அப்போது அவர்களுடைய நண்பர்கள் மேலும்  இருவருக்கும் சந்தேகம் வர., அவர்களையும் எழுத சொல்லி கையெழுத்தை ஒத்துப் பார்த்தனர்.

    ‘யாருடைய கையெழுத்தும் ஒத்துப் போகாததால் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இது வெளியே  எங்கேயோ இருந்து வருது’, என்று முடிவு செய்தனர்.

   இவளுடைய கடைசி வருட படிப்பின் போது அவர்கள் இருவருக்குமே தோழர்களோடு சேர்ந்து தோழிகளும் அதிகமாக  கிடைத்திருந்தனர்.

    இவளோடு அவர்களும் ஐக்கியமாக தொடங்கி இருந்தனர்,

    அவர்கள் தங்களுக்கு  கிடைத்த புது நண்பர்  கூட்டத்தில் சொல்லியே வைத்திருந்தனர்.

இவள் எங்களுக்கு அத்தனை முக்கியமானவள் என்று.,

      அவள் 18-வது வயது முடிந்ததிலிருந்தே,  இருவரும் அவளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.

       ஏனென்றால் ’18 ஆம் வயதிற்கு பிறகு தான் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும் தானே, அவளுடைய கடைசி வருட படிப்பின் போது.,  அவர்கள் பி ஜி முடிக்கும் தருவாயில் இருந்ததனர்.

     அனைவரும் சேர்ந்து வெளியில் சென்றிருக்க.,

இவள் யோசனையாக சுற்றி  பார்த்துக் கொண்டிருக்கும் போதே,  அவர்களோடு வந்திருந்த பெண்களும் யோசனையோடு பார்த்தனர்.

    முகேஸ், வினித்  இருவரும்  “என்ன விஷயம், கேர்ள்ஸ்  எல்லாம் சுத்தி பார்த்துட்டே வர்றீங்க”, என்று கேட்டனர்.

    “இல்லை யாரோ ஃபாலோ பண்ற மாதிரியே இருக்கு இல்ல”, என்று அவர்களோடு வந்த பெண்களும் சொன்னார்கள்.

    “என்ன இவளுடைய நோய் உங்களுக்கு தொத்திக்கிச்சா”,  என்று கிண்டலாக கேட்டனர்.

      “இல்ல இது கேர்ள்ஸ் ட்ட இருக்குற உள்ளுணர்வு.,  யாரோ பார்க்கிற மாதிரி இருந்தா கூட கண்டுபிடிக்க முடியும்”, என்று சொன்னார்கள்.

    “அப்படியா இவ ரொம்ப நாளா இந்த விஷயத்தை சொல்லிக்கிட்டே இருக்கா”, என்றனர்.

       “அப்ப அவள தான் யாரோ ஃபாலோ பண்றாங்க., அவள தான் நோட் பண்றாங்க.,  ஆனா இப்ப எங்களுக்கும் அது ஃபீல் ஆகுது”, என்றனர்.

      ஆண்கள் இருவரும் சுற்றிப் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்றவுடன் யாருமில்லை என்றவுடன், “சீக்கிரம் ஷாப்பிங் முடிங்க”, என்றனர்.

பெண்கள் அவர்கள் தாய் தந்தையிடம் பேசிவிட்டு அவர்களுக்கு தேவையானதை வாங்கினர்.

    இவர்கள் இருவரும் இவளை அழைத்துக்கொண்டு “உனக்கு என்னென்ன வேணும் வாங்கு”, என்றனர்.

    “எனக்கு எதுக்கு இப்போ”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   “அவசியமில்லை ன்னு  இல்ல,காலேஜுக்கு எப்பவும் போற மாதிரி போனா போதும்., ஆனா கேம்பஸ் போகும் போது டிரஸ் பக்கவா இருக்கனும்”, என்றனர் இருவரும்.

   அவளோ “பிரைன் நல்லா இருக்கணும்., அது மட்டும் தான் முக்கியம்”, என்று சொன்னாள்.

       முகேஷ் “அது இருக்கா பாப்பா உனக்கு”, என்று அவள் தலையை தொட போனான்.

    “இருக்கு மாம்ஸ், உனக்கு இருக்குறதை விட நிறையவே இருக்கு”, என்று சொன்னாள்.

    “உனக்கு வரவர மரியாதையே தெரியல, தெரியுமா.,  திடீர்னு மாம்ஸுங்க., திடீர்னு  வா போ ன்ற,  திடீர்னு போடா வாடா ன்ற., அப்புறம் நீ நான் மாத்தி மாத்தி பேசுற, எல்லாம் வருது உனக்கு வாயில”,என்று கேட்டான்.

