விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள், ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
சிங்கப்பூர் சென்று, அதன் பிறகு அடுத்த பிளைட் மாற வேண்டும்., இவள் சென்று சேர்ந்த நேரத்திற்கு பிறகு நான்கு மணி நேரம் கழித்து தான் சிங்கப்பூரிலிருந்து பிளைட், ஏற்கனவே இங்கே ஒரு மணி நேரம் தாமதமானதால் அங்கு சென்று மூன்று மணி நேரத்திற்குள் அவளுடைய பிளைட் கிளம்பும் என்று யோசனையில் இருந்தவளுக்கு., மீண்டும் தான் ஜெர்மன் செல்லும் முன் நடந்த நிகழ்வுகள் மனதிற்குள் வலம் வரத் தொடங்கியது.
அவர்கள் அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்று இவள் தனியே இருக்க கற்றுக் கொண்டு கிட்டதட்ட நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், அன்று வேலை விட்டு வந்தவள், சற்று அலுப்பாக உணர்ந்தாள்.,
தனக்கு இரவு உணவை தயார் செய்து கொண்டு ஹாட் பாக்ஸ் ல் வைத்து மூடி வைத்தவள்., ஒரு டம்ளர் கடும் டீ யோடு வந்து டிவி முன் அமர்ந்தாள்.
ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே அமர்ந்தவள், அதன் பிறகு டீ குடிக்க தொடங்கினாள்.
பாதிக்கப் காலியாகும் முன்னே அவளுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. சிரித்துக் கொண்டே அழைப்பை எடுத்தவள்,
“ஹாய் மாம்ஸ்” என்றாள்.
ஏனென்றால் இருவரும் சேர்ந்து இருப்பார்கள் என்று தெரிந்து கொண்டே, “இப்ப தான் நினைச்சேன்., ஜஸ்ட் இப்பதான் கூப்பிடுவோமான்னு நினைச்சேன்”, என்று சொன்னாள்.
முகேஷ் தான், “பாப்பா நீ என்னைக்குடா கூப்பிட்ட”, என்று கேட்டான்.
“நான் எங்க கூப்பிட, நான் உங்க ரெண்டு பேருக்கும் மெசேஜ் தான் போடணும், கான்ஃபரன்ஸ் காலுக்கு வாங்க ன்னு, நான் ரெண்டு பேரையும் சேர்த்து கூப்பிடுவதற்கு டைம் ஆகும்., அதே மெசேஜ் போட்டா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கூப்பிடுவீங்க இல்ல”, என்றாள்.
“எப்பா ஒரு விஷயத்துக்கு இவ்வளவு பெரிய எக்ஸ்பிளநேஷன்”, என்று சொன்னவன், “சொல்லு குட்டி, நீ எதுக்கு கூப்பிடனும் நினைச்ச”, என்று கேட்டான்.
“மாம்ஸ் ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லட்டுமா”, என்று கேட்டாள்.
அங்கு மௌனமே பதிலாக வர, “மாம்ஸ் ஹாப்பி நியூஸ் வேணுமா, வேண்டாமா”, என்றாள்.
“சொல்லு குட்டி, யாரையும் லவ் பண்ணிட்டியா”, என்று கேட்டான்.
சிரித்துக் கொண்டே, “சொல்லுடா குட்டி” எனும் போதே, முகேஷ் “பாப்பா ஏதோ குட் நியூஸ் ன்னு சொன்னயே அதனால தான் கேட்டோம்”, என்றான்.
“அப்படி எல்லாம் இல்ல மாம்ஸ், உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே எவனும் என் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டான்., ஆபீஸ் போகும் போதும் கூடவே வந்திங்க, காலேஜ் போகும் போது கூடவே வந்திங்க, ரெண்டு பேரும் என் கூடவே சுத்தும் போது உங்களுக்கு தான் நிறைய சைட் அடிக்க பொண்ணுங்க வந்துச்சு., எவனாவது என்னை திரும்பி பார்த்திருப்பானா யோசிச்சு பாரு., பாக்க மாட்டான், நீங்க ரெண்டு பேர் கூட இருக்கும் போது யாரு பார்ப்பா”, என்று சொன்னாள்.
