“இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே”, என்று சொன்னாள்.
“ஆமாமா கல்யாணத்துக்கு முன்னாடியே, பிள்ளைங்க டாக்டர் ஆன உடனே ஷேர் பிரிச்சு கொடுத்திருக்காங்க., அப்படி ஷேர் பிரிச்சு கொடுத்ததுல தான் உங்க அம்மா பேருல இந்த ஷேர்ஸ் இருக்கு., அந்த ஷேர்ஸ் இப்ப வரைக்கும் அவங்களால விக்கவோ, இல்ல வேற எதுவும் பண்ண முடியல, உங்க அம்மா பேர்ல இருக்குறனால., உங்க அம்மாவோட டெத்துக்கு அப்புறம் அந்த ஷேர் எல்லாம் உனக்கு தான் வரும்., அப்படியே மாறி வந்திருக்கு., உனக்கு 18 வயசு ஆனதுக்கு அப்புறம், அந்த ஷேர் ஆட்டோமெட்டிக்கா உன் பெயருக்கு சேஞ்ச் ஆகும்., இப்போ அந்த ஷேர்ச நீ வேண்டாம்னு எழுதி கொடுக்கணும்., அப்படின்னு அவங்க நினைக்கிறாங்க., அவங்களுக்கு அந்த ஷேர் வேணும்னு நினைக்கிறாங்க.,
இதுக்காக உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர தயாரா இருக்காங்க”, என்று சொன்னார்.
“அது எதுக்கு எனக்கு, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்., அவங்க வரட்டும் பேசட்டும் நான் சொல்லிக்கிறேன்”, என்று சொன்னவள் அமைதியாக இருந்தாள்.
அவள் அப்பாவுடைய வக்கீல் தான், “உனக்கு இதுல கொஞ்சம் கூட வருத்தம் இல்லையாமா”, என்று கேட்டார்.
“வருத்தம் அப்படி எல்லாம் எதுவும் இல்லை அங்கிள்., இந்த காலத்துல சொத்துக்காக கொலையே பண்றாங்க., குட்டி பிள்ளையா இருக்கும் போது அவங்க வந்து உங்க கிட்ட இருந்து என்னை பிரிச்சி, என்ன பண்ணி இருந்தாலும் யாருக்கும் தெரியாது., ஏன் நான் இல்ல அப்படிங்கிற மாதிரி வெளியே காமிச்சிருந்தா கூட தெரியாது தானே., இப்பதான் நிறைய பார்க்கிறோம் ல.,
அந்த மாதிரி எதுவும் பண்ணியிருந்தாங்கன்னா.,
ஆனா அதெல்லாம் எதுவும் செய்யாமல் அட்லிஸ் படிக்க வச்சிருக்காங்க., நல்ல படிப்பு கொடுத்திருக்காங்க, சோ இது ஒன்னும் பெரிய இஷ்யூ வா தெரியல., பார்த்துக்கலாம் வரட்டும் நான் பேசுறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னாள்.
“அப்புறம் இன்னொன்னு”, என்றார்.
“எங்க அப்பாவ வழியில் ஏதாவது பிரச்சனையா., இதே மாதிரி”, என்று கேட்டாள்.
ஆடிட்டர் தான், “டக்கு டக்குனு புரிஞ்சிக்கிற மா நீ”, என்றார்.
அவர்கள் மனைவிகள் இருவரும், “அது என்ன இவ்வளவு சொத்து அவங்க கைல இருக்கு., இவ பெயருக்கு மாறும் தெரிஞ்சு தான் இவளை படிக்க வச்சிருக்காங்க இல்லையா., அதையே இந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஏதாவது நல்லபடியா செஞ்சு இருக்கலாம் இல்ல., அல்லது ஏதாவது வாங்கி கொடுத்து இருக்கலாம் இல்ல”, என்று சொன்னார்கள்.
“ஆன்ட்டி ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் நமக்கு, என்னை அவங்க படிக்க வச்சிருக்காங்க, அது போதும், எங்க அப்பாவோட ஏர்னிங் மட்டும் வச்சி எனக்கு இந்தளவு பெஸ்ட் ஸ்டடிஸ் கொடுத்திருக்க முடியாது இல்லையா.,
அப்பாவோட வீட்ல வாடகை, பிளஸ் அப்பாவோட சேவிங்ஸ் அது மட்டும் தான் எனக்கானது, இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே கிடையாது விடுங்க விடுங்க”, என்று சொன்னாள்.
