரமாய் கத்தினார்.
“எனக்கு தெரியாது அண்ணே..”
என்று அவள் மீண்டும் சொன்னபோது கோபம் தலைக்கேற ஓங்கி வைத்த ஒரு அறையில் சுருண்டு விழுந்தாள் யவ்வனா.
மீண்டும் அவளுக்கு நினைவு திரும்பிய போது அவள் விழுந்தபோது இருந்த நிலையிலேயே இருந்தாள்.
சற்றும் நகராமல் பார்வையை மட்டும் லேசாக உயர்த்திப் பார்க்க விநாயகத்தோடு இன்னும் சில தடியர்களும் ஆங்காங்கே நின்றிருக்க விநாயகத்தின் முன் அவரைவிட இருமடங்கு கோபத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் நின்றிருந்தார் மற்றொருவர்.யாரின் கவனமும் அவளிடம் இல்லை.
“பணம் விசயத்துல இவ்வளவு அஜாக்கிரதையாவா இருப்ப..ஆயிரம்,லட்சம் இல்லடா கோடி…சொலையா இரண்டு கோடி..நீ ஈஸியா கடையில் வச்சேன்..தோ இவ திருடிட்டானு கதை சொல்ற…அறிவில்ல..”
(ஏது ரெண்டு கோடியா….யோவ் நான் ரெண்டு ஆயிரத்துக்கே வாய பொலக்குற கேஸுயா..)
“அய்யோ பரமா…வீட்டில் வைச்சா 
என் பொண்டாட்டி கண்டுபிடிச்சிடுவா…அவளுக்கு தெரியாம மறைக்க தான் இங்க கடையில வைச்சேன்..மத்த பசங்களை நம்ப முடியாம தான் எவனையும் பணம் இருக்குற வரை கடைப்பக்கமே வர விடலை..ஆனால் இந்த அமுக்குனி இப்படி பண்ணுவானு நினைக்கலடா..வேலை இல்ல குடும்ப கஷ்டமுனு நின்னவளுக்கு போனா போகுதுனு வேலை போட்டு கொடுத்தாள் இந்த நாய் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிடுச்சு..”
(ம்க்கும்..உழைச்ச சோறே உடம்புல ஒட்ட மாட்டேங்குது..இதுல ஊறான் வீட்டு காசு எனகெதுக்கு ய்யயா..)
“எனக்கு உன்மேல தான் டவுட்டா இருக்கு விநாயகா..பணத்துக்கு ஆசைப்பட்டு  டபுள் கேம் ஆடுறீயா…”
(எனக்கும் அதே சந்தேகம் தான்..)
“டேய். உன் தம்பி ய்யா..என்னையே சந்தேகப்படுற…அத்தோட தலைவரு பத்தி தெரிஞ்சும் நான் அப்படி செய்வேனா… எந்தளவுக்கு அவருக்கு வேலை செஞ்சா அள்ளி கொடுப்பாரோ அதே போல அவரை ஏமாத்த நினைச்சாலே பரலோகம் தான்னு தெரியாதா எனக்கு..”
“இந்நேரம் பணமும் அந்த பய ஃபோட்டோவும் நரசிமன் கைக்கு போகலனு தெரிந்திருக்கும்….போட்டோகூட பிரச்சனை இல்லை..வாட்ஸப்பில் அனுப்பிக்கலாம்..ஆனால் பணம்..???விசயம் தலைவர் காதுக்கு போனதும்  அந்த பையன போடுறதுக்கு முன்னாடி நாம போய் சேர வேண்டியது தான்..நீ ‘இந்த பொண்ணு உரிச்சு தொங்க விடுவியோ இல்ல என்ன பண்ணுவியோ தெரியாது..அந்த ஃபோட்டோவும் பணமும் வந்தே ஆகணும்…”
(அட..கொலகார பாவீங்களா..இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நிச்சயம் உயிருக்கு உத்தரவாதம் இல்ல..கடவுளே என்னை இவனுங்களுட்ட மாட்டிவிட்டியே..உனக்கே இது நியாயமா..”
என்று மானசீகமாய் புலம்பியவள் தன்னை சுற்றி ஆராய அவளுக்கு முன் ஒரு பேப்பர் வெய்ட் கிடப்பதை கண்டவள் வெளியே செல்லும் கதவை பார்த்துவிட்டு நொடியில் தான் செய்ய வேண்டியதை முடிவெடுத்தாள்.