“அதுல பாப்பாக்கு ரொம்ப வருத்தம் போல”, என்று முகேஷ் சொன்னான்.
வினித் தான்”சொல்லு சொல்லு, என்ன விஷயம்”, என்று கேட்டான்.
“நீ சொல்லு”,என்றாள்.
“நீ தான் ஏதோ குட் நியூஸ் ன்னு சொன்ன”, என்றான்.
அங்கு மாறி மாறி பேச, இவளோ “ஆமாம் எனக்கு ஆன் சைட்க்கு செலக்ட் ஆகியிருக்கு, ஜெர்மன் போறேன், ஒன்லி 3 மந்த்ஸ் மாற கூட வாய்ப்பு உண்டு., ஆனா ஒர்க் முடிஞ்சிடுச்சுன்னா, சீக்கிரம் திரும்பி வந்துருவேன்”, என்று சொன்னாள்.
“குட்டி தனியா பாரின் போறியாடா”, என்று வினீத் கேட்டான்.
“நீ வேணா துணைக்கு வரியா மாம்ஸ்”, என்றாள்.
“வரலாம், ஆனால் ஹாஸ்பிடல் பார்க்கணுமே., இப்ப தானே இங்க வந்து சார்ஜ் எடுத்து இருக்கோம்”, என்று சொன்னான்.
“பாப்பா நாங்க வேணா இன்ஜார்ஜ் எல்லாம் ஒப்படைச்சிட்டு நாங்க கூட வரட்டுமா”, என்று கேட்டான்.
“டேய் அது எப்படி நீ மட்டும் போலாம், போனா ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்”, என்று சொன்னான்.
“அய்யய்யோ, நீங்க ரெண்டு பேர் எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க., உங்கள எல்லாம் கூட்டிட்டு போவதற்கு கம்பெனியில் அலோ பண்ண மாட்டாங்க., நான் மட்டும் தான் தனியா போவேனே”, என்று அவனிடம் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அவர்களும் “குட்டிமா”., “பாப்பா” என்று பேசத் தொடங்கினர்.
“சொல்லு மாம்ஸ்”, என்றாள்.
“கம்மிங் சாட்டர்டே, சண்டே, நீ ஃப்ரீ தானடா., வேற எதுவும் ஒர்க் இருக்கா”, என்று சொன்னாள்.
“இல்லை மாம்ஸ், என்ன”, என்று கேட்டாள்.
“இல்ல ரெண்டு பேமிலியும் உன் வீட்டுக்கு வருது”, என்று சொன்னான்.
“வாட், இங்கேயா நிஜமாவா”, என்று கேட்டவள், “என்ன விஷயம்”, என்றாள்.
“எப்படி சொல்லணும் ன்னு தெரியல பாப்பா”, என்று முகேஷ் சொல்லவும்.,
“வாயால தான் மாம்ஸ் சொல்லணும்., சொல்லு சொல்லு”, என்று சொன்னாள்.
“நாங்க வெள்ளிக்கிழமை ஈவ்னிங் வந்துடுறோம்., நம்ம நேர்ல பேசலாம்”, என்று சொன்னான்.
“மாம்ஸ் இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வைக்காத., நீ நாளை மறுநாள் ஈவ்னிங் வர்ற வரைக்கும் எனக்கு டென்ஷன் எகீறிடும்”, என்று சொன்னவள்., “என்ன விஷயம் மாம்ஸ்”, என்றாள்.