“என்ன தர்ஷனா இப்படி சொல்ற, உன் பேர்ல இவ்வளவு பெரிய சொத்து இருக்கு., இப்போ நீ கேஸ் போட்டா, அவ்வளவும் உனக்கு தான்”, என்று சொன்னார்.
“வேண்டாம் ஆன்ட்டி” என்றாள்.
“தெரிஞ்சு தான் பேசுறியாமா., கோடி கணக்கான மதிப்பில் உள்ள சொத்து”, என்று சொன்னார்.
“ஐயோ ஆன்ட்டி வேண்டாம், வேண்டாம், எனக்கு சொத்தே வேண்டாம்., நான் பார்த்துக்கிறேன், நான் கரெக்டா பேசி முடிச்சிடுவேன்., யூ டோன்ட் வொரி ஆன்ட்டி”, என்று சொன்னாள்.
“என்னம்மா இப்படி சொல்ற”, என்று வருத்தத்தோடு தான் கேட்டார்கள்.
ஆனால் இவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “சரி அங்கிள் அப்பா வீட்டுக் கதையை சொல்லுங்க”, என்று கேட்டாள்.
அவரோ, “உங்க அப்பா பேர்ல கொச்சின்ல ஒரு பெரிய தோப்பு, பிளஸ் ரெசார்ட்ஸ் இது எல்லாமே இருக்கு”,என்றார்.
” ஓகே கொடுத்துறலாம் அங்கிள்”, என்று சொன்னாள்.
“அதுவும் நல்ல மதிப்புள்ள பெரிய பிராபிட், அந்த தோட்டத்துக்குள்ள இருக்கிற ரெசார்ட் மதிப்பு மட்டுமே அவ்ளோ அதிகம், அங்க பேக் வாட்டர்ன்னு சொல்லுவாங்க இல்ல., அந்த மாதிரி ஒரு இடத்தில தான் அந்த தோப்பு, பிளஸ் அந்த ரெசார்ட் இருக்கிற இடம் அதோட மதிப்பெல்லாம் தனி., இது உங்க பெரியப்பா அதாவது உங்க அப்பாவோட அண்ணன் தான் நடத்திட்டு இருக்காரு, சோ இப்ப அந்த சொத்து அவங்க வீட்ல உள்ளவங்க பேருக்கு மாற்றி கேட்கிறாங்க”, என்று சொன்னார்.
“கொடுத்துறலாம், நமக்கு எதுக்கு அவங்க சொத்து, வேண்டாம்”, என்றாள்.
“என்னம்மா இப்படி சிரிச்சிட்டே சொல்ற, ஒன்னும் பிரச்சனை இல்ல, அவங்க வரட்டும் பேசுவோம்”, என்று சொன்னவள்.,
அதற்கு மேல் அவர்களிடம் சாதாரணமாக பேசி வழி அனுப்பி வைத்தாள்.
அது போலவே வெள்ளிக்கிழமை மாலை வந்து இறங்கிய வினித்தும் முகேஷும் வர.,
“ஹாய்” என்று சொல்லி அவர்களோடு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு தெரியும்., என்பது இருவருக்கும் தெரியும்., இந்த இரண்டு நாட்களாக போனில் பேசும் போது அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை., இப்போது நேரில் வந்த பிறகும் அவள் முகத்தில் சிறு மாற்றம் கூட இல்லாமல் சாதாரணமாக எப்பவும் போல பேசினாள்.
அவர்கள் தான், “அங்கிள் இரண்டு பேரும் உன்கிட்ட பேசி இருப்பாங்க ன்னு நாங்க நினைக்கிறோம்”, என்றான்.
“ஆமா பேசினாங்க” என்று சொன்னாள்.
“உனக்கு இதுல வருத்தம் இல்லையா”, என்றார்கள்.
“இதுல வருத்தப்பட என்ன இருக்கு, அது அவங்க சொத்து., அவங்க கேக்குறாங்க கொடுத்துட்டு போவோம், நமக்கு எதுக்கு மத்தவங்க சொத்து”,என்று சொன்னவள்,
சிரித்துக் கொண்டே, “அது அப்புறம் பார்க்கலாம் மாம்ஸ்., நாளைக்கு தானே உங்க பேமிலி எல்லாம் வர்றாங்க, வரட்டும் பேசுவோம்”, என்று சொன்னாள்.