மெல்ல கையை மட்டும் நீட்டி அதனை எடுத்தவள் தனக்கு நேரெதிரே சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்களின் மீது ஓங்கி வீச நிலைத்தடுமாறி படபடவென அனைத்தும் விழுந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவள் பழையபடி மயங்கிய தோரணையில் படுத்துவிட்டாள்.
சிதறிக்கிடந்த பொருட்களை கண்டு,
“ஷ்ஷ்..குப்ப மாதிரி அடுக்கி போடாதீங்கடானு சொன்ன கேட்குறானுங்களா..ஒருவேலை உருபடியா செய்வதில்ல..ம்ச்..டேய் பசங்களா..அந்த டப்பாவெல்லாம் கொஞ்சம் ஓரமா அடுக்கி போடுங்கடா..”
என்று வாயிலின் புறம் நின்ற இரண்டு தடியர்களையும் ஏவிய விநாயகம் மீண்டும் ‘அடுத்து என்ன செய்வது..’ என்பதைக் குறித்துப் பரமனுடன் தீவரமாய் பேச்சில் ஈடுபட யாரின் கவனமும் தன்மீது ஈர்க்கா வண்ணம் பொறுமையாய் எழுந்தவள் நான்கே எட்டில் கதவை அடைந்து திறந்துக் கொண்டு வெளியே ஓட,
“ஏய்…நில்லுடி…டேய் அந்த **** தப்பிச்சு ஓடுறா போய் பிடிங்கடா..”
என்று அவளை முதலில் கவனித்த பரமன் ஆத்திரமாய் கத்த அதற்குள் மின்னலென அவள் வெளியேறியிருந்தாள்.
“அப்போ ஓட ஆரம்பிச்சவ தான் நிக்கவே இல்ல..இங்க உங்க வீட்டுக்கு வரவரைக்கும்..! !அந்த பணத்த யாரு எடுத்தா..இல்ல இவரே எடுத்துக்கிட்டு என்மேல பழிய போடுறாரா என்ன ஏதுனு ஒன்னும் எனக்கு தெரியாது..ஆனால் நல்ல வசமாய் மாட்டிக்கிட்டேன்னு  மட்டும் புரியுது….நல்ல காலம் என் புதுசா மாறிய வீட்டு அட்ரஸ் எதுவும் விநாயகத்திற்கு தெரியாது..அதனால இப்போதிக்கு என் குடும்பத்திற்கு பிரச்சனை இல்ல..ஆனால் அவங்களை விட்டு கொஞ்ச நாள் தள்ளி இருக்குறது தான் நல்லது..அதுக்கு நீங்க  தான் ஹெல்ப் பண்ணனும் அனு மேடம்..”
மரத்த குரலில் தனக்கு நடந்ததை சொல்லிய யவ்வனா இறுதியில் சற்று கெஞ்சலாய் சொல்ல,
“நான் என்ன பண்ண முடியும்…”
“எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல உண்மையா பணத்தை எடுத்தவன கண்டுபிடிச்சிடுவானுங்க…அத்தோடு அந்த ‘ஐயா..’வே விநாயகத்தைம் பரமனையும் எதாவது செஞ்சிடுவார்..அதுவரை நான் அவனுங்க கண்ணுல படாமல் இருந்தாலே போதும்..எனக்கு இங்க யாரையும் தெரியாது மேடம்…ப்ளீஸ் என்னை எப்படியாவது வெளியூருக்கு போக மட்டும் ஹெல்ப் பண்ணுங்க..எங்கே என்றாலும் எனக்கு ஓகே..நான் ஊரைவிட்டு போனாலே போதும்…”
“நானே இன்னும் ரெண்டு நாள்ல இங்கிருந்து போகப் போறேன்..இதில் உன்னை எங்கே கொண்டுப் போய் விடுறது..”
“ஹே..சூப்பர்…நீங்க போற இடத்துக்கே என்னையும் கூட்டிட்டு போங்க மேடம்..ப்ளீஸ்..ப்ளீஸ்..”
“உன்ன யாருனு எனக்கே தெரியாது..என்ன சொல்லி கூட்டிட்டு போவேன்..உன் நிலைமை நினைத்தால் பாவமாய் தான் இருக்கு..ஆனால் உனக்கு உதவும் ச்விச்சுவேஷன்ல நான் இல்ல..வேணுனா இன்னைக்கு ஒரு நைட் தங்கிகோ..அவ்வளவு தான் என்னால பண்ணமுடியும்..”