    “அப்படித்தான் பேசுவேன்” என்று சொல்லி அவனிடம் கிண்டல் செய்து கொண்டிருந்தாள் .

   அதன் பிறகு வந்த நாட்களில் வினித் முகேஷ் அவர்களுடைய பிஜியை முடித்து அவரவர் ஊரில் சென்று பிராக்டிஸ் செய்யலாம் என்று நினைத்திருக்கும் போது.,

    ‘இவளை இங்கு செட்டில் செய்யாமல் போகக்கூடாது’ என்ற எண்ணத்தோடு முதல் முதலாக அவளுடைய அப்பாவின் லாயரையும் ஆடிட்டர் யும் சந்திக்க சென்றனர் .

    “என்ன விஷயம் தம்பி” என்று கேட்டனர்.

      “இல்ல பாப்பாக்கு ஏதாவது செட்டில் பண்ணாம, நாங்க இங்க இருந்து வெளியே போகக்கூடாது அதுதான் யோசிச்சிட்டு இருக்கோம்”, என்று சொன்னார்கள்.

     அவரும் “இவங்களோட வீடு வாடகைக்கு  ன்னு ரொம்ப நாள் விட்டதால, வீடு கொஞ்சம் பழைய வீடு மாதிரி ஆயிட்டு, ஏரியா மெய்னா இருக்குறதால வித்தா நல்லா போகும்., அந்த இடமுமே மெயின் ல இருக்கு, அங்க ரேட்  எல்லாமே நல்ல போகும்., அது மட்டும் இல்லாம அவங்க அப்பா  ஒரு இடம் வாங்கி போட்டிருந்தார்., அதுவுமே நல்ல ரேட் போகக் கூடியது தான்., இப்ப நீங்க முடிவு பண்ணுங்க”, என்று சொன்னார்.

        “அவளுக்கு படிப்பு முடியட்டும்., நம்ம ஒரு முடிவுக்கு வரலாம்”, என்று சொல்லி பேசி இருந்தனர்.

    அதன்படி இவளுக்கும் படிப்பு முடிய கேம்பஸிலும் வேலை கிடைத்திருந்தது.

    நல்ல பெரிய கம்பெனியில் வேலை கிடைத்து, முகேஷ் வினித் இருவருமே, “இந்த மாதிரி கம்பெனில எல்லாம் காலேஜ்ல இருந்து டைரக்டா எடுக்க மாட்டாங்களே, எப்படி எடுத்தாங்க”, என்று கேட்டனர்.

     இவளோ “அது என் அறிவு திறமையை பார்த்து எடுத்தாங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அவனும் “பாப்பா விளையாடாதே பாப்பா, இந்த மாதிரி கம்பெனிஸ் ல கேம்பஸ் வர மாட்டாங்க., இதெல்லாம் ரொம்ப பெரிய கம்பெனி மா, எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்க உள்ளேயே போக முடியாது, வெயிட் பண்ணுவோம் , ஏதாவது தகவல் தெரியும்”, என்று சொன்னான்.

      வினித் அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக கல்லூரியில் விசாரிக்க., அவர்களோ “இந்த கம்பெனி இதுவரை வந்ததே இல்லை, முதல் முதலாக இந்த வருடம் தான் வந்தனர்., வந்தாலும் தர்ஷனா மட்டும் தான் செலக்ட் செய்தாங்க” என்றவுடன் கொஞ்சம் யோசனையாக இருந்தனர்.

    பின்பு ‘சரி பார்த்துக் கொள்ளலாம்., வேலை தானே  ப்ரோஃபைல் பார்த்து இன்டர்வியூ பண்ணி தானே கூப்பிட்டு இருக்கிறார்கள்,  பார்ப்போம்’ என்று மட்டுமே யோசித்தனர்.

    நாள்களும் பொழுதுகளும் கடப்பது தெரியாமல் தான் கடந்தது,  இவள் வேலையில் சென்று சேர்ந்து ஆறு மாதம் வரை வினித் முகேஷ் இருவரும் சென்னையில் தான் இருந்தனர்.

      இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தனர்.

       முதலில் வேலையில் திணறினாலும், பின்பு சமாளிக்க கற்றுக் கொண்டாள்.

         அது போல தனியாக இருப்பதிலும், அவளுக்கு தன்னால் சமாளிக்க முடியும் என்ற எண்ணம் வந்த பிறகு தான்,  நம்ம ஏதாவது பண்ணலாம் என்று சொல்லி விட்டு ஆடிட்டர் வக்கீலிடம் சொல்லி அவளுடைய அப்பா பெயரில் இருந்த வீட்டை நல்ல விலைக்கு  விற்றனர்.

