5

     முதல் நாள் காலை கல்லூரி கிளம்பி மாம்ஸ் இருவரும் அவளோடு செல்ஃபி  எடுத்துக்கொண்டனர்.

      சந்தோஷமாகத்தான்  கல்லூரிக்கு கிளம்பினாள்,

அன்று இருவருமே அவளோடு கல்லூரிக்கு செல்வதாக இருந்தது.

     பீஸ் கட்டும் போதும் சரி., ஒவ்வொரு முறை  செல்லும் போதும் சரி, அவளை அழைத்து சென்றிருந்தாலும் அங்கு யாரையும் சந்திக்கவில்லை, எனவே இவளை கல்லூரியில் விடும்போது சொல்லிவிட்டு வரவேண்டும் என்றே உடன் இருவரும் சென்றிருந்தனர்.

      இவளோ அவர்கள் இருவரையும் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

    “கே ஜி ல கொண்டு போய் விட போற மாதிரி கூட்டிட்டு போறீங்க”, என்று இருவரையும் கிண்டலாக கேட்டாள்.

      “அப்ப நாங்க வரல நீ போய்க்கிறீயா” என்று கேட்டான்.

   “வேண்டாம் வாங்க” என்று எல்லாப் பக்கங்களிலும் தலையை ஆட்டி அவர்களை வருமாறு சொன்னாள்.

     இருவரோடும் கதை பேசிக் கொண்டிருந்தவளிடம் “காலேஜ் எப்படி இருக்கும்? ஃபர்ஸ்ட் நாள் எப்படி இருக்கும்? என்ன சொல்லுவாங்க? என்னென்ன பேசணும்? அவங்க கேட்டா நீ எப்படி பதில் சொல்லிக்கணும்”, என்று சொன்னாள்.

   “நேத்து சொல்லிக் கொடுத்தேன்ல செல்ஃப் இண்ட்ரொடக்க்ஷன் எப்படி பண்ணிக்கணும்னு சொல்லிக் கொடுத்தேன்ல., அதை ஃபாலோ பண்ணு, உனக்கு தெரியாதது இல்ல., நீ படிச்ச ஸ்கூல் நேமே உனக்கு தனி கெத்து”, என்றான்.

    “ஏன் மாம்ஸ்”, என்றாள்.

    “அம்மா தாயே, அந்த ஸ்கூல்ல படிச்சிட்டு வரவங்க, இங்கிலீஷ் புளுயன்ஸி இருக்கும்”, என்று சொன்னான்.

       “நீ சென்னை வந்து ஒரு மூணு, நாலு வாரத்திலேயே சென்னை மக்கள் மாதிரி பேச ஆரம்பிக்கிற” என்று சொன்னான்.

    “அது உங்க பிரெண்ட்ஸ் தான் காரணம், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் என்ன வெளியே கூட்டிப் போகும் போது எல்லாம் இப்படி பேசுறாங்களா,  நானும் அவங்க கூட சேர்ந்து பேச கத்துக்கிட்டனா”, என்று சொன்னாள்.

     வினித்தோ, “ஏன் குட்டி உனக்கு பேசவே தெரியாது தானே, அவங்க தான் உனக்கு பேச சொல்லிக் கொடுக்கிறார்களா”, என்று கேட்டான்.

    “நல்ல பேசுவேன் மாம்ஸ், சூப்பரா பேசுவேன்”., என்று சொன்னாள்.

   காரை ஓட்டிக் கொண்டிருந்த முகேஷோ, “பாப்பா சமத்து புள்ளையா காலேஜுக்கு போயிட்டு வா”,  என்றான்.

     “அதெல்லாம் போயிடுவேன் மாம்ஸ்., ஆனா க்ளாஸ் வரை இரண்டு பேரும் வாங்க”, என்று அழைத்தாள்.

   “கண்டிப்பா வருவோம், உங்க ஹெச் ஓ டி ய பாக்கணும், அவரை பார்த்துட்டு உன்னை சொல்லி விட்டுட்டு வரான் சரியா”, என்று சொன்னான்.

    “ஓகே” என்று சொன்னவள் அவர்களோடு கல்லூரிக்கு சென்று இறங்கினாள்.

கல்லூரியில் அவள் வகுப்பை தேடி அவளைக் கொண்டு போய் விட சென்றவர்கள், அவளுடைய டிபார்ட்மெண்ட் கேட்டு அங்கே  அழைத்து சென்று, “நீ இங்கேயே இரு,  நாங்க வந்துறோம்” என்றனர்.

    இருவரும் சென்று ஹெச் ஓ டி யை பார்த்து விட்டு தங்களுடைய போன் நம்பர் முதற்கொண்டு கொடுத்து விட்டு “எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவியுங்கள்., அவளை எதுவும் சொல்லக்கூடாது”, என்று சொல்லி அவளுடைய சூழ்நிலையை சொல்லி.,

   அவள் படித்தது, இதுவரை ஹாஸ்டலில் இருந்தது, என அனைத்தையும் சொல்லிவிட்டு வெளியே வர, அவளோ அங்கேயே காத்திருந்தாள்.