என்று அனு படபடவென சொல்ல யவ்வனாவின் முகம் ஓர் கசந்த முறுவலை சிந்தியது.
“மனுஷனோட வார்த்தைக்கு நம்பிக்கையே இல்லாம போச்சுல..என் விதி..நீங்க என்ன செய்வீங்க..”
என்று விரக்தியாய் யவ்வனா கூற அதே சமயம் மேசையின் மீது வைக்க பட்டிருந்த அனுவின் அலைபேசி சிணுங்கியது.
திரையில் மின்னிய ‘ஹப்பீ..’ என்பதை பார்த்ததும்,
“நீங்க போய் பேசுங்க மேடம்..நான் இங்கனேயே இருக்கேன்..”
என்று சோபாவில் தலை சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள அவளை சில நொடிகள் பார்த்த அனு பின் அழைப்பை ஏற்று நகர்ந்தாள்.
“ஹலோ செல்லம்ஸ்..என்ன பண்ற..பேக்கிங் எல்லாம் முடிச்சாச்சா…”
மறுமுனையில் உற்சாகமாய் ஒலித்தது அவள் கணவன் மனோவின் குரல்.
“ம்ம்..ஆச்சுங்க..நீங்க என்ன பண்றீங்க..சாப்டாச்சா..”
“சாப்டேன்டி பொண்டாட்டி..என் பாப்பா எப்படி இருக்காங்க..என்ன சொல்றாங்க..”
என்று அவன் சொன்னதும்
அனிச்சையாய் அவள் கை தன் வயிற்றில் படர,
“ம்ம்..அவங்களுக்கு என்ன..அமைதியா அவங்க அம்மா வயித்துல தூங்கிட்டு இருக்காங்க..அவங்க அப்பாவை தான் ரொம்ப மிஸ் செய்றாங்களாம்…”
என்றாள் புன்னகையோடு..
“அப்டீங்களா..நானும் தான் என் ரெண்டு பாப்பாவையும் ரொம்பபபபபப மிஸ் பண்றேன்.. இன்னும் ஒன் வீக் தான் அப்புறம் உங்களை பார்க்க ஓடோடி வந்திடுவேன்… அதுவரை அவங்க தாத்தா வீட்டில் ஜாலீயா இருங்க..”
என்று அவன் சொன்னதும் மறைந்திருந்த கவலை மீண்டும் தொற்றிக்கொள்ள,
“ஜாலியாவா..??எனக்கு ரொம்ப நர்வஸ்ஸா இருக்கு..மாமா,அத்தை எல்லாரும் என்ன ஏத்துப்பாங்கல்ல..எதாவது திட்டீட்டாங்கனா….”
என்றவளின் குரலில் அந்த தவிப்பு தெரிந்தது.அதற்கு காரணம் உண்டு.
மனோகரும் அனுஷியாவும் இணையத்தில் ஒருவரையொருவர் அறியாமல் அறிமுகமாகி நட்பாகி பின் காதலாய் கசிந்துருகியவர்கள்.
‘வெவ்வேறு வேர்களில் பிறந்த நம் காதல் இணையுமா..’
என்பது போல் தான் இவர்கள் நிலையும்..
அனுஷியாவின் வீட்டில் இவர்கள் காதல் விவகாரம் தெரியவந்து அவளுக்கு அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேறு எந்த யோசனையும் இன்றி உடனே பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.
சொல்லாமல் கொல்லாமல் மாலையும் கழுத்துமாய் வந்துநின்ற மகனின் செயல் அவன் தந்தை நடராஜனின் கௌரவத்திற்கு பெரும் இழுக்காய் அமைய அவர்களை வீட்டின் உள்ளேயே அனுமதிக்காமல் வாசலோடு அனுப்பிய நடராஜன்,  
”உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமே இல்லை.இனி இந்த ஊரு பக்கமே வரக்கூடாது” என்று கூறிவிட முடிவில் இருக்குடும்பத்தாலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
தாய்-தந்தை கோபத்தில் இருந்தாலும் மனோவின் அண்ணன் பிரகாஷ் தன் தம்பியோடு தொடர்பில் தான் இருந்தான்.
இப்படியாக சில மாதங்கள் ஓடிவிட மனோ அலுவலகத்தில் வேலை தொடர்பாக மும்பை சென்ற  மறுநாள் அனு கர்ப்பமாய் இருப்பது தெரியவர மகிழ்ச்சியிலும் உடனே ஊருக்கு திரும்ப முடியாத தவிப்பிலும் திக்குமுக்காடி போனான்.