“தெரியல பாப்பா” என்று சொன்ன முகேஷ் அமைதியாக.,
வினித்தோ, “ஏதோ பேசணுமாண்டா, முக்கியமான விஷயம் பேசணுமாம், ரெண்டு பேமிலியும் வராங்க., இங்க தான் நிறைய டிக்கெட்ஸ் வரும்னு நினைக்கிறேன்., தாத்தா பாட்டி, பெரிய மாமா அத்தை, அப்புறம் எங்க அம்மா அப்பா ஆறு டிக்கெட்., என்னையும் சேர்த்து ஏழு, ஆனா அங்க”, என்று கேள்வியாக நிறுத்தினான்.
முகேஷ் தான், “இங்க அம்மா அப்பா, என்னோட தங்கச்சி நான் அப்புறம் என்னோட தாய் மாமா, இத்தனை பேரும் வரோம் அவ்வளவு தான்”, என்று சொன்னான்.
“ஓகே வாங்க, ஆனா வீடு பத்தாதே”, என்று சொன்னாள்.
அடேய் த்ரீ பெட்ரூம் உள்ள வீடு மா, உன்னோட வீடு”, என்று சொன்னான்.
“த்ரீ பெட்ரூம்ஸ் இருக்கு மாம்ஸ்., ஆனா நீங்க உங்க வீட்ல ஆளுக்கு தனித்தனி ரூம்ல இருப்பீங்க., எப்படி மூன்று பெட்ரூம்ல அத்தனை பேரும் இருக்க முடியும்., சரி என்ன விடு நான் ஹால்ல படுத்துக்குவேன், நீங்க ரெண்டு பேரும் கூட ஹாலுக்கே இழுத்துக்கலாம்., எப்படி ரூம் பத்தும்”, என்று சொன்னாள்.
“பார்க்கலாம் பாப்பா, அங்க வந்து அவங்க என்ன முடிவு பண்றாங்கன்னு பார்ப்போம்., மே பி ஒரே நாளில் பேசி முடிச்சிட்டாங்கன்னா, அன்னைக்கே கிளம்பிடுவாங்க., இல்லன்னா வெளியே தங்கிக்க சொல்லலாம்., உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம நாங்க பார்த்துக்கிறோம்”, என்று சொன்னான்.
“பாருடா”, என்று சொல்லி சிரித்தவள்., “ஓகே மாம்ஸ் என்ன விஷயம் ன்னு சொல்லலையே”, என்று கேட்டாள்.
“அது வந்து பாப்பா, அது எப்படி சொல்ல”, என்று தயங்கினான்.
“பரவால்ல மாம்ஸ் சொல்லு”, என்று சொன்னாள்.
“இல்ல இல்ல நாங்க நேர்ல வந்து தான் சொல்லுவோம், அவங்களே வந்து பேசட்டும்”,என்றான்.
“அவங்களே பேசட்டும் ன்னு இருந்தாலும்., என்கிட்ட தானே பேசணும்., நீங்க சொன்னா நான் எல்லாம் பிளான் பண்ணி ரெடி பண்ணி வைப்பேன்ல”, என்றாள்.
“இல்ல நாங்க இன்னைக்கு வக்கீல் அங்கிள்ட்டையும், ஆடிட்டர்டையும் பேசுறோம்., அவங்க நாளைக்கு வந்து உன்கிட்ட பேசுவாங்க., நாங்க வெள்ளிக்கிழமை ஈவினிங் வந்துருவோம், உன்கிட்ட எல்லாத்தையும் டீடைலா சொல்கிறோம்”, என்று சொன்னான்.
“ஓகே வாங்க வெயிட் பண்றேன்”, என்று சொல்லி சிரித்தபடி போனை கட் செய்தாள்.
மறுநாள் இவள் அலுவலகம் முடிந்து வரும் போது வக்கீலிடமிருந்து அவளுக்கு போன் வந்தது.,
‘பூதம் வெளியே வர போகிறது’, என்ற நினைவோடு வீடு வந்து சேர்ந்தாள்.