“உன்னை வந்து பார்த்து நாங்க பேச வரும் போது தான் எங்ககிட்ட சொன்னாங்க., அப்பவும் இவ்வளவு பெரிய பிராஃபிட், இவ்ளோ பெரிய சொத்து உன் பேர்ல இருக்குன்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது.,
ஆனா அவங்க சொன்னதை வைத்து பார்க்கும் போது நாங்க சாதாரணமா ஒரு சின்ன சொத்து அப்படித்தான் யோசிச்சோம்., இவ்ளோ பெருசு அப்படின்னு எல்லாம் யோசிக்கல.,
ஆனா இது தெரிஞ்சதுக்கு அப்புறம், எங்களுக்கு மனசு கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு., உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு., ஏன்னா நீயும் சாதாரண ஆள் கிடையாது., உன் பேர்ல தான் இப்ப வரைக்கும் அவ்வளவும் இருக்கு”, என்று சொன்னார்கள்.
“ஐயோ எனக்கு ஒண்ணுமே வேண்டாம் எனை விட்ருங்க மாம்ஸ், ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் இப்படியே என் கூட எப்பவும் இருப்பேன்னு சொல்லுங்க, எனக்கு எதுவுமே வேண்டாம் மாம்ஸ்”, என்று சொன்னாள்.
“அது என்னடா குட்டி அப்படி சொல்லிட்ட, எப்பவும் இப்படித்தான் இருப்போம்”, என்று சொன்னான்.
“அப்போ ஓகே” என்று சொன்னாள்.
முகேஷ் தான், “பாப்பா உன்னை இப்படியே விட்டுருவோம் ன்னு நினைத்தாயா”, என்று கேட்டான்.
” இதை உன் கிட்ட வாங்குறதுக்கு எங்களுக்கு இஷ்டம் இல்ல., நாங்க வீட்ல எவ்வளவோ பேசி பார்த்தோம்., தாத்தா கேட்கிற மாதிரி இல்ல”, என்று வினித் சொல்லும் போதே.,
முகேஷ் “உனக்கு தாத்தாவ பத்தி, ஐ மீன் உங்க அம்மாவோட அப்பா., எனக்கு அப்பாவோட அப்பா இருக்காரு இல்ல, இதுவரைக்கும் உன்ட்ட வேற யாரும் பேசினது கிடையாது தானே, எல்லாம் அவரால தான்,
அவருக்கு கோபம் அத்தை லவ் மேரேஜ் பண்ணிட்டு போனதுல, சோ அவர் இப்ப வரைக்கும் வேற எத பத்தியும் பேச மாட்டாரு., இந்த ஷேர் எழுதி வாங்கணும்னு அவர் தான் முன்னாடியே சொன்னார்,
இப்ப இதை சொன்னதுக்கு அப்புறம் அப்பாட்ட வந்து சொல்லி இருக்காரு., எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கணும் அப்படின்னு, சொல்லி இருக்காரு”, என்று சொன்னான்.
“ஓகே ஓகே நாளைக்கு வரட்டும் பேசிக்கலாம்”, என்று சொன்னாள்.
“நாளைக்கு தாத்தா வரமாட்டாரு., அவர் கொஞ்சம் பந்தா காட்டுற பார்ட்டி”, என்று சொன்னான்.
“மாம்ஸ் இவ்ளோ பெரிய ஆட்கள் பந்தா காட்டாட்டி தான் டவுட் பண்ணனும்., பந்தா காட்டினா அப்ப டவுட் இல்ல., அவங்க பெரிய ஆட்கள் தான்”, என்று சொன்னவள்.,
“ஆமா நீங்க ரெண்டு பேரும் ஏன்டா மாம்ஸ் பந்தா பண்ணவே இல்லை, உங்கள அப்படி பார்த்ததில்லை”, என்றாள்.
“அது உன்கிட்ட மட்டும் தான் குட்டி நாங்க இப்படி, மத்தபடி அப்படித்தான்”, என்று சொன்னான்.
“அடப்பாவி மாம்ஸ் ரெண்டு பேருமே அப்படித்தானா?, ஆனா என் கூட வரும் போது சாதாரணமாதானடா வந்தீங்க”, என்று கேட்டாள்.
“சாதாரணமா தான் வந்தோம், ஆனால் அது உனக்காக, மத்த யாருக்காகவும் இல்லை., நீ பார்த்தல்ல எங்க கூட பழகுற பிரண்ட்ஸ் முதற் கொண்டு உனக்கு தெரியும் தானே”, என்றான்.