மனோவின் பெற்றோருக்கு தங்கள் ஆசை மகனின் மேல் கொண்ட கோபம் ஒரு மாதத்திலே மறைந்திருந்தாலும் வீம்பாய் இத்தனை நாள் இருந்தவர்கள் இன்று மருமகள் உண்டாகி இருப்பது தெரியவந்ததும் மனம் முற்றிலும் இளகிவிட மனோ இல்லாமல் புள்ளதாச்சி அங்கே தனித்து இருக்கவேண்டாம் என்று கூறி தங்கள் மூத்த மகனையும் மருமகளையும் நல்ல நாள் பார்த்து  அழைத்துவர சொல்லிவிட இருவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி.
இருப்பினும் முதல் முறை புகுந்த வீட்டுக்கு தனியே செல்வதால் அனுவிடம் தயக்கமும் இருந்தது.
“அடடடா..அனும்மா எங்கப்பா அன்னைக்கு கோபத்தில் அவ்வளவு டென்ஷனா பேசினார்.மத்தபடி கோபம் எல்லாம்  அப்பாக்கு அதிகமாக வராது.அம்மாவும் அப்படி தான்.ரெண்டு பேருக்கும் நான் அவ்வளவு செல்லம் தெரியுமா..!கண்டிப்பா கோபம் எல்லாம் இந்நேரம் போயே போயிருக்கும்…அதுவும் அம்மாக்கு பாசத்தை மட்டும் தான் காட்ட தெரியும்..ஊருக்கு போனதும் நீயே சொல்லுவ பாரு எங்கத்த ரொம்ப ஸ்வீட்டுனு..”
என்ற மனோவின் ஆறுதல் மொழியில் ஓரளவுக்கு சமாதானமாகிய அனு,
‘இந்த பெண்ணை பற்றி சொல்லலாமா..வேண்டாமா..’ 
என்று தனக்குள்ளே நீயா..நானா நடத்தியவள் மனதில் யவ்வனாவின் கசந்த முறுவல் என்னவோ செய்ய  இறுதியில் மனோவிடம் அனைத்தையும் ஒப்புவித்தாள்.
அவள் கூறுவதை பொறுமையாய் கேட்டவன்,
“அந்த பொண்ணு சொல்றதலாம் நம்புறீயா..”
என்று கேட்டான்.
“வாய் தான் கொஞ்சம் அதிகமாச்சே தவிர அவ பொய் சொல்லலேங்க..அவ சொல்றதெல்லாம் உண்மைனு தான் தோணுது..இப்ப கூட அவளுட்ட நாளைக்கு காலைல இங்கிருந்து கிளம்புனு சொல்லிட்டேன் தான்..ஆனால் ஏனோ அவளுக்கு உதவனும்னு என் உள்மனசு சொல்லுது..”
“அதுக்கு…”
“பேசாமல் என்கூடவே நாளைக்கு கூட்டிட்டு போகவா..”
“ஏய்..லூசாடி நீ..வீட்டில் என்னானு சொல்றது.. அதெல்லாம் வேண்டாம்..வேணுனா கொஞ்சம் பணம் கொடுத்து போறவழியில அந்த பொண்ணு சொன்னா மாதிரி எதாவது ஒரு ஊருக்கு பஸ் ஏத்தி விட்று..மேல எதுவும் இழுத்துக்காத..”
“ஏங்க..வயசு பொண்ணுங்க.. அப்படி தனியா விட மனசு வரலை…ப்ளீஸ் வீட்டில் உண்மையை சொல்லலேனாலும் எதாவது சொல்லி சமாளிங்க உங்களுக்கா சமாளிக்க தெரியாது..”
“உனக்கு ஏன் அனும்மா இந்த தேவையில்லாத வேல..”
“என் மன திருப்திகாக ப்ளீஸ்..”
என்று குழந்தையாய் அடம்பிடிப்பவளை என்ன சொல்வது என்று தெரியவில்லை மனோவிற்கு..
சொடக்கிட்டால் அவள் சொல்வதை தலையால் முடிக்கும் அளவு செல்வாக்கு நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவள் அனைத்தையும் உதறிவிட்டு தன்னை மட்டுமே நம்பி வந்த தன் மனைவி கேட்டு எதற்கும் மறுக்காத அந்த அன்பு கணவனுக்கு இதையும் மறுக்க தோன்றவில்லை.

Advertisement