   சிட்டிக்கு நடுவில்  நல்ல கம்யூனிட்டி அப்பார்ட்மெண்டில் அவளுக்கென்று ஒரு வீட்டை தயார் செய்தனர். அதை அவள் பேரிலே வாங்கினர்.

      அந்த பணமே போதுமானதாக இருந்தது,  அதில் மீதியும் வந்தது,

     அதை எடுத்து அவளுடைய பெயரில் பேங்கில் போட்டு வைத்தனர்.

    அவள் அம்மாவின் நகைகள் லாக்கரில் இருந்ததை சரிபார்த்து இவளுக்கு என லாக்கர் ஓபன் செய்து அதில் வைத்து விட்டு மற்ற எல்லாவற்றையும்  மாற்றி சரி செய்தனர்.

      அதை வக்கீல் ஆடிட்டர் இருவரும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகு, அந்த இடத்தின் பத்திரத்தையும் இவள் பெயருக்கு மாற்றினர்.

    “எல்லாம் சரியா இருக்கு, இனி உனக்கானது நீ தான் பார்த்துக்கணும் சரியா, வெளிஉலகம் தெரியாமல் இருக்க கூடாது ன்னு  தான் நாங்க உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தோம்., இப்போ படிப்பு முடிஞ்சிடுச்சு நாங்களும் எங்க எங்க ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை., நீ தனியா சமாளிச்சுருவியா”, என்று இருவரும் கேட்டனர்.

     “அதெல்லாம் சமாளிச்சிடுவேனே”, என்று வாய்வார்த்தையாக சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவளுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

     ‘கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அவர்களின் பாதுகாப்பில், அவர்களின் கைக்குள் இருந்தவளால்,  இப்போது எப்படி தனியாக இருக்க முடியும்’, என்று தோன்றினாலும்.

      ‘அவர்கள் வாழ்க்கையை அவர்களும் பார்க்க வேண்டும் தானே., நமக்காக எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதற்காக, நம்முடனே இருந்தவர்களை பிடித்து வைக்க நினைப்பது தவறு’, என்று நினைத்து இருவரிடமும் “நான் பார்த்துக்குவேன்” என்று சந்தோஷமாக சொல்லி அனுப்பி வைத்தாள்.

    அதன் பிறகு தான்  அவளுக்கு வேலையிலும் ஒரு வெறித்தனமான ஆர்வம் வந்தது., தன் தனிமை மற்றும் தனக்கு யாரும் நிரந்தர சொந்தம் கிடையாது என்ற தாழ்வு மனப்பான்மையை வேலையில் கவனத்தை செலுத்தி நீக்கி கொண்டாள்.

    “இல்ல கண்டிப்பா என்னோட வேலையை நான் நல்லா கத்துக்கணும்., இனிமேல் இப்படி விளையாட்டாக இருக்க கூடாது., எனக்கு இதுதான் நிதர்சனம்,  இதுதான் என்னோட வாழ்க்கை.,  நான் தனி தான், மத்தவங்க எல்லாம் நமக்காக ஹெல்ப் பண்ணுவாங்க., நமக்காக செய்வாங்க ., ஆனா எந்த இடத்திலும் சூழலிலும் நம்ம அடுத்தவங்க கிட்ட போய் நிக்க முடியாது., அப்பாவோட சொந்தத்த  சொல்லி கேரளாக்கும் போக முடியாது.,  அம்மாவோட சொந்தம் என்று சொல்லி கர்நாடகாக்கும் போக முடியாது.,  என்னைக்கு இருந்தாலும் அவங்க எல்லாம் ஹாய் னா ஹாய், பாய் னா பய் தான்.,  ஐந்து வருஷம் எனக்காக வினித் மாமா முகேஷ் மாமா ரெண்டு பேரும் ஹெல்ப் பண்ணி இருக்காங்க., அந்த ஹெல்ப்பை வைத்து நான் என்னோட வாழ்க்கையில முன்னுக்கு வரணும்’, என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் பிரதானமாக இருந்தது.

     அதுபோலவே வேலையில் கடின உழைப்பை போட்டதன் பலனாக வேலைக்கு சேர்ந்த இரண்டாவது வருடமே அவளுக்கு ஜெர்மன் க்கு செல்லும் வாய்ப்பு வந்தது.

   நினைவுகளின் தாக்கத்தில் பெருமூச்சு விட்டவள், ஏர்போர்ட் ல் ஃப்ளைட் க்கான அனோஸ்மென்ட் வர தன்னுடைய ஹேண்ட் லக்கேஜ் எடுத்துக் கொண்டு கேட் க்கு சென்று நின்றாள்.

பசி சென்ற பின் சாப்பிட அழைப்பதும்.. மனம் உடைந்த பின் மன்னிப்பு கேட்பதும் ஒன்று தான் இரண்டுமே பயன் அற்றது.