“பார்ரா பெரிய ஆட்கள் டா நீங்க எல்லாம்”, என்று சொல்லி கிண்டல் செய்தவள்,
“ஓகே நாளை காலைல அவங்க வரும் போது வாங்க இப்ப கிளம்புங்கடா ரெண்டு பேரும்”, என்று சொல்லி அவர்கள் இருவரையும் கிளப்ப முயற்சிக்கவும்.,
அவர்கள் இருவரும், “ஏய் என்ன போ சொல்ற, இரு ஆர்டர் போட்டு இருக்கேன், ஃபுட் வரட்டும் சேர்ந்து சாப்பிடுவோம்., ரொம்ப நாளாச்சு இல்ல”, என்று சொல்லி மூவரும் சேர்ந்து உணவு முடித்தவுடன் அவர்கள் இருவரும் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.
எப்போதும் போல இளையராஜா இன்னிசையை கேட்டுக் கொண்டே படுத்தவளுக்கோ ஒன்றும் தோன்றவில்லை.
‘இந்த ஷேர் அம்மா பேர்ல, இந்த சொத்து அப்பா பேர்ல இருக்கிறது, ன்னு எல்லாமே இருந்திருக்கு, சரி ஏதோ நம்மள உயிரோட விட்டார்களே நினைச்சுக்கணும்., ரெண்டுமே பெரிய பார்ட்டிங்க அப்ப அப்படித்தானே இருப்பாங்க, குடுத்துட்டு சத்தமே இல்லாம நம்ம வேலையை பார்த்துட்டு போயிரணும்., நமக்கு எதுவும் வேண்டாம் ப்பா., அடுத்தவன் சொத்து எதுக்கு”, என்று நினைத்துக் கொண்டவளுக்கு வினித் கிளம்பும் போது சொல்லிவிட்டு சென்றது ஞாபகம் வந்தது.,
“இங்கேயும் தாத்தாவும் பாட்டியும் ஃபர்ஸ்ட் வர்ற பிளான் இல்ல., ஆனா உன் போட்டோவை பார்த்ததிலிருந்து பாட்டிக்கு உன்னை பார்க்கணும்னு ஒரு ஆசை., நீ மாமா ஜாடையாம் அதனால பாட்டி சண்டை போட்டு தான் தாத்தாவை இழுத்துட்டு வராங்க., உன்ன ஒரே ஒரு தடவை பார்க்கணுமாம் அவங்களுக்கு”, என்று சொன்னான்.
சிரித்துக் கொண்டே, “வரட்டும் எனக்கும் அவங்களை எல்லாம் பார்த்த மாதிரி இருக்கும்ல”, என்று சொன்னாள்.
போகும் போது இருவரும் அவளை கலாய்த்து விட்டு சென்றனர்.
“நாங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்திருக்கோம் தெரியுமா”, என்று கேட்டனர்.
“எதுக்கு” என்று கேட்டாள்.
“நீ கன்னடமும் கத்துக்க மாட்டேன்னு ட்ட, மலையாளமும் கத்துக்க மாட்டேன்னு ட்ட, இப்ப பாரு நாங்க ரெண்டு பேரும் அதுக்கு தான் வந்து இருக்கோம். அவங்க கன்னடத்தில் சொல்றத உனக்கு தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணனும்., இங்க மலையாளத்துல சொல்றத உனக்கு தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணனும்., அப்புறம் நீ தமிழ்ல சொல்றத அவங்க ரெண்டு பேருக்கும் அவங்கவங்க லாங்குவேஜ் ல ட்ரான்ஸ்லேட் பண்ணனும்., அதுக்கு தான் வந்திருக்கோம்”, என்று சொல்லி சிரித்தனர்.
“அப்ப சரி லாங்குவேஜ் ப்ராப்ளம் இல்ல, ஓகே நாளைக்கு பார்ப்போம்”, என்று சிரித்தபடி அவர்களை வழியனுப்பி இருந்தாள்.
அதை நினைத்துக் கொண்டே சிரித்த வண்ணம் தூங்கினாள்.
அவளுக்கு ‘காலையில் என்ன நடக்கும்’ என்று யோசனையும் இருக்க தான் செய்தது.
வானிலை மாற்றத்தை விட மிக வேகமாக இருக்கும் மனிதனின் மனநிலை மாற்றம்.