    அதன் பிறகு வகுப்பறைக்கு கூட்டி செல்லும் போதே அவர்களுக்கு நடுவில் அவள் நடந்து வர., திடீரென நின்றவள், “மாம்ஸ் யாரோ பாக்குற மாதிரியே இருக்கு”.,  என்று சொன்னாள்.

      “உனக்கு இந்த வியாதி எப்போ போகும், எப்ப பார்த்தாலும் யாரோ பார்க்கிறாங்க, யாரோ பாக்குறாங்க, ன்னு சொல்லுற”, என்றான்.

    “இல்ல மாம்ஸ், அது ஒரு உள்ளுணர்வுன்னு சொல்லுவாங்கல்ல, அந்த மாதிரி ஒரு பீல், யாரோ பாக்குறாங்கன்னு தோணுது”, என்று சொன்னாள்.

       “அதெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பா”, என்று முகேஷ் சொல்லும் போதே இருவரின் கையையும் இறுக்கிப்பிடித்துக் கொண்டே இருந்தாள்,

     அதே நேரம் திடீரென “மாம்ஸ் போட்டோ எடுத்த மாதிரி இருந்துச்சு”, என்று சொன்னாள்.

    “குட்டி நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற”, என்று சொன்னான் வினீத்.,

     “அவனவன் ஃபர்ஸ்ட் டே  காலேஜ்ன்னு செல்பி எடுத்து இன்ஸ்டா,  பேஸ்புக் அப்படின்னு போட்டுட்டு சுத்துவான்., நீ பஸ்ட் நாள் இங்க வர்றதுக்கே எங்க ரெண்டு பேர் கையும் சேர்த்து பிடித்துக்கொண்டே வர்ற”, என்று சொன்னான்.

    வகுப்பறைக்கு வர, அங்கு நிறைய மாணவர்கள் இருந்ததை பார்த்தவள்,

   “மாம்ஸ் எவ்வளவு ஸ்டூடண்ட் இருக்காங்க, வேண்டாம் மாம்ஸ் பயமா இருக்கு”, என்று சொல்லி வாசல் வரை போனவள் திரும்பி வர முயற்சித்தாள்.

    முகேஷ் அவளை கையை பிடித்து உள்ளே இழுக்க, அவளோ வினித்தை கையைப் பிடித்து அவளோடு சேர்த்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

   அவனோ,  “ஏன் பாப்பா இப்படி பண்ற”, என்று கேட்டான்.

  வினித்தோ, “குட்டி கைய விடு”, என்றான்.

   “வேண்டாம், இந்த க்ளாஸ் ல இவ்வளவு பேர் இருக்காங்க,  நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ஒரு நாளைக்கு என் கூட கிளாஸ் ல இருங்களேன்” என்று சொன்னாள்.

     “அம்மாடியோ மெடிக்கல் படிக்கிற எங்களை கொண்டு வந்து இன்ஜினியரிங்ல சேர்த்து விட  பார்க்குறியா”, என்றான்.

   “ஒரு நாள் மட்டும் கூட இருந்துட்டு போங்களேன்”, என்று சொன்னாள்.

     “நல்லவேளை இவளை ஹாஸ்டல்ல சேர்க்கலை”, என்றான்.

   “ஹாஸ்டல்ல ஒன்னும் பயம் இல்ல அது பிரண்ட்ஸ் இருப்பாங்க”, என்றாள்.

    “இங்கே பிரண்ட்ஸ் கிடைப்பாங்க, போக போக பழகிடுவ”, என்று சொன்னார்கள்.

     “இந்த நாலு வாரத்துல நீங்க தான் என்னை மாற்றி வச்சிருக்கீங்க, ஹாஸ்டல்ல இருக்கும் போதெல்லாம் இப்படி தோணல., இப்ப பாருங்க எப்படி தோணுதுன்னு”,என்று சொன்னாள்.

    அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே, “நல்ல பிள்ளை இல்ல போ., உங்க ஸ்கூல் ல குறைவான ஸ்டூடெண்ட்ஸ் பார்த்ததால உனக்கு நிறைய பேர் பார்த்த உடனே அப்படி தோணுது, போக போக பழகிரும், ஈவினிங் வந்த உடனே உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரேன், உன்னோட ஃபேவரிட் ப்ளேவர் வாங்கி தரேன்”, என்று சொன்னான்.

        சிறு பிள்ளையை ஏமாற்றுவது போல ஏமாற்றி வகுப்பில் உள்ளே வரை அழைத்து சென்றுவிட.,

    அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவளோடு வந்த இருவரையும் பார்வை பார்க்க.,  வெளியே இருந்து வந்த சீனியர் பெண்ணும்., அவர்களைப் பார்த்து விட்டு இவளிடம் வந்து “உங்க பிரதர்ஸ்  ஆ”, என்று கேட்டனர்.