அவ்வப்போது அனைவரோடும் பேசிப் பழகி இருந்ததால் அவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எதுவும் தோன்றவில்லை., வந்தவர்களுக்கு கொரிக்க சிற்றுண்டியும், குடிக்க டீயும் தயார் செய்து கொடுத்தவள்., அவர்களோடு சேர்ந்து வந்து அமர்ந்தாள்.,
“சொல்லுங்க அங்கிள்”, என்றாள்.
“தர்ஷனா அது வந்து”, என்று சொல்லி ஆரம்பித்தவர், “நேத்து உன் கிட்ட முகேஷ்ம் வினித்தும் பேசுறேன் சொன்னாங்க., ஆனா எல்லாம் சொல்லி இருக்க மாட்டாங்கன்னு தெரியும்., நேர்ல வந்து நாங்க பேசுகிறோம் ன்னு சொன்னாங்க இருந்தாலும் உன்கிட்ட முன்னாடியே சொல்றது நல்லது இல்லையா”, என்றார்.
அப்போது தான் அவர் சொன்னார்., “உங்க அம்மா வீடு பெரிய இடம் ன்னு உனக்கு தெரியும்., எப்படின்னா தமிழ்நாட்டுல எப்படி செயின் ஆஃப் ஹாஸ்பிடல் இருக்கோ, அதே மாதிரி கர்நாடகாவில் அவர்களுக்கு செயின் ஆஃப் ஹாஸ்பிடல் நிறைய இருக்கு., உங்க அம்மாவோட அப்பா டாக்டர், அவங்க பேமிலியில் உள்ளவர்கள் எல்லாருமே டாக்டர்., அதே மாதிரி உங்க அம்மா கூட பிறந்தது ஒரு அண்ணா மட்டும் தான், உங்க அம்மா அப்புறம் உங்க அம்மாவோட பெரியப்பா பசங்க அந்த மாதிரி எல்லாருமே டாக்டர்.,
அவங்க சொந்தத்துக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் கல்யாணம் பண்ணி அப்படித்தான் இருந்திருக்காங்க”, என்று சொன்னவர்.,
“அது மட்டும் இல்லாம, அவங்க ஹாஸ்பிடல்ஸ் ல ஒவ்வொருத்தருக்கும் ஷேர் இருக்கு”, என்றார்.
“சரி” என்று சொன்னாள்.
“உனக்கு புரியும் ன்னு நினைக்கிறேன், செயின் ஆஃப் ஹாஸ்பிடல் அப்படின்னும் போது அங்க இருக்க ஹாஸ்பிடல் ல கிட்டத்தட்ட உங்க அம்மா பேமிலில எல்லார்கிட்டயுமே ஷேர்ஸ் இருக்கு., அந்த மாதிரி ஒரு ஹாஸ்பிடல் காண மொத்த ஷேர்ல கிட்டத்தட்ட 50% ஷேர் உங்க அம்மா பேர்ல இருக்கு”, என்று சொல்லவும்.,
அவர்களை நிமிர்ந்து பார்த்தவள்., கேள்வியாக நோக்கினாள்.
அதை புரிந்து கொண்ட ஆடிட்டர் பேச்சை தொடர்ந்தார்., “அதாவது மா., என்ன சொல்றாருன்னு உனக்கு புரியுதா”, என்று கேட்டார்.
“புரியுது அங்கிள், அம்மா பேர்ல ஒரு ஹாஸ்பிடல் உள்ள 50% ஷேர் இருக்குனு சொல்றீங்க”, என்று சொன்னாள்.
“ஒரு ஹாஸ்பிடல்ல 50% ஷேர் அப்படிங்கிறதே, பல கோடி மதிப்புள்ள ஷேர்”, என்று சொன்னார்.
“சரி அங்கிள், நான் இப்ப என்ன செய்யணும்”, என்று கேட்டாள்.
“தர்ஷா உனக்கு வருத்தம் இல்லையா”, என்று கேட்டார்.
“அடுத்தவங்க சொத்து நமக்கு வேண்டாம் அங்கிள்”, என்று சொன்னாள்.