     அவளோ “பிரதர்” என்று திரும்பி  இருவரையும் முறைத்து பார்க்க.,

    இருவரும் “அவ என்னோட மாமா பொண்ணு”, என்று வினித் சொன்னான்.

    முகேஷ் “அவ என்னோட அத்தை பொண்ணு”, என்று சொன்னான்.

     இவளோ “இது ஓகே மாம்ஸ், நீங்க ரெண்டு பேரும் தானே அண்ணா ன்னு கூப்பிட கூடாது ன்னு சொன்னீங்க, இப்ப நீங்க  சொன்னது தான் சரி, இப்ப கிளம்புங்க ரெண்டு பேரும்,  இனிமேல் இங்க வரக் கூடாது, உங்க ரெண்டு பேரையும் யாரும் பார்க்க கூடாது, சரி கிடையாது கிளம்புங்க, கிளம்புங்க”, என்று சொல்லி இருவரையும் விரட்டி அனுப்பினாள்.

      சிரித்தபடி “வாலு குட்டி ஒழுங்கா போய் பாடத்தை படி” என்று சொல்லி விட்டு “யாரிடமும் வம்பு வளர்க்கக்கூடாது”, என்று சொல்லியே அவளை வகுப்பில் விட்டு விட்டு சென்றனர்.

     வீட்டிற்கு அவளை  கொண்டு வந்து விட்டுட்டு அவர்கள் இருவரும் வெளியே சென்றனர்.

    அவள் வீட்டுக்குள் வரும் போது, அப்போது தான் ஒரு கேக் பார்சல் வந்து சேர்ந்தது.,

      அதில் ‘முதல் நாள் கல்லூரி சென்று பெண்ணவளுக்கு’ என்று எழுதி, கீழே ‘வித் யுவர் மாம்ஸ்’ என்று போட்டிருந்தது.

         இவளும் தன்னுடைய மாம்ஸ் இருவரும் சேர்ந்து தான் வாங்கி தந்திருக்கிறார்கள்  என்று நினைத்தாள்,

      கேக்கை பார்த்து விட்டு அவர்களுக்கு போன் செய்தாள்.  “எங்க இருக்கீங்க”, என்று கேட்டாள்.

     “வந்துகிட்டே இருக்கோம், உன்னை விட்டுட்டு வெளியே வந்தோம் டா, இப்போ ஒரு வொர்க் முடிச்சிட்டு வருவோம் வெயிட் பண்ணு”, என்றனர்.

      “உங்க சர்ப்ரைஸ் எல்லாம் சூப்பரா இருக்கு”, என்று சொன்னாள்.

       “என்ன சர்ப்ரைஸ்” என்றான்.

   “வீட்டுக்கு வாங்க சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தவள். கேக்கை கட் செய்து சாப்பிட்டாள்.

        அதன் டேஸ்ட் ரொம்ப பிடித்து இருக்கவும். இரண்டு பிஸ் சாப்பிட்டு விட்டாள், மீதியை மாம்ஸ் ரெண்டு பேருக்கும் எடுத்து வைத்தாள்.

    அதை வெட்டும் முன் போட்டோ எடுத்து வைத்திருந்ததாள், அவன் இருவரும் வந்தவுடன் காட்டினாள்.

   “தேங்க்ஸ் மாம்ஸ், சாப்பிட்டேன் சூப்பர் டேஸ்ட், எப்படி இதை பார்த்து வாங்குனீங்க., எனக்கு ஐஸ்கிரீம் தானே வாங்கி தரேன்னு சொன்னீங்க, ஆனா கேக் சூப்பரா இருந்துச்சு”, என்று சொன்னாள்.

     “கேக்கா, நாங்க எப்போ வாங்கினோம்”, என்று சொன்னார்கள்.

     “பின்ன” என்று சொல்லி போட்டோவை காட்டி,  “இப்படி தான் வித் யுவர் மாம்ஸ்னு போட்டு இருந்தது”, சொன்னவள்.

    “அப்ப நீங்க ரெண்டு பேர் தானே”, என்று சொன்னாள்.

    “லூசு, அது என்ன ன்னு தெரியாம சாப்பிடுவியா, அதில் ஏதாவது கலந்திருந்தால் என்ன செய்வ”, என்று கேட்டு திட்டினான்.

     திருதிருவென முழித்தவள், “அப்போ ஏதும் கலந்து இருக்குமா” என்று கேட்டாள்.

   “ஒன்னும் இருக்காது,  ஏதும் வந்துச்சுன்னா எடுத்து வாயில போடாத” என்று சொல்லி திட்டி இருந்தனர்.

     “அப்ப ஐஸ்கிரீம்”, என்றாள்.

    “அது தான் கேக் சாப்பிட்ட இல்ல, கிடையாது போ”, என்று சொன்னான்.

    “ப்ளீஸ் மாம்ஸ் ஐஸ்கிரீம் தாங்க”, என்று கேட்டு அவர்கள் வாங்கி வந்திருந்